அண்மையில் தி
ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி
ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.
தமிழ் இலக்கிய
முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம்
தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி
சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும்
நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம்
விமரிசிக்கப்பட்டவை அம்மா வந்தாள்,
மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில்,
அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம்.
நிகழ்வுகளைக்
கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை
உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல்
போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்....இவை
தி ஜாவின்
தனிமுத்திரை.
கண்களைக்
கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும்
பரிவையும், அவருடைய
முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள
வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம்
காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று
சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல்
பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த
எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்......எவ்வளவு பெரிய
படைப்பாளி தி ஜா?!
செம்பருத்தியின்
நாயகன் சட்டநாதன். அறத்தின் மாண்பை இயல்பாகக் கொண்டு, அதை
வாழ்க்கையின் பிரவாகம் அடித்துச் சென்றுவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் இயல்பான
மனிதன்.
சட்டநாதனின்
இளமைக் காலம், சட்டநாதனின் நடுவயது, முதுமையின் வாசலில் சட்டநாதன் என்று மூன்று நிலைகளையும் தொட்டுச்
செல்கிறது கதை. சட்டநாதனின் வாழ்க்கையில் மோதுகின்றார்கள் மூன்று பெண்கள். பெரிய அண்ணி, சின்னஅண்ணி குஞ்சம்மாள் , மனைவி புவனா
என்ற மூவரும் அவன்பால் கொள்ளும் ஈர்ப்பு, அவனை
அலைக்கழிக்கும் அவர்களின் குணமாறுபாடுகள், அவற்றினூடே தன்
சீர்மையை விட்டு அகலாது சட்டநாதன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் விவரிப்பே கதை.தஞ்சையின் ஒரு
சிறு கிராமத்துச் சூழலில் வளரும் கதையின் துணை மாந்தர்களும் தன் இருப்பை நம்
மனத்தில் ஆழப் பதிக்கிறார்கள் .
இளம்பிராயத்தில்
சட்டநாதன் காதல்வயப்பட்ட குஞ்சம்மாளை அவனுடைய சின்ன அண்ணன் மணக்க நேர்கிறது.
சட்டநாதனும் அவன் அம்மாவும் அந்த சின்ன அண்ணன் ஆதரவில்தான் வாழ்கிறார்கள்.
சட்டநாதனின் கண்டிப்புமிக்க, அதேசமயம் பேரன்பை மனதில் பூட்டிவைத்திருந்த சின்னஅண்ணன் முத்துசாமி
சடுதியில் இறந்துபோகிறான். இளம்விதவையான குஞ்சம்மாள் தன் கைக்குழந்தையுடன் புகுந்த
வீட்டிலேயே வாழத் துணிகிறாள்.
இந்த கட்டத்தில்
பஞ்சாய் சட்டநாதனும், நெருப்பாக குஞ்சம்மாளும் அருகருகே
இருக்க, சட்டநாதனோ சின்ன அண்ணன் மேல்கொண்ட நன்றியில்
‘நனைந்த பஞ்சாகவே’ காலம் கடத்துகிறான். சட்டநாதன்மேல் தனக்கான பிரியத்தை
வெளிப்படுத்தும் குஞ்சம்மாளின் வேட்கையை சட்டநாதன் மறுதலிக்கிறான். பலவந்தமாய்
அவனை ஒருமுறை இறுக அணைத்துவிட்டு, ‘வாழ்நாளுக்கு இதுவே போதும்’ என்பதாய் குஞ்சம்மாள்
ஒதுங்குகிறாள்.
சின்னஅண்ணன் தன்
மரணத்தருவாயிலும் சட்டநாதனுக்கு சிவநெறிச் செல்வரான சண்பகவனம் பிள்ளையின் மகள்
புவனாவை நிச்சயித்து விட்டே இறக்கிறான். செம்பருத்தி மலரைக் கூந்தலில் எப்போதும்
சூடும் புவனா அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு பொறுமைசாலியாய், ஒரு ஆதர்ச மனைவியாகவே வருகிறாள். சட்டநாதன் ஒளிவுமறைவின்றி அத்தனை
நடப்புகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்கிறான், சின்ன
அண்ணியோடு தனக்கிருந்த காதல் உட்பட. சின்னசின்ன சம்பவங்களினூடே அந்த தம்பதிகளின்
அன்னியோன்னியதிற்கு வண்ணம் சேர்க்கிறார் தி.ஜா.
இதுவரை
சட்டநாதன்குடும்பத்தில் ஒட்டாது, வசதியான வணிகராய் சட்ட நாதனின்
பெரியண்ணன் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். பெரும் வாழ்வு வாழ்ந்து ஓரிரவில்
அத்தனையும் இழந்து, சட்டநாதனின் ஆதரவில் அண்டிவாழும் நிலைமைக்கு ஆளாகிறார்.
பெரிய அண்ணனின் மனைவி தான் கதையின் சிக்கலான
வார்ப்பான ‘பெரிய அண்ணி’. தி. ஜாவின் விவரிப்பில் பெரிய அண்ணியின் மேல் கோபமும்,
அசூசையும், அனுதாபமும் மாறிமாறி நம்மை
ஆட்கொள்கின்றன. படாடோபமும், எடுத்தெறிந்து பேசுவதும், மாளா காம இச்சையும், குயுக்தியும், குதர்க்கமும்
கலந்த ஒரு பாத்திரமாய் இருப்பவள் பெரிய அண்ணி. வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில்
தேடிக்கொள்ளும் பெரியண்ணனின் தொடுப்பாய் ஆண்டாள் எனும் ஒரு தாசி. தாசியேயானாலும்
அவரை உளமார நேசிக்கும் குணவதி.
பெரியண்ணன்
குடும்பமும் கிராமத்திற்கு வந்து சேர, சச்சரவுகள்
மிகுந்து இருப்பை நரகமாக்குகின்றன. துர்க்குணமே உருவாக பெரிய அண்ணியும்
குஞ்சம்மாளையும் சட்டநாதனையும் தொடர்பு படுத்தி புரணி பேசுகிறாள்.
காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது. சட்டநாதன் பொருளாதார மேம்பாடும் மன முதிர்ச்சியும் அடைகிறார்.
பிள்ளைகள் பெரியவர்களாகிறார்கள். சின்ன அண்ணனின் மகளுக்கும்,மற்றும் பெரியண்ணன் வாரிசுகளுக்கும் திருமணம்
செய்விக்கிறார் சட்டநாதன். முன்பு பெரியண்ணன் பட்டகடனை அடைக்க விற்ற நிலத்தில்
கிடைத்த புதையல் மூலமான பணம், வாங்கியவரின் மகன் மூலம் கிடைக்கிறது.
அதில் சின்ன அண்ணன் பங்கு என சின்ன அண்ணிக்கு சட்டநாதன் கொடுக்க எத்தனிக்க,
சின்ன அண்ணிக்கு அவர்பேரில் பெரும் கசப்பு மூள்கிறது.
தன்னுடனான
உறவையும்கூட புவனாவுக்கு சட்டநாதன் தெரிவித்து இருந்ததை அவன் மூலமே அறிந்து
வெறுப்புற்று தன் மகள்வீட்டோடு போகிறாள்
குஞ்சம்மாள். மனதுக்குள் சட்டநாதன் மேல் நேசம்வளர்த்து, அதை போஷித்து ஆராதித்து வந்தவளின் அன்பே துவேஷமாக
மாறி நிரந்தரமாய்ப் பிரிகிறாள். பெண்ணோடு வாழ சென்னைக்கு போய்விடுகிறாள்.
கடைசிவரை தேளாய்
கொட்டிக்கொண்டிருந்த பெரிய அண்ணி, தன் மேல் தானே கொண்ட வெறுப்பில்
உணவையும் மறுத்து ஆரோக்கியம் கெட்டு காலமாகிறாள். பெரிய அண்ணனுக்கும் மரணம்
நேர்கிறது. சட்டநாதனின் பிள்ளைகளும் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு சென்று
விடுகிறார்கள்.
இதுகாறும்
சட்டநாதன் வாழ்வில் பூவாய் வாசம் வீசிய புவனா, ஒரு
கேள்விக்குறியாய் மாறிப்போகிறாள். சட்டநாதனை சந்தேகத்தாலும் நம்பிக்கையின்மையாலும்
வாட்டி எடுக்கிறாள். சின்ன அண்ணியுடனான சட்டநாதனின் உறவை மீண்டும் தோண்டியெடுத்து
சந்தேகச்சாட்டை வீசுகிறாள்.
தான் ஏமாற்றப்
பட்டதாயும் இடையூறாய் இருந்து விட்டதாயும் சிடுசிடுத்தபடி சட்டநாதன் வாழ்க்கையை
நரகமாக்குகிறாள். புவனாவின் இந்த குணபேதத்தை சட்டநாதன் பொறுமையாகக் கையாள்கிறார். PMT(
Pre Menstural Tension) எனும் மெனோபாஸ் பருவத்து உளச்சிக்கலை
புவனாவின் இந்த பிறழ்நிலைக்கு காரணமாக்கி புவனாவுக்கு தி ஜா வக்காலத்தும்
வாங்குகிறார்.
மீண்டும் புவனா
ஆச்சர்யக் குறியாய் மீள்கிறாள். பழைய புவனாவாகி அன்பு செலுத்துகிறாள். கதையும்
முடிகிறது.
ஆணும் பெண்ணும்
ஈருடல் ஒருயிராய் எக்காலமும் மாற இயலாது என்று முத்தாய்ப்பு வைக்கிறாரோ தி ஜா?
முடிவில் சட்டநாதன் புவனாவை அணைத்துக் கொள்கிறார். அவளும் அவருக்குள்
புகுந்து கொள்வதுபோல் தான் ஒட்டிக் கொள்கிறாள்.
‘ஒன்றாக
முடியவில்லை போல் தான் இருந்தது.அவருக்கு.அணைப்பு விட்டதும் மீண்டும் தனியாகத்தான்
இருந்தது.
ஈஸ்வரனால் தான்
முடியும் போலிருக்கிறது என்று அவருக்குத் தோன்றிற்று. ஈஸ்வரனுக்கும் முடியாது.ஒரு
முலையும் ஒரு மூக்குத்தியும் ஒரு கொலுசும் நசுங்கிவிடவில்லை.மறைந்துவிடவில்லை.’
ஒரு சாதாரண
கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த்
தீட்டியிருக்கிறார் தி ஜா.
தி ஜா வின்
படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின்
சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக காட்டியிருப்பதாய்ப் படுகிறது.
இளம்விதவையான
சின்ன அண்ணி தன்பால் கொண்டுள்ள ஈர்ப்பை அறிந்தும், தன்னை
பார்த்துக் கொண்டாவது இருப்பதே போதும் எனும் அவளின் உள்ளக்கிடக்கையை புரிந்து
கொண்டும் கூட, புது
தம்பதிகளாய் அவளையும் உடன்வைத்துக் கொண்டு வாழ்வது சரியா சட்டநாதன்? என்று கேட்கத் தோன்றுகிறது. கதையின் விவரிப்பில் குஞ்சம்மாள்
விரகத்தில் எரிந்து கொண்டிருப்பதை உள்ளூர வெறித்துக் கொண்டிருக்கும் ‘ஆண்மை’
மிக்கவனோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு புத்திசாலியாக
வாழும் புவனா கூட இந்த சேர்ந்து வாழ்தலை யோசிக்கவில்லையோ? அதுவும்
புருஷன்-ஓரகத்தி பூர்வோத்திரம் அறிந்த பின்புமா? இளம்விதவைகளை
வதைப்பதே வேலையாய் போய் விட்டது தி ஜாவுக்கு!
அப்போ அம்மா
வந்தாள் இந்து.... இப்போ குஞ்சம்மாள்....
‘பெரியண்ணி’யை
புளியமரம் என்று உருவகிக்கிறார். அடுத்தவர் சுவாசக் காற்றை மாசேற்றும் புளியமரம்..
பேய் வாழும் புளியமரம்... அவளுடைய காமத்தை வெளிச்சம் போடும் படைப்பாளி, கைப்பிடித்தவன் தொடுப்பை நியாயம் செய்வது போன்று மெழுகுவதும்,
தாசி ஆண்டாளம்மாவை அம்பிகையாக தோற்றுவிப்பதும் ஒருவேளை பெரியண்ணி
பாத்திர வார்ப்பை மேலும் குரூரமாகத் தோன்றச் செய்யத்தானோ?
புவனாவுக்கு
வருவோம். மாதர்குல மாணிக்கமாய் நிறுத்தப்படும் புவனா, சட்டநாதனிடம்
கொடூரமாய் நடந்து கொள்வது எதிர்பாராதது. புவனாவின் இந்த சறுக்கல்,சின்ன அதிர்ச்சி மதிப்பையன்றி கதைக்கு எந்த பரிமாணமும் ஏற்படுத்தாத
திணிப்பாகத் தோன்றுகிறது. மாறாக, ‘ச்சே! பொம்பளைங்களே இப்படித்தான்’
எனும் நினைப்பை வரவழைக்கிறதோ? இந்த ‘திருப்பத்தேவை’ வாராந்திர தொடர்கதைக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.
இடையிடையே
சுதந்திரப் போராட்ட செய்திகள் கதையின் காலத்தை நினைவுறுத்துகின்றன. ஆனாலும் இது
பழைய கதை என்று ஒதுக்கவியலாமல் நம்மையும் எல்லா கதாபாத்திரங்களும் ஆகர்ஷித்துக்
கொள்கின்றன.
வரப்பில்
முளைத்த குறும்பூக்கள், வீடுதோறும் மாக்கோலம் துலங்கும் தெருவின் காட்சிகள், வயல்,வரப்பு, கடை,மூங்கில்
மரக்கூட்டம், பட்சிஜாலம், என
அனைத்தையும் விவரிக்கும் அழகு.. இயல்பான உரையாடல்களில் தெறிக்கும் கூர்மையும்,
தஞ்சை வழக்கும்... அடடா!
கதையின்
ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு
முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை
படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே
உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக
வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.
தி ஜா வைப்
படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக்
கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும
சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு
தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம்.
கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில
மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும்
ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.
அந்த பதில்....
‘அது அப்படித்
தான்!’
செம்பதிப்பு 2003
125 comments:
ரசித்தேன்...
>>>>>
இது என்னைப்பார்த்து என் மனைவி இன்று சொல்லுவது போலவே உள்ளது.
//“ஏன்? ஒண்ணு பண்ணேன்... நான் போயிட்டா கட்டை, வரட்டி வாங்க வேண்டாம். என்மேல இதையெல்லாம் குமிச்சு என்னை கரையேத்திடேன்”//
இது நான் என் மனைவியிடம் சொல்ல நினைப்பது போலவே தத்ரூபமாக உள்ளது.
>>>>>
இந்த மேற்படி பதிவினில் என் இதுபோன்ற அனுபவங்களை அப்படியே எழுதியுள்ளேன்.
>>>>>
:)))
நீங்கள் கொடுத்துள்ள சுட்டியைக் க்ளிக்கி (மீண்டும்) படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன்றிய கருத்துரையை எழுத ஸ்க்ரால் செய்தால் கிட்டத்தட்ட அதே கருத்தை நான் ஏற்கெனவேஅந்தப் பதிவில் இட்டிருக்கிறேன்! ஹிஹிஹி...
>>>>>
அதில் அன்று நான் உறுப்பினராகச் சேர்ந்துகொண்டு, அதற்கான அடையாள அட்டையும் பெற்றுக்கொண்டேன்.
அன்றுதான், அந்த நிகழ்ச்சியில்தான், நான் அவரை நேரில் சந்திக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. மேடையில் இருந்த அவரை நான் ஏனோ புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். இப்போது நினைக்க என் மனதுக்கு வருத்தமாக உள்ளது.
>>>>>
மோகன்ஜி அவர்களுக்கும் நன்றி
தம +1
இதனை இந்தப் பதிவின் மூலம் படிக்க வாய்ப்பளித்த ’எங்கள் ப்ளாக்’க்கும் குறிப்பாக நம் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அன்புடன் VGK
இந்த மாதிரி உதிரிகள் ஒரு பெரிய கித்தான் பை முழுவதும் இருந்தது. சிலவற்றை அண்ணாவிடம் கொடுத்தேன். சிலது நாங்கள் ஒவ்வொரு ஊராக மாற்றலில் போகையில் சரியாகப் பாக்கிங் செய்யாமல் தொலைந்து போயின. அப்படித் தொலைந்தவைகளில் சில, பல புத்தகங்களும் உண்டு. அவற்றில் முக்கியமானவை சித்தப்பா எனக்குக் கல்யாணத்தன்று பரிசளித்த, "வாழ்விலே ஒரு முறை" புத்தகம். யாரோ படிக்கவென வாங்கிக் கொண்டு திரும்பத் தரவில்லை. என் பெயர், அவர் பெயரோடு திருமண நாளையும் அதில் குறிப்பிட்டுக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார் சித்தப்பா! :)
"ம்ம்ம்ம், என்னுடைய கருத்தைப் படிக்கும் சிலர் நான் என் அனுபவத்திலிருந்தே எழுதுவதாகச் சொல்லக் கூடும். " என்று படிக்கவும். நான் எழுதி இருப்பது பதிவைக் குறிப்பதாக அமைந்து விட்டது. வருந்துகிறேன். :(
அருமையான கதை.
நான் ரசித்து படித்த
கதை இது.....
வாழ்த்துக்கள்...
தொடருங்கள் கூளம் போல்
கதைகளை....
அருமையான கதை.
நான் ரசித்து படித்த
கதை இது.....
வாழ்த்துக்கள்...
தொடருங்கள் கூளம் போல்
கதைகளை....
பேப்பர் ghost.
சுப்பு தாத்தா.
இங்கும் நினைவுகளுக்கு சாட்சியாய் இருக்கும் கூளங்கள். அனுபவப்பட்ட வேம்பு சாரின் வழிகாட்டலாய் கிடைத்த, கூளங்களுக்கு நடுவெ குந்துமணியாய் தலைப்பு.. கண்ணுக்குத் தெரிகிற கூளங்களில் படிந்திருக்கும் கண்ணுக்குத்தெரியாத நினைவு படிமங்கள்..
ஹப்பா.. என்ன கதை ஐயா!.. மனுஷனின் மகோன்னதம் எப்படியெல்லாம் அவனைப் போட்டு அலைக்கழிக்கிறது!.. ஒவ்வொரு காகிதத்தைச் சுற்றியும் பின்னிக் கொள்ளும் நினைவுப் பின்னல் அற்புதம்!
செருப்பை மாட்டிக் கொள்ளும் சமயம் ‘அப்பா..’ என்று கீழ்க்குரலில் குழைந்து -- உமாவின் நைச்சியத்தை மறக்க முடியுமா?..
“அம்மா சாரை நல்லா ஒட்டி நில்லுங்கம்மா”.-- அந்தக்கால போட்டோ ஸ்டூடியோ ஜபர்தஸ்துகளைத் தான் மறக்க முடியுமா? ஓவியமாய் நெஞ்சில் புதைந்த நினைவுகளை மீட்டி எடுக்கும் வருடல்களில் தான் எத்தனை சுகம்?.. தொடர்ந்து அம்மாவின் வார்த்தை சாட்டையையும் மறக்காமல்...
‘ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் பிரஜோத்பத்தி வருஷம் மாசி மாதம்...‘ எவ்வளவு தத்ரூபம்!
அலுவலக மெமோ நிகழ்த்திய வாழ்க்கைச் சரிதத்தின் மறக்கவொண்ணா பக்கக் கிழிசல்கள்..
இத்தனைக்கும் நடுவே ராமபாணப் பாச்சைகளுக்கு பெயர் வைத்தவனை ரசிக்கும் ரசனை உள்ளம்...
''''இருக்கட்டும் என்று ஒதுக்கிக் கொண்டது சில பழைய போட்டோக்களும், குழந்தைகள் கிறுக்கிய சில தாள்களும்,குழந்தைகளின் கல்யாணப்பத்திரிக்கைகளும்,சில புத்தகங்கள் மட்டுமே.'-- யாருக்கும் இவை கூளங்கள் இல்லை என்று சொல்லாமல் சொன்னதின் நடுவில் 'நானும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மகன், மகள், பேரன், பேத்தி கிறுக்கிய காகிதங்கள் நினைவுக்கு வந்து'....
சபேசன் பாத்ரூமுக்குள் நுழைந்தார். சோப்பைக் கையிலெடுத்துக் குழைத்தார். -- இந்த இடத்தில் நினைவுகள் நெஞ்சில் ஓடிய மனக்கிலேசத்தில், கதையின் முடிவு சபேசனின் முடிவாய் இப்படித்தான் இருக்கும் என்று வாசிப்போரின் எதிர்பார்ப்பை மாற்றி எழுதிய எழுத்துக் கோலம்... மோகன்ஜி! கங்கிராட்ஸ்.. இவ்வளவு அருமையாக எழுதுவீர்களா, நீங்கள்?.. தெரியவே தெரியாதே!
'பேப்பர் ரோஸ்ட்'-- இன்னும் காகித ஞாபகம் போன பாடில்லை.. எப்படிப் போகும்?.. அத்தனைக் காகிதச் சுருட்டல்களும் நினைவுகளை தங்களுக்குள் சுருட்டி வைத்திருக்கும் படிமங்கள் தானே!
அதையெல்லாம் கூளங்கள் என்று கொச்சை படுத்தி எப்படிச் சொல்லத் துணிவது?.. ஒழித்து விட்டாலும் மன சிம்மாசனத்தில் என்றென்றும் வீற்றிருக்கும் வரம் பெற்றவை அல்லவா அவை?.. என்று எண்ணங்கள் புரண்டாலும்,
பத்திரிகை பிரசுரத்திற்கேற்பவான தலைப்பு கொடுத்த விக்கிரமன் சார் புன்முறுவலுடன் நிழலாடுகிறார்! எத்தனை அனுபவப்பட்டவர்?.. அவருக்குத் தெரியாததா?..
'கூளங்கள்' கதை ஏற்படுத்திய உணர்வுகள் மறக்கவே மறக்காது!
மோகன்ஜியின் படைப்புலம் வாழ்க! கைநிறைய சுமந்திருக்கும் வாழ்த்துக்களைப் பிடியுங்கள், நண்பரே!
pustakam vanitha vruththam ,
parahasthe gatham gatham
punaha aagachEthu
Jeernaah, ......., kandhithaha.
पुस्तकम वनिथा व्र्त्थम
परहस्ते गतम गतम
पुनह आग्च्चेतु
झॆर्णा भ्रश्ता खन्दितह।
இந்த வசனம் கேட்டதில்லையோ ?
சுப்பு தாத்தா.
தமிழ் மணம் சுற்றுகின்றது மீண்டும் வருவேன்....
கீதா: கூளம் ! கதை மிகவும் யதார்த்தமான நிகழ்வைச் சொல்லிச் செல்கின்றது. அருமை.
எங்கள் வீட்டிலும் நான் சேர்த்தவை இருக்கிறது. மகன், கணவர் சேர்த்த புத்தகங்கள் என்று எங்கள் சொத்து இவைதான். அதனால் யாரும் ஒருவரை ஒருவர் சொல்லுவதில்லை கூளம், தூக்கிப் போடு என்று! நானும், மகனும் சொல்லிக் கொள்வது என்னவென்றால்...ம்மா நான் சம்பாதிச்சு எதிர்காலத்துல இந்தப் ஃப்ளாடை வித்துட்டு, இதை விட கொஞ்சம் பெரிசா ஃப்ளாட்/வீடு வாங்குவோம்/கட்டுவோம்...வேற எது இருக்குதோ இல்லையோ...ஆடம்பரமே வேண்டாம்.... ஒரு பெரிய ரூம் நம்ம சொத்துக்கு, அமைதியா உக்காந்து வாசிக்க, எழுத..." என்று சொல்லுவதுண்டு.
தமிழ்மணம் உலகம் சுற்றும் வாலிபனாகியிருக்கிறது. சுத்தி முடிச்சு வரட்டும்...அடடா இன்டெர்னர் எரர் வருதே..ஹும்...
கீதா
மிகவும் உண்மை. ஒவ்வொரு காகிதமும் அவர் நினைவுகளோடு பின்னிப்பிணைந்திருந்த விதத்தை அழகான கதையாக்கியிருக்கிறார் ஆசிரியர். ஏதோ ஒரு வேகத்தில் காகிதக் கூளத்தை அப்புறப்படுத்த அவர் வெளி மனது நினைத்தாலும், அவை அவரது உள்ளுணர்வுடன், ஆன்மாவுடன் இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதை அற்புதமாய்ச் சொல்கிறது பேப்பர் ரோஸ்ட் என்ற வார்த்தைகள்! ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்! கதையை வாசிக்கத் தந்த எங்கள் பிளாக்குக்கு நன்றி!
ரசித்தேன்
தம சுற்றிக் கொண்டே இருக்கிறது
அருமையான கதை
என் குப்பை கூளங்களையும்
மனைவியின் தொடர் நச்சரிப்பையும்
ஞாபகப்படுத்திப் போகுது...
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ரோஸ்ட் தோசை சாப்பிட அனுப்பியதற்கு மிக நன்றி.
என் வீட்டுக்காரருக்கும் இது போல ஒரு மெமோ 2000 ரூபாய்க்கு வந்தது. நண்பன் ஒருவன் வண்டியை ரிப்பேர் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். கொடுக்க வேண்டிய பில் அமவுண்ட் தீர்க்கவில்லை. மாசக் கடைசியில் தெரிய வந்து மேலிடம் வரை போய் விட்டது.
எப்படியோ கட்டிவிட்டோம். இந்தக் குறை அவர் மனதைவிட்டுப் போகவே இல்லை.
உங்கள் வரிகளைப் படிக்கும் போது, என் மனம் துடிக்க ஆரம்பித்து விட்டது.
எத்தனையோ தளங்களை அருமையாகத் தொட்டு அற்புதமாக முடித்துவிட்டீர்கள்.
அன்பு ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் நன்றி.
கூளம் என்று இருந்ததெல்லாம்
கலக்கி விட்டால் காண்பதென்ன !!
கடந்த கால காயங்கள் சில
கற்பனையில் மிதந்த நேரங்கள் சில.
அற்பங்கள் சில எனினும்
சிற்பங்களும் பல.
கூடலும் ஊடலும்
வாடலும் தேடலும்
பாடலும் சாடலும்
பவனி வரும்
பள்ளியறை அன்றோ கூளம் !!
கூளம் எனது சரித்திரம். என்றுமதை
வைத்திருப்பேன் பத்திரம்.
சுப்பு தாத்தா.
அநாவசியமான காகிதங்களை உடனுக்குடன் நீக்குதல், தேவையானவற்றை சரியாக பைல் செய்து பாதுகாத்தல், தேவைப்பட்ட காகிதத்தை அல்லது கோப்பினை தேடிக்கொண்டிராமல், உடனடியாக எடுக்கும்வகையில் முறையாக சேமித்து அடுக்குதல் என்பவை குறித்து விவாதிப்போம். இப்படி முறையாக காகிதங்களைக் கையாளாமல், குப்பலாக குவித்துக் கொண்டு அவசரத்தில் தேடுகையில் ஏற்படுவது நேர விரயமும் தேவையற்ற டென்ஷனும் தான்.
எது தேவையான காகிதம், எது தேவையற்றது என்பதை முடிவு செய்வதில் தான் இருக்கிறது சிக்கலே!. அலுவலகத்துக் காகிதங்களில் பெரும்பாலும் இந்த நிர்வகிப்பினைக் கொண்டுவந்து விடலாம். சொந்தக் காகிதங்களில் அது சற்று சிரமம். என் தாத்தா எழுதிய கடிதம் எனக்கு பொக்கிஷமாயும், என் மனைவிக்கு குப்பையாகவும் தோன்றலாம்.!
//இது பேப்பர் ரோஸ்ட் இல்ல.
பேப்பர் ghost.//
மிக கச்சிதமான கருத்து. அலைபேசியில் நீங்கள் தந்த விளக்கமும், பாராட்டும் என்னை மிக கௌரவப் படுத்தியிருக்கின்றது. உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் இன்னமும் எழுத முயல்வேன் !
படைப்பாளி காட்சிப்படுத்த முயலும் வாழ்க்கைத் தருணத்தையும் ,சம்பவக் கோர்வையையும் கதையைப் படிக்கும் கணத்தில் ஒரு தேர்ந்தவாசகன் தனதாக்கிக் கொண்டுவிடுவார். தன் மனோலயப்படி அதில் வாழ்ந்து, தன் அனுபவத்தின் பகுதியாகவே அந்தக் கதையை உள்வாங்குதல் உயரிய வாசிப்பு.
விக்கிரமன் சாரை தனிப்பட்ட முறையில் நீங்களும் அறிந்திருந்ததினால் அவர் செய்த கதைத்தலைப்பு மாற்றத்தையும் உங்களால் கணிக்க முடிந்தது.
கதையினை கூர்ந்து வாசித்து கருத்துரையில் அதை அசைபோட்டிருகிறீர்கள். உங்கள் பாராட்டை தலைதாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். வானவில்லுக்கு மறுபடியும் வாருங்கள்...மிக்க நன்றி ஜீவி சார்!
உங்களுக்கு கதை பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்பில் இருப்போம்
பாராட்டுகளுக்கு நன்றி! இந்தக் கதையின்மூலம், சில நண்பர்களின் வடுக்களின் ரணங்களை நெருடியிருக்கிறேன் என்று தெரிகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். கதையின் சம்பவங்கள் நமக்கு நேர்ந்ததை தொட்டுச் செல்லும் போது ஏற்படும் வலியை நானறிவேன். அந்த ஆயிரம் ரூபாய் நினைவைக்கூட, சபேசன் போல் சுக்குநூறாய்க் கிழித்து ஊதித்தள்ளுங்கள்!
உங்கள் கவிதைபோலும் கருத்து ரசிப்புக்குரியது.
//கூளம் எனது சரித்திரம். என்றுமதை
வைத்திருப்பேன் பத்திரம்//
தெரிந்தோ தெரியாமலோ எனக்கொரு பழக்கம் இருந்ததுண்டு. இன்னமும் இருக்கிறது கூட... மனவாதை தரும் சம்பவங்களையும், சில இழப்புக்களையும், வலிகளையும் துக்கங்களையும் எழுத்தில் ஒளித்துவைத்து விடுவேன். கவிதையிலோ கதையிலோ பூடகமாய் பொதித்து என்னை மீட்டுக் கொள்ள முயல்வேன். ஆறுதலான ஒரு முயற்சி. நீரினில் மூழ்கி நினைப்பொழிப்பது போல், படைப்பினில் முங்கித் துடைத்து விடுவேன். அவை பெரும்பாலும் பிறர் படிக்க வெளிவருவதில்லை. காட்டினில் காய்ந்த வலிநிலா!
எதற்கு இதை சொன்னேன் என்றால், கூளத்தை பத்திரப்படுத்த வேண்டாம் நீங்கள்... உங்கள் வயதும் அனுபவமும், பரந்த வாசிப்பும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் பதிவிட்டபடிஇருங்கள். இது என் வேண்டுகோள்... என்னை குரு என்று ஒருமுறை சொல்லியிருக்கிறீர்கள்... அதன் படி இது என் கட்டளை!!
ரசனைக்கு நன்றி! கூளஒழிப்புக்கு என் நல்வாழ்த்துக்கள் !
கதை மிகவும் தத்ரூபமாக காட்சி காட்சியாகக் கண்ணில் வந்து போகிறது.
எல்லோரும் அவரவர் கூளங்களை நினைவிற்குக் கொண்டு வந்திருக்கிறோம். இதுவே கதையின் மிகப் பெரிய பாதிப்பு. பாராட்டுக்கள், மோகன்ஜி!
பல நாள் உறங்கிக் கிடந்த ஆதங்கத்தை இப்பொழுது எழுதி விட்டேன்.
கழித்துவிட்ட திருப்தி. எந்தக் கம்பெனிக்காக எங்கள் குடும்ப நேரங்களை
தியாகம் செய்தோமோ அதிலிருந்து விடுபட ஒரு தூண்டு கோலாக
இருந்த நிகழ்ச்சி. உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்.
வாழ்க வளமுடன் ஜி.
எல்லோரது வாழ்க்கையிலும், அதிலும் மென்மையான, சிறிது கலைநயம் கொண்டவர்களின் வாழ்க்கையில் இந்தக் கூளங்கள், மனசிலும் சரி, சேமிப்பிலும் சரி, பொக்கிஷங்களாய் நிறைந்திருக்கும்! அவற்றிற்கு விலை மதிப்பேது? அவற்றைப்பற்றிய மலரும் நினைவுகளுக்கு விலை மதிப்பேது?
மோகன்ஜி! உங்களின் சில சிறுகதைகள் உங்களின் பழைய தளத்தில் படித்து ஏற்கனவே மனம் நெகிழ்ந்திருக்கிறேன்! ஆனால் இத்தனை அழகாய், அதுவும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு முதியவரின் மன நிலையை, நெகிழ்வை, ஆற்றாமையை, தவிப்பை எப்படி எழுதியிருக்கிறீர்கள்?
//‘என் அருமை மகளே ! நீயேன் பெரியவளானாய்? ஏன் என்னை விட்டு எங்கோ பிறந்த ஒருவனுக்காய் நாடு விட்டு நாடு போய் சமைத்துப் போட்டு,, குழந்தைகள் பெற்றுக் கொண்டு.. இங்கே வரும் சமயமெல்லாம் அவர்களைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டு..... இந்தக் கிழவனுக்காய் உனக்கு சற்றேனும் நேரமிருக்கிறதா உமா?’// ஒவ்வொரு தகப்பனும் ஏதேனும் ஒரு சமயத்தில் ஏங்கிப் புலம்பும் வார்த்தைகள் அல்லவா இவை?
மனைவிக்கு இளம் வயதில் மன ஆறுதலைக் கொடுக்க முடியவில்லையே என்ற கழிவிரக்கமும் இனியாவது அவளுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்ற தாபமும்...இந்தக் கதையில் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் மோகன்ஜி!
இளம் வயதில் இது மாதிரி பொக்கிஷங்களை சேகரிக்கும் துடிப்பும், நடுத்தர வயதில் தோன்றும் அலுப்பும், முதிர்ந்த வயதில் பொக்கிஷங்கள் கூளங்களாய் மாறுவதும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன! எல்லோருடைய மன நிலையையும் ஒரு அழகிய கவிதையாய் சொல்லி கலங்க வைத்து விட்டீர்கள்!!
வேதனைகளை சுமந்தபடி வாழ்வதில் அர்த்தமில்லை. விதியின் குரூரப் புன்னகை நம் மீது விழும் போது அதை நோக்கி பதில் புன்னகை செய்யத் தெரிந்தவர்களாய் நாம் இருக்கலாகாதா? ஆன்மீகமும் இலக்கியமும் சொல்லும் பல பாடங்களில் முக்கியமானது பிரச்னைகளின் நிலையாமை தான் ! அவற்றின் கடந்து போக வல்ல தாற்காலிகம் தான் !
மனநெகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ்த்தியதிற்கு என் நன்றி ! ஶ்ரீராம் போல் தார்க்கோல் போடும் தம்பியிருந்தால், இன்னும் நிறைய கதைகள் என் மாடத்திலிருந்து நகரும் என்று தோன்றுகிறது மேடம் !
நீங்கள் ரசித்த இடங்களைப் பற்றிய உங்கள் வரிகள் அழகானவை.
அவசியம் இன்னும் கதைகள் பல 'வானவில் மனிதன்' தளத்தில் வரும்.
ஶ்ரீராம் மற்றும் நண்பரகளுக்கு சம்மதமெனில், 'எங்கள் blog'லேயே கூட...
என் பொண்ணு முதன்முதலா ஸ்கூலில் கிறுக்கின கிறுக்கல் எல்லாம் சேர்த்திட்டு வரேன் :) என்னை பொறுத்தவரை பல கூளங்கள் பொக்கிஷங்கள் பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்
// இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மனசுதான் இந்த உயிரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது//
இந்த சம்பந்தம் தான் எவ்வளவு நிஜம்?! அழுத்தமான கருத்துக்கு நன்றி சகோதரா!
’மோகன்ஜி’யும் தாங்களுமாகச் சேர்ந்து செய்துள்ள சங்கல்ப்பம் இன்னும் சற்று நேரத்தில் நிறைவேறப்போகிறது. அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)
மறுநாள் புதன்கிழமை காலை வேறு பதிவினை வெளியிட்டு அதை பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள்.
அதற்குள்ளாகவே அதில் என் மறுமொழிகள் ஏதும் அதிகம் இல்லாமலேயே 88 பின்னூட்டங்கள் கிடைத்திருந்தன என்பது தனிக்கதை.
நம் மோகன்ஜிக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகையாக செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று முழு நாட்களா ? :)
>>>>>
பின்னூட்ட எண்ணிக்கையில் இது 100 :)
ஶ்ரீராம் மற்றும் எங்கள் பிளாக் நேயர்களுக்கும் நான் தான் நன்றி சொல்ல வேண்டும். எந்தப் படைப்பும், படைப்பாளியின் நோக்கையும் உணர்வெழுச்சியையும் படிப்பவர்க்கு கடத்த முடிந்தால் வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம். இவ்வளவு வருடங்களுக்கு பின்னரும் இது ரசிக்கப்படுவது என் சொந்த சுகம். எங்கள் பிளாகும் வானவில் மனிதனும் அவசியம் அடிக்கடி கைகோர்க்கும் உங்கள் அன்பிருந்தால்....மீண்டும் நன்றி!!
நீங்கள் சொன்ன 'சங்கல்பம்' இந்த 100 தானா?
//மாமாவுக்கு ஒரு கல்யாண மண்டப ஹால் கூட பத்தாதும்மா!’ //
மருமகள் சொல்வது போல் எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் சொல்வது உங்களுக்கு இந்த வீடு பத்தாது என்பது தான்.
நாங்களும் வீட்டில் கூளங்களும், புத்தகங்களும் நிறைய சேமித்து வைத்து இருக்கிறோம்.
35 வருடங்காளாய் ஊர் மாற்றம் இல்லாமல் இருந்து விட்டதால் சேமித்தவை கஷ்டமாய் தெரியவில்லை, இந்த முறை வீடு, ஊர் மாற்றத்தால் புத்தக சேமிப்பு மற்றும் பொருட்கள் சேமிப்பு மிகவும் அதிகமோ என்ற எண்ணம் வந்து போனது. இனி எதுவும் புதிதாக வாங்க கூடாது என்ற எண்ணமும் வந்து இருக்கிறது
(எத்த்னை நாளோ இந்த வைராக்கியம்)
//தூர்தர்ஷனில் "வாக்லே கி துனியா" தொடரின் முதல் காட்சியைப் பார்த்தவர்களுக்கு இது சாமானியர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்னை/அல்லது பழக்கம் என்பது புரியும். :)))))//
கீதா சொல்வது போல் அனைவரும் எதிர் கொண்ட பிரச்சினை தான்.
அந்த தொடரில் சாமான்கள் ஒழிப்பதும் பின் ஆள் ஆளுக்கு அவை வேண்டும் என்று மீண்டும் எடுத்து உள்ளே வைப்பதும் நடக்கும்.
அந்த கதையில் வருவது போல் எங்கள் வீடு சுத்தம் செய்யும் போது , சுண்ணாம்பு அடிக்கும் போது வேண்டாதவை என்று கழிப்புது போல் ஓரத்தில் வைக்கப்படும் பொருட்கள், புத்தகங்கள் அப்புறம் அதுக்கு தேவைப்படும், இதுக்கு தேவைபடும் என்று ஒன்று ஒன்றாய் மீண்டும் பழைய இடத்திற்கு போய் விடும்.
முன்பு அம்மா எங்கள் பழைய நோட்டு புத்தக பேப்பர்களை ஊறவைத்து அரைத்து பெரிய பெரிய கூடையாக செய்து விடுவார்கள். இப்போது அவையும் குப்பைகள் ஆகிவிட்டது.
பொக்கிஷங்கள் என்று இப்போது வலைத்தளத்தில் போட்டுக் கொள்ளலாம்.
பழையன் கழிதலும் தலைப்பை விட கூளம் நன்றாக இருக்கிறது..
குப்பை , கூளங்கள் என்பதை சிலவற்றை நாம் பத்திரமடுத்தவே முயல்வோம். பழையன் கழிதல் இல்லை அங்கு.
முன்பு கடிதங்கள் நிறைய இருக்கும் ஒரு கம்பியில் குத்தி வைத்து இருப்போம் அவற்றை ஒரு சமயம் நிறைய சேர்ந்து விட்டது என்று கிழித்து விட்டு அப்பா, அம்மா, அக்கா, அண்னன் இறந்தவுடன் அவர்கள் கடிதங்கள் இருந்து இருக்கலாம் அவர்கள் நினைவுகளை சுமந்தபடி அவற்றை கிழித்து போட்டதற்கு வருந்தி கொண்டே இருந்தேன். இன்னும் கொஞ்சம் இருப்பதை பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன். என் காலத்திற்கு பின் அவை மற்றவர்களுக்கு குப்பை கூளங்கள்தான் அவை.
கதை மனதை பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது.
உங்களுக்கும்,எங்கள்பிளாக்’ ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி. நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
//அம்மா எங்கள் பழைய நோட்டு புத்தக பேப்பர்களை ஊறவைத்து அரைத்து பெரிய பெரிய கூடையாக செய்து விடுவார்கள். இப்போது அவையும் குப்பைகள் ஆகிவிட்டது//.
ஆச்சர்யமாக,எனது பழையகதை ஒன்றில் ஒரு மருமகள் இந்த பேப்பர் கூடை செய்யும் ஒரு இடம் வரும்... தேடிப் பார்க்கிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தின் மருமகளுடைய வாழ்க்கையின் சில சம்பவங்கள். வலிஎற்றுகிறேன் சில நாட்களில்.. என் விவரங்கள் சரியா என்று நீங்கள் தான் அப்போது சொல்ல வேண்டும்
//நினைவுகளை சுமந்தபடி அவற்றை கிழித்து போட்டதற்கு வருந்தி கொண்டே....//
நடப்பது தான்... நானும் நான் எழுதிய படைப்புகள் சிலவற்றை எறிந்து விட்டேன்.. கொஞ்சம் சரிப்படுத்தி அவற்றை இப்போது பதித்திருக்கலாம் என்று தோன்றும் சில சமயம்.