ஒரு சர்தார்ஜிக்கு உத்தியோக நிமித்தம் உலகமெல்லாம் சுற்றும் வாய்ப்பு இருந்தது. எந்த நாடு போனாலும்,அந்த ஊர் ஸ்பெஷலா இருக்கும் சூப்பைத் தான் முதலில் ஆர்டர் செய்வார். அதன் ருசி, செய்முறை எல்லாம் விசாரித்து ஊர் திரும்பியவுடன் மனைவியிடம் சொல்வார்.
ஒருமுறை அவர் லண்டன் சென்ற போது,தங்கிய ஓட்டலில், வழக்கம் போல் சூப்புக்கு ஆர்டர் செய்துவிட்டு குளிக்க சென்றார். அதே சமயம் பக்கத்து ரூமில் இருந்த வயிற்று வலி பேஷண்ட்டுக்கு “இனிமா’
தர ஏற்பாடாகி இருந்தது.
கம்ப்யூட்டர் கோளாறில் ரூம் மாறி, சர்தார்ஜி ரூமுக்கு வந்த மெடிக்கல் அட்டண்டன்ட், உடை மாற்றிக் கொண்டிருந்த சர்தார்ஜிக்கு இனிமாவை பம்ப் செய்து விட்டு அவசரமாய் சென்று விட்டான்.
வீடு திரும்பிய சர்தார்ஜியை மனைவி வழக்கம் போல் கேட்டாள்,
‘லண்டன் சூப் எப்படி இருந்ததுங்க?”
சர்தார்ஜி சொன்னார்,”அம்மாடி ! நானும் பல நாடு போயிருக்கேன். பல சூப் குடிச்சிருக்கேன். ஆனால் லண்டன்ல சூப் குடிக்கிற வழியே வேறு! என்ன ஒண்ணு... உப்பு, காரம் தான் தெரியல்ல.’
ஒரு சர்தார்ஜி வீடு வீடா போய் ஒவ்வொருத்தரா தேத்திக்கிட்டு சினிமாவிற்கு கிளம்பினாராம். ஒன்னு ரெண்டுன்னு மொத்தம் பதினெட்டு பேர் சேர்ந்தப்புறம் "அப்பாடி.. வாங்க போகலாம்" ன்னு எல்லாரையும் அழைச்சுகிட்டு தியேட்டர் பார்க்க போனாராம். எதிர்த்தாப்பல வந்தவர் "ஏன்னா சர்தார்ஜி.. இவ்வளோ பெரிய சைனியத்தோட எங்க போறீங்க" அப்படின்னு கேட்டாராம். அதுக்கு அந்த சர்தார்ஜி "படம் பார்க்க போறோம்" "இவ்வளோ பேருமா" அப்படின்னு கேட்ட அவர்கிட்ட சர்தார் சொன்னாராம் Above 18 அப்படின்னு போஸ்டர்ல போட்ருக்கான். அதான் 18 பேரை அழைச்சுகிட்டு போறேன் அப்படின்னாராம்.
பதிலளிநீக்குஇது எப்படி இருக்கு..
சர்தார்ஜி ஜோக்குடன் ஆர்.வி.எஸ்.
சாரி ஜி... எனக்கு சர்தார்ஜி ஜோக்ஸ் பிடிக்காது ஜி...
பதிலளிநீக்குரெண்டு பேரும் சேர்ந்து கார்னரை கலக்கிறிங்க ..
பதிலளிநீக்குஅதே ஜி லண்டன் போய் இறங்கியவுடன், ஆளுக்காள் தங்களது கடிகாரங்களை நேரம் சரி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் முதலில் லண்டன்காரரிடம் மணிகேட்க அவர் 11 GMT என்றார், இதை கேட்டுக்கொண்டிருந்த ,நம்ம ஜி யிடம் மற்றோருவர் மணிகேட்க, ரொம்ப பெருமையாக 11 HMT என்றவுடன் கேட்டவர் முகம் ’’ஙே’’
( நாம யார்கிட்டயாவது மாத்து வாங்குவதற்கு முன் Mr X க்கு போய் விடலாம் )
RVS,BRILLIANT JOKE,எங்க வீட்டு தாய்க்குலம் இதை ரொம்பவே
பதிலளிநீக்குரசிச்சாங்க. என்னத்த சொல்றது,என்னோட சூப் ஜோக்குக்கு பாட்டு வாங்கினேன்!
பிரபாகர்ஜி,உங்களுக்கு சர்தார்ஜி ஜோக்ஸ்னா தானே புடிக்காது? அவருக்கு பேரு மாத்தி காது குத்திடுவோம்....
பதிலளிநீக்குபத்மநாபன் சார்.HMT நல்லா இருக்குங்க.நீங்க சொல்றாமாதிரி நம்மள மாத்திருவாங்களோ? சங்கத்த கலைங்கப்பா..
பதிலளிநீக்குமுதல் முதலாகப் பார்வையிடுகிறேன்.. வயிறு குலுங்க சிரிக்கிறேன்.. இந்த நல்ல தொடக்கமே.. இனி தொடர்ந்து வர அழைப்பது போல உள்ளது..இன்னும் சிரிப்பதற்காக வருகை தொடரும்...நன்றியும் அன்பும்.. (என் சிறு குடிலுக்கு வருகைப் புரிந்தமைக்கும் தொடர இருக்கும் வருகைக்கும் மிக்க அன்பான நன்றி ஜி)
பதிலளிநீக்குRVS உங்களுக்கும் நன்றி.. Above 18 தடவை சிரித்தேன்..
வருகைக்கு நன்றி ஆதிரா.மனம் விட்டு சிரிப்பது பல இறுக்கங்களை விட்டுப் போக செய்யும்.சிரிச்சுகிட்டே இருங்க. இப்போதானே களத்துல இறங்கி இருக்கோம். சந்தித்துக் கொண்டே இருப்போம்...புன்னகையோடே..
பதிலளிநீக்குஒரு சர்தார்ஜி அலுவலகம் முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் வெகு நேரமாக நின்று கொன்டிருந்தார்,வெகு நேரத்திற்கு பிறகு வந்த பேருந்தும் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது, நம்ம சர்தார்ஜி விடுவதாய் இல்லை பின்னாடியே விரட்டி கொண்டு வீடு வரைக்கும் வந்துட்டார்,பிறகு தனது மனைவியிடம் ரொம்ப பெருமையாக நான் இருபது ருபாய் மிச்சம் பன்னிவிட்டதாக சொன்னார், அதற்கு அவர் மனைவி அட முட்டாள் டாக்சி பின்னாடி ஒடி வந்தா இருனூரு ருபாய் மிச்சம் பன்னி இருக்கலாம்னு திட்டுனாராம்.
பதிலளிநீக்குபடித்ததில் பிடித்தது
சசி
If any spelling mistake please forgive me ,it's my first time here
சசி,முதலாட்டத்துலேய இந்தப் போடு போடுரீங்க.. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு