பக்கங்கள்

சனி, ஆகஸ்ட் 28, 2010

சாவித்திரியும் சத்தியவானும்



சின்னச் சின்ன வார்த்தைகள்,
மெல்ல மெல்லப் பேசி,
புன்னகைப் பூவாய் பொலிய,
அன்பினைக் காட்டி- கொஞ்சம்
அருகிருந்து சோறிட்டு,-என்
முகவியர்வை முந்தானை யாலொற்றி,
அகமலர்ந்து வரவேற்று,-மதி
முகமலர்ந்து விடைக் கொடுத்து,...

ஒரு பொழுதேனும் நீயிருந்தால்-

பெரும் பூரிப்பில் மாரடைத்துப்
போய்விடுவேன் என்று தானோ

கடுகடுப்பும் கத்தலுமாய்
சிடு சிடுப்பும் சீற்றமுமாய்,
என்னுயிரைப் பிடித்திருப்பாய்
என்னவளே சாவித்திரி!!

 (புதுவை, ஜனவரி1992)


4 கருத்துகள்:

  1. //கடுகடுப்பும் கத்தலுமாய்சிடு சிடுப்பும் சீற்றமுமாய்,என்னுயிரைப் ‘பிடித்திருப்பாய்’என்னவளே சாவித்திரி!!//

    இதுதான் வாரல் கவிதையா மோகன்ஜி.

    உயிர் இருக்கும். ஒழுங்கான சாப்பாட்டுக்கு உத்திரவாதம் இருக்குமா? பாத்து பாடுங்கஜி.

    பதிலளிநீக்கு
  2. "இது உன்னப் பத்தி இல்ல செல்லம்... சும்மா உளுஉளாக்காட்டிக்கு"ன்னு சொல்லி வச்சிருக்கிறேன் பிரதர்.. குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி
    அடிச்சிடாதீக! தொடர் பதிவு எங்க சாமி?

    பதிலளிநீக்கு
  3. இதில தப்பே இல்லை மோகன் ஜி.கோபம் இருக்கிற இடத்திலதான் குணம் இருக்கும்.சண்டை போட்டுக்கொண்டு சந்தோஷமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த சாவித்திரி ஒரு காலத்துல பக்கத்துல குடியிருந்தாங்க.. எங்காளு
    ரொம்ப சமத்துங்க. உள்வாங்கினதெல்லாம்
    கவிதையாகுறதுதானே கவிதை மனசு? உங்கள் வருகைக்கு நன்றி. என்னோட கண்ணன் கதையை படிச்சீங்களா? "என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே" எனும் தலைப்பில்கிருஷ்ண ஜெயந்திக்கு எழுதி இருந்தேன்.அடிக்கடி வாங்க

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..