பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 29, 2010

பிரிவுபசாரக் கூட்டம்



இன்றுவோர் பிரிவுபசாரக் கூட்டம் ...

கூடிக்கூடி இரைதேடிய கோழிக்கூட்டம்,
இன்றோர் சேவலுக்கு விடை கொடுக்கும்.

பகிர்ந்துண்ட நாட்களும்,பகைகொண்ட நாட்களும்,
இன்று ஞானஸ்நானம் பெறப் போகின்றன.

இனிமேல் நினைவின் வேலிதாண்டியே
     நிற்கப் போகும் சேவலுக்கான ஒப்பனைப் பாசத்தில்,
நட்புகள் புனிதப்படுத்தப் படுகின்றன.
களிம்பேறி விட்ட உறவுகளுக்கு,
தற்காலிகமாய்....
முலாம் பூசப் போகிறார்கள்.

காவியேறிய பற்களின் சிரிப்புக்கும்,
கரிமண்டிய மனங்களின் எண்ணங்களுக்கும்,
இன்று...
இன்று ஒரு நாள் மட்டும்,
சம்பந்தம் இருக்கப் போவதில்லை!
உதடுகள் மட்டுமே,
உறவாடப் போகின்றன..
உரையாடப் போகின்றன.  

பிரிவை எண்ணியே,
விடைபெறும் சேவல் வருத்தப்படும்
இவ்விடத்து இரையில் உள்ள அனுகூலங்களும்,
போகுமிடத்து நிலைகுறித்த வியாகூலங்களும்,
அதன் குரலைக் கம்மச் செய்து விடும்


பழகிப்போன வார்த்தைகள்....
புளித்துப்போன பாராட்டுக்கள்...
செருமல்கள்.. கனைப்புகள்
எல்லாமே,
பூமாலை மணத்தோடு,
இனிப்புகார வகையோடு..
முற்றுப் பெற்று விடும்..

இப்போது இங்கே வழியும் பாசஅருவி,
நாளை விடியும் போது....
சுவடற்று மறைந்து விடும்...

என்றோ ஒரு நாள் பிரியப் போகின்ற கோழிகளும்,
மீண்டும்,
கூடிக் கூடி இரை தேடும்.
அவை பகிர்ந்துண்ணும்... பகை கொள்ளும்
பழைய சேவலோ ..
நினைவின் வேலிகளுக்கப்பால்...

இந்த பிரிவு
வெறும் உபசாரத்துக்காகத் தான்.



(என் கவிதைப் பரணிலிருந்து....)

63 கருத்துகள்:

  1. சூப் இல்லாத பேர்வெல் பார்ட்டியா?
    சித்ராவின் முத்திரையோடு கருத்து! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //என்றோ ஒரு நாள் பிரியப் போகின்ற கோழிகளும்,
    மீண்டும்,
    கூடிக் கூடி இரை தேடும்.
    அவை பகிர்ந்துண்ணும்... பகை கொள்ளும்
    பழைய சேவலோ ..
    நினைவின் வேலிகளுக்கப்பால்...

    இந்த பிரிவு
    வெறும் ‘உபசார’த்துக்காகத் தான்.//

    இது நிதர்சனம். பிரிவுக்காக ஏன் உபசாரம்!!! இன்னும் மனதைச் சங்கடப்படுத்தும் என்று நான் அடிக்கடி நினைப்பது. அதே சமயம் அது ஒரு ஆறுதல், இன்பமும் பிற்காலத்தில் தன் நினைவுகளை ஓட்டிப்பார்க்க..

    பதிலளிநீக்கு
  3. /////பழகிப்போன வார்த்தைகள்....
    புளித்துப்போன பாராட்டுக்கள்...
    செருமல்கள்.. கனைப்புகள்
    எல்லாமே,////
    நிறை குடம் தழும்பவதில்லை... அருமை...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வரிகளின் இறுக்கத்திலும் நினைவுக்கு வருவது: போனால் போகட்டும் போடா! :)

    பதிலளிநீக்கு
  5. கூவி கொக்கரித்து
    விடியல் சொல்லும்
    சேவல்லின்று
    முற்பகலில்
    முடிவுற்றது
    நா ருசியில்...........

    நகைத்து
    கூவியதோ
    நாளரிந்து
    கூக்குரளிட்டதோ
    நாவரியுமோ......
    நம்மில்......

    பதிலளிநீக்கு
  6. பிரிவு உபச்சாரக்கவிதை, பிரியா இடம் கொண்டுள்ளது. உங்கள் பரணின் பருமன் மட்டுமல்ல ஆழமும் வியக்க வைக்கிறது..

    வேலையிலிருந்து பிரிவதை விட, பள்ளியில் கல்லூரியிலிருந்து பிரிவது மிக கடினம்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா29/10/10 6:41 AM

    //பகிர்ந்துண்ட நாட்களும்,பகைகொண்ட நாட்களும்,
    இன்று ஞானஸ்நானம் பெறப் போகின்றன.//
    அருமை சார்

    பதிலளிநீக்கு
  8. அன்பு ஆதிரா! இந்தக் கவிதையை என் இருபதாவது வயதில் எழுதினேன்.அப்போது ஒரு மேலதிகாரியின் பிரிவுபசாரக் கூட்டத்தில் கண்ணுற்ற அபத்தமான சூழ்நிலையைப் பற்றி எனது டைரியில் எழுதியது.
    என் பல டைரி குறிப்புகளை கவிதையும் அல்லாத, உரைநடையும் அல்லாத பொதுநடையில் எழுதி வந்திருக்கிறேன்..(ரெண்டும் கெட்டான் என்கிறீர்களோ!)
    பரவாயில்லை.. நல்ல பையனாகவே இருந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது!
    வாழ்த்துக்கு நன்றி ஆதிரா!

    பதிலளிநீக்கு
  9. பிரிவு 'உபசாரத்துக்கு' மட்டும். அடாடா...

    மோகன்ஜி கொஞ்சம் என்னை உங்கள் கவிதைப் பரணில் ஏற்றி விடுங்கள். மூச்சு விடாமல் எல்லாவற்றையும் படித்துவிட்டு கரையேருகிறேன். நன்றி ;-)

    BTW, இதற்க்கு 'கவிதைப் பரண்' அப்படின்னு லேபல் போட்டுடுங்களேன். இடது பக்கம் கிளிக் பண்ணி வேண்டியப்ப படிச்சுக்கறோம். ;-)

    பதிலளிநீக்கு
  10. அன்புத் தம்பி மதி சுதா! நிறைக் குடம் என்ற உன் கருத்து உன் மேலான அன்பையே காட்டுகிறது..
    காலிக்குடமாய் இருப்பதினினும் பொத்தல் குடமாயாவது இருப்போமென்றே சிந்திக் கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. அப்பாஜி!
    "போனால் போகட்டும் போடா!"
    வாழ்ந்த அத்துணை சித்தர்களின் சிந்தனையின் சாறெடுத்து எம் கண்ணதாசன் உரைத்த உயர் தத்துவம்!

    பதிலளிநீக்கு
  12. தினேஷ்! அபாரம்! உங்கள் சொல்லாட்சியால் மிரட்டுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  13. \\BTW, இதற்க்கு 'கவிதைப் பரண்' அப்படின்னு லேபல் போட்டுடுங்களேன். இடது பக்கம் கிளிக் பண்ணி வேண்டியப்ப படிச்சுக்கறோம். ;-)\\

    ரிப்பீட்டு!!!!

    பதிலளிநீக்கு
  14. நானெல்லாம் இருவது வயதில் எழுதியதெல்லாம் சாரி கிருக்கியதேல்லாம் "கண்ணே, மணியே நடுவில மானே தேனே பொன்மானே" இப்படித்தான் இருந்தது... உங்களின் சொல் வீச்சு அருமை!

    பதிலளிநீக்கு
  15. என் பரண் என் கூடாகும் அவ்வப்போது.. அந்தக் கூட்டில் இன்னுமும் சில அன்பு நெஞ்சங்கள் அண்டியவண்ணம் உள்ளன .
    பத்துஜி !நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
    பணியிடப் பிரிவுகள் நிரப்பப் பட்டுவிடும். பள்ளி,கல்லூரி பிரிவுகள் தாங்க முடியாத ரணம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் அமர்ந்து எங்கள் கல்லூரியின் கடைசி நாளை நண்பர்களுடன் கண்ணீரில் கரைத்ததை நினைவு படுத்தி விட்டீர்கள்.. கவிதையும் எழுதிய ஞாபகம்..

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஆர்.வீ.எஸ்! என் பரண் ஏற உங்களுக்கில்லாத உரிமையா?
    நீங்க சொன்னது போல் "கவிதைப் பரண் " லேபில் போட்டுடலாம்! நல்ல யோசனை சகோதரா!

    பதிலளிநீக்கு
  17. வாங்க சிவா! இருபது வயசில கண்ணே மணியே என்று நான் எழுதவில்லை என்று யார் சொன்னது? 'எனக்கும் தான் இருபது ஆச்சு' என்பதற்காக எழுதியது போன்றே அவை இப்போது படுகிறது.

    அந்த இளைஞன் அவ்வப்போது தான் இருப்பைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறான்...

    பதிலளிநீக்கு
  18. குமார்! வாழ்த்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. வெனா.பனா!கருத்துக்கு நன்றி பாஸ்!

    பதிலளிநீக்கு
  20. மோகன்ஜி, இதெல்லாம் அப்படியே வர்தன்ல ? நம்பல்க்கு வாரான் இல்லே

    பதிலளிநீக்கு
  21. நன்றி தேசாந்திரி-பழமை விரும்பி! நீங்க பழமை விரும்பின்னுதானே பரண்லேருந்து பதியறேன்!

    பதிலளிநீக்கு
  22. உண்மை சாய்! என் புதுத்தம்பி தினேஷ் பெரிய ரவுண்டு வருவார் பாருங்க..

    பதிலளிநீக்கு
  23. ஏன் சேட்டு! நம்பள் எழுதி வச்சதே நெனப்பு வச்சு போடறான்... நிம்பள் நெனப்புலேர்ந்து இல்லே பட்டாஸ் மாதிரி வெடிக்குது! கிண்டல் பண்து.. கேலி பண்து.. ஜோக் பண்து.. நம்மல் ரசிக்கிறான்.. கை தட்றான்.. விசில் அடிக்றான்

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள ஜி,
    அது என்ன ரெண்டுங்கெட்டான்.. இந்தக் கவிதையை உங்கள் கவிதைகளின் கன்னி முத்திரை என்று கூறலாம்.

    பாரதியே இது போன்ற நடையில் எழுதியிருக்கிறார்.
    அழகான கவிதையைப் பதிவிட்டுவிட்டு என்ன இது கேள்வி.

    நல்ல பையனாக வேறு இருந்து இருக்கிறீர்கள்.. இதை விட வேறு என்ன வேடும் ஜி.

    பதிலளிநீக்கு
  26. உண்மை ஆதிரா! இந்த நடை எனக்கு உரைநடையை விட லகுவாக இருக்கிறது.
    நேர் நேர் தேமா.. நிறைநேர் புளிமா என்று தமிழ் ஆசிரியர்கள் ஏற்றி வைத்த கவிதைக் கனல் சில நேரம் அக்கினிக் குஞ்சு.. சில நேரம் அகல் சோதி..பலநேரம் ஊழித்தீ!!

    பதிலளிநீக்கு
  27. முதல் முறை வருகிறேன்.

    கவிதை சூப்பர்.

    ஒரு ஆச்சரியம். நான் கூட நேற்று ரிடையர்மென்ட் என்று ஒரு சிறுகதை போட்டேன்

    பதிலளிநீக்கு
  28. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபி!
    குடந்தைக் குமரனா நீங்க? அவசியம் உங்க கதையை படிக்கிறேன் கோபி.

    பதிலளிநீக்கு
  29. It sounded beautiful sir! nalla varikal... rasichchen romba....

    பதிலளிநீக்கு
  30. மனசை அப்பிடியே 'பொட்ல'மாய்க் கட்டி போட்ட மாதங்கியாச்சே நீங்க!உங்கள் ரசனைக்கு என் சலாம்!

    பதிலளிநீக்கு
  31. மண்டையக் குடையுதுங்க: பூச்செண்டு பிடிக்கும் கை யாருடையது?

    பதிலளிநீக்கு
  32. நானும் கண்ணே மானே என்று எழுதப்போகிறேன். இருபது வயதாகட்டும்.

    பதிலளிநீக்கு
  33. பிரிந்து போறவன் காதிலே வைக்க எவ்ளோ பெரிய செண்டு பாருங்க... நிலையில்லாத உலகம் தலைவரே! இந்த நிமிஷம் மட்டுமே உண்மை!

    கண்ணே மானே மேட்டர் நிறையவே இருக்கு.. எடுத்து விடவா?உங்களுக்கு வயசில்லே பத்தாது?? புரியுமோ புரியாதோ?

    பதிலளிநீக்கு
  34. பிரிவு உபசாரக் கவிதை அருமை..!! :-))

    பள்ளியில் பாசத்துடன் பிரிந்தோம்...
    கல்லூரியில் காதலுடன் பிரிந்தோம்...!!

    சூப்பர் மோகன்ஜி..! பகிர்வுக்கு நன்றி :-))

    பதிலளிநீக்கு
  35. அடடா! உங்கள் பின்னூட்டத்திலேயே ஒரு கவிதையைக் கொளுத்தியில்ல போட்டுட்டீங்க! நன்றி ஆனந்தி!

    பதிலளிநீக்கு
  36. சில வார்த்தைகள் நெஞ்சை அள்ளி தொட்டு செல்கின்றன.

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  37. அன்பு ஆர்.ஆர்.ஆர்,உங்கள் பின்னூட்டம் கூட நெஞ்சை அள்ளிச் செல்கிறதே!

    பதிலளிநீக்கு
  38. நாங்கள் தங்களுக்கு என்றும் பிரிவு உபசாரம் தர விரும்ப மாட்டோம் ஜி. நீண்ட நாட்களாக புது வரவு ஒன்றும் காணவில்லையே.. காத்திருக்கிறோம் ரசிக்க..

    பதிலளிநீக்கு
  39. மோகன்ஜி தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும், எங்களின் மனங்கனிந்த
    'தீபாவளி' நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  40. கார்த்திகை
    எதிரே
    அழைக்க
    கருமேகம்
    குடைகொண்டு
    சூழ
    நிலவொளி
    மறையும்
    புகை மூட்டம்
    கண்டு
    திருநாள்
    முன் தினம்
    வாழ்த்த வயதில்லை
    தீபவொளி
    திருநாள்
    வணக்கங்கள்.............

    பதிலளிநீக்கு
  41. அன்பு ஆதிரா! கடந்த ஒரு மாதமாகவே பணிச்சுமை காரணமாக அதிகம் எழுத முடியாத சூழல். தீபாவளிக்கு பின்னர் மீண்டும் கடை விரிப்போம்..
    இனி நிறைய இலக்கியம் பேச உத்தேசம்..
    உங்களுக்கு என் தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ஆதிரா!

    பதிலளிநீக்கு
  42. என் அன்பு சகோதரர் அப்துல் காதர் ! உங்களுக்கும் என்
    வாழ்த்துக்கள். மனதில் அன்பும், சகிப்பும், சகோதரத்தன்மையும் கொண்டோர்க்கு, நாளும் நாளும் திரு நாளே!
    என் அன்பு உங்களுக்கும், என் தங்கை மற்றும்
    குழந்தைகளுக்கும் காதர் பாய்!

    பதிலளிநீக்கு
  43. தினேஷ்! என் செல்லம்டா நீ! உன் கவிதை மத்தாப்புகள் கண்ணைப் பறிக்கின்றன. என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்..தொடரட்டும் உன் கவிதை ஊர்வலம் தம்பி!

    பதிலளிநீக்கு
  44. வாழ்த்துச் சொன்ன தோழமைக்கும்,
    உங்கள் குடும்பத்திற்கும்
    என் அன்பான
    தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...!

    எல்லா வளங்களும் பெற்று
    என்றும் இனிதே வாழ
    என்றென்றும் விரும்பும் நட்பு.. :-))

    பதிலளிநீக்கு
  45. அங்கும் இங்கும் வாழ்த்திய அன்பு உள்ளத்துக்கும் அதன் சொந்தங்களுக்கும் நட்புக்கும் இந்த உள்ளத்தின் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள். இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..

    மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.

    பிறவாமை வேண்டேன்... பிறப்புண்டேல் இறவா வரம் தர வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  46. மோகன்ஜி...நம் நட்பின் இனிய முதல் தீபாவளி..
    என்றென்றும் இனிய நட்போடு வலைப்பூக்களின் நறுமணத்தோடு தொடர நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  47. மோகண்ணா...சுகம்தானே.அன்பான தீபாவளி வாழ்த்துகள்.

    கவிதை கண்டு பயந்தேபோனேன்.வாசித்தபிறகு சுதாகரித்தும் கொண்டேன்.இறுதியான 3 கவிதைப் பதிவுகள் அருமை.தொடர்வோம் !

    பதிலளிநீக்கு
  48. ஹேமா! அவ்வளவு சீக்கிரம் டாடா சொல்லிடுவேன என்ன? வாழ்த்துக்கு நன்றி! மீண்டும் என் தங்கையை இங்கு பார்ப்பதில் சந்தோஷம் !

    பதிலளிநீக்கு
  49. வணக்கம்

    என்னுடைய கவிதை ஒன்று ஏட்டில் முதல் முறையாக அரங்கேரியுள்ளது தங்கள் பார்வைக்கு
    http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  50. இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? காலும் மனசும் கடுக்குது.. சீக்கிரம் ஆணி அடித்துவிட்டு வரவும்... விழி பூத்து காய்த்து பழுத்து விட்டது...

    பதிலளிநீக்கு
  51. ஆணி மகா ஆணி
    ஆட்டிவைக்கும் ஆணி
    வேக வேகமாக வான
    வில்லை வளைக்கும் ஆணி

    பதிலளிநீக்கு
  52. ஃபோட்டோவை மாட்டலாம்
    இயேசுவை அறையலாம்
    வானவில்லை முடக்கலாமா
    ஆணி.. பேசாம போ நீ..
    (யாரடா அது தெகிரியமா அப்பாஜி கவிதைக்கு எதிர்க் கவிதை போடறது..)

    பதிலளிநீக்கு
  53. ஆர்வீஎஸ் பேச்சு கேட்டுச்சு
    ஆணி ஒண்ணு புலம்பிச்சு
    அறஞ்சு வச்சா இந்தயேசு
    மறு கன்னத்தை காட்டுவாரா
    மண்டையில ஒண்ணு போடுவாரா?

    பதிலளிநீக்கு
  54. ஆஹா! பத்தே நாள் அபீட்டான கேப்புல ஆர்.வீ.எஸ்ஸும், அப்பாஜியும் கவிதையிலே எசப்பாட்டா பாடுராங்களே !

    ஆர்.வீ.எஸ்!
    /ஆணி.. பேசாம போ நீ../ கொன்னுட்டே செல்லம்!

    அப்பாஜி!
    /மறு கன்னத்தை காட்டுவாரா
    மண்டையில ஒண்ணு போடுவாரா?/
    அடடா! அடடா!! குறும்புக் கவிஞரே!
    நான் முடிவு பண்ணிட்டேன்! பண்ண்ணிட்டேன்!! இனிமே சமையல் குறிப்புத்தான் போடப் போறேன்! ஓட்டக் கூத்தரும் கம்பரும் இல்லே வலையில் இறங்கிட்டீங்க!

    அப்பாஜி! 'குசும்புக்கவிதைகள்'னு ஒரு பதிவு போடுங்க.. இதே மாதிரி அஞ்சாறு வரிகளில்...
    எதுகை மோனை எல்லாம் குன்ஸா இருக்கட்டும். நையாண்டியும் நக்கலும் முக்கியம்..
    பின்னூட்டத்தில் நாங்க கும்மி அடிச்சிக்கிறோம்..
    என்ன ஆர்.வீ.எஸ்?! நான் சரியா பேசிகிட்டிருக்கேனா?

    பதிலளிநீக்கு
  55. அதே.. அதே தான்.. ஒரு ஆடை இல்லாத அரை மனிதன் கவிதை போட்டாரே அப்பாஜி... அது மாதிரி.. ரைட்டா.. ;-) ;-)

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..