இன்றோடு நான் வலையுலகில் அடியெடுத்து வைத்து ஓராண்டு ஆகிறது. இன்றைய பதிவும் நூறாவது பதிவாய் மலர்கின்றது.
ஏதோ பெரிய சாதனைப் போல் சொல்கிறேனோ?
உண்மையில் இன்னமும்கூட பதிவுகள் போட்டிருக்கலாம். அலுவலகம் வெகு தொலைவில் மாறிப் போனதால் பயணத்திலேயே நேரம் போய் விடுகிறது. நிறைய வெளியூர்ப் பயணங்கள் வேறு....
இனி நிலைமை கொஞ்சம் சீராகும் என நம்புகிறேன்.
இனிமேல் அதிகப் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.
இந்த ஓராண்டில் எத்தனை அன்பு நெஞ்சங்களை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறேன்?!
பின்னூட்டங்களில் வாழ்த்தியும், மின்னஞ்சலிலும் அலைபேசியிலும் அடிக்கடி தொடர்பு கொள்ளும் வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்..
ஆண்டு நிறைவு, நூறு ஆயிரம் என எண்ணிக்கைத் தட்டுகள் தோறும் வாழ்த்துதலும் கொண்டாடுதலும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் செயல் தானே?
உண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.. அனைவருக்கும் அப்படிக் கொண்டாடும் மனமும் சூழலும் சீக்கிரம் உருவாக இறையருள் புரியட்டும்.
எங்கும் அன்பும் கருணையும் பெருகட்டும்.
நன்றியும் நட்பும் அனைவருக்கும்...
மோகன்ஜி
ஹைதராபாத்
உண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.//
பதிலளிநீக்குஅர்த்தம் பொதிநத அருமையான வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி மேடம்!
பதிலளிநீக்குDear Mohanji, It was late when I started visiting your blog and soon I was able to catch up with all your postings and enjoyed them thoroughly. Many Thanks for the posts so far and advance thanks for the upcoming posts!!
பதிலளிநீக்குCheers!
100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். 100 ஆவது பதிவு என்கிற ஒரு செய்தியை மட்டுமே ஒரு பதிவாகப்போட்டு முடித்துக்கொண்டு விட்டீர்கள். ஆனாலும் //உண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.// என்ற ஒரு நல்ல செய்தியைச்சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குநூறு இடுகைகள் பலநூறு இடுகைகளாக மலர வாழ்த்துகிறேன்.
ஒரு வருடத்தில் நூறு பதிவுகள். ஒவ்வொன்றும் அபிராமி அந்தாதியின் 100 பாடல்கள் போல் காலத்தை வெல்பவை. . வாழ்த்துக்கள் அண்ணா
பதிலளிநீக்குமிக்க நன்றி பாரதசாரி சார்! உங்கள் நட்புக்கு நன்றி.. அடிக்கடி சந்திப்போம்
பதிலளிநீக்குஅன்பு வைகோ சார்! ஒரு பதிவைப் போடத்தான் எண்ணியிருந்தேன். பாதியில் நிற்கும் கதையை முடிக்க அமர்ந்த போது, வேறு முடிவு தோன்றியது.. ஆர அமர செய்வோம் என்று முழுமையான என் நன்றியை மட்டும் பதிவிட்டேன். எங்கள் நட்பை தந்த வலையுலகிற்கு நன்றி
பதிலளிநீக்குகுணசீலன் அவர்களே! உங்கள் வாழ்த்துக்கு நன்றி !அடிக்கடி வானவில்லுக்கு வாருங்கள்
பதிலளிநீக்குசிவா! உன் அன்பிற்கு என்றும் நான் இனியவனே!
பதிலளிநீக்குஅண்ணா!
பதிலளிநீக்குரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள், முத்துக்கள், பவளங்கள் எல்லாம் தாங்கி உங்களுக்கு பரிசாக வழங்க என்னுடைய ஆட்கள் படைபடையாய் வந்து கொண்டிருக்கிறார்கள்!
நான் முன்னாடி ஓடி வந்து சொல்லிக்கறேன்... "வாழ்த்துக்கள்"
சதமடித்த மோகன் அண்ணா வாழ்க! ;-)
[காதக் குடுங்க.. உங்கக் கிட்ட மட்டும் ஒரு கேள்வி -- தெ. நடிகை சௌக்கியமா? ;-))) ]
வாழ்த்துக்கள் நண்பரே..100...1000 ஆகட்டும்...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆர்.வீ.எஸ் ! பதிவுலகம் தான் உங்களைப் போன்ற முத்து,வைர, வைடூரியங்களை எனக்கு அளித்து வாழ்த்தியுள்ளதே!
பதிலளிநீக்குநிற்க இப்போ தே.ந. இல்லை. 'க.ந'வாம். பத்து தான் சொல்லிக்கிட்டிருக்கார். நங்கெனு கொத்தில்லா !
வாழ்த்துக்கு நன்றி குணசேகரன்! அடிக்கடி வாங்க!
பதிலளிநீக்குபணிச் சுமை குடும்பப் பொறுப்பு இத்தனைக்கும் இடையில்
பதிலளிநீக்கு100 பதிவிடுதல் என்பது உண்மையில் இமாலயச் சாதனைதான்
சாதனை தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ, தொடர்ந்தும் எங்களை உங்கள் எழுத்துக்களால் மகிழ்ச்சிப்படுத்த வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநூறு பதிவுகள் பெரிய சாதனை ..அதிலும் முத்து முத்தாக கதைகள், கவிதைகள், எண்ணம், இலக்கியம், நகைச்சுவை, மேலாண்மை என எல்லாம் கலந்து தருவது என்பது உங்களால் தான் முடியும்...
பதிலளிநீக்குபல்லாண்டு காலம், பல்லாயிரம் பதிவுகள் என தொடர வணக்கமான வாழ்த்துக்கள்...
//நங்கெனு கொத்தில்லா //கொத்து கொத்து என்று கொத்தவேண்டியது அப்புறம் கொத்தில்லா என சொன்னால் என்ன நியாயம் என கேட்டு விட்டு.... வாழ்த்த வருபவர்களுக்கு வழி விடுகிறேன்...
பதிலளிநீக்கு( சும்மா ..சரத்தில் டென்சனாக இருக்கும் ஆர்.வி.எஸ்ஸை குஷிப்படுத்த... )
வாங்க ரமணி சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. இனி கொஞ்சம் அதிகமாய் எழுத முயல்வேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி நிரூபன்! அவ்வண்ணமே ஆகுக!
பதிலளிநீக்குபத்மநாபன்! மிக்க நன்றி! உங்களைஃப் பற்றி ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது..
பதிலளிநீக்குஎங்கிருந்தோ வந்தான்.
'வலை'ச்சாதி நானென்றான்.
ஈங்கிவனை யான்பெறவே
என்னத் தவம் செய்துவிட்டேன்?
உங்களைப் போன்ற நட்பு வட்டம் கிடைத்தது எனக்கு வலை தந்த கொடை!
ஆர்.வீ.எஸ்ஸாவது.. டென்ஷனாவதாவது ..
பதிலளிநீக்குபரபிரம்மம் ஸ்வாமி அது..
நன்றி கோபி சார்!
பதிலளிநீக்குஆமாங்க...நான் ஒரு பின்னூட்டம் போட்டாலே சுருண்டு படுத்திருவேன்.. பரபிரும்மந்தான் அவரு.... தண்டா...தண்டா பதிவுகளை அறிமுகப்படுத்துவதோடு ... எல்லோருக்கும் இருபுறமும் பதில் சொல்லி... முகப்புத்தகம் இன்ன பிற தளங்களில்லாம் கமெண்ட் போடும் இடத்தில் பெரிய கதையே எழுதி விடுகிறார்....
பதிலளிநீக்கு//எங்கிருந்தோ வந்தான்.
பதிலளிநீக்கு'வலை'ச்சாதி நானென்றான்.
ஈங்கிவனை யான்பெறவே
என்னத் தவம் செய்துவிட்டேன்? //
உலக உருண்டையில் ரசனைகள் ஒத்து,மொழி கொண்டு உறவாடி.... நட்போடு கூடிய இந்த வலைப்பூவுறவு உண்மையில் கொடைதான் தான்... அதிலும் எனக்கு இந்த வறண்ட பாலைவனத்தில் வரப்பிரசாதம்..
பத்மநாபன்!ஆர்.வீ.எஸ்ஸ பத்தி என்ன சொல்ல இருக்கு அவ்வளவு எழுதியும்,ஆர்வ மேலீட்டால அடுத்த வீட்டு சுவரெல்லாம் கூட எழுதி விடுகிறாராம். இவருக்கு என் தங்கச்சியைக் கட்டிக்குடுத்தேனே! என்னைச் சொல்லணும்!!
பதிலளிநீக்கு/வலைப்பூவுறவு உண்மையில் கொடைதான்/
பதிலளிநீக்குஉண்மை பத்மநாபன் சந்தேகமென்ன!
//அடுத்த வீட்டு சுவரெல்லாம் கூட எழுதி விடுகிறாராம்// அப்பாதுரையை காணமே..இதுக்கு ஒரு வெண்பாவே தீட்டி கொடுக்கிறேன்னு ஆர்.வி.எஸ் கிட்ட சொல்லியிருக்கிறார்....
பதிலளிநீக்குவாழ்த்துகடகள்...
பதிலளிநீக்கு100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//மோகன்ஜி கூறியது...
ஆர்.வீ.எஸ்ஸ பத்தி என்ன சொல்ல இருக்கு அவ்வளவு எழுதியும்,ஆர்வ மேலீட்டால அடுத்த வீட்டு சுவரெல்லாம் கூட எழுதி விடுகிறாராம். இவருக்கு என் தங்கச்சியைக் கட்டிக்குடுத்தேனே! என்னைச் சொல்லணும்!!//
Huh !
முதல் வருட பிறந்த நாளுக்கும், 100 வது பதிவுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டுமுங்க...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
வானவில் என்றுமே மனித ரசனையின் மையமாக இருந்து வந்திருக்கிறது. வானவில் தோன்ற மழை வேண்டும். ஆகையால் வானவில் அடிக்கடி தோன்றி மக்களை மகிழ்விப்பதுடன், எங்களுக்கு மழையையும் பெற்றுத் தரவேண்டும் என்று வேண்டுகிறோம்
பதிலளிநீக்குஆமாம் பத்மநாபன்! அப்பாஜியைக் காணோமே?
பதிலளிநீக்குநன்றி சந்ரு!
பதிலளிநீக்குநன்றி சாயி! நான் சொன்னது சரி தானே?
நன்றி மதி.சுதா!
ஸ்ரீராம்! அவசியம் வானவில் அடிக்கடி வர்ணஜாலம் காட்டும் உங்கள் வாழ்த்துக்களுடன்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமோகன் ஜி! அருமையான் 100 இடுகைகள். அதொடு அப்பாதுரை,ஆர்.வி.எஸ் ,ஸ்ரீராம் ,பத்மநாபன் என்று பின்னுட்டமிட ஒரு Gang . வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்
பதிலளிநீக்குசதம் அடிச்சதுக்கு இனிய பாராட்டுகள். இது இன்னும் வளர்ந்து ஆயிரமாகட்டும் என வாழ்த்துகின்றேன்,
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமோகன்ஜி!
பதிலளிநீக்குஎனக்கு ஒரு ப்ரபலமான க்ரிக்கெட் ப்ளேயரோட பேட்டி ஞாபகம் வருது.ப்ளேயரை மறந்துபோய் விட்டேன்.
எப்படி இவ்வளவு நிறைய ரன்களை அலட்சியமாகக் குவித்து சதத்துக்கு மேல் சதமாய்க் குவிக்கமுடிகிறது? என்ற கேள்விக்கு அவர் சொன்னார். நான் என்னவெல்லாம் பண்ணுகிறேன் என்பது உங்கள் பார்வைக்குப் பெரிதாய்த் தெரியலாம். என்னைப் பொறுத்தமட்டில் எதிரே வரும் ஒவ்வொரு பந்தும் ரன்னுக்கான வாய்ப்போடு வீசப்படுகிறது. என் மனதில் இரண்டே விஷயங்கள்தான் ஓடும். ஒன்று எக்காரணத்துக்கும் ஆட்டமிழக்கக் கூடாது. இரண்டு அந்தப்பந்தில் முடிந்தவரை ரன்களைக் குவிக்கவேண்டும். இந்த இரண்டுமே எப்படி சாத்தியமாகுமென்றால் நீங்கள் செய்வதை மிகவும் நேசிக்கும்போதுதான்.
உங்கள் ஆட்டமும் அப்படித்தான். எழுதிக்கொண்டே இருங்கள். எண்ணிக்கை முக்கியமில்லை. கிடைக்கும் நிறைவு எண்ணிக்கைக்கப்பாற்பட்டதும் எண்ணமுடியாததும்.
மனம் நிறைகிறது உங்களை வாழ்த்தும்போது.
வலைப்பூ உலகில் ஒரு வருடம்... இந்த ஒரு வருடத்தில் சரியாய் ஒரு நூறு பதிவுகள்.... வாழ்த்துகள் மோகன்ஜி! தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற நேயர் விருப்பத்துடன்...
பதிலளிநீக்குவெங்கட்...
வாழ்த்துகள் மோகன்ஜி !
பதிலளிநீக்கு//முகப்புத்தகம் இன்ன பிற தளங்களில்லாம் கமெண்ட் போடும் இடத்தில் பெரிய கதையே எழுதி விடுகிறார்.//
பதிலளிநீக்குபத்துஜி! பொண்ணுங்க... ஆம்பளைங்க வண்டியில உட்கார்ந்து போற ஸ்டைல் பற்றி போட்ட பிரியா கல்யாணராமன் போட்டதுக்கு நான் எழுதினதை சொல்றீங்களா? அது நம்ம சப்ஜெக்ட் இல்லையா? அதான்... ஹி..ஹி... ;-))
காஷ்யபன் சார் சொல்றது போல இது ஒரு கல கல கேங்! கேங் லீடர்ஸ் மோகன்ஜி மற்றும் அப்பாதுரை... சரியா? ;-)))
வாழ்த்துக்கள் மோகன் ஜி. நேரமின்மையால் வலைப்பக்கம் கொஞ்ச நாளாய் வர முடியவில்லை. விட்டுப் போன பதிவுகளை விரைவில் படிக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மோகன்! வானவில்லில் உங்கள் எழுத்து ஜாலங்களை தொடர்ந்து படிக்க ஆவல். அதனால் மேன்மேலும் உங்கள் எழுத்து பணி தொடர்ந்து, வளர்ந்து, சிறக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசதமடித்த தங்கள் பணி மேலும்
பதிலளிநீக்குசிறக்க எல்லாம்வல்ல இறைவனை
சிந்தித்து வாழ்த்துகிறோம்..
நன்றி
http://sivaayasivaa.blogspot.com
வாழ்த்துக்கள். இன்னும் பலநூறு காண்க.
பதிலளிநீக்கு(பதிவு போட்டிருக்க மாட்டீங்கனு நம்பிக்கையா இருந்தா போட்டுத் தள்ளியிருக்கீங்க:)
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குWOW!! 100 posts!!! Congrats, Sir! இதே போல இன்னும் நிறையா தரமான posts நீங்க எழுத என்னோட best wishes உங்களுக்கு!
பதிலளிநீக்குKeep it going! :)
மோகண்ணா சின்னதா விடுமுறை எடுத்துவிட்டேன்.அதனால்தான் இத்தனை பிந்தின வாழ்த்து.அண்ணா நிறைய இன்னும் எழுதுங்கோ !
பதிலளிநீக்குகாஸ்யபன் சார்! எனக்கு வந்த முதல் பின்னூட்டம் உங்களுடையது தான்! இதை முறையாய் பதிவில் நான் சொல்லியிருக்க வேண்டும். விடுபட்டுப் போனதிற்கு மன்னிக்கவும். உங்கள் அன்பும் வாழ்த்தும் ஆசீர்வாதமும் என்றும் எனக்குண்டு என்பதை அறிவேன். நன்றி சார்!
பதிலளிநீக்குஎன் அன்பிர்க்கினிய
பதிலளிநீக்கு@ரம்மி
துளசிகோபால் மேடம், வாழ்த்துக்கு நன்றி
அன்பின் சுந்தர்ஜி, உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி!
பதிலளிநீக்குபிரிய வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குசென்னைப் பித்தன் சார் உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
ஆர்.வீ.எஸ்!
பதிலளிநீக்கு/இது ஒரு கல கல கேங்! கேங் லீடர்ஸ் மோகன்ஜி மற்றும் அப்பாதுரை... சரியா? ;-))/
இப்படி இருக்குமோ?.. கலகல பஸ்ஸுக்குக்கு நான் ஓட்டுனர்..
அப்பாஜி நடத்துனர்..
பத்மநாபன் செக்கிங்க் இன்ஸ்பெக்டர்
ஸ்ரீராம் பாஸ் வைத்திருப்பவர்..
நீங்க யாருன்னு நீங்க சொன்னாத்தான் சரியா இருக்கும் மச்சினரே!
என் அன்பிற்கினிய
பதிலளிநீக்குகீதா மேடம்,
மீனாக்ஷி மேடம்,
ஜானகிராமன் சார்,
அப்பாதுரை சார்,
ரத்தின வேல் சார்,
மாதங்கி மேடம்,
ஹேமா உங்களுக்கு என் அன்பும் நன்றியும்
வாழ்த்துக்கள் அண்ணாச்சி. ரொம்ப லேட்டா வந்துட்டேன். மன்னிக்கவும்.
பதிலளிநீக்குரொம்ப கூட்டத்துக்கு நடுவுல எனக்கு யாரும் வழியே விடல.. அதான் பொறுமையா காத்திருந்து இப்ப சொல்றேன்..
பதிலளிநீக்கு100 வது பதிவுக்கு நல் வாழ்த்துகள்.
1000 மாவது பதிவுக்கு இப்பவே துண்டைப் போட்டுட்டு போறேன்..
100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎன் ப்ரிய கார்த்திக்! நலம் தானே? வாழ்த்துக்கு நன்றி! திவ்யாக் குட்டியின் அடுத்த கதை கேட்க ஆவலாய் உள்ளேன்.
பதிலளிநீக்குஅன்பின் ரிஷபன் சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி! அடுத்த நூரில் அதகலாம் செய்ய உங்கள் ஊக்கம் எனைத் தயார் செய்யும்.
பதிலளிநீக்குஅன்பு குமார்! வாழ்த்துக்கு நன்றி!
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் மோகன்ஜி. ரசிக்கவைக்கும் பின்னூட்டங்கள் சிறப்பு சேர்க்க, இன்னும் பல அற்புதமான பதிவுகள் ஆயிரமாய்ப் பெருக என் அன்பான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா மேடம்! உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி !
பதிலளிநீக்கு/! நலம் தானே? வாழ்த்துக்கு நன்றி! திவ்யாக் குட்டியின் அடுத்த கதை கேட்க ஆவலாய் உள்ளேன்.//
பதிலளிநீக்குநலம்தான். எதுவும் புதுசா ரெக்கார்ட் பண்ணலை .
100 வது பதிவுக்கு தாமதமாய் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் சார். மேலும் நல்ல பல கதைகளையும் பாடல்களையும் தர வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி ஆதி! அவசியம் உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்வேன்.
பதிலளிநீக்கு