வெள்ளி, ஜூலை 29, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-5




ஒரு கவிதை
அப்பா

சட்டைப் பித்தான்களை வரிசைமாற்றாமல்
போட்டதில்லை என்றும் நீ.

இடுப்பு வேட்டி இறுக்கக் கட்டாமல்
தடுக்கித் தடுமாறும் உன் கால்கள்.

லைஃப்பாய்மணக்க குளித்து வந்தபின்னும்
சோப்புமிச்சம் காதோரம் குழைந்துமின்னும்.

அன்னம் தரைசிதறாமல்
உண்ணத் தெரியாதுனக்கு

வேயுறுதோளிபங்கன் தவிர
வேறுபாட்டு நீ சொன்னதில்லை

கால்மாற்றி செருப்பு நுழைத்துதற
பால்மாறாது உன் கவனக் குறைவு.

காசெண்ணக்  கைநடுங்கும் ; இரகசியம்
சூசகமாய் சொல்ல அறியாய் நீ

அப்பா!

ஈதெல்லாம் இனியும் சொல்லி
கேலி செய்ய மாட்டேன் உன்னை.
பட்டுமாலை சார்த்திய
படம்விட்டு இறங்கிவந்து
என்
பக்கத்தில் உட்காரேன்!

********************************************
இரண்டு ஜோக்குகள்

ஆசிரியர்: ஞொய்யாஞ்ஜி! உணவு செரிமான முறையை இரண்டே வரிகளில் சொல்லு பார்ப்போம்?
ஞொய்யாஞ்ஜி:  அதுவா? வலது கையோடு ஆரம்பிச்சி இடது கையால முடியும் சார்


###########

ஞொய்யாஞ்ஜி ஒரு பத்திரிகையைக் காட்டி தன் மனைவி பல்லெலக்காவிடம் சொன்னார்,
இதுல என்ன போட்டிருக்கான் பார்த்தியா? ஒரு ஆம்பிளை ஒரு நாளில் 15000 வார்த்தைகள் தான் பேசறானாம். ஆனா பொம்பளையோ, ஒரு நாளைக்கு 30000 வார்த்தைகள் பேசுவாளாம். ரெண்டு மடங்கு!!
பல்லெலக்கா: அது ஏன்னா பொம்பளை ஒவ்வொரு விஷயத்தையும் திரும்பவும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கு ஆம்பிளைக்கு
ஞொய்யாஞ்ஜி: என்ன சொன்னே? திரும்ப சொல்லு?  




இன்றைய வலைப்பதிவர்கள் தேர்வு

எட்டயபுரம் : இது கவிஞர் கலாப்ப்ரியாவின் வலைப்பூ. என் அபிமானக் கவிஞர் . இவரது எழுத்துக்கள் ஒரு தெள்ளிய நீரோடை போல் சீரானது. தாகூரை ஆதர்சமாய்க் கொண்ட கவிஞர் இவர். கண்டிப்பாய் பாருங்கள் இந்த கவிவனத்தை.

பொன் மாலைப் பொழுது.: சகோதரர் கக்கு-மாணிக்கம் அவர்களின் வலைப்பூ.  நல்ல ரசனையுள்ள இவர் படைப்புகளும் வித்தியாசமானவை. இவர்பதிவிடும் பாடல்களின் தேர்ச்சி  இவரின் ரசனையை எண்ணி வியக்க வைக்கும்.

கலியுகம்: தினேஷ்குமாரின் வலைப்பூ. அவர் கவிதை புனையும் வேகம் அசாத்தியமானது. இவரின் பாடுபொருள் தெரிவுகள் சில சமயம் பிரமிப்பூட்டுபவை. வார்த்தை சாரலில் தொலைந்து போய்விடுகிறாரோ அவ்வப்போது.? தினேஷ்! கொஞ்சம் பார்த்துக்குங்க. கைத்தட்ட நாங்க இருக்கிறோம்.

(லிங்க் கொடுப்பதில் மடிகணனி பிரச்னை உள்ளதால் பதிவர் அறிமுகம் சற்று நேரம் கழித்து மீண்டும் தொடருகிறேன், மன்னிக்கவும் )
மோகன்ஜி    என்னுடைய இளஞ்சாராயத்தை

17 comments:

அப்பாதுரை சொன்னது…

பிறகு வருகிறேன்.
அதுவரை கவிதையை அசை போடுகிறேன்.

பத்மநாபன் சொன்னது…

அப்பப்பா கவிதை...

ஞொய்யாஜி அறிவாளி ஆய்ட்டு வருகிறார் விடக்கூடாது....

ரசனையான அறிமுகங்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

"என்னுடைய இளஞ்சாராயத்தை"

???

கலியுகம் பார்த்ததில்லை. வலைப்பக்கத்தைச் சொன்னேன். லிங்க் இல்லாதது குறையாக இல்லாமல் மற்ற இரண்டும் தெரிந்த பக்கங்களாய்....!

கீதமஞ்சரி சொன்னது…

அப்பாவின் நினைவுகளை நெகிழ்வோடு மனதில் ஏற்றிவிட்டீர்கள். மனம் விட்டு அத்தனை எளிதில் இறங்க மறுக்கிறார் அவர். அதனாலோ என்னவோ கீழிருக்கும் நகைச்சுவைகளை ரசிக்க முடியவில்லை.

சிவகுமாரன் சொன்னது…

அப்பாவின் கவிதை படித்தவுடன் கணகள் குளமாகிவிட்டன . அடுத்ததை படிக்க முடியவில்லை.
அருகிருந்த போது அறியாத அருமை , அல்லாடும் போது தான் தெரிகிறது.

சிவகுமாரன் சொன்னது…

என் ஆட்கொள்வாய் கவிதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் அண்ணா.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மோகன்ஜி

அப்பா - கவிதை கலக்கல் சூப்பர்.

ஞொய்யாஞ்ஜி மற்றும் மனைவி பல்லெலக்கா - இரண்டாவது ஜோக் - அருமையோ அருமை ! சொந்த கதையோ ! சென்னை வரும்போது உங்கள் மனைவியிடம் கேட்கவேண்டும் !

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா, புனையும் , பூனையும் ஆகிவிட்டது. பாத்து விரட்டி விடுங்கோ.

மோகன்ஜி சொன்னது…

வாருங்கள் அப்பாதுரை! மெல்ல வாருங்கள்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்!

மோகன்ஜி சொன்னது…

அது வெட்டி ஒட்டலில் தொங்கும் வரி ஏதோ? சொல்லாதது தான் சுவையானது அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதா! நீங்கள் சொன்னது போல் உணர்வுபூர்வமான ஒரு கவிதைக்குப் பின்னே நகைச்சுவை கொஞ்சம் ரசக் குறைவு தான் !

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா! இந்தக் கவிதை ஏதும் உத்தேசமின்றி ஒரு மூச்சில் குமுறியது தான். அழகு கவிதையல்ல... அப்பா !

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா! இந்தக் கவிதை ஏதும் உத்தேசமின்றி ஒரு மூச்சில் குமுறியது தான். அழகு கவிதையல்ல... அப்பா !

மோகன்ஜி சொன்னது…

உன் கவிதையை அவசியம் பார்க்கிறேன் சிவா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சாய்! என் கதை 15000/30000 அல்ல. அது 10/100000

மோகன்ஜி சொன்னது…

சிவா! நன்றி ! சற்று கண்ணசந்ததில் பொல்லாத பூனை வந்து விட்டது ! விரட்டி விட்டேன்!