மனசொரு மடி
காராம்பசு மடி
கட்டாயங்கள் அற்ற பால்பசு.
கட்டுத்தறி இன்றி மேயும்பசு.
விரைத்த அதன் காம்புகளில்
கறக்க வேணும் கவிதைகள்.
நீரடித்து நீவிவிட்டு
நிமிட்டினால் மட்டுமே
பொழிந்திடாது பால்.
சிக்கினமுடிச்சை சுரக்கத் தொடின்
எக்கிக் கொள்ளும் பெருமடியை....
கற்பனைசுக கன்றுக்குட்டிக்கு
காலமழியப் பாலூட்டி
காலியாகும் மடி பலநேரம்.
வக்கிரப் பாம்புகள் வாய்வைத்து
வறண்டுபோக உறிஞ்சிய நேரம்
வாடிய காம்புகள் செயல்மறந்து.
ஏதோவொரு தருணம்
வாகாய் வாய்க்கும்.
நுரைத்து நுரைத்து
பொழிந்துவிடும்
பாத்திரம் வழியவழிய ..
மனமடி கறந்துக் கொடுத்தப் பாலின் மணம்
பதிலளிநீக்குமனம் நிறைக்க மகிழ்ந்து போனேன்
வித்தியாசமான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நுரைத்து நுரைத்து
பதிலளிநீக்குபொழிந்துவிடும்
பாத்திரம் வழியவழிய
கவிதைப் பாலபிஷேகத்தில் திளைத்தோம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நடக்கட்டும், கவிதைப் பால் கரைக்கவும். அதை சுவைத்து மகிழ யாம் தயார்
பதிலளிநீக்குஅன்பின் ரமணி சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
பதிலளிநீக்குஇராஜேஸ்வரி மேடம்!
பதிலளிநீக்கு/கவிதைப் பாலபிஷேகத்தில் திளைத்தோம்./
எந்தக் கவிதையுமே அதைப் படிப்பவருக்கு பாலாபிஷேகமாய் மாறும் போதுதான் அதற்கொரு அர்த்தம் பிறக்கிறது. நன்றாய்ச் சொன்னீர்கள்.
நன்றி கார்த்திக் ! ஆவன செய்வோம்.. உங்கள் முந்தைய கருத்து.. ஓரிடத்தில் அனைத்தும்.. மனதில் சழன்று கொண்டே இருக்கிறது கார்த்திக்.
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை...
பதிலளிநீக்குஅருமையான படைப்பு.
நன்றி குமார்!
பதிலளிநீக்கு//. ஓரிடத்தில் அனைத்தும்.. மனதில் சழன்று கொண்டே இருக்கிறது //
பதிலளிநீக்குஆமாம். இரண்டு மூன்று நபர்களால் செய்யக் கூடிய விஷயம் அல்ல. என்னுடைய ஆசை சங்கப் பாடல்களை அதன் பொருளுடன் தொகுக்கணும். பெரிய ப்ராஜெக்ட்டாய் ஊர் கூடி தேர் இழுக்கணும் சாமி.
இந்த ஆவல் இன்னமும் சில குழுமங்களில் காண்கிறேன்.. நடக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது.. பாடல்களுக்கு இயன்ற வரையில் சுவை குன்றாமல் கோனார் நோட்ஸ் போட அடியேன் ரெடி!
பதிலளிநீக்குஅண்ணா! பால் இன்னும் ரெண்டு லிட்டர் ஆர்டர் எடுத்துக்கோங்க... ரொம்ப டேஸ்டா இருக்கு. ;-)
பதிலளிநீக்குஆர்.வீ.எஸ் ! எடுத்தாச்சு! எடுத்தாச்சு!!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇலக்கிய பசும்புல்லை ஆய்ந்து மேய்ந்தனாலும் கறவைக்கு பஞ்சமிருக்காது....
பதிலளிநீக்குபாக்கெட்டு வேண்டாம் பக்கெட் பக்கெட்டாகவே இறக்குங்கள்...
உங்களின் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கையில் கவிதைக்கும் நல்ல கவிதைக்கும் வித்தியாசம் தெரிகிறது உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் தேர்வில்.
பதிலளிநீக்குயார் கை வைத்தாலும் காம்புகள் பால் சுரப்பதில்லை.அதுதான் சூக்ஷ்மம்.
இல்லையா மோஹன்ஜி?
விரைத்த அதன் காம்புகளில்
பதிலளிநீக்குகறக்க வேணும் கவிதைகள்.
//உவமை..அருமை
ப்ரிய பத்மநாபன்! கவிஞர்கள் தூண்டிலைப்போட்டுவிட்டு தக்கையை பார்த்திருக்கும் மீனவன் போல காத்திருக்கிறான். தருணம் வாய்க்கும் நேரம் கவிதை,தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது. வார்த்தைகள் விழும் நேரம் கவிஞன் தன் வசம் இருப்பதில்லை.
பதிலளிநீக்குநடுத்தூக்கத்தில் கண் விழித்து கனவின் தொடர்ச்சியாக கவிதைஎழுதி வைத்த சம்பவமும் எனக்கு நேர்ந்தது. அடுத்த நாள் மாலை அதைக் கண்ணுற்ற போது சற்றே கிறுக்கலான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதியிருந்தேன்.. நண்பர்கள் அதிலிருந்து ஓரடி தள்ளியே நடந்தார்கள் !
பக்கெட்டோ, பாக்கெட்டோ சரக்கு நல்லா இருந்தா சரிதான்.
சுந்தர்ஜி! உங்கள் பாராட்டை தலைதாழ்த்தி ஏற்றுக் கொள்வேன்.
பதிலளிநீக்கு/யார் கை வைத்தாலும் காம்புகள் பால் சுரப்பதில்லை.அதுதான் சூக்ஷ்மம்./
பால் கரக்க வேண்டி,கை வைத்தது பசுவின் காம்பா, இல்லை காளையின் கீழ்பக்கமா என்பதும் இன்னொரு சூத்திரம்!
அன்பு குணா! மிக்க நன்றி!
பதிலளிநீக்குசுவை மிகு பால் கறந்து நாங்கள் பருக அளித்த உங்களுக்கு என்ன தரலாம்.... கவிதைப் பாலில் இருந்து செய்த ஒரு பால்கோவா.... நல்ல கவிதை...
பதிலளிநீக்குகறக்கத் தெரிந்தவர்கள் கறந்தால் தான் பால் வரும் என்பது புரிகிறது.
வெங்கட்! ஆதி கண்டந்திப்பிலி ரசம் தருவார்கள். நீங்கள் பால்கோவா தருவீர்கள். தலை நகர் என்னை அழைக்கிறது.. வந்து விடுவேன்.. வந்தே விடுவேன் !
பதிலளிநீக்குவணக்கம் சகோ, வித்தியாசமான குறியீட்டினைக் கையாண்டு, மனமதை காரம்பசுவின் மடிக்கு ஒப்புவமையாக்கி, நல்ல படைப்புக்கள் எப்படி ஊற்றெடுத்துப் பிரவாக்கிக்க வேண்டும் என்பதை நாசுக்காக உரைத்து நிற்கிறது உங்கள் கவிதை.
பதிலளிநீக்குஅருமையான சொல்லாடல்.
மோகண்ணா....கவிதை சொல்லித்தான் பால் கறக்கணும்ன்னு இல்லை.அடிக்கடி உங்க மனக்கருத்தைத் தந்துகொண்டுதானே இருக்கிறீர்கள்.இது கவிதை வடிவம் !
பதிலளிநீக்குநீங்க உப்புமடச் சந்திப் பக்கமும் வரலாம்.வாங்கோ !
முப்பாலுக்கும் அப்பால் இன்னும் என்ன இருக்கும் என்று இப்பால் வந்தால் உங்கள் 'கவிதைப்பால்' தலைப்பால் கவரப்பட்டு படித்தால் படி பால். தமிழ் பால் ஆர்வம் கொண்டு அதைத் தொகுக்கும் சிந்திப்பால் ஆர்வப்பால் குடிக்கும் எல்கே போன்றோர் துடிப்பால் சந்தோஷமும் கூட!
பதிலளிநீக்குஅருமையான கவிதைப்பால் பருகினோம். கவிதைப்பாலுக்காக ஒரு சுவையான பால் கொழுக்கட்டை செய்து தரலாமா?
பதிலளிநீக்குகற்பனைசுக கன்றுகுட்டிக்கு காலமழியப் பாலூட்டி காலியாகும் மடி பல நேரம். உண்மை வரிகள் , உணர்த்தப்பட்ட விதமும், அருமை.
பதிலளிநீக்குஉங்களிடமிருந்து இதுபோல நிறைய அருமையான கவிதைகளைக் கறக்க விரும்புகிறோம்!
பதிலளிநீக்குமோகன்ஜி அருமை
பதிலளிநீக்குகொஞ்சம் தொலைந்து போய் திரும்பி வந்த கையோடு.. சூடா ஒரு கப் காபி சாப்பிட்டபடி இணையம் மேய உட்கார்ந்தால்..
பதிலளிநீக்குஸ்ரீராம் இந்தப் போடு போடுறாரே? காபில பால் கலந்தாரா..
பதிலளிநீக்குசுந்தர்ஜியின் பின்னூட்டமும் குட்டிக் கவிதை.
பதிலளிநீக்குஅருமையான கவிதை! நிறைந்த வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநல்லதொரு தொடர்பதிவிற்கு உங்களை இன்று அழைத்துள்ளேன்!
கவிதைப் பால் கறக்கும் வித்தை கண்டறிந்துகொண்டோம் உங்களிடம். அருமையான கவித்துவமும் வார்த்தையாடல்களும். மிகுந்த பாராட்டுகள் மோகன்ஜி.
பதிலளிநீக்கு\\ஏதோவொரு தருணம்
பதிலளிநீக்குவாகாய் வாய்க்கும்.
நுரைத்து நுரைத்து
பொழிந்துவிடும்
பாத்திரம் வழியவழிய ///
அருமை அண்ணா.
என் கவிதானுபவமும் இப்படித்தான்.
மடி கனக்க பால் இருந்தாலும் தருணம் வாய்ப்பதில்லை கறக்கவும், பாத்திரம் நிறைக்கவும்.