எனைக் கவர்ந்த சில புதுக் கவிதை வரிகள்
கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது
(வைதீஸ்வரன் )
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றனவாம்
என் கல்யாணம் மட்டும் ஏன்
செட்டிப் பாளையத்தில் நிச்சயிக்கப் பட்டது?
(சக்திக்கனல்)
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்-மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே
(மீரா )
அழுகை
இன்று நான் அழுதேன்; ஊமை
ஏக்கத்தால் அழுதேன் -ஏழைக்
கன்று போல் அழுதேன். ஆனால்
கவிதையில் அழுதேன்.;இந்த
மன்றத்தில் அழுத என்னை
மறுபடி அழவைக்காமல்
சென்றுவா தமிழே! நாளை
திரும்பவும் சந்திக்கின்றேன்.
(கண்ணதாசன் )
நானும் இலவு காத்த
கிளிதான்.
ஆனாலும்
தலையணை செய்யும்
தந்திரம் அறிவேன்
(ஹா! கவிஞர் பேர் மறந்துடுச்சே!)
இன்றைய பதிவர் தேர்வு
எம்.ஏ.சுசீலா இந்தப் பதிவர் தமிழ்பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் இவற்றில் தன் புலமையை வெளிப்படுத்தும் விதமாய் தமிழ்மணம் பரப்பும் தமிழம்மா. ஜெயமோகன் அவர்களின் வலைக்குழுமத்தில் பல திரிகளில் இலக்கியம் பேசும் இவர் பதிவுகளை நீங்கள் உடனே படிக்க வேண்டும். சொல்லிட்டேன்!
மதுரை சரவணன் மதுரையில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரியும் சரவணன் சமுதாய நோக்குள்ள நல்ல பதிவர். தன் அனுபவங்களை எளிய பதிவுகளாய் வெளியிடும் இந்த நண்பரின் வலைப்பூவை அவசியம் நீங்கள் பார்க்கத்தான் வேண்டும்.
தியாகராஜ வைபவம் தியாகராஜர் கீர்த்தனங்களை பாடல்களின் அர்த்தத்துடன் எழுதப்படும் வலைப்பூ. கர்நாடக இசைப் பிரியர்களுக்கு பிடித்துப் போகும் இந்த சங்கீதப்பூ.
வடலூரான் கழுகுப் பார்வை என்று பேனர் போட்டிருந்தாலும் ஹாஸ்யப் பார்வை தான் பார்க்கப் படுகிறது. ட்வீட்ஸ்-ரிவீட்ஸ் என்ற ஒரு கலக்கல் பதிவை நினைவுப் படுத்தித்தான் இங்கு அறிமுகம் செய்கிறேன். ஏனோ அதிகம் பதிவுகள் இடாமல் இருக்கிறார் இதன் பதிவர் கலையரசன். எழுதுங்க சார்!
என் சமையலறையில் தேவசுகந்தி அவர்களின் வலைப்பூ. சுவையான சமையல் குறிப்புகள் . இவரின் பின்னூட்டங்கள் கூட சுவையானவை தான். அடிக்கடி பதிவு போடுங்க மேடம்.
ரசித்தவை நினைவில் நிற்பவை திரு சூரி அவர்களின் வலைப்பூ. சுகமான பாட்ல்களின் வீடியோப் பதிவுகள். பல வலைப்பூக்களை தன் களமாய் வைத்திருக்கும் இவர் தளத்துக்கு ஞாயிறு மதியம், தூங்காமல் போய் மேயலாம்.
என் வாசகம் : திரு ஜீவா அவர்களின் இந்த வலைப்பூ திரு வாசகம்ங்க!. ஆன்மீகம், நற்சிந்தை என நிராய விஷயம் சொல்கிறார். ஒரு சுத்து சுத்திப்பார்த்துடுங்க
பெருங்குளம் ராமக்ரிஷ்ணன் பக்கங்கள் ஜோக்கு வலைன்னு நினைச்சீங்களா? இது ஜோசிய வலைங்க. அகஸ்மாத்தா கண்ணுல பட்டுதூ. ஆர்வமிருக்கிறவங்க போய்ப் பாருங்க. கிரிக்கெட்டுல்லாம் கூட எழுதியிருக்கிறார். சில உபயோகமான ஆன்மீகத் தகவல்களும் காணக் கிடைக்கின்றன. ஏதோ நல்லது நடந்தா சரி!
19 comments:
வைத்தீஸ்வரன் கவிதை சூப்பர்.
சக்திக்கனல் கவிதையும் மீரா கவிதையும் எங்கோ யாராலோ அறிமுகப்படுத்தப்பட்டு (சுஜாதா?) படித்து ரசித்த த் த் த ஞாபகம்.
கண்ணதாசன் கவிதை படிக்கும்போதே அட என்றெண்ணி பெயர் பார்த்தால் கண்ணதாசன்!
சுவையான கவிதைகள், அறிமுகங்கள்.
கண்ணாடி புறத் தோற்றத்தைக் காட்டல் போல அகத் தோற்றத்தையும் காட்ட முடிந்தால்...!
நானும் இலவு காத்த
கிளிதான்.
ஆனாலும்
தலையணை செய்யும்
தந்திரம் அறிவேன்
நீங்களா?!
கவிதைகள் அருமை. என் பள்ளிப்பருவத்தில் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள். படித்து காதல்வயப்பட்டேன்.
அவரின் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
\\அழுக்கைத் தின்னும்
மீனைத் தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத் தின்னும்
பசி!///
நிறைய புதிய பதிவர்களின் அறிமுகத்திற்கு நன்றி. 24 மணிநேரம் போதவில்லையே . என்செய்ய?
ஏழில் நான்கு தெரியும். மூன்று புதிது. தியாகராஜா வைபவம் புக்மார்க் செய்து வைத்திருக்கிறேன்.
July 30, 2011 6:29:00 AM GMT+05:30
இராஜராஜேஸ்வரி said...
Thank you for sharing.
July 30, 2011 10:13:00 AM GMT+05:30
RVS said...
அண்ணா! தியாகைய்யர் கிருதிகள் பற்றிய அறிமுகம் அற்புதம். நன்றி. :-)
July 30, 2011 12:56:00 PM GMT+05:30
குணசேகரன்... said...
பதிவு அருமை..
July 30, 2011 12:58:00 PM GMT+05:30
ஹேமா said...
சில புதிய முகங்கள் அறிமுகம்.நன்றி மோகண்ணா.பெயர் தெரியாதவரின் கவிதையின் உள்ளடக்கம் சிறப்பு.சிலரது கற்பனைகளை வளம் அற்புதம்.வியக்கிறேன் !
July 30, 2011 2:48:00 PM GMT+05:30
Rathnavel said...
நல்ல கவிதைகள்.
நல்ல அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
July 30, 2011 3:23:00 PM GMT+05:30
மோகன்ஜி said...
அன்பு ஸ்ரீராம்! என் வானவில்லையும் புக் மார்க் பண்ணி வச்சிடுங்க பாஸ்!
July 30, 2011 11:38:00 PM GMT+05:30
மோகன்ஜி said...
நன்றி ராஜேஸ்வரி மேடம்
July 30, 2011 11:39:00 PM GMT+05:30
மோகன்ஜி said...
நன்றி ஆர்.வீ.எஸ்!
July 30, 2011 11:42:00 PM GMT+05:30
மோகன்ஜி said...
நன்றி குணசேகரன்
July 30, 2011 11:42:00 PM GMT+05:30
மோகன்ஜி said...
அன்பு ஹேமா! இப்படி பல புதுக் கவிதைகள் நெஞ்சுக்குள் நெருடிக் கொண்டேயிருக்கும்.. எழுதின கவிஞனின் வலியை நினைத்து நினைத்து நாமும் அனுபவிப்பது கவிதையின் வெற்றியா?,கவிஞனின் வெற்றியா? இல்லை நம் ஈரநெஞ்சின் வெற்றியா?
புரியாத கேள்விகள்! புலப்படாத பதில்கள்
July 30, 2011 11:47:00 PM GMT+05:30
மோகன்ஜி said...
ரத்தினவேல் ஐயா! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
July 30, 2011 11:48:00 PM GMT+05:30
அன்பு ஸ்ரீராம்!புதுக்கவிதைக்கு இந்த கவிஞர்கள் ஒரு புது பரிமாணம் கொடுத்தவர்கள்.
கண்ணதாசனின் இந்தக் கவிதை ஒரு கவியரங்கத்தில் கவியரசரின் பங்களிப்பு. அறுசீர்விருத்தம் என்ன எளிமையாக வந்து அமர்கிறது அமரகவிஞனின் வரிகளில்? கண்ணதாசனைப் பற்றி நினைவு படுத்தாதீர்கள்... வேறு வேலை ஓடாது.
மிக்க நன்றி அப்பாஜி !
கண்ணாடி புறத் தோற்றத்தைக் காட்டல் போல அகத் தோற்றத்தையும் காட்ட முடிந்தால் அனர்த்தம் தான். எல்லாக் கண்ணாடிகளும் ரசம் இழந்து அம்மணமாய் நிற்கும்!
ரிஷபன் சார்! உண்மை.. நானும் ஓர் இலவுகாத்த கிளி தான். ஆனால் தலையணை தந்திரம் அறிந்தவர் வேறொரு கவிஞர் ...
அன்பு சிவா! இந்தக் கவிதையும் ஞாபகம் இருக்கிறது. அவர் கவிதைகளில் அழகான முயற்சிகள். நினைவில் நின்ற வரிகளையே மேலே சொன்னேன். கண்ணதாசன் கவிதைப் பற்றி ஒரு பெரிய கும்மியை விரைவில் ஆரம்பிக்க ஆவல். தயாராய் இருக்கவும். இன்று முழுவதும் கண்ணதாசன் கவிதைகளும் அவரோடு நான் கழித்த ஒரு நீண்ட பகற்பொழுதும் மனசை இம்சை செய்தபடி இருக்கின்றன
கவிதைகள் அருமை... ஆம்..வாசுதேவநல்லூர் கவிதை வாத்தியார் அழகாக அறிமுகப்படுத்தியிருப்பார்...
வாசகம்...தியாகராஜர் என நல்லறிமுகங்களுக்கு நன்றி....
கவிதைகள் அருமை... ஆம்..வாசுதேவநல்லூர் கவிதை வாத்தியார் அழகாக அறிமுகப்படுத்தியிருப்பார்...
வாசகம்...தியாகராஜர் என நல்லறிமுகங்களுக்கு நன்றி....
ஆம் பத்மநாபன் .. சுஜாதா மிகவும் சிலாகித்த கவிதை இது.
//
மோகன்ஜி said...
அன்பு ஸ்ரீராம்! என் வானவில்லையும் புக் மார்க் பண்ணி வச்சிடுங்க பாஸ்!"//
அன்புள்ள மோகன் ஜி...
எங்கள் ப்ளாக் பக்கம் நீங்கள் அதிகம் வராததால் நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்! இடது பக்கம் 'நாங்கள் அடிக்கடி மேயும்' ப்ளாக் வரிசை இருப்பதைப் பார்க்கவில்லையா?
பார்த்துட்டேன்.... பார்த்துட்டேன் சாமி பார்த்துட்டேன். இனிமே வரேன் உங்க பிளாகுக்கு அடிக்கடி வரேன் .
கண்ணாடி ரசமிழந்து அம்மணமாய் நிற்கும் என்பதைவிட கண்ணாடி முன் நிற்பவரின் உண்மை சொரூபம் வெட்ட வெளிச்சமாகும் என்பதே சரி. மோகன் ஜிக்கும் நான் சொல்ல வந்தது புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். But it is all wishful thinking.
இது என் எனக்குத் தோன்றவில்லை G.M.B சார்?
கருத்துரையிடுக