பக்கங்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

பணம் என்னடா பணம் பணம்??




அண்மையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது.அதன் சில கருத்துக்கள் நன்றாய் இருப்பதாய்ப் பட்டதால், தமிழாக்கித் தர விழைந்தேன். பாருங்களேன்!

1.எல்லைகளே இல்லாத தேவைகளை உருவாக்கும் பணத்தைத் துரத்துவத்திலேயே,  சின்ன எல்லைக்குட்பட்ட வாழ்க்கையை தொலைப்பதில் அர்த்தமேயில்லை.

2..அளவில்லாத பணம் ஈட்டி ஆவதொன்றுமில்லை,அதை
  செலவழிக்க எஞ்சும் வாழ்க்கை மிஞ்சாத போது!

3. செலவழிக்கப்படும் வரை, பணம் உன்னுடையதல்ல.

4. இளமையில், நம் ஆரோக்கியத்தை செலவழித்து செல்வம் தேடுகிறோம்.
  முதுமையில் செல்வத்தைக் கரைத்து ஆரோக்கியம் வாங்க முற்படுகிறோம்.
  வித்தியாசம் யாதெனின், காலம் கடந்து போவதொன்றே.  

5. ஒரு மனிதனின் சந்தோஷம் நிறைய பணம் இருப்பதால் இல்லை. அது 
  தேவைகள் குறைய இருப்பதால் தான்.

6. அன்பு செலுத்த வேண்டிய சொந்தங்களுக்கு தன் நேரத்தையும்,  
    அண்மையையும் ஒதுக்காமல், வெறும் பணத்தாலடித்து 
  ஒதுக்குகிறோமா?இல்லை ஒதுங்குகிறோமா?

மக்களே! இதெல்லாம் ஏற்புடையதா இல்லையா என்பது விவாதத்திற்குரியது தான். எதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் கேள்வியே!


சரி! விடுங்க! திருந்திட்டீங்களா??

ரொம்ப சேர்த்துட்டோமேன்னு குற்ற உணர்வு ஏதும் இருக்கா?

கவலையை விடுங்க..

அந்த மனபாரத்தை சுமந்து கொண்டு திரியாமல் என்னிடம் வாங்க.

அந்த பணச்சுமையை செலுத்த வேண்டிய என் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்:
2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி, 
ஸ்வாஹா பேங்க்,
ஹரோகரா கிளை.
கோவிந்தா சிட்டி,
சுவிட்சர்லாண்டு...

50 கருத்துகள்:

  1. ஒரு கோடி யூரோ போடலாம்னு இருந்தேன்..பின்கோடு போடலியே நைனா?

    பதிலளிநீக்கு
  2. இத வேணா பின் கோடா எடுத்துக்கலாமா?
    111 111

    பதிலளிநீக்கு
  3. இந்த 50 கோடி ருவா நோட்டை முதல்யே வெளியிட்டிருக்க கூடாதா... லாரி லாரியா கடத்துனத கார் வச்சு சுளுவா கடத்திருப்பாங்களே....

    பதிலளிநீக்கு
  4. பணவுரைகள் அருமை.....

    இருந்தும் கெடுக்கும்.. இல்லாமலும் கெடுக்கும் பணம்...

    பதிலளிநீக்கு
  5. ஒரு கோடி யூரோவா? அப்பனே! முன்னமே சொல்லியிருந்தால் பின்கோடு என்ன... திருச்சியிலிருந்து சு.. சு.. சுச்சர்லாந்துக்கு ரோடே போட்டிருப்பேனே!

    பதிலளிநீக்கு
  6. மூவார்! சீரங்கமாத் தெரியலையே? திருமலையா இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  7. அட பொறுமையா பூஜ்ஜியங்களை எண்ணியிருக்கீங்க? என்ன ஷேக்கு ஊர்ல இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. நன்றி பத்மநாபன்!
    //இருந்தும் கெடுக்கும்.. இல்லாமலும் கெடுக்கும் பணம்..//

    இதையில்லா நான் தலைப்பா போட்டிருக்கணும்? அருமை.

    பதிலளிநீக்கு
  9. அந்த பணச்சுமையை செலுத்த வேண்டிய என் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்:
    2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
    ஸ்வாஹா பேங்க்,
    ஹரோகரா கிளை.
    கோவிந்தா சிட்டி,
    சுவிட்சர்லாண்டு...


    ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    பதிலளிநீக்கு
  10. வந்துட்டீங்களா சித்ரா?இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்.. வருக வருக..

    பதிலளிநீக்கு
  11. விலாசத்தைப்பார்த்தால் சந்தேகமா இருக்கு. முதலில் கொஞ்சம் பணம் சேருதான்னு பார்க்கிறேன். பிறகு மூவார் முத்துவுடன் வருகை புரிகிறேன்.அது என்ன பின் கோடுன்னு சொல்லி இரட்டை நாமம் போட்டிருக்கிறார். யாரையுமே நம்ப முடியாது போலிருக்கே!

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள மோகன்ஜி (ஸ்விஸ் பேங்க் பெயர் அருமை !)

    நீங்கள் என்ன சொன்னாலும், என் ஆரம்பக்காலங்களில் என் அலுவல் டேபிளில் வைத்த இந்த வரிகள் தான் உண்மை !!

    "Money can't solve all problems; but no money can cause lot of problems"

    எனக்கு என்றும் பிடித்த வரிகளில் இது முதன்மையானது.

    - சாய்

    பதிலளிநீக்கு
  13. அண்ணன் அக்கவுண்ட்ல போட்டுட்டு பாஸ்வேர்ட என் பிளாக்கு அனுப்பி வைங்க ... பின்ன மொத்த பாரத்தையும் எப்படி தாங்குவாரு ... தோல் கொடுப்பான் தோழன்

    பதிலளிநீக்கு
  14. வை.கோ சார்! மூவாரோட சேராதீங்க! தனித்தனியா டீலிங் வச்சுக்கிட்டா தான் பெட்டரு. கூட்டுபோட்டா சரிப் படாது. தலைவரு போட்ட பின்கோட்டைப் பார்த்தீங்கள்ள?

    பதிலளிநீக்கு
  15. நன்றி சாய்! உங்கள் பொன் மொழி அழகு...

    எனக நைனா எனக்கு ஒரு தரம் சொன்ன பொன்ஸ்... ஒன்று..

    ஏழைகளிடம் பணம் குறைவாகவே இருக்கிறது..

    பணக்காரர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

    ஆனால் யாரிடமும் போதுமான அளவு இல்லை.

    யாருக்கு எது போதும் என்பதை ஆசை நிர்ணயிக்குமா?

    பதிலளிநீக்கு
  16. அன்பு மாய உலகம்! உங்க டீலிங் நல்லா இருக்கு.. ஏதும் வெவகாரமோ இருக்குமோன்னு யோசனையா இருக்குதே.

    பதிலளிநீக்கு
  17. யாரிடமும் போதுமான அளவு இல்லை - மிகச்சரி.
    நிறைவேறாமல் போன ஆசைகளுள் ஒன்று: கள்ள நோட்டு அடிப்பது. ஹ்ம்ம்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல தகவல் தான் நண்பரே .

    பணத்தேடலில் பந்தங்களை தொலைப்பது என்னவோ உண்மைதான் நண்பரே

    பதிலளிநீக்கு
  19. 2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
    ஸ்வாஹா பேங்க்,
    ஹரோகரா கிளை.
    கோவிந்தா சிட்டி,
    சுவிட்சர்லாண்டு...


    போட்டுட்டேன் பல கோடிகளை

    பத்திரமா வச்சிக்கங்க

    பதிலளிநீக்கு
  20. மோகண்ணா...என்னதான் நகைச்சுவையாகச் சொன்னாலும் பணம் கூடக் கூட பிரச்சனைகள்தான் கூடும்.வாழ்க்கைக்குண்டான் பணம் இருந்தாலே போதும்.பணமே வாழ்க்கையானால் எதுவுமே இல்லாமல்தான் போகும்
    பணம் தவிர !

    அண்ணா...இந்த பாங்க் எங்க இருக்குன்னு இப்பவே தேடிப்பாக்கிறேன்.தற்சமயம் சுவிஸ் பண்ம்தானே முன்னனியில் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை சாரு! க.நோ. எல்லாம் ஒல்டு மாடல். ஒரு ஆசிரமம் துவக்குனோமா துட்ட அள்ளுனோமான்னு இல்லாம இந்த சள்ளை எல்லாம் எதுக்கு?

    பிரதம சீடன் காத்திருக்கிறேன் என்று தெண்டனிட்டு என்னையே சமர்ப்பிக்கிறேன் ஸ்வாமி!

    பதிலளிநீக்கு
  22. நன்றி குமார்.. ஏதும் அனுப்புவீங்களா?

    பதிலளிநீக்கு
  23. நன்றி எம்.ஆர்! சரியாச் சொன்னீங்க !

    பதிலளிநீக்கு
  24. எம்.ஆர்! போட்டாச்சா! அப்பா சரி!

    பதிலளிநீக்கு
  25. உண்மை ஹேமா! பணம் உள்ளே வரும் பொது நிம்மதி வெளியில் போய் விடும்.

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம்! காளிதாசன் கையக் காட்டுனா மாதிரி 4ண்ணா என்ன அர்த்தம்.?
    நாலாம் பாயிண்டு பிடிச்சிருக்கா?
    நாலு பில்லியன் போட்டீங்களா?
    நாலு நாள்ல போடுவீங்களா?
    நாலு நாளா சாப்புடல்லியா?
    'நாலு போட்டேன்னா'ன்னு சொல்ல வரீங்களா?
    புண்ணியமாப் போவுது நைனா? கொஞ்சம் வெவரமா சொல்லக் கூடாதா?
    அமெரிக்காவுல இருக்கிற குருநாதர் கேட்டா என்ன பதிலு சொல்லுவேன்?

    பதிலளிநீக்கு
  27. //நிறைவேறாமல் போன ஆசைகளுள் ஒன்று: கள்ள நோட்டு அடிப்பது. ஹ்ம்ம்.//

    அப்பாதுரை, நானும் வரேன். கோயம்புத்தூர் போனால் கோச்சிங் கிளாஸ் உண்டு ! யூ எஸ். டாலர் அமெரிக்காவை விட அவர்கள் அடிப்பதாக கேள்வி.

    பதிலளிநீக்கு
  28. நாலைப் பற்றி நாலும் தெரிந்த நீங்கள் நாலு நாலு வகையாய் கற்பனை செய்திருக்கிறீர்கள்.

    //"சரி! விடுங்க! திருந்திட்டீங்களா??"//

    முதலில் பணம் வரட்டும். அப்புறம் திருந்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  29. சாய்! கோவைல இப்பல்லாம் தம் கூட அடிக்கறதில்லீங்க.. எல்லாரும் நல்லவங்க்லாயிட்டங்க்.. நா !

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம்! சீக்கிரமா திருந்த ஏற்பாடு பண்ணுங்க. எங்களுக்கு நிறயா செலவு இருக்கில்ல??

    பதிலளிநீக்கு
  31. கமென்ட் போடறதுக்கு எவ்ளோ கமிஷன் தருவீங்க

    பதிலளிநீக்கு
  32. // சீக்கிரமா திருந்த ஏற்பாடு பண்ணுங்க. எங்களுக்கு நிறயா செலவு இருக்கில்ல?//

    அதானே!!.. ரக்ஷாபந்தன் பண்டிகை வருதில்லே.. ராக்கி வாங்கி ரெடியா வெச்சிருக்கேன் :-)))))))

    பதிலளிநீக்கு
  33. 2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
    ஸ்வாஹா பேங்க்,
    ஹரோகரா கிளை.
    கோவிந்தா சிட்டி,
    சுவிட்சர்லாண்டு

    :)
    :)
    :)

    பதிலளிநீக்கு
  34. அந்த பணச்சுமையை செலுத்த வேண்டிய என் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்:
    2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
    ஸ்வாஹா பேங்க்,
    ஹரோகரா கிளை.
    கோவிந்தா சிட்டி,
    சுவிட்சர்லாண்டு..

    ஆஹா!!!!!! சூப்பர் சார்.

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி கதைகள் எழுதமாறு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  35. கழுத்துவரைக்கும் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.

    தலைக்கு மேலே காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்.

    வசதி எப்படி???

    பதிலளிநீக்கு
  36. பணம் பற்றிய இந்தப் பகிர்வு அருமை ஜி! ஆர்.ஆர்.ஆர். கொடுத்த பின் கோடு கொஞ்சம் விவகாரமாத் தான் இருக்கு :))))

    ஹரோகரா கிளை, கோவிந்தா சிட்டி... இதற்குப் பின்கோடு வேற வேணுமா என்ன? இந்த விவரமே போதுமே, பணம் போடாம இருக்க :)

    வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுகம் செய்தமைக்கு தாமதமாய் ஒரு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html.இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. பணம் போட கிளம்பிட்டேன்..
    உங்க மொபைல்ல மெசேஜ் வருமா..கிரடிட் ஆனதும்?

    பதிலளிநீக்கு
  39. வாங்க எல்.கே! கமெண்ட் போடுறதுக்கு கமிஷனா? உங்களை உடனே பார்ட்னரா சேர்த்துக்க வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  40. அமைதிச்சாரல்!ராக்கியா?
    நாட்ல இந்த தங்கச்சிங்க தொல்லை தாங்க முடியலப்பா! படத்துல இருக்கிற நோட்டு நாலு எடுத்து வச்சிருக்கேன் என்னருமை உடன்பிறப்பே!

    பதிலளிநீக்கு
  41. குணசீலன் சார்! நன்றி!

    பதிலளிநீக்கு
  42. காசு கழுத்து வரைக்கு இருந்தாலென்ன? தலைக்கு மேல இருந்தாலென்ன??
    தலைக்கு மேலேயே இருக்கட்டும் மேடம்.. சீக்கிரமா குடுங்க!

    பதிலளிநீக்கு
  43. நன்றி வெங்கட்! நலம் தானே?

    பதிலளிநீக்கு
  44. ரிஷபன் சார்! பணம் போட கிளம்பிட்டீங்களா? போட்டவுடனே ஒரு ஏப்பம் தான் வரும்.. மெசேஜ் எல்லாம் கிடையாது!

    பதிலளிநீக்கு
  45. //நன்றி வெங்கட்! நலம் தானே?//

    நலம்.. நலம் அறிய ஆவல் :)

    கொஞ்சம் பிசி... நம்ம பக்கம் வந்து இருந்தா எதுல பிசின்னு தெரிஞ்சுருக்கும் உங்களுக்கு.

    வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அங்கேயும் சொல்லி இருக்கேன். :))

    பதிலளிநீக்கு
  46. அண்ணா அக்கவுண்டை செக் பண்ணுங்க

    பதிலளிநீக்கு
  47. உங்க accounts manage பண்ண ஆள் தேவைன்னா சொல்லுங்க, sir ji! :)

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..