பக்கங்கள்

திங்கள், ஜூன் 11, 2012

காதல் பலூன்






என் காதல் பலூன்களை
கொத்தாய்ப் பறித்துப் போகிறான்
வாழ்க்கை வியாபாரி.

குழந்தையாய்க் கேவி அழத் தோன்றுகிறது.

காற்றுவெளியெங்கும் நிரம்பிய
என் அன்பின் சிறுகூறேயன்றோ
பறிகொடுத்த பலூன்தொறும்
காதலாய்
நிரப்பப் பட்டிருந்தது?

பலூன்களும் ஒவ்வொன்றாய் உடையும்

தடையற்ற வெளியில் கலக்கும்
அடைபட்ட காற்றின் சொச்சம்.

இடைப்பெற்ற அனுபவமோ
உடைந்ததன் கிழிசல் மிச்சம்.

புகைப்படம்: திரு ஹரிஹரன் சங்கர்

39 கருத்துகள்:

  1. காற்றில் கலந்த காற்றின் மிச்சம்
    கவிதையாய் தமிழாய் காதலின் உச்சம்

    பதிலளிநீக்கு
  2. ஆகா, மோகன்ஜி! ஆகாகா, சிவகுமாரன்!!

    பதிலளிநீக்கு
  3. இனி நான் கவிதை எழுதலை. நிறுத்திக்கறேன்

    பதிலளிநீக்கு
  4. தடையற்ற வெளியில் கலக்கும்
    அடைபட்ட காற்றின் சொச்சம்.

    அர்த்தமுள்ள வரிகள் நிரம்பிய பதிவு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நமக்குள்ள எதுவானாலும் பேசித் தீத்துக்கலாம். சொல்லாமக் கொள்ளாம இப்புடி ஏரியா விட்டு ஏரியா மாறிக் கடை போட்டா நாங்க எப்புடி சாமி கல்லாக் கட்டுறது? பாத்து செய்யுங்க குரு.

    பதிலளிநீக்கு
  6. காற்றுவெளியெங்கும் நிரம்பிய
    என் அன்பின் சிறுகூறேயன்றோ
    பறிகொடுத்த பலூன்தொறும்
    காதலாய்
    நிரப்பப் பட்டிருந்தது?

    sabaash..

    பதிலளிநீக்கு
  7. கடைசி நான்கு வரிகள் கவிதையின் உச்சம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சிவா! இயல்பாய் தொடர்கின்றன உன் வரிகள். இன்னமும் கூட அழகாய்.

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை சார்! ஓஹோ?!

    பதிலளிநீக்கு
  10. எல்.கே! உங்களை மாதிரி எழுத முயற்சி பண்ணா 'டேக் இட்'னு துண்டை உதறிகிட்டு போனா எப்பிடி? படத்தைப் பார்த்தேனா?. படக்குன்னு எழுதி புத்தி மாறுவதுக்குள்ள போட்டுட்டேன். என்னை மாதிரி இளவயசு கவிஞர்களை ஊக்கப் படுத்தாம எழுதல்லேன்னா எப்படி?

    பதிலளிநீக்கு
  11. நன்றி ராமலக்ஷ்மி! மத்த பதிவுகளையும் பாருங்க .

    பதிலளிநீக்கு
  12. இராஜேஸ்வரி மேடம்! நன்றி உங்கள் அன்புக்கு.

    பதிலளிநீக்கு
  13. நானும் மூங்கிலேறி விச்சுளிப் பாய்ச்சல்ன்னு வித்தை காட்டிப் பதிவு போட்டு பார்த்தேன். நீங்க கண்டுக்கலை சுந்தர்ஜி. அதான் இப்படியாவது அண்ணனைப் பார்ப்பீங்களான்னு...

    பாட்ஷா படத்துல மெடிக்கல் காலேஜ் எம்.டி ரஜினியைப் பார்த்து சொல்லுவாரு

    ," என்ன? மிரட்டுறயா.. ரௌடியா நீ.. முதல்ல நான் பெரிய ரௌடிடா.. அதுக்கப்புறந்தான் இதெல்லாம்"னு.

    மோகன்ஜி: அப்பா ரஜினி சுந்தரா! நானு முதல்ல கவிதை ரௌடி(டா).. இந்த பிளாகு கதை ,புடலங்கால்லாம் அப்புறம்தான்."

    ரஜினி சுந்தர்ஜி: ஐயா! எனக்கு இன்னொரு பெரும் இருக்கு..

    மோகன்ஜி: டேய்! நமக்கெல்லாம்அண்ணன்டா இவரு! .. சார் உக்காருங்க. இந்த சேர்ல உக்காருங்க சார்! ஒரு கவிதை என்ன சார்.. எவ்ளோ வேணும்னாலும் எழுதுங்க சார்.. ஆனா உங்க இன்னொரு பேரை இங்க சொல்ல மாட்டேன் சார்! மலைக்கு வரும் போது சொல்றேன் சார்!"

    பதிலளிநீக்கு
  14. நன்றி ரிஷபன்! ஒரு இளைஞன் மனசை இன்னொரு இளைஞன் தான் புரிந்து கொள்ள முடியும்.

    பதிலளிநீக்கு
  15. G.M.B சார்!உங்களுக்கு என் நன்றியும் அன்பும்

    பதிலளிநீக்கு
  16. சிறுபிள்ளைத் த‌ன‌மாய் வீசும் விசிறியில் காற்றை வ‌ழிந‌ட‌த்துவ‌தாய் புள‌ங்க‌கிக்கும் எங்க‌ளை ஆர‌வார‌ம‌ற்று தென்ற‌லாய் த‌ழுவிச் செல்கிற‌து உங்க‌ள் க‌விதை! ஒரு போட்டோவைப் பார்த்து இத்த‌னை அழுத்த‌மான‌ க‌விதையா...!

    பதிலளிநீக்கு
  17. //காற்றுவெளியெங்கும் நிரம்பிய
    என் அன்பின் சிறுகூறேயன்றோ
    பறிகொடுத்த பலூன்தொறும்
    காதலாய்
    நிரப்பப் பட்டிருந்தது?//

    அப்பாடி கலக்கறீங்க மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  18. ப்ரிய நிலா,

    //சிறுபிள்ளைத் த‌ன‌மாய் வீசும் விசிறியில் காற்றை வ‌ழிந‌ட‌த்துவ‌தாய் //

    இந்த தன்னடக்க வரிகள் பார்க்க ஆயிரம் கவிதைகள் சொல்வேன்...

    கதைகள் எழுதும் போது பிறரை உணர்கிறேன்.. கவிதை புனையும் போதோ என்னையே...

    பதிலளிநீக்கு
  19. வாழ்க்கை வியாபாரி ரொம்ப மோசம்தான். இப்படியா கொத்தாகப் பிடுங்கிச் செல்வது காதல்பலூன்களை!

    அசத்தலான மனந்தொடும் கவிதைக்குப் பாராட்டுகள் மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  20. தடையற்ற வெளியில் கலக்கும்
    அடைபட்ட காற்றின் சொச்சம்.


    இடைப்பெற்ற அனுபவமோ
    உடைந்ததன் கிழிசல் மிச்சம்.


    ADA...KAVITHAI!!!

    பதிலளிநீக்கு
  21. மிக்க நன்றி கீதாமஞ்சரி!

    பதிலளிநீக்கு
  22. மூவார்! இந்த பஜனையெல்லாம் இங்கே வேணாம்.. எங்கே என் ஷண்முகப்ப்ரியா?

    பதிலளிநீக்கு
  23. அன்பின் சிறு கூறாய் நிரப்பட்டிருக்கிற பலூனை யார் பறிக்க இயலும்?

    பதிலளிநீக்கு
  24. தடையற்ற வெளியில் கலக்கும்
    அடைபட்ட காற்றின் சொச்சம்.

    எப்படி ஜி இப்படி ஒரு சொல்லாடல்,,,

    சொற்களை அடுக்குவது அல்ல கவிதை. உணர்வுகளை அதன் உள்ளீடுகளைக் காட்டுவது கவிதை. அழகான கவிதை ஜி.

    பதிலளிநீக்கு
  25. அழகாய்ச் சொன்னீர்கள் விமலன். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஆதிரா! சுகம் தானே?

    பதிலளிநீக்கு
  27. காதல் பலூன் காற்றோடு கலந்தது .அது தானங்க,இயற்கை.காதல் உச்சங்களை,உயிரின் மிச்சத்தில் உணரலாங்க.அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  28. காதல் பலூனை நீங்கள் ஆந்திராவில் பறக்கவிட அதெப்படி மிகச்சரியாக என் வீட்டில் வந்து இறங்குகிறது?

    டிஃப்ரெண்ட்டா கமெண்ட் குடுத்துப் பார்த்தேன். அடிக்க வராதீங்க ஜீஸ்! :-)

    (ஆல் ஜீஸ். அப்பாஜி, சுந்தர்ஜி மற்றும் மோகன்ஜி )

    பதிலளிநீக்கு
  29. காளிதாஸ் முருகையா! மிக்க நன்றி சகோதரா!

    பதிலளிநீக்கு
  30. ஆர்.வீ.எஸ்! ரொம்ப சிம்பிள்.. எந்த மொட்டை மாடியில் நிறைய பலூன் இருக்கோ அது ஆர்.வீ எஸ்ஸின் காதல் கோட்டைன்னு பச்சப்புள்ளைக்கு கூட தெரியுமே?இதுக்கு மூணு'ஜீ'யும் தேவையா?!

    பதிலளிநீக்கு
  31. பலூன் விடு தூது, ஆர்வீஎஸ்.

    பதிலளிநீக்கு
  32. அப்பாதுரை சார்! ரொம்ப சரி! :-)

    பதிலளிநீக்கு
  33. சுகம். சுகமே அங்கு விளைவதும். வாழ்த்து சொல்ல வந்தால் விட்ட இடத்திலேயே நம் பயணம் இருப்பதாக உணர்ந்தேன். சுகம்தானே?

    இனிய நட்புக்கு நட்பு நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. இன்றைய பதிவுலகில் பல கவிதைகள் எழுதப் படுகின்றன.

    பல கவிதைகளைப் படித்தால் நமக்கு மனம் கனத்து விடும்,ஏன்தான் படித்தோமோ என்று.. :))

    மிகச் சில கவிதைகளாலும் மனம் கனக்கும்,சிந்தனையில் கனம் ஏறுவதால்..

    நீங்கள் இரண்டாம் வகையில்...

    நல்ல கவிதை ஒரு சொந்த உன்னதம்!

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. நட்புக்கும் மிவாழ்த்துக்கும் நன்றி ஆதிரா!

    /'விட்ட இடத்திலேயே பயணம் இருப்பதாய் உணர்ந்தேன்'/

    சாலைக்கு பயணமேது ஆதிரா?

    பதிலளிநீக்கு
  36. காற்றில் கலந்தபின்னும் வாழும் காதல் மனதில் பதிகிறது மோகண்ணா !

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..