பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

கிளிக் காதல்


இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?

கூண்டடைந்து நெல்மணிக்காய் சோசியமா?
மீண்டுவந்தேன் கண்மணியே    நீ சுகமா?
சிறகடிக்க ஏங்கியுள்ளம் சோர வந்தேன்.
இறகுதிர யுனைத்தேடி கண்டு கொண்டேன்

அஞ்சுகமே   கீசுகீசெனும்  ஆகாத்தியம் மறந்தாயா?
அஞ்சிநிதம்  எனையெண்ணி ஆசைமுற்றி தகித்தாயா?
கொஞ்சுவதும் பேடுன்னை காலமழிய சிலிர்த்தே
மிஞ்சுவதும்   ஏதிங்கினி  நம்மிருவர் தவிர்த்தே?

கோதை கைக்கொண்ட முப்பாட்டக்கிளி
காதில்  சொன்னவுயர்  காமமெல்லாம்,
பேதை உரைத்தனளோ  அரங்கனிடம் !
காதல்  உறைந்ததென்  பெருவம்சமடி!


கிளிக்காதல் அலுக்காத களிக்காதல்
ஒளிக்காத நேசமிகும் கிளைக்காதல்.
சலிக்காத மூக்குரசல்  சுகமாதல்
ஒலிக்காத சங்குடலே  நீயாதல்.

இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?


நிழற்பட உதவி : ஹரிஹரன் சங்கர் 

110 கருத்துகள்:

  1. //இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
    இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?//

    கிளி கொஞ்சும் கவிதை ;)))))

    பாராட்டுக்கள்.

    [ஒரு சின்ன சந்தேகம்:

    மனிதக் கிளிகள் இப்போதும் வெட்கப்படுகிறார்களா என்ன? !!!! ]

    பதிலளிநீக்கு
  2. மனிதக் கிளிகள் வெட்கத்தை எல்லாம் கட்கததில் இடுக்கிக் கொண்டு காரியத்தை கவனிக்கிறார்கள். ஒரிஜினல் கிளிகள் சிறகில் புதைக்கின்றன. :)))

    பதிலளிநீக்கு
  3. நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் சொல்லிட்டார்

    பதிலளிநீக்கு
  4. வை.கோ சார்! பாராட்டுக்கு நன்றி! அண்மையில் ஒரு வாரம் திருப்பதியில் இருக்க வாய்த்தது. நிறைய புது ஜோடிகள் தனியாகவோ பெற்றோருடனோ கோவிலுக்கு சாரிசாரியாய் வந்தபடி இருந்தார்கள்,இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும்...

    வெட்கமும் ஆசையும் மஞ்சள் மணக்க அவர்களைச் சுற்றி குலவி விரிந்தது. ஓரக்கண்ணால் பார்த்தபடி கொஞ்சம் பொழுது போனது நினைவிலாடுகிறது.

    பெண் வெட்கி சிவக்கும் பொது அவளைச் சுற்றி தேவதைகள் பூச்சொரிகின்றன!

    பதிலளிநீக்கு
  5. வெட்கம் பெண்மையின் அந்தரங்க அழகு.. ஒரு புனிதத்தின் மிச்சம்.

    இன்றைய பொருளீட்டும் தேவையை பெண்கள் ஏற்று அலுவலகமும் வீடுமாய் அலைபாயும் நிலையில் அவர்கள் வேறென்ன செய்ய?

    ஆண்களிடம் காருண்மையும்,பொறுப்பும் மறைந்து வருகிறது. குழந்தைகளிடம் 'குழந்தைமை' காணாது போயிற்று. இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா ஸ்ரீராம்?!

    பதிலளிநீக்கு
  6. அன்பு எல்.கே! ஆணுக்கும் வெட்கம் பொருந்தும் தானே?

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான வரிகள்... கருத்துரைகள் விளக்கங்களை சொல்லி விட்டன... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  8. பேதை உரைத்தனளோ அரங்கனிடம் !
    காதல் உறைந்ததென் பெருவம்சமடி!

    அரங்கனைக் காதலிக்காமல் அப்புறம் என்ன சுவாரசியம் ??

    பதிலளிநீக்கு
  9. வெட்கம் புனிதத்தின் மிச்சம்.

    இதை இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். பொல்லாத ரசிகரய்யா நீர்.

    பதிலளிநீக்கு
  10. கண்டிப்பா.. ஒரு பாட்டு வரி கூட உண்டே... "ஆண் வெட்கப்படும் தருணம்...

    பதிலளிநீக்கு
  11. நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  12. ரிஷபன் சார்!
    //அரங்கனைக் காதலிக்காமல் அப்புறம் என்ன சுவாரசியம் ??//

    நல்லாச் சொன்னீங்க. அவனை நினைக்கும் தொறும் நாமெல்லோரும் ஆண்டாள் தானே??

    பதிலளிநீக்கு
  13. நானும் சில இலக்கிய வரிகளை யோசிச்சிக்கிட்டிருக்கேன்.. ஆண் வெட்கம் பற்றி.

    பதிலளிநீக்கு
  14. \\அஞ்சுகமே கீசுகீசெனும் ஆகாத்தியம் மறந்தாயா?
    அஞ்சிநிதம் எனையெண்ணி ஆசைமுற்றி தகித்தாயா?\\

    ஆமென்று அவள் வாயால் ஆமோதித்துக் கேட்கவேண்டும். அதுதானே ஆண்கிளிக்கு ஆனந்தம். சொல்லாமல் அவனைத் தவிக்கவிட்டு சிறகுள் முகம்பொத்தி ஓரக்கண்ணால் காதல்பேசி ரசிப்பது பெட்டைக்கு இதம். கிள்ளைமொழி கொஞ்சும் காதற்தமிழை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  15. ஒலிக்காத சங்குடல் - உவமை கண்டு அசந்து போனேன். கிளியின் உடலமைப்பு ஒரு சங்கு போல -- அடடா அண்ணா -- யாரும் சொல்லாத உவமை. படித்துப் படித்துக் களிக்கிறேன்
    மீனாட்சியின் தோட்கிளியை விட்டு விட்டீர்களே

    பதிலளிநீக்கு
  16. அன்பின் கீதமஞ்சரி!

    //சிறகுள் முகம்பொத்தி ஓரக்கண்ணால் காதல்பேசி ரசிப்பது பெட்டைக்கு இதம். //

    ஆஹா! இதெல்லாம் கூட இருக்கிறதா? நான் அப்பாவி ஆண் கிளியாய் அல்லவா இதைப் பார்க்காமல் இருந்து விட்டேன்?!

    கொஞ்சும் காதற்தமிழை மிகவும் ரசித்ததிற்கு என் அன்ப்உம் நன்றியும்...

    பதிலளிநீக்கு
  17. நன்றி சிவா!

    மீனாட்சியின் தோட்கிளி பற்றி நீ தான் நாலு வரி இந்தக் கவிதையோட்டம் ஒட்டி எழுதேன். சேர்த்து விடுகிறேன்.

    நாமிருவரும் ஒரு தோப்புக் கிளியல்லவா?

    பதிலளிநீக்கு

  18. கிளிக் கன்னியா?
    அல்லது
    கிளிக் கண்ணியா??


    மூக்கினை
    மூக்குஉரச
    மூச்சு முட்டுதடி
    அதில்
    காதல் தெறித்ததடி
    கிளியே
    கொஞ்சம்
    கண்ணும் மயங்குதடி!

    இவண்,

    மூவார்!

    பதிலளிநீக்கு
  19. மூவார்! மூவார்!!

    மூச்சு முட்டமுட்ட எதுக்கு மூக்கை உரசணும்? பி.பி. எகிற எதுக்கு கண்ணும் மயங்கணும்?!

    நாட்டுல உங்களை மாதிரி இளசுங்க தொல்லை தாங்க முடியலப்பா!

    பதிலளிநீக்கு
  20. மூவார்!
    //கிளிக் கன்னியா?
    அல்லது
    கிளிக் கண்ணியா??//

    அடடா! ரசிகமணி!! கிளிக் கன்னி... கிளிக் கன்னி .. இத வச்சுக்கிட்டு நாலு நாள் ஓட்டிடுவேனே!

    பதிலளிநீக்கு
  21. காதல் கிளியும் பெண்தானே.பெண் இனத்துக்கே வெட்கம் இயல்பானதுதானே மோகண்ணா !

    பதிலளிநீக்கு

  22. ஒலிக்காத சங்குடலே நீயாதல்.

    கிளி குரலாலே
    கிலி கொள்ளச் செய்த கவிதை!

    பதிலளிநீக்கு

  23. நம் மனித ஜாதியின் இயல்புகளை பறவைக்கும் பொருத்திப் பார்ப்பதில் ஒரு தனி சுகம். விலங்குகளுக்கு வெட்கம் உண்டா. ? கவிதை வரிகளில் அழகு தெறிக்கிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஹேமா! இதுக்குத் தான் புத்திசாலியா ஒரு தங்கச்சி அண்ணன் கூடவே இருக்கணும்கிறது.

    நாங்கல்லாம் மனித இனம், பறவையினம், விலங்கினம் பார்க்கும் போது பெண்ணினம் பொதுன்னு சொன்னே பாரு தாயி! கோடில ஒரு வார்த்தை !

    பதிலளிநீக்கு
  25. நன்றி இராஜேஸ்வரி மேடம்!

    பதிலளிநீக்கு
  26. வாங்க G.M.Bசார்! பாராட்டுக்கு நன்றி! உங்க கேள்விக்கு ஹேமாவுடைய பதில் மேலயே இருக்கே!

    பதிலளிநீக்கு
  27. கிளிக்காதல் அலுக்காத களிக்காதல்
    ஒளிக்காத நேசமிகும் கிளைக்காதல்.
    சலிக்காத மூக்குரசல் சுகமாதல்
    ஒலிக்காத சங்குடலே நீயாதல்.

    ப்ர‌மாத‌ம் ப்ர‌மாத‌ம்!! காத‌ல் வ‌ய‌ப்ப‌டுவோரைப் பார்க்க‌ப் பார்க்க‌ ச‌ந்த‌மும் கொஞ்சிக் குல‌வுகிற‌தே...!

    //ஆமென்று அவள் வாயால் ஆமோதித்துக் கேட்கவேண்டும். அதுதானே ஆண்கிளிக்கு ஆனந்தம். சொல்லாமல் அவனைத் தவிக்கவிட்டு சிறகுள் முகம்பொத்தி ஓரக்கண்ணால் காதல்பேசி ரசிப்பது பெட்டைக்கு இதம். //

    க்ருஷ்ண‌ப்ரியாவின் க‌விதையொன்று ம‌ன‌தில் ஓடுகிற‌து கீதா...

    பதிலளிநீக்கு
  28. ப்ரிய நிலா! ரசிப்புக்கு நன்றி !

    கீதாவின் கருத்து அழகானது. பேடின் இதம் என்னவென்று எவ்வளவு லகுவாக சொல்லிவிட்டார்?!

    பதிலளிநீக்கு
  29. கிளிக்காதலில் படமும் அதற்கான கவி வரிகளும் அழகு ஜி.

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா10/9/12 1:07 AM

    கிளிக்காதல் அழகா இருக்கு. 'சங்குடல்' அருமை! மிகவும் ரசித்தேன்.

    பெண்ணுள்ளும் வீரம் இருக்கிறது, ஆணுள்ளும் தாய்மை இருக்கிறது. உணர்சிகள் எல்லோருக்கும் பொதுதானே. தன்னை ஒரு பெண் ரசிக்கிறாள் என்பதை ஒரு ஆண் உணர்ந்தால் அவனுக்கு வெட்கம் வராதா என்ன. :)

    பெண் வெட்கபட்டால் அழகாய் இருக்கும், ஆண் வெட்கபட்டால் அழகாய் இருக்காது என்று எண்ணி வெட்க படுவதை வெளிகாட்டிக் கொள்வதில்லையோ
    என்னமோ!

    பதிலளிநீக்கு
  31. அன்பு குமார்! நலம் தானே? ரசித்தத்திற்கு நன்றி!

    இந்த நிழற்படம் எடுத்தது என் தம்பி மகன் ஹரிஹரன் சங்கர். ஒரு நல்ல புகைப்பட கலைஞன் அவன். அவன் எடுத்த படங்களைப் பார்த்த கணமே இரண்டு வரிகளாவது மின்னிக் கிளம்பும் கவிதையாய்..

    பதிலளிநீக்கு
  32. வாங்க மீனாக்ஷி! பெண்ணின் வெட்கம் அழகு! ஆணின் வெட்கம் அனர்த்தம்..

    பதிலளிநீக்கு
  33. கிளிக்காதல் அருமை. வரிகள் ஒவ்வொன்றும் அழகு...

    பதிலளிநீக்கு
  34. ”கிளிப்பேச்சுக் கேக்க வா”ன்னு கூப்பிட்டும், கிளிப்பேச்சுக் கேட்காம என்னத்தக் கிளிச்சுக்கிட்டிருதேன்னு கேட்டது கேட்டதால, போட்டத போட்டபடிக்கு வுட்டுப்புட்டு கேக்க ஓடி வந்தேங்ணா.

    சும்மா சொல்லப்படாதுங்ணா.

    பெண்புள்ளைங்கள்ளாலாம் தினைப்புனம் காக்கப் போவறச்சே தினையக் கிளிகள் துண்ணுடாதைக்கு கவண்ல கல்லு வெச்சு கிளிய ஒரு பாவ்லாக்கு ஓட்டுவாங்கோ.

    நீங்க என்னடான்னா வீட்டைப் பாத்துக்கங்கன்னு வீட்டம்மா சொல்லிட்டு, தெருமொனைக்குப் போறதுக்குள்ளாற ஒரு ஜோடிக் கிளிய வூட்டுக்குக் கூட்டாந்து அம்சமா ஒரு கிளிக்கண்ணி எளுதிட்டீங்ணா.

    அதெப்டிங்ண்ணா சங்குன்னுட்ட அத்தோட ஒடம்ப? ஆடிப்பூட்டேங்ணா.

    மெய்யாலுமே ஊடல வுட, கூடலயும் வுட இந்த வெக்கந்தாங்ணா ருசிக்க தோது.பொண்ணுக்கு மட்டுந்தாங்ணா இந்த பூர்வீக சொத்து.

    பதிலளிநீக்கு
  35. அடடா... படத்திலுள்ள கிளிகளின் கொஞ்சும் அழகைச் சொல்லவா? இல்லை உங்கள் கவி அழகைச் சொல்லவா? என்ன ஒரு குதூகலம் கவிதையைப் படித்த எனக்கு....

    அசத்தறீங்கண்ணா...

    பதிலளிநீக்கு
  36. ஆணாட்சி செய்கின்ற அவனியிலே
    தானாட்சி செய்கின்ற மாமதுரை
    மீனாட்சி தோள் வளர்ந்த அஞ்சுகமே
    நானாச்சு உனக்கினி , வெட்கமேண்டி?

    பதிலளிநீக்கு
  37. சப்...பாஷ் சிவகுமாரன்....! very nice.

    பதிலளிநீக்கு
  38. ஜோர் ஜோர் சிவா!

    ஆணாட்சி செய்கின்ற அவனியிலே
    தானாட்சி செய்கின்ற மாமதுரை
    மீனாட்சி தோள் வளர்ந்த அஞ்சுகமே
    நானாச்சு உனக்கேண்டி வெட்கம்?

    கடைசி வரி இப்படி இருக்கலாமோ? தவறானால் மன்னியுங்கள்.

    பதிலளிநீக்கு
  39. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  40. மெருகு ஏற்றுகிறீர்கள் சுந்தர்ஜி.

    நானாச்சு உனக்கேண்டி வெட்கமினி ?
    இது எப்படி இருக்கு?

    பதிலளிநீக்கு
  41. அல்டிமேட் சிவா.

    இதில் ஏற்றுவதற்கும் குறைப்பதற்கும் கூட ஏதுமில்லை இனி?

    பதிலளிநீக்கு
  42. நன்றி சுந்தர்ஜி . நம்ம வலைப்பக்கமும் கொஞ்சம் வரலாமே நேரம் இருக்கையில் .

    பதிலளிநீக்கு
  43. பெயரில்லா10/9/12 9:52 PM

    சிவகுமாரன் கவிதை பிரமாதம். மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. ஆதி! நல்லா இருக்கீங்களா? கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  45. சுந்தர்ஜி! அலைபேசில 'குதறி வச்சிருக்கேன்னது இதைத்தானா? எனக்கு சென்னை செந்தமிழ் மேல் ரொம்பவே ஈர்ப்புண்டு தம்பி! கலக்கிட்டீங்க..

    //பொண்ணுக்கு மட்டுந்தாங்ணா இந்த வெட்கம்பூர்வீக சொத்து.//

    பொட்ல அட்சா மாரி சொல்லிக்கினே நீ!

    பதிலளிநீக்கு
  46. அன்பு வெங்கட்!
    //என்ன ஒரு குதூகலம் கவிதையைப் படித்த எனக்கு.... //

    இந்த டகால்ட்டி தானே வேணாங்கிறது!

    குதூகலம் கவிதையைப் படிச்சதாலா இல்லை சுந்தர்ஜி கருத்துக்கு முந்தி ஒரு கருத்து போட்டிருக்கே, அதைப் படிச்சதாலா?

    கோயம்பத்தூர்ல ஒரு கிளி இருந்திச்சாம்.. நெய்வேலில இன்னொரு கிளி இருந்திச்சாம். ஒரு நாள் நெய்வேலிக் கிளி,"எனக்கு கோவைப் பழம் வேணாம்... கோவைக் கிளி தான் வேணும்"னு அடம் பிடிச்சுதாம்...

    இந்தக் கதைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா பிரதர்?!

    பதிலளிநீக்கு
  47. சிவா! அழகுடா தம்பி.. கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
  48. சுந்தர்ஜீ! பின்றீங்கப்பா!

    பதிலளிநீக்கு
  49. ஸ்ரீராமின் சப் பாஷுக்கு ஒரு சபாஷ்!

    பதிலளிநீக்கு
  50. சிவா! முதல்ல உன் வரிகளைப் படிச்சதும் நீ இப்போது சொன்ன 'நானாச்சு உனக்கேண்டி வெட்கமினி ?' யைத்தான் நினைச்சேன்..

    நானு பின்றேன்ப்பா!

    பதிலளிநீக்கு
  51. மீனாக்ஷி! நீங்க கூட நாலு வரி சொல்லுங்களேன்!

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா11/9/12 1:28 AM

    சொக்கனையே சொக்க வைக்கும்
    மீனாட்சியின் செல்லமே!
    என்னை சொக்கி சொக்கியடிக்கதுடி
    உன் வெட்க வெள்ளமே!
    உன்னுள்ளே முகம் புதைத்து
    உருகியது போதும் இனி
    என்னுள்ளே முகம் புதைத்து
    ஏகாந்தம் காண வா!

    கவிதை எல்லாம் எழுதியதே கிடையாது. நீங்க சொன்னதற்காக நான் செய்த ஒரு சிறு முயற்சி இது மோகன்ஜி!

    பதிலளிநீக்கு
  53. அடேடே மீனாக்ஷி.... அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  54. நாலு வரி எழுதுங்களேன்னு கேட்ட உடனே நச்சுன்னு போட்டீங்க பாருங்க ஒரு போடு.... மிக நல்ல முயற்சி மீனாக்ஷி.

    ஒரு சீன் பாருங்க:

    நிருபர்: வணக்கம் மேடம். உங்களை சிறந்த கவிதாயினியாய் மத்திய அரசு கௌரவப் படுத்தியிருக்கிறதே.. வாழ்த்துக்கள் மேடம்.

    மீனாக்ஷி: இந்த கௌரவத்தை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.

    நிருபர்: எத்தனை ஆயிரம் கவிதைகள்? பிரமிப்பாய் இருக்கிறது மேடம்.

    மீனாக்ஷி: கவிதையை நேசிக்கிறேன். கவிதையையே சுவாசிக்கிறேன்


    நிருபர்: உங்கள் முதல் கவிதை நினைவிருக்கிறதா? அது எங்கு வெளியானது.

    மீனாக்ஷி: ஏன்? நினைவில்லாமல்? மீனாக்ஷியின் தோள் அமர்ந்த கிளி குறித்த கவிதை.

    வானவில் மனிதனில் தான் முதலில் அது வெளியானது.

    நிருபர்: கொடுத்து வைத்த வலைப்பூ அது. நீங்க சேற்றிலே முளைத்த செந்தாமரை மேடம்.. நாலு போட்டோ எடுத்துக்குறோம். அட்டைப் படத்துல நீங்க தான். கையில இந்தக் கிளியைப் பிடிச்சிக்கிட்டு போஸ் குடுங்க மேடம்.


    மீனாக்ஷி: கையில பிடிச்சிக்கிட்டா?? கொத்திடாதே?

    நிருபர்: எதுக்கும் உங்க மூக்குல இருந்து தள்ளியே பிடிச்சிக்குங்க மேடம்....

    பதிலளிநீக்கு
  55. மீனாக்ஷி: நிருபர் சார்! உங்க பேரை சொல்லவே இல்லையே..

    நிருபர்: என் பேரு ஸ்ரீராம் மேடம்..

    (அடுத்த நிருபர் ஆனந்த விகடனிலிருந்து பேட்டி காண காத்திருக்கிறார்.. அவர் கையிலும் ஒரு கிளி!)

    பதிலளிநீக்கு
  56. அட்டகாசம் சிவகுமாரன்.
    அட்டகாபாசம் மீனாக்ஷி (எனக்கே வெக்கமா இருக்குங்க :)

    கோவைக்கிளியா? சிலேடை நயம் மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  57. பெயரில்லா11/9/12 8:14 AM

    ஸ்ரீராம், மிகவும் நன்றி! உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ஏன் மோகன்ஜி, ஏன்? எதுக்கு இப்படி? இருந்தாலும், எனக்கு சிரிச்சு மாளல. :)))))
    அட்டகாசம் போங்க!

    பதிலளிநீக்கு
  58. பெயரில்லா11/9/12 8:37 AM


    //அட்டகாபாசம் மீனாக்ஷி//
    :))))) நன்றி அப்பாதுரை!

    // (எனக்கே வெக்கமா இருக்குங்க :)//
    சரி, சரி! ஆண்களுக்கும் வெக்கம் வரும்னு தெரிஞ்சு போச்சு இப்போ. :))

    பதிலளிநீக்கு
  59. அண்ணா.... நம்ம கவிலைகளை கண்டுக்கலையே

    பதிலளிநீக்கு
  60. என்ன இது இவங்க தெரிஞ்சு போச்சுன்றாங்களேனு.. இப்பத்தான் கும்மியைக் கொஞ்சம் தீவிரமா கவனிச்சேன். வேர்க்கும்மி உங்க தட்டுல தானா? வெட்கம் பொதுவில் அண்ணே.

    நாணம் தான் பெண்களுக்குச் சொந்தம் - ஆணின் நாணம் பல நேரம் அனர்த்தம். என்ன நான் சொல்றது?

    பதிலளிநீக்கு
  61. அட்டகாபாசம்... தமிழுக்கு இன்னுமொரு வார்த்தை தந்தவள்ளலே... ரசிக்கிறேன் பாசம் மிக்க அப்பாதுரை அவர்களே! நீங்க ஆனந்த விகடன்ல இருந்தா வறீங்க?

    பதிலளிநீக்கு
  62. மீனாக்ஷி நீங்க கவிதை சொல்லுங்க.. கைத்தட்ட நாங்க இருக்கோம்..

    பதிலளிநீக்கு
  63. அப்பாதுரை! நல்லா சொன்னீங்க..

    அச்சம், மடம், நாணம்,
    பயிர்ப்புன்னு பெண்ணுக்கு ஆயிரம் தளை வைத்த ஆண் வர்க்கம் வெட்கப் பட வேண்டிய தருணம் வந்து விட்டது. சரி தானே!

    பதிலளிநீக்கு
  64. யாரும் படிக்காம விட்டிருந்தா சிவகுமாரனின் 'கவிலைகளை' முதலில் படிங்க... அமுதம்,, அமுதம்.

    பதிலளிநீக்கு
  65. கிளி..கிளின்னு எல்லாரும் எழுதினா நான் எங்கே போவேன்

    எனக்கும் ஒரு சின்னதா இடம் கொடுங்கப்பா !!

    பதிலளிநீக்கு
  66. ஒரு வ‌லைப்ப‌திவில் இப்ப‌டியொரு ந‌ட்புக் கூட்ட‌ணியின் குதூக‌ல‌க் கொண்டாட்ட‌மா... ஒருவ‌ருக்கொருவ‌ர் த‌ட்டிக் கொடுக்க‌வும் தாங்கிப் பிடிக்க‌வுமாக‌ அட‌டா... ந‌ட்பூ ம‌ண‌ம் க‌ம‌ழ்கிறது! ப‌திவை விட‌ பின்னூட்ட‌ங்க‌ளின் சுவார‌ஸ்ய‌ம் மிகுந்து விடும் போலிருக்கே... தின‌ம் தின‌ம் க‌ணினி திறக்கும் போதெல்லாம் வான‌வில் ம‌னித‌னை 'க‌ண்டு கொண்டு' போகிறோம் நாங்க‌ள்!

    பதிலளிநீக்கு
  67. //கோயம்பத்தூர்ல ஒரு கிளி இருந்திச்சாம்.. நெய்வேலில இன்னொரு கிளி இருந்திச்சாம். ஒரு நாள் நெய்வேலிக் கிளி,"எனக்கு கோவைப் பழம் வேணாம்... கோவைக் கிளி தான் வேணும்"னு அடம் பிடிச்சுதாம்...

    இந்தக் கதைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா பிரதர்?!//

    அடடா... நெய்வேலிக்கிளி... ன்னு - எங்களை இவரோட கம்பேர் பண்றாரே இந்த மோகன் அண்ணான்னு கிளியெல்லாம் வெளிநடப்பு செய்திடப்போகுது... :)))



    பதிலளிநீக்கு
  68. மூவார்! நடமாடும் நட்புத் தேரே! சின்னதா இடமா? தந்தேன் என் இதயத்தில் உமக்கு ஒரு காணி.

    பதிலளிநீக்கு
  69. நிலா ! உங்கள் அன்புக்கு நன்றி.. வானவில்லின் சிறப்பே பின்னூட்டத் தோரணம் தானே?

    \\ஒருவ‌ருக்கொருவ‌ர் த‌ட்டிக் கொடுக்க‌வும் தாங்கிப் பிடிக்க‌வுமாக‌ அட‌டா... ந‌ட்பூ ம‌ண‌ம் க‌ம‌ழ்கிறது! \\

    பின்னூட்டங்களுக்கு நிகராய் மின்னஞ்சலிலும் நேயத்தை பரிமாறும் பதிவர்களின் நட்புக்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேன்..

    வெறும் அரட்டையாக முடிந்து விடாமல் சில ஆரோக்கியமான கருத்துக்களும் ஒரு நியதியாய்த் தான் இங்கே மாறி விட்டிருக்கிறது. தொடரட்டும் நலம் யாவும் நிலா.. வந்து வந்து ஊக்குவியுங்கள். நன்றியுடன் மோ...

    பதிலளிநீக்கு
  70. வெங்கட்! நாமெல்லாம் கிளியாப் பொறந்திருந்தா என்னவாகியிருக்கும்.. (வலையுலகம் பிழைத்திருக்குமோ?)

    பதிலளிநீக்கு
  71. நாமெல்லாம் கிளியாய்ப பிறந்திருந்திருந்தால், கூண்டோடு NET ல் சிக்கியிருப்போம்,


    பதிலளிநீக்கு
  72. நாமெல்லாம் கிளியாய்ப பிறந்திருந்திருந்தால், கூண்டோடு NET ல் சிக்கியிருப்போம்,

    பதிலளிநீக்கு
  73. மூவார்!

    //கூண்டோடு NET ல் சிக்கியிருப்போம்,//

    என் செல்லக் குட்டிய்யா நீர்!

    பதிலளிநீக்கு
  74. //நாமெல்லாம் கிளியாய்ப பிறந்திருந்திருந்தால், கூண்டோடு NET ல் சிக்கியிருப்போம்..

    பிரமாதம் ராமமூர்த்தி சார்!

    பதிலளிநீக்கு
  75. (வலையுலகம் பிழைத்திருக்குமோ?)

    ப‌ட‌க் என்று வ‌ந்த‌ சிரிப்பு மூவார் க‌ருத்தால் தொட‌ர் சிரிப்பான‌து. இந்த‌ ப‌ளிச் ப‌ளிச் தானே கிளிமூக்குக் கார‌ர்க‌ளின் ஸ்பெஷாலிட்டி!!

    பதிலளிநீக்கு
  76. தொடரட்டும் நலம் யாவும்//

    இது இது இத‌த் தான் நாம எதிர்பார்க்கிற‌து!

    பதிலளிநீக்கு
  77. அட அட! கிளிக்காதலையும் விஞ்சிவிடும்போலும் இந்த வலைக்காதல். அட்டகாசம்.

    சிவகுமாரனின் கவிதையைச் சிலாகித்துக்கொண்டே வந்தால் அடுத்து மீனாக்ஷியின் கவிதை அசத்தல். பாராட்டுகள்.

    மேலே என் வரிகள்கண்டு கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை நினைவிலிறுத்திய நிலாமகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  78. அழகா ரெண்டு கிளி கொஞ்சிக்கொண்டு குதூகலமாக இருந்தால் அதற்கு தெரியாமல் அதை படம் பிடித்துவிட்டு அதற்கேற்ற கிளிக்கொஞ்சுகிற வரிகளால் கவிதை புனைந்தீர்கள் என்று நினைத்தால் ம்ம்ம்ம்ம் வேற கதை சொல்லி இருக்கீங்க.. அதிலும் ஒரு வரி ரசித்தேன்... பெண்மையின் வெட்கம் புனிதத்தின் மிச்சம்... அப்பப்பா... அதோடு நிறுத்தவில்லையே..

    எத்தனைப்பேர் சளைக்காமல் சடுகுடு வென்று ஜுகல்பந்தி நடத்தி இருக்கிறீர்கள்...

    ரசித்து ரசித்து வாசித்தேன்...

    இதன் தொடர்ச்சி பின்னர்...

    வீட்டுக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்..

    இது தான் எனக்கு ஒரு சிரமம்... ஒரு பகிர்வை ரசித்து வாசித்து விமர்சனம் பகிரும்போது டைம் ஆகிவிட்டது வீட்டுக்கு கிளம்பனும்... விடுவேனா..

    மீதி வீட்டில் போய் தொடர்வேனே...

    கவிதை அழகுன்னா படம் அதில் அழகு கூட்டுகிறது... படம் அழகுன்னா அந்த கவிதை உங்களை தூண்டிய கரு உரைத்த விதம் அழகு... இத்தனை அழகு போறுமா கிளிகளாச்சே...

    விமர்சனம் தொடர தொடர அழகு கவிதைகளும் கருத்துகளும் அப்பப்பா மெருகேறிக்கொண்டே இருக்கிறதே.. சீக்கிரம் வீட்டுக்கு போய் தொடர்கிறேன் மோகன் ஜி.

    பதிலளிநீக்கு
  79. கிளிக்காதல் பார்க்கவே கொள்ளை அழகு மோகன்... வெட்கம் மனிதருக்கு மட்டும் தான் என்ற கூற்றை மறுத்து கிளிகள் மனித வெட்கத்தை தனக்குள் எடுத்துக்கொள்வதை மிக ரசித்து ரசனையுடன் வரையப்பட்ட வரிகள் சிறப்பு.... சிறகுக்குள் முகம் புதைக்கும் அழகே அழகு. அதையும் சந்தோஷத்துடன் சலிக்காமல் ஆண்கிளி கேட்பது போல் வரிகள் கூடுதல் அழகு....

    இன்னும் கிளி ஜோசியம் இருக்கிறதா என்ன??? என்றோ ஒன்றிரண்டு நெல்மணி கிடைக்கிற ஆர்வத்தில் சுவாரஸ்யமே இல்லாமல் வந்து நாலு கார்டை அந்த பக்கம் போட்டுட்டு ஒரு கார்ட் எடுத்து கொடுத்துட்டு கூண்டுக்குள்ள போய் சோகமாக உட்கார்ந்துக்கொண்டு அடுத்த ஜோசியம் பார்க்க ஆள் எப்ப வரும், நமக்கு நெல்மணி எப்ப கிடைக்கும்னு காத்திருக்கும் அதன் காத்திருப்பு சோகமானது....அந்த கூண்டை விட்டு தப்பிக்க கூட தெரியாத ஒரு மூடக்கிளியாக இருக்கேன்னு நானே பலமுறை யோசித்ததுண்டு.. ஆனால் காதல் வசப்பட்ட கிளி தப்பித்து தன் இணைக்கிளியிடம் ஓடி வந்து தான் மீண்டு வந்த கதையினைக்கூறி அப்போதும் தன் சுகத்தைப்பற்றி கவலை கொள்ளாது தன் இணைக்கிளியின் சுகத்தை அறிய முனையும் ஆண்கிளி ம்ம்ம்ம்ம்ம்....

    சிறகடித்து பறக்க மனிதனே விரும்பும்போது பறக்கும் சக்தி கொண்ட கிளிக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன ஆனால் மனிதன் அதை வேட்டையாடாமல் இருந்தால் பிடித்து கூண்டுக்குள் போடாமல் இருந்தால் கிளிகளுக்கு இந்த சோகமே இருப்பதில்லை...

    பசலை நோயா கிளிக்கு??? தன் இணையை காணாது உணவு மறுத்து ஏக்கத்தில் இறகு உதிர்கிறதோ??? அழகு அழகு....

    மனிதனின் காதலை கிளிக்காதலாக மாற்றிய அதிசயம் இங்கே கண்டேன் மோகன் ஜி. ஆங்காங்கே பீச்சில் பார்க்கில் சினிமா தியேட்டரில் அடர்த்தி இருளில் குலவும் காதலை இங்கு சொல்லவில்லை... யதார்த்த காதல் அதை நாசுக்காய் பார்த்த விதம்... அதை அழகாய் கவிதை வடிவில் படைத்த அழகு... என்னவென்று சொல்வது....

    காதல் மனதில் நுழைந்துவிட்டால் அருகே இருப்போர் எல்லாம் திடிர் என்று மாயமாய் மறைந்தது போலவும் உலகமே நம்முடையது என்ற ஒரு சந்தோஷமும்.. கலர் கலர் கனவுகளும் வாழ்க்கையே வசந்தமாகிவிடும் அந்த நாட்களும்.. புது மணப்பெண்ணின் நாணிக்கோணிய வெட்கமும் இங்கே கவிதையை புனைய வைத்த அற்புதம்....

    கோதையின் கையில் இருக்கும் கிளி இப்படி எல்லாம் கூட கோதையிடம் சொல்லி இருக்குமா என்ற உங்கள் அழகு கற்பனை அருமையான சிந்தனை....கிளியிடம் கேட்டதை எல்லாம் அரங்கனிடம் உரைத்துவிட்டாளா கோதை?? அழகிய முத்தாய்ப்பு வரி “ காதல் உறைந்ததென் பெருவம்சமடி “

    மனித காதல் அலுத்துப்போய் கிளியின் காதலை ரசிக்க ஆரம்பித்து அலுக்காமல் போனதன் ரகசியம் உணர்ந்தேன் அடுத்த வரி வாசித்தபோது.... யாரிடமும் ஒளித்து விளையாடாத நேசம் நிறைந்த காதல்... மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டதனால் கிளைக்காதலா? மூக்குரசும் சலிக்காத காதலை ரசித்து வாசிக்கிறேன்... அழகிய உவமை கடைசி வரி... ஒலிக்காத சங்குடலே நீயாதல்.... என்ன அழகிய ஒரு சிந்தனை இது....

    ரசனையாளனிடம் மாட்டியது “ காதல் “ அதை கிளிக்காதல் ஆக்கினான் ரசனைக்கொண்ட கவிஞன்.... கவிஞனின் வரிகளோ வசீகரிக்கிறது படிக்கும் வாசகர்களை....

    அலுக்காமல் நானும் மீண்டும் மீண்டும் வாசித்தேன் கிளிக்காதலை மோகன் ஜி.. அருமையான அழகான அசகாய சூரனின் வரிகளாக தெரிகிறது....( பின்ன திருப்பதில பார்த்த ஒரு நிகழ்வை இத்தனை கனக்கச்சிதமாக கவிதை புனைவது என்றால்... இப்படி தான் சொல்லுவேன் :) ) ரசித்தேன் ஒவ்வொரு வரியையும்....

    கவிதைக்கு பொருத்தமான அசத்தலான அழகிய படம்....

    அன்பு வாழ்த்துகள் கவிதை + படத்திற்கு... மோகன் ஜி.

    பதிலளிநீக்கு
  80. நன்றி அப்பாதுரை, நிலா.

    பதிலளிநீக்கு
  81. கீதமஞ்சரி!
    /இந்த வலைக்காதல். அட்டகாசம்/
    உண்மை. இந்த அன்பு தீராத வாஹினி..
    நட்பும் நேசமும் பின்னிக் கொண்டிருப்பதனால் தான் இது வலையோ? அனைவருக்கும் வானவில் மனிதனின் வணக்கங்கள் !

    பதிலளிநீக்கு
  82. ப்ரிய மஞ்சுபாஷிணி! உங்கள் ரசனையின் கோணமும்,வெளிப்பாடும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

    நல்ல ரசனை உள்ளவருக்கு ஒரு கவிதையிலோ அல்லது கதையிலோ ஒரேஒரு மின்னல் தென்பட்டாலும் போதும்... அகதரிசனமாய் அந்த ரசனையே பரிமணித்துவிடும்..

    உங்கள் ரசனையைக் கண்டு சந்தோஷமாயும், நிறைய பொறாமையாயும் இருக்கிறது மஞ்சுபாஷிணி!.

    பதிலளிநீக்கு
  83. அன்பு தோழர் கிளி சொல்லும் கவிதை மிகவும் அருமை நன்றி

    பதிலளிநீக்கு
  84. அண்ணா! வெட்கமாயிருக்கு!! சட்டைக்குள் முகம் புதைக்கிறேன்.. :-)

    காதலாகி.. கசிந்து... கண்ணம் மறைத்து... :-))))

    பதிலளிநீக்கு
  85. கவிதை அருமை!
    புகைப்படம் பார்த்த பின் கவிதை பிறந்ததா?
    அல்லது கவிதை படைத்த பின் புகைப்படம் பொருத்தமாக வந்திணைந்ததா?
    பொதுவாய் எந்த ஒரு அருமையான விஷயமும் கவிதை புனைய வைக்கும்! ஆனால் ஒரு கவிதையே இங்கு பல கவிதைகள் புனைய காரணமாக இருப்பது மிகுந்த ஆச்சரியம்!
    தீந்தமிழ்த்தேனின் சுவையை அருந்தி ரசிக்க முடிந்ததே தவிர விவரிக்க இயலவில்லை!
    அருமையான கவிதைகளுக்கும் சொற்சிலம்பங்களுக்கும் பின்னால் ஒரு திறமை மிகுந்த புகைப்படக்கலைஞரின் புன்னகையைக் காண்கிறேன்!
    உங்கள் தம்பி மகனுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  86. வாங்க மோகன் .. உங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  87. அன்பு ஆர்.வீ.எஸ்! ரொம்ப நாளாச்சு இல்லையா.. உடலும் ,உள்ளமும் நலம் தானா?

    பதிலளிநீக்கு
  88. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  89. மனோ மேடம்! உங்கள் பாராட்டுகள் மகிழ்விக்கின்றன..

    /புகைப்படம் பார்த்த பின் கவிதை பிறந்ததா?
    அல்லது கவிதை படைத்த பின் புகைப்படம் பொருத்தமாக வந்திணைந்ததா?/

    என் மனவானில் சிறகை விரித்து பறந்தபடி இருந்த கிளிகள், புகைப்படத்தைப் பார்த்ததும் அந்த மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டு விட்டன...

    பதிலளிநீக்கு
  90. இப்போ வலையுலகில் நீங்கதான் காதல் மன்னனாம். பேச்சு அடிபடுது. உண்மையா அப்பாஜி! பத்துஜி! சுந்தர்ஜி!

    (எல்லோரையும் இழுத்து உள்ள போடுவோம்)

    பதிலளிநீக்கு
  91. அடாடா... கிளிக் கவிதை ரசிக்க வெச்சதுன்னா... பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க இதமா இருக்குது. இத்தனை நான் பாக்காம மிஸ் பண்ணிட்டனே நான். தேங்க்ஸ் டு வரைச்சரம் அண்ட் மஞ்சுபாஷிணி.

    பதிலளிநீக்கு
  92. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

    நன்றி…

    பதிலளிநீக்கு
  93. அன்பின் மோகன் ஜீ,

    தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா. சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா.

    http://blogintamil.blogspot.com/

    கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல்
    கூடுகட்டி, கூவித்திரியும் குயிலின் ஓசையை கொஞ்சம் கேட்போமா??
    மனிதர்களின் காதலைக்கண்டு அலுத்துப்போய் பறவைகளின் காதலில்
    மனம் லயித்து அட்டகாசமான கவிதை ஒன்று சமீபத்தில் எழுதி
    எல்லோரையும் வசப்படுத்தியவர். இவரின் பதிவுகள் சில பார்ப்போமா?

    கிளிக்காதல்
    விட்ட குறை தொட்ட குறை
    ஒரு பயணம்
    தொழுவத்து மயில்
    அம்மா என் அம்மா

    பதிலளிநீக்கு
  94. அன்பின் மோகன் ஜி - கிளிக்காதல் அருமை

    //கிளிக்காதல் அலுக்காத களிக்காதல்
    ஒளிக்காத நேசமிகும் கிளைக்காதல்.
    சலிக்காத மூக்குரசல் சுகமாதல்
    ஒலிக்காத சங்குடலே நீயாதல். //

    அருமை அருமை - மிக மிக இரசித்தேன்

    நல்ல கவிதை- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  95. பெயரில்லா20/10/12 6:15 AM

    வணக்கம்
    மோகன்ஜீ

    களிக்காதல் மிகவும் அருமையாக உள்ளது இலக்கிய சொற்பிரயோம் மேற்கொண்டு எழுதப்பட்டள்ளது
    வாழ்த்துக்கள் வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.
    நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -என்றும் அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  96. நூறு பின்னூட்டம் வந்ததும் அடுத்த பதிவு போடுவாருப்பா.

    பதிலளிநீக்கு
  97. ஷ் RVS.. நாம உருட்டுற விஷயத்தை இந்தாளு காதுல ஏன் போட்டு வைக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  98. ஆர்.வீ.எஸ்!
    //இப்போ வலையுலகில் நீங்கதான் காதல் மன்னனாம். பேச்சு அடிபடுது. உண்மையா அப்பாஜி! பத்துஜி! சுந்தர்ஜி!//

    கொஞ்சம் லேட்டு நானு.. நான் வெறும் காதல் மண்ணுங்க! காதல் மன்னா நீங்க சொன்ன மூணு பேர்ல ஒருத்தர்.. கண்டு பிடிங்க பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  99. வாங்க பாலகணேஷ்! உங்களை எனக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  100. தனபாலன் சார்! வலைச்சரத்தில் உங்கள் அறிமுகத்துக்கு நன்றி. எவ்ளோ லேட்டா நன்றி சொல்றேன் பார்த்தீங்களா?

    பதிலளிநீக்கு
  101. ப்ரிய மஞ்சு பாஷிணி! ரொம்பவுமே ஊர்சுற்ற வேண்டியிருந்ததால் தாமதமாய் ஒரு நன்றி வலைச்சரத்தில் என்னையும் ஒரு ஆளாய் அறிமுகப் படுத்தியதிற்கு

    பதிலளிநீக்கு
  102. சீனா சார்! உங்கள் அன்புக்கு என் வந்தனம்.. மிக்க நல்ல பணியை செய்து வருகிறீர்கள். என் அன்பும் வாழ்த்தும்!

    பதிலளிநீக்கு
  103. ரூபன் ! உங்கள் பாராட்டுக்கு நன்றி அவசியம் உங்கள் வலைக்கும் வருவேன் !

    பதிலளிநீக்கு
  104. தனபாலன் சார் ! மீண்டும் நன்றி! கச்சிதமான அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  105. அப்பாதுரை காரு!
    //நூறு பின்னூட்டம் வந்ததும் அடுத்த பதிவு போடுவாருப்பா.//
    அண்ணாச்சி! இன்னைக்கு அடுத்த பதிவைப் போட்டுட்டேனே!

    பதிலளிநீக்கு
  106. அப்பாஜி!
    //ஷ் RVS.. நாம உருட்டுற விஷயத்தை இந்தாளு காதுல ஏன் போட்டு வைக்கறீங்க?//

    நாங்க விவரமானவய்ங்க... ஆர்.வீ.எஸ்ஸுக்கு போட்டு குடுத்துட்டோம் இல்ல?!

    பதிலளிநீக்கு
  107. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_3.html?showComment=1378165049455#c4515847910923155297வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  108. கிளிக்காதலை எழுதிய உங்களைப் பாராட்டுவதா? கவிதைக் காதலர்களைப் பாராட்டுவதா? மீனாக்ஷிக்குக் கவிதையும் கை கூடும் என்பது இப்போத் தான் தெரியும். அவர் வலைப்பக்கம் வந்து கருத்துச் சொல்லியே இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிறது! :( கிளிகள் இங்கே வந்து மாலையில் கொஞ்சிப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும். இனிமேல் அந்தக் கிளிப்பேச்சுக் கேட்கும்போதெல்லாம் உங்கள் இந்தக் கவிதை நினைவுக்கு வரும். கவிதையை விடப் பின்னூட்டங்கள் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  109. மீனாக்ஷி என்னமோ (மதுரை மீனாக்ஷி) சித்திரையிலிருந்து ஆவணி வரை தான் அரசாளுகிறாள். ஆவணி மாதம் சுவாமிக்குப் பட்டாபிஷேஹம் நடக்கும். அதை ஒட்டி வருவது தான் ஆவணி மூல உற்சவம் நேத்துத் தான் புட்டுத் திருநாள் நடந்திருக்கும். அதற்கு முன்னர் வளையல் திருவிழாவும், விறகு வெட்டித் திருவிழாவும் நடந்து முடிந்திருக்கும், இங்கே சிவகுமாரின் கவிதையைப் படித்ததும் மனசு மதுரைக்குப் பறந்து விட்டது. மேலாவணி மூல வீதியில் வீட்டு வாசலில் இருந்தவாறே சுவாமி தரிசனம் செய்த அந்தப் பழைய நாட்கள்! :( திரும்பவே திரும்பாது! இப்போ மேலாவணி மூல வீதி முழுக்க லாட்ஜ்! :(

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..