பக்கங்கள்

வெள்ளி, மார்ச் 13, 2015

போவான் வருவான் திம்மப்பன்

ஞொய்யாஞ்ஜியை ஞாபகம் இருக்கோ? உல்டாபுல்டா , காமடிபீசு, அசடு, அச்சுபிச்சு, ரெண்டுங்கெட்டான்... இவற்றின் கலவை நாயகன்..
நம் வானவில்லில் ரொம்ப நாள் முன்பு கிச்சுகிச்சு மூட்டியவன்... அவனுக்கேத்த மனைவி பல்லேலக்கா.......
மீண்டும் இங்கு வந்திருக்கிறார்கள்.  சற்று முன் வரை இங்குதான் இருந்தார்கள்.
நடந்த சம்பாஷணையை உங்களுக்கும் சொல்லித்தானே ஆக வேண்டும்?

“வாப்பா ஞொய்யாஞ்ஜி.. என்ன உன்னை ஆளையே காணோம்... பாஸுபாஸுன்னு என்னை சுத்திகிட்டே இருப்பே... எல்லாம் அவ்வளவு தானா?”

“நான் காணல்லைங்கறது இருக்கட்டும்... வலைப்பக்கம் நீங்க வரல்லைன்னு எல்லோரும் சிரிக்கிறான்னா.... மானம் போறது...”

“அப்பிடியா? ஏதாவது சொல்லணும்னு சொல்லாதே.. என்னை மறந்தே போயிருப்பாங்க”.

“யாரும் மறக்கல்லைன்னா...வானவில் மனிதன்-காஞ்சா கருவாடு பெஞ்சா பெருமழைன்னு வழிச்சிண்டு சிரிக்கிறா..
எனக்குத் தான் மனசு கேக்கல்லை. இனிமேலாவது எழுதுங்கோன்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.”

“”என்னோட நிலைமை உனக்கென்ன தெரியும்.. எனக்கு நேரமே....”

“போறும் சால்ஜாப்பு.. மூன்றாம் சுழில உங்களைப் பத்தி வெண்பாவே வந்துடுத்து”

“ஐயையோ.... அப்பாதுரை சாரா... மானாடமயிலாட மகாவாக்கியம் பிரகடனம் ஆயிருக்குமே.”.

ஞே... ஞே...

அதாண்டா .. என்னை கிழிகிழின்னு கிழிச்சிருப்பாரே! எங்கே.. மூணாம் கிழி.... சாரி மூன்றாம் சுழிக்குப் போ பாக்கலாம்...””


மூன்றாம் சுழி




ன்று எழுதுவார் என்றறியோம் ஒன்றெழுதி
அன்றே வருவார் வலைதேடி - நன்றெனத்
தேடிவந்தோர் பின்னூட்டம் சேர்த்ததும் மோகன்ஜி
மூடிவைப்பார் வானவில்லைப் போர்த்து.

இதை எழுதிய இளங்காலை வெளியே -51°F. வானவில் மனிதனை வம்புக்கிழுப்பதும் சூடான சுகமே.
அன்றிலாய் எழுதினாலும் என்றும் இவரெழுத்து குன்றிலிட்டச் சுடர்.


அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஹுஸைனம்மா.
வகை கவிதை
10 கருத்துகள்:
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBo4XrUKKRZh7iAwCrJdj7quuveKBzcXsfyJsNQ7BNNqZIyn4s4CARHSZ93maqk9mNLfzJ-pqWOP2xTrg4N_3GJhMkeFmKOH6j1YkhLZ4Zl5c58em5YtryZOeyM-6zTBZmcw5HVXriPErH/s45/vgk+good+photo.JPG.கோபாலகிருஷ்ணன்மார்ச் 06, 2015
வானவில்’ எப்போதாவது மட்டுமே  தோன்றும் !

மோகன்ஜிக்கு மிகப்பொருத்தமான வரிகள். :)

2. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXvWwqyGG1Hk34DtN1Sy8r2m4VcYLcGyJ4RBML3a6QwtFaoUNgcaDDZXBP3BZP2xwG6uQw-wEncB1KlonrRTsyApQi4TqcYWlU4MxCGQLXWcG4GtjDvc_Tn5xq02vhnjgshe3eCuZD3UJ5/s45/earth_250x251.jpg

பாடல்பெற்ற வானவில் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
3. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHuuuIMeKyDPdXqLritnDJqHbqaW8-pS40DAFVd3lSfAZ0XA-_ZQabVx6jTta-A3BUORK16K1d01jUjBgQEqMbVQm0aW1vZB_qt_wT_tzCmnpRZB3W6kWV8CYAyZyTa9XjLU9En6zhyphenhyphen2Y/s45/*
மோகன்ஜி அவர்களின் பதிவுகளை அதிகமாகப் படித்ததில்லை.நிச்சயம் படிப்பேன்.பாடல் பெற்ற பதிவரான மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள்
4. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOSG5CJHi45ZzoHKWam_-4AykJYXIOeYa-BgShhIhTq0iH3UrhiVfKSOCVjD1Dgvmmty_Klp7iUbrJyruaVs6U7WChohtJJoRp4_iDdWUT9170m23-5lJQPpFtQZ6Ef5CbVUc6Vdsr72ft/s45/Image0498.jpg
என்று எழுதுவார் என்று அறியோம் எழுத வேண்டினாலும் எழுத மாட்டார். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதுபோல் இது மோகன் ஜி போக்கு எனலாமா.
5. http://lh6.googleusercontent.com/-bEmirF5HCac/AAAAAAAAAAI/AAAAAAAAHfY/vCLJOXCNqyM/s512-c/photo.jpg
வெண்பாவின் இறுதி வரிக்குப் பொருள் என்ன மன்னா?

அதில் என்ன குற்றம் கண்டீர் ?

இல்லை.வான வில்லே ஒரு மாயத்தோற்றம் தானே ?
அதை மூடி வைப்பது என்பது எங்கனம் சாத்தியம்.?

புலவரே!! சற்று சும்மா இரும்.
அப்பாதுரை சாருக்கு மூடு வரும்போது
அவரே விரி உரை தருவார்.

அது இருக்கட்டும்.
மோகன்ஜிக்கு ஜே சொல்லி விடுங்கள்.

சுப்பு தாத்தா.
6. http://img2.blogblog.com/img/b36-rounded.png
வானவில்லை அபூர்வமாகத் தானே பார்க்க முடியும். மோகன் ஜியின் எழுத்துகள் நினைவில் என்றென்றும் நிற்பவை.
7. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhao0OU23tdX80Gg1Jrtq_qUCELS79jUMZkmlg81d_bbLZfikbcw_bDRGu4imjkIo_09OpOiliS7bcDYhx72v2QAEVYEc9-v0s3RnhtlI_6CMxZkDHJju3EmNk8s8Kq58U05SEcrr6kzwFX/s45/*
வானவில் என்று வந்தாலும் ரசிப்பேன்...
8. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCgdd7HMGHf9NzAgm03qQ6TYTF_cGdiQNh9FcRU7FaLgXq_ewpXrmdX8koS8W4NWt7Fc2PzfnGMdpDSiKRPoqQtfDvQ_XdfVLDehMyE1eiO9hA5eocW8BVEl3JSekPy4HbFiCTU_LkQ1s/s45/sshoe.jpg
வாங்குவர் என்னுடன் வந்திங்கு என்றெண்ண
வாங்கினரே என்னையும் வாங்கு.
9. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjggTRXy4K9t7naRgq2jjZdLsU8aJebKMa7Tjuq29mSlmZBtBgEdq33cAncldG346bT1bEeI0Y-GCFS01Mv0wdBw3AhqXBccdTGxIU-dVRTcUUtBRvbB29a4-cB3u4L3VqfbNfw4oijyus/s45/IMG_0247-crop.JPG
வானவில் பதிவர் - அவ்வப்போது வந்து சிறப்பான பதிவிடும் மோகன் ஜி! அவர்களுக்கு பொருத்தமான பா. வாழ்த்துகள் மோகன் ஜி!
10.             https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizWHDYxZZ3Iu6vU6nhV6ER2TD4fmhm2cbnBbZQNcoHYX1fd-GyjnihMJdLRD5AdetOcA32r1puGv7kiafd7HdCRPdXLT0H4MP9Gnm9OllI3zp7YRrpvWwEobbQzdNx2Rkczk-Prvy4rYdD/s45/*
வானவில் மோகனை அண்மையில் தஞ்சையில் சேக்கிழார் அடிப்பொடியின் சதாபிஷேக விழாவினில் பார்த்தேன்...எளிமையானவர்
திறமைகள் பல கொண்டவர்
மோகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWsBckAUfncJwt9SiFizWgTGyoNMrdTVxeQBlt4x271KVpkW55jqK5GrjUExkoHeMW3sByL2mzOZY8FEXKU1gCaWNrLy6dUnLF12c6GBkHsA8PQ7M66IxWNZUzGYYhdtZ7nErMvOleOuE2/s45/hpqscan0027.jpg
காளிதாச மகாகவிக்கும் போஜ ராஜனுக்கும் ரொம்ப சிநேகிதம்.
ஒரு நாள் போஜன் காளிதாசனிடம் “நான் இறந்தால் என்ன இரங்கற்பா பாடுவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறது. என் மீது இப்போதே ஒரு இரங்கற்பா பாடு” என்றான். அருட்கவியான காளிதாசன் தன் நண்பன் உயிருடன் இருக்கும் போதே இரங்கற்பா பாடினால் மன்னன் இறந்துகூட போய் விடுவானே என்று பாட மறுத்து விட்டார். மன்னனாய் பாடும்படி ஆணையிட்டும், காளிதாசன் பாட மறுத்ததால் கோபம் கொண்டு, தன் நாட்டைவிட்டே வெளியேறுமாறு தண்டனை வழங்குகிறார் போஜராஜன் . காளிதாசனும் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

நண்பனின் பிரிவைத் தாங்கமுடியாத போஜன் மாறுவேடம் பூண்டு காளிதாசனைத் தேடி அலைகிறார். பக்கத்து நாட்டில் ஒரு சத்திரத்தில் காளிதாசன் அமர்ந்திருப்பதைக் கண்டார். மாறுவேடத்திலிருந்த போஜன், தான் போஜனின் தேசத்திலிருந்து வந்திருப்பதாய்க் கூறினார். ஆவல் மேலிட,போஜ மகாராஜா எப்படி இருக்கிறார் என்று காளிதாசனும் வினவினார்.

எப்படியும் தன் மீதான காளிதாசனின் இரங்கற்பாவை கேட்டுவிடத் துடித்த போஜன், ராஜா இறந்து விட்டார் என்று சொல்ல, நண்பனின் பிரிவால் பெரும்துயருற்ற காளிதாசனும் போஜன் மீது இரங்கற்பாவை பாடிப் புலம்பினார். பாடல் கேட்ட மாத்திரத்திலேயே போஜனும் உயிர்நீத்தார்.

இறந்தது மாறுவேடத்திலிருந்த போஜனே என்றுணர்ந்து காளிதாசனும் உயிர்விட்டாராம்.

அப்பாதுரை சார்! நானும் நீரும் பாட்டிற்காக உயிர்விட வேண்டாம். ஆனால் போஜனைப் போல், இப்படி ஒரு வெண்பா என் மேல் நீங்கள் பாடுவதாய் இருந்தால், வலைக்கு அவ்வப்போது மட்டம் போடுவேனே!

பின்னூட்டத்தில் அன்பையும் ஆதங்கத்தையும் பொழிந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை, குற்ற உணர்வுடனே கூறுகிறேன். இனியும் வானவில் உங்களை ஏமாற்றாது. வானவில்மனிதனில் பதிவுகள் அடிக்கடி வரும் என்று காளிதாசன் மற்றும் போஜராஜன் தலையில் சத்தியம் செய்து உறுதி கூறுகிறேன்.

வெண்பா எழுதின கைக்கு ஒரு உம்மா... 





“அடடா ஞொய்யாஞ்ஜி ! எப்படி கடைசீல சமாளிச்சேன் பார்த்தியா?”

“போங்கண்ணா...  நிஜம்மா சொல்லுங்க..என்ன எழுதப் போறீங்க?”

“உடனே பதிவிட கைவசம் ஆறு கவிதை ஒரு கதை ரெடியா இருக்கு. இருபது வருசத்துக்கு முன்னே ஒரு ரிட்டையர் ஆன மனுஷன் பத்தி ஒரு கதை எழுதியிருந்தேன். அதை விக்கிரமன் சார் படிச்சு பாராட்டினது கூட நினைவிருக்கு. அதன் கடைசிபக்கம் மட்டும் கிடைக்கல்லே. கொஞ்சம் உக்காந்து பட்டி பார்த்துட்டா அதையும் போட்டுடலாம்.”

“அண்ணா! எங்களைப்பத்தியும் ஒரு பதிவு போடுங்கோளேன்” இது திருமதி பல்லேலக்கா ஞொய்யாஞ்ஜி.

"அதுக்கென்னம்மா! போட்டுட்டா போச்சு!"


அப்பாதுரை சாரு! என்ன நக்கலா சிரிச்சாறது??



  


18 கருத்துகள்:

  1. நகுதல் போலன்று நக்கல் - மிகுதிக்கண்
    மேல்சென்று விக்கலும் எடுத்து விடும்
    //அப்பாதுரை சாரு! என்ன நக்கலா சிரிச்சாறது??//

    நக்கல் என்னன்னு உள்ளே போனேள் அப்படின்னா
    சிக்கல் ஆகிடும்.
    சார் கும்பகோணம் பக்கம் அப்படின்னு நினைக்கிறேன்.
    திருப்பந்துருத்தி பக்கம்.

    அதுனாலே, அவர் சொல்வதற்கெல்லாம்
    எஸ்.சார். எஸ். சார் அப்படின்னு சொல்லிண்டே
    இருக்கிறது நல்லது.

    ஏதோ தோணித்து . சொல்லிட்டேன்.
    எனக்கெதுக்கு பக்காத்தாத்து வம்பு !!
    நான் அம்பேல்.
    சுப்பு தாத்தா.
    (in lighter vein)

    பதிலளிநீக்கு
  2. அப்படியே (அவ்வப்போது...) தொடர்ந்துருங்க...

    பதிலளிநீக்கு
  3. என்னைப் போன்ற சோம்பேறிகளை மீண்டும் குடுமியைப் பிடித்து இழுத்துவரும் டெக்னிக் அப்பாஜியின் வெண்பாக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை. எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்கனு நினைச்சால் ஆச்சரியமா இருக்கு. :)

    பதிலளிநீக்கு
  5. சுப்பு தாத்தா அவர்களே!

    நல்லாத்தானே போய்கிட்டிருக்கு??

    பதிலளிநீக்கு
  6. தனபாலன் சார்! அப்பாதுரை வாங்கின வாங்குல திருந்திட்டேங்க.. இனிமேபாருங்க.... பதிவு மேல பதிவைப் போட்டு அப்பிடியே எல்லோரையும்.....

    பதிலளிநீக்கு
  7. சிவா! உங்களையாவது அப்பாதுரை குடுமியைப் பிடிச்சி இழுத்து வந்தார். என்னையானா அரனாக்கொடியில்லே அரணாக்கொடி! அதைப் பிடிச்சு தரதரன்னு கொண்டு போட்டாரு. அவர் மேல நிலைமண்டில ஆசிரியப்பாவிலே ஒரு கவிதை காட்டமா யாத்திருக்கேன் தம்பி! சமயம் பார்த்து போட்டுடலாம்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். இன்னைக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க

    பதிலளிநீக்கு
  9. அப்படியெல்லாம் இல்லிங்க.. உங்க திறமையை மனசுக்குள்ளயே வச்சுட்டிருக்க வேணாமேன்னு தான்.. (எனக்கும் பதிவு எழுத ஏதாவது மேட்டர் வேணுமே?)

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரைகாரு,

    நம்ம ரெண்டு பேரும் சோடியாக ஒரு கதை எழுதினா என்ன பாஸ்??

    பதிலளிநீக்கு
  12. கோமதி அரசு மேடம்,

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  13. ரசித்தேன்.. நினைத்தமாத்திரத்தில் வானவில்லை வெளிக்கொணரும் சாதுர்யம் எத்தனைப்பேருக்கு எளிதில் கைவரும்? அப்பாதுரை சாருக்கு நன்றிகள் பல. :)))

    பதிலளிநீக்கு
  14. வலைப் பக்கம் வரமுடியாத நேர நெருக்கடி. எப்போ வந்தாலும் உங்க பக்கம் எட்டிப் பார்க்காம போயிடுவேனா என்ன?!

    பதிலளிநீக்கு
  15. திம்மப்பன் சகாவாச்சே நாங்களும்:))

    பதிலளிநீக்கு
  16. கீதமஞ்சரி! உண்மைதான் ஆறுமாசத்துக்கு ஒருமுறை அப்பாதுரை சார் தார்கோல் போடுவதும், நானும் கொஞ்சம் ஓடறமாதிரி பாவ்லா காட்டுவதும் நடப்பு தானே! அவர் அன்புக்கு என் தமிழையே தருவேனே! அதேபோல் மீண்டு வரும்போதெல்லாம் வாங்கண்ணே என்று வாய்நிறைய சகோதர வாஞ்சையுடன் வரவேற்கும் உங்களைப் போன்ற சுற்றம். யாருக்கு வாய்க்கும் இது?!

    பதிலளிநீக்கு
  17. நிலா! நான் அப்பப்ப தலையைக்காட்டி விட்டு, ஏன் படிக்க வரல்லைன்னு சண்டை போட யோக்யதை இருக்குமா? ஒருவேளை எழுதினது தெரிஞ்சிருக்காதோ என்ற யோசனையில் வாசப்படியிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியது தான்!

    திம்மப்பனுக்கு அழகே .....விட்டுவிட்டு, விட்ட இடத்தையே பிடிக்கிறது தானே!

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..