வியாழன், நவம்பர் 12, 2015

வைஜெயந்தி மாலா


கலைக்கும் காலத்திற்கும் ஏதும் உறவோ பகையோ உண்டா என்ன? தன் காலத்தில் கொடிகட்டிப்பறந்த கலைஞர்களும், படைப்பாளிகளும் தன் காலத்திலேயே பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுவதும், அல்லது, அதிக பட்சம்  அடுத்த தலைமுறைமட்டும்  நினைவுகூறப் படுவதும்தான் அதிகம்.
அன்றி, அந்தக்கலையின் பெயர் உச்சரிக்கப்படும்தோறும் நினைவிலாடும் மேதாவிலாசம் மிக்கவர்களை காலம் தன் மடியிலேயே கிடத்தியிருக்குமோ ? தான்வாழும் காலத்திலேயே, தான் போஷித்த  கலைதழைக்க, அடுத்த தலைமுறையை உருவாக்கியும்: நரையும்திரையும் அற்பமானிடர்க்கே தானன்றி தனக்கல்ல என்றே, தன் கலையே தானாகி வளைய வரும் மேதைகளும் இன்றும் உண்டல்லவா?

கவிஞர் திருலோகசீதாராம் பேத்தியின் திருமணத்துக்காய் இந்தமுறை மும்பை வந்திருக்கிறேன். நேற்று ஷன்முகானந்தா ஹாலில் திருமதி வைஜெயந்திமாலாபாலி அவர்கள் நிகழ்த்திய ராமாயண காட்சிகள் நாட்டியம் காணும் வாய்ப்பு அமைந்தது. வைஜெயந்திமாலா அவர்களின் தற்போதைய வயது 79. அவர் கௌசல்யையாக வந்து, அட்சதை போட்டுவிட்டு சிஷ்யமார்களை வைத்து ஒப்பேற்றி விடுவார்கள் என நிகழ்ச்சியைத் தவிர்க்க இருந்தேன். எதற்கும் என் சித்தப்பாவின் கனவுக்கன்னியை பார்த்துவிட்டு வருவோமென்றே போனேன். ஆச்சரியமான ஏமாற்றம் எனக்கு.

மேடையில் அபிநயம் பிடித்தது வைஜெயந்திமாலா அவர்கள் மட்டும்தான். வேறு ஒரு ஜீவனும் சதங்கை கட்டவில்லை. சில ராமாயணக் காட்சிகள். ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் ‘நவ விதி பக்தி’ எனப்படும் ஒன்பது பக்தி முறைகளுக்குள் இராமாயண கதாபாத்திரங்களைப் பொருத்தி வழங்கப் பட்ட ஒரு கலைஅர்ப்பணமாய் நிகழ்ச்சி அமைந்தது.முறையாக நாட்டியம் பயின்ற என் மருமகள் மதுமிதா உடன்இருந்து அசைவுகளின் நுட்பங்களை விளக்கிய வண்ணம் இருக்க,வியப்பின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.    

வார்த்தைகள் உணர்த்த இயலாத உணர்வுகளை இசை உணர்த்தி விடும், இசையாலும் உணர்த்த இயலாதவற்றை நிருத்தியம் உணர்த்திவிடும் என்று சொல்வார்கள். 

கம்பனால் புரிந்தவை, தியாகையரால் தெளிந்தவை யாவுமே இந்த அபிநய ஜாலத்தில் வேறு கோணத்தைக் காட்டின. வைஜெயந்திமாலா காலத்தோடு போட்டிபோடவில்லை. உணர்வுகளின் உள்ளார்ந்த நுட்பங்களுடன் போட்டியிட்டார்.
ராமனுக்காய் பழம் பறிக்கும் தள்ளாத சபரியின் வைராக்கியம் புரிந்தது: மரணத் தருவாயில் இறகுகள் இழந்து, சீதையை ராவணன் கையிலிருந்து காப்பாற்ற முடியாமல் போன ஜடாயுவின் இயலாமையின் அவலம் புரிந்தது. பரதன், இலக்குவன், விபீஷணன், சீதை, அனுமன் ,சுக்ரீவன் என அனைவரின் பக்திபாவமும் விரல் அசைவுகளில், விழியிமைப்பில், நடைநடத்திய நாடகத்தில் பொங்கிவந்தன. அபாரம்.

நடனத்தின் போக்கில் பலமுறை மண்டியிட்டு அமர்ந்தார். எழுந்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டியத் தாரகையின் அசைவுகளில், கரணங்களில் முதிர்ச்சியும் அனுபவமும் மட்டுமே தெரிந்தது. மூப்பும் முடியாமையின் சிறு பிசிறுகூடத் தெரியவில்லை. பரதம் இவரை ஆட்கொண்டு விட்டது கண்கூடு. நாட்டிய நிகழ்ச்சி முடிந்து பேசியபோது, எனக்கு கணக்கு வைப்பது என்பதே மறந்துவிட்டது. வயதும் அந்த மறதியியோடு போயவிட்டது என்றார். அந்த வயதுகூட இவரை மறந்து போகட்டும்.

வைஜெயந்திமாலா நடிகையென நினைவுகொள்ளப் படுவதைவிட நாட்டிய கலைஞர் என்றே அறியப்பட விரும்புவார் எனத் தோன்றுகிறது. அவருடைய  சமகாலத்து நடிகைகள் கேரளாவிலிருந்தும், ஆந்திராவில் இருந்தும் வந்து, தமிழ்த் திரையுலகை தன் வசப்படுத்தியிருந்த போதும், தமிழகத்தை சேர்ந்த தமிழச்சியான வைஜெயந்திமாலா ஏனோ இங்கு அதிகம் படங்களில் நடிக்கவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, வாழ்க்கை, பெண், பார்த்திபன் கனவு , பாக்தாத் திருடன், தேன் நிலவு போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் ஹிந்தி திரையுலகில் பெரிய தாரகையாக உருவானார்.


நாகின், லட்கி, தேவதாஸ், மதுமதி, தேவதாஸ், சூரஜ், கங்காஜமுனா, சங்கம், அம்ரபாலி, சூரஜ், ஜூவல்தீப் என்று பல வெற்றிப்படங்களில் நடித்தார். பலமுறை பிலிம்பேர் அவார்ட் இவரைத் தேர்ந்தேடுத்தது.


கதாநாயகியாய் மட்டுமே 63 படங்களில் நடித்த அவர் வயதுஏற நடிப்புக்கு முழுக்குப் போட்டார். என்றுமே உடன் இருந்த நாட்டியத்தை இன்றுவரைத் தொடர்கிறார். நடுவில் அரசியலிலும் தடம்பதித்தார். விலகவும் செய்தார். அவர் வாழ்க்கை சரிதமாய் ‘பாண்டிங்’ (BONDING) எனும் புத்தகம் வெளியிட்டார்.

நான் முதன்முதலில் பொன்னியின் செல்வன் படித்தபோது ஏனோ, 'நந்தினி'யாய் என் மனதில் பதிந்த உருவம் வைஜெயந்திமாலா தான். அவ்வாறே,கடல்புறாவின் 'மஞ்சளழகி'யாய் இவரையே நினைவில் பதித்திருந்தேன். சற்றே சோகமும் திமிரும் கலந்த பார்வை. அசரடிக்கும் அழகு. பார்த்திபன் கனவு திரைப்படத்தில் மிக நளினமாய் அவரை காமெரா காட்டியது. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை எப்படி மறக்க இயலும்? ஹீராலால் மாஸ்டரின் உழைப்பு அதில் தெரியும். பத்மினியின் தாயாரும் வை.மாலாவின் தாயாரும் கொடுத்த நெருக்கடியில், நடனப் போட்டி வெற்றிதோல்வியின்றி சடுதியில் முடித்துவைக்கப் பட்டதாம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் பற்றி சொல்லும்போது ஒரு இணைய விவாதத்தில் அ முத்துலிங்கம் சார் குறிப்பிட்டதாய் ஒரு சம்பவம்பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் போட்டிநடனம் ஆடும் போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம், ஒரு முறை பத்மினியின் நிழல் வைஜெயந்திமாலாவின் மேல் விழுந்ததாம்.  பத்மினி வருத்ததுடன் படபிடிப்பை நிறுத்தி 'என்னுடைய நிழல் உங்கள்மேலே விழுகிறது ' என்றார். உடனேயே வைஜயந்திமாலா குதர்க்கமாக ஆங்கிலத்தில் 'It's only a passing shadow’ என்றாராம் அந்த வார்த்தைகளின் கடுமையில் பத்மினி நெடுநேரம் அழுதபடி இருந்தாராம். ஆனாலும் இந்தம்மாவுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்திதான்  என்று ஒருகாலத்தில் பத்மினியின் பரம விசிறியான நான் கூட ரொம்பவே வருத்தப் பட்டேன்.

வைஜெயந்தி மாலா சிறுமியாக இருந்தபோதே போப்பாண்டவர் முன் நடனமாடியவர். 1959ல் ஐக்கிய நாடுகள் சபையில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண்மணி. அவர் நடனத்தில் மட்டுமல்ல, பில்லியர்ட்ஸ் விளையாட்டிலும் கைதேர்ந்தவர். கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர்.அதுவும், ராஜம் ஐயர், டி.கெ.பட்டம்மாள், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், கெ.வே.நாராயணசுவாமி போன்ற சங்கீத கலாநிதிகளிடம் கற்றவர்.

 
கலைஞர்களின் தனிப்பட்ட ஆசாபாசங்கள், கோபதாபங்கள், உணர்வுச்சிக்கல்களையும் மீறி மேலெழுவது அவர்களின் உன்னதக் கலையொன்றே. அதற்கான அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களை நம் போற்றுதலுக்குரியவர்களாய் ஆக்குகின்றன. வைஜெயந்திமாலா அவர்கள் சந்தேகத்திற்க்கிடமில்லாமல் அத்தகு போற்றுதலுக்குரியவர் தான். 


சில காணொளிகள் கீழே:
1. பழகும் தமிழே (படம்:பார்த்திபன் கனவு)




2.தில் தடப் தடப் கெ...( படம்: மதுமதி... ஹிந்தி )

3.கண்ணும் கண்ணும் கலந்து (படம்:வஞ்சிக் கோட்டை வாலிபன்)



நன்றி:
படங்கள்: கூகிள்
காணொளிகள்: யூ டியூப்






66 comments:

அப்பாதுரை சொன்னது…

நளினம் என்பதன் அடையாளமாகவே இவரைப் பார்த்தேன்.
சுத்தமாக நடிப்பு வராமல் சினிமாவிலும் அரசியலிலும் எப்படி வெற்றி பெற்றார் என்பது ஆச்சரியம்.
பத்மினி வைஜெயந்தி போட்டி என்றால் என் ஓட்டு வைக்குத்தான்.

அப்பாதுரை சொன்னது…

ஒரு இந்திப்படத்தில் ஹெலனுடன் போட்டி நடனம்.. பப்பா ஜமா என்று ஒரு டப்பா பாட்டு.. சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது.. நடனம் இன்னும் நினைவில்.. ஹிஹி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஒரு நல்ல கலைஞரைப் பற்றியும் அவருடைய ஆளுமையைப் பற்றியும் பகிர்ந்த விதம் அருமை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதுலுக்கு உரிய கலைஞர்கள் போற்றுவோம்
நன்றி

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

பழைய தமிழ் சினிமாப் படங்கள் மற்றும் பாடல்களின் ரசிகன் நான். சுவாரஸ்யமான உங்கள் பதிவை படித்தேன்; பாடல்களை ரசித்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளைத் தொடர்ந்து தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்கள் பதிவிற்குள் கருத்துரை இடுவதற்குள் ரோபோ அது இது என்று பல குழப்பங்கள். சரி செய்யவும்.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான பாடல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

sury siva சொன்னது…





//சுத்தமாக நடிப்பு வராமல்//

நடிப்பு எனும் சொல்லுக்கு நாம் நாடும்/தரும் பொருள் நம் உள்ளத்
துடிப்புகளை பொருத்தே அமைகிறதோ ?

நடித்தல் = தன்னை மறந்து தனக்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தை ஒட்டி தனது முக பாவங்களை, அங்க செயல் பாடுகளை, சொற்களை உதிர்ப்பதில் ஒரு லாவகத்தை கொணர்தல்.

தான் ஒன்று இருக்க இன்னொன்று போல் உலகுக்குத் தோற்றமளிப்பது, நடப்பது .. இதுவும் நடித்தல் தான். ஆங்கிலத்தில் ஹிபோக்ரசி என்பார்களே அந்தப் பொருளுக்கு அருகாமையில்.

எப்படி நம் தோற்றம் , நடை உடை பாவனை இருந்தால் நாம் ஒப்புக்கொள்ளப்படுவபடுவோமோ , குறைந்த பட்சம் அங்கீகரிக்கப்படுவோமோ,அது போல் நடப்பதும் நடிப்புதான் இல்லையா..

சினிமாவில் இந்த செயற்கையான மாற்றம் காட்சி எடுக்கப்பட்டபின் டைரக்டர் கட் என்று சொன்ன உடன் , பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது.

அரசியலில் ஆதாயம் இருக்கும் வரை தொடர்கிறது.

சினிமாவில் அது ரோல் ப்ளே

சொன்னதைச் செய்வேன். இது சினிமா.
செய்வதைச் சொல்வேன்: இது அரசியலில் முடியுமோ !!

நிற்க.

வை நடித்த கிட்டத்தட்ட எல்லா படங்களுமே பார்த்திருக்கிறேன்.
ஆனாலும் திலீப் உடன் நடித்த படம் , அது என்ன ? மது மதி எனக்குப் பிடித்த படம்.

அது என்ன மது மதி... இந்திச் சொற்கள் வேண்டாம்.
சாராய நிலவு என்று சொன்னால் ?

சு தா.

kashyapan சொன்னது…

வயதான ஓய்வுதியம் பெரும் பதிவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு. இதில் அப்பதுரை போன்ற இளைஞர்கள் ... ! “உன்கண் உன்னை ஏமாற்றினால் “ பாட்டு கேட்டிருக்கேறா வே 1 அம்மையாருக்கு நடிக்கத் தெரியாது நு சொல்லதேயும். கிழடு கட்டைகள் எல்லம்வருத்தப்படும்---காஸ்யபன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்றும் போற்றுதலுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை தான்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அவரது ‘தேன்நிலவு’ படம் பத்தாவது படிக்கையில் தூர்தர்ஷனில் பார்த்தேன்!மிகவும் பிடித்துப்போனது. நாட்டியங்கள் பார்த்தது இல்லை! பகிர்வுக்கு நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது…

அழகிய தமிழில் உங்கள் கட்டுரை வைஜெயந்தி மாலாவை வானளாவ புகழ்கிறது.
// இந்த நாட்டியத் தாரகையின் அசைவுகளில், கரணங்களில் முதிர்ச்சியும் அனுபவமும் மட்டுமே தெரிந்தது. மூப்பும் முடியாமையின் சிறு பிசிறுகூடத் தெரியவில்லை\\ இந்த வரிகள்தான் இந்தக்கட்டுரையிலேயே சிறப்பு. இத்தனை வயதில் நம்ம ஊர் ஆயாக்கள் துவண்டு இன்றைக்கோ நாளைக்கோ என்று நாட்களை எண்ணிக்கொண்டிருக்க இன்னும் உற்சாகமாய் இவரை பாராட்டாமல் இருக்க முடியாது. பகிர்விற்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,
உண்மை தான். அவரின் பேச்சிலும், நடன அசைவுகளிலும் மிக நாசூக்கான நளினம் மிளிரும்.நாகின் படத்தில் 'மன் டோலே மேரா தன் டோலே' இன்றும் கூட அவரின் நளினத்தை பறைசாற்றும்.. ஹேமந்த் குமார் இசை என நினைவு. பத்மினியை பக்கத்துவீட்டு அக்கா போன்றும், வை.மாலாவை வடக்கத்திக்காரி என்றும் நம் மக்கள் நினைத்து விட்டார்கள் எனத் தோன்றுகிறது. இந்த மனச்சாய்வாலோ என்னவோ என் ஒட்டு பத்மினி அக்காவுக்குத் தான்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை,
நீங்க சொல்ற பாட்டு டாக்டர் வித்யா படத்தில் வரும் ஆயி ஹாய் தில்ரூபா அரே துஜு கொ கியா....பப்பா ஜமாருலோ... பாட்டு. அய்யே.. அது பிளாஸ்டிக் பாட்டில்லையோ சுவாமி... அந்த மாதிரி கிளப் டான்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்ல எங்க ஹெலன் அத்தையை யாரும் அடிச்சிக்க முடியாது.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கரந்தையாரே!

மோகன்ஜி சொன்னது…

தமிழ் இளங்கோ சார்! நீங்களும் நம்பளைப் போலத்தானா? நிறைய இருக்குங்க.. பேசிக்குவோம்...

மோகன்ஜி சொன்னது…

தமிழ் இளங்கோ சார்! அந்த ரோபோ இல்லை என ஏதும் நிரூபிக்காமலே குருத்தை தட்டி விட்டால் வருகிறதே... அது இல்லாமல் செய்ய முடியுமா என இணைய விற்பன்னர்களை உதவிகேட்டுப் பார்க்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி நாகேந்திரபாரதி ஜி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட் நாகராஜ்!

மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா! நடிப்புக்கு உங்கள் புது வியாக்கியானம் அருமை. மதுமதி அழகான படம். அதன் பாடல் ஒன்றை இந்தப் பதிவில் போட்டிருக்கிறேனே!. சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கதையிலும் இந்தப் பாடல்வரும்.'விட்டகுறை தொட்டகுறை'ன்னு கதை வானவில் மனிதனிலேயே இருக்கிறது.
சுட்டி இதோ:http://vanavilmanithan.blogspot.in/2012/08/blog-post.html
சாராய நிலவு தலைப்பு நல்லாத்தான் இருக்கு. இந்த தலைப்புல அப்பாதுரை சார் ஒரு மர்மக் கதை எழுதலாம்.

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! 'உன் கண்ணே உன்னை ஏமாற்றினால் 'ஒரு உற்சாகமான பாட்டு. அப்பாதுரை சாருக்கு நடிப்புன்னா குமாரி கமலா தான்.

மோகன்ஜி சொன்னது…

முற்றிலும் உண்மை தனபாலன் ஜி!

மோகன்ஜி சொன்னது…

சுரேஷ் அவருடைய சில ஹிந்திபடங்கள் பார்க்கத் தக்கவை. இரும்புத்திரை பார்த்திருக்கிறீர்களா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க கவிப்பிரியன்! மிக அழகாகச் சொன்னீர்கள். இந்தப் பதிவே, முதுமையிலும் உற்சாகம் குறையாமல் தன் கலையை ஆராதிக்கும் ஒரு கலைச்செல்வியை பாராட்டும் பொருட்டே. வருகைக்கு மிக்கநன்றி கவிப்பிரியன்,அடிக்கடி வாருங்கள்.

கும்மாச்சி சொன்னது…

அற்புதமான நடனக் கலைஞர் என்பதில் எள்ளலும் ஐயமில்லை.

மோகன்ஜி சொன்னது…

வாங்க கும்மாச்சி ! முதல்முதலா வரீங்களோ? வருகைக்குப் கருத்துக்கும்
நன்றி!

கோமதி அரசு சொன்னது…

பரதம் இவரை ஆட்கொண்டு விட்டது கண்கூடு. நாட்டிய நிகழ்ச்சி முடிந்து பேசியபோது, எனக்கு கணக்கு வைப்பது என்பதே மறந்துவிட்டது. வயதும் அந்த மறதியியோடு போயவிட்டது என்றார். அந்த வயதுகூட இவரை மறந்து போகட்டும்.//

நீங்கள் சொல்வது போல் அவர் தன் வயதை மறந்து கலைசேவை செய்யட்டும்.
படால் பகிர்வு மிக அருமை.
திரு. தி .தமிழ் இளங்கோ சொன்னது போல் பழைய பாடல்கள், பழைய நினைவுகள் தொடரட்டும்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க கோமதி அரசு மேடம். நிறைய பழைய ரத்தினங்கள் கொட்டிகிடக்குதுங்க. அள்ளிடுவோம்...

அப்பாதுரை சொன்னது…

தெரியாமச் சொல்லிட்டனோ? வைஜெயந்திமாலா is a doll.

அப்பாதுரை சொன்னது…

குமாரி கமலாவா?

கீதமஞ்சரி சொன்னது…

பாரதியின் ஞானச்செருக்கு மாதிரி இந்தப் பாவைக்கு நாட்டியச்செருக்கு... தம் திறமையின்பால் கொண்ட அதீத நம்பிக்கையும் பிடிப்பும் செருக்குண்டாக்குவதில் வியப்பென்ன? அந்த அதீதம்தான் இப்போதும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது போலும் அவரை... வியந்து ரசித்து மகிழ்கிறேன் வைஜயந்திமாலா அவர்களின் நாட்டியத்தையும் அவரையும் அவரது நாட்டியத்தையும் வர்ணித்த அழகான உங்கள் எழுத்தையும்.

Geetha Sambasivam சொன்னது…

//வை.மாலாவின் தாயாரும் //ஹிஹிஹி, எல்லோரும் கவனிக்கலைனா நாங்க விட்டுடுவோமா என்ன? வைஜயந்திமாலா அவர் பாட்டி யதுகிரியின் பாதுகாப்பில் இருந்தார். அம்மா வசுந்தராவிடம் இல்லை! :) ஆகவே வைஜயந்தியின் பாட்டியும், பத்மினியின் தாயாரும் என்று வந்திருக்க வேண்டும். இல்லையா மோகன் ஜி? :))))))

Geetha Sambasivam சொன்னது…

நளினம் என்று சொன்னால் அது கமலா தான்! எனக்கும் இந்த விஷயத்தில் அப்பாதுரையின் கருத்துத் தான்! வைஜயந்தி நடிச்ச பார்த்திபன் கனவும், வஞ்சிக்கோட்டை வாலிபனும் மட்டுமே பார்த்திருக்கேன். ஹிந்தியில் மதுமதி? ஏதோ ஓரிரு படங்கள்! ஆனால் நடிப்பு என்று பார்த்தால் வைஜயந்தியும் சரி, கமலாவும் சரி ஜீரோ தான்! :)))) கொஞ்சும் சலங்கையில் கமலாவின் நடிப்பைப் பார்த்தால் தலையில் அடிச்சுக்கத் தோணும்! :) அதே சமயம் நாட்டியத்தில் அவருக்கு ஈடு இல்லை! இன்று வரை! வைஜயந்தி எல்லாம் அப்புறமாத் தான்! ஆனால் இந்த எண்பது வயசிலும் உட்கார்ந்து மண்டி போட்டு எழுந்து என்று சுறுசுறுப்புடன் வளைய வரும் வைஜயந்தியைப் பார்க்கையில் பொறாமையாகவே இருக்கிறது.

இப்படிக்கு,

தாங்க முடியாத மூட்டுவலியுடன்,
கீதா சாம்பசிவம். :)

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! நம்ப சுதாவுடனும் காஷ்யபன் சாருடனும் போட்டிபோட முடியுமா? இது அவங்க ஏரியா...

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! குமாரி கமலா... மறந்துட்டீங்களா? ரொம்பநாள் முன்னாடி அந்தம்மா டான்ஸ் பற்றி நிறைய விவாதமாச்சு.. ஆனா கீதா சாம்பசிவம் மேடம் போன்ற திவீர ரசிகைகளிருக்கிற வரை, அவங்களை யாரும் அசச்சிக்க முடியாது.. அசச்சிக்க முடியாது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி! உண்மை அந்த செருக்கு இல்லாவிடில் கலையும் படைப்பும் மேன்மையுறாது என்றே நானும் நினைக்கிறேன். அந்த நாடகத்தில் சுக்ரீவனாயும் அனுமனாயும் அவர் ஆடியபோது குரங்கின் சேஷ்டைகளை கொண்ட வந்த அழகு அற்புதம். ராமனுக்காக மூதாட்டி சபரி கனிகள் பறிக்கிறாள்... ஒவ்வொரு கனியை பறிக்கும்போதும் வேறுவேறு அசைவுகள். சற்றே எட்டாதிருந்த கனியை எக்கிஎக்கி பறிக்க முயன்று, முடியாமல் போனதும் 'போகட்டும் போ' என்று சலிப்புடனும் தன் இயலாமையை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவர் செய்த அபிநயங்கள் இருக்கிறதே.... கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று. மேன்மையான நாட்டிய மேதை தான் அவர்.

மோகன்ஜி சொன்னது…

ஆஹா.. இளமையிலேயே தன் தாய் வசுந்தராதேவியும் தந்தையும் பிரிந்து விட்டதனால், வை.மாலாவை வளர்த்தது பாட்டி யதுகிரி அம்மாள் தான் என்று படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது சரியாயிருக்கலாம். ஒரு கட்டத்தில் யதுகிரி அம்மாளும் அவருடன் இல்லை எனவும் நினைப்பு. கீதாக்காவா கொக்கா?

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்.. நீங்க கு.க வின் ரசிகைன்னு தெரியாமல் போய் விட்டது.அப்பாதுரை அங்கிளுக்கு அவரையெல்லாம் பிடிக்காது. நான் லோலாங்காட்டிக்கு அப்படி எழுதினேன். எல்.விஜயலட்சுமி நடனம் உங்களுக்கு பிடிக்குமா? முறையாக நடனம் பயின்றவர் அவர். மூட்டுவலிஎல்லாம் நம் வாழ்க்கைமுறை நமக்களித்திருக்கும் பரிசு என்று தோன்றுகிறது. சோபாவில் அமர்ந்தபடி, டைனிங்க்டேபிளில் சாப்பிட்டபடி, நுரைமெத்தையில் படுத்தபடி .. பூமி ஸ்பரிசமே இல்லாத வாழ்க்கை..

ஏதேனும் நாட்டிய வகுப்பில் உடனடியாக சேரவும்.




வும்..

sury siva சொன்னது…

//ஸ்பரிசமே இல்லாத வாழ்க்கை.//

போர் அடிக்கத்தான் செய்யும்.
இங்க்லீஷ் bore.

அந்த தில் தடப் தடப் கே கஹ ரஹா ஹை
அனுபவம் இல்லேன்னா எப்படி !!
சுப்பு தாத்தா.

Geetha Sambasivam சொன்னது…

//ஒரு கட்டத்தில் யதுகிரி அம்மாளும் அவருடன் இல்லை எனவும் நினைப்பு.//ஹிந்தியில் பிரபலம் ஆன பின்னர்னு நினைக்கிறேன். அவரைத் திட்டிப் பாட்டி யதுகிரி பேட்டியெல்லாம் கொடுத்த நினைவு! :)

Geetha Sambasivam சொன்னது…

//அப்பாதுரை அங்கிளுக்கு அவரையெல்லாம் பிடிக்காது. நான் லோலாங்காட்டிக்கு அப்படி எழுதினேன்.//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெளிவாச் சொல்லக் கூடாதோ! ஆனால் எனக்கு நாட்டியம் ஆடும் கமலாவை மட்டுமே பிடிக்கும். நடிப்பில் அல்ல! :) வைஜயந்தியும் இவரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி! அந்த நாட்டிய பாவங்கள் அனைத்தும் முகத்தில் எங்கேயோ போயிடும். அதுவும் காதல் காட்சிகளில்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஏதோ வயிற்று வலி வந்த பெண்ணைப் போல் முகபாவம் இருக்கும். :)

// எல்.விஜயலட்சுமி நடனம் உங்களுக்கு பிடிக்குமா?//

மாடர்ன் தியேட்டர்ஸ் இவரையும் ஜெய்சங்கரையும் ஜோடி சேர்த்து எத்தனை படங்கள் எடுத்திருக்கின்றன! பாடல்கள் அனைத்தும் மறக்க முடியாத ஹிந்திப் பாடல் மெட்டில் அமைந்தவை! :) ஶ்ரீதரின் ஊட்டி வரை உறவில் சிவாஜிக்குத் தங்கையாக வருவாரே! அப்படி ஒண்ணும் நாட்டியம் பிரமிக்க வைக்கலை! என்றாலும் முறைப்படி கத்துக் கொண்டவர் என்பது தெரியும். வைஜயந்தியும், கமலாவும் கூட அப்படித் தானே! பத்மினியும் அவர் சகோதரிகளையும் சேர்த்து!

Geetha Sambasivam சொன்னது…

//ஏதேனும் நாட்டிய வகுப்பில் உடனடியாக சேரவும்.//

ஆஹா! தம்பிக்கு அக்காவின் திறமையில் எவ்வளவு நம்பிக்கை! :) அப்புறமா யார் வீட்டுக் கூரையிலாவது விரிசல் கண்டால் தம்பியைக் கை காட்டிவிட வேண்டியது தான். :)

sury siva சொன்னது…

//அப்புறமா யார் வீட்டுக் கூரையிலாவது விரிசல் கண்டால் தம்பியைக் கை காட்டிவிட வேண்டியது தான். :)//

யார் வீட்டுக்கூரையோ என்றால் புரியல்லையே !!

பெருமாள் குடியிருக்கும் கோவில் கூரை ஸ்ட்ராங் ஆ இருக்கும் இல்லையா ??

அப்ப கவலைய விடுங்கோ.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சு.தா ,
ஒரு வேளை என்னுடைய அந்த விட்டகுறை தொட்டகுறை கதையைப் படித்தீர்களோ?

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,
//அவரைத் திட்டிப் பாட்டி யதுகிரி பேட்டியெல்லாம் கொடுத்த நினைவு! :)//

ஆனால் வை.மாலா அளித்த பேட்டிகளிலும் அவருடைய சுயசரிதையிலும் தன் தாய்வழிப் பாட்டியான யதுகிரி தேவியை தன்னை ஆளாக்கி வழிகாட்டியராகவே குறிப்பிடுகிறார்.அவரை எல்லம்மா என்றே அழைப்பாராம். தன் தந்தையைப் பிரிந்து போன தாய் வசுந்தராதேவியிடம் அவருக்கு வருத்தம் இருந்ததாய்த் தெரிகிறது.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,
அந்தக் காலகட்டத்து நடிகைகளுக்கு நடனம் தெரிந்தால்போதும் என்றே நினைத்திருக்கிறார்கள் என்று ஐம்பதுகளில் வந்தபடங்களைப் பார்த்தாலே தெரிகிறது. கண்ணாம்பா ஒரு விதிவிலக்கு. சாவித்திரி, பானுமதி,சௌகார்ஜானகி, பத்மினி காலகட்டத்தில்தான் அவர்கள் நடிக்கும் வாய்ப்புகள் உள்ள படங்கள் வெளியாகின.எனக்கென்னவோ வைஜெயந்திமாலா பருமனாய் இல்லாததால் தானோ என்னவோ அந்தநாட்களில் அதிகம் தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தரவில்லையோ என்று தோன்றுகிறது.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,
//அப்புறமா யார் வீட்டுக் கூரையிலாவது விரிசல் கண்டால் தம்பியைக் கை காட்டிவிட வேண்டியது தான். :)//

வை.மாலா.நடனத்தில்மட்டுமல்ல. பில்லியர்ட்ஸ் விளையாட்டிலும் கைதேர்ந்தவர். கர்நாடக இசையை முறைகாகக் கற்றவர். அதுவும்,ராஜம் ஐயர், டி.கெ.பட்டம்மாள், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார்,கெ.வே.நாராயணசுவாமி போன்ற சங்கீத கலாநிதிகளிடம் கற்றவர்.

நீங்கள் நடனம் ஆடினால் கூரை விரிசல்காணும் என்றால், சங்கீதம் கற்றுக் கொள்வதிலும் அந்த அபாயம் இருக்கிறது.
எனவே, அன்புள்ள அக்கா.... பில்லியர்ட்ஸ் ஆடிக்கோங்கோ....

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
//பெருமாள் குடியிருக்கும் கோவில் கூரை ஸ்ட்ராங் ஆ இருக்கும் இல்லையா ??//

அப்படி விட்டுட முடியுமோ.. கூரை ஸ்ட்ராங்கா இருக்கலாம்... பெருமாள் வீக்கா இருந்துட்டார்னா??

sury siva சொன்னது…

பெருமாள் வீக்கா இருந்துட்டார்னா??//

பெருமாள் வீக்க்கா இருப்பாரோ என்ற சந்தேகம் ஏன் வரணும்?

தாயார் பக்கத்திலே சானித்யத்திலே இருக்கும்போது
பெருமாள் வீக்கா இருப்பாரோ ??

இருந்தாலும் அந்தக்காலத்துலே வடமொழியில் கவிஞர் ரஹீம் எழுதிய ஒரு தோஹா ஞாபகம் வர்றது.

कम्ला तिर न रहीम कहू, य जनत सब कोइ.
पुरुश पुरतन के वधु क्यो न सञ्च्ला होइ.

செல்வம் யாரிடையும் ஸ்திரமாக இருப்பதில்லை . காரணம் என்ன தெரியுமோ ?
கமலா, (அந்த டான்சர் இல்ல, சாக்ஷாத் லக்ஷ்மி தேவி, ) அவங்களோட புருஷன் ரொம்ப ஓல்டு மேன். புராதன் புருஷ். எல்லோருக்கும் மூத்தவன் ஆகையினால், . லக்ஷ்மி தேவியுமே சஞ்சலமா இருக்காளாம்.
இது நையாண்டி கவிதை. ரொம்ப ஜாஸ்தி அர்த்தம் பண்ணிக்க கூடாது.

நீங்க சொல்ற வீக் எதுன்னு புரியல்ல.. விளக்கமா சொன்னா
புரிஞ்சுக்கலாம். எதுக்கும் ந்யூரோவிட் ஹெச் (மெதில் கொபாலாமின் பி 12 ) தினம் ஒன்னு சாப்பிடச்சொல்லுங்க... லோக சம்ரக்ஷணம் செய்திண்டு இருக்கறவர் வீக்கா இருக்கக் கூடாது இல்லையா..

சு தா.

sury siva சொன்னது…

//ஒரு வேளை என்னுடைய அந்த விட்டகுறை தொட்டகுறை கதையைப் படித்தீர்களோ?//


அது என்ன விட்ட குறை தொட்ட குறை ?

என்ன கதை? எங்கிருக்கு ?

சு தா.

Geetha Sambasivam சொன்னது…

விட்டகுறை, தொட்டகுறை படிச்சாச்சு! :)

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
தாயார் பக்கத்துல இருந்தாலே பெருமாள் 'வீக்' ஆகிடுவார் தானே?!

உலக மளந்த உத்தமரும் ஒடுங்கியே
திலக நுதளாள் பங்கயமுறை பத்தினியாள்
மடியே கதியா பாம்பணை பஞ்சணையா
நெடிய மாலன் கிடந்தனன் பைங்கிளியே....

எழுவண்ணமணவாளர் பாசுரம் அறியீரோ?

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
கவிஞர் ரஹிம் ஜோர் ! விட்டகுறை தொட்டகுறை கதையின் சுட்டியை உங்களுக்கு அளித்த பதிலிலேயே கொடுத்திருக்கிறேனே...(மேலே 12/11/2015 04.45pm)

sury siva சொன்னது…

எழுவண்ணமணவாளர் பாசுரம் அறியீரோ?//

எழுவண்ண மணவாளர?

எக்கட உந்தி ஸ்வாமி ?

ஏழு வண்ணம் ...வானவில்

ஆஹா ...கண்டுபிடிச்சேன்..கண்டுபிடிச்சேன்.

பாசுரம் யாருதுன்னு கண்டுபிடிச்சேன்.

பாஸ். ! உரம் வாய்ந்த சார் மீரு .

சுதா.


மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம் !

விட்டகுறை தொட்டகுறைக்கான உங்கள் கருத்துகள் படித்தேன்.. நன்கு அலசியிருக்கிறீரகள்..'நீங்க தானே அந்த ராகவன் சார்' என்று வினவிக் கொண்டிருந்த ஒரு அற்புதமான ரசிகை இணையத்துக்கே முழுக்கு போட்டுவிட்டார். வாழ்க்கை கூட அந்த ரயில்வண்டி போலத்தானே அக்கா??

மோகன்ஜி சொன்னது…

சு.தா! அடக்த்துடன் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன் தலைவா !

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
//பாஸ். ! உரம் வாய்ந்த சார் மீரு .//

மைதானம் கிடைச்சா விளையாடுவீங்க!

ஸ்ரீராம். சொன்னது…

வைஜயந்தி, குமாரி கமலா போன்ற பாட்டி நடிகைகளைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். நான் இந்தக் கால இளைஞன். எனக்கு அவர்களை எல்லாம் தெரி.....யாது! குமாரி கமலாவின் தீவிர, அதி தீவிர பக்தர் என் அப்பா. அவர் நாட்டியப் பாடல்களை விழுந்து விழுந்து காயம் படுமளவுக்கு ரசிப்பார்! என்பது வயதிலும் உடம்பை Fit ஆகா வைத்திருப்பதற்கு நாட்டியக் கலையே காரணம். முன்னரே எம் கே டி இது பற்றி "நாட்டியக்கலையே" என்று ஒரு பாடலில் கூடச் சொல்லி இருக்கிறார்!

:)))))

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஶ்ரீராம்,
//அதி தீவிர பக்தர் என் அப்பா. அவர் நாட்டியப் பாடல்களை விழுந்து விழுந்து காயம் படுமளவுக்கு ரசிப்பார்! // நாட்டியத்தில் பாடல்கள் அந்த காலத்தில் குத்துப்பாட்டு மாதிரித்தான் கருதப்பட்டு வந்தது. என் தாத்தாவிடம் சித்தப்பா இந்த ரசனைக்காக திறைய திட்டு வாங்கியிருக்கிறார். உங்களுக்கு வயது பத்தாது என்றாலும், நடனத்துக்கு என்றே பிறந்தவர்கள் பத்மினியும் வை.மாலாவும் மட்டுமே என்று உறுதியாகச் சொல்லுகிறேன். உங்களுடைய திரிஷா மன்னியும் , காஜல் அக்காவும் கிட்ட வரமுடியாதுன்னேன்.

RG சொன்னது…

பரவாயில்லையே! நானும் ஜோதியில் கலந்துடலாம் போலிருக்கே! :-)

மோகன்ஜி சொன்னது…

வாங்க ப்ரோ ... கலந்துக்குங்க.. கலக்குங்க..

sury siva சொன்னது…

//ஜோதியில் கலந்துடலாம்//

ஆஹா.
ஆஹா
அண்ணாமலையான் ஜோதி
'அடுத்த வாரம்
அவசியம் கலக்கணும்
இல்ல..கலந்துக்கணும் .

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

அவசியம் கலந்துக்குறோம்... கலக்குறோம் பாஸ்....