ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சிவலிங்க வடிவத்தில் ஷூ பாலிஷ் குப்பி



அதிர்ச்சியாக இருந்தது... இன்று மாலை  ஒரு தெலுங்கு சானலில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாகக்  கண்ட போது.

KIWI  ஷூ பாலீஷ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய பாலீஷ்  குப்பி அச்சு அசலாக ஒரு சிவ லிங்க வடிவத்தில்.. இந்த  வெளியீடு குறித்து காரசார விவாதமும் கருத்துக் கேட்டலும் மஹா டி.வி.யில் காட்டப் பட்டது.

 குப்பியின் மேல் மூடி, லிங்கப் பகுதி போன்று சற்று தட்டையாக விபூதிப் பூச்சு போன்ற மூன்று குறுக்கு கோடுகளுடனும், அதனைத் திறக்கும் 
பிடியானது நீர்த்  தாரை போலவும், கீழ் பகுதி ஆவுடையார் போலவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மூடியைத் திறந்து,அடிபகுதியில் பதிக்கப் பெற்ற, பாலீஷில் ஊறிய உருளையான ஸ்பான்ஜை நேராகக்  காலணிக்குப்  போட வேண்டியதுதான்.

கோடானு கோடி இந்து மக்களின் வழிபாட்டுச்  சின்னத்தை இந்தவிதம் 
அவமதிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஒரு மிகப் பெரிய நிறுவனம் இத்தகைய வடிவத்தில் ஷூ பாலீஷ் அமைத்தது தற்செயலாக நேர்ந்ததாக நினைக்க இயலவில்லை.

யாருக்குமே மற்றொரு மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவு படுத்த எந்த உரிமையும்  இல்லை. என்ன ஒரு தரம் கேட்ட செயல்? இத்தகு செயல்பாடுகள் மேலும் மேலும் சகிப்பின்மையைக் கூட்டி பிரச்சினைகளையும் வன்முறையையும் வளர விட்டு விடாதா?

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்??

இத்தகு வடிவமைப்புக்கான  கீழான எண்ணம் உதித்த  அந்த கம்பெனி ஆசாமியை அந்த சிவனோ அல்லது அவன் நம்பிக்கை சார்ந்த கடவுளரோ மன்னிக்கட்டும்.

எங்க தென்னார்க்காடு ஜில்லாவில் ஒரு சொலவடை உண்டு.

நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா ... சிவலிங்கம்னு தெரியுமான்னு

உம்மாச்சி.. எல்லோர்க்கும் நல்லா புத்திய குடு!


2 comments:

பெயரில்லா சொன்னது…

ஷூ பாலிஷ் குப்பியை எல்லாம் எப்படி வணங்குவது... ச்சீ... ஒரு வரைமுறை வேண்டாம்... சரியான முட்டாள்கள் இந்த 'கிவி'காரர்கள். சூ பாலிஷ் குப்பியை சிவா லிங்கமாய் கருத - கும்பிட மனம் மறுக்கிறது... 'கிவி'காரர்கள் எண்ணத்தில் விழுந்தது மண்...

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.