பக்கங்கள்

புதன், பிப்ரவரி 09, 2011

லொள்ளப் பாரு! எகத்தாளத்தப் பாரு!!


அன்பு நண்பர் மூவார் முத்து (ஆர்.ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்னொரு இலக்கிய டிட்பிட் .. இது கூட பிரபலமானது தான்.அ
இரண்டு புலவர்கள் சேர்ந்து பக்கத்து ஊருக்கு நடந்தே போனாங்களாம். ஏழை புலவர்கள் காலில் செருப்பேது? இலக்கிய சர்ச்சை செய்துகொண்டே போனார்கள்.


திடீரென்று ஒரு புலவர், ஐந்து தலை நாகமொன்று என் காலில் குத்தியதே!. என் செய்கேன்?" என்றார். 


அதற்கு மற்ற புலவர் சொன்ன மறுமொழி என்ன தெரியுமா?


"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய்


எமகாதகர்கள் இருவரும்.


முதல் புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது.  நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து முள்முனைகள் இருப்பதால்,  ஐந்து தலை நாகம் காலில் தீண்டியதாய் புதிர் போட்டார்.


அடுத்தவர் சொன்ன சிலேடை வரிகளுக்கு விளக்கம் இதுதான்:


பத்துரதன் =  தசரதன் (தச எனில் பத்து )
புத்திரனின் = தசரதனின் புத்திரனாகிய இராமனின்
மித்திரனின் = இராமனின் மித்திரனாகிய சுக்ரீவனின்
                             (மித்திரன் என்றால்  நண்பன்)
சத்துருவின் = சுக்ரீவனின் சத்துருவாகிய வாலியின் 
                                (சத்துரு என்றால் எதிரி)


பத்தினியின் = வாலியின் பத்தினியாகிய தாரையின்
                             (பத்தினி என்றால் மனைவி )
காலெடுத்து= தாரை எனும் பதத்தின் காலாகிய (ா)வை
                               எடுத்தால் தரை  ஆகும்
தேய் = தரையில்(காலைத்) தேய் .  


 அதாவது முள் குத்தின காலை தரையில் தேய். சரியாகிவிடும் என்பதே அவர்சொன்ன மறுமொழியின் பொருளாகும்.


லொள்ளப் பாரு! ஏகத்தாளத்தப் பாரு!

61 கருத்துகள்:

  1. நேற்று அருண் சார் ப்லாக் ல இந்த விடுகதை வந்து இருந்துச்சு... எனக்கு பிடித்த விடுகதைகளில், இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  2. அதை விடுங்க.. நீங்களும் ஒரு புரட்டு புரட்டியிருக்கீங்களே? தாரையோட காலை மட்டும் எப்படி தனியா எடுத்தீங்க? (RVS இதைப் படிச்சுட்டு வேறே ஏதாவது நெனச்சுறப் போறாரு.. நான் சொல்றது தாரை என்கிற வார்த்தையோட கால்)
    கூகில் தச்சடிச்சுப் பாக்கறேன், வரலியே?

    பதிலளிநீக்கு
  3. இந்தப் புலவருங்களுக்கெல்லாம் ஆணி அடிக்க வேண்டிய அவசியமே இல்லாம இருந்துச்சுன்னு புரியுது. 'பசிக்குது சோறு போடு'ன்றதைக் கூட புதிராத்தான் சொல்லுவாங்களோ?

    பதிலளிநீக்கு
  4. //பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
    பத்தினியின் காலை எடுத்துத் தேய்”//

    இந்தப் பாட்டு..புதிர் பாட்டோடு நல்ல ஒலிநயத்தோடும் இருக்கிறது...நீங்கள் பதம் பிரித்து விளக்கியது அருமையாக இருந்தது

    பதிலளிநீக்கு
  5. //லொள்ளப் பாரு! ஏகத்தாளத்தப் பாரு! // எங்கூரு சைடுல சோலி பார்த்திருக்கிங்கன்னு நல்லாவே தெரியுதுங்க சாமி....

    பதிலளிநீக்கு
  6. அப்பாஜி! தாரையோட காலை அண்ணன் எடுத்திருந்தால் தலை தனியாகப் போயிருக்கும். (வாலி ஸ்ட்ராங்ன்னு சொன்னேன்!!)
    புலவர்களின் லொள்ளுகளுக்கு பஞ்சமே இல்லை!
    இதுபோல இலக்கிய சர்ச்சைகளை தொடருங்கள்! அற்புதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. இது நான் கேட்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிக நல்ல புதிர் - மற்றும் அதற்கான விளக்கம். தமிழில் இது போன்ற பல இருக்கிறது என நினைக்கிறேன். அவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நான் ஸ்கூல்ல படிச்ச பாட்டுதான்! இன்னும் நல்லா ஞாபகமிருக்கிற ஒன்னு!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10/2/11 2:03 PM

    நல்லாயிருக்கு மோகன் சார்! அப்பப்போ இது மாதிரி போடுங்க! :)

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் சார். புலவர்களுக்கு லொள்ளும் ,எகத்தாளமும் ஜாஸ்தி தான். நம்மூர் பாஷையில கரெக்டா சொல்லியிருக்கீங்க. முள் குத்தினதால் நமக்கு ஒரு பாட்டு கிடைச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  12. நல்லாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  13. ha ha! sooper! :)

    ithai en ammavukkum padiththuk kaanbiththen... avalum ithai kelvip pattiruppathaakak koorinaal. aanaal ninaivil illaiyaam.

    enakku mika mika pidiththathu! :)

    chiriya vayathil, kathai kettu thollai seiyum pothu, 'dravida naattuk kathaikal', 'chozhadesa kathaikal' endrellaam oru sila puththakangalilirunthu kathaikal padiththu enakku purintha mozhiyil solluvaal, amma. anthak kathaikalil ithu pola puthir paadalgal naduve oriru idangalil vanthu pogum. enakku antha praayaththaiyum, naan appothu kettu rasiththa antha kathaikalaiyum ninaivu paduththi vittathu, intha pathivu! :)

    thanks!

    பதிலளிநீக்கு
  14. //இந்தப் புலவருங்களுக்கெல்லாம் ஆணி அடிக்க வேண்டிய அவசியமே இல்லாம இருந்துச்சுன்னு புரியுது. 'பசிக்குது சோறு போடு'ன்றதைக் கூட புதிராத்தான் சொல்லுவாங்களோ? //
    புலவரே கரெக்ட்டா சொன்னீங்க!!! எழுதின புலவருக்கு கேட்குதா? பாலைவனப் புலவருக்கும் சேர்த்து தான் கேட்கறேன்.
    நான்... நான்... புலவர் இல்லை.. நீர்..நீர்.. புலவர்... நான் தருமி... திருவிளையாடல் தருமி... மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா படிச்சு காமிச்சு காசு பார்த்து வயத்தை கழுவிப்பேன்!!! ;-) ;-) ;-) ;-) ;-)))))))))))))))!!!;-)))))))))

    பதிலளிநீக்கு
  15. ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், தாங்கள் அதை அனைவருக்கும் புரியும் வண்ணம் புட்டுப்புட்டு வைத்து தகுந்த விளக்கங்களும் கொடுத்தது அருமை தான். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இதை உங்கள் வாயால் கேட்கும் சுகமே தனி அண்ணா

    பதிலளிநீக்கு
  17. தங்கராசு நாகேந்திரன்! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  18. நன்றி சரவணன் சார்! இன்னமும் கூட பூட்டடலாம். உங்கள் அன்புக்கு வந்தனம்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி சரவணன் சார்! இன்னமும் கூட இப்படி பதிவுகள் போடுவோம். உங்கள் அன்புக்கு வந்தனம்

    பதிலளிநீக்கு
  20. சித்ரா! வாங்க வாங்க. நீங்க வந்தாதான் வலையே களை கட்டுது சகோதரி!

    பதிலளிநீக்கு
  21. நன்றி பிரகாஷ்! அடிக்கடி வாங்க!

    பதிலளிநீக்கு
  22. பிரபாகரன் ! உன் ஆஹாவுக்காகவே இப்படி நூறு பதிவுகள் போடலாம் தம்பி!

    பதிலளிநீக்கு
  23. இந்தக் கால் மேட்டருல்லாம் சொந்த விஷயங்க..
    ஒருத்தன் பானுமதின்னு பேர்கொண்ட தன் பொண்டாட்டிக்கு கடிதம் எழுதினானாம். விலாசம் எழுதறப்போ "பனுமாதி'ன்னு தப்பா எழுதிட்டானாம். பக்கத்துல இருந்த ஆர்.வீ.எஸ் "ஏம்பா 'ப'பக்கத்துல போடுற காலை,'ம'வுக்கு பக்கத்துல போடறேன்னு கேட்டாராம்.
    அதுக்கு அவன் பானுமதி ஏன் பொண்டாட்டி.. காலை எங்க வேணும்னாலும்....ன்னானாம்.
    OVER TO R.V.S

    பதிலளிநீக்கு
  24. APPAADHURAI SAAR! உங்களுக்கும் ஆணி வந்துடுச்சா? நல்லது. உண்மைங்க. நமக்கும் இவ்ளோ நேரம் இருந்தா பூந்து வெல்லான்றுவோமோ என்னவோ? சரியா சொன்னீங்க.
    இந்த மாதிரி வார்த்தை ஜாலம் தமிழ்ல ரொம்ப இருக்கு. டபுள் மீநிங்ல கபடி ஆடியிருக்காங்க. சென்சார்ல மாட்டிக்கும்!

    பதிலளிநீக்கு
  25. பத்மநாபன்! நீங்க சொன்னமாதிரி அழகான ஒலிநயம் இந்த வரிகளில்.

    கோவைத் தமிழுக்கு ஈடு ஏதுங்க?

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஆர்.வீ.எஸ்.! இந்தக் கால் எடுக்குற சமாச்சாரம் எனக்கு சரியா பிடிபடல்லை. அப்பாதுரையும் விடுறாப்பல இல்லை. உங்க எரியாவாச்சே! வாங்க! காலுக்கு கைகுடுங்க பிரதர்!

    பதிலளிநீக்கு
  27. வெ.நா ! நீங்க சொன்னாப்பல நிறைய இருக்கு. ஒரு சேர தொகுக்க முயற்சி செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  28. ஸ்கூல்ல படிக்காம விட்டவங்களை நானும் விடராப்பல இல்லை எஸ்.கே!

    பதிலளிநீக்கு
  29. நன்றி பாலா! 'வேலன்டின்ஸ் டே'க்கு விசேஷம் உண்டா செல்லம்?

    பதிலளிநீக்கு
  30. நன்றி கோபி ராமமூர்த்தி சார்!

    பதிலளிநீக்கு
  31. ஆமாங்க! கோ.டு டி! முள்ளுக்கு கல்லுக்கு பாட்டு ! தமிழ் கடல்ங்க!

    பதிலளிநீக்கு
  32. நன்றி மாதங்கி! உங்களுக்கு கதை கேட்க பிடிக்கும்.. எனக்கு கதை சொல்ல பிடிக்கும்.. பின்ன என்ன? சின்ன சின்னதாய் கதைகளை விவாதிப்போம்.

    பதிலளிநீக்கு
  33. பத்மனாபான்! ஆர்.வீ.எஸ் கெளம்பிட்டாருங்க.. அடங்கமாட்டார்னு தோணுது. ரத்தம் பாக்காம விடமாட்டாரே !

    பதிலளிநீக்கு
  34. வை.கோ! சார்.. உற்சாகப் படுத்தும் கலையை நீங்கள் எங்களுக்கெல்லாம் அவசியம் சொல்லித் தரணும்.
    மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  35. அன்பு சிவா! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  36. ஆர்.வி. எஸ் விதுஷகப்புலவருக்கு ``ஆணி பிடுங்குவது`` எங்கிருந்து வந்தது எனும் உண்மையை சொன்னால் அடங்கிவிடுவார்..
    புலவர் தங்கள் கவிக் கடமையில் ஒலையில் ஆணி கொண்டு எழுதும்பொழுது அவ்வப்பொழுது ஒலையில் ஆணி சிக்கிக்கொள்ளும் அதை பிடுங்கி பிடுங்கி கடமை ஆற்றுவார்கள்...
    இப்படி எழுதிய கவிகளை கொண்டுவரும் தலைமைப்புலவரை பகடி செய்கிறிரோ... இப்பொழுது கையை தேய்ச்சுக் கொண்டிருக்கிறார் .உங்களுக்கு பகடிக்கவி தயார் செய்ய..
    ( த. பு... பத்து என்று ஆரம்பித்த ஒலிநயமான கவிக்காக பத்துக் காசு அதிகமாகவே கூவிவிட்டேன்... கூடவே ஒலை ஒலை என காசோலையும் நினைவு படுத்திவிட்டேன் )

    பதிலளிநீக்கு
  37. அம்பாஸிடர் பல்லவாவில் நம் எல்லாருக்கும் ஒரு பார்ட்டி ஆர்.வி.எஸ் கொடுக்க, பிரதியாக நாம் எல்லாருமாக சேர்ந்து ஆர்.வி.எஸ்.க்கு அ.ஆ.பு.அ.சி.ஆர்.வி.எஸ் என்று
    பட்டம் கொடுக்கலாமா? அதாவது ‘அலட்டிக் கொள்ளாமல் ஆணி புடிங்கும் அபூர்வ சிகாமணி ஆர்.வி.எஸ் என்று அர்த்தம்!

    பதிலளிநீக்கு
  38. வந்தேன்!!!
    அப்படியா பத்துஜி!! இப்படித்தான் ஆணி பிடுங்கும் புலவர் ஒருவர்... காலில் ஆணி என்று சொன்ன பக்கத்து வீட்டு பைங்கிளியிடம் "காட்டுங்க பிடிங்கிடுறேன்" அப்படின்னாராம்... அப்புறமா அவருக்கு கை கால்ல ஆணி அடிச்சு முச்சந்தியில நிக்க வச்சது வேற கதை...கட்டிப்போட்டும் கவிதை சொல்ல மறக்கலை அந்த புலவர்.

    "மருதாணிக் காலில் திருகாணி குத்திவிட்டது என்றெண்ணி
    ஆனியில் சமைந்தவள் மேனி வருந்துகிறாளே என்று
    எழுத்தாணி பிடித்த கரம் நீட்டியவனை...
    சொல்லாணியால் அடித்தால் பரவாயில்லை...
    சாணியால் அறைந்தாலும் இகழேன்......
    களவாணி உன்னை.. என்று கர்ஜித்து
    துருப்பிடித்த ஆணியால்....துளைக்கிரார்களே!!"
    (மடக்கி எழுதியிருக்கேன்.... அடங் கொப்புரானே! நிச்சயமா கவிதைதான்... )
    சீத்தலை சாத்தனார் தப்பா எழுதினா தானே தன் கையால ஆணியால தலையில் குத்திப்பாரா! இல்லைனா பக்கத்துல உட்கார்ந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்த அவரோட வீட்டு அம்மணி நறுக்குன்னு குத்துவாங்களா? எதால் குத்துவார்கள் எழுத்தாணியா? திருகாணியா?

    அவையில் கால் ஊன்றி இடுப்பில் ஆணி சொருகியிருக்கும் குழுமியிருக்கும் புலவர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.!!

    மிச்சம் மீதி புலவர்களின் பொழிப்புரைகளுக்கு பின்னர்!!! ;-)

    பதிலளிநீக்கு
  39. //அலட்டிக் கொள்ளாமல் ஆணி புடிங்கும் அபூர்வ சிகாமணி ஆர்.வி.எஸ்//

    மூவர் முத்தே! பட்டம் ரொம்ப தக்குனூண்டா இருக்கே! இன்னும் கொஞ்சம் பெரிசா.. விரிவா.. ;-)

    பதிலளிநீக்கு
  40. ’அலட்டிக் கொள்ளாமல் ஆயிரம் ஆணிகளை அற்புதமாய் புடுங்கும் அபூர்வ சிகாமணி’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
    தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள்.
    படிக்கிற காலத்தில் வாத்தியார்களுக்கு பட்ட பேர் வைத்த பழக்கம் தொடர்ந்து விட்டது..காலேஜில் படிக்கும் போது எங்களுக்கு வாய்த்த english tutor சற்று உசரமான ஆசாமி. நண்பர்கள் ஏகோபித்தமாக long fellow என்று சொல்ல, அது கொஞ்சம் slang ஆக இருக்கு. y axis என்று நான் வைக்க அனைவரின் பாராட்டையும் பெற்றது!ரொம்ப நாளா அவரை எல்லாருக்கும் y axis என்றால் தான் தெரியும். சாரி ஆர்.வி.எஸ்.!

    பதிலளிநீக்கு
  41. பனுமாதி ஜோக் அட்டகாசம் போங்க!

    காலுக்குக் கைகொடுப்பதா? கையெடுக்கக் காலும் காலெடுக்கக் கையும் இரண்டுமே தேவை தானே மோகன்ஜி ;-) பக்கத்து வீட்டுப் பைங்கிளியை மறக்காமல் பின்னூட்டத்தில் கொண்டு வரும் RVSக்கு தெரியாத காலுக்குக் கை கொடுக்கும் கபடியா.. க்க்ம்ம்ம்...

    long fellow கமென்ட் அருமை ராமமூர்த்தி சார்! கொஞ்சம் நகாசான long fellow அழைப்புகளையும் அறிவேன். IT வெளிச்சேவை பரவி விஷயம் புரிந்த நாட்களுக்கு முன்... இந்தியர்களை long fellow என்று அமெரிக்கர்கள் ஆசையோடும் பொறாமையோடும் அழைத்த நாட்களை நினைவு கூர்கிறேன். ய்ய்ய்ய்ய்.

    பதிலளிநீக்கு
  42. எல்லோரும் கையில ஆணியோடு நிக்கிறதப் பாத்தா தலையில ஹெல்மெட்டோடு தான் வரணும் போலருக்கு இந்தப் பக்கம்

    பதிலளிநீக்கு
  43. இலக்கியத்தை மிக்க ரசனையுடன் ரசிக்க வைக்கிறீர்கள் மிக்க நன்றி...


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    பதிலளிநீக்கு
  44. Adadaa! nallaa kummi kalaikattura neraththil Muumbaila aani pidunga maattikittene paddhuji! paravaayillai Maatangi stylla pinnoottam. ekchoose me villaivaal!

    tharumikku kavithai thayaar! sevvaaik kizhamaithaan thaimizh fontla padhiven.

    moovaarmuththin pattamum avarin Longfellowvum arumai.

    Appaaji! I have so much to say..

    Siva !Helmet thaliyaa! sarithaan!
    ma.thi.sudha! nandri!

    Adu enna thaajmahalin nayaki thiloththami?

    பதிலளிநீக்கு
  45. அது தாஜ்மகால் பற்றிய ஒரு வரலாற்று கதை சகோதரம்...

    பதிலளிநீக்கு
  46. பத்துஜி! வேர் ஆர் யு?
    //கையெடுக்கக் காலும் காலெடுக்கக் கையும் இரண்டுமே தேவை தானே மோகன்ஜி ;-)//
    அப்பாஜி... அமர்க்களம்... ;-) பக்கத்து வீட்டு பைங்கிளின்னு உங்களைப் போன்ற ஒரு புலவன் சொன்னான்... நான் உளறன்..... புலவன் இல்லை..;-) ;-) ;-)

    பதிலளிநீக்கு
  47. அட்டகாசம்... இது காலேஜ் நாட்கள்ல கேட்டு இருக்கேன்... ஆனா இவ்ளோ விளக்கமா இல்லை... நன்றி... தமிழில் மட்டும் தான் இத்தனை சிறப்பாய் இருக்க சாத்தியம் என நினைக்கிறேன்... (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு... எனக்கு என் தமிழ் அழகே...:)

    இது போல வேற ஏதும் இருந்தால் போடுங்களேன்... நன்றி

    பதிலளிநீக்கு
  48. ஆர்.வீ.எஸ்! பறந்து பறந்து ஆணி புடுங்க வேண்டி போச்சே! அப்பாஜி எப்பிடி மாறு கால் மாறு கை வாங்கிட்டார் பாத்தீங்களா?

    பக்கத்துவீட்டு பைங்கிளி பற்றி ஒரு பதிவு நான் போடவா உங்க அனுமதியுடன் ??

    பதிலளிநீக்கு
  49. வாங்க அப்பாவி தங்கமணி!கண்டிப்பாய் இப்படி சில பதிவுகள் போடுகிறேன். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி!

    //(காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு... எனக்கு என் தமிழ் அழகே...:)//
    அதென்ன அப்பிடி சொல்லிட்டீங்க?தமிழ் காக்கை குஞ்சா? அது கலாப மயில்ங்க!
    ஏதோ கொஞ்சம் இலக்கியமே கொண்ட 'சம்'மொழி இல்லீங்க தமிழ்! அது செம்மொழி! செம்மொழி!!

    பதிலளிநீக்கு
  50. நீங்க இப்படி சொன்னவுடன் எனக்கு தலைகால் புரியலை மோகன்ஜி!
    ப.வீ.பை பற்றி உங்க ப.வீ.பை பற்றி நிச்சயமா பதிவா போடுங்க.. அங்க வந்து கும்மி அடிக்கறோம்!! ;-)

    பதிலளிநீக்கு
  51. ஆர் .வி .எஸ் .... இங்கு வலையின் வேகம் மிக குறைவாக இருப்பதால் , சில வலை பூக்கள் திறக்க தாமதம் ஆகிறது ... வானவில்லும் தன் நிறம் காட்ட நேரம் எடுப்பதால் வந்து வந்து திரும்பினேன் ...
    உங்களின் ....ஆணி , கோணி , நாணி....ணிக்களை ரசித்தேன் ...

    ப.வி ,பை பதிவை பருவ மச்சானிடமிரிந்து ஆவலோடு ......கும்மிருவோம் ...

    பதிலளிநீக்கு
  52. ஆர்.வீ.எஸ் ! நெஜம்மா பதியத்தான் போறேன்...

    "அது ஒரு நிலாக் காலம்.. மப்பும் மந்தாரமுமாய்..."

    மற்றவற்றை வலைத்திரையில் விரைவில் காண்க.. பப்பர பப்பர பப்பர பைங்...

    பதிலளிநீக்கு
  53. பத்மநாபன்! பைங்கிளி பறந்து வரப போகிறது.. கவிஞர் ஆர்.வீ.எஸ் லேசுபட்ட ஆளில்லைங்க.எதைத் தொட்டாலும் தன் முத்திரையை பதிக்காம விட மாட்டார்.

    பதிலளிநீக்கு
  54. இந்த காலத்துல இப்படி சொன்னா முள் குத்தின வலியை விட புரியாத வலி ஜாஸ்தி ஆயிரும்..!
    தமிழில் விளையாடின புலவர்கள் அந்த காலம். தமிழைச் சொல்லி விளையாடும் காலம் இப்போது..

    பதிலளிநீக்கு
  55. //முள் குத்தின வலியை விட புரியாத வலி ஜாஸ்தி ஆயிரும்..!//

    அழகாய்ச் சொன்னீர்கள் ரிஷபன்..தொகுப்பாளினிகளிடம் தமிழ், மீன் முள்ளாய்த் தொண்டையில் அல்லவா மாட்டிக் கொள்கிறது?!

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..