ஞாயிறு, ஜூலை 24, 2011

பொறுப்பு




சாலையில் பரவிக்கிடக்குது
               எண்ணையோ டீசலோ....
முற்றுமாய் உறிஞ்சப் படாமல்
               மினுமினுக்கிறது.

இரவில் ஓரங்கட்டிய ஏதோவோர் லாரியின்
                     விடாய்ச் சிந்தல்.
ரோட்டோர டீக்கடைக்காரன் இதைப்
               பார்த்தானோ தெரியவில்லை.

இங்கிருந்து பார்க்கையில் ,எண்ணைப் பரவல்
                       இலங்கையின் வரைபடம் போல்

சாலையின் வாகில் பார்த்திருந்தேனானால்
                ஒருபக்கம் பிதுங்கிய பூதகியின் முலைபோல்
எனக்கு தோன்றியிருக்கக் கூடும்.

உங்களுக்கு மலைச் சிகரமாயோ
                     எருமையின் குதமாயோ தோன்றியிருக்கலாம்.

எல்லாம் அவரவர் பார்வையில்....

சாம்பல் சாலையில் கறுப்புத் தேமலாய்
     இந்த எண்ணை ஒழுக்கு யாரைப் பலிவாங்கும்?

அதன்மேல் விரையும் எந்த இருசக்கர வாகனமோ கவிழலாம்.

வேகத்தில் விருப்பு கொண்ட விடலையோ

முன்னிரு குழந்தை, பின்னே பெரும் மனைவி
     எனக் கடக்கும் சம்சாரியோ விழுந்து அடிபடக் கூடும்.

சிராய்ப்பாயோ, ஏன் இறப்பாயோ கூட முடியலாம்.

எல்லாம் வேகத்துக்கு தக்கபடி ...

இதுவரை அங்கு யாரும் கடக்கவில்லை..

எனக்கும்

காத்திருந்த பேருந்து வந்து விட்டது.



(படத்திற்கு நன்றி-Google Images)

42 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

படமும் தலைப்பும் கவிதையும்
மிக அழகாகப் பொருந்திப் போகிறது
கவிதையில் வார்த்தைப் பிரயோகம்
மிக மிக அருமை என்றாலும்
எனக்கும் என்பதில் இருக்கும் அந்த
" ம்" என்னை மிகவும் கவர்ந்தது
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பத்மநாபன் சொன்னது…

காத்திருந்ததில் பார்த்ததை வைத்து, வார்த்தைகளால் வார்த்த கவிதை....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வானத்தில் வானவில் அழகு.
சாலையில் அதுவே ஆபத்து..

எச்சரிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அப்பாதுரை சொன்னது…

உங்க கவிதையைப் படிச்சு பின்னூட்டம் போட வந்தா இராராவின் ரெண்டு வரி அடிச்சுப் போட்டுருச்சு. மறுபடி வரேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

வண்டிப் பாதையில் சிந்திடும் டீசலால்..
வாழ்நாள் பாதை முடிந்திடும் ஈசலாய்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக மிக அருமை.

மோகன்ஜி சொன்னது…

ரமணி சார்! உங்கள் ரசனைக்கு நன்றி! கவிதையின் தலைப்பு 'பொறுப்பு'
கவிதையின் விவரணத்தில் உள்ள விட்டேத்திதனத்தை அந்த 'எனக்கும்' உணர்த்துவதாய் அந்தப் பதத்தைப் போட்டிருந்தேன். சரியாகப் பிடித்து விட்டீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன். இந்த வாரம் வலைச்சரத்தில் நான் தான் ஆசிரியராம். இயன்றதை எழுதுவேன்.ஏற்றுக் கொள்க.

மோகன்ஜி சொன்னது…

/வானத்தில் வானவில் அழகு.
சாலையில் அதுவே ஆபத்து../

கலக்குறீங்க மேடம்.. நன்றி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! கண்டிப்பா வாங்க.

மோகன்ஜி சொன்னது…

மூவார்!
/வண்டிப் பாதையில் சிந்திடும் டீசலால்..
வாழ்நாள் பாதை முடிந்திடும் ஈசலாய்!/

வழுக்கிக்கிட்டு வருது தலைவரே கவிதை உங்களுக்கு..

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்!

எல் கே சொன்னது…

நலமா ஜி ?? அதிகம் வலை பக்கம் வரதில்லை. இத்துனூண்டு எண்ணை சிதறல் எங்களுக்கு ஒரு கவிதையை கொடுத்து இருக்கு அதற்காக அதற்க்கு நன்றி

RVS சொன்னது…

ரொம்ப நாளாச்சு..
இந்த எண்ணை என்னைக் கூட வழுக்கி விட்டிருக்கிறது. ஆயுசு கெட்டி. பிழைச்சுக்கிட்டேன். வழக்கம் போல வார்த்தைகள் ஜாலம். :-)

ரோடில் கசிந்த எண்ணைக்கு என்னையும் பிடிக்கும் எமனையும் பிடிக்கும்.

குணசேகரன்... சொன்னது…

உங்களுக்கு மலைச் சிகரமாயோ
எருமையின் குதமாயோ தோன்றியிருக்கலாம்.

எல்லாம் அவரவர் பார்வையில்....right

மோகன்ஜி சொன்னது…

வாங்க கார்த்திக்! நலமே. என் பணியிடம் ஊர்க்கொடிக்கு மாறிவிட்டதால்,காலை மற்றும் மாலையில் பயண நேரம் மட்டுமே மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் ஆகிவிட்டது. நேரம் அருகிவிட்டது.. ஏதேனும் செய்தாக வேண்டும்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ் ! கவனமாய்ப் போங்க! அதான் இப்போ சிவப்பி வந்தாச்சுல்ல?

மோகன்ஜி சொன்னது…

வாங்க குணசேகரன்! நன்றிஜி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரோடில் கசிந்த எண்ணைக்கு யாரைப் பிடிக்கிறதோ இல்லையோ, அந்த எண்ணையை எமனுக்குப் பிடிக்கும் - அவனது வேலையில் துணை போவதால்....

பார்வையில் இருக்குது வித்தியாசம்... உண்மை தான். எல்லோரும் பார்த்தபடியே இருந்து விடுகிறோம் - யாராவது விழும் வரை.

நல்ல கவிதை ஜி! வலைச்சர ஆசிரியர் பணியில் சிறப்பாய் செயல்பட வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

//"உங்களுக்கு மலைச் சிகரமாயோ
எருமையின் குதமாயோ தோன்றியிருக்கலாம்.

எல்லாம் அவரவர் பார்வையில்....."//

உங்களுக்கு இதை ஒரு பதிவாய்ப் போட்டு எச்சரிக்கை செய்யத் தோன்றியுள்ளது...!

பாராட்டுகள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு வெங்கட் !
//பார்வையில் இருக்குது வித்தியாசம்... உண்மை தான். எல்லோரும் பார்த்தபடியே இருந்து விடுகிறோம் - யாராவது விழும் வரை//

இதைத் தான் 'பொறுப்பு'டன் கவிதை படித்தல் என்பது! நன்றி வெங்கட்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான கவிதை.

அவரவர் பார்வையில்
ஆயிரம் தோன்றலாம்.

ஆனாலும் நீங்கள் கண்ட
பூதனைக் காட்சி
உங்கள் சாதனை!

பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீராம்! என் எச்சரிக்கை சாலையில் கவனம் மட்டும் அன்று.. அப்படிக் கசிந்த எண்ணையால் ஏற்படக் கூடிய ஆபத்தை தவிர்க்க,கண்ணுரும் யாரும் பொறுப்பேற்பதில்லை எனும் ஆதங்கம் கூட.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி வை.கோ சார்!

ஹேமா சொன்னது…

ஒரு சொட்டு எண்ணைச் சிதறில் எண்ணச் சிதறல்.அதுவும் சமூகச் சிந்தனையோடு.அற்புதம் மோகண்ணா.

சிரிப்புத்தான்.இலங்கை கண்டீர்களோ சிதறிய எண்ணெயில்.இதைத்தான்
காட்சிப்பிழை என்றார்களோ !

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஹேமா! அது கொட்டிய எண்ணை. சொட்டல்ல... இதயமுடையவர்கள் கொட்டிய கண்ணீர் இலங்கையாகத்தான் தாயே தெரியும். காட்சிப் பிழையாகலாம்.. கருத்தில் பிழை வரக்கூடாது என்றும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலைசர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Matangi Mawley சொன்னது…

:) R K நாராயண் - music academy ல concert கேட்கும் போது, ஒரு பூனை எங்கேயோ தாவி குதிச்சு ஓடித்தாம். அடுத்த நாள்- அத பத்தி ஒரு கத எழுட்டாராம் அவர். இந்த பூனை குதிச்சத பாத்தவாள்லாம்- "நாமும் தான் பாத்தோம்-- நமக்கு ஒன்னும் தோணலியே"-ன்னு சலிச்சுண்டாளாம்... அத போல-- நீங்களும், எல்லாருமே road ல பாத்துட்டு பாக்காதத போல விடும் ஒரு சின்ன விஷயத்த பத்தி- ரொம்ப அழகா/genuine ஆ எழுதிருக்கேள், sir!
சின்ன வயசில (இப்போவும் கூட...) மேகத்த பாத்து முயல், தென்னை மரம் -கண்டுபிடிப்பது போன்ற அழகான விஷயத்தையும்- இப்படி ஒரு உன்னதமான சமுதாய அக்கறை உள்ள ஒரு விஷயத்தை பத்தி எழுதின கவிதை கூட கோர்த்து விட்டது- வெகு ஜோர்! ஒரு Classical appeal கொடுத்தது இது- என் பார்வைக்கு...

மோகன்ஜி சொன்னது…

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மாதங்கி! உங்கள் ஆர்.கே . நாராயண் சம்பவத்தை ரசித்தேன். வாழ்க்கையின் ஸ்வாரஸ்யமோ, முழுமையோ சின்னசின்ன சம்பவங்களில் தானே இருக்கிறது.பாராட்டுக்கு நன்றி !

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோபி ராமமூர்த்தி சார்!

சிவகுமாரன் சொன்னது…

என் வலைப்பக்கத்தில் இப்படி எழுதி வைத்திருப்பேன் என்னைப் பற்றி
"பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் "
- என் அண்ணாவுக்குத் தான் அது பொருந்தும். எல்லோருக்கும் அது ஒரு எண்ணெய் சிதறல். உங்களுக்கோ எண்ணச் சிதறல். கவிஞனின் இயலாமையையும் நாசூக்காய் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்.அநீதிகளைப் பார்த்து கோபம் கொள்ளும் கவிஞன் ( நான்தான் ) அதற்கான தீர்வு சொல்வதோ தீர்க்க முயல்வதோ இல்லை .

அருமை.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சிவா!
அனைவரையும் போலப் பாராமல் வேறொன்றாய்ப் பார்த்தல், சிறியவனவற்றிற்கு கூட கண்ணீர் சிந்துதல், பெரிய பிரச்னைகளையோ துச்சமாய் ஒதுக்குதல் எல்லாம் கவிஞர்களின் இலக்கணம் என்பார்கள். இவையெல்லாம் 'மட்டுமே' இருப்பதொன்றாலேயே கவிஞனாகிவிடுவேன் போலிருக்கிறதே!

அப்பாதுரை சொன்னது…

கவிதை ஒரு வகையில் ஹென்ரிப் பாணிக் கதை என்று தோன்றுகிறது. யார் முதல் பலி? அல்லது வற்றிக் காய்ந்து போகுமா? பேருந்து போனபின்னும் தொடரும் எண்ணம்.

சுவாரசியம். சாதாரண நிகழ்வு, அசாதாரண பார்வை?

ADHI VENKAT சொன்னது…

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

எண்ணை சிதறல் கவிதையில் சமூக அக்கறை தெரிகிறது.

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

meenakshi சொன்னது…

மிகவும் பொறுப்பான கவிதை.
அப்பாதுரை சொன்னதேதான்
சாதாரண நிகழ்வு, அசாதாரண பார்வை!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! மிக அழகாகச் சொன்னீர்கள்.
யார் பலி என்பது மனிதனின் கிரைசிஸ் மனசில் எட்டிப்பார்க்கும் வக்கிர எதிர்பார்ப்பு.

வற்றிக் காய வேண்டும் என்பது நல்லமனக் கூறுகள் செய்யும் பிரார்த்தனை.

பேருந்து போனபின்னும் பின் தொடரும் மனம் ஒரு கவிஞனின் நெகிழ்வும் ஈரமும். சரி தானா?

//சாதாரண நிகழ்வு, அசாதாரண பார்வை //
எவ்வளவு அழகாய் யோசிக்கிறீர்கள்?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதி! தலைவர் சுகம் தானா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதி! தலைவர் சுகம் தானா?

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி மீனாக்ஷி மேடம்! அப்பாதுரையின் கருத்தே ஒரு சின்னக் கவிதையாய்...

மோ.சி. பாலன் சொன்னது…

சாலை ஓரத்திலிருந்து கொஞ்சம் மண்ணை வாரிப் போட்டு கையை உதறிவிட நம் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையின் பொத்தான்கள் விலங்கிட்டுவிடுமோ?