மூன்று நாட்களாய் என்னை விடாமல் இம்சை படுத்தியபடியே இருக்கிறான் பாரதி. திராவிட பாரம்பரியத்து நண்பருடன், பாரதி தாசன் கவிதைகளுக்கும் பாரதியின் கவிதைகளுக்குமான பின்விசை யாதென்ற அலசலில் தான் ஆரம்பித்தது இந்த பாரதி ஸ்மரணை...
உள்ளுக்குள்ளே பாரதியின் வரிகள் அலைஅலையாக எழுந்து மோதிக் கொண்டிருக்கிறன. ஒவ்வொரு பாடலும் எனக்கு அறிமுகமான தருணங்கள், கேட்ட விளக்கங்கள், விவாதங்கள், என யாவும் சுழன்றடித்தபடி இருக்கின்றன.
போதாதிற்கு,நேற்று இரவு என் மகன் என்னுடைய பேரனுக்கு பாரதி வாழக்கையை 'பெட் டைம் ஸ்டோரி'யாக சொல்லிக் கொண்டிருந்தான். இன்று இரவு பாரதி பற்றிய நூறு கேள்விகளுடன் குழந்தை என்னை முற்றுகையிடுவான்....அவனைப் போல் நானிருக்கையில்,என் அம்மா கழுதைக் குட்டியை பாரதி தூக்கிவந்த கதையைச் சொன்னாள். இன்று பேரனுக்கு அதை சொல்லிவிடவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.
இன்று காலை வாக்கிங் வந்தேன். ஹைட்போனில் மகாராஜபுரம் சந்தானத்தைக் கேட்டுக் கொண்டே நடந்தபடி இருக்க, சடுதியில் 'ஆடுவோமே பள்ளுபாடுவோமே' என்று வயலினில் ஒரு பிரளமாய் அதிர ஆரம்பித்தது. எங்கு வந்தது இந்த இடைச்செருகல்?? இன்றும் என்னை விடமாட்டாயா பாரதி??
எங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கின்றது என்று எங்களிடை உதித்தாய் பெரியவனே?
(படம்: நன்றி கூகுள்
முகநூலில் வந்த சில கருத்துக்கள் :
LIKES 31 Venkatagiri Ravichandran and 29 others
Comments
Ramaswami Vaideeswaran Guruswami Arumai
· May 29 at 12:14pm

மோகன் ஜி நன்றி ஞாயிறு சார். நலம் தானே?

Ragavendhiran Seshan ஆஹா Like · May 29 at 12:24pm

மோகன் ஜி நன்றி சேஷன் சார் !
· Sridharan Venkataramana Rao அழகு சார். பாரதிக்கு மயங்காதவர் யார்? எனக்கு இசையில் புலமை இல்லை. ஆயினும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் சங்கீதம் பிடிக்கும். அவருடைய பாரதியின் பாடல்கள் பலவற்றைக் கேட்டு மயங்கி உள்ளேன். ' வெள்ளைக் கமலத்திலே ' என்ற பாடலை அவர் பாடும் அழகே அழகு

மோகன் ஜி நீங்க ரசனைக்கார ஆளு தான். சந்தானம் பாட்டு மனம் வருடும் தென்றல் அல்லவா?
பாரதியின் 'மோகத்தைக் கொன்று விடு' பாடலை சந்தானம் அவர்களின் 'பாவம்' நிறைந்த குரலில் கேட்கவேண்டும். யூடியூபில் கேளுங்கள். இன்று அவர் பாட்டைத் தான் கேட்டபடி இருந்தேன். Random ஆக வயலின் இசையில் (லால்குடி ஜெயராமன்)'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' இடையில் வந்ததையே குறிப்பிட்டேன்.
· May 29 at 2:35pm
Shanthi Ramachandran நேசம் உள்ளவரை நெஞ்சில் நினைத்தீர்கள் போலும்

மோகன் ஜி உணர்வில் உறைந்தவர் அவர் அல்லவா சாந்தி!
Reply · May 29 at 9:12pm
Balasubramanian Mahalingam மோகன் உங்கள் தமிழ் ஆர்வம் கண்டு வியந்தேன். "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம்" என ஒவ்வொரு இந்தியனுக்கும் வெறி ஏற்றியவன் இல்லையா பாரதி. அவனை எப்படி மறக்க முடியும்.
· Reply ·
மோகன் ஜி நன்றிஜி! பாரதி உணர்வின் ஒரு அங்கமாக மாறிப் போனவன். மறத்தல் எங்கனம் சாத்தியம்?!
Janani Manasa Super
· May 30 at 8:02am
Suresh Kumar S வ.ரா. சொல்கிறார். "பாரதியாரிடம் முக்கியமான குணமொன்றைக் கவனித்தேன். பேசினால் பேசிக்கொண்டிருப்பார். பேச்சு ஓய்ந்ததானால், உடனே பாட்டில் பாய்ந்துவிடுவார். மௌனம் அபூர்வம். யார் பக்கத்திலே இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவரிடம் இருக்காது போலிருக்கிறது. நடக்கும்போதும் பாட்டுதான்."
· Reply ·

மோகன் ஜி வாங்க சுரேஷ் குமார்! புதிய செய்தியைத் தந்தீரகள். பேச்சும் பாட்டுமாகவே பாரதி இருந்ததினால் தானோ என்னவோ, அவன் பாட்டே பேச்சாக இருக்கிறோமோ

22 comments:
அங்கேயே ரசித்தேன்.
இறுதி வரி பொட்டில் அறைந்ததைப் போல
ஆம் இங்கு ஏன் பிறந்து தொலைத்தான் ?
அருமையான பாரதி பதிவு.
முகநூலிலும் படித்தேன்.
வாழ்த்துகள் ஜி...
பாரதி எப்போதும் ஈர்ப்புமிக்க இனிமைக்கவிஞன்!
பாரதி...அனைவரையும் ஈர்த்தவர். பகிர்ந்த விதம் அருமை.
பாரதி போற்றுவோம்
இதைப்படித்ததும் பாரதியின் நினைவு நாள் ஒன்றில் நான் எழுதி இருந்த பதிவு நினைவுக்கு வந்தது உங்களை அங்கே பார்க்கவில்லைவிருப்பமிருந்தால் வாசியுங்களேன் சுட்டி கீழே
http://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.html
மீண்டும் ரசித்ததிற்கு நன்றி ஶ்ரீராம்!
ரமணி சார்! நலம் தானா?
வாராது போல் வந்த மாணிக்கம் பாரதி !
இருந்த வரைப் போற்றாத சமூகம்
இறந்த வரை வழியனுப்ப வராத சமூகம்
அடுத்த தலைமுறைக்காய் காத்திருந்தது.
எனினும் என்ன?
தமிழுள்ளவரை பாரதி நிலைப்பான்.
நன்றி மேடம்! வந்தபடி இருங்கள் !
அன்பு டி.டி! நலமா?
உண்மை தனிமரம் ஜி!
மிக்க நன்றி முனைவர் ஐயா!
பாரதி போற்றுவோம் கரந்தையாரே!
'பொன்வீதி ' படித்தீர்களா?
வாங்க GMB சார்! அவசியம் பார்க்கிறேன்
\\\\எங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கின்றது என்று எங்களிடை உதித்தாய் பெரியவனே?/////
சடக்கென்று கண்ணீர் துளிர்த்தது. எதோ ஒரு குற்ற உணர்ச்சி .
நலம் தானே சிவா? என்ன சொல்ல சிவா....
பத்து குழந்தைகளுக்கு,அவர்களுக்கு பத்து பத்து பாரதி பாடல்களை சொல்லித் தர வேண்டும். செய்வோமா?
மகாகவி சுப்ரமண்ய பாரதியின் கவிதை நயத்தில் தோய்ந்து போன உங்களுக்கு , ‘கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா’ என்பது போல, எப்போதுமே எந்த சந்தர்ப்பத்திலும் பாரதி வந்து போவதில் அதிசயம் இல்லை.
பார்க்குமிடமெல்லாம் பாரதி என்று உயர்ந்தெழுந்த யுகக் கவிஞனின் பாரதிவனத்தில், ஒரு சிறு குயிலாய் கூவியிருக்க வாய்த்தது அடியவன் பாக்கியம். நன்றி தமிழ் இளங்கோ சார்!
பாரதியைப் பற்றி யார் என்ன எழுதினாலும் அது என் கண்களுக்குத் தப்புவதில்லை. தங்கள் எழுத்தும் அப்படியே. தான் எதையும் அனுபவிக்காமல், தன் எழுத்தை உலகமே அனுபவிக்கக் கொடுத்துவிட்டு நகர்ந்தவன் பாரதி. எப்படி மறக்கமுடியும்? - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.
கருத்துரையிடுக