ஞாயிறு, ஜூன் 11, 2017

'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்




சொந்தங்களே ! எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியிட சற்றே தாமதமாகி விட்டது. இந்தத் தொகுப்பில் பல கதைகள், எனது 'வானவில் மனிதன்' வலைப்பூவில் வெளிவந்து பரவலான கவனமும் பாராட்டும் பெற்றவை. 

தொகுப்பில் மொத்தம் 21 சிறுகதைகள். 160 பக்கங்கள். கடந்த பல வருடங்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுதப் பட்டவை.

வலைப்பூவில் வெளியான கதைகளுக்கு வந்த சில கருத்துக்களையே 'சிரம் கண்ட அட்சதைகள்' என்று அணிந்துரைக்கு பதிலாக சேர்த்திருக்கிறேன். இவற்றை மீண்டும் கண்ணுறும் போது, கால இயத்திரத்தில் பின்னோக்கி சென்று, அற்றைநாள் உணர்வுகளில் மீண்டும் திளைத்தேன். இந்தக் கதைகள் என்றைக்குமான மானுட மாண்பையும், உணர்வுநிலைகளையும் பேசுவதாய் உணர்கிறேன்.

அக்ஷரா பிரசுரம் வெளியீடாக தரமான காகிதத்தில் நேர்த்தியாக வெளியிட உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. விலை ரூ 125/-

இந்தப் புத்தக விற்பனையில் வரும் தொகை முழுவதையும், ஒரு புனிதமான பணிக்கு அளிக்க உத்தேசம்.

முகவரியை மெசஞ்சரிலோ, என் மின்னஞ்சலிலோ(mohanji.ab@gmail.com)
தெரிவியுங்கள். புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.


இந்தத் தொகுப்புக்கு வந்திருக்கும் விமரிசனங்களும் பாராட்டுகளும் ஊக்கம் அளிக்கின்றன.முகநூலில் வந்த சில விமரிசனங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இவர்கள் யாவருக்கும் என் அன்பும் நன்றியும் உரியது.



இனி விமரிசனங்கள்
ரிஷபன் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/rishaban.srinivasan/posts/1695009223847119

கரந்தை ஜெயக்குமார் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=464689763878921&id=100010137039512

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=465397750474789&id=100010137039512

தோழர் காஸ்யபன் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=465830343764863&id=100010137039512

ஶ்ரீராம் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=460054264342471&id=100010137039512

முனைவர் ஹரணி அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=467870340227530&id=100010137039512

எட்டு பதிவுகளாக இந்தப் புத்தகத்தை விமரிசித்து வரும் பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனின் முயற்சி வண்ணமயமானது. கதைகளின் சாரத்தை சொல்லிச் செல்லும் நடையும், பொருத்தமான படங்களும் மனம் கவர்பவை. எனக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் சகோதரரே!

கோபு சாரின் விமரிசனங்களின் சுட்டிகள் இதோ:

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/2-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/3-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:

https://gopu1949.blogspot.in/2017/06/4-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:

https://gopu1949.blogspot.in/2017/06/5-of-8.html

இந்தத் தொடரின் பகுதி-6க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/6-of-8.html?m=1

இந்தத்தொடரின் பகுதி-7 க்கான இணைப்பு:

 https://gopu1949.blogspot.in/2017/06/7-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-8 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/8-of-8.html

(பகுதி 7 ம் 8ம் 16/6/2017 அன்று இணைக்கப் பட்டன.)

21 comments:

ஸ்ரீராம். சொன்னது…

ஃபேஸ்புக் வழியாக லிங்க் கொடுப்பதற்கு பதிலாக நேரடியாக எங்கள் ப்ளாக் சுட்டியையே கொடுக்கலாமே ஜி...

:)))

ஆழ்த்துகளும், பாராட்டுகளும். புத்தகத்தில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் முத்து.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் என்று படிக்கவும்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

என் வலைப்பதிவின் இணைப்புகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளதற்கு என் நன்றிகள்.

சிவகுமாரன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா.

பெருமகிழ்ச்சி

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஶ்ரீராம்ஜி! உங்கள் பதிவை அவ்விதமே மாற்றுகிறேன்.

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்! அதை வாழ்த்து எனத் தானே படிச்சேன்!!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி என் நான் தான் பலமுறை சொல்லவேண்டும். உங்கள் பொன்னான நேரத்தை நட்புக்காக செலவிடும் உங்கள் அர்ப்பணிப்புக்கு என் வணக்கங்கள் வை. கோ சார்!

மோகன்ஜி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி சிவா! புத்தகமாகப் போடுங்கள், புத்தகம் போட்டிருக்கிறீர்களா? என வினவியபடி இருந்தவன் நீ அல்லவா?
விரைவில்,தம்பியின் கையில் புத்தகம் தவழும் நாள் வரும்

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

வாழ்த்துக்கள் மோகன் ஜி. புத்தகத்துக்கு நீங்கள் வைத்திருக்கும் தலைப்புத்தான் மிக மிக அருமை.... பொன் வீதி எனும் பெயருக்கேற்ப வீதி உலா வந்துகொண்டிருக்கிறது புளொக்குகளில்...

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் மோகன்ஜி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

மோகன்ஜி சொன்னது…

நன்றி அதிரா! அழகாக சொல்கிறீர்கள்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கரந்தையாரே!

மோகன்ஜி சொன்னது…

நன்றி மேடம்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி டி.டி !

G.M Balasubramaniam சொன்னது…

வாழ்த்துகள் மோகன் ஜி

மோகன்ஜி சொன்னது…

நன்றி GMB சார்!

Yaathoramani.blogspot.com சொன்னது…



நான் தற்சமயம் யு.எஸ்ஸில் உள்ளேன்
ஆகஸ்ட் கடைசி வாரம் இந்தியா
திரும்புகிறேன் . வந்தவுடன் தொடர்பு
கொள்கிறேன்.வாழ்த்துக்களுடன்

மோகன்ஜி சொன்னது…

அப்படியே செய்யுங்கள் ரமணி சார்! உங்கள் பயணம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். ///நண்பர்களின் மதிப்புரை மூலமாக உங்களின் நூலைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. தங்கள் எழுத்துப்பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மோகன்ஜி சொன்னது…

முனைவர் ஜம்புலிங்கம் சார்! மிக்க மகிழ்ச்சி ! உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும் நன்றி!
உங்கள் முகவரியை மேலே பதிவில் சொன்னபடி மின்னஞ்சலில் அனுப்புங்கள். புத்தகம் அனுப்புகிறேன்.