ஞாயிறு, ஜூலை 31, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 8அன்பின் வலைச்சொந்தங்களே!

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியப் பணியை நான் ரசித்தே செய்தேன்.  வழக்கமான பணிச்சுமைகளோடே இன்னமும் சில முக்கிய பொறுப்புகள் இந்த வாரம் சேர்ந்த போதிலும், வலைச்சரத்தின் பதிவுகளையும் அறிமுகங்களையும் இயன்றவரையில் முழு அர்ப்பணிப்போடு செய்து முடித்த திருப்தி இருக்கிறது.

நிறைய புதுப்பதிவர்களின் வரவும் வலையில் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என எனக்குத் தோன்றிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் .

பல முக்கிய பதிவர்களை என்னால் சேர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் நேரமின்மையே தவிர வேறொன்றில்லை.

வலையை நாம் எதற்கு உபயோகிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. புது நட்புகளும் சொந்தங்களும் இங்கே கண்டிப்பாய்க் கிட்டும்.. நம் குடும்பத்தின் நீட்சியாக பதிவர்கள் அமைந்து விடுகிறார்கள். இலக்கியம் நுகர ,பொழுது போக்க, சமையல் கலை அறிய, அரட்டைத் தளமாக, தொழில் நுட்பம் அறிய ,இசை பகிர என அத்துணையும் வலையுலகில் இருக்கிறது.

பதிவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். வலை மேய்வதை ஒரு தளையாக  உங்களைச் சுற்றி பின்னிக் கொண்டு,  உங்களைச் சார்ந்தவர்களுடனான உறவை பாதிக்கும் ஒரு தொல்லையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எதற்குமே ஒரு அளவு உண்டல்லவா?. வலையின்பம் நுகர, வாழ்க்கை இன்பம் தொலைக்கப் போமோ? இதை அறிவுரையாய் இல்லாமல் உள்ளார்ந்த அன்பால் நான் சொல்வதாகவே புரிந்து கொள்ளுங்கள்.

வானவில்லுக்கு வருகை தந்து பதிவுகளை படிக்கும் அன்பர்களுக்கும் ,பின்னூட்டங்கள் இட்டும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் அன்பு செலுத்தும் நட்பு நெஞ்சங்களுக்கும்,  இந்த ஒரு வாரத்தில் முதன் முறையாய் அறிமுகமான பதிவர்களுக்கும் என் நன்றி கூடிய வணக்கங்கள் .

இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சரத்துக்கும், சகோதரர் சீனா அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும். திரு. சீனா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. பதிவுகளுக்கும் படிப்பவர்களுக்கும் இடையே பாலமாய் விளங்கும் 'வலைச்சரம்' பதிவுலகில் ஒரு பள்ளிக் கூடம்.

மீண்டும் சந்திப்போம் சொந்தங்களே.. வானவில்லுக்கும் அடிக்கடி வாருங்கள்..  காத்திருப்பேன் அங்கே...

என்றென்றும் அன்புடன்

மோகன்ஜி
ஹைதராபாத்.
பட உதவி :Google Image

22 comments:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

வணக்கம் உறவே நேரப் பிரச்சனையால் தங்கள் பதிவை உடனே படித்துக் கருத்திட முடியாமல் போய் விட்டது மன்னிக்கவும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு

பத்மநாபன் சொன்னது…

சீர்மிகு பணியை சிறப்பாக செய்தீர்கள் ..... நல்ல அறிவுரை ...நிறைய நட்புகள் ,சொந்தங்கள் , பகிர்வுகள் என ஆக்கமாக பயன்படுத்தும் வரை வலையுலகம் உயர்வானது ...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி..வலைப்பூ ஒரு கத்தி மாதிரி..ஆப்பிளும் வெட்டலாம்..ஆளையும் வெட்டலாம்..கையாள்பவனின் நோக்கம் தான் முக்கியம் இதில்!

மோகன்ஜி சொன்னது…

லேட்டானாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க ம.தி.சுதா! நன்றி!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி பத்மநாபன். கார்டு போட்டப்புறம் இன்னமும் கொஞ்சம் சொல்லலாம்னு தோன்றியது.. நீங்கள் சொல்வது ரொம்பவே சரி!

மோகன்ஜி சொன்னது…

மூவார்! இந்த விவாதம் விவரமாகச் செய்யப் பட வேண்டியது. செய்வோம்!

அப்பாதுரை சொன்னது…

அப்பாடா என்ற பெருமூச்சு அமெரிகா வரை கேக்குதுங்க..:)
நன்று நன்று.

சிவகுமாரன் சொன்னது…

மிகப் பெரிய நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் அண்ணா

ஸ்ரீராம். சொன்னது…

வெற்றிகரமாக முடித்தீர்கள். நன்றி மீண்டும் வ(த)ருக...!

சே.குமார் சொன்னது…

நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

இன்னும் வலைச்சரத்தில் உங்களின் பதிவுகளை வாசிக்கவில்லை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ரசித்துச் செய்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அறிவுரையாய் இல்லாமல் உள்ளார்ந்த அன்பால் நான் சொல்வதாகவே புரிந்து கொள்ளுங்கள்.//

குயிலின் அருமையான பயனுள்ள கூவலுக்கு நன்றி

ரிஷபன் சொன்னது…

வலையின்பம் நுகர, வாழ்க்கை இன்பம் தொலைக்கப் போமோ?

பல நேரங்களில் வலைக்குள் வர முடியாமல் போகிறது.. அந்த வருத்தம் இந்த வரி பார்த்து சமாதானமானது

மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை சார்! உங்களுக்கு கேட்டுடுச்சா? அட பழைய பரம சிவமே!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா!ஸ்ரீராம் !குமார் நன்றி..

மோகன்ஜி சொன்னது…

கண்டிப்பாய் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் சங்கர்!

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ரிஷபன்!
//பல நேரங்களில் வலைக்குள் வர முடியாமல் போகிறது.. அந்த வருத்தம் இந்த வரி பார்த்து சமாதானமானது

இங்க மட்டும் என்ன வாழுதாம்?

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

மாய உலகம் சொன்னது…

//வலையை நாம் எதற்கு உபயோகிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. புது நட்புகளும் சொந்தங்களும் இங்கே கண்டிப்பாய்க் கிட்டும்..//

அன்பு சகோதரருக்கு புதிய உறவுடன் நான்.. தங்கள் பதிவுக்கு பாராட்டுக்கள்

நிலாமகள் சொன்னது…

நம் குடும்பத்தின் நீட்சியாக பதிவர்கள் அமைந்து விடுகிறார்கள்.//
:-)

உங்களைச் சார்ந்தவர்களுடனான உறவை பாதிக்கும் ஒரு தொல்லையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்//

வேண்டுகோளாக‌, அறிவுரையாக‌ எப்ப‌டியிருப்பினும் அதில் தொனிக்கும் அக்க‌றை இத‌ம்!