வெள்ளி, ஜூலை 17, 2015

மெல்லிசை மன்னர்



வெள்ளையும் கருப்புமாய்
சில கட்டைகள்,
வரிசை கட்டி நின்றன.

ஒரு கந்தர்வனுக்காய் காத்திருந்தன.

வந்தான்.

சுவாசமே சுவரங்களாக
அசைவே இசையாக
விஸ்வம் கேட்டிரா நாதம் கொண்டு
விளையாட வந்தான்.

வார்த்தைகளுக்கெல்லாம் வாசம் சேர்த்து
பூநார் போல் பொதிந்து கிடந்தான்.

தாலாட்டும் தாய்மையும்
காதலும் கடமையும்
ஏக்கமும் சோகமும்
சரிகை கட்டி நிற்க,
இசை நெசவு செய்தான்.

போய்விடுவான் எனத் தெரிந்தும்
புலம்புகிறது பொல்லாத மனது.

ஏதோ ஒருநாள் உன்னை
சேரத்தானே வேண்டும்...

அதுவரை கிடக்க எனக்கு
ஆயிரமாயுன் பாடலகள்.

நான் தெளிந்து விடுவேன் சில நாட்களில்...
உன்
ஹார்மோனியத்தை
என்ன செய்ய??