ஞாயிறு, ஜூன் 11, 2017

'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
சொந்தங்களே ! எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியிட சற்றே தாமதமாகி விட்டது. இந்தத் தொகுப்பில் பல கதைகள், எனது 'வானவில் மனிதன்' வலைப்பூவில் வெளிவந்து பரவலான கவனமும் பாராட்டும் பெற்றவை. 

தொகுப்பில் மொத்தம் 21 சிறுகதைகள். 160 பக்கங்கள். கடந்த பல வருடங்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுதப் பட்டவை.

வலைப்பூவில் வெளியான கதைகளுக்கு வந்த சில கருத்துக்களையே 'சிரம் கண்ட அட்சதைகள்' என்று அணிந்துரைக்கு பதிலாக சேர்த்திருக்கிறேன். இவற்றை மீண்டும் கண்ணுறும் போது, கால இயத்திரத்தில் பின்னோக்கி சென்று, அற்றைநாள் உணர்வுகளில் மீண்டும் திளைத்தேன். இந்தக் கதைகள் என்றைக்குமான மானுட மாண்பையும், உணர்வுநிலைகளையும் பேசுவதாய் உணர்கிறேன்.

அக்ஷரா பிரசுரம் வெளியீடாக தரமான காகிதத்தில் நேர்த்தியாக வெளியிட உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. விலை ரூ 125/-

இந்தப் புத்தக விற்பனையில் வரும் தொகை முழுவதையும், ஒரு புனிதமான பணிக்கு அளிக்க உத்தேசம்.

முகவரியை மெசஞ்சரிலோ, என் மின்னஞ்சலிலோ(mohanji.ab@gmail.com)
தெரிவியுங்கள். புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.


இந்தத் தொகுப்புக்கு வந்திருக்கும் விமரிசனங்களும் பாராட்டுகளும் ஊக்கம் அளிக்கின்றன.முகநூலில் வந்த சில விமரிசனங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இவர்கள் யாவருக்கும் என் அன்பும் நன்றியும் உரியது.இனி விமரிசனங்கள்
ரிஷபன் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/rishaban.srinivasan/posts/1695009223847119

கரந்தை ஜெயக்குமார் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=464689763878921&id=100010137039512

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=465397750474789&id=100010137039512

தோழர் காஸ்யபன் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=465830343764863&id=100010137039512

ஶ்ரீராம் அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=460054264342471&id=100010137039512

முனைவர் ஹரணி அவர்களின் விமரிசனம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=467870340227530&id=100010137039512

எட்டு பதிவுகளாக இந்தப் புத்தகத்தை விமரிசித்து வரும் பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனின் முயற்சி வண்ணமயமானது. கதைகளின் சாரத்தை சொல்லிச் செல்லும் நடையும், பொருத்தமான படங்களும் மனம் கவர்பவை. எனக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் சகோதரரே!

கோபு சாரின் விமரிசனங்களின் சுட்டிகள் இதோ:

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/2-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/3-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:

https://gopu1949.blogspot.in/2017/06/4-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:

https://gopu1949.blogspot.in/2017/06/5-of-8.html

இந்தத் தொடரின் பகுதி-6க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/6-of-8.html?m=1

இந்தத்தொடரின் பகுதி-7 க்கான இணைப்பு:

 https://gopu1949.blogspot.in/2017/06/7-of-8.html

இந்தத்தொடரின் பகுதி-8 க்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2017/06/8-of-8.html

(பகுதி 7 ம் 8ம் 16/6/2017 அன்று இணைக்கப் பட்டன.)

வெள்ளி, ஜூன் 02, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி


என் பிரிய கவிஞனே!
நீயும் ஒருநாள் பிரிவாய் என்று
எனக்கேன் தோன்றவேயில்லை??
என்னை மெல்லத் திடமாக்கிக் கொண்டிருப்பேனே?
இப்படியா இந்தநாள் விடியும்?

உன் கவிமண்டலத்தின் 'பால்வீதி'யில்
கைப்பிடித்து என்னை அழைத்துச் சென்றாய்.
என் 'ஆலாபனை'யையும் சற்றே மாற்றி வைத்தாய் ஆசானே!

இருபத்தைந்து வருடங்களுக்குமுன்,
ஒருநாள் உன்னோடு இருக்க வாய்த்தது.

கடலூரின் கடற்கரையும் நம்முடன் தனித்திருந்தது,
கஜல் ரசிக்கும் முறைமையையும்
ஹைக்கூவின் ஞானத் தெறிப்பையும்
காதாறக் கேட்டு ஆர்ப்பரித்தது அலைகடல் .

அருகிலே அமர்ந்து நீ புகைபிடித்த தருணம்,
அகிற்புகை சூழ்வதாய் உணர்ந்தேன் ஆசானே!

அன்றென் இல்லத்தில்,
கவிதையில் யதார்த்தம் பற்றி பேசியபடி உண்டோம்.
'இந்த கணத்து யதார்த்தம் 
இந்தத் தெளிவான ரசம் மட்டுமேஎன்றாய்.
உள்ளங்கையில் வாங்கிப் பருகி,
என் மனைவிக்கு மகுடம் சூட்டினாய்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் 
புத்தகவிழாவில் சந்தித்தபோது அணைத்துக் கொண்டாய்.
அரங்கத்தை என் கரம் பற்றிக் கடந்தாய்.
'இன்னமும் சபரிமலை செல்கிறாயா?' என்று கேட்டாய்.
இல்லத்துக்கு அழைத்தாய்.

கவிதை நிறைந்த உன் மனத்தின் ஓர் ஓரத்தில் நானும் இருந்தேன்.
அது போதும் எனக்கு.
நீ செப்பனிட்ட  என் கவிதா ரசனை என்னுடனே இருக்கிறது.
அது போதும் எனக்கு.
அலமாரியில் கொலுவிருக்கிறது உன் அமர படைப்புகள்.
அது போதும் எனக்கு.

போய்வா கவிராஜனே!
நீ துய்த்த தமிழை நானும் துய்க்கிறேன்.
அது போதும் எனக்கு.(பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் கவிதைநூல் வெளியீட்டு விழா- கடலூர் மாவட்ட
 ஆட்சியாளர் திரு பிராபகர ராவ் , அடுத்து திரு.இறையன்பு, உரையாற்றும் கவிக்கோ மற்றும் நான் (கருப்பு சட்டையுடன்)வியாழன், ஜூன் 01, 2017

என்ன செய்ய உத்தேசம் பாரதி?

மூன்று நாட்களாய் என்னை விடாமல் இம்சை படுத்தியபடியே இருக்கிறான் பாரதி. திராவிட பாரம்பரியத்து நண்பருடன், பாரதி தாசன் கவிதைகளுக்கும் பாரதியின் கவிதைகளுக்குமான பின்விசை யாதென்ற அலசலில் தான் ஆரம்பித்தது இந்த பாரதி ஸ்மரணை...

உள்ளுக்குள்ளே பாரதியின் வரிகள் அலைஅலையாக எழுந்து மோதிக் கொண்டிருக்கிறன. ஒவ்வொரு பாடலும் எனக்கு அறிமுகமான தருணங்கள், கேட்ட விளக்கங்கள், விவாதங்கள், என யாவும் சுழன்றடித்தபடி இருக்கின்றன.

போதாதிற்கு,நேற்று இரவு என் மகன் என்னுடைய பேரனுக்கு பாரதி வாழக்கையை 'பெட் டைம் ஸ்டோரி'யாக சொல்லிக் கொண்டிருந்தான். இன்று இரவு பாரதி பற்றிய நூறு கேள்விகளுடன் குழந்தை என்னை முற்றுகையிடுவான்....அவனைப் போல் நானிருக்கையில்,என் அம்மா கழுதைக் குட்டியை பாரதி தூக்கிவந்த கதையைச் சொன்னாள். இன்று பேரனுக்கு அதை சொல்லிவிடவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

இன்று காலை வாக்கிங் வந்தேன். ஹைட்போனில் மகாராஜபுரம் சந்தானத்தைக் கேட்டுக் கொண்டே நடந்தபடி இருக்க, சடுதியில் 'ஆடுவோமே பள்ளுபாடுவோமே' என்று வயலினில் ஒரு பிரளமாய் அதிர ஆரம்பித்தது. எங்கு வந்தது இந்த இடைச்செருகல்?? இன்றும் என்னை விடமாட்டாயா பாரதி??

எங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கின்றது என்று எங்களிடை உதித்தாய் பெரியவனே?

(படம்: நன்றி கூகுள்முகநூலில் வந்த சில கருத்துக்கள் :

LIKES 31 Venkatagiri Ravichandran and 29 others

Comments

Ramaswami Vaideeswaran Guruswami Arumai

· May 29 at 12:14pm


மோகன் ஜி நன்றி ஞாயிறு சார். நலம் தானே?


Ragavendhiran Seshan ஆஹா Like · May 29 at 12:24pm


மோகன் ஜி நன்றி சேஷன் சார் !

· Sridharan Venkataramana Rao அழகு சார். பாரதிக்கு மயங்காதவர் யார்? எனக்கு இசையில் புலமை இல்லை. ஆயினும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் சங்கீதம் பிடிக்கும். அவருடைய பாரதியின் பாடல்கள் பலவற்றைக் கேட்டு மயங்கி உள்ளேன். ' வெள்ளைக் கமலத்திலே ' என்ற பாடலை அவர் பாடும் அழகே அழகு


மோகன் ஜி நீங்க ரசனைக்கார ஆளு தான். சந்தானம் பாட்டு மனம் வருடும் தென்றல் அல்லவா?
பாரதியின் 'மோகத்தைக் கொன்று விடு' பாடலை சந்தானம் அவர்களின் 'பாவம்' நிறைந்த குரலில் கேட்கவேண்டும். யூடியூபில் கேளுங்கள். இன்று அவர் பாட்டைத் தான் கேட்டபடி இருந்தேன். Random ஆக வயலின் இசையில் (லால்குடி ஜெயராமன்)'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' இடையில் வந்ததையே குறிப்பிட்டேன்.
· May 29 at 2:35pm
Shanthi Ramachandran நேசம் உள்ளவரை நெஞ்சில் நினைத்தீர்கள் போலும்


மோகன் ஜி உணர்வில் உறைந்தவர் அவர் அல்லவா சாந்தி!

Reply · May 29 at 9:12pm
Balasubramanian Mahalingam மோகன் உங்கள் தமிழ் ஆர்வம் கண்டு வியந்தேன். "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம்" என ஒவ்வொரு இந்தியனுக்கும் வெறி ஏற்றியவன் இல்லையா பாரதி. அவனை எப்படி மறக்க முடியும்.
· Reply ·

மோகன் ஜி நன்றிஜி! பாரதி உணர்வின் ஒரு அங்கமாக மாறிப் போனவன். மறத்தல் எங்கனம் சாத்தியம்?!

Janani Manasa Super
· May 30 at 8:02am

Suresh Kumar S வ.ரா. சொல்கிறார். "பாரதியாரிடம் முக்கியமான குணமொன்றைக் கவனித்தேன். பேசினால் பேசிக்கொண்டிருப்பார். பேச்சு ஓய்ந்ததானால், உடனே பாட்டில் பாய்ந்துவிடுவார். மௌனம் அபூர்வம். யார் பக்கத்திலே இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவரிடம் இருக்காது போலிருக்கிறது. நடக்கும்போதும் பாட்டுதான்."
· Reply ·

மோகன் ஜி வாங்க சுரேஷ் குமார்! புதிய செய்தியைத் தந்தீரகள். பேச்சும் பாட்டுமாகவே பாரதி இருந்ததினால் தானோ என்னவோ, அவன் பாட்டே பேச்சாக இருக்கிறோமோ