செவ்வாய், மார்ச் 07, 2017

போவதும் வருவதும் புதுசா என்ன ??

எங்கடா ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நினைச்சிருப்பீங்க... அதுவும் நல்லதுக்கு தான்னு சந்தோஷமும் பட்டிருப்பீங்க...

இந்த. வாரம் உங்க ராசிக்கு காணாமல் போன பொருள் கிடைக்கிற காலம் ! அதான் வந்துட்டேன்ல...

இனிமே கச்சேரி தான்!

பார்த்து ஆறுமாதம் இருக்குமா?

இந்த விடுபட்ட காலத்தில் பல பயணங்கள் . சுற்றத்தில் ஓரிரு மரணங்கள்... சுற்றத்திலும் நட்பிலும் சில திருமணங்கள்.

படித்ததெல்லாம் பெரும்பாலும் ஆன்மீகம்.

ஒரு சேமிப்புக் கணக்கை முடிக்கச் சொல்லி வங்கிக்கு எழுதிய கடிதமொன்றைத் தவிர வேறேதும் எழுதவில்லை.

பிளாகோ, முகநூலோ பார்க்கவில்லை. அவ்வப்போது பார்த்துவந்த 'தெய்வ மகள்' தொடர்ர்ர்ர்ரையும் விட்டு விட்டேன். அவ்வப்போது 'வாட்ஸ் அப்' வல்லடிகள் மட்டும் தான் காலட்சேபம்.

நாட்டிலே நடக்க வேண்டியவை நடக்காமலும், நடக்கக் கூடாதவை நடந்தும் பதைபதைக்க வைத்திருக்கிறது..... கொடுங்காலம்... இதற்கிடையே,மக்களின் பிரஞ்ஞை பூர்வமான விழிப்பின் வெளிப்பாடு ஒரு வியப்பான ஆறுதல்.

என் சிறுகதை தொகுப்பொன்று 'காமச்சேறு' எனும் தலைப்பில் வர இருக்கிறது.

அபிராமி அந்தாதி'யை விளக்கத்துடன் முகநூலில் சில பாடல்கள் வரை பதிவிட்டிருந்தேன். அவற்றை வலைப்பூவிலும் பதிவிட்டு, தொடர உத்தேசம்.

வானவில்லுக்கு நீங்கள் மீண்டும் வந்து ஊக்குவிக்க வேணுமாய் விக்ஞாபித்து, யாவருக்கும் எம்பெருமான் முருகன் அருள வேணுமென அடியேன் பிரார்த்தனை செய்யுங்கால், அவ்வாறேயாகுக என்று கேட்ட அசரீரி வாக்கையுஞ் சொல்லி, தெண்டனிட்டு அமைகிறேன்.

மீண்டும் சந்திப்போமா?  நமஸ்காரம்