செவ்வாய், ஜூன் 29, 2010

பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......

என் பரணிலிருந்து ....

வாழிய நலம்,
பகிர்வென்பது ஒரு இனிய வெளிப்பாடு .
எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் எழுதிய
என் கவிதைகள் சிலவற்றோடு
நம் பகிர்தலை தொடங்கலாம்.
என் நண்பர் குழாமின் தனிப்பட்ட தாலாட்டிலிருந்த இந்த கவிதைகள்,
அவர்களின் தூண்டுதலாலேயே இன்று வலையில் பூத்திருக்கிறது..

பழங்கவிதைகள் தான்...

சூழல்கள் காலாவதி ஆனாலும்...
உணர்வுகள் ஆவதில்லை அன்றோ..

நான் பார்த்தவை,கேட்டவை,மற்றும் உணர்வுகளை
பதிவு செய்யும் புதிய களம் இந்தப் பக்கங்கள்..
என் புதிய முற்சிகளையும்
உங்கள் பிரதிபலிப்புகள் வளப்படுத்தும்..
என்றும் உங்கள்,
மோகன்ஜி