வெள்ளி, ஜூலை 17, 2015

மெல்லிசை மன்னர்



வெள்ளையும் கருப்புமாய்
சில கட்டைகள்,
வரிசை கட்டி நின்றன.

ஒரு கந்தர்வனுக்காய் காத்திருந்தன.

வந்தான்.

சுவாசமே சுவரங்களாக
அசைவே இசையாக
விஸ்வம் கேட்டிரா நாதம் கொண்டு
விளையாட வந்தான்.

வார்த்தைகளுக்கெல்லாம் வாசம் சேர்த்து
பூநார் போல் பொதிந்து கிடந்தான்.

தாலாட்டும் தாய்மையும்
காதலும் கடமையும்
ஏக்கமும் சோகமும்
சரிகை கட்டி நிற்க,
இசை நெசவு செய்தான்.

போய்விடுவான் எனத் தெரிந்தும்
புலம்புகிறது பொல்லாத மனது.

ஏதோ ஒருநாள் உன்னை
சேரத்தானே வேண்டும்...

அதுவரை கிடக்க எனக்கு
ஆயிரமாயுன் பாடலகள்.

நான் தெளிந்து விடுவேன் சில நாட்களில்...
உன்
ஹார்மோனியத்தை
என்ன செய்ய??

10 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெய்தது மனதில் தைத்து விட்டது...

sury siva சொன்னது…

உன்
ஹார்மோனியத்தை
என்ன செய்ய??///


யாருமில்லா தனிமையிலே
ஊருமிலா உறவுமிலா நிலந்தனிலே
உன் ஹார்மோனியத்தை நீ என்ன செய்வாய் ?
என்று கேட்டுவிட்டேன்.
என்ன கேட்கிறீர்கள் நீங்கள் ?
என்ற ஒலி கேட்டு திடுக்கிட்டேன்.

என் ஆர்மோனியத்தை
என் இசையை
ஆரெல்லாம் ரசித்தாரோ அவரவர்
இதயத்தில் தைய்த்தல்லவா வந்துவிட்டேன்.

ஆம். விசுவம் போற்றும் விசுவனாதா !!
உன் ஆர்மோனியம்
எங்கள் இதயத்துடன்
இப்போது இருப்பது போல்
எப்பவும் இருக்கும்.ஒலித்துக்கொண்டே
பொன் என்பேன் .பூ என்பேன்.
சுப்பு தாத்தா.

சுப்பு தாத்தா.

Geetha Sambasivam சொன்னது…

//விஸ்வம் கேட்டிரா நாதம் கொண்டு
விளையாட வந்தான்.//

"நறுக்" எனச் சொல்லி விட்டீர்கள். அருமையான அஞ்சலி!

கோமதி அரசு சொன்னது…

//என் ஆர்மோனியத்தை
என் இசையை
ஆரெல்லாம் ரசித்தாரோ அவரவர்
இதயத்தில் தைய்த்தல்லவா வந்துவிட்டேன்.//

உண்மை.

அழகான கவிதை அஞ்சலி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆயிரமாயிரம் பாடல்கள் படைத்ட மெல்லிசை மன்னனுக்கு உருக்கமான கவியஞ்சலி

'பரிவை' சே.குமார் சொன்னது…

இசை வேந்தனுக்கு இனிய கவிதை அஞ்சலி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான அஞ்சலி......

அப்பாதுரை சொன்னது…

உள்ளம் உருகுதய்யா உன்கவி காண்கையிலே.

ஸ்ரீராம். சொன்னது…

கவியாஞ்சலி அருமை.

நிலாமகள் சொன்னது…

அதுவரை கிடக்க எனக்கு
ஆயிரமாயுன் பாடலகள்.

நான் தெளிந்து விடுவேன் சில நாட்களில்...
உன்
ஹார்மோனியத்தை
என்ன செய்ய??//

விட்டுச் சென்ற மெட்டுக்கள் எல்லாம் நம்மைக் கட்டியணைத்து கடைத்தேற்றுமோ....