செவ்வாய், நவம்பர் 17, 2015

முகநூல் கவிதைகள்

கனவில் வந்த சீடன்
காலையில் வந்த கனவில்
என் காலருகே அமர்ந்திருந்ததோ
சுந்தர்ஜி....

'உப்புமாவுக்கு கடுகைவிடுத்து
எள்ளைத் தாளித்திருக்கிறாய்'என்று
.திருகிக் கொண்டிருக்கிறேன் அவன் காதை.


திரிகடுகம் செய்யுள் சொல்லவா? என்கிறான்.
ஐம்பதாச்சு...தாளிக்கத் துப்பிருக்கா? எனத் திருகலைக் கூட்ட,
'நீங்கள் தானே நான்' எனக் கள்ளம் தொனிக்கா பதில்...
திருகின காது வலிக்காதோ... சிரிப்பைப் பொசுக்க....

தொலைக்காட்சி உயிர்பெறுகிறது.
'சிறந்தவர் குருமார்களா? சீடர்களா?' எனப் பட்டிமன்றம்.
பாரதிபாஸ்கர் என் கட்சியைப் பேசுமுன்னேயே கைதட்டுகிறர்கள்.
'சிறந்தவர் சீடர்களே' என 
சுந்தர்ஜியைப் பார்த்து சிரிக்கும் சாலமன் பாப்பையா.

சேனல் மாற்றிப் போட்டால் அங்கே தலைப்போ 
'தாளிக்க உகந்தது கடுகா எள்ளா?'
கெட்டவார்த்தை சொல்வதுபோன்ற வாயசைப்பில் திண்டுக்கல் லியோனி...
'கடுகா இருந்தா என்ன, எள்ளா இருந்தா என்ன,
போட்டதத் தின்னுட்டு பொழப்பப் பாருங்க' என்கிறார்.

புவ்வாக்கு அர்ப்பணம்னா கடுகு,
அவ்வாக்கு தர்ப்பணம்னா எள்ளு
என்றார் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி;
'காதை விட்டால் யூடியூப் கேட்பேன் குருஜி' எனும் சுந்தர்ஜி ;
சீடர் செவிகளை விடாதீர் என்றார் பரமார்த்தகுரு;
இதையே கவிதையாக முகநூலில் போடச் சொன்னார் ரிஷபன்;

'பன்னிரண்டு லைக்குக்கு இந்தப்பாடா?'என்றபடி என் காது திருகப்பட்டது.
பின்னே கோபமாய் மீசைதுடிக்க நின்றிருந்தான் 
முண்டாசுக்காரன்....

.



முதுமை
பாடமுயன்றால் தொண்டை வலிக்கிறது.
தூக்க முயன்றால் கை(வலது) வலிக்கிறது.
அதேபோல்,
குனியமுயன்றால் இடுப்பும்,
குதிக்கமுயன்றால் காலும்,
திருப்பும் போதெல்லாம் கழுத்தும்,
வலிக்கின்றன.
எதையும் முயலாமலே,
வலித்துக் கொண்டேயிருக்கும் .....
மனசு மட்டும்.

14 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

முதுமை பற்றிய கவிதையைப் படிக்கும்போது பட்டினத்தால் பாடல்கள் நினைவிற்கு வந்தன. நன்றி.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

மோகன்ஜி சொன்னது…

நன்றி முனைவர் சார்! பட்டினத்தார் புரிந்துவிட்டால் நலிவேது.. வலியேது..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்... அது தான் மனது...!

ஸ்ரீராம். சொன்னது…

உங்களது இரண்டாவது கவிதை எனக்கு யாரோ எழுதி இருந்த குழந்தை ப;பற்றிய கவிதையை நினைவு படுத்துகிறது.

"தூக்கினால் கை வலிக்கிறது ; இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது"

மோகன்ஜி சொன்னது…

உண்மை தான் டி்டி..

மோகன்ஜி சொன்னது…

அற்புதமாக எழுதப்பட்ட வரிகள்... ஒவ்வொரு குழந்தையைத் தூக்குதல் போதும் ஏற்படும் கலக்கம் இது. மிக்க நன்றி ஶ்ரீராம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எதையும் முயலாமலே,
வலித்துக் கொண்டேயிருக்கும் .....
மனசு மட்டும்.

மனதை கனக்கச் செய்யும் வார்த்தைகள் ஐயா

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஜெயக்குமார்ஜி !

Geetha Sambasivam சொன்னது…

சும்ம்ம்ம்ம்ம்ம்மா வந்து பார்த்தேன். ஏற்கெனவே படிச்சுக் கருத்துச் சொல்லியாச்சு! :)

மோகன்ஜி சொன்னது…

பார்த்தீங்களா? இங்க முகநூல்ன்னு போட்டதுமே யாருமே வரல்லே...

அப்பாதுரை சொன்னது…

நெட்டுல கவிதை எழுத நிறைய பேர் இருக்காங்களே?

(ஹிஹி.. எனக்கு வந்த ஒரு பின்னூட்டம் அது)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முகநூலில் படிக்கவில்லை. இங்கே பகிர்ந்து கொண்டது நல்லதாயிற்று....

இரண்டாவது மனதைத் தொட்டது. ஸ்ரீராம் கருத்தில் சொன்ன ஒற்றை வரி கவிதையும்!

மோகன்ஜி சொன்னது…

நான் புரிஞ்சுகிட்டது நெட்டுல கவிதை எழுதமட்டும் செய்யலாம்.. படிக்கக் கூடாது ! ஆயிரத்தில் ஒண்ணுதான் தேறும். அந்த ஒண்ணைத் தேடித்தாங்க போனேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட் ! எப்படிங்க அங்க இங்கன்னு கலக்குறீங்க?