புதன், டிசம்பர் 30, 2015

புது வருட உறுதிப்'பாடு'

ஆச்சு!  இன்னுமொரு ஆண்டு கடந்தபடி இருக்கிறது.. வயது ஆகஆக புதுவருடங்கள் சின்ன தடுமாற்றத்தோடு கலந்த எதிர்பார்ப்பைத்தான் தருமோ?
வழக்கம்போலே இந்த வருடப்பிறப்பு சமயத்திலும் சபரிமலைக்கு விரதம் இருந்தபடி இருக்கிறேன்! ஆண்டவன்மேல் பாரம் போட்டுவிடுவது வசதியாகத் தான் இருக்கிறது!
2015முடியுமுன் நான்கு புத்தக வெளியீடுகளை செய்துவிட வேண்டுமென்று மஞ்சள்துணியில் நாலணா முடித்து வைத்திருந்தேன்.. வெள்ளத்தின்மேல் பழியைப் போட்டுவிட்டு வரும் வருடத்தில் வெளியிட்டுவிட உத்தேசம்.
ஆங்கிலவருடப் பிறப்புதொறும் ஏதேனும் சிலஉறுதிகளை எடுத்துக்கொண்டு அவற்றில் பெரும்பாலும் நிறைவேற்றிவிடுவது என் வாடிக்கை.

 2016க்கான என் உறுதிகள் :
1.ஆன்மிகம் சம்பந்தமான பதிவுகளை இடுவதற்கு  ஒரு புதிய வலைப்பூ
   தொடங்க வேண்டும்.
2. கம்பராமாயணம் முழு ரிவிஷன் செய்ய வேண்டும்
3. ஹிமாலய யாத்திரை
4. சிறு குறிப்புகளாக உள்ள பல சிறுகதைகளையும் பதிவேற்ற வேண்டும்.
5. பாதியில் நிற்கும் நாவலை முடிக்க ஆசை.
6. புதியதாய் வாங்கி இன்னமும் படிக்காத 14 புத்தகங்கள், உறையை விட்டு
  எடுக்காத ஒலிஒளிவட்டுக்கள் முடியும்வரை புதியவை வாங்குவதில்லை.
 7. அடுத்த பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
8. இன்னமும் மூன்று விருப்பங்கள் கொஞ்சம் பெர்சனல். என் கதை எதிலாவது
  தலைகாட்டினால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என் பதிவுலக சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே விளைக!

போனசாக, முகநூலில் இன்று இட்டிருந்த சிறுபதிவொன்றை கீழே தந்திருக்கிறேன். புதுவருடத்தில் இவற்றில் சிலவற்றை நாம் கைகொள்ள இயலாதா என்ன?? அன்பு....


மனப்பக்குவம் என்பது....
1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை
      சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்.....

2.  பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல்.....

3.
அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து
  கொள்ளுதல்......

4.
நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....

5 .
உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை 
   அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....

6. நாம் எதைச் செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....

7.
நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ
  முயல்வதை விடுத்தல்....
8.
பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை
  நிறுத்தல்....
9.
நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்
  இருக்க முற்படுதல்.....

10.
நம் சந்தோஷத்தை பொருட்களுடன்பொருத்திக்
  கொள்ளுவதை அறவே நீக்குதல் ...

11.
தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
   உணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,

(புத்த லாமா)
Top of Form


36 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புது வருடத்திற்கான எண்ணங்கள் நிறைவேறட்டும்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

மோகன்ஜி சொன்னது…

நன்றி ராஜேஸ்வரி மேடம் ! உங்களுக்கும் இனிய ஆண்டாய் 2016 அமையட்டும்

மோகன்ஜி சொன்னது…

ஜெயக்குமார் சார்! உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

sury siva சொன்னது…

கம்முனு கிட. நடப்பது நடக்கக்த்தான் செய்யும்.
வீணா மூக்கை நுழைச்சு உடைபட்டுண்டு அதனாலே இதனாலே
அப்படின்னு பிற்பாடு அவஸ்தை படாதே.

எல்லாத்துக்கும் நீ ஒரு சாட்சி தான்.
அதப் புரிஞ்சுகிட்டீன்னு சொன்னா
நீயும் நல்லா இருக்கலாம். எல்லோரையும் அவங்க அவங்க போக்கிலே விட்டு விட்டு
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
எல்லாமே ஈச்வர சங்கல்பம்
அப்படின்னு கிட்ட

அதான் அதான் மனப்பக்குவம் அப்படின்னு சொல்றீக.

புரிஞ்சுகினேன்.

சுப்பு தாத்தா.

புது வருஷம் புதுசா என்ன நடக்கப்போவுது?
ஹோட்டல் மாரீஸ் லே ஒரு
வேத கோஷம் கேட்கப்போவுது.
சூப்பர் லஞ்ச் கிடைக்கப்போவுது
வேற உனக்கு என்ன வோணும் ?

கம்முனு கிட.
கிடக்கேன்.

சு தா.
happy new year
sarva mangalaani bhavanthu.

sury siva சொன்னது…

1. உத்தராயணம் சூர்யோதயம் துவங்கவும்.
2.ரிவிஷன் செய்யணும். !! அப்ப ரீ விஷன் செய்யணும்.
3. சு தா வுக்கு ஒரு உத்ராக்ஷம் வாங்கிண்டு வரணும்.
4. சீக்கிரம் செய்யணும்.
5. இல்ல. தொடரும் அப்படின்னு போடணும். இல்ல 90 பர சென்ட் சான்ஸ். அப்படின்னு போடனும்.
6.அதுவும் முடியல்லேன்னா என்னை மாதிரி பொழுது போகாத கிழவனுக்கு அத டொனேட் பண்ணனும். (எப்பவுமே கிட்ட பார்வை லே இருந்தால் தானே தொல்லை )
7.....!!!
8. எந்த மூன்றுமே அ , பொ , கா விலே அடங்கும். எல்லோருடைய பர்சனல் லேயும் ஒரு காமன் டினாமினேடர் இருக்குமோ !!!

பல்லாண்டு பல்லாண்டு
சீரும் சிறப்போடும்
நற்சிந்தனைகள் நம்
நா வழியே
நானிலம் சென்றடைய
நாராயணன்
அருளட்டும்.

சு தா.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சுப்புத்தாத்தா!

நீங்கள் புரிந்து கொள்வது போல் வேறு யார் புரிந்து கொள்ளமுடியும்?

புது வருடம் மட்டுமல்ல... எந்த விடியலையுமே, எந்த சந்திப்பையுமே, எந்த சம்பாஷனையையுமே மிக்க ஆவலுடனும் அர்ப்பணிப்புடன் பார்க்கும் முயற்சியில்,வாழ்க்கையின் வெறுமையை கடந்தேன் என்று தோன்றுகிறது. இதை ஒரு பார்முலாவாகவே இன்னமும் ஜோடனைகளோடு என் மேலாண்மை வகுப்புகளில் தலைப்புக்கு தக்கபடி பயிற்சி கொடுப்பேன்.

அவற்றில் பங்கேற்கும் நண்பர்களிடம் உடனடியான எதிர்வினையாக பாராட்டையும், கிரகிக்கப்பட்ட கருத்துக்களின் தாக்கத்தையும் அவர்களிடம் காண்பதுண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் பயிற்சிக்குப்பின் மீண்டும் தங்கள் நடைமுறை கூட்டுக்குள்ளே சுருண்டுவிடுகிறதைப் பார்க்கிறேன். சிலரை பயிற்சி புரட்டிப்போட்டு விடுவதுமுண்டு. அவையே பட்ட பாட்டுக்கு பலன் போலும்.

மாற்றத்துக்கான ஆழ்ந்த உள்வேட்கை இல்லையெனில் யாவும் வியர்த்தம் தானே?

மோகன்ஜி சொன்னது…

சு.தா.!
என் உறுதிப்பாட்டிற்கான தங்கள் காமேண்ட்டுகளை ரசித்தேன்.

மலைக்குப் போய்விட்டு வந்தவுடனேயே ஆன்மீக வலைப்பூவைத் தொடங்கிவிடுகிறேன்.
- நீங்கள் சொல்வது போல் கம்பராமாயணம் ரீ விஷன் தான்.
இளமையில் தமிழ் தாகத்தோடு படித்தது. இராமனை விட கம்பனே உயர்ந்தவனாய் மனங்கொண்ட நாட்கள்! பிறகு அவ்வப்போது சிற்சில பகுதிகளை படித்தபடி இருந்தாலும், இந்த ரிவிஷனில் வரிவரியாய் வாழ்ந்துவிட உத்தேசம்!
- உங்கள் ருத்ராக்ஷத்துகென ஹிமாலயம் செல்ல வேண்டுமா என்ன? அங்கிருந்து வந்ததைத் தந்தால் போயிற்று!
- "காமன்" டினாமிநேட்டர் எதிருக்கும்?

உங்கள் வாழ்த்துக்கும் என் நன்றி. நலமே விளைக!!

மோகன்ஜி சொன்னது…

முகநூலில் சில கருத்துக்கள்:

Superb! Simple and nice post. Thanks.
Unlike · Reply · 1 · 22 hrs

Venki Dorairaj புத்த (கம் ஆக)லாம்
Unlike · Reply · 2 · 22 hrs

Muthu Iyer Very opt 4th current life style situation 😀
Unlike · Reply · 1 · 21 hrs

மோகன் ஜி "கய்தய வுட்டுட்டு போய்கினே இரு!" என்பது ராயப்பேட்டை துலுக்காணம் வாக்கு !
Like · Reply · 20 hrs


Write a reply...





Vasan Muthugani " XZ" Generation to learn this eleven points to elevate their life.
Unlike · Reply · 1 · 21 hrs

மோகன் ஜி நன்றி ஜி !
Like · Reply · 20 hrs


Write a reply...





Geetha Sambasivam ஒன்பது மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு! frown emoticon
Unlike · Reply · 1 · 20 hrs

மோகன் ஜி மத்ததெல்லாம் சுலபமாக்கும்?!
Like · Reply · 1 · 20 hrs

Geetha Sambasivam ம்ம்ம் பிறரை மாற்ற முயற்சிப்பதில்லை! smile emoticon 2மத்தவங்களோட பலவீனம் தெரிஞ்சும் சுட்டிக்காட்டுவதில்லை. .3.அவரவர் கருத்து அவரவருக்கு என்பதில் உடன்பாடு உண்டு.
Unlike · Reply · 1 · 20 hrs


Write a reply...





Geetha Sambasivam அப்போத் தான் வேண்டாத நினைவுகள்! frown emoticon
Unlike · Reply · 1 · 20 hrs

மோகன் ஜி இது பற்றிய விவாதம் வானவில் மனிதனில் 'கல்' எனும் பதிவில் போய்க்கொண்டிருக்கிறது. வந்து பாருங்கக்கா !
Like · Reply · 20 hrs

Hide 12 Replies


Geetha Sambasivam ம்ம்ம்ம்ம்? இதோ ஓடோடி வரேன் தம்பி
Unlike · Reply · 1 · 20 hrs

Geetha Sambasivam உங்க பதிவுகளுக்கு ஒரு சுட்டி அனுப்பக் கூடாதோ!
Unlike · Reply · 1 · 20 hrs
உங்க பதிவுகளுக்கு ஒரு சுட்டி அனுப்பக் கூடாதோ! சுட்டிஅனுப்பிவிட்டேன்!
Like · Reply · 20 hrs

Geetha Sambasivam போயிட்டுப் பினாத்திட்டு வந்திருக்கேன். உண்மையில் என்ன சொல்றதுனு தெரியலை!
Unlike · Reply · 1 · 20 hrs

Geetha Sambasivam நிகழ்ந்ததை அதன் போக்கில் விட்டுத் தான் ஆகவேண்டும். அதை நாம் மாற்ற முடியாதே! அடுத்து உறவுகளிடம் எதிர்பார்ப்பது இல்லை. எதைச் செய்தாலும் மத்தவங்களுக்கும் திருப்தியா இருக்கணும்னு எதிர்பார்ப்பு இருந்தது. இப்போ இல்லை
Unlike · Reply · 1 · 20 hrs

Geetha Sambasivam திறமையே இல்லாதப்போ எங்கேருந்து மத்தவங்க கிட்டே காட்டிக்கிறது? அந்த எட்டாவது பிடிக்கவே பிடிக்காது. எதையும் அக்கம்பக்கம் பார்த்துச் செய்வதும் இல்லை, அப்படி ஒப்பீடு செய்வதும் இல்லை. ஒன்பதுக்குச் சொல்லிட்டேன். பத்தாவது சுத்தமாய்க் கிடையாது. பொருட்கள் சேகரிப்பதே பிடிக்காத ஒன்று. ஆனால் சேகரம் ஆகின்றன! frown emoticon தேவைக்கு மட்டும் தான் எதையும் வாங்கணும் என்பதில் உடன்பாடே. கூடியவரை அதைத் தான் வீட்டிலும் வற்புறுத்துவேன். smile emoticon
Like · Reply · 20 hrs
· Reply · 1 · 20 hrs · Edited
மேடம்! 'கல்' பதிவிற்கு உங்கள் கருத்து நன்றாக இருக்கிறது நன்றி! அதற்கான பதிலும் இதோ: கீதா மேடம்! வந்துட்டீங்களா? மிக அழகாக சொல்லி விட்டீர்கள்.
//ஒருவன் ஆத்திகன்! யாரிடம் மன அழுக்கு நீங்கும்? ஆத்திகனிடமா, நாத்திகனிடமா?//
மன அழுக்கு என்பது ஆத்திகநாத்திக வாதத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? எனக்குத் தெரிந்து மேன்மையும் உன்னதமுமான வாழ்க்கை வாழ்ந்து வரும் நாத்திக அன்பர் பலரை அறிவேன்.இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் 'மனத்துக்கண் மாசிலனாவத'ற்கான நெறியை அடைய வேண்டியே !
Like · Reply · 1 · 20 hrs · Edited

Geetha Sambasivam பதில் எங்கே? பதிவிலா?
Like · Reply · 20 hrs

Geetha Sambasivam ம்ம்ம்ம் ரீலோட் செய்தப்புறமா பதில் வந்திருக்கு! smile emoticon
Like · Reply · 20 hrs

மோகன் ஜி Geetha Sambasivam மேடம்! //நிகழ்ந்ததை அதன் போக்கில் விட்டுத் தான் ஆகவேண்டும்.// அந்த விடுதல் கஷ்டங்களும் பாரமும் இன்றி இயல்பாக இருக்க வேண்டும்.
Like · Reply · 19 hrs

மோகன் ஜி நீங்க பெரும்பாலான தேவைகளை உங்க வசம் வச்சிருக்கீங்க! பக்குவம் இதுதான்!! அடியவனை ஆசீர்வாதம் பண்ணவும்!
Like · Reply · 19 hrs

Geetha Sambasivam ஹிஹிஹி, பக்குவம்? அதெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை இதுவே அதிகம். தேவைக்கு மேல் இருக்கு. ஆண்டவன் எப்போதும் எனக்கு அருள் புரிந்து வருகிறான். கிடைக்கவேண்டியது எப்போவும் எப்படியும் கிடைக்கத் தான் செய்கிறது. ஆகவே ஒண்ணும் பிரச்னை இல்லை. smile emoticon
Unlike · Reply · 2 · 19 hrs

மோகன் ஜி வேர் ஈஸ் ஆசீர்வாதம்??
Like · Reply · 19 hrs

Geetha Sambasivam Oh! our Blessings and best wishes are always with you!
Like · Reply · 17 hrs

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
புதிய ஆண்டில் எல்லாம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சிவகுமாரன் சொன்னது…

வணக்கம் அண்ணா. சென்ற வருடம் எடுத்த உறுதிமொழி என்னவென்றே நினைவிலில்லை. தங்களுடைய ஆன்மீகப் பயணத்தில் ஒருமுறையாவது இணைந்து கொள்ளும் வாய்ப்பை இறைவன் நல்க வேண்டும் என புத்தாண்டு வேண்டுதல்களில் ஒன்றாய் இணைத்துக் கொண்டேன்.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ரூபன் ,
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஆஹா ! வந்தாயா என் தம்பி ?! புத்தாண்டு இவ்வளவு ஆனந்தமாக அல்லவா எனக்குத் தொடங்கி விட்டது?! நலம் தானே?

என் பயணத்தில் நீ வழித்துணையாக வந்தால் அதைவிட மகிழ்ச்சி ஏதாகும்... மீண்டும் நல்லபதிவுகளால் வலையுலகில் சேர்ந்தே வலம் வருவோம் சிவா !

மனோ சாமிநாதன் சொன்னது…

அனைத்து கனவுகளும் இந்த ஆண்டில் உன்னதமாய் நிறைவேற இனிய வாழ்த்துக்கள் !!

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

G.M Balasubramaniam சொன்னது…

இரண்டு நாட்கள் மகன் வீட்டுக்குப் போயிருந்தேன் புத்தாண்டைக் கொண்டாட. அதுவே தாமதத்துக்குக் காரணம்.நான் புதியதாகத் தீர்மானங்கள் ஏதும் எடுப்பதில்லை. பின் அவ்ற்றை மறப்பதும் இல்லை. ஒவ்வொரு ஆண்டுத்துவக்கத்திலும் கழிந்த ஆண்டில் நான் இருந்த முறையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பேன் ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷன் முடிந்தவரை தவறுகளைத் திருத்திக் கொள்ள முயற்சி எடுப்பேன்பொதுவாகவே நான் ஒரு சீரியஸ் பெர்சன்உண்மை பேசவேண்டும் என்பதில் சற்று உறுதியாய் இருப்பேன். ஆனால் நான் உண்மை பேசினால் பலரும் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். ஆன்மீக விஷயங்கள் பல இடங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறதோ என்று தோன்றுகிறது நன்நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் வித்க்ஹியாசம் தெரியாமல் இருக்கிறதோ என்னும் எண்ணமும் உண்டு, அவை என் எழுத்தில் பிரதிபலிக்கும் அதுவே இவன் இப்படித்தான் எனும் முத்திரையை வாங்கிக் கொடுத்துவிட்டது.உங்களது புத்தாண்டுப் பிரமாணங்களில் நான் கேட்டிருந்த துரோணர் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் செய்யவும் ஒன்றாக இருக்கட்டும்
பெங்களூர் வர நேர்ந்தால் என்னைச் சந்திக்க முயலவும் முன்பே தெரிவித்தால் ஒரு டி ஷர்ட் வாங்கி வைப்பேன் உங்கள் மணிவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாது/ பத்து நாள் பயணம் 17-ம் தேதியிலிருந்து துவங்குகிறது எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகிறேன்

sury siva சொன்னது…

ருத்ராக்ஷத்துகென ஹிமாலயம் செல்ல வேண்டுமா என்ன? அங்கிருந்து வந்ததைத் தந்தால் போயிற்று! //

ஸ்வாமி ன்னு !!

ஏதோ ஞாபகத்திலே தப்பா உத்ராக்ஷம் அப்படின்னு எழுதிட்டேன்.
க்ஷமிக்கணும்.

ஹிமயத்துக்கு நீங்கள் போய்ட்டு வரும்போது நீங்கள் எனக்காக கொண்டு வரவேண்டும் என்று நினைத்தது
உத்ராக்ஷம் இல்லை.
உத்தரணி ஜலம் . அது போதும்.

கங்கா ஜல லவ கனிகா பீதா அப்படின்னு மோஹ முத்கர என்று சொல்லப்படும் பஜ கோவிந்தத்துலே இருக்கிறது இல்லையா ?

சு தா.

கோமதி அரசு சொன்னது…

இந்த ஆண்டில் உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டால் மனது பாரம் குறைவது உண்மை.
புத்தலாமா பகிர்வு அருமை. நன்றி.

அப்பாதுரை சொன்னது…

எத்தாவது சொன்னடு உறுடிப்பாது கிதையாடு. சும்மா பதுட்டறீங்க.

sury siva சொன்னது…

//எத்தாவது சொன்னடு உறுடிப்பாது கிதையாடு. சும்மா பதுட்டறீங்க.//

அதானே பாத்தேன்.
இங்கன தான் நியூ இயர் அன்னிக்கு டாஸ்மாக் கிடையாது.
தெரிஞ்சுகினேன்.

அய்யா வணக்கமுங்க..
வந்தாச்சா ?

நல்லா இருக்கீகளா ?

ஜனவரி 28 வருவீகளா ?

சு தா.

மோகன்ஜி சொன்னது…

மனோ மேடம்!
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி! உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் GMB சார்!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

//ஒவ்வொரு ஆண்டுத்துவக்கத்திலும் கழிந்த ஆண்டில் நான் இருந்த முறையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பேன் ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷன்//
அதுவே சீரிய வாழ்க்கைமுறைக்கு வழி அல்லவா?

//ஆன்மீக விஷயங்கள் பல இடங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறதோ என்று தோன்றுகிறது நன்நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் வித்க்ஹியாசம் தெரியாமல் இருக்கிறதோ ?//

இன்றைய சமுதாயத்தின் பிரச்னையை சரியாக சொல்லிவிட்டீர்கள். சாற்றை வழியவிட்டுவிட்டு சக்கையை சுமந்து திரிகிறார்கள்.
ஆன்மீகத்தேடல் நம்மை நமக்கே அடையாளம் காட்டும்.
நடைவண்டியின் உபயோகம் தன்னால் நடக்கத் தெரியும் வரை.... புறவயமான ஆன்மீகப் பயணம் அம்மட்டே... 'அந்தர்முக ஸமாராத்யா பஹிர்முக துர்லபா'எனும் கூற்று பறைசாற்றும் உள்ளொளிப்பயணம் ஆன்மீக முதிர்வில் தொடங்கவேண்டும். அப்போதே 'சக்தி'யை உணரலாம்.. கரையில் நின்றுகொண்டு சமுத்திரமே நுரையால் ஆனது என்பதல்ல ஆன்மிகம்...
//ஆனால் நான் உண்மை பேசினால் பலரும் தவறாகப் பொருள் கொள்கிறார்கள்//
நம் மனதும் நோக்கம் தூய்மையும் தெளிவும் கொண்டிருக்கும்போது பிறர் பற்றி ஏன் கவலை கொள்ளவேண்டும்... ஊதும் சங்கை ஊதியபடி செல்வோம்.. உங்கள் வாசகனாய் அப்படி என்றும் நான் உணரவில்லை GMB சார்!
//நான் கேட்டிருந்த துரோணர் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் செய்யவும் // அடடா... நான் சுத்தமாய் மறந்தே போனேன்! இந்தவாரம் மலையாத்திரை முடிந்து வந்தவுடன் அதைச் செய்கிறேன்... ஸாரி!
இந்த முறை பெங்களூரு வரும் போது அவசியம் உங்களை சந்திப்பேன்.. வரும் நாட்கள் உன்னதமாய் அமைய பிரார்த்தனைகள்!

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சு.தா!
உத்தரணி ஜலம் . அது போதும்...
ஆஹா! முன்பு எப்போதோ ஒரு கவிதை எழுதியிருந்தேன் 'பிரசாதம்' என்று..

பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......

படித்த என் அப்பா " உனக்கினி உத்தரணியைப் பார்த்தால் காயத்ரி ஞாபகம் வருமா இல்லை காதல் ஞாபகம் வருமா?" என்று சிரித்தபடி கேட்டார்....அசடு வழிந்தது நினைவுக்கு வருகிறது!

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்!அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!
அடடா! இதெல்லாம்தான் தானே உங்க கண்ணுல படும்? இன்னும் என்னென்ன கேக்கப் போறீயளோ?? பேனர் எல்லாம் கட்டசொல்லியிருக்கேன் உமக்கு... தோழன் இல்லாம நான் தாலியை ...

மோகன்ஜி சொன்னது…

சு.தா!

ஜனவரி 28 வருவீகளா ? ஏதேது... அந்தாளோட நீங்களும் கொண்ட்டாடியிருக்காப்பல எல்லா தெரியுது...
தேதி ஜனவரி27... என்னை கன்பியூஸ் பண்ணாதீங்க தல....

sury siva சொன்னது…

//அந்தாளோட நீங்களும் கொண்ட்டாடியிருக்காப்பல எல்லா தெரியுது...
தேதி ஜனவரி27... என்னை கன்பியூஸ் பண்ணாதீங்க தல....///

அய்யய்யோ !!

நாஸ்தி. நாஸ்தி.

என்றோ படித்த கவிதை எனக்கும் நினைவு வருகிறது.
அப் கோர்ஸ் ஹிந்தி கவிதை. ஸ்ட்ரிக்டா ஹிந்தி இல்லை.
வ்ரஜ பாஷா (இன்றைய இந்திக்கு கொள்ளுத் தாத்தா )

नाहि नाहि कहै
थोरे माङ्गो सब देन कहै।

நாஹி நாஹி கஹை
தோடோ மாங்கோ சப் தேன் கஹை.

இல்லை என என்றைக்குமே சொன்னது
இல்லை.
இதழ் ஓரம் தா என்றால்
இருப்பதெல்லாம் தந்தேன்
என்றாள் .
இனித்தாள்

இது காயத்ரி இல்லை.
மேனகை.

சு தா.
பி.கு.

சீ. சீ. அப்பாதுரை வந்தாலே கச முசா எல்லாமே கண்ணுக்கு முன்னாலே வருது.
ஓரம் போ. ஓரம் போ.
குருமூர்த்தி சர்மா வர்றார்.
அதெல்லாம் அப்பறம். 27ந்தேதிக்கு பின்னாடி.



sury siva சொன்னது…

//அப்பாதுரை வந்தாலே //

அப்பாதுரை சார் வரும்போது !!
அவர் எப்போ வருவாரோ !
ஆனா வரும்போது,
அவரோட ஒரு வாரத்துக்கு,
ஏகப்பட்ட ப்ரோக்ராம் இருக்கு.
முதல் நாள்
கற்பகாம்பாள் சன்னதிக்கு போய் சௌந்தர்ய லஹரி படிக்கணும்.
இரண்டாம் நாள்,
எங்க குரு ஸ்வாமினி க்ளாசுக்கு போய்,
பிரும்ம சூத்ர உபன்யாசம் விளக்கம் கேட்கணும்.
மூன்றாம் நாள்,
ருக்வேத பாடசாலை லே அந்தச் சின்னஞ்சிறு சிறார்களுடன்
ருத்ரம், சமகம் படிக்கணும்.
நான்காம் நாள்,
நயாகரா லேந்து நாலு சொம்பு
நல்ல தீர்த்தம் கொண்டு வரேன் அப்படின்னு சொல்லி இருக்கார்.
அத ப்ரோக்ஷனம் பண்ணிக்கணும்.
அஞ்சாம் நாள்,
.......

என்ன அது !!
அப்பாதுரை சார் காணலையே !!
கும்பகோணம் போய் இருப்பாரோ ?
அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிண்டு தான்
நாலாவது ஆஸ்ரமம் போகணும் அப்படின்னு
சாஸ்திரம் சொல்றது.

பார்ப்போம்.

சு. தா.

msuzhi சொன்னது…

ஹிஹ்ஹி

msuzhi சொன்னது…

i plan to be there in 'spirit' 😎

msuzhi சொன்னது…

துரோணரை இன்னும் விடலியா சார் நீங்க?

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஸ்பிரிடல வருவேன் ஸ்பிரிட்டா வருவேன்னு சொன்னா நடவாது துரையாரே! ('துரையாரே'ன்னு iphoneல அடிச்சா 'நுரையீரல்' ன்னு ஸஜஸ்ட் பண்ணுது அண்ணே ! பாத்துக்குங்க பாஸ் !). நீங்க வரலேன்னா உங்க ஊருக்கு டிக்கெட்அனுப்புங்க ... வ்வ்வாரோம்....

sury siva சொன்னது…

இன்னாச்சு தெரியல்ல...

மூணு தேதி கூட ஆகல்ல...

ஸ்பிரிட் ஆ ஆரம்பிச்ச உறுதிப்பாடு எல்லாம் ஊத்திகிடுச்சே..
சே..
ஸ்பிரிட் ஆ போய்கினு இருக்கே...

போற போக்கை பார்த்தா
நம்ம கூட கோஷ்டி லே சேந்துவிடுவோம் போல இருக்கே...

காமோ காரிஷித் மன்யுரகாரிஷித் நமோ நமஹ.

28ந்தேதிக்கப்பரம் புதுசா பூணூல் போட்டுண்டா போச்சு..



சு தா.

Geetha Sambasivam சொன்னது…

//தேதி ஜனவரி27..//

ஹூம்! :( என்னைக் கூப்பிடவே இல்லை! :(

Unknown சொன்னது…

பரப்பிரம்மம் ஜகன்நாதம்......