வெள்ளி, மார்ச் 25, 2016

‘பியார் கி புல்புல்’

நேற்று முன்மாலைப் பொழுது இந்த அறைக்குள் வந்தபோதே ஜன்னல்வழியே கடல் என் கண்களை நீலமாய் நிறைந்தது. எப்போது மும்பைக்கு வந்தாலும் இதே பழைய ஓட்டலில் தான் நான் தங்குவது. அறைகூட இதுவாய்த்தான் இருக்கும்.காரை உதிர்ந்து இருட்டடித்துப் போன அறை. அறையிலிருந்து பார்க்கும்போது எதிரே விரிந்த கடலுக்கும் ஓட்டலுக்கும் இடையே ஓரிரு பெரிய கட்டிடங்களும் ஊடே ஓடு சார்ப்பு வைத்த வீடுகளும்,பிளாஸ்டிக் ஷீட் மூடிய குடிசைகளுமாய் கலந்து காட்சியளித்தன.

இன்று சொல்லியிருந்தபடி காலை ஒன்பதுமணிக்கு சந்திக்க அலோக் வரவில்லை. மணி பத்தாகிவிட்டது . வெளியே ஒரே சீராக பெய்து கொண்டிருக்கும் மழையையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மரங்கள்கூட எந்த ஆட்டமுமின்றி கட்டிடங்களோடு பேசிவைத்ததுபோல் மௌனமாய் மழையின் மூர்க்கத்தில் சமைந்து கிடந்தன. அந்த மழையின் தாக்குதல் அவற்றுக்கு மிக வேண்டியிருக்கிறதோ என்னவோ? மூச்சுவிடாமல் முத்தமழை பொழியும் கணவனை மறுக்காமல், மௌனமாய் கண்மூடி ஏற்றுக்கொள்ளும் அல்லது சகித்துக்கொள்ளும் புதுமனைவியைப் போல அந்த மழை..... மழையோ மரங்களோ கட்டிடங்களோ புதியவை அல்ல. எனினும் அந்த முயக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கணவர்களோ தங்கள் பழைய மனைவிமார்களுக்கு இன்னமும் முத்தம் கொடுக்கிறார்களா என்று தெரியாது. ஏனெனில் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

என்னடா இவன் வர்ணனையும பேச்சும் எழுத்தாளனைப்போல இருக்கிறதே என்று யோசிக்கிறீர்கள் தானே? நான் வாசு. வாசுதேவ சர்மா. புகழ்வாயந்த எழுத்தாளனாய் இருக்க வேண்டியவன். எல்லாம் உங்களால்தான் ! எழுத்தாளன் தான் எழுதுகிறானே,அவனுக்கு யார் சோறு போடுவது என்று யோசித்தீர்களா? குட்டிச்சுவராய் போய்விட்ட இந்த சமுதாயத்தில், எழுத்தாளனைப் போஷிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருக்கிறதா? அட உங்களை விடுங்கள். ஒன்பதுமாதம் சுமந்து பெற்ற அம்மாவே சோறுபோட மறுத்துவிட்டாளே.... ‘வெட்டியாய் உட்கார்ந்து கிறுக்கிகிட்டு கிடக்காம, படிச்ச படிப்புக்கு ஒரு வேலைக்குப்போகிற வழியைப் பாரு!’ என்று கராறாக அல்லவா சொல்லி விட்டாள்? எதிர்வீட்டு ரேவதிக்கு நான் எழுதிய கவிதை பிடிக்கவில்லை. போகட்டும். அவளைப் பெற்ற அப்பனுக்கு அந்தக் கவிதை ரொம்பவே பிடிக்காமல் போய்விட்டது. ஆள்,படை,அம்புன்னு ஆர்ப்பாட்டமான ஆள். இரவோடுஇரவாக நான் மட்டும்  மாயவரத்திலிருந்து இடம்மாற வேண்டி வந்தது.

சிங்கார சென்னை என்னை அரவணைத்துக் கொண்டது. அங்குஇங்கு எனத் திரிந்து கோடம்பாக்கம் எனும் சொப்பனபுரிக்குள் நுழைந்துவிட்டேன். திரையில் காணவேண்டிய முகமாய் இருந்திருந்தால்தான் ரேவதிக்கு என் கவிதை பிடித்திருந்திருக்குமே! என் ஜோலி திரைக்குப் பின்னால்தான். பின்னாலிருக்கும் பெரும்உழைப்பு யாருக்கு இங்கே தெரிகிறது? கட்டியிழுக்கும் அந்த பெரும் சங்கிலியில், ஒரு கண்ணி சரியில்லை என்றாலும் தேர் நகருமா? அந்த சங்கிலியின் சிலகண்ணிகள் இப்போது எனக்கு அத்துப்படி. அவற்றில் சுழலும் அல்லது உழலும் முகம் தெரியாத பல நூறு பேர்களில் நானும் ஒருவன். கெட்டிக்காரன் என்று பேரெனக்கு. கிளாப் அடிப்பதிலிருந்து வசனம் சொல்லிகொடுக்கிற வரைக்கும்,எல்லாமுமே செய்வேன். சின்னசின்ன பேனர்களில் தான் வாய்ப்பு இதுவரை.... இப்போதுகூட ஒரு சின்ன பட்ஜெட் படமொன்றுக்கு லொகேஷன் பார்க்கத்தான் மும்பை வந்திருக்கிறேன். என்னைமாதிரி பாலிவுட்டில் ஒரு புரொடக்‌ஷன் அசிஸ்டெண்ட்டுதான் அலோக். அவனுக்காக காத்திருக்கும் இந்த கேப்பில் தான் உங்களோடு அளவளாவியாகிறது.

இவனை இன்னும் காணோம். மழைவேறு. நான் சம்பந்தப்பட்ட இந்த திரைக்கதைப்படி, கதாநாயகி மும்பையில் வேலைக்கு சேர வருகிறாள். அவளை வழிமறித்து ரௌடிகள் துரத்துகிறார்கள். அவள் தெருக்களில் நுழைந்து ஓடுகிறாள். யாரும் தட்டிகேட்க முடியாத கெட்டபையர்கள். கேட்க நிற்கிறான் ஒருவன். அவன் கையை வெட்டுகிறார்கள். ஆனால் அவளும் எப்படியோ தப்பிக்கிறாள். தனக்காக வெட்டுபட்ட வாலிபனை கண்டுபிடித்து உதவ நினைக்கிறாள். அந்தத் தேடலில் தமிழகம் வருகிறாள்.

அதுவரைத்தான் கதை தீர்மானமாகி இருக்கிறது. மேற்கொண்டு மூன்று வேறுவேறு கதைத்தொடர்ச்சிகள் டிஸ்கஷனில் இருக்கிறது. அந்த மூன்றிலும், ஒன்று ரொம்ப சுமாரான கதையோட்டம். பிரச்னை என்னவென்றால்,அதை ஓட்டியவர் படத்தின் தயாரிப்பாளர். அவரே ஒரு எழுத்தாளராம். இத்துப்போன பத்திரிகை ஒன்றில் ‘செத்துப்போச்சு காதல்’ என ஒரு சிறுகதை வெளியாகி இருக்கிறதாம். ஜெயிக்கிற கட்சியோடு இருந்துவிடலாமே என்று தயாரிப்பாளர் முடிவுக்கு சபாஷ் போட்ட என்னை யாருமே ரசிக்கவில்லை. யார் ரசித்து என்னாகப் போகிறது? பழைய வசனகர்த்தா முறுக்கிக் கொண்டு போனால் அடுத்த வசனகர்த்தா நானே தான். பெரிய பிரேக்.....

இப்போதைய பிரச்னை என்னவென்றால் எனக்கு தரப்பட்டிருக்கிற பணம் மூன்று நாளைக்குத்தான் காணும். அதற்குள் லொகேஷன் போய்வர பயணச்செலவு, தின்னும் பிரியாணி, பருகும் பீர் ,மெல்லும் பீடா, ஊதும் சிகரெட் என செலவையெல்லாம் முடித்துக்கொள்ள வேண்டும். அதான் சொன்னேனே பட்ஜெட் சின்னதாக என்று....அலோக் படவாவை இன்னும் காணவில்லை. என் தயாரிப்பாளருக்கு எங்கேயோ அறிமுகமான ஹிந்தி டைரக்டர் ஒருவரின் உதவியாளனாய் இருந்தவன்தான் இந்த அலோக். திருவாழத்தான்.....

ஒரு வழியாக மாலை மூன்றுமணிக்கு அலோக் வந்தான். கொஞ்சம் அதிகமாகவே திட்டிவிட்டேன். ‘மாஃப் கர்னா மாஃப் கர்னா’ என்று கெஞ்சித் தள்ளிவிட்டான். ஆட்சேபணை இல்லையென்றால், அவன் வீட்டில் மாடி ரூமிலேயே தங்கிச் கொள்ளவும் சொன்னான். நமக்கும் காசு கட்டிவருமே என்று சின்ன பிகுவுக்குப்பின் அவன் அழைப்பை ஏற்று அவன் வீட்டுக்கு சென்றேன் . அவன் மாடி என்று சொன்னது தரையிலிருந்து எட்டு கள்ளிப்பலகை படிக்கட்டுகளுக்கு மேல் நாலுக்குஆறு விஸ்தீரணத்திலான ஒரு கள்ளிப்பலகை தளத்தைத்தான். அதிலிருந்து நாலடி உயரத்தில் முட்டும் மேற்கூரை. அதில் ஊர்ந்துதான் சென்று படுக்க வேண்டும். அபத்திரமாய் அந்தரத்தில் சின்னதாய் ஒரு கருப்பு 'மின்னி' ஃபேன் வேறு!அலோக்குடன் கூடவே வீட்டில் வசிப்பது படுத்தபடுக்கையாய் அவன் அம்மா, பருவச் சிட்டுபோல் ஒரு தங்கை மற்றும் ஒரு நாட்டு நாய்.

மறுநாள் லொகேஷன் பார்க்கப் போகும்போது என் கையைப் பிடித்துக்கொண்டு அலோக் ஒரு உதவியைக் கேட்டான். கொஞ்சம் சிக்கலான உதவிதான். அவன் அம்மாவுக்கு கான்சர் என்றும், எப்போது வேண்டுமானாலும் இறந்து விடுவாளென்றும், தங்கைக்கு மணமாகவில்லையே என்ற குறையில் அவள் மருகிக் கொண்டிருப்பதாயும் சொன்னான். நான் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டேன். அடுத்தநாள் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போவதாயும், அவளிடம் அவன் தங்கையை நான் பெண்பார்க்க வந்திருப்பதாய் பொய் சொல்லியிருப்பதாகவும் சொன்னான். அன்று அம்மாவிடம் அவன் தங்கையைப் பிடித்திருப்பதாயும் கல்யாணம் செய்து கொள்வதாயும் மட்டும் சொல்லிவிட சொன்னான். தன் அம்மாவின் இறுதி கணம் அந்த சந்தோஷத்திலேயே முடியட்டும் என்று கண்ணீர்மல்க கைகூப்பினான். அந்த உதவியை அவன் ஆயுளுக்கும் மறக்கமாட்டான் என்றும் மூக்கை சிந்தினான்.

எனக்கு ரொம்ப தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. செத்துப் போகிறவளிடம் பொய் சொல்லலாமா? பேயாய் வந்து சிண்டை உலுக்கிவிட மாட்டாளோ? என்று பயமாய் இருந்தது. நாலாவது புளோரில் படப்பிடிப்பு நடக்கும் தெலுங்குக்கதை இப்படித்தான் போகிறது. அதன் உதவிஇயக்குனர் ராகவராவ் அவனுக்கு அந்தக்கதையை சொல்லியிருக்கிறான். தெலுங்கு படப்பிடிப்பில் எனக்கு என்ன வேலை என்கிறீர்களா? அவர்கள் போடும் உப்புமா நெய்வாசத்துடன் நன்றாய் இருக்கும். தொட்டுக் கொள்ள கோங்குரா சட்னி வேறு. எங்க உப்புமாவிலே எங்க பட்ஜெட்டே ஸ்வச்சமாய் தெரியும்!

இருக்கிற இருப்பில் கல்யாணம்கார்த்தின்னு நினைப்புக்குகூட வருவதில்லை எனக்கு. இந்த ஃபீல்டுக்கு வந்தபுதிதில் ஒரே கனவுகனவாக இருந்தது. என் திறமையைப் பார்த்து ஒரு ‘ம’நடிகை என்னைக் காதலிப்பதாகவும், திருப்பதியில் கல்யாணம் செய்து கொள்வதாயும் ஒருநாள் கனவு வந்தது. அடுத்த நாளிலிருந்து அந்தக் கனவை ரீவைண்ட் செய்தபடி தூங்கிப்போவேன்.. மேக்கப் போட்டுக்கொண்டிருந்த ‘ம’வை தற்செயலாகப் பார்த்தபிறகுதான் அந்த மயக்கம் தெளிந்ததுன்னு வச்சிக்குங்களேன்.

ஆனா இப்போதைய சீன்ல, என்னையும் ஒரு ஆளா மதிச்சு கல்யாணத்துக்கு நடிக்கிறமாதிரி ஒருத்தன் கூப்பிட்டாலும், பொய்சொல்ல மனசு கேட்கவில்லை. ஆனாலும் ஆலோக்கின் கண்ணீர் என்னை கரைத்துவிட்டது. ஒத்துக் கொண்டேன்.

மறுநாள் ஸ்பாட்டுக்கு கிளம்புமுன், அம்மாக்காரியின் படுக்கைக்கருகில் நின்றேன். கொஞ்சம் நிற்கமுடியாமல் தான் நின்றேன். இலுப்பை பூத்த வாசனை, யூகலிப்டஸ் தைலம், புளித்த பால் என எல்லா வாசனையும் கலந்து ஒரு வீச்சம்.
“ஆவோ பேட்டா’’ என்றாள்.
“நமஸ்தே மா! மே ஆப்கி பேடி கோ சாதி கர்ணா சாத்தா ஹூங்!”

மனசுக்குள் அமிதாபச்சன் வாய்ஸ் போல் நினைத்தபடி தான் சொன்னேன். அது கொஞ்சம் சுருளிராஜன் குரலில் வெளிப்பட்டுவிட்டதோ எனும் ஐயம். ச்சே! இருக்காது.

“அச்சா பேட்டா! பகுத் அச்சா!” என்று அந்தம்மா துள்ளியெழுந்து படுக்கையில் உட்கார்ந்து என் தோள்களைப் பற்றியிழுத்து என் உச்சி முகர்ந்தாள். இந்தக் கிழவி பிழைத்துக் கிடந்தால் ஒரு புது நைட்டி வாங்கித் தரவேண்டும். அய்யய்யோ...இவள் பொழைச்சால் நான் செத்துடுவேனே.. என்ற பயமும் ஓடியது. ஆலோக் என் கைகளைப் பற்றி இழுத்து வாசலுக்கு வந்தான். “நன்றி வாசு! என் அம்மா படுக்கையை விட்டு எழுந்துஉட்கார்ந்து ஆறு மாசமாகிறது. உன் ஒரு வாக்கியத்தில் அந்த மாயம் நிகழ்ந்து விட்டது. இனி பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை வந்து விட்டது” என்றான்.

'அம்மா...பிழைச்சு... பிராமிஸ்... கல்யாணம்...’ என்ற என் குழறலைக் கேட்க அவன் அங்கிருந்தால் தானே?

உள்ளேயிருந்து வந்த ‘ஸ்னேகல்’ என்னைப் பார்த்தநிமிஷம் பட்டவெட்கம் இன்னமும் என்னைப் பதற அடித்தது.

ஸ்பாட்டுக்கு கிளம்பினோம்.. அலோக் காலையில் அந்த சீனே நடக்காதது போல், நான் வந்த வேலையிலேயே ஈடுபாட்டோடு உதவியாக இருந்தான். நாளெல்லாம் சுற்றி லொகேஷன் பார்க்கும் வேலை முடிந்தது. படபிடிப்புக்கு அவன் உதவி செய்வதாக சொன்னான். என் நட்புக்கு நன்றி சொல்லி விடைகொடுத்தான்.

நான் மீண்டும் ‘உன் அம்மா...பிழைச்சு... பிராமிஸ்... கல்யாணம்...’ என்ற பல்லவியை ஆரம்பித்தேன். ‘’அதையெல்லாம் விடு. நீ செய்த உதவியை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்’’ என்றான். இருவரும் எங்கள் விலாசங்களையும் பரிமாறிக் கொண்டோம்.

சென்னை மீண்டும் என்னை உஷ்ணத்துடன் இறுக்கிக்கொண்டது. தற்போதைய படவேலையில் கொஞ்சம் சுணக்கம் இருந்ததால், புதிதாய் பர்வதவர்தினி ப்ரொடக்ஷன்ஸ் ப்ராஜெக்ட்டில் என்னை அழைத்ததால் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தேன். இது கொஞ்சம் பெரிய பேனர். ஏதோ ஒரு மடம்.. எதானாலென்ன?! வேலையில் மும்முரமாய் இருந்தாலும், எனக்கு மும்பை சம்பவம் நினைவுக்கு வந்தபடி இருந்தது. 

ஸ்னேகலை நினைவுக்கு கொண்டுவர முயற்சித்தேன். அவள் கணுக்கால் வரை வீட்டுவேலையில் ஈரமான பச்சைக்கலர் சல்வார் சராய் நினைவுக்கு வருகிறது. சாயம் இழந்து வரும் பர்ப்பிள் கமீஸ் நினைவுக்கு வருகிறது. இடது தாடையில் பிறைநிலா போன்ற சிறிய தழும்பு நினைவுக்கு வருகிறது. நீளமான தலைமுடி நினைவுக்கு வருகிறது. சிவப்புக்கம்மல் போட்ட காதும், கருப்புமணி செயினும், ஹிந்தி நடிகை மும்தாஜ் போன்று கொஞ்சம் வானம் பார்க்கும் மூக்கும், லேசாக முடிபரவிய கன்ன ஓரங்களும், அந்தக் கீழ்வரிசை தெத்துப்பல்லும் சிவந்த பாதங்களும் தனித்தனியாய் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவளே ஒருசேர முழுசா நினைவுக்கு வரலையே.. அது என்ன பாட்டு?? “ஆசை முகம் மறந்து போச்சே... இதை யாரிடம் சொல்வேனடி தோழி”. அதான்.. அதான்... அது மாதிரி தான்..

அய்யய்யோ.. என்ன இது? இவ்வளவு விவரமாக அவளைப் பார்த்துத் தொலைத்திருக்கிறேன்?? என் மனசு எனக்கே தெரியாமப் போச்சே.. இருந்தாலும் அலோக் வீட்டு நிலைமை என்ன.. என்னோட... இருங்க.. இருங்க... எனக்கும் அப்படி என்ன பெரிய நிலைமை? பாட்டி சொல்லுவாளே பஞ்சபக்ஷ பரமான்னம்... அதா தட்டுகெட்டுப் போகிறது ? இருந்தா கிசான் ஜாம், இல்லன்னா வெல்லம்னு பிரட்டோட பிரட்டித் தின்கிற பவிஷுக்கு... எல்லாம் போதும்... என்ன? போதுமா?? முடிவே பண்ணிட்டேனா?? அப்படி மும்பை போனா அலோக் வீட்டில் தங்குற வசதியாவது இருக்கா?

‘என்ன பெரிய வசதி? கள்ளிப்பலகை மாடித்தலத்தில் தான் முதலிரவு வச்சுக்கணுமா? ஐயையோ என்ன இது முதலிரவு அதுஇதுன்னு பேத்தறேன்... முடிவே பண்ணிட்டேனா?
மெள்ளமா கூப்பிட்டு பார்க்கிறேன்...’ஸ்னேகல்... ஸ்னேகல்...’ நல்லாதாண்டி இருக்கு உன்பேரு...செல்லமா பேரை எப்படி சுருக்கி கூப்பிடலாம்? ‘ஸ்னேக்’.. சீ! ஸ்னேக்குன்னா பாம்பாச்சே... அவ பச்சைக் கிளின்னா...’ஸ்னோ’ ஓக்கேவா? அது ‘பனி’ன்னா .. பேரு சில்லுண்டிருக்கே! ஆஹா!

திடீர்ன்னு எல்லாம் பளிச்சின்னு தெரியுது எல்லா ஜன்னலையும் திறந்தாப்புல......என் குதூகுலத்துக்கு இப்போ  வந்த அன்னக்கிளில மியூசிக் போட்டாரே.. பேரு என்ன? ஹாங்... இளையராஜா... ஆமாம், அவரைத்தான் ஒரு பாஸ்ட் சாங் போட சொல்லணும்.. வார்த்தைகள் எதுக்கு? எல்லா இன்ச்ட்ரூமெண்ட்டையும் அதிரவச்சு... ஒரு லாங் நோட்டா ப்ளூட்டை இழையவிட்டு... வேணும்னா லோ கீலே விசில்... அவருக்கு தெரியாதா? ராஜா எல்லாம் பார்த்துக்குவார்.
இன்னைக்கு சித்தூர் பக்கத்துலே பெரிய ஜெமீன் பங்களாவிலே ஷூட்டிங். ரூமை விட்டு ஸ்பாட்டுக்கு கிளம்பும்போது ஒரு கூரியர் பார்சல் வந்தது. அட ஸ்னேக் குட்டி.. சிச்சீ... என் ஸ்னோ.. ப்ரிய ஸ்னோ தான் அனுப்பியிருக்கா. பிரிக்க நேரமில்லை. ப்ளோர்ல பார்த்துக்கலாம்.

மனசெல்லாம் குறுகுறுன்னு ஒரு சந்தோஷம். பார்சலை பிரிச்ச பிறகு இந்த ஆவல் தரும் சந்தோஷம் இருக்குமோ என்னவோ? முதல்ஷோ ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்க காத்திருக்கும் டைரக்டர் போல பரபரன்னு இருக்கு.

தளத்துக்கு இன்னும் ஹீரோயின் வரவில்லை. ஒரு ஓரம் போய் பார்சலைப் பிரித்தேன். ஒரு ஊதா நிற ஸ்வெட்டர்; மார்பின் இடது பக்கத்தில் ஹிந்தியில் ஸ்னேகல் என எம்பிராய்டரி செய்திருந்தாள். சென்னையில் எதுக்கு ஸ்வெட்டர்?

கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் அவள் கைப்பட்ட ஸ்வெட்டரை ஆசையாய் முகத்தில் வைத்துக் கொண்டேன். கொஞ்சம் யூகலிப்டஸ் தைல வாசமோ...சீ என்னவொரு புத்தி எனக்கு?

ஸ்பாட்டில் பெரிய டைரக்டர் போட்டுக் கொண்டிருந்த கூச்சலில் கலைந்து என்னவென்று பார்த்தேன். மேக்கப்மேன் செல்வம் அண்ணனை என்னாச்சு என்று கேட்டேன்.

அன்றைய காட்சியில், கதாநாயகன் குளிர் ஜுரத்தோடு படுத்திருக்க அவனுக்காக கதாநாயகி ஸ்வட்டர் பின்னி எடுத்துவந்து,அதைப்  போட்டுவிட வேண்டுமாம். படப்பிடிப்பு சாமான்களில் ஸ்வெட்டர் இல்லையாம் . அதுவும் மேமாத வெய்யிலில் உள்ளூர் கடைகளில் ஸ்வெட்டர் எங்கு கிடைக்கும்?. யார் வீட்டிலாவது பழைய ஸ்வெட்டர் வாங்கிவர ப்ரொடக்ஷன் ஆள் போயிருக்கிறது. பழசையெல்லாம் போடமாட்டேன் என்று நடிகர் சத்தம் போட்டாராம். ஹீரோவை சத்தம் போடமுடியாமல், டைரக்டர் பொதுக் கூச்சலாய் போட்டபடி இருக்கிறாராம்.

சரசரவென்று ஹீரோவை அணுகினேன். “சார்! இந்த ஸ்வெட்டரைப் போட்டு பாருங்கள்” என்று ஸ்னேகல் அனுப்பிவைத்ததை நீட்டினேன். “புதுசு தான் சார்!”

அதைக் கையில் வாங்கியபடி “புதுசு போலத்தான் இருக்கு....ஆனா கொஞ்சம் நீலகிரித் தைலம் வாசம் வருதேப்பா?’ என்றார் ஹீரோ.

“அந்த வாசம் உங்களுக்கு கொஞ்சம் காட்சிக்கான ‘சிக் மூடை’க் கொடுக்கும் என்று தான் லேசாக தைலம் தெளித்தேன் சார்!”
“ப்ரில்லியன்ட்! ஐ லைக் யூ மேன்!” என்றார்.

டைரக்டருக்கும் முகம் பிரகாசமாகி விட்டது. கதாயாயகியும் ஊதாக்கலர் ஷிப்பான் புடவையில் வர டைரக்டரிடம் சொன்னேன்...

“இன்னைய படப்பிடிப்புக்கான மேடத்தோட புடவைக்கலர் பற்றியும், ஸ்வெட்டர் பற்றியும் நீங்கள் நேற்று பேசும்போது கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் சார்! அதான் ராத்திரியோட ராத்திரியா ஊதா புடவைக்கு மேட்சிங்கா, என் மனைவியை ஊதாக்கலரில் இதைப் பின்ன சொன்னேன் சார்! எதுக்கும் ஸ்பேரா ஒண்ணு இருக்கட்டுமேன்னு தான்! பாபாவோட அருள் பாருங்க... சமயசஞ்சீவியா இந்த ஸ்வெட்டரே கைகொடுத்துருச்சு சார்!” என்று அள்ளி விட்டேன். டைரக்டர் சாய்பாபா பக்தர்ங்கிறது இப்போ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

“என்ன டெடிகேஷன்?! என்ன முன்யோசனை! என் அடுத்த படம் ஜூலை மாசம் துவங்குது. நம்ம சார் தான் அதுலயும் ஹீரோ. என்னோட மூன்று அஸ்ஸோசியேட் டைரக்டர்ஸ்ல நீயும் ஒருத்தன். உன் கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்குய்யா....”என்ன சார் சொல்றீங்க?” என்று ஹீரோ சாரை நோக்கினார்.

“நல்ல ஐடியா!” என்று ஆமோதித்தார் ஹீரோ. “இதுல என்னப்பா ஏதோ எம்ப்ராய்டர் பண்ணி இருக்கு ஹிந்தில?”’

‘ஸ்னேகல்’ன்னு என் மனைவி பேர் சார்! அவள் பெயர் ஒரு மூலையிலே ஸ்க்ரீன்ல வரணும்னு அவளுக்கு ஆசை சார்! என்றேன்.

‘ஸ்னேகல்; நல்ல பேரு... ஹிந்திக்காரியா? சாரி! உன் சம்சாரம் நார்த் இந்தியாவா?

“ஆமாம் மும்பை பொண்ணு சார்!”

“நல்ல பேரு! ஜி.கே! ஷூட் பண்றப்போ ஸ்வெட்டர்ல இருக்குற இந்த பேரை ஒருதரம் டைட்டா ஜூம் பண்ணி எடுங்க!. சிஸ்டர் படம் பார்க்கும் போது சந்தோஷப்படுவாங்க ! ஹாப்பியா மேன்? உன் பேர் என்ன?

“வாசு சார்”
“வாசு.. மை பியூச்சர் டைரக்டர்! குட்!!”

வானில் மிதந்தேன்.

அடுத்த வாரம் மும்பை போகிறேன். என் அதிர்ஷ்ட ராணி ஸ்னோவை கல்யாணம் பண்ணிக் கொள்ள... அலோக்குடன் டிரங்கால் போட்டுப் பேசிமுடிச்சாச்சு.பைகுல்லா ரிஜிஸ்தர் ஆபீசில் சிம்பிளா கல்யாணம். சித்தி விநாயக் கோவில்ல அர்ச்சனை பண்ணிக்கிட்டு, அப்படியே சந்தோஷிமா சாட்கார்னர்ல ஜிலேபி, வடாபாவ், மசால் தோசா, பானிபூரி, புதினா சாய் வச்சு பத்துபதினைஞ்சு குடும்பங்களுக்கு ஒரு டின்னர். நாலே நாள். அப்புறம் சென்னை திரும்பி, மாயவரத்துக்கும் ஒரு நடை அம்மாவைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிட்டு வரணும். இத்தனை நாள் பார்க்கவராத தறுதலை, பம்பாய்க்காரியை கல்யாணம் பண்ணின பிறகு சமத்தா இருப்பேன்னு அம்மா நம்பணும். அம்மா என் கூடவே வந்தாள்னா எவ்வளவு நல்லாருக்கும்? இவ்ளோ நாழியா படிக்கிற நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணனும்.

மச்சினன் அலோக்குக்கும் ஒரு ராஜேஷ்கன்னா படத்துல வேலைசெய்ய வாய்ப்பு கிடைச்சிருக்காம். அவங்க அம்மாவோட கேன்சர் என்னாச்சுன்னு கேக்குறீங்களா? அவங்களுக்கு வெறும் கேஸ் ட்ரபிள்தான்னு டாக்டர் சொல்லிட்டாராம். அவுங்க சின்னசின்ன ரோல் டிராமா சினிமாவுலல்லாம் செய்வாங்களாம்... நல்லா க்ரோஷா வொர்க், எம்ப்ராய்டரில்லாம் தெரியுமாம். ஸ்வெட்டர் எல்லாம்கூட பின்னுவாங்களாம்.

இதெல்லாம் என்னோட ‘பியார் கி புல்புல்’ ஸ்னேகல் தான் சொன்னா. எனக்கு இனிமே கைச்சமையல் பண்ணிக்கிற  கஷ்டம் எல்லாம் இல்லை. சொல்ல மறந்துட்டேனே! நான் ஸ்னேகலை முதல்ல பார்த்த அன்னைக்கு காலைல ‘ப்போகா’ன்னு ஒரு டிபன் பண்ணியிருந்தா பாருங்க! அடடா! அதெல்லாம் உங்களுக்கென்ன தெரியும்? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். என்ன நான் சொல்றது??

59 comments:

Geetha Sambasivam சொன்னது…

அமர்க்களம், பின்னிட்டீங்க! :)))) நல்ல நகைச்சுவையும் கூட! ஆமா, இதிலே ஒரு ஏக்கம் தெரியுதே! அது ஏன்?

Geetha Sambasivam சொன்னது…

மத்தவங்க கருத்தும் வரட்டும். என்ன சொல்லப் போறாங்கனு பார்க்கலாம். கிட்டத்தட்ட இதைப் போலவே பாலகுமாரன்(?) எழுதி ஒரு கதை படிச்ச நினைவு! ஆனால் அவரோட பாணியிலே இருந்தது. :) இது கலக்கல்!

Geetha Sambasivam சொன்னது…

அந்தப் பாட்டி தன் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறதுக்காக இப்படி நடிச்சிருக்காங்கனு இந்த ம.ம.வுக்குப் புரியலை போலிருக்கே! :))))

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கதை...
உங்கள் நடையில் ரசிக்க வைக்கும் எழுத்து...
வாழ்த்துக்கள் அண்ணா.

ஜீவி சொன்னது…

மோகன்ஜி கதை இல்லியா?.. ஆர அமர டைம் எடுத்திண்டு படிச்சேன்.

எழுத எழுத அங்கங்கே இழுத்துண்டு போறதை மடக்கி மறுபடியும் இழுத்துண்டு வர்ற சாகசம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வெளி சமாசாரங்கள் நிறைய தெரிஞ்சி வைச்சிருக்கறதோட செளகரியம் பாருங்க.. அப்பப்போ அதை அதை தொட்டுண்டு அப்ப்டியே விட்டுட்டு மெயின் மேட்டருக்கு வரலாம். மீண்டும் தொட்டுண்டு அப்படியே விட்டுட்டு மெயின் மேட்டர்..இப்படித் தொட்டுக்கறதே நெறைய இருந்தா, ஒன் லைன் கதையா இருந்தாலும் கவலையில்லை, ஒன்னரை பக்கத்துக்கு எழுதி ஜமாச்சுடலாம்.. இந்த வேலைப்பாடெல்லாம் அசாதாரணமான வேலைங்கற ஞானோதயத்லே தான், 'நம்மால முடியாது, சாமி'ன்னு'இப்போலாம் வளவளன்னு பக்கம் பக்கமா கதைங்கற பேர்ல கலை வாசனை கிச்சித்தும் இல்லாத வரிச்சரித்திரம் எழுதிக் கொண்டிருக்காங்கறதும் தெரிஞ்சது. போகட்டும்..

ஆனா ஒண்ணூ சொல்லணும். முடிவுன்னு இப்படி எதிர்பார்க்கலே. வேறே மாதிரி..

'ஸ்னேகல்' எழுத்து போட்ட, டைட்டா ஜூம் பண்ணி எடுத்த அந்த ஸ்வெட்டர் எழுத்துக்களை அப்படியே விட்டிருக்கக் கூடாது' என்று மட்டும் யோசனை ஓடியது உண்மை.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அருமையான கதை. மிகவும் ரசித்துப் படித்தேன்.
தங்களின் முந்தைய பதிவுகளையும் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டேன். நேரம் வாய்க்கும்போது வாசிப்பேன்.

ரிஷபன் சொன்னது…

அப்படியே வரிக்கு வரி ஜீவி என் மனசோட ஒத்துப் போகிறார்

ஸ்ரீராம். சொன்னது…

//இத்துப்போன பத்திரிகையில் 'செத்துப்போன காதல்'//

என்ன ஒரு ரைமிங்! ரசித்தேன். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இரண்டு படங்கள் எடுக்க இருப்பதாய்ச் சொல்வார் நினைவிருக்கிறதா?

//மேக்கப் போட்டுக்கொண்டிருந்த ‘ம’வை தற்செயலாகப் பார்த்தபிறகுதான் அந்த மயக்கம் தெளிந்தது//

ஹா... ஹா... ஹா... டிபிகல் நடிகை ஜோக்!

மும்தாஜுக்கு வானம் பார்த்த மூக்கா!!! ஹையோ!

கடைசியில் எல்லாம் திட்டமிட்ட நாடகம்! கிழவி பின்னிய ஸ்வெட்டர் என்று தலைப்பு வைத்து ஒரு படம் பண்ணி விடலாம்!

அப்பாதுரை சொன்னது…

முதல் பத்து வரிகளில் தோன்றிய முறுவல் கடைசி வரையில். சபாஷ்!

அப்பாதுரை சொன்னது…

// 'நம்மால முடியாது, சாமி'ன்னு'இப்போலாம் வளவளன்னு பக்கம் பக்கமா கதைங்கற பேர்ல கலை வாசனை கிச்சித்தும் இல்லாத வரிச்சரித்திரம் எழுதிக் கொண்டிருக்காங்கறதும் தெரிஞ்சது. போகட்டும்..

இப்படி வார்ரீங்களே, நியாயமா சார்? அப்படியென்ன பிரமாதமா எழுதிட்டாரு உங்க மோகன்ஜி? க்கும்.. :-)

sury siva சொன்னது…

நீளமான தலைமுடி நினைவுக்கு வருகிறது. சிவப்புக்கம்மல் போட்ட காதும், கருப்புமணி செயினும், மும்தாஜ் போன்று கொஞ்சம் வானம் பார்க்கும் மூக்கும், லேசாக முடிபரவிய கன்ன ஓரங்களும், அந்தக் கீழ்வரிசை தெத்துப்பல்லும் சிவந்த பாதங்களும் த////

அப்ஜக்ஷன் மை லார்டு.

இதா வானம் பார்க்கும் மூக்கு?
முழிகள் இரண்டையும் திறந்து சரியாய் பாரும்.
www.youtube.com/watch?v=LoH12qRbjFU

என்னோட கற்பனை லே...

சினேக ல் எப்படி இருப்பா அப்படின்னா ..
அம்பாள் அம்சம் அப்படின்னு வச்சுக்கோங்க.

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.


சு தா.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
//அமர்க்களம், பின்னிட்டீங்க! :)))) நல்ல நகைச்சுவையும் கூட! ஆமா, இதிலே ஒரு ஏக்கம் தெரியுதே! அது ஏன்?//

நன்றிக்கா! ஒரு கதை லேசா எழுதலாம்னுதான்.... ஏக்கம் தெரியுதென்றால்.....ஒரு நல்ல கதை எழுதிடணும்னு ஏக்கம் தான்...

மோகன்ஜி சொன்னது…

இது போல பாலகுமாரன் அவர்பாணியில் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டீர்கள். இந்த ஸ்டோரி லைன் இருக்கே... அது வண்டிபின்னே வண்டியாகச் சென்று சேற்றுத்தடமான மழைக்கால சென்னை ரோடு. ஒரோருதரம் எல்லோருமே கடந்து போக வேண்டித்தானே இருக்கும்! ஓட்டுகிறவன் சாமர்த்தியம்.... வண்டியும் பழுது படாமல், அடுத்த வண்டியிலும் இடிக்காமல் , நடக்கிற சனத்து மேலும் சேறடிக்காமல் ஓட்டினால் சரி.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,
//தன் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறதுக்காக இப்படி நடிச்சிருக்காங்கனு இந்த ம.ம.வுக்குப் புரியலை போலிருக்கே! :))))//
எனக்கே கதை எழுதி முடிக்கப்போகும் போதுதான் புரிஞ்சுதுக்கா!
ம.ம.ன்னா 'மனிதருள் மரகதம்' தானே?

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்! நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

ஜீ.வி சார்!

//மோகன்ஜி கதை இல்லியா?.. அதான்..// உங்க மனசில் எப்படி ஒரு இடம் இருக்கறதே எனக்கு ஆசீர்வாதம் ஜி.வி.சார்!

உங்களுடைய கருத்தின் ஒவ்வொரு வரியும் ரசனைக் காப்பேறிய நுண்ணிய மனசின் வெளிப்பாடு. தேர்ந்த வார்த்தைகளில் உங்கள் வாசிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் 'வேலைப்பாடு' எனும் பதத்தை ரொம்பவே ரசித்தேன்.

//அந்த ஸ்வெட்டர் எழுத்துக்களை அப்படியே விட்டிருக்கக் கூடாது' என்று மட்டும் யோசனை ஓடியது உண்மை// எனக்கு வேறொரு முடிவும் மனசில் ஓடியது. கொஞ்சம் ஸ்னேகலையும் களத்திலே இறக்கிப் பார்க்கலாமென்று கூட நினைத்தேன். ஆனால் வாசு கேரக்டரை focus இல் இருத்துவோம் என்றுதான் அப்படியே விட்டேன். ஸ்வெட்டரைத் தனது பிழைப்புக்கு சாமார்த்தியமாய் உபயோகித்த வாசுவின் வாழ்க்கை, அந்த ஸ்வெட்டரை வைத்தே பின்னப்பட்ட முரண்பாடு கதையில் குவிமையமாக அமர்ந்தது.

அன்புக்கு மீண்டும் நன்றி சார்!

மோகன்ஜி சொன்னது…

செந்தில் குமார்!
வந்ததிற்கும் வாழ்த்துக்கும் நன்றி! பதிவுகளைக் கண்டிப்பாய்ப் படியுங்கள். குருத்தையும் சொல்லுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்!
ஜீ.வி சாரோட வரிக்குவரி ஒத்துப் போகும் அன்புக்கு நன்றி. நேற்று கூட ன்நீங்கள்,நான், மூவார் சேர்ந்து எழுதிய கதையை ஒரு உரை வாசித்தேன். இனிமையான நாட்கள். இணையம் இப்போது கொஞ்சம் டல்லடிக்கிறதே... மீண்டும் ஜாம்பவான்களெல்லாம் இங்கு பதிவுகளோடு வரமாட்டார்களா என ஏக்கமாய்த் தானிருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீராம்!
'காதலிக்க நேரமில்லை'யை மறக்கமுடியுமா? பாலையா, நாகேஷ் இருவரும் சேரும் காம்பினேஷன் படங்கள் யாவுமே இணையற்றவை.

மும்தாஜுக்கு மேல்வாய் அமைப்பும் உருண்ட மூக்கும் அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். சுப்புத் தாத்தா இங்கு ஒரு வீடியோ இணைத்திருக்கிறார் பாருங்கள். ரசிக மணிகளப்பா !!

//கிழவி பின்னிய ஸ்வெட்டர் என்று தலைப்பு வைத்து ஒரு படம் பண்ணி விடலாம்!// பண்ணுவோம் ஸ்ரீராம்! லொகேஷன் பார்க்க இருவரும் கோவா போகலாமா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி அப்பாதுரை காரு! சுகமா? தளர்வான ஒரு மனசோடு தான் எழுதினேன்.

மோகன்ஜி சொன்னது…

துரை காரு!

// அப்படியென்ன பிரமாதமா எழுதிட்டாரு உங்க மோகன்ஜி? க்கும்.. :-)// தலைவா! நீங்க அடிக்காத விசிலா ஜீ.வி சார் அடிச்சிட்டாரு?
கொஞ்ச நாள் முன்ன தில்லானா மோகனாம்பாள் சினிமா ஆயிரமாவது முறையாய்ப் பார்த்தேன். டி.ஆர்.ராமச்சந்திரன் பத்மினியிடம் "இப்ப இப்ப சண்முகசுந்தரம் திருவாரூருக்கும் போறதில்லே.. நாயனத்தையும் தொடரதில்லே" என்று அங்கலாய்க்கும்போது உம்மை நினைச்சுகிட்டேன். நாயனத்தை எடுத்து ரெண்டு துக்கடா வாசியும் வித்தைக்காரரே!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சு.தா!
மும்தாஜுக்கு இப்படி ஒரு ரசிகரா! நானு மூக்கு நல்லா இல்லைன்னா சொன்னேன்??.. கொஞ்சம் ஆகாசத்தை பார்க்குதேன்னு இழுத்தேன்.. அடிக்க வரீங்களே! அற்புதமான பாட்டைத் தேடிஎடுத்து போட்டதற்கு நன்றி சு.தா! அதோடு இன்னமும் சில சேர்ந்து பார்த்தபடி இருந்தேன்.

ஸ்னேகல் பற்றிய உங்கள் வர்ணனை ரசித்தேன்.. அபிராமி! அபிராமி!!

தனிமரம் சொன்னது…

அருமையான கதை சார்! ஸ்னேக்கல் அப்படியே சினேஹா போல நினைத்து வாசித்தேன்[[

sury siva சொன்னது…

உங்க பதிலைப் படிச்சபின்னே தான் ஹார்ட் டாசிகார்டியா லேந்து ப்ராடிகார்டியா நிலைக்கு வந்தது.
மேலே படிச்சேன்.
அது என்ன பியார் கி புல் புல் ?

பியார் என்னும் ஒரு சொல்லே ஸ்வர்கம் ஆகும் .
யாருன்னு புரியுமுன்னே மனசை வாரும்

ஸ்னெஹல் ஸ்னோ விலே சந்தன ஹல் .

பியார் ஹுவா இக்றார் ஹுவா . லோகத்துலே இது ஒண்ணு தான் சத்யம் அப்படின்னு ஹி ..ஹி ..நானும் 62,63 லே ..

இருந்தாலும்,

ய க்யா ஹுவா. கைசே ஹுவா கப் ஹுவா ஜப் ஹுவா தப் ஹுவா
அப்படின்னு பாடி முடியறதுக்கு முன்னாடியே
முடிஞ்சும் போடும் சில சமயம்.

ஏன்னா ..

பியார் என்னும் நோய் புல் புல் ன்னு சொல்லமுடியாது.

அது pull பண்ணும்போது அதோட வேகம் bullish ஆ இருக்கும்.

அது சரி.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. அப்படின்னு வரதராசனார் சொல்றாரே.
இங்கே
ஏகதேச உருவகம் அப்படின்னும் சொல்றாரு.

இந்த ம. ம க்கு விளங்கும்படி சொல்லுங்களேன்.

சு தா.

கோமதி அரசு சொன்னது…

இவ்ளோ நாழியா படிக்கிற நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணனும்.//

ஆசீர்வாதம் செய்து விட்டால் போச்சு.
வாழ்க வளமுடன் வாசு,ஸ்னேகல்.


//அவங்க அம்மாவோட கேன்சர் என்னாச்சுன்னு கேக்குறீங்களா? அவங்களுக்கு வெறும் கேஸ் ட்ரபிள்தான்னு டாக்டர் சொல்லிட்டாராம். அவுங்க சின்னசின்ன ரோல் டிராமா சினிமாவுலல்லாம் செய்வாங்களாம்...நல்லா க்ரோஷா வொர்க், எம்ப்ராய்டரில்லாம் தெரியுமாம். ஸ்வெட்டர் எல்லாம்கூட பின்னுவாங்களாம்.//

ஸ்னேகல் அம்மா பின்னிய ஸ்வெட்டர் போலும் அதுதான் அந்த அம்மாவின் மேல் உள்ள யூகலிப்டஸ் வாசம் வருகிறது.

எப்படியோ கதையை சுபமாய் முடித்த விதம் அருமை.

Geetha Sambasivam சொன்னது…

நீங்க "மனிதருள் மரகதம்" தான் தம்பி. ஆனால் நானெல்லாம் ம.ம. தான். சந்தேகமே இல்லை. ம.ம.என்றால் மர மண்டை என்று பொருள் கொள்க! என்னைப் போல் உள்ளவர்களுக்குக் குழல் விளக்கு என்றும் அழைப்பது உண்டு. தாமதாமாகத் தான் புரிதல் மூளைக்குள்ளே மேலே ஏறும். :))))))

G.M Balasubramaniam சொன்னது…

காதல் எப்படி உருவாகிறது.மனக் குரங்கின் சேட்டைகள்தான் என்ன. வேண்டாம் என்று நினைத்தாலும் வேண்டும் என்று நினைக்கும் நினைக்காதே என்றாலும் நினைக்க வைக்கும் பார்க்காதே என்று சொன்னாலும் பார்த்துப் பார்த்து ரசித்ததை அசை போட வைக்கும்
/இருந்தா கிசான் ஜாம், இல்லன்னா வெல்லம்னு பிரட்டோட பிரட்டித் தின்கிற பவிஷுக்கு... எல்லாம் போதும்... என்ன? போதுமா?? முடிவே பண்ணிட்டேனா?? அப்படி மும்பை போனா அலோக் வீட்டில் தங்குற வசதியாவது இருக்கா?/ மனம் படுத்தும் பாட்டை வெகு அழகாகச் சித்தரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஜி

மோகன்ஜி சொன்னது…

நன்றி தனிமரம்! சினேகா கேட்டா சந்தோஷப் படுவாங்க பாஸ்!

மோகன்ஜி சொன்னது…

சு.தா,
முதலில் ஏகதேச உருவக அணி.
இலக்கணத்தில் சுவாரஸ்யமானது அணி.
அணிகளில் தான் எத்தனை வகைமைப் படுத்தல்?! இலக்கண கிளாஸ் எடுக்கும் உந்துதலை அடக்கிக் கொண்டு, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.
ஏகதேச உருவக அணிக்கு வருவோம். உருவகிக்கப்படும் இரண்டு தொடர்புள்ளவற்றில், ஒன்றினை மட்டும் உருவகித்து மற்றதை (ஊகத்திற்கு) விடுதல் ஏகதேச உருவக அணியாகும்.
நீங்கள் குறிப்பிட்ட திருக்குறள்:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
காலைநேரத்தில் அரும்பி ,பகல் முழுவதும் முகிழ்த்து பேரரும்புப் போதாகி, மாலைநேரத்தில் நன்கு மலர்ந்துவிடும் மலரானது, காதல் வாதைக்கு உருவகிக்கப்படுகிறது.
அரும்பு, போது, மலர்ச்சியுற்ற மலர் என்று பூவின் வெவ்வேறு வளர்நிலைகள் போல, அதிகாலைக்கனவின் எச்சமாய், காதலன் குறித்த எண்ணங்கள் அரும்பு விட்டு, பகல்பொழுது ஏறஏற ,அவன் நினைவுகள் வளர்ந்து, அந்திசாயும் போது முற்றாக வளர்ந்து, தலைவியை துன்புறுத்துகிறது.
காதல்நோய்க்கு ஈடாக சொல்லப்பட்ட மலரின் வளர்நிலைகள், இன்பமான காதலுக்கும் பொருந்தி வருகிறது தானே? பூ மலர்தல்போலே, காலத்தின் போக்குக்கு ஏற்ப தலைவியின் பிரிவாற்றாமையின் துயரமும் வளர்ந்து ஆற்றாமை மிகுந்து வாடுகிறாள்.

மலரினும் மெல்லிய காமம் நோயாகி வளர்வதை, மலரின் வளர்நிளைகளுக்கு ஒப்பாக்கியதாலும், அதே மணம் வீசும் இன்பநுகர்ச்சிக்கான மலரை,மேலான காதல்வளர்ச்சிக்கும் சொல்லப்படாது விட்டபடியால், இந்த ஒப்பீட்டை ஏகதேச உருவக அணி என்று மு.வ கொண்டார்.

உங்களுக்குத் தெரியாததா என்ன?

சமஸ்க்ரிதம் படித்த காலத்தில் உபமா காளிதாசஸ்ய: என்று படித்திருக்கிறேன். உபமான உபமேயம் எப்படி இருக்க வேண்டும் என்று காளிதாசன் சொன்னதாக சொல்லப் பட்டதையும் கேட்டு எக்சைட் ஆயிருக்கிறேன். உங்களைக் கிளப்பி விட்டுவிட்டேனா?

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
//அது என்ன பியார் கி புல்புல்?//
ஆஹா! என் காதல் வானம்பாடியை இப்படிக் கேட்டுட்டீங்களே? மும்பைக் கதாநாயகியை வைத்துக் கொண்டு 'தமிழ் பாடும் குயிலே!'ன்னா தலைப்புவைக்கிறது.. உங்க ஹிந்ந்தி பாட்டெல்லாம் அமர்க்களம் தல !

என் நினைப்பெல்லாம் 6௨-63 லீலை பற்றித்தான்! எழுதுங்க சாமி!அதை வரிவிடாம எழுதுங்க !!

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்!
கதையை ரசித்ததிற்கு எ நன்றி! உகள் ஆசீர்வாதத்தை வாசு-ஸ்னேகல் ஜோடிக்கு சேர்த்து விடுகிறேன்!

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
நீங்க ம.ம.தான் அக்கா! மங்கையரில் மகராணி'
குழல் விளக்கு இல்லேக்கா... 'குத்து விளக்கு'

மோகன்ஜி சொன்னது…

GMB சார்! நலம் தானே! மனக்குரங்கின் சேட்டை தான் காதல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
ஆனாலும் இனிமையான சேட்டை தான். காதல் மட்டும் இல்லையென்றால் நாட்டில் கவிஞர்கள் என்ன செய்வார்கள்?! காதல் ரசாயனம் தான் உலகை சுற்ற வைக்கிறது. வெவேறு பெயர்களில்... வெவ்வேறு விதமாய்...

உங்கள் பாராட்டுக்கு நன்றி GMB சார்!



கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
ரசித்துப் படித்தேன்
நன்றி ஐயா

மோகன்ஜி சொன்னது…

நன்றி கரந்தையாரே!

kashyapan சொன்னது…

79-80 களில் திரைப்படம் ஓன்றில் நடித்தேன்.அபோது துணை இயக்குனர்கள், துணை நடிகைகள் ,தயரிப்பு நிர்வாகிகள் ஆகியவர்களின் பாடுகளை நேரில் பார்த்திருக்கிறேன் . இப்படியெல்லம் உண்மையில் நடந்துள்ளது எனப்து உமக்கு தெரியவேண்டிய ஆச்சரியம். மார்க்ஸ் சொல்வார் " there is no fiction" . கொஞ்சம் நீளம். நடையில் நகைச்சுவை கலந்த சோகம் இதன் spciality ! வாழ்த்துக்கள் ---காஸ்யபன். .

மோகன்ஜி சொன்னது…

நடிகர் காஸ்யபன் சார்!
நீங்கள் திரைப்படத்தில் நடித்தது புதிய செய்தி. பட விவரங்கள் சொன்னால் கொண்டாடுவேனே! எனக்கும் திரைப்படத் துறையில் பல அறிமுகங்கள் இருந்தன. டெக்னீஷியன்ஸ், பின்னணி இசைக் கலைஞர்கள், நடிகர்கள் சிலர் என பலருடன் பழகும் வாய்ப்பு இருந்தது. எனக்கும் பல சம்பவங்கள்,கஷ்டங்கள்,இடைஞ்சல்கள்,தியாகங்கள்,ஏற்ற இறக்கங்கள் எனக் காதில் விழும்.அவற்றின் வாசனையிலேயே நான்கு நாவல்கள் எழுதலாம். இங்கு தரப்படும் உழைப்பும், விளையும் பதற்றமும், சாதித்தேயாக வேண்டிய நிர்ப்பந்தமும் பிரமிப்பூட்டுபவை. அங்கு எழும் வெளிச்சத்திற்குப் பின்னால் இருக்கும் கஷ்டமும் கண்ணீரும் பலருக்கும் தெரியாது.
// மார்க்ஸ் சொல்வார் " there is no fiction" // சத்தியமான வார்த்தைகள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார் !
உங்கள் தளத்தில் என்னால் ஏன் கருத்திட இயலவில்லை?








அப்பாதுரை சொன்னது…

காலையரும்பி... மறந்தே போன மகத்தான குறள்.
சுப்புத்தாத்தா அவர்கள் வாசிப்பின் ஆழ அகலத்துக்கு ஒரு சலாம்.

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வசீகரமான நடை உங்களுடையது. என்ன ஒரு ஃபுளோ. தொடக்கத்தில் இருந்து நிறைவு வரை நகைச்சுவை இழையோடு அபாரமாக பின்னப்பட்ட (ஸ்னேகலின்)ஸ்வெட்டர் .

மோகன்ஜி சொன்னது…

துரை காரு,

நன்றாகச் சொன்னீர்கள். சுப்புத் தாத்தா குறளை மேற்கோள்காட்ட இரண்டு நாட்களாய் குறளில் மூழ்கிக் கிடக்கிறேன். குறள் வகுப்பெடுத்த ஆசிரியர்கள், குறள் விவாதம் செய்த நண்பர் குழாம் என்று எண்ணிஎண்ணி சுழல்கிறது மனசு.

சுப்புத்தாத்தா ஒரு ரத்தினம். வேறென்ன சொல்ல?

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் முரளிதரன்ஜி ! நலம் தானே? உங்கள் பாராட்டுக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா அவர்களின் கருத்து :
----------------------------------------------
sury Siva உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"‘பியார் கி புல்புல்’":

//வாசிப்பின் ஆழ அகலத்துக்கு ஒரு சலாம். //

வாசிப்பிலே ஆழம் முக்கியமா அல்லது அகலம் முக்கியமா?
அகல உழுவதிலும் ஆழ உழு என்பது பழ மொழி.
நான் செய்யாத ஒன்று.

எல்லாமே சிறிது சிறிது தெரிந்து நுனிப்புல் மேய்வதை விட ஏதேனும் ஒன்றிண்டு விஷயங்களில் ஆழமாக விசாரம் செய்து அதில் ஊன்றி இருப்பது தான் மேலோ என்று தான் இந்த வயதில் தோன்றுகிறது.

ஒரு பக்கம் பேதாலஜி, இன்னொரு பக்கம் பலர் பேத்தல் என்று சொல்லும் கவிதைகள் . குதிரைப் பந்தயம், பங்கு வணிகம் ஒரு பக்கம். காளிதாசன், கபீர், கம்பன் இன்னொரு பக்கம். கானா பாட்டு இந்தப் பக்கம். கர்நாடக சங்கீதம் அதன் அபார நுணுக்கங்கள் , அடலே பாடும்போது அதில் சுப்ரானோ குரலில் ஒலிப்பது தைவதமா, நிஷாதமா என்று சிந்தனை !!!! நடுநடுவே பீதோவன் கிளாசிகல் நோட்ஸ். தாலேலோ லே ஒலிக்கிற நீலாம்பரி லே லயிக்கிற நேரத்துலே, அந்த நீல மயில் மீது ஞால வலம் வந்தவன் ஒரு பக்கம். நீல மேக சியாமளன் இன்னொரு பக்கம். கணபதி லேந்து காளி வரை அஷ்டோத்திரம். மூல மந்த்ரம். விதுர நீதி வியாக்யானம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம். வீட்டிலே கிளி ஒன்றை வைத்துக்கொண்டு விலை மாது கிட்ட போற ஜென்மங்களின் மன நிலையையும் வேதியல் அடிப்படையில் அணுகவும் செய்ய முற்படும் உற்சாகம்.
போதாக்குறைக்கு வானியல், உளவியல்,அதற்கு தம்பிகளான, ஜோதிடம், மனவியல் மருத்துவம். உப்புமா பன்றதிலேந்து உபநிஷத் வரைக்கும் ஈடுபாடு,
இதெல்லாத்துலேயும் எதோ எனக்குத் தெரியும் என்ற அளவுக்கு பீத்திக்கொள்ள, ஒவ்வொன்றிலும் ஒரு மணி நேரம் பேசணுமா, பேசுவோம் என்று சொல்லலாமே தவிர,

ஒரு பக்கம் பார்த்தால் , கடந்த 75 வருஷங்களுமே வேஸ்ட் என்று தான் தோன்றுகிறது.
life is a bundle of variety. Yet unfocused one does justice to none.

விஸ்வம் தர்பண மான நகரி துல்யம் நிஜ அந்தர்கதம் என்று குருமூர்த்தி ச்லொகத்துலே சங்கரர் சொல்றது சங்கு ஊதும் நேரத்துலே அக்ஷர சுத்தமா புரியறது. அந்த மோகன முத்தான் வாக்யங்களை நினைவுக்கு கொண்டு வரும்போதே மும்தாஜ் பாட்டுலே மனசு சொக்கிப்போரது.
எல்லாமே மாயை. பேத்தல்.
நிஜம் ஒன்னு தான்.
நித்யம் ஒண்ணுதான்.
சத்யம் ஒண்ணுதான்.
சிந்தனையும் அதுல தான் .

தேகம் அநித்தியம். மரணம் நிச்சயம்.
சிவனை மறவாதிரு மனமே.

சிவாஸ் ரீகல் இப்ப வருதோ ???

சுப்பு தாத்தா.



27/3/16 7:56 முற்பகல் அன்று வானவில் மனிதன் இல் sury Siva ஆல் உள்ளிடப்பட்டது

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா !
மன்னியுங்கள். உங்கள் கருத்து நீங்கிவிட்டதால், மின்னஞ்சலில் இருந்து வெட்டிஒட்டி பதில் அளிக்கிறேன். உங்களின் ஆர்வம் பாயும் பல விஷயங்கள்பற்றி கோடிகாட்டி 75 வருஷம் வீணாகிவிட்டதாயும் சொல்லியிருக்கிறீர்கள்.

அகலமாய் உழவேண்டுமா ஆழ உழவேண்டுமா என்ற கேள்வியும் கூடவே....

இந்த ஆர்வ ஈடுபாடுகள் எல்லாமே்நமது மனத்தனிமையை வெல்ல நாம் மேற்கொள்ளும் செயல்களே எனத்தோன்றுகிறது. To kill our internal solitude. நாம் கற்றுக் கொள்வதற்காய் மேற்கொள்ளும் தேடல் பெரும்பாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நின்று விடுகிறது. அதற்குப்பின் கைகொள்வதேல்லாம் செய்தொழில் அறிவை புதுப்பித்துக் கொள்ளவோ, அல்லது பிறரை ஆச்சரியபட வைக்கவோ, மெச்சப்படுவதற்காகவோ தான் பலருக்கும்.

ஒரு சிலரே கற்றலில் உள்ள ஈடுஇணையில்லா சந்தோஷத்திற்காக தேடலே வாழ்க்கையாய் மாற்றிக் கொள்கிறார்கள்.
அவர்கள் படிப்பதும் படைப்பதும் பகிர்வதும் அந்தத் தேடலின் பொருட்டே.

ஏதோ ஒரு துறையில் ஆழ்ந்து செல்பவர்கள் அதன் புதுப்புது பரிமாணங்களை கண்டடைந்து பெறும் ஞானம் அளப்பரியது. அந்த ஞானத்திற்கு முடிவோஎல்லையோ இல்லை. நீங்கள் சொல்வது போல் பலவிஷயங்களிலும் ஒரு எல்லைவரை அறிவதும் , புதியவற்றைத் தேடுதலும் ஒருவகையில் இந்த சிறிய வாழ்க்கையில் அடைய உகந்ததே !

கற்றதையும் பெற்றதையும் பிறருக்கும் பகிர இயன்றவர்கள் நல்ல படைப்பாளிகள். உள்வாங்கிய ஞானம், படைப்பாளியின் மனவோடையின் போக்கிலே மிதந்து , அதில் மிதக்கும் மலர்களையும் மகரந்தங்களையும் சுமந்துகொண்டு பலவாய் வெளிப்படுகின்றன. உங்களைப் போல...

எது உபயோகம்? எது வீண்?

இருக்கநாலு வேதமும் எழுத்தைஅற வோதிலும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்து உண்மைகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.

சுதா... இன்னமும் நிறைய காலம் பாக்கியிருக்கிறது. நமக்குள் இன்னமும் மும்தாஜின் மூக்கு பற்றிய ஞானமே தெளிவுற விவாதிக்கப்படவில்லை. முதலில் அதை முடிப்பேன் வாரும்...


ஜீவி சொன்னது…

//ஒரு பக்கம் பார்த்தால் , கடந்த 75 வருஷங்களுமே வேஸ்ட் என்று தான் தோன்றுகிறது. //

வேஸ்ட் இல்லை என்றே தோணுகிறது. என்ன, சரியான பகிர்தலுக்கான ரசிகன் கிடைக்காததினால் வேஸ்ட் போலத் தோன்றுகிறது. அவ்வளவு தான்.

நாம் சொல்றதையெல்லாம் கேட்டுக் கொள்கிற ஆசாமிக்குப் பேர் ரசிகன் இல்லை. அட்மையர் பண்றவனும் ரசிக்ன் இல்லை. ரசிகன் கைத்தட்டலுக்காகவும் இல்லை. ர்சிகன் என்பவன் சரிக்குச் சமமா விவாதிக்கணும். முரண்படணும். ஒருத்தரை ஒருத்தர் விஞ்சற மாதிரி இருக்கணும். நம் உள்ளுக்குள் பதுங்கியிருப்பதையெல்லாம் வெளிக் கொண்டு வர்ற ஆசாமியா இருக்கணும். அந்தத் தோழமை கிடைக்கும் போது தான், அவன் கிட்டே இருந்து நம்ம தெரிஞ்சிக்கறதும், நம்ம கிட்டேயிருந்து அவன் தெரிஞ்சிக்கறதும் நடக்கற பொழுது தான், தனி குஷி பிறக்கும். புதுப்புதுக் கருத்துக்கள் முகிழ்க்கும். அம்மாடி! எவ்வலவு விஷயங்கள் இருக்கு இந்த லோகத்லேங்கற ஞானோதம் ஏற்படும். வாழ்க்கைங்கறது ஞானத்தைத் தேடின்னு ஆகும். பாலும் கசக்கும்; படுக்கையும் நோகும். சோறு தண்ணி வேண்டாம்ன்னு தோணும். இந்த தேடல் தவிர எல்லாமும் சாதாரணம் என்கிற உணர்வு அப்பப்ப தோணும்.

எவ்வளவு தெரிஞ்சிருந்தாலும் சரி, இன்னும் தெரிஞ்சிக்க இருக்கறது தான் இந்த ஞானத்தேடலில் முடிவேயில்லாத பயணம். சுகமான பயணம். முடிவுக்குத் தயாராகும் பயணம்.

அப்படியான தோழமை கிடைக்கும் நாள் எந்நாளோ? இதான் தேடலில் சுகம் கணடவர்களின் தேடலாக இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

ஜீ.வி சார் !
மிக அருமையான கோணம் இது. சுப்புத்தாத்தாவுக்கு நிகர் தோழமையாக மேம்பட முயல்வேன்.

அப்பாதுரை சொன்னது…

//ஒரு பக்கம் பேதாலஜி, இன்னொரு பக்கம் பலர் பேத்தல் என்று சொல்லும் கவிதைகள் . குதிரைப் பந்தயம், பங்கு வணிகம் ஒரு பக்கம். காளிதாசன், கபீர், கம்பன் இன்னொரு பக்கம். கானா பாட்டு இந்தப் பக்கம். கர்நாடக சங்கீதம் அதன் அபார நுணுக்கங்கள் , அடலே பாடும்போது அதில் சுப்ரானோ குரலில் ஒலிப்பது தைவதமா, நிஷாதமா என்று சிந்தனை !!!! நடுநடுவே பீதோவன் கிளாசிகல் நோட்ஸ். தாலேலோ லே ஒலிக்கிற நீலாம்பரி லே லயிக்கிற நேரத்துலே, அந்த நீல மயில் மீது ஞால வலம் வந்தவன் ஒரு பக்கம். நீல மேக சியாமளன் இன்னொரு பக்கம். கணபதி லேந்து காளி வரை அஷ்டோத்திரம். மூல மந்த்ரம். விதுர நீதி வியாக்யானம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம். வீட்டிலே கிளி ஒன்றை வைத்துக்கொண்டு விலை மாது கிட்ட போற ஜென்மங்களின் மன நிலையையும் வேதியல் அடிப்படையில் அணுகவும் செய்ய முற்படும் உற்சாகம்.
போதாக்குறைக்கு வானியல், உளவியல்,அதற்கு தம்பிகளான, ஜோதிடம், மனவியல் மருத்துவம். உப்புமா பன்றதிலேந்து உபநிஷத் வரைக்கும் ஈடுபாடு,

my point exactly. இத்தனை அகலத்தை (?) எத்தனை ஆழமும் ஈடுகட்டாது என்றே நினைக்கிறேன்.

சாப்பாட்டில் ரெண்டு வகை சித்ரான்னம், நல்ல சாதம், நெய், பருப்பு, ரெண்டு வகை கூட்டு கறி, ஒரு காரக்குழம்பு, சாம்பார், பொறிச்ச அப்பளம், பாயசம், உபரி பாதுஷா அல்லது ஜாங்கிரி இனிப்பு, ஊறுகாய், துவையல், மோர்மிளகாய்... என்று இருந்தால் தான் விருந்தின் நிறைவு கிடைக்கிறது. சாம்பார் சாதத்தை மட்டும் உழ நினைத்தால் நிறைவு கிடைக்குமா? வாசிப்பை விட விருந்து வேறே உண்டா என்ன?

அப்பாதுரை சொன்னது…

தேடலில் சுகம் கண்டவர்களின் தேடல்... ஆகா! அட்டகாசம் ஜீவி சார்.

அப்பாதுரை சொன்னது…

மும்தாஜ் மூக்கா கன்னமா?

sury siva சொன்னது…

//மூக்கா கன்னமா? //

அதை ஆழமா ஆராய்ச்சி செய்த ஆயிரம் பேர் பற்றிய தகவல்
www.youtube.com/watch?v=370oaE8SqNE

2008 லே லைப் டைம் அவார்டு கிடைச்சப்போ என்ன ஒரு மசூர்ட் டாக்?
www.youtube.com/watch?v=y04Q6hrxGTk

அது கிடக்கட்டும்.
முமுக்ஷுகளுக்கு மூக்கா முக்கியம் ?

உபரி தகவல்:

முந்தா நாள் மச்சினன் பொண்ணுக்கு மூக்கும் முழியுமா பொண் பொறந்து இருக்கு. என்ன பெயர் வைக்கலாம் அப்படின்னு நக்ஷத்திரத்தைப் பாத்து சொல்லச் சொன்னான் என்றாள் இவள்.

மும்தாஜ் அப்படின்னு வைக்கச் சொல்லு என்றேன்.

இன்னுமா அவ நினைப்பு போகல்ல ? என்று இவள் முறைத்தாள் .

சரி.சரி. மோகனா என்று வைக்கச்சொல்.

மன மோகனா படே ஜூடே .
www.youtube.com/watch?v=uXGMxTTB_Dg

சு தா.

மோகன்ஜி சொன்னது…

மூக்கா கன்னமா விஞ்சிய திங்கெதென
நோக்கா மனமே எஞ்சிடும் பேற்றினில்
சாக்கா டிங்கே சத்தியம் ஆமெனில்
தாக்கா தொழிக மும்மோகம்.

மும்மோகம்- மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை

மும்மு(மும்தாஜ் )+மோகம் என்றும் பாடம்!

நிலாமகள் சொன்னது…

ரசித்ததையும் சிரித்ததையும் சிந்தித்ததையும் முன்னவர்கள் பின்னோட்டத்தில் சுட்டிவிட, கூறியது கூறல் தவிர்க்கத் தாண்டினாலும், கொரியரின் ஸ்வெட்டர் கொண்டு கேரியரை தூக்கிக் கொண்ட சாதுர்யம் நாயகனுக்கானது. (சினிமாவில் டிரமாட்டிக்கும் சகஜம் தானே) ஆடுபுலி ஆட்டத்தில் வெட்டுப் படுவதும் பெற்றுக் கொள்வதுமாக சந்தர்ப்ப சூழலே சாமான்யனையும் சபையேற்றுவதாக வாழ்வெனும் மேடை.

வாழ்தலின் நெருக்கடியில் ஆசுவாசமாய் தங்களை வாசிப்பது... நன்றி ஜி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா!

'நிறைவாக'ச் சொல்லியிருக்கிறீர்கள் நிலா!
உங்கள் ஆசுவாசம் வசமாகி நீளட்டும்.
அடுத்ததை எழுத பரபரக்கிறது மனசு.
எழுதுவேன்.

அப்பாதுரை சொன்னது…

//முந்தா நாள் மச்சினன் பொண்ணுக்கு மூக்கும் முழியுமா பொண் பொறந்து இருக்கு. என்ன பெயர் வைக்கலாம் அப்படின்னு நக்ஷத்திரத்தைப் பாத்து சொல்லச் சொன்னான் என்றாள் இவள்.

மும்தாஜ் அப்படின்னு வைக்கச் சொல்லு என்றேன்.//

ரசித்தே ஆகவேண்டும். அருமை.

அப்பாதுரை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அப்பாதுரை சொன்னது…

சாக்காடு சத்யம்னு வச்சுகினா மும்தாஜு
மூக்குல்ல நித்தியம் மாமு?

sury siva சொன்னது…

//சாக்காடு சத்யம்னு வச்சுகினா மும்தாஜு
மூக்குல்ல நித்தியம் மாமு? //

என்ன சொல்ல வரீங்க அப்படின்னு சரியா புரியல்லே.

மரணம் தான் நிஜம் என்று வைத்துக்கொண்டால்
மும்தாஜ் மூக்கு மட்டும் முக்காலமும் இருப்பது எப்படி ?

என்று கேட்டு இருக்கிறீர்களோ ?

இது தான் நீங்க கேட்டு இருப்பது என்றால்,
இது எனது பதில்.

கான்செப்ட் லே ( தமிழ் சரியான ஈ க்விலன்ட் தெரியல்ல)
இரண்டு வகை இருக்கு.

1.கண் முன்னே பார்க்காத ஆனால் காண முடியும் நிஜத்திலே படத்திலோ இருக்கும்படியான வஸ்து.
பிசிகல் பௌதீக பொருள்.

2.புத்தி பூர்வமாக மட்டும் உணரக்கூடியது. ஆனா ரூபம் குணம் கிடையாது.
அப்ஸ்ட்ராக்ட்.

மும்தாஜ் முதல் வகை. அவள் மூக்கும் முழியும் அதே.

அதே சமயம் அவள் , அந்த மூக்கு சௌந்தர்ய ஸ்வரூபம்
என்று சொல்றப்போ, அந்த சௌந்தர்யம் என்று சொல்லப்படும் கன்செப்ட் அப்ஸ்ட்ராக்ட்.
ஒவ்வொத்தரும் அந்த கான்செப்டை உணர்ற விதம் தனி. யுனிக். .
சொல்லப்போனா அந்த அனுபவம் ஒரு ஸ்பெக்ட்ரம்.

இன்னொரு உதாரணம் பீர் பாட்டில்.
கண்ணுக்கு எதிர்த்தாற்போல...
நிஜம். சத்யம்.
ஆனால் , அது தர கிக் இருக்கே !
அது போடரவனுக்குத் தகுந்தாப்போல ..
ஒருவன் அனுபவிக்கறது இன்னொருவனுக்கு இல்லை.
நான் அன்னிக்கு பீர் போட்டேன். ஆஹா என்ன சுகம் அப்படின்னு
நீங்க சொல்றேள் ன்னு , தப்பு தப்பு, நான் சொல்றேன் அப்படின்னு வச்சுக்கோங்க,
அந்த அனுபவம் தந்த சுகம் நிலைச்சு நிற்கறது மனசுலே இல்லையா.
அது சத்யம்.

சாஜ் ஹோ தும் ஆவாஜ் ஹூம் மைன் என்று ஒரு பாடல் ஹிந்தி படம்.

சாஜ் அப்படின்னா வீணை அல்லது வீணை மாதிரி ஒரு ம்யூசிக் கருவி.
அதில் இருந்து வரும் நாதம் ஆவாஜ்.

சாஜ் உடைஞ்சு போகலாம். போகும். சத்யம்.
ஆவாஜ் மனசுலே ஆயி.
அது நித்யம்.

யோவ்.! நிறுத்தய்யா.. நான் கேள்விய வாபஸ் வாங்கிக்கறேன் என்று
நீங்க கத்துவது கேட்கிறது.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
You need a lot of relaxation now.That is why.