செவ்வாய், ஜூன் 29, 2010

என் பரணிலிருந்து ....

வாழிய நலம்,
பகிர்வென்பது ஒரு இனிய வெளிப்பாடு .
எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் எழுதிய
என் கவிதைகள் சிலவற்றோடு
நம் பகிர்தலை தொடங்கலாம்.
என் நண்பர் குழாமின் தனிப்பட்ட தாலாட்டிலிருந்த இந்த கவிதைகள்,
அவர்களின் தூண்டுதலாலேயே இன்று வலையில் பூத்திருக்கிறது..

பழங்கவிதைகள் தான்...

சூழல்கள் காலாவதி ஆனாலும்...
உணர்வுகள் ஆவதில்லை அன்றோ..

நான் பார்த்தவை,கேட்டவை,மற்றும் உணர்வுகளை
பதிவு செய்யும் புதிய களம் இந்தப் பக்கங்கள்..
என் புதிய முற்சிகளையும்
உங்கள் பிரதிபலிப்புகள் வளப்படுத்தும்..
என்றும் உங்கள்,
மோகன்ஜி

2 comments:

சிவகுமாரன் சொன்னது…

எங்கள் வரங்கள்
உங்கள் பரணிலிருந்து என்றால்
தவமிருக்கவும் தயார்
தெலுங்கு தேச திசை நோக்கி.


(வடக்கிருத்தல் என்று சங்க இலக்கியத்தில் இதைத் தானே அண்ணா சொல்கிறார்கள் ?)

மோகன்ஜி சொன்னது…

அழகான கருத்து.. நான் வலைக்கு வந்த வேலையை இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை என இன்று ஒரு நண்பன் கூறினான். அவசியம் நிறையப் பதிவெண் சிவா.. அன்புடன்!