செவ்வாய், ஜூன் 29, 2010

பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......

2 comments:

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா. உங்கள் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டவன் என்ற பெருமை எனக்குத்தான்.

மோகன்ஜி சொன்னது…

உண்மை சிவா! அன்பும் நன்றியும்.