.வேலைச்சுமையில் வலைச்சுவையை சிலநாள் ஒதுக்க நேர்ந்தது.
மீண்டும் எழுத, மனம் கொள்ளா உற்சாகமும் சின்னதாய்க் குற்ற உணர்வும் கூட.. வானவில்லுக்கு வந்து வந்து நொந்த தோழமைக்கு என் கைகுவித்து சிரம் கவிழ்த்தே வணங்குகிறேன்.! மீண்டும் என் பரணிலிருந்து சில கவிதைகள் ..
வாழ்க்கை
உலைபொங்கி கொதிவழிந்து
பொறுக்குச் சுவடுகள்
கோடிட்ட கலயம்....
‘பற்று’ நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.
மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...
கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
உடையும் வரை.
அடையாளம்
புலிக்கு கோடுகள்
புள்ளிகளோ மானுக்கு.
சேவலுக்கு கொண்டை,
கூவல் நயம் குயிலுக்கு.
எல்லாவற்றிற்கும்
ஏதோவொரு அடையாளம்.....,
எனக்கும் உனக்கும் தவிர.
பிரார்த்தனை
ஆண்டவனே !
வாழையிலையில்
அன்னமும் புளிக்குழம்பும் இட்டு
வயிரடைக்கத்தான் வழியில்லே.
வெத்தலையில்
சுண்ணாம்பும் பொகயலையும் வச்சு
வாயடைக்கவாவது வழி செய்யேன்.
(ஜூலை 1983)
நீ சொன்ன பிறகுதான்!
சடுதியில் நெகிழ்ந்த
சந்தர்ப்ப ஆடையை
சரியாது காத்த கை
சாச்வதமென நிலைக்க,
சங்கடத்தில் நெளியும்
சலித்த மனது .
சிந்திக்க முயன்றது
நீ சொன்ன பிறகுதான்
69 comments:
எனக்குத் தன் சுடு சோறு....
நன்றி ம.தி.சுதா! நலம் தானே? உண்மை உமக்கே சுடுசோறு!நிறைய விருந்து காத்திருக்கிறது சோதரா!
திரும்பி வந்து முதல் பந்திலே சிக்சர் அடிக்கிறீங்க. அடையாளம் சுவாரசியமான கவிதை. மாங்காய்ப்பால் பிரார்த்தனையும் நன்று. கடைசி கவிதை கொஞ்சம் புரியவில்லை.
வாங்க மோகன் சார்!
வாழ்க்கை கவிதை அட்டகாசம்..
//பிரார்த்தனை //
"பிளாக் க்யூமர்" தான சார்? :)
பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்... கவலைய விடுங்க கலக்குங்க....
மீண்டு(ம்) வந்த போதே கலக்கலுடன்...
நல்ல கவிதைகள்.
கஞ்சு கலையமமும்
கொஞ்ச பொறுப்பதில்லை
வெற்றிடம் நிரப்பி
புத்துயிர் புசிக்க
தணலில் தான்
என்றும்..........
தமக்கென்று
அடையாளம்
தரண் விதித்த
கோடுகளில்
கோலமிட...
கவிதைகள் அனைத்தும் அருமை ஐயா
இளஞ்சூட்டில்
தேநீர் பருக
இருள் விதித்த
விடியலை
விலையுயர்த்தும்
வரிகளாய்..........
நட்புக்குள் என்ன மன்னிப்பு!!
//எல்லாவற்றிற்கும்
ஏதோவொரு அடையாளம்.....,
எனக்கும் உனக்கும் தவிர. //
கவிதையில் கதை.. ம்ம்ம்
எல்லாமே அடையாளக் கவிதைகள். சூப்பர் அண்ணா.. ;-)
அன்பு அப்பாஜி! வாழ்த்துக்கு நன்றி. கடைசிக் கவிதை சற்று பூடகமானது.உடுக்கை இழந்தவன் கை, ஆடையை சட்டென்று பற்றி மானம் காக்கிறது. இங்கு மானம் காத்த கை மற்றொருவர் கை.காத்த கையோ எடுக்கப் படாமல் அப்படியே தங்கிவிட்டால் சங்கடம்
தானே? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உதவி பெற்றவள்(ன்) தவிக்க நேரிடும் தானே?
கோனார் நோட்ஸ் போட வச்சுட்டீங்க!
வாங்க பாலா! எனக்கும் 'பிரார்த்தனை' பிடித்த கவிதை. இல்லாமையும் இயலாமையும் கவிதைக்கு தங்கு தடை இல்லாத களம்.
வாங்க குமார். உங்கள் கருத்துக்கு நன்றி.கவிதை அலைகள் மீண்டும் மீண்டும் இந்த வலையில் மோதிக் கொண்டேயிருக்கும்.
தம்பி தினேஷ்! ஒரு கவியரங்கக் கவிதையில் கீழ்க் கண்டவாறு எழுதியிருந்தேன்.
"சொல்லாட எழுமெண்ணத் திவிலைகளின் தெறிப்போடே நில்லாத ஓட்டத்தில் விழவேண்டும் கவியருவி"
உனக்குள் ஒரு கவியருவி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது தம்பி!
வாங்க காதர்பாய்! நலம் தானே? நீங்கள் சொல்வது உண்மை. எல்லாக் கவிதைகளின் பின்னேயும் ஒரு கதி இருக்கும். ஆனால் எல்லாக் கதைகளும் கவிதை ஆவதில்லை.
வாங்க ஆர்.வீ.எஸ். உடலும் உள்ளமும் நலம் தானா?
வாழ்த்துக்களுடன்.
நல்லாருக்கு அண்ணே ...
நன்றி செந்தில்!
‘பற்று’ நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.
..... super!!!!
வாழ்க்கையில் நாள் உடைதலும்...அழகு காதலை அடையாளமாக்கியதும்.
உலை வாய் அடைப்பதா, ஊர் வாய் அடைப்பதா . தன் வாய்க்கு வெத்திலை தேடியதும்...
கவிதையோடே பிறந்துள்ளீர்கள் போல் ....பரண் கவிதைகள் தூசிபடியாமல் புத்தம் புதிதாய் உள்ளன....
கண்டிப்பாய் தொடர்பில் இருப்போம் ...எனது மி.அ.முகவரி..kr_padmanaban@yahoo.com
நன்றி சித்ரா!
பத்மநாபன்!தொடர்பற்று ரொம்ப நாட்கள் இருந்தது போல் தோன்றுகிறது. உங்கள் ரசனையின் ரசிகன் நான் என்பது அறிவீர்களா பத்மநாபன்?
கவிதையே மூச்சாய் திரிந்த காலங்கள். பாரதியையும்,கம்பனையும் அமர்த்தி, அவர்தம் மடியேறி பாட்டுத் திறம் கற்ற நாட்கள்..
ஒரொரு முறை பரண் மேல் ஏறி விட்டால்,இறங்க மனம் ஒப்புவதில்லை.
தொடர்பில் இருப்போம் பத்மநாபன்ஜி!
வளையல் வாங்கினீர்களா?!
ஆம் நண்பரே , உற்சாகத்திற்கு திரும்புவோம்...
ரசனையை மட்டும் விடாமல் இருக்கவேண்டும் என்றும் நினைப்பவன்...
வளையல்... சென்னையில் கலவை ஜாஸ்தி ..அங்கிருந்து வாங்கியாறேன்னு சொல்லி சமாளிச்சாலும், அவிக போத்திஸில சரி கட்டிட்டாங்க....
பழசு தூசு தட்டினாலும் இன்றைய இயல்போட நல்லாயிருக்கு மோகண்ணா !
ஒவ்வொரு கவிதையும் ஒரு விதத்தில் அருமை..
அதிலும் கலயம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க..
//
கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
உடையும் வரை. //
வாழ்வியல் தத்துவமே இரு
வரிகளுக்கள் சொல்லிட்டீங்களே..!!
மேலும் தொடர வாழ்த்துக்கள்..! :-))
கோனார் நோட்ஸ் படிச்சா தான் மண்டையில ஏறுது.. பரண்ல லைட் போட்டாப்ல பளிச். அருமையான கரு - பாதியில நிறுத்திட்டீங்களா கவிதையை?
இந்தப் பின்ன்னு பின்னுறீங்களே பின்னூட்டத்துல dineshkumar?
இருள் விதித்த விடியலா, விதைத்த விடியலா?
'இது சங்கர்லால் ஜப்பான் போய் வந்த போது மூர்மார்கெட்டில் வாங்கி வந்த பேனா' - பத்மநாபன் கமெந்ட் படிச்சதும் நினைவுக்கு வந்த தமிழ்வாணன் வரிகள்.
பத்மநாபன்! ஆக தங்கச்சிய வளையல்ன்னு ஏமாத்திடீங்க! போத்தீஸ் கணக்கு வேற.. தங்க மாளிகை கணக்கு வேற மைத்துனரே ! கொஞ்ச நாளைக்கு மேட்டரை தள்ளி வச்சுட்டு சமயம் வரும் போது நானே நினைப்பூட்டறேன் சரி தானே!
ஹேமா! பழசுக்கு தூசு தானே அழகு? தட்டாமலே தான் விட்டு வச்சிருக்கேன்? அன்புக்கு நன்றி ஹேமா.
நன்றி ஆனந்தி! கலயம், அட்சய பாத்திரம் எல்லாம் ஒன்று தானே? அன்பு நிறைத்த கலயம், ஏதும் கேட்காமலே, எதையும் தராமலே மனம் நிறைக்கும். அதை உடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . அவ்வளவு தான். வாழ்த்துக்கு மகிழ்ச்சி ஆனந்தி!
அப்பாஜி! உங்களுக்கா ஒன்றும் புரியாது? கடைசி கவிதையில் ஒரு பகுதியை அபேஸ் செய்து பதிவிட்டதை எப்படி கண்டு பிடித்தீர்கள்? அது இல்லாமலே கூட முழுமையாய்த் தானே இருக்கிறது? அற்புதம்..
அது சரி..ஏன் அதை வெளியிடவில்லை என்கிறீர்களா? சாமி சரணம் மொதலாளி சாமி சரணம்!!
தினேஷ் கலக்குறார் இல்ல.. அவருக்கான என் பதிலைப் படிங்க!
அடடா! சங்கர்லாலை நினைவு வைத்திருக்கிறீர்களே!
துணிவே துணைன்னு பள்ளிப் பருவத்தில் தமிழ்வாணன் மீது எனக்கும் பற்று இருந்ததுண்டு.உங்கள் மூர்மார்கட் பேனாவை ரொம்ப ரசித்தேன் தலைவரே!
புலிக்கு கோடுகள்.
புள்ளிகள் மானுக்கு
சேவலுக்கு கொண்டை
மோகனுக்கு கவிதை
கவிதைமனம் கொண்டோர்க்கே இவ்வண்ணம் சொல்ல வரும். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவகுமாரன்!
கவிதை நல்லா இருக்குங்க.
உங்க வலைப்பூவை இத்தனைநாளா எப்படி கவனிக்காம விட்டேன்.
அடடே, அபேஸ் செஞ்சுட்டீங்களா? நியாயமா?
ஏங்க நீங்க சாமி சரணம்னு இருங்க, நானும் ஆர்வீஎஸ்சும் மாமி சரணம்னு இருப்போம்ல?
வாங்க அன்பரசன்! இப்போ கவனிசிட்டீங்க இல்லையா? இனி வர என்ன தடை நண்பரே? அடிக்கடி வாருங்கள்.
போட்டு வாங்கிட்டீங்களே !தல! போட்டு வாங்கிட்டீங்களே! இதுக்கே இன்னமும் ஒரு நூற்றியெட்டு சரணமில்லே கூடுதலா சொல்லிக்கணும்.
ஒண்ணு செய்ங்க! நான் மறைத்து விட்ட மீதிக் கவிதையை நீங்க எழுதுங்களேன். ஜனவரி மூன்றாம் வாரம் தான் "சபாஷ்"ன்னு சொல்வேன். அதே மூட்ல (அடடா சாமி சரணம்! சாமி சரணம்) இருக்கணும் .இதை சிவகுமாரன், தம்பி தினேஷ் கூட முயலலாமே!
//எல்லாவற்றிற்கும்
ஏதோவொரு அடையாளம்.....,
எனக்கும் உனக்கும் தவிர//
nice! :))
மாமி சரணம்!! வார்த்தை கேட்டாலே மயங்குது மனசு அப்பாஜி! மோகன்ஜி மாதிரி எனக்கு கவிதை எழுத வராது. உங்களை மாதிரி கட்டுரை/கதை எழுத வராது. ஆனா. ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்க... மாமி சரணம் கச்சாமி!! ;-)
(கும்மி அடிச்சு ரொம்ப நாளாகுது.. பத்துஜி வரா மாதிரி இருக்கே... ;-) )
வந்தாச்சு ஆர்.வி.எஸ்...என்ன சாமியை நடுவுல உட்காரவச்சுட்டு நம்ம சரண கோஷம் அவ்வளவு சரியா இருக்குமா ...
அதுவும் அப்பாஜி....இரண்டு மூணு வருஷ விரதத்தை சேர்த்து கலைப்பாரே ....
அப்புறம் மோகன்ஜி வர்ற அளவுக்கு கூட வரமுடியாத மாதிரி சரணத்தை கூட்ட வேண்டியிருக்கும் ..
ஜீ!வாங்க உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
ஆஹா! கிளம்பிட்டாங்க ஐயப்பா! கிளம்பிட்டாங்க!! இந்த கும்மி ஜமா மலையேரிடுச்சின்னா நீயும் நானும் இடத்த மாத்திக்கனுமே ஐயப்பா! ஆர்.வீ.எஸ் இப்பவே பேட்டை துள்ள ஆரம்பிச்சிட்டாரே!பத்மநாபன் குருசாமி கையில மாலையோட வராரே! பெரிய குருசாமி அப்பாஜியும் வந்துட்டார்னா நான் என்ன பண்ணுவேன்!
ஆர்.வீ.எஸ்.. வேணாம்..வேணாம்.. ஜெஜா கண்ண குத்திடும்.. ஒரு வழிதான் எனக்கு இருக்கு.. உங்க மூணு பேருக்கும் மாலை போட்டு விட்டுட்டா சமத்தா இருப்பீளோன்னோ?அதான் சரி! போட்டுடறேன்! போட்டுடறேன்!!
சொக்கா! சொக்கா! என்ன தனியா பொலம்ப விட்டுட்டாங்களே!
//அதுவும் அப்பாஜி....இரண்டு மூணு வருஷ விரதத்தை சேர்த்து கலைப்பாரே ....//
பத்மநாபன்! இன்னமும் சிரிச்சுகிட்டிருக்கேன்!
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
அப்பாஜி ஒரு அற்புதம் ..அவர் எந்த எல்லைக்கு வேணா அவரால எழுத்தில் போக முடியும்... மொழியாட்டத்திலும் சரி களியாட்டத்திலும் சரி... அபிராமி அந்தாதி நூறு பாகங்களுக்கும் மேல்.. ஆவணத்தோடு எழுத்தாக்கிய அசாத்திய பொறுமை ..புத்தகமாக வர வாழ்த்துவோம்...
அப்புறம் ...சாமி, நாங்க அடக்கியே வாசிக்கிறோம்...அய்யனோட அருள் எங்களுக்கும் வேணும்...
சாமி பொன்னய்யப்பா....சரணம் பொன்னய்யப்பா...
அய்யனே பொன்னய்யப்பா ....சாமி பொன்னய்யப்பா....
ஆர்.வி.எஸ் சாமி... நம்ம மாமி சரணத்தை இங்க ஜன 3 க்கு மேல வச்சுப்போம்.. அது வரை மோகன் ஜி. சாமி சைவமா வந்து போயிட்டு இருக்கட்டும்
குருசாமி பத்துசாமி சொல்படி நடப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
மாமியே ஐயப்பா.. ச்சே..ச்சே.. ஸாமியே ஐயப்பா..
ஸாமியே சரணம் ஐயப்பா!!
//எல்லாவற்றிற்கும்
ஏதோவொரு அடையாளம்.....,
எனக்கும் உனக்கும் தவிர. //
கவிதை அடையாளம் காட்டிவிட்டது..
//எல்லாவற்றிற்கும்
ஏதோவொரு அடையாளம்.....,
எனக்கும் உனக்கும் தவிர. //
எல்லாவற்றிலும் அடையாளம் உள்ளது போல தங்கள் எழுத்துக்கு என்றும் தனி அடையாளம் உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பளிரென்று வந்துள்ளீரக்ள் ஜி. நலமாக இருக்கிறீர்கள்? வேலைப்பலு எப்படி உள்ளது?
கேட்க மறந்து விட்டேன் ஜி. அந்தக் கலயத்தை எங்கே பிடிச்சீங்க? அவ்வளவு அழகு..
நீங்கள் சொன்னது உண்மை பத்மநாபன்! அப்பாஜியிடம் பலமுறை என்னையே சுயதரிசனம் செய்வது போன்ற பிரமை எனக்குள் ஏற்படுவதுண்டு.கச்சிதமாய் கருத்தை வெளியிடுவதில் வித்தகர்! அது சாமியகிலும் சரி!..மியாகிலும் சரி!இந்த வலையுலகத்துக்கு வந்து நமக்கு ஏற்பட்ட சொந்தங்களில் அப்பாஜி முக்கியமானவர்.நமது நட்பு வட்டம் என்றும் நிலைக்க பிரார்த்திக்கிறேன்.
ஆர்.வீ.எஸ் கும்மிக்கு தளம் அமைப்பதில் நிபுணன்!
ஏனோ நம்மிடையே கும்மிக்கு சற்று தொய்வு ஏற பட்டுவிட்டதில்லையா?
என் பிரார்த்தனைகளில் அனைவரின் நலமும் உண்டு.
ஐயப்பன் அனைவருக்கும் நலம் தரட்டும்.
நான் மலைக்கு ஜனவரி 6ஆம் தேடி புறப்பட்டு 18ஆம்தேதி திரும்ப உத்தேசம்.ராமேஸ்வரம் வரையில் பல தலங்களுக்கும் சென்று, எருமேலி அடைந்து பெருவழியில் செல்வோம். மலையில் மட்டுமே ஏழுநாட்கள் இருப்போம்.அற்புதமான சத்சங்கம்! வேதம்,தேவார திருவாசகம்,பிரபந்தம்,தமிழ் என்று ஓயாமல் அளவளாவ பல அன்பர்கள்!
மீசை முளைக்குமுன் தொடங்கிய சபரிமலை யாத்திரை ஒன்று தான் உருப்படியாக இன்று வரை நான் தொடர்ந்து செய்வது! அப்பாஜியும் நானும் கூட சேர்ந்து ஒருமுறை செல்வோம் என்று அளவளாவிக் கொண்டதுண்டு!
பத்மநாபன்! ஏதேதோ சொல்ல விழைகிறேன்! எதை பேசுகிறோம் என்பதைவிட,பேசுவது மட்டுமே முக்கியமாயத் தோன்றும் தருணங்களும் உண்டல்லவா இதுபோல்!
நேசம் ஒன்றே எஞ்சும் நண்பரே!
ஆர்.வீ.எஸ்! பத்மநாப குருசாமி சொன்னவுடனே நல்ல பிள்ளையாய் ஆகிவிட்ட தீராத விளையாட்டு பிள்ளையே! இப்போ பம்முவது பாய்வதற்குத் தான் என்று தெரியும்! சமத்தாய், சரியாய் சரணம் சொல்லும்! பெரிய குருசாமி அப்பாஜி வர்ற நேரமாச்சு!
வாங்க ரிஷபன்! தொலைந்து போன நம் அடையாளங்களைத் தேடுவதிலேயே வாழ்க்கையும் தொலைந்து விடுகிறேதோ?!
வருக ஆதிரா! நலம் தானம்மா! கடந்த ஒரு மாதத்திருக்கும் மேலாய்,அலுவல் சுமை,சபரிமலை விரத பூஜைகள்,ஒரு புத்தக வெளியீட்டுக்கான துவக்கப் பணிகள் என்று'வலையாடல்' முடங்கிவிட்டது ஆதிரா!
கலயத்தை ரசித்ததற்கு நன்றி! கலயம் பற்றி ஒரு தனிப்பதிவே போட்டு விடுவோம்.
விமலன் சார்! வாங்க வாங்க!! இது உங்கள் முதல் வருகையல்லவா? வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரா!
அப்பாஜி! கொஞ்சநாளைக்கு உமக்கு இந்தக் கூட்டில் பத்திய சமையல் தான்!
/இரண்டு மூணு வருஷ விரதத்தை சேர்த்து கலைப்பாரே ..../
அதானே? ரெண்டு வருச விரதம்னதும் ஒரு குட்டிப் பூதக் கதை நினைவுக்கு வருது. குட்டி பூதம்னா சின்ன பூதம் - வேறே ஏதாவது நெனச்சுட்டு கும்மியடிக்க வேணாம். சின்ன பூதம் என்ன பண்ணிச்சு தெரியுமா? என்ன? ஜனவரி மாசமா? ரைட்டோ.
சபரிமலைப் பயணம் சிறப்பாக வாழ்த்துக்கள். பம்பை பக்கம் ஜாக்கிரதை. (ஏனா? ஜனவரியில் கேளுங்க, வரி வரியா சொல்றேன்)
ஆர்வீஎஸ், பத்மநாபன், நான் மூணு பேரும் குட்டிப் பூதத்தை வச்சுக்குறோம் இப்போதைக்கு, அதாவது, கவனமா பாத்துக்குறோம்.
//அற்புதமான சத்சங்கம்! வேதம்,தேவார திருவாசகம்,பிரபந்தம்,தமிழ் என்று ஓயாமல் அளவளாவ பல அன்பர்கள்!//
ஆசையைத் தூண்டுறீங்களே?
நல்ல பிள்ளையா? அவரு எழுதியிருக்குற சரித்திரக் கதையப் படிச்சுட்டு பெறவு சொல்லுங்க.
ஆஹா! வாரும் ஓய் பிள்ளாய்! குட்டிபூதத்தை கட்டிவைத்ததுக்கு ஒரு கூட்டுசரணம் போடுகிறேன்!
பம்பை தற்போது முன்போல் இல்லை! தாற்காலிக ஒதுங்கிடங்கள் கட்டப்பட்டு விட்டன.. பம்பையில் இந்த பூஸ்வாமி விவகாரம் பற்றி, எனது பதினாறு வயதில், வெறுப்புடன் ஒரு பெரிய குருச்வாமியிடம்
அங்கலாய்த்தேன். எனக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாய் அவர் பலவும் சொல்லக் கேட்டு,எதையுமே அருவருக்க என்னால் முடிவதில்லை.. பொய்யும் புனைசுருட்டும் தவிர அப்பாஜி!
சத்சங்கம் பற்றி! யாத்திரை நாட்களில் பகலெல்லாம் ஒரு குருஸ்வாமிக்கான பணிகள்,பூஜைகள் என்று மூச்சு விட நேரம் இருக்காது. இரவெல்லாம் பேச்சுக் கச்சேரிதான்!டயம்டேபிள் போட்டு விவாதங்கள்... காளிதாசன் முதல் வள்ளலார் வரை. பேச்சு ஓயும் போது விடிந்திருக்கும்!! பல கோவில்களுக்கும் செல்லும் பஸ் பயணங்களில்.. முடிவே இல்லாமல் பாடல்களை அப்போதே யாத்துப் பாடிக் கொண்டு செல்வேன். செல்லும் அத்தனைக் கோவில்களுக்குமான தலபுராணங்கள்,தலம் பெற்ற பாடல்கள்,அங்கு வசித்த,வந்த பெரியோர்கள் பற்றிய குறிப்போடு சின்ன சின்ன பிரசங்கங்கள் செய்வதற்கே முன்னேறப்பாட்டுடன் செல்வேன்.பாக்கியமல்லவா ?
இனிது இனிது மானிடராய் பிறந்தது இனிது அப்பாஜி!
எங்கள் காதுகளுக்கு அந்தப் புண்ணியம் வாய்க்கவில்லையே மோகன்ஜி. அப்பாஜி மற்றும் பத்துஜியின் சென்னை விஜயத்தின் போது அவசியம் நாமும் ஒரு சத்சங்கம் ஏற்ப்பாடு செய்யவேண்டும். சங்கத்தில் நானும் சேர்ந்தால் அது சத்தா அசத்தா என்று பிறகு பார்க்கலாம்.
குட்டி பூதம் சொன்ன கதையா செய்த கதையா.. கதைகளின் நாயகன் அப்பாஜி விளக்குவாராக... என்னது ஜனவரியிலா.. சரி. ஓ.கே
குருசாமி எங்களுக்கும் சேர்த்து அந்த பந்தள ராஜனிடம் வேண்டிக் கொள்ளவும். நன்றி ;-)
இனிது இனிது மானிடராய் பிறந்தது இனிது அதனினும் இனிது மோகன்அப்பாபத்துஜிக்களின் பின்னூட்டங்கள் படிப்பது. ;-) ;-)
கடவுள் நம்பிக்கையின் மறுபக்கம் தாண்டி வந்து விட்டதால் இது போன்ற பயணங்களை நட்புக்காகவும் நிறைவுக்காகவும் செய்ய அனுமதி கிடைக்குமா தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும் பொழுது மறுபடியும் ஒரு ட்ரிப் அடிக்கத் தோன்றுகிறது மோகன்ஜி.
ஆர்வீஎஸ் அவர்களே... நான் சென்னை வரும்பொழுது உங்களை அவசியம் சந்திக்க வேண்டும். அசத்து சங்கம் ஒன்று தொடங்கலாம். (சத்து அசத்துக்குள் அடங்கியிருப்பதைக் கவனித்தீர்களா?) இன்னொண்ணு: பத்மநாபன் இடக்கரடக்கலாய் சொல்லியிருப்பதை - அதான் நீங்க லொட லொடனு பேசிட்டிருந்ததை - எனக்கும் கேட்க வேண்டும் போலிருக்கிறது.
மனுஷன் நொந்திருப்பார் அப்பாஜி!! நீலப்பல்லை காதில் சொருகி ஆபிஸ் விட்டு காரைக் கிளம்பும்போது பேச ஆரம்பித்தோம். நிச்சயம் ஒரு மணி ஒன்னரை மணி நேரம் பேசியிருப்பேன். அப்போப்போ "ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே.." அப்படின்னு என்னோட நல விசாரிப்பு வேறு.
செத்துப்போன என் பாட்டி கிண்டல்களின் தலைவி. அதனால் தான் அவளை ஐ லவ் யு சொல்லி பதிவெழுதினேன். அவள் சொல்லுவாள்.. "தம்பி.. செத்த பேச்ச நிறுத்திட்டு கொஞ்சம் மூச்ச உடேன்... " என்று... இன்றுவரை அவள் சொன்னப் பேச்சை கேட்கவே இல்லை. சிவலோகத்தில் பரமேஸ்வரன் பக்கத்தில் நின்று என்னுடைய இந்த புது அவதாரக் கொட்டத்தையும் பார்த்துக்கொண்டிருப்பாள். பேசி கழுத்தருத்தவன் இப்போது எழுதி அறுக்கறான் என்று மிஸஸ் பரமு கிட்டே சொல்லிக்கொண்டிருப்பாள்.
(இந்தப் பின்னூட்டமே எவ்ளோ எழுதறேன் பாருங்க... )
முதல்ல மோகன்ஜி சாமி.....
ஐய்யனை நாடி வருடம் தோறும் செல்லும் கடமை க்கு வணக்கம் .. இங்கு எனது நண்பர் ஒருவர் பல வருடங்களாக உங்களைப்போலவே ஒரு வாரம் சபரிமலையில் இருப்பவர்....அனுபவங்களை பகிர்வார் பாருங்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ..இத்தனைக்கும் அவர் மற்ற ரசனைகளை அவருக்கு அவ்வளவாக வராது..ஐய்யனை நாடிச் செல்லும் நிகழ்வுகள் என்றால் மெய்மறந்து சொல்லுவார் ... நாங்களும் வாழ்வின் பொய்களை மறந்து கேட்போம்....
உங்களுடனான எமது வருங்கால சந்திப்பை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்...
ஐய்யன் உணர்வை விரதமாக கொள்ளும் அனுபவத்தை இன்னமும் பெறவில்லை....அதற்குள் வெட்டியாய் முத்திவிட்டோமா எனும் ஆதங்கம் இருக்கிறது... அந்த ஆதங்கத்தை நம் நட்பு போக்கும் என நம்புகிறேன்...
அப்பாஜி சாமிக்கு.... அவரும் சாமிதான்... சாமியில்லாமலா இவ்வளவு தத்துவம் வெளிவரும்..... சத்தினுள் தான் அசத்து சிக்கியிருக்கும் உங்களுக்கு தெரியாததா....சாமியை தவிர்ப்பதும் சாமியை கோட்பாடாக நோக்கும் பக்குவமும் உண்மையான உயிர்கலந்த பக்திக்கு முன் ஒரு மாற்று குறைவாகவே படுகிறது....
ஆர்.வி.எஸ் சாமி....நிச்சயம் இடக்கரடல் இல்லை ...அனுபவித்தேன்.. காரியார்த்த உலகில் உங்கள் எதார்த்தம் மெய் சிலிர்க்க வைத்தது... கண்டிப்பாக நால்வரும் கூடுவோம்.... தூரத்தில் இருக்கும் அப்பாஜியின் திட்டத்திற்கு தகுந்தாற்ப்போல் எனது திட்டத்தை சற்று மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு....
அன்பு ஆர்.வீ.எஸ்! உங்கள் ‘அசத்து சங்கம்’ சிந்திக்க வைக்கிறது. அசத்தில் சத்தும் இருக்கிறது எனும் அப்பாஜியின் கருத்தோ ‘அசத்து’கிறது. சத்தும் அசத்தும் எவை எவை என்று தீர்மானிக்க என்ன வழிமுறை? பெரும்பாலும் அனைவரும் ஏதோவகையில் அசத்துக்களே. சத்தும் அசத்தும் கலந்து கட்டிவைக்கப் பட்ட குழப்ப பொட்டலம் அல்லவா நாம்? ஏதோ தருணங்களில் சத்து வெளிப்படுவதும், ஏனைய போழ்தில் அசத்தின் பிடியிலும் உழல்வதன்றோ இந்த சிறு வாழ்க்கை?
நாம் அனைவரும் ஏதோ ஒரு சவுகரியமான சமயம் சந்திக்க வேண்டும். பத்துவுடனான உங்கள் சம்பாஷணையில் நீலப்பல் நீளப்பல்லானதும், மூச்சை விட்டுப் பேசச் சொன்ன மிசஸ் பரமுவின் தோழி பற்றிய செய்தியும் சுவாரஸ்யம். அட்டகாச அப்பாஜியும், ஒட்டகாச பத்துஜியும் மற்றும் நாமும் சந்திக்கும் முன்னர், நாமிருவரும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். நான் சென்னை வரும் போது சந்திப்போம். I imagine the joy of running into you folks!
கடவுள் நம்பிக்கையின் மறுபக்கம் வந்ததாய் அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள்.கடவுள் நம்பிக்கைக்கு ஒரே மறுபக்கம் மானுடத்தின் மீது நம்பிக்கையும்,காருண்யமும் தானே? நாணயத்தின் கடவுள் பதித்த பக்கம் மட்டும் சரி என்று ஒருவரும்,மேற்சொன்ன மறுபக்கமே சரி என்று வேறொருவரும் நாணயத்தை உணர்ந்து அதை உபயோகித்தாலும்,இருவருக்கும் அது செல்லுபடியாகும் தானே?
எனக்குகூட சபரி மலையில் ஈடுபாடு சற்றும் குறையாததற்கு காரணம், சற்று மாற்றிச் சொன்னால்... அங்கே எங்கும் வியாபித்து நிறைந்த மனிதர்களும்,ஒரு உச்சியில் அமர்ந்த தெய்வமுமே என்பேன்.
எத்தனை விதமான மனிதர்கள்?? நம்பிக்கைகள்.. அன்பு, அமைதி, கருணை, மூர்க்கம், சுயநலம், படாடோபம்,ஆதிக்கம்,வெளிவேஷம், வெறுப்பு யாவும் முகம் காட்டும் மனித இயக்கம் அங்கும் உண்டு.
பனிரெண்டு நாட்கள் நாட்காட்டி,கடிகாரம்,செய்தித் தாள்,தொலைபேசி,அலைபேசி,தொலைக் காட்சி,அலுவலகம்,இல்லம் மற்றும் இல்லாளும் துறந்த அந்த வெறுமையில் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் சாத்தியங்கள் அதிகம். அந்த வெறுமையும், சத்சங்கமுமே இதற்கு துணை புரிவது. ஒருமுறை என்
இல்லாள் இதை 'எஸ்கேப்பிசம்' என்று சொல்லி யோசிக்க வைத்தாள்.ஏதோ ஒன்று பாஸ்!
இந்த யாத்திரைக்குள் எனக்கான ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள்,அம்மானுஷ்ய உந்துதல்கள், படிப்பினைகள் நிறைய உண்டு அப்பாஜி! ஏதோ ஒரு நாள் இவை பற்றி பேசலாம்.
அன்பு பத்மநாபன்! உங்களுக்கு விரிவான பதில் சொல்ல விழைகிறேன். எனினும் நான் அலுவலகம் கிளம்ப நேரமாகிவிட்டதால், இரவு மீண்டும் தொடருகிறேன். பொறுத்தருள்க.. அன்புடன்...
சபரிமலைப் பயணத்தின் வசீகரமே நீங்கள் சொல்வது தான் மோகன்ஜி - "வெறுமையில் நம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் சாத்தியங்கள்" - profound.
கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது; கடவுள் ஒரு சாதனமென்றால் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைக்கிறேன். உண்டு இல்லை சரி தவறு என்ற தீர்வுகள் சொல்லத் தகுதி எனக்குக் கிடையாது. பத்மநாபன் சொல்வது போல் "உயிர்கலந்த பக்திக்கு முன் ஒரு மாற்று குறைவாகவே படுகிறது...." உண்மையான உயிர்கலந்த பக்தியை உண்மையா பொய்யா என்று புரியாத வகையில் செலுத்த முடியவில்லை. சமீப காலங்களில் சேர்த்த அனுபவங்கள் வேறு சாதனங்களைத் தேடிப் போக வைத்து விட்டன.
அமானுஷ்ய அனுபவங்களைச் சொல்லுங்கள்; கேட்போம்.
சபரிமலைக்கு கேமரா எடுத்துட்டு போகலாம்னா நிறைய படங்கள் எடுத்து, திரும்பினதும் ப்ளாக்ல போடுங்க. ராமேஸ்வரம் எல்லாம் போட்டோலயாவது பார்ப்போம்.
அப்பாஜி!பத்மநாபன் சொன்னது ரொம்ப பெரிய விஷயம். பக்தி என்பது ஒரு ' ப்ரோக்ராம்' இல்லை. அது ஒரு ஆபரேடிங் சிஸ்டம்.செய்யும் செயல் அனைத்திலும்,பக்தியின் வீச்சும் அதனால் பண்பட்ட அணுகுமுறையும் கொண்ட ஒருவன் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்கிறான்.(அது உண்மையான பக்தியாய் இருக்கும் பட்சத்தில்)
சபரி மலைக்கு எங்கள் குழுவில் கேமரா, செல்போனுக்கு அனுமதியில்லை. வந்தபின்,
மனத்தில் பதிந்ததை பதிவிடுவிறேனே இனிய
சிநேகிதரே!
மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...
கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
உடையும் வரை.
மனித வாழ்க்கையும் இந்த கலய்ம் போல் தான் என்று சொல்கிறீர்கள்.
அருமை.
பற்று’ நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.//
மிக மிக அருமை.
//முடிவே இல்லாமல் பாடல்களை அப்போதே யாத்துப் பாடிக் கொண்டு செல்வேன். செல்லும் அத்தனைக் கோவில்களுக்குமான தலபுராணங்கள்,தலம் பெற்ற பாடல்கள்,அங்கு வசித்த,வந்த பெரியோர்கள் பற்றிய குறிப்போடு சின்ன சின்ன பிரசங்கங்கள் செய்வதற்கே முன்னேறப்பாட்டுடன் செல்வேன்.பாக்கியமல்லவா ?//
பாக்கியம் தான்.
கருத்துரையிடுக