புதன், மார்ச் 02, 2011

பெயர் பிறந்த கதை
(தீராத விளையாட்டுப் பிள்ளை ஆர்.வீ.எஸ் என் பெயர் பிறந்த கதைபற்றி தொடர்பதிவாய் எழுத அழைத்தார். இதைப் படித்து
கோபம் கொள்வோர், யாரைத் திட்ட வேண்டும் என்று இப்போது புரிந்திருக்கும். இனி உங்கள் பாடு... ஆர்.வீ.எஸ் பாடு )


அது ஒரு செவ்வாய்க்கிழமை. மாலை நான்குமணி. மேல்வானில் ஒரு வானவில் தோன்றியது. பறவைகள் எக்காளக்கூச்சல் போட்டன. பசுக்களெல்லாம் தாமாய் பால் சொரிந்தன. மூட்டமிட்ட மேகங்கள் இரண்டுநிமிடம் பூத்தூறலாய் தூவி ஓய்ந்தன.

கடலூர் செய்த பாக்கியம்தான் என்னே?........

இப்படியெல்லாம் என்றோ ஒருநாள் சக்திவிகடனிலோ, குமுதம் பக்தி ஸ்பெஷலிலோ, உய்விக்க வந்த மகான்கள் என்ற ஒரு பக்திகட்டுரையில் என் அவதாரமகிமையை யாரும் எழுதுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

பள்ளிக்கூடம் போன பிள்ளைகள் எப்படா வீட்டுக்குப்போக மணி அடிக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கும் ஒரு சாதாரண மாலை நேரத்தில் தான் நான் பிறந்தேனாம்.

அடடா! பெயர்க் காரணம் பற்றியல்லவா இந்தப் பதிவு?
நான் பிறந்தநாளின் ஒரே விசேஷம் அது சர்வோதய நாளான ஜனவரி 30 ஆம் தேதி என்பதுதான். மகாத்மா காந்தியின் நினைவு நாள் மௌன அஞ்சலிக்கான சங்கு அன்றுகாலை பதினொரு மணிக்குத்தான் ஒலித்திருந்தது..

பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா? அதான் வந்தேன்..

என் அப்பா, காந்தியின் நினைவாய் அவரின் முதற்பெயரான மோகன் என்று பெயர்வைக்கலாம் என்று சொல்ல, அந்நாளில் மோகன் எனும் பெயர் புதுமோஸ்தராய் இருந்ததாலும், அப்போது வெளியான ஒரு சினிமாவில் சிவாஜியின் பெயர் மோகன் என்று இருந்ததாலும். சித்தி, அக்கா எல்லோரும் மோகனுக்கே பேராதரவு தந்தார்கள்.

தாத்தா பாட்டி ஒத்துக் கொள்ளாமல் சுவாமிநாதன் என்று பெயர் வைத்தார்கள். என் அக்காவோ மோகன் தான் பெயர் என்று ஆகாத்தியம் செய்து போராடினாளாம்.
கடைசியில் செல்லமாய் அழைக்கும் பெயராய்மட்டும் மோகன்  ஒத்துக் கொள்ளப்பட்டு மோகன் நிலைபெற்றது.

மோஹி என்று கொஞ்சல் பேராய் அது உலாவந்தது.

நான் பள்ளியில் சேர்ந்த வைபவம் நினைவிருக்கிறது.
கோட்டுசூட்டுமாய் கோச்சுவண்டியில் பள்ளிக்கு அழைத்து சென்று சேர்த்தார் என் தாத்தா. அத்தனை வகுப்புக்களுக்கும் சாக்லேட் விநியோகம் நடந்தது. தலைமைஆசிரியர் சேர்ப்புபடிவத்தில் எழுத இவன் பேர் என்ன?  என்று கேட்க, என் தாத்தா சுவாமிநாதன் என்று வாய் திறப்பதற்குமுன் என்அக்கா அவசரஅவசரமாய் மோகன் என்று சொல்லிவிட்டாள். தலைமைஆசிரியரும் படிவத்தில் மோகன் என எழுத ஆரம்பித்து விட்டாராம். ஆரம்பத்திலேயே அதை அடித்து எழுத வேண்டாம் என்று தாத்தாவும் விட்டுவிட்டாராம். இதற்காய் என் அக்கா வாங்கிய திட்டு கணக்கில் அடங்காது. ஒருவாறு மோகன் என் வழங்கு பெயரானது. சுவாமிநாதன் வைதீகதருணங்களின் பெயராய் இன்னமும் ஒட்டிக கொண்டிருக்கிறது.

என் எட்டுவயதில், வந்தேமாதரம் என் பட்டப்பெயராய்  ஆயிற்று. ஆண்டுவிழாவில் இறைநம்பிக்கைப்பற்றி ஞானம் டீச்சர் எழுதித்தந்து , பலமுறை ரிஹர்சல் செய்தும்  மேடைஏறியவுடன் பயத்தில் பேச்சு வராமல் நின்றுவிட்டேன். கீழிருந்து பேசுடாபேசுடா என்று டீச்சர் உறும, வந்தேமாதரம்,வந்தேமாதரம் என்று முஷ்டி உயர்த்தி கூவிவிட்டு இறங்கிவிட்டேன். அது முதல் சிலகாலம் வந்தேமாதரம் என்றே  அழைக்கப்பட்டேன். பின்னாளில்,உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரிநாட்களிலும் மேடைப்பேச்சு எனக்கு உவப்பானதாய் மாறிப்போய்,மைக் மோகனாயும் வலம் வந்தேன்.

எங்கள் அடுத்த வீட்டில் ஒரு மாமா,மாமி இருந்தனர். மாமாவின் பெயர் புருஷோத்தமன். ஒரு கம்யூனிஸ்ட். அவர்களுக்கு பிள்ளை இல்லை. அந்த தம்பதியருக்கு நான் செல்லப்பிள்ளை. என் பத்துவயதில் அவரே எனக்கு ஆதர்சமாய் இருந்தார். எனக்கு பாரதியார்ப் பாடல்களை மனனம் செய்யவைத்தார். அவர் வீட்டில் நடக்கும் கம்யூனிசக் கூட்டங்கள் என் பாரதி பாட்டுடன் துவங்கும். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மனைவியும் அந்த கம்யூனிஸ்ட் மாமியும் அக்கா தங்கை என்று ஞாபகம். என் தீவிர வாசிக்கும் பழக்கத்துக்கும்,பொதுவுடைமை மனப்பாங்குக்கும் பின்னாளில் என் தொழிற்சங்க ஈடுபாட்டுக்கும் அவர்களே காரணம்..

ஓ! ஏதோ சொல்லவந்து எங்கோ போய்விட்டேன்.
அவர்கள் என்னை வாயார மோகனம் என்று அழைப்பதை மீண்டும் கேட்க மனம் ஏங்குகிறது.

   கல்லூரி நாட்களில் மோனிகா,அன்பெழிலன் என்ற புனைப்பெயர்களில் வலம் வந்ததுண்டு.


இளமையில் சபரிமலை செல்ல ஆரம்பித்தேன்.. காவடியாட்டம் முறையாய் ஆடிய நாட்கள். என் குருசாமி என் ஆட்டம் பார்த்து மயிலு என்று கூப்பிடுவார். பலருக்கு இன்னமும் நான் மயில்சாமிதான்.. குருசாமி என்றும் அன்பர்களால் அழைக்கப் படும் போதும்.. மயிலுஎனக்கு பிடித்த பெயர்.

ஒருமுறை ஒரு கவியரங்கில் இன்னொரு மோகனும் கவிதை வாசிக்க வர, என் தமிழ்ப்பேராசிரியர் ஜி.மோகன் ஆன என்னை மோகன்ஜி ஆக்கினார். அந்த டீலிங் எனக்கும் பிடிச்சது ! மோகன்ஜியாய் செட்டில் ஆகிட்டேன்.

என் பிள்ளைகள் டாட்,அப்போய்,நைனா என்றெல்லாம்  அழைக்கும்போது களிகொள்ளும்  மனம், வயசுபெண்கள் அங்கிள் என்றழைக்கும் போது ஏனோ கஷ்டப்படுகிறது.!

வருங்காலத்தில் பேரப்பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் தாத்தா  என்று கூப்பிட்டால் எப்படி தாங்குவது என்பதே இப்போது என் யோசனை.. ஆரம்பமுதலே அவர்களை மோஹி,மயிலு என்று கூப்பிட பழக்க வேண்டியதுதான் என்ன  சொல்றீங்க? 

76 comments:

சே.குமார் சொன்னது…

Peryarp puranam romba nalla irukku Ji...

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்!

RVS சொன்னது…

அண்ணா.... திருஅவதாரத் திருக்கதை திருஅற்புதம்..
கொஞ்சம் கொஞ்சமா அசை போட்டு இன்னும் நிறையா கமெண்ட்டு போடுவேன்..

மயிலு... அப்படின்னு யாராது கூப்பிட்டா எனக்கு பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி ஞாபகம் வருது.... ;-)))))))))
இது ஃபர்ஸ்ட் கட். ;-))))))

RVS சொன்னது…

அண்ணா ... உங்கள் பெயர்க்கதையில் நான் பெயர்ந்துவிட்டேன்.. !!!! ;-))))

RVS சொன்னது…

ஸ்வாமிநாத பரிபாலயாஸுமான்.... ;-))))))

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். கொஞ்சநேரம் கொசுவத்திய சுத்த விட்டீங்க...

கல்லூரி நாட்களில், நண்பர்கள் என்னை எதனாலோ மைதிலி என்றழைப்பார்கள்.. எதனால் அந்தப் பெயர் என்று யோசித்துப் பார்க்கிறேன்.. நினைவுக்கு வரமாட்டேங்குது.. ப்ராமிசா நான் ஒரு பாவமும் அறியேன்!இந்த செய்தி உங்களுக்காக மட்டும் போட்டுக் கொடுத்துடாதீங்க!

மோகன்ஜி சொன்னது…

//அண்ணா ... உங்கள் பெயர்க்கதையில் நான் பெயர்ந்துவிட்டேன்..//

ஆர்.வீ.எஸ்! உங்கள் பின்னூட்ட வேகத்தில் நான் அயர்ந்து விட்டேன்.

/ஸ்வாமிநாத பரிபாலயாஸுமான்.... /
ரசிகனய்யா நீர்!

geetha santhanam சொன்னது…

//மேல்வானில் ஒரு வானவில் தோன்றியது.//
வானவில் மனிதன் உதிக்கப் போகிறார் என்று வானவில் கட்டியம் கூறியதோ?
//பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா?//
ஆஹா!!!
உங்கள் பெயர் காரணத்தையும், மோகனம், மயில், வந்தே மாதரம் போன்ற காரணப் பெயர்களையும் சுவைபட எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.

கலாநேசன் சொன்னது…

ரசனையான பெயர் விளக்கம்

கோவை2தில்லி சொன்னது…

"வயசுபெண்கள் ‘அங்கிள்’ என்றழைக்கும் போது ஏனோ கஷ்டப்படுகிறது.!"

கவலைப் படாதீங்க. இங்க கல்யாணம் ஆயிட்டாலே அங்கிள், ஆண்ட்டி தான்.
பெயர்க் காரணம் நல்ல பகிர்வு.

அப்பாதுரை சொன்னது…

உங்க மீசைக்கு மயிலு ஒத்துவருதா தெரியல. சிவாஜி படம் என்னனு யோசிக்கறேன் யோசிக்குறேன் யோசிக்றேன்.. 'மைக் மோகனா' கற்பனையை உசுப்புது.

யாரோ:எங்க வீட்டு நாய் காணாம போயிடுச்சுயா.. சீசர்னு பேர் வச்சேன்
நாகேஷ்: பேரு வச்சே சரி, சோறு வச்சியா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க கீதாமேடம் ! ரசிச்சு படிச்சதும் இல்லாம ரசிச்சு எழுதியும் இருக்கீங்க! நன்றி.. நன்றி..நன்றி

மோகன்ஜி சொன்னது…

வாங்க கலாநேசன்! பார்த்து நால்ல்ச்சு.. நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

ஆதி!
//இங்க கல்யாணம் ஆயிட்டாலே அங்கிள், ஆண்ட்டி தான்//
ஹும்ம்ம்.. ஏன் தான் வயசாகுதோ!

உங்க வாழ்த்துக்கு நன்றி ஆண்ட்டி!

மோகன்ஜி சொன்னது…

அந்த பெயர் எனக்கு வைக்கப்பட்ட போது மீசை அரும்பத் தொடங்கியிருந்தது.. அப்பாஜி..
இன்னமும் கூட நம்மெல்லாம் சின்னவங்க தானே.. வால்லிப வய்யஸ்ஸு...

சிவாஜி படம் என்னன்னு கேட்போமின்னு பார்த்தா சிவாஜியும் இல்ல.. பேர் வச்ச அக்காவும் இல்ல...

'பேரு வச்சே சரி, சோறு வச்சியா'Brilliant Nagesh

அப்பாதுரை சார்! இன்னமும் கொஞ்சம் பட்டப்
பேருல்லாம் எனக்கு இருக்கு.. நாம் சந்திக்கும் தருணத்தில் அவை பகிரப்படும்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பெயர்க் காரணம் நல்லா இருக்கு மைதிலி அட மோகன்ஜி! ஆர்.வி.எஸ் உசுப்பிவிட எங்களுக்கு ஒரு அற்புதமான பகிர்வு கிடைத்திருக்கிறது. என்னையும் எழுதக் கூப்பிட்டு இருக்கார்! பார்க்கலாம் என் கொசுவத்தி எப்படி சுத்துகிறது என :) ஆதி சொன்னது போல என்னை தில்லி வந்த புதிதில் சமவயதுள்ள ஒரு பெண் “அங்கிள்” என அழைத்து ஏதோ வழி கேட்க, அதற்கு நான் கோவத்தில் “ஆண்ட்டி” என கூப்பிட்டு பதில் சொல்ல, பிரகதி மைதான் வாசலிலேயே பெரிய சண்டை ஆனது!

ரிஷபன் சொன்னது…

எழுத்து அதனாலதான் மோகிக்க வைக்கிறதா..

சுந்தர்ஜி சொன்னது…

//வயசுபெண்கள் ‘அங்கிள்’ என்றழைக்கும் போது ஏனோ கஷ்டப்படுகிறது//

இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

//வருங்காலத்தில் பேரப்பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் தாத்தா என்று கூப்பிட்டால் எப்படி தாங்குவது?//

காத்திருக்கிறேன் தாத்தாவுக்காக மோஹன்ஜி.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

Interesting...

மோகன்ஜி சொன்னது…

வெ.நா! வேணா ! வேணா!.. மைதிலிய இழுக்காதீங்க.. யாருன்னே எனக்குத் தெரியாது.. நட்ராஜூ தான்..

தடியனுங்க... இப்போ கோட்டு டையின்னு இல்லே டபாய்க்குறாங்க.. என்னோட ஒரு நண்பேன் என் கவிதையெல்லாம் அவனதுன்னு சொல்லி, அதை காதலியிடம் கொஞ்ச வருஷம் மெய்ன்டேய்ன் பண்ணி, அப்புறம் இலக்கியத்துக்குல்லாம் டைம் இல்லேன்னு போறபோக்குல மெய்ன்லைனுக்கு வந்துட்டான். தாயும் சேய்களும் நலம்..
நல்லாத்தான் கிளப்புராங்கப்பா பீதிய!

மோகன்ஜி சொன்னது…

//எழுத்து அதனாலதான் மோகிக்க வைக்கிறதா//
பிரிய ரிஷபன் ! மோகிக்க வைப்பது உம் அன்பும், உம் தமிழார்வமுமே அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! இந்த மாதிரி சின்னசின்ன மானுட அபிலாக்ஷைகளையும் வேட்கைகளையும் மேதாவித் தனம் நீக்கி கடக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவன் நான். ஆண்டாள் பாசுரம் பற்றி உரையாற்றி,கௌரவங்களை ஏற்றுத்திரும்பும் போது,பிளாட்பாரத்தில் வேர்கடலை வாங்கிக் கொண்டு, 'உன்னை வெள்ளாவியில வச்சு வெளுத்தாங்களா' என்று சன்னமாய் சீட்டி அடித்துக் கொண்டு திரும்புவதில் நான் நானாய் இருக்கிறேன். என்று தோன்றுகிறது.
அவ்விடே எப்டி??

மோகன்ஜி சொன்னது…

செந்தில் சார்.. நலமா? எப்படியோ கொஞ்சகாலம் தொடர்பில்லாமல் போய் விட்டது..நலம் தானே? உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்!

எல் கே சொன்னது…

நல்ல கொசுவர்த்திதான் மோகன் ஜி

Balaji saravana சொன்னது…

அண்ணா, ”மோகன் சார்”ரை விட்டுட்டீங்க! ;) ரொம்ப அழகா நினைவில் இருந்து எழுதிட்டீங்க அண்ணா!

எல் கே சொன்னது…

ஒரு விஷயத்தை எல்லாருமே கோட்டை விட்டு இருக்காங்க நான் சொல்லிட்டு ஓடிப் போயிடறேன்.

மைக் மோகன் நடித்தப் படங்களில் (பெரும்பாலும் ) இரண்டு ஹீரோயின்கள் ) .. இங்க எப்படி ???

எல் கே சொன்னது…

ஒரு வேளை அந்த மைதிலிதானோ????
என் வேலை முடிஞ்சது

Chitra சொன்னது…

பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா? அதான் வந்தேன்..

....யெம்மா...முடியல.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பல பெயர்களுடன் பேர்போனவரா இருக்கிறீங்க, சார்.

பதிவு நல்லாயிருக்கு சார்.

மயிலு தான் சார் எனக்கும் பிடிச்சிருக்கு.

[16 வயதினிலே ஸ்ரீதேவியைத் தான் சொல்லுகிறேன் - எவ்வளவு அழகாக இருப்பாங்க! ஹி..ஹி..ஹி]

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அட...இப்படியும் எழுத முடியுமா?

Gopi Ramamoorthy சொன்னது…

வெரி நைஸ்.

இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் (சம்பேஸ்தா,ததிக்ராவின்னோ என ஆரம்பிக்கும் சிறுகதை) படித்தேன். பின்னூட்டம் இட நேரம் இல்லை.

ததிக்ராவின்னோ- இது போன்ற சொற்களுக்கு ஆங்கிலத்திலும் transliteration கொடுங்கள். உச்சரிக்க வசதியாக இருக்கும். நன்றி.

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! மைக் மோஹன்லேருந்து மைதிலிக்கு வந்து வேலையை முடிச்சிட்டீங்களே பரட்டை! நிஜமாவே அந்த மைதிலி யாருன்னே தெரியாது. பாத்தீங்கனா கொஞ்சம் சொல்லுங்க பாஸ்.. பரணில கொஞ்சம் கவிதை மிச்சம் இருக்கு..

ஹேமா போன பதிவுல சொன்னாங்க.. 'சாத்துப்படி'ன்னு ஒரு மேட்டரை. இப்போவே தற்காப்பு ஏற்பாடுகள் செஞ்சுடறேன்..

மோகன்ஜி சொன்னது…

பாலா! ரொம்ப நாளா காணுமே தம்பியை.. அதுவும் வேலன்டைண்டே அன்னிக்கு போனபிள்ளை.... இப்பத்தான் வர்றாப்புல...உன் பாராட்டுக்கு நன்றி உடன்பிறப்பே!

மோகன்ஜி சொன்னது…

சித்ரா! உங்களைக் கேக்கனும்னு இருந்தேன். நீங்க சாரோட இருந்த போட்டோ நல்லா இருந்திச்சே.. அதை இன்னொரு ரவுண்டு விடுங்க..

மோகன்ஜி சொன்னது…

வாங்க வை.கோ சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.
உங்களுக்கு மயிலுதான் பிடிக்குமா?
நான் 'அமலா' செல்லம்...

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆர்.ஆர்.ஆர்..
/அட...இப்படியும் எழுத முடியுமா?/
என்ன சார் இது?உங்களுடைய “ காளிங்கன் கர்வ பங்கம்” எழுத்தை விடவா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க கோபி ராமமூர்த்தி! உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் சொன்னபடி சில சொற்களுக்கு ஆங்கிலத்திலும் transliteration இனிமேல் கொடுக்கிறேன்.

தெய்வசுகந்தி சொன்னது…

நல்லாத்தான் கொசுவத்தி சுத்தியிருக்கீங்க!!

எல் கே சொன்னது…

/நான் 'அமலா' செல்லம்/

அமலா பால் ?????

மோகன்ஜி சொன்னது…

வாங்க தெய்வசுகந்தி!ரொம்ப நாளாச்சே நீங்க வானவில்லுக்கு வந்து... நலம்தானா?

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! சரியா போச்சு! என்டே அமலையை நாகார்ஜுனா விவாஹம் சேஞ்சு.. யான் மனசொடிஞ்சு..

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஒரு சொல்லக்குள்ள இந்தளவு விசயம் இருக்குமா ?

vasan சொன்னது…

என் நட்பு வ‌ட்ட‌த்தில் ஒரு 'ம‌யிலு' ஆகிய‌ ம‌யில் வாக‌ன‌ன் உண்டு. அந்த‌ பெய‌ரே முருக‌னின் அடிமை என்று நின்று சொல்வ‌தாய் தோன்றும். உங்க‌ளுக்கு இந்த‌ "மைக் மோக‌ன்" ஓகே, ஆன‌ ஓல்டு ஸ்டைல். அங்கி'ளே' பிடிக்காத‌வ‌ருக்கு அது பொருந்தா‌து. ச‌ரி பேர‌ன் வந்து "என்ன சொல்லி" கூப்பிட்டாலும் அதுதான் தேன்வ‌ந்து பாய்வ‌தாய். இப்போத‌க்கு'மோக‌ன்ஜி'யே சூப்ப‌ர் பெய‌ர்தான். இந்த‌மாதிரி வ‌ல‌யில‌ இருக்கும் சில'ஜி'க‌ளையும் தேட‌லாம். (உம்:சுந்த‌ர்ஜி)

மோகன்ஜி சொன்னது…

வாங்க ம.தி.சுதா! உங்கள் ரசனைக்கு நன்றி சகோதரா!

மோகன்ஜி சொன்னது…

வாசன் உங்க நட்பு வட்டத்துல இந்த மயிலையும் சேர்த்துக்குங்க.
நீங்கள் சொன்னது உண்மை. ஒரு மனிதனுக்கு மிகுந்த வாத்சல்யத்தையும் நிறைவும் தரும் உறவு ஒன்று உண்டென்றால் அது பேரன்/பேத்தி உறவுதான்.

பேரப்பிள்ளை நம் மடில 'உச்சா' போனாதான் சொர்க்கத்துக் கதவே நமக்கு திறக்குமாம்.
அது சொர்க்கத்தின் திறப்புவிழா!

பேரப்பிள்ளை வரட்டும் வந்து,தாத்தா என்ன ... தடியான்னேதான் கூப்பிடட்டுமே?!

சிவகுமாரன் சொன்னது…

சூப்பர் மயிலு.
\\பேரப்பிள்ளை வரட்டும் வந்து,தாத்தா என்ன ... தடியான்னேதான் கூப்பிடட்டுமே?!//

அந்தக் கொடுப்பினை எனக்கும் இல்லை என் பிள்ளைக்கும் இல்லை.
என் பேரனுக்காவது கெடைக்குதா பார்ப்போம் ( இதைத்தான் பேரா..சை என்றார்களோ ?)

ஹேமா சொன்னது…

மோகண்ணா...ஒரு மோகனுக்குள்ள இத்தனை கதையிருக்கா.எங்கவீட்லயும் ஒரு காந்தி மாமா இருக்கார்.காந்தி இலங்கை வந்த அன்று பிறந்தாராம்.

பேரப்பிள்ளை எப்பிடி கூப்பிடப்போரான்னு இப்பவே பெரிய கவலை.இப்ப பிள்ளைகள் எங்களைப்போல இல்லண்ணா.முட்டாள்,மடையா,குரங்கு,பண்டின்னு கூப்பிடாம விட்டாலே அதிசயம் !

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா.. வம்பு சிவான்னு மாறிகிட்டே இருக்கே...
'பேரா...சை' ரொம்ப ரசித்தேன் இன்ஸ்டன்ட் கவிஞா!

மோகன்ஜி சொன்னது…

ஹேமா!
/எங்கவீட்லயும் ஒரு காந்தி மாமா இருக்கார்./
அப்போ... நான் உங்க வீட்ல இல்லையா?

நீ 'மோகண்ணா' என்று பதிவில் கூறும் போதெல்லாம் எனக்கு உன் கூப்பிடும் குரலும் அல்லவா சேர்ந்து ஒலிக்கிறது?

sury சொன்னது…

ரோஜாவை எந்தப் பெயர் கொண்டழைப்பினும்
ரோஜா ரோஜாதான்.
பெயர் நமது உடலுக்கு ஒரு அடையாளம். நமது
செயல்களே இவ்வுடலுக்கு வலு சேர்க்கும்
அழகு தரும் அடையாளங்கள்.

சுப்பு ரத்தினம்.

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் சுப்புரத்தினம் சார்! அற்புதமான கருத்தை சொல்லியிருக்கீங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

G.M Balasubramaniam சொன்னது…

ஆங்காங்கே வலைகளில் நீங்கள் இடும் கருத்துரைகள் என்னை உங்கள் வலைக்கு இழுத்து வந்தது. வானவில்லின் நிறங்கள் வெண்மையின் திரிபுதானே. என்னவெல்லாமோ பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா ரொஜாதான். மோகன், மோகன் தானே. மரியாதைக்கு ஜி சேர்த்துகொண்டு மோகன் ஜி யாகவே வலம் வாருங்கள். வாழ்த்துகள்

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள ஜி.எம்.பி சார்!உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிக்க ஆனந்தத்தைத் தருகிறது.உங்கள் வாழ்த்தை ஆசீர்வாதமாய் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். அடிக்கடி வந்து ஊக்குவியுங்கள் ஐயா!

Matangi Mawley சொன்னது…

unga dealing enakkum pidichchathu! :D

மோகன்ஜி சொன்னது…

வாங்க மாதங்கி..
/unga dealing enakkum pidichchathu! :D/ நன்றி நன்றி நன்றி..

ஆயிஷா சொன்னது…

பதிவு நல்லாயிருக்கு. வாழ்த்துகள்.

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ஆயிஷா

meenakshi சொன்னது…

சுவாரசியமான பதிவு!
சாயங்கால வேளைக்கே ஒரு தனி அழகு உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே சந்தோஷம் தரும் வேளை இது. சாயரட்சையில் பெருமாளே சிவன் கோவிலுக்கு வந்து சிவனேன்னு உட்காந்துப் பார் அப்படின்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவார்கள். அப்படிப்பட்ட இந்த அழகான வேளையில் பிறந்த உங்களுக்கு 'மோகன்' என்று சரியாகத்தான் பெயர் வைத்து இருக்கிறார்கள் உங்கள் அக்கா. :)
'மோகனம்' அழகான ராகம், இது உங்கள் பெயரில் உள்ள இன்னொரு அழகு.

மோகன்ஜி சொன்னது…

நன்றி மீனாட்சி மேடம். சற்றுமுன்தான் மாலைக்காலம் பற்றி ஒரு இலக்கியப்பதிவு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம் உத்தரவாகவே வந்து விட்டது. அதை பதிவிட வேண்டியதுதான்.
உங்கள் பாட்டி சொன்ன கருத்து அழகானது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி மேடம்.

சாய் சொன்னது…

என் அலுவுலக நண்பன் ஒருவனை நாங்கள் எல்லோரும் மோகனா என்று அழைப்போம்.

சாய் சொன்னது…

Some times "மோனா"

Ramani சொன்னது…

பெயருக்காண காரணத்தை
நன்றாக ரசிக்குபடியாக பதிவு செய்துள்ளீர்கள்
நம் பெயர் நமக்கு வந்து சேருவதற்க்குள்
என்ன என்னவெல்லாம் நடந்து போகிறது
நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

சில சமயம் என் அம்மாவும் என்னை மோனா என அழைப்பதுண்டு..
உங்கள் கைவலி எப்படி இருக்கிறது? சிகிச்சை
மேற்கொள்கிறீர்களா? இந்தியா வரும் யோசனை எதுவரை உள்ளது?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரமணி சார்.. நல்ல பேரு எடுடா என்று பெரியவர்கள் கூறும்போது வச்ச பேருக்கு என்னகுறை என்று கேட்கத் தோணும். .. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

சாய் சொன்னது…

// மோகன்ஜி சொன்னது… உங்கள் கைவலி எப்படி இருக்கிறது? சிகிச்சை மேற்கொள்கிறீர்களா? இந்தியா வரும் யோசனை எதுவரை உள்ளது? //

மோகன்ஜி, கோர்டிசான் ஊசி போட்டு இரண்டு நாள் வலி பின்னிஎடுத்துவிட்டது. இப்போ ஊசிக்கு முன்னோ ஊசி போட்ட இரண்டு நாள் அளவு வலி இல்லாவிட்டாலும் இன்னும் இருக்கு. கையை எப்போதும் போல் உபயோகிக்க முடியவில்லை. பல ரேஞ்சில் வலி இன்னும் இருக்கு.

இரண்டு வாரத்தில் வலி போகவில்லை என்றால் டாக்டர் ஆபரேஷன் என்று சொன்னார். ஆனால் நான் மார்ச் இருபத்து மூன்று மணிலா (பிலிப்பின்ஸ்) சென்று அங்கிருந்து சென்னை வருவேன். அங்கே அமெரிக்க விசா வாங்கி மறுபடியும் இங்கே வந்தபிறகு பார்க்கவேண்டும். இதில் பெட்டி எல்லாம் வேறு தூக்கவேண்டும் ? பாகப்பிரிவினை தான் போலிருக்கு. சிவாஜிகணேசனுக்கு அட்லீஸ்ட் ஷோக்கா சரோஜாதேவி இருந்தாங்க ! சென்னை வந்தால் கைத்தொலைபேசியில் அழைக்கின்றேன். உங்கள் நம்பர் என்னிடம் இருக்கு.

இந்த வருட கத்திரி வெய்யிலில் இந்த "வெளுக்காத கருப்பை" சூரியனால் என்ன செய்யமுடியும் என்று சவாலுக்கு அழைத்து வருகின்றேன் !!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா? அதான் வந்தேன்.//

ஹா ஹா... அது சரி தான்.. :-)))

//மோஹி’ என்று கொஞ்சல் பேராய் அது உலாவந்தது.//

....இத பாத்ததும், எனக்கு தில்லானா மோகனம்பாள் வசனம், ஞாபகம் வருதுங்க..
மோஹி.. மோஹி... நல்லா ஆடுறே... நல்லத் தான் இருக்கே.......பின்னே ஏண்டிம்மா வேண்டாம்கிரே....! :-)))


//கீழிருந்து ‘பேசுடாபேசுடா’ என்று டீச்சர் உறும, “வந்தேமாதரம்,வந்தேமாதரம்” என்று முஷ்டி உயர்த்தி கூவிவிட்டு இறங்கிவிட்டேன். //

....ஹா ஹா ஹா... இது செம செம.. :-)))))


//மேடைப்பேச்சு எனக்கு உவப்பானதாய் மாறிப்போய்,‘மைக் மோகனா’யும் வலம் வந்தேன்.
//
......ஓஓஓஒ... அவரா நீங்க... ஓகே ஓகே.. :-)))

//வயசுபெண்கள் ‘அங்கிள்’என்றழைக்கும் போது ஏனோ கஷ்டப்படுகிறது.//

....... ஹ்ம்மம்ம்ம்ம் :-))))

//அவர்கள் என்னை வாயார ‘மோகனம்” என்று அழைப்பதை மீண்டும் கேட்க மனம் ஏங்குகிறது//

.....ஹ்ம்ம்.. அவர்கள் மேல் நீங்க வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு.. :-)

//ஆரம்பமுதலே அவர்களை மோஹி,மயிலு என்று கூப்பிட பழக்க வேண்டியதுதான் என்ன சொல்றீங்க?//

....ஹ்ம்ம்ம்.. இது நல்லா இருக்கே... :-))

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள ஆனந்தி! என்னமா கூறு போட்டு ரசிச்சிருக்கீங்க? நன்றி..நன்றி..நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

உண்மையில் அழகா எழுதி இருக்கீங்க.. சந்தோசமா இருந்தது படிக்கறதுக்கு... தேங்க்ஸ் :)

சிவகுமாரன் சொன்னது…

மறுபடியும் வந்து படித்து மகிழ்ந்தேன் அண்ணா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

எத்தனை தடவை தான் படிக்கிறது...வேற போடுங்க, பாஸ்!

ஹேமா சொன்னது…

மோகண்ணா....அடிக்கடி காணாமப் போயிடறீங்க.சரில்ல !

சாய் சொன்னது…

//ஹேமா சொன்னது… மோகண்ணா....அடிக்கடி காணாமப் போயிடறீங்க.சரில்ல ! //

ஹேமா

மோகன்ஜி என் இந்திய விஜயத்துக்கு என்னை வரவேற்க ஏற்பாடுகள் செய்து பிசியாக இருக்கார் !!

என்ன மோகன்ஜி கரீட்டா ??

- சாய்

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

//பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா? அதான் வந்தேன்.//

ரொம்ப ரசனையான பதிவு சுவாமிநாதன்ஜி.
உங்கள் தாத்தா ஆசையாக வைத்த பெயர்
அல்லவா. பகிர்விற்கு நன்றி மோகன்ஜி.

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா எங்கே போனீங்க ?

பத்மநாபன் சொன்னது…

பணிமாற்றத்திற்கு நீண்ட இடைவெளி எடுக்க வேண்டியதாயிற்று...

சுவாமிநாதன் மோகன் ஆக மாறி மயிலாக ஆடி மோகனம் பாடியது சுவராசிய மழை..

வந்தேமாதிரம் ...குருசாமி..மயில் சாமி இயல்பாக அமைந்த மோகன்ஜி எல்லாம் அருமை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

‘ஜி.மோகன்’ ஆன என்னை மோகன்ஜி ஆக்கினார். அந்த டீலிங் எனக்கும் பிடிச்சது ! மோகன்ஜியாய் செட்டில் ஆகிட்டேன்.
நிறைவான பகிர்வு.
பேரக்குழந்தைகளை கிராண்ட்பா என்று கூப்பிட வையுங்கள்.
பெரியப்பா, அண்ணா என்றுதான் நிறையபேர் அழைக்கவைக்கிறார்கள்.
தாத்தா என்று கூப்பிட்டால் கால் அயர்ந்துவிடுமாம்..