ஞாயிறு, மார்ச் 27, 2011

பச்ச மொழகா

ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்’’
ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து, பச்சை மிளகாய்பச்சமொழகாஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தான் மதுசூதனன். ஆனாலும்,இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ராஜாமணி அதேவிதமாய் அவருடைய மெஸ்ஸில் உச்சரித்தார். அந்தமொழகாய்ப் போல அவர் வாழ்க்கையும் நடைமுறையில் இல்லாத தினுசாகத்தானே இருந்தது?
ராஜாமணியை மதுசூதனனுக்கு பத்து நாளாய்த்தான் பழக்கம். முதன்முதலாய் அவரை சந்தித்தபோது வெங்கடேஸ்வரா ஹோட்டலில் எதிரில் அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிநேகமான புன்னகையுடன் கேட்டார்
நீங்க இந்த ஹோட்டலுக்கு ரொம்பநாள் வாடிக்கைப் போலிருக்கே
ரொம்ப நாளில்லீங்க.. ஒரு மூணுமாசமாத்தான்.”
சாருக்கு எந்த ஊரு? ஏதும் காலேஜ்ல படிக்கிறீங்களா?”
வலங்கிமான்ங்க..அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்து மூணுமாசம்தான் ஆச்சு.”
அப்படிப் போடுங்க! எனக்கு திருவிடைமருதூர்.” காபியை முடித்த கையோடு, நிமிஷமாய் நான்கு வெற்றிலையோடு புகையிலையையும் போட்டுக் கொண்டார்.
மது அவரை தீர்க்கமாய்ப் பார்த்தான். சற்று குட்டையான கச்சலான உருவம். சச்சதுரமான முகம்..
மோவாய் மட்டும் கூம்பாய் இறங்கியிருந்தது. சற்றே ஒட்டிய கன்னங்கள். வெற்றிலை புகையிலைக் குதப்பலின் தளும்பல் உதட்டோரத்தில் கசிந்து நின்றது. நெற்றியில் தீற்றலாய் இட்ட குங்குமம்..  சட்டைக் காலருக்கு கைகுட்டையால் உறை. மடித்துக் கட்டிய நாலுமுழ வேட்டி. முன்வழுக்கையில் எண்ணை பளபளப்பு.. பேச்சில் பரபரப்பு.
சார். ஒரு வேண்டுகோள். இதே ரோட்ல பிள்ளையார் கோவில் தாண்டி, புதுசா ஒரு சாப்பாட்டுக் கடை துவக்கறேன். காலமே இட்லி, பொங்கல், வடை,தோசை, பூரிக்கிழங்கு போடறேன் சார். மதியம் சாப்பாடு. ராத்திரில மீண்டும் தோசை, சப்பாத்தி, இட்லி கிடைக்கும் சார். உங்களையெல்லாம் தான் நம்பி இஞ்ச வந்திருக்கேன். கைத்தூக்கி விடணும் சார். உங்க சிநேகிதர்களையெல்லாம் கூட கூப்பிட்டுகிட்டு வரணும் சார்.”
அவசியம் வரேங்க. என்னைக்கு ஆரம்பிக்கிறீங்க?”
நாளைக்கு நாள் நல்லா இருக்கு சார். காலமே வாங்களேன். உங்களுக்காய்  காத்திருப்பேன்
வரேங்க” 
மது தன் அறைநோக்கி நடந்தான். மணி இப்போ ஒன்பது இருக்குமா.. சாலை வெறிச்சோடி இருந்தது. அந்த எழுபதுகளின் அம்பத்தூர் சென்னையின் தாக்கம் அதிகமில்லாது, ஆனாலும் அதோடு ஒட்டியே இயங்கிக் கொண்டிருந்த காலம். சேட்டு வீட்டுக் கல்யாணத்தில் தனித்து தெரியும் ஒரு மடிசார் சுமங்கலியைப் போல ....
 மறுநாள் காலை ராஜாமணியின் அழைப்பு ஞாபகம் வந்தது.
ராஜாமணியின் சாப்பாட்டுக் கடையை மெஸ் என்றோ ஹோட்டல் என்றோ அழைக்க முடியாதுதான்... கிழக்கு பார்த்த அந்தப் பழைய வீட்டின், ரோட்டிலிருந்து ஒரு அடி உயரமே இருந்த அகலமான திண்ணை தான் மெஸ். திண்ணையின் மூன்று பக்கத்திலும் தென்னங்கீற்றால் இரண்டடி உயரத்துக்கு தடுப்பும் மேலே கூரையும் வேய்ந்திருந்தது. ஏககாலத்தில் பதினைந்து முதல் இருபது பேர் அங்கு சாப்பிட இடமிருந்தது.
பலகைகளையே சாப்பாட்டு மேஜையாயும், அமர்வதற்கு பெஞ்ச்சாயும் அமைத்து இந்த்ரஜாலம் புரிந்திருந்தான் மகாதேவ ஆசாரி. இந்த மெஸ்ஸில்... போகட்டும் அப்படியேதான் அதை அழைப்போமே... துவங்கிய இந்த பத்துநாட்களாக  மது அங்குதான் சாப்பிடுகிறான். டிபனும் சாப்பாடும் பரவாயில்லை. காப்பி தான் கொஞ்சம் சுமார் ரகம். பில் கூட ஹோட்டலை விடக் கம்மிதான். ராஜாமணியின் உபச்சாரம் சற்று தூக்கலாயும் சமயத்தில் கொஞ்சம் எரிச்சலாகவும்கூட இருந்தது.. மதுவோடு சேர்ந்து இன்னும் பத்து பதினைந்து பேர் வாடிக்கையாகி இருந்தனர். மகாதேவ ஆசாரியையும் காலை டிபன் நேரத்திலும், இரவு சாப்பாட்டின் போதும் அங்கே சாப்பிடுவதைப் பார்க்கிறான். சாப்பிட்டுவிட்டு போகும் போது ஏதும் காசும் கொடுப்பதில்லை ஆசாரி. ராஜமணியும் கேட்பதில்லை. இந்தப் பந்தல் அமைப்புக்கு ராஜாமணி பணம் தராமல் இருந்திருக்க வேண்டும். சாப்பிட்டுத்தானே அதை வசூலிக்க முடியும்.? மதுவுக்கு பாவமாய் இருந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பது மணிக்கு மது மெஸ்ஸில் நுழைந்தான்.
வாங்க சார்!’ ராஜாமணி வரவேற்று முடிக்கும் முன்பே ஆசாரியின் ரம்பக் குரல் கரகரத்தது. “என்ன ராஜாமணி.. வடைக்கு சவுரி வச்சிருக்கே’’ நீளமாய் ஒரு தலைமுடியை வடையிலிருந்து ராட்டை நூற்பதுபோல் சாய்வாக இழுத்தபடி குரல் உயர்த்தினார்.
ஐயய்யோமன்னிக்கணும். அதை களைஞ்சிடுங்கோன்னா. வேற போடறேன்டீ பத்மா! செக்கொலக்கே! இஞ்ச வாகாட்டுக் கத்தலாய் ராஜாமணி அலறினார். இடுப்பில் குழந்தையுடன்  அவர் சம்சாரம் உள்ளிருந்து வந்தாள்.
ஜடமே! வடைக்கு அரைக்கறச்சே தலையை விரிச்சிப் போட்டுண்டு நர்த்தனம் பண்ணினியா? தலைய செரைக்க...ஜடமே  ஜடமே!” சட்டென்று அருகிருந்த சட்டுவத்தால், சப்பென்று அவள் கன்னத்தில் அடித்தார்.
ஒரு முக்கலில்லை முணகலில்லை.. இன்னும் ஏதும் உண்டா என்பதுபோல் நின்றுவிட்டு வந்தவாகிலேயே திரும்பினாள். ஒரு அமைதி அங்கு பரவியது.. சகிக்கவியலாத அமைதி.
என்ன ராஜாமணி இப்படி பண்ணிட்டே?’ அமுங்கிய குரலில் ஆசாரி கேட்டார். ‘சரி கொஞ்சம் சாம்பார் ஊற்று.’.
மதுவுக்குத் தாளவில்லை. கோபத்திலும் அதிர்ச்சியிலும் அவன் கைகள் நடுங்கின. ராஜாமணியை ஒரு புழுவைப் போல் வெறித்து விட்டு ஏதும் பேசாமல் வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.
சார்.. சார்..  அவன் பின்னே ராஜாமணியின் குரல் தேய்ந்தது.”
இரவு எட்டுமணிக்கு வாயிற்கதவை மெல்ல தட்டும் சத்தம்..
வாசலில் ராஜாமணி..
என்ன?’ மதுவின் குரல் வறட்சியாய்  ஒலித்தது.
ஒரு ஆத்திரத்தில் பத்மாவை அடிச்சிபிட்டேன் சார். உங்களுக்கு பூ மாதிரி மனசு. தாங்காம கிளம்பிட்டீங்க. என்ன செய்யிறது? இல்லாமையும் இயலாமையும் கூடப் பிறந்துடிச்சிபாழாப்போன கோபத்தால பலதை இழந்துட்டு இப்படி அலையிறேன் சார். அதைப் பங்குபோட்டுக்க வந்தவகிட்டத்தானே காமிக்க வேண்டியிருக்கு.”
ஒரு பொம்பளையை கை நீட்டி அடிக்கிற நீரெல்லாம் எதிலே சேர்த்தி? வயசுல பெரியவர்னு பாக்கிறேன். உம்ம சங்காத்தமே வேண்டாம். இடத்தைக் காலி பண்ணும்.”
அடிபட்டவளே சமாதானமாயிட்டா.. நீங்க இன்னமும் அதையே நினைச்சுகிட்டு..... வாங்க சார்! இன்னிமே நான் கைநீட்டினேன்னு காதில் விழுந்தா, காலில் இருக்கிறதைக் கழட்டி என்னை அடிங்க.. கிளம்புங்க இன்னிக்கு பத்மா அடைக்கு அரைச்சிருக்கா. சூடா வார்த்துப் போடறேன் வாங்க சார்.”
போறும்.போறும். கைப்புள்ளைக்காரியை சட்டுவத்தால் அடிக்கிற ராக்ஷசன் நீர். உம்மை பார்த்தாலே பாவம்.. கிளம்பும்...”
சார்! அப்படி ஒதுக்கிடாதீங்க சார்! உங்களைப் பார்த்ததிலிருந்து என் கூடப்பிறந்த பிறப்பாதான் நினைக்கிறேன். செய்யிறத் தொழிலை குலசாமியாய் பாக்குறேன் சார். சாம்பார்ல தண்ணி விளாவி இருப்பேனா? புண்ணாக்கை சட்னியில் கலந்து அரைச்சிருப்பேனா? அன்னம் கொஞ்சம் கூட கேட்டா முகம் சுணங்கியிருப்பேனா? நீங்க வர்றதாலத் தான் நாலுபேர் கடைக்கு வராங்க.. ரெண்டு நாளாத்தான் போட்டகாசு கையைக் கடிக்காம எடுக்குறேன் சார்!’ ராஜாமணியின் குரல் தழுதழுத்து கண்கள் குளம் கட்டின.
ராஜாமணி விடுவதாய் தோன்றவில்லை.
சரி இப்போ சாப்பிடத் தோணலே.. காலைல பார்க்கலாம். போயிட்டு வாங்க.”
ஸாரி சார்! அவசியம் வாங்க. எனக்கு மனசுக்குக் கலக்கமா இருக்கு”.
சரி! போயிட்டு வாங்க!’
சற்று நேரத்திற்குள், அப்பாவுக்கு மாரடைப்பு என்று வந்த செய்தியில் மது ஊருக்கு விரைய நேர்ந்தது. அவன் ஊர்போய் சேர்வதற்குள் அப்பா காலமாகி, காரியம் முடித்து சொத்து பத்து விவகாரமெல்லாம் கையாண்டு மீண்டும் அம்பத்தூர் வருவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது.
மதுவின் மனதில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த ராஜாமணியின் நினைப்பு சட்டென்று மேலெழுந்தது. போகும்போது அவரிடம் கொஞ்சம் வேகமாய்த்தான் நடந்து கொண்டு விட்டோமோ?
மெஸ் நோக்கி விரைந்தான் மது.
அந்தக் கொட்டகைப் பிரிக்கப்பட்டு, அது இருந்த சுவடே தெரியாமல் துடைத்துவிடப் பட்டிருந்தது கண்டு துணுக்குற்றான்.
மாமி!” ராஜாமணி இருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாளை கதவைத்தட்டி அழைத்தான்.
யாரப்பா அதுஎன்றபடி கதவைத் திறந்தவளிடம் மது கேட்டான்.
இங்கே கடை வைத்திருந்த ராஜாமணி எங்கே மாமி?”
அந்தக் கூத்தை ஏன் கேக்குறப்பா? ஜாகை வாடகைக்குக் கொடுன்னு பல்லெல்லாம் கெஞ்சினவனை, அவன் பொண்டாட்டியையும் குழந்தையையும் பார்த்துத்தான் வாடகைக்கு விட்டேன். அவனும் அவன் கோவமும்..... கொஞ்சம் கிறுக்கனப்பா. போனமாசம் ஒரு நாள்  ராத்திரி வந்து, தன் கையை எரியிற விறகால தீச்சிகிட்டு, என்னை மன்னிச்சுக்கோ மன்னிச்சிக்கோன்னு அவளாண்டை அவன் கத்த, பதிலுக்கு அவள் தலையை சுவற்றில் முட்டிக்கொண்டு அழ, குழந்தை அலற...  போறும்டாப்பா இந்தமாசக் கொடக்கூலியை குடுத்துட்டு கிளம்புன்னு  சொல்லிட்டேன். என்னண்ட பணமில்லை இந்த பாத்திரங்களை இங்க வச்சுட்டுப் போறேன். காசைக் கொடுத்துட்டு திரும்ப எடுத்துக்கிறேன்னு குடும்பத்தோட போனவன்தான். இன்னும் வல்லே. இன்னம் நாலு நாள் பார்த்துட்டு இதையெல்லாம் கடையில போட்டுறப் போறேன்.”
அந்த ரேழியின் மூலையில் பாணலி, குடம், தூக்குகள், டம்ளர்கள், கூடை, தாம்பாளம், எவர்சில்வர் வாளிகள் என குமித்திருந்தது.
உனக்கு ஏதும் அவன் பணம் தரணுமாப்பா?”
இல்லை மாமி .நான் வாடிக்கையா அங்க சாப்பிட்டுகிட்டு இருந்தேன். வரேன்
சரிடாப்பா
திரும்ப எத்தனிக்கையில், தன்னிச்சையாய் மதுவின் கண்கள் பாத்திரங்கள் கிடந்த மூலையைத் திலாவின.
நிமிர்ந்து தனித்து நின்ற சட்டுவம், நூறு கண்களுடன் மதுவைப் பார்த்து விழித்தது.



57 comments:

Chitra சொன்னது…

சோகமான கதைதான். ம்ம்ம்ம்.....

(தமிழ்மணத்துல ஏதோ ப்ரோப்லம் போல.... வோட்டு போட இயலவில்லை)

சிவகுமாரன் சொன்னது…

கலங்க அடிச்சிர்றீங்க அண்ணா.
இல்லாமையும் இயலாமை யும் ஏற்படுத்தும் கோபம் , அதனால் ஏற்படும் இழப்பு ,
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விளையும் சங்கடங்கள் , அதனால் வரும் குற்றவுணர்ச்சி .
அந்த சட்டுவம் சொல்கிறது பல கதைகளை மதுவுக்கு.
"சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ "
-- சட்டுவம் அறிவிக்கிறது மதுவின் நாக்கு அனுபவித்த சுவையையும் , ஏற்படுத்திய வலியையும் .
கதையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாமல்......

பொன் மாலை பொழுது சொன்னது…

ஒரு பக்கம் மன்னார் குடி மைனர், மறுபக்கம் மோகன்ஜி . நல்லாத்தான் ரெண்டுபேரும் எழுதுறீங்க.
சிறுகதை ஆனால் கணமானது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் அருமையானதொரு கதை. வெகு அழகாகவே கொண்டு சென்றுள்ளீர்கள். கதையில் வரும் ராஜாமணி என்றும் மறக்க முடியாததோர் கதாபாத்திரமாக எப்போதும் வெற்றிலை பாக்குப்புகையிலைக் குதப்பிக்கொண்டு நம் கண்முன் நிற்பவராக காட்சியளிக்க வைத்து விட்டீர்கள்.

//ரெண்டு நாளாத்தான் போட்டகாசு கையைக் கடிக்காம எடுக்குறேன் சார்!’ ராஜாமணியின் குரல் தழுதழுத்து கண்கள் குளம் கட்டின.//

படித்த என் கண்களே குளம் கட்டின. திறமைக்கும் வறுமைக்கும் எப்போதுமே இதுபோலப் போட்டி தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

நான் தங்களுக்கு ஈ.மெயில் மூலம் அனுப்பிவைத்த “பொடி விஷயம்” என்ற கதையை அப்படியே மாற்றி, வரப்போகும் பொதுத்தேர்தலை உத்தேசித்து “வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்” என்ற தலைப்பில் பகுதி 1 முதல் பகுதி 8 வரை சமீபத்தில் வெளியிட்டுள்ளேன். அதில் பகுதி-5 & பகுதி-8 மட்டுமாவது அவசியமாகப்படித்து விட்டு பின்னூட்டம் அளிக்கவும். அன்புடன் vgk

எல் கே சொன்னது…

கனமான்க் கதை. சில இடங்களில் வட்டார மொழி. அற்புதம் மோகன்ஜி

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் அருமையானதொரு கதை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நிமிர்ந்து, தனித்து நின்ற சட்டுவம் நூறு கண்களுடன் மதுவைப் பார்த்து மட்டுமல்ல அனைவரிடமும் சோகத்தைச் சொல்கிறது.

அப்பாதுரை சொன்னது…

ஆளைக் காணோம் என்று பார்த்தால்... அமர்க்களமாக ஒன்று எழுதத் தான் காணாமல் போனீர்களோ? உங்கள் படைப்புகளில் இது முதல் மூன்றில் ஒன்றாக வரும் என்று நினைக்கிறேன். ராஜாமணி ஆள் வர்ணனை, சேட்டு கல்யாண மடிசார்,... நிறைய ரசித்தேன். இனிமே இப்படி எழுதுறதா இருந்தா தாராளமா காணாம போங்க :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

நிதர்சனம் கூறும் அழகான எழுத்து... படிப்பவருக்கு அந்த காட்சியை கண் முன் வர செய்யும் வித்தை எல்லோரும் கை வருவதில்லைங்க... நன்றிங்க மோகன்ஜி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

இதை..இதை ..இதைத் தான் எதிர்பார்த்தேன்..மோஹனிடம்...

ஆர்.ஆர்.ஆர்.
http://betaofbusinessthoughts.blogspot.com/

ரிஷபன் சொன்னது…

மனதைத் தொட்ட கதை.. உணர்ச்சிப் பிரவாகம்.. அந்த கேரக்டர்கள் அப்படியே உண்மையின் பிரதிபலிப்பு என்று நம்ப வைக்கிற எழுத்து..

Matangi Mawley சொன்னது…

that was so touching! excellently penned...

மோகன்ஜி சொன்னது…

ராஜாமணி கடைக்கு முதல் போணி சித்ராம்மாவா ! அம்மாவுக்கு முறுகலா ஒரு தோசை... நாலு இட்லி கெட்டி சட்னி பார்சல்....

கணணி தந்த தொல்லையில் கொஞ்சம் காணாமல் போயிருந்தேன்.. நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! சட்டுவத்திலும் கவிதை தேடும் என் தம்பி..
நட்டகல் பேசுவதில்லையோ எழைகளுக்காய் என்று தோன்றுகிற போதெல்லாம்.. உள்ளிருக்கும் நாதன் உருமாறிப் போகின்றான்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க மாணிக்கம் சார்! மன்னார்குடி மைத்துனர் வலைக்கு இன்னும் போகவில்லை. இன்றிரவு ஆற அமர அனைத்து வலைகளையும் பார்க்க வேண்டும்.
உங்கள் ரசனைக்கு ஒரு சலாம்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு வை.கோ சார்! உங்கள் உள்ளார்ந்த வாழ்த்தும், உணர்வுபூர்வமான கருத்துக்களும் எங்களுக்கு டானிக்.
சிலநாட்கள் உங்கள் வலையை பார்க்க இயலவில்லை. இன்று பார்த்துவிட மாட்டேனா?

மோகன்ஜி சொன்னது…

அன்பு எல்.கே! உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

மோகன்ஜி சொன்னது…

உங்கள் அன்புக்கு நன்றி குமார்.நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

வாங்க இராஜராஜேஸ்வரி! உங்கள் தாமரைப்பூ போலே கருத்தும் விகசித்து மனமகிழ்ச்சி தருகிறது. நன்றிங்க

மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை! உங்களிடம் மின்னஞ்சலில் சொன்னபடி மடிகணணி ஒத்துழைக்காது கொஞ்சம் ஓரமா போயிட்டேன். நீங்கள் இந்தக் கதையை ரசிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். பரபரவென்று எழுதி நகாசு ஏதும் பண்ணாமல் பதிவிட்டுவிடுதல் இப்போது வாடிக்கையாகிப் போய் விட்டது. கொஞ்சம் எழுதியதை ஊறப்போட்டு செதுக்குவதே முறை அல்லவா?
மற்றவை நேரில்

மோகன்ஜி சொன்னது…

/நிதர்சனம் கூறும் அழகான எழுத்து... படிப்பவருக்கு அந்த காட்சியை கண் முன் வர செய்யும் வித்தை எல்லோரும் கை வருவதில்லைங்க... நன்றிங்க மோகன்ஜி.../
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். படித்ததை கண் முன்னே கொண்டு வருதலே உண்மையான வித்தை.
காணாததை படைப்பவர் எழுத்தாளர். படைப்பிலே கண்ணுருபவர் நல்ல ரசிகர்.

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே! நான் இதை இதை இதை எதிர்பார்க்கவில்லை போங்க.. திட்டுவீங்கன்னு நினைச்சேன்.

மனோ சாமிநாதன் சொன்னது…

உணர்ச்சிப்பிரவாகமான அருமையான கதை! நிதர்சனம் எப்போதுமே மனதை சுடும்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ரிஷபன் சார்! உங்கள் மனத்தை நான் தொடுவதில் என்ன பெருமை இருக்கிறது? அந்த மனத்துக்குள்ளேயே இருந்து கொண்டு, அதை அறிந்து கொண்டு.... தொடாமல் என்ன செய்ய?மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு..

மோகன்ஜி சொன்னது…

வாங்க மாதங்கி! உங்கள் ரசனைக்கு என் நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் மனோ மேடம்! இந்தக் கதை முற்றிலும் கதை இல்லை.. ஒரு பெரிய அனுபவத்தின் சின்ன சித்திரம் என்று தோன்றுகிறது.

பத்மநாபன் சொன்னது…

அருமையான நடையில் கொண்டுபோன கதை ...வியாபாரம் நடத்துவது ,வாடிக்கையை பிடிப்பது ,தொடர்ந்து வரும் சூழலை உருவாக்குவது என அடித்தட்டிலும் மேலாண்மையின் அவசியத்தை மொழி வழக்கில் உணர்த்துவதாக அமைந்தது.. ''சட்டுவத்தின் கண்கள்'' உருக்கமான முடிவு.....

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்! அடித்தட்டிலும் கையாளப் படும் மேலாண்மை குறித்து நிறையவே பேசலாம்.இந்தக் கதையில் வருவது போன்று உண்மையில் பிரச்சினை வியாபாரத்தில் இருப்பதில்லை.. அதன் ஊற்றுக்கண் நம் உணர்வுகளின் ஊக்கநிலையில் இருக்கின்றது.(emotional intelligence). ஆச்சர்யமாக இருக்கிறது.. இன்று மேலாளர்களுக்கு நான் வகுப்பெடுத்ததும் இந்த தலைப்பில் தான்.

உன்னையறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்..
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்.. தலை வணங்காமல் நீ வாழலாம்..
தலைவரு சும்மாவா பாடிட்டு போனாரு?!

ஹேமா சொன்னது…

மோகண்ணா...வந்திட்டீங்களா.சில இடங்களில் வறுமையும் அன்பும் போராடும் இல்லன்னா போட்டி போடும்.கதையோட்டத்தோடு ஒட்டிக் கலங்க வச்சிட்டீங்க.சட்டுவம்.புட்டுவம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன் மலையகத் தமிழரோடு உறவு நான்.அதோடு என் பூர்வீகமும் வலங்கைமான்தான் !

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஹேமா!
உன் பூர்வீகம் வலங்கைமான் தானா?
நீ இலங்கைமான் அல்லவா?
எந்தன் சொந்தமான் அன்றோ நீ? தங்கையே! அன்பு தன்னில் செழித்திடும் இவ்வைய்யமம்மா! வறுமையையும் இல்லாமையையும் தீர்க்கும் ஒரே மருந்து, சக உயிர்களிடத்தில் அனைவரும் காட்டும் அன்பும் காருண்யமும் மட்டுமே..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

மனசைத்தொட்ட கனமான கதை..

கோபம் சத்ரு என்பார்கள்.. அது உண்மைதான்.

vasan சொன்னது…

வ‌டைக்கு ச‌வுரியா? அந்த‌ குசும்புதான் ஒரு குடும்ப‌த்தின் த‌லை எழுத்தையே மாற்றி விட்ட‌து.
சொல்லைவிட வ‌லிமையான ஆயுத‌ம் அணு உலையிட‌ம் கூட‌ இல்லை தான்.

மோகன்ஜி சொன்னது…

அமைதிச்சாரல்... உண்மைத்தான் மேடம்.. சினம் சேர்ந்தாரைக் கொல்லி அல்லவா? சினம் சேர்ந்தாரை மட்டுமல்ல, அது சேர்ந்தாரிடம் சேர்ந்தவர்களைக் கூட கொல்லலாம்.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மோகன்ஜி சொன்னது…

வாங்க வாசன் சார்! வார்த்தைகள் வார்த்தைகள்.. நஞ்சு சேர்த்தும்... நாராசம் கலந்தும்...குத்தலும் குசும்பும் வெறுப்பும் விரசமுமாய் மனங்களை பதைபதைக்க செய்யும் வார்த்தைகள்... கனியிருப்ப காய் கவரும் மனிதர்கள்..நீங்கள் சொல்வதுபோல் சொல்லை விட வலிமையான ஆயுதம் இல்லைதான் நண்பரே!

தெய்வசுகந்தி சொன்னது…

அருமையான கதைங்க!!

மோகன்ஜி சொன்னது…

நன்றி தெய்வ சுகந்தி!

RVS சொன்னது…

அண்ணா.. நூறு தோப்புக்கரணம்... பச்ச மொழகாவை இப்பத்தான் பார்த்தேன்...
காலமே.. இஞ்சன்னு ..தஞ்சாவூர் பாஷையில.. தி.ஜாவை அப்படியே கொண்டு வந்து நிறுத்தித்டேள் போங்கோ!!
ஜாரணி கரண்டி கண்ணு முன்னாடி நின்னு சிரிக்கரதுன்னா....
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்.... (எலெக்ஷன் எஃபெக்ட்) ;-))))

RVS சொன்னது…

சேட்டு வீட்டு கல்யாண சுமங்கலி மடிசார் மாமி டாப்!!! ;-))

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆர்.வீ.எஸ்!
தி.ஜா எழுத்து காவிரி... நானெல்லாம் முனிசிபாலிட்டி பைப்.. அதுவும் எப்பவாவது சொட்டுற குழாய்.
/வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்/ இதில்லே ஆர்.வீ.எஸ் பன்ச்?!

மாமியை 'டாப்'ன்னு நீர் சொல்லாம வேற யார் சொல்ள முடியும் மைத்துனரே?

ஹேமா சொன்னது…

மோகண்ணா...நான் இலங்கைமான்.தாத்தா(அம்மாவின் அப்பா ) வலங்கைமான்.இப்போதும் மூத்தமாமா குடும்பத்தினர் அங்குதான்.அம்மா அவர்களோடு தொடர்பில் இருக்கிறார்.வலங்கைமான் சண்முகசுந்தரம் என்று புகழ்பெற்ற தவில் வித்வானாக இருந்தவர் என் மாமா !

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! வலங்கிமான் சண்முகசுந்தரம் பிரபலமானவர் அல்லவா.. உன் மாமா என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி!
அதுதானே பார்த்தேன்.. உன் பதிவுகளில் கோடையிடிக் குமுறலும் தனிஆவர்த்தனமும் லயம பிசகாமல் இருப்பது இதனால் தானோ?

kashyapan சொன்னது…

மொகன் ஜி!"!பச்ச மொழகா" படிச்சேன்.நல்ல கதை. மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசொதனை செய்ய சொல்லித்தருவார்கள். விமரிசனக்காரன் ஆக்க பூர்வமாக படைக்க சிரமப்படுவான். படைப்பாளி விமரிசிக்க ஆரம்பித்தால் படைப்பு சுணங்கும். ராஜாமணி என்ற பாத்திரம் நல்ல சித்தரிப்பு.சகமனிதர்களோடு பழகுவது, வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது எல்லாமே மிக யதார்த்தம். வாசகனுக்கு ரஜாமணி மிது ஒருபிடிப்பு எற்பட்டுவிடுகிறது.பின் ராஜாமணி எதற்காக பத்மாவை சட்டுவத்தால் அடிக்க வெண்டும்? மாமி வீட்டில்பாத்திரங்களொடூ சட்டுவத்தை பார்க்கவேண்டும்? Drama என்பதுMelo Drama வாகிவிட்டது. இந்த அடிக்கிற சம்பவம் இல்லாவிட்டாலும் ராஜாமணி பாத்திரம் முழுமையாகி இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.வயலூருக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டுபோனீரே! அந்தக் கதையே உம் பெரைச்சொல்லிக்கொண்டிருக்கும் காலாகாலத்திற்கும். கம்பன் ராமாயணம் படைத்தான். அதன் பிறகு படைத்தவை எடுபடவில்லை. நாம் சிறுகதை எழுதுகிறோம். காவியமல்ல.வாழ்த்துக்கள்---காஸ்யபன்

G.M Balasubramaniam சொன்னது…

I GOT THE SATISFACTION OF HAVING READ A GOOD SHORT STORY. CONGRATS.!

RVS சொன்னது…

//மாமியை 'டாப்'ன்னு நீர் சொல்லாம வேற யார் சொல்ள முடியும் மைத்துனரே? //
வேண்டாம்ன்னா...கும்மியடிச்சு நாள் ஆரதுன்னு எல்லாரும் சேர்ந்து என்னை குனிய வச்சு குமிறுடுவா.... ;-)))

ADHI VENKAT சொன்னது…

சரளமான பாஷையில் மனதைத் தொட்ட கனமான கதை.

meenakshi சொன்னது…

மிகவும் அருமையான கதை. அற்புதமான நடை. கதையின் பல வரிகளை மிகவும் ரசித்தேன். ஒரு சிறு கதையில் ராஜாமணி என்னும் கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், குணத்தையும் ஓரிரு வார்த்தைகளை கொண்டே மிக அழுத்தமாக உணர்த்தி விட்டீர்கள். குறிப்பாக 'தலைய செரைக்க' அந்த கோபத்தின் வீரியத்தில் வந்த இந்த வார்த்தை மனதை துளைத்து விட்டது. ஒரு தேர்ந்த சிற்பியை போல் வெகு நேர்த்தியாக இந்த கதையை செதுக்கி விட்டீர்கள். எங்கள் மனதிலும்தான்! பாராட்டுக்கள்!

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள காச்யபன் சார்! உங்களுக்கு நெடிய பதில் ஒன்றெழுதி வலையேற்றும் போது நழுவி விட்டது. மீண்டும் நினைவு கூர்ந்து எழுத ஆயாசமாய் இருந்தது. எனவே தாமதம். என் வேண்டுகோளை ஏற்று உங்களுடைய விமரிசனத்தை தந்ததிற்கு நன்றி. கச்சிதமான உங்கள் விமரிசனம் உங்கள் ரசனையின் மேன்மையையும் அனுபவத்தையுமே காட்டுகிறது.

நான் படைத்த ராஜாமணியின் சித்தரிப்பில்,அவரின் கெட்டிகாரத்தனத்தையும் பழகும் முறைமையும் அந்த பாத்திரத்தின் ஒரு முகம் , தன்னைச் சார்ந்தவளிடம் அவர் நடந்துகொள்ளும் விதத்தில் காட்டிய இன்னொரு முகம்...
இந்த முரண்பாட்டையே கதையின் முடிச்சாய்க் கொண்டு எழுதினேன்.

நீங்கள் சொன்னபடி ராஜாமணியை அவன் மேம்பட்ட சித்தரிப்போடே உலவவிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்.?.
யோசிக்க வைத்து விட்டீர்கள். யோசிப்பேன்....

“ஒரு பயணம்” உங்கள் உள்ளம் கவர்ந்த ஒரு படைப்பு என்பதை, நீங்கள் அடிக்கடி படிப்பதைப் பார்த்து அறிகிறேன். அதை என் எழுத்துக்கான அங்கீகாரமாய் ஏற்றும் மகிழ்கிறேன்.

‘நாம் கதை எழுதுகிறோம்.. காவியமல்ல’ எனும் உங்கள் வார்த்தைகள் அட்சரலட்சம் பெறும். மீண்டும் உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! உங்கள் வாழ்த்து எனக்கு ஆசீர்வாதம். நன்றி. அடிக்கடி வாருங்கள்

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ் கும்மியடிச்சு ரொம்ப நாள் தான் ஆகிப் போச்சு!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதி! வாழ்த்துக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! ஒரு பின்னூட்டத்தில் இவ்வளவு கச்சிதமாய் அங்கீகரிக்க முடியுமா? ஆச்சரியமாய் இருக்கிறது. நன்றி!

பாரதசாரி சொன்னது…

//நிமிர்ந்து, தனித்து நின்ற சட்டுவம் நூறு கண்களுடன் மதுவைப் பார்த்து விழித்தது.//
//சேட்டு வீட்டுக் கல்யாணத்தில் தனித்து தெரியும் ஒரு மடிசார் சுமங்கலியைப் போல ....//
// இன்னும் ஏதும் உண்டா என்பதுபோல் நின்றுவிட்டு //
இம்முறை பல இடங்களில் வான்வில்லின் வர்னஜாலங்கள்... ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை ஐயா

மோகன்ஜி சொன்னது…

நன்றி பாரத ஸாரி சார்! நலம் தானே? அடுத்தபதிவையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். நன்றி

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோகன்ஜி!அன்றைக்குப் படித்த உடன் தொலைபேசியில் நீண்ட உரையாடலால் என் நிறைவையும் த்ருப்தியையும் தெரிவித்திருந்தேன். சூழ்நிலைகளால் உடனே எழுதமுடியவில்லை.

ராஜாமணியின் கோபமும் இயலாமையும்தான் பத்மாவின் கன்னத்தைப் பதம் பார்த்தது. அது மறுநாள் சரியாகிவிடும். இயலாதவர்களின் மொழி அது. கொஞ்சம் பச்ச மொழகாக் காரம் போலத்தான்.

ஆசாரியின் பாக்கியைத் தீர்க்கமுடியாத இயலாமையும் அவனின் உறவைத் துண்டிக்க விரும்பியும் முடியாதிருக்கையில் அவனின் இளக்காரமான வார்த்தைகளில் வெகுண்டெழுந்து ஆசாரியின் கன்னத்தில் விழுந்திருக்க வேண்டிய அடியல்லவா அது?

சபாஷ் ரகத்துக் கதை.

பல கேள்விகளுக்கும் பல அலசல்களுக்கும் இடம்தரும்-இப்படி ஆன்மாவை உலுக்கும் கதைகள் நிறைய எழுதப்படுவதில்லை.

இருக்கும் காலத்துக்குள் இப்படி நாலு கதைகள் எழுதினால் போதும் மௌனி போல.

உங்களை நமஸ்கரிப்பதில் பெருமைப்படுகிறேன் மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய சுந்தர்ஜி. ஒரு படைப்பாளி கதையில் சொல்லவந்ததை அதே மனநிலையில் உள்வாங்கும் ரசனை பெரும்பாலும் நிகழ்வதில்லை. அது சற்று கூடுதலாயோ அல்லது குறைவாகவோ இருப்பதே இயற்கை.உங்கள் அலசல் அந்த உள்வாங்குதல் அட்சரசுத்தமாய் நிகழ்ந்துள்ளதை காட்டுகிறது. அது என் படைப்பைவிட உங்கள் ரசனையின் கூர்மை என்றே கொள்கிறேன். உங்கள் அன்பு என்னை நெகிழ்த்துகிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

மோகன் சார்,
கதை அற்புதம்..
விகடனுக்கு அனுப்பிப் பாருங்களேன்...
வலைமனையில் பதிவிட்டது என்று மட்டும் சொல்ல வேண்டாம்..

பிரசுரத்திற்கு தகுந்த கதை என்பது என் எண்ணம்.