வியாழன், அக்டோபர் 23, 2014

காதல் கோட்டை


நானும் மோதிமோதித்தான் பார்க்கின்றேன்,
ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து
உன்னை உண்டுவிடத் துடிக்கின்றேன்.

தெறிக்கும் நீர்த்திவிலைகள் தளர்ந்து
கசிகின்றன உன் மேனிவழி.
காலம் உதிர்ததுவிட்ட கல்லிடுக்குகளினூடே
துப்புரவாய் நீரையெல்லாம் துப்பிவிடுகிறாய்

நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.
சற்றும் அசைந்து கொடுப்பதில்லை நீ.

பின்வாங்கித் தளர்கிறேன் கண்ணீர்நுரைக்க.
காலம்காலமாய் கண்ணீர் சிந்தி,
உப்பாய்க் கரிக்கின்றேன்.

எனக்கு வேறுவழியில்லை.
உனக்கும் கூடத்தான்.

என்றோ ஒருநாள் உனை உதிர்த்துவிடுவேன்,
கல்லுகல்லாய்....

வாரி உருட்டி யுன்னை
பொத்தி வைப்பேன்
என் கர்ப்பத்துள்...
27 comments:

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதை மிக அருமை!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து

காலம் பல கடந்தும்
கவிதையில் வாழும்
கோட்டை .. கோட்டைவிடுமோ.!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து

காலம் பல கடந்தும்
கவிதையில் வாழும்
கோட்டை .. கோட்டைவிடுமோ.!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து

காலம் பல கடந்தும்
கவிதையில் வாழும்
கோட்டை .. கோட்டைவிடுமோ.!

மோகன்ஜி சொன்னது…

வாங்க மனோமேடம் ! நலமா? உங்களுக்கு உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் அன்புக்கு நன்றி.உங்களுக்கு உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

என்னவென்று சொல்வேன். அடிக்கடி பார்க்கும் நிகழ்வு தான். மாறாக் காதலுக்கு உவமையாக்கி ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறீர்கள்.
////நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.///

\\\\காலம்காலமாய் கண்ணீர் சிந்தி,
உப்பாய்க் கரிக்கின்றேன்.//////
ஆகா....
ஒவ்வொரு வரியும் மனதில் வந்து வந்து போகிறது அந்த அலையைப் போல.

நிலாமகள் சொன்னது…

நிராகரிப்பின் வன்மத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து திரும்பும் அலைகடலும், துப்புரவாய் துப்பி கல்போலிருக்கும் கோட்டை சுவரும் சொல்லாக மாறியிருக்கும் சிருங்காரம்!

கவிதை முடிப்பில் புலப்படும் கவிஞரின் பிரம்மாண்டம. அது அன்பினுடையது அல்லவா...

மோகன்ஜி சொன்னது…

இயற்கையின் தீராத விளையாட்டின் அடிநாதம் கொந்தளிப்பு. அதுவே இயற்கையின் 'உணர்ச்சி' போலும்! மனிதன் தன் உணர்வுநிலைக்கு ஏற்றபடி இயறகையோடு உறவாடிக்கொள்கிறான். அதைக் கவிதையென்றும், இலக்கியமென்றும் படைத்து ஆறுதல் அடைகிறான். இயற்கை தனக்குள் சிரித்துக் கொள்கிறது !

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா!

இந்தப் புகைப்படத்தை கோவாவில் எடுத்தேன். விடுதியின் பால்கனியில் இருந்து எதிரே விரிந்து கிடந்தது அரபிக்கடல். கடலோரத்தில் இந்தக் கல்கவிதை! என்னுள் யுகயுகாந்திரங்களாய் தகித்துக் கிடந்த கதைகள் கண்முன்னே வந்து போயின. உள்ளே இன்னமும் அலைகள் மோதியபடி...

//கவிதை முடிப்பில் புலப்படும் கவிஞரின் பிரம்மாண்டம. அது அன்பினுடையது அல்லவா..//.
காதல்வயப்பட்ட ஆண்மகன் கவிஞனாகிறான். பெண்ணோ
அவனுக்கே அன்னையாகி பெருமனம் பெறுகிறாள்.

மோகன்ஜி சொன்னது…

சிவா! நிலாவுக்கு சொன்னபதிலுக்கு முந்தையது உனக்கானது தம்பி.(நிலாமகளும் பிடிக்கத் தடையில்லை!)

ரிஷபன் சொன்னது…

ஜெயித்து விடலாம் ஒரு நாள் !

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார் ! கரைந்து ஒன்றுவதும் ஒரு வகையில் வெற்றி தானே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.
சற்றும் அசைந்து கொடுப்பதில்லை நீ.//

அயராது முயற்சித்தால் கல்லும் கரைந்து விடலாம்....

அருமையான கவிதை. படமும் மிக அழகு.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட் ! அயர்ச்சியும் முயற்சியும் காதலில் தவிர்க்கமுடியாத இருநிலைகள் அல்லவா?

25/10/14 8:38 முற்பகல் நீக்கு

கோமதி அரசு சொன்னது…

படத்திற்கு பொருத்தமான கவிதை.


வாரி உருட்டி யுன்னை
பொத்தி வைப்பேன்
என் கர்ப்பத்துள்...//

அருமை.

இப்படி எவ்வளவு புதைந்து விட்டன கடலுக்குள்.

கோமதி அரசு சொன்னது…

காலத்தால் அழியாத காதல் போல் எந்த கடல் சீற்றத்திற்கும் அழியாத கோட்டையாக இருக்கட்டும்.

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்! உங்கள் வாழ்த்து உலகத்துக் காதலர்க்கெல்லாம் உரித்தாகுக!

அப்பாதுரை சொன்னது…

கோட்டை பதிலுக்கு என்ன சொல்லும்?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,

எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க?
கோட்டை காதலை நிராகரிப்பதாய்க் கொண்டால் இப்படித்தான்
சொல்லியிருக்கும்.

திரஸ்கரிப்பு

காவலுக்காய் எனையிங்கு கட்டிவைத்தார்.
காதலென்று ஓயாமல்நீ முட்டுகின்றாய்.

காதலுனக்கு நெறியுமில்லை பெரும்பெண்ணே!
தோதல்லடி நானுமிங்கே சுட்டமண்ணே!

அணைக்கின்றாய் என்றுமுன்பு ஆசைகொண்டேன்.
அரிக்கின்றாய் மெல்லவென தெளிவுகொண்டேன்.

தொட்டுதொட்டு விலகுமன்றோ உன்காதல்
தட்டுகெட்டு அலைகிறதுன் பேராவல்.


பக்கலிலே அமைவதெல்லாம் உறவுமல்ல.
சுக்கலென உதிர்ந்திடினும் சோர்வுமல்ல.

கல்மனசு தானெனக்கு கடல்பெண்ணே!
உள்மனசு ஓசைகளை ஒழித்தபின்னே.

ஞானம்வர காதலெனக்கு போனதடி.
ஊனப்பட உத்தேசம் இல்லையடி.நிலாமகள் சொன்னது…

அப்பாஜி தயவில் இன்னுமொரு சிருங்காரக் கவிதை மோகன்ஜியிடம் இருந்து!

நன்றி இருவருக்கும்.

இப்போ அலைகடலும் பெண்ணாச்சா?!முதல் கவிதையில் கோட்டையை பெண் என்றிருந்தேன்.

மோகன்ஜி சொன்னது…

நிலா! சரியா போச்சு! அப்போ கூட அலைகடல் தான் பொண்ணு. முட்டுது.. மோதுது.கொடையுது... அப்போ பொண்ணு தானே?!

முதல் கவிதையை இன்னொரு தரம் படிங்க...

அப்பாதுரை சொன்னது…

அரிக்கின்றாய் மெல்லவென... பிரமாதம் போங்க.

தலைப்பு மட்டும் ரொம்ப நல்லா புரியுது.

ஸ்ரீராம். சொன்னது…

உதிர்த்துவிட நீ நினைத்தாலும் தாய் மீது மோதும் மகன் போல தாங்கி நிற்பேன் காலமெலாம்! அத்தனையும் வீணாய்ப் போகாதிருக்கவே அணைகட்டி உன்னை நிறுத்தி வைத்திருக்கிறேன். பொழுது போகாத உன் அலையாட்டத்தில் விளையாட்டையே காண்கிறேன்!

:))))))

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு ! அட டா! கவித...கவித....

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம் ! அருமை.... அழகான கண்ணோட்டம்....