வெள்ளி, ஏப்ரல் 03, 2015

பிள்ளை விளையாட்டுஅர்த்தம் நூற்று அர்த்தம் நூற்று
நமக்கிடையே ஆயிரம் வாக்கியங்கள்.

கரும்பிழி சக்கைகள் காய்ந்து கிடக்கின்றன
ஈக்களுக்கேதுமினி மிச்சமின்றி.

புதிதாய்சொல்ல உனக்கோ ஒன்றுமேயில்லை,
கேட்பதற்கும்தான்.

சலிப்பு சிணுங்கலாய், பெருங்குரலாய், ஓலமாய்
பரிணமித்தே ஓய்ந்தநிஜம்.

மாறன்அம்புகள் எரியீட்டிகளாய் மாறி
போர்முடித்த களம்.

மிஞ்சிநிற்கும் மௌனமோ எதிரொலிக்கிறது,
பெரும்மௌனமாய்.

ஒரேகோட்டில் அருகருகே நிற்கும் சாத்தியங்கள்
அருகித்தான் போய்விட்டன.

ஊருக்கென்று ஒட்டாமல் உறவாட்டம்
ஊடல்மீறி உலைக்களனாய் கனன்றுபுகையும்.

சிறுசிறு விலகல்களில் முன்னும்பின்னுமாய்
மாறிப்போன கோணங்கள்.

அட்டையில் கட்டிய தடுப்பு வேலிகள்
கற்சுவராகும் காலப்பிரமாணம்.

நைந்திடா தெஞ்சிய ஓரிருபிரிகளில்
ஊசலாடும் நம் தாம்பத்தியம்.

மீண்டும் யாவையும் கலைத்துவிட்டு
புதிதாய் ஆட்டம் துவக்கவேணும்.

தனித்தனியாயென அனுபவம் சொல்லும்
ஒன்றாக ஆடவோ உள்ளம்கோரும்.

54 comments:

G.M Balasubramaniam சொன்னது…

ஒரு முறை ஒரு பதிவுக்குப் பின் னூட்டம் எழுதி இருந்தேன். வாசிப்பவருக்கு விளங்கும் மாதிரி எழுத வேண்டும். இப்படி அப்ஸ்ட்ராக்ட்-ஆக எழுதினால் சொல்ல வந்தது புரிபடாமல் போகலாம் என்று. அதற்கு மறுமொழியாக இது யாரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதப் படவில்லை/ புரிபவர் புரிந்து கொள்ளட்டும் என்னும் தொனியில் எழுதி இருந்தது. இருந்தும் உனக்கு அனுபவம் ஏற்படவில்லையா என்று என் மைண்ட் வாய்ஸ் சொல்வது கேட்கிறது.

மோகன்ஜி சொன்னது…

GMB Sir,

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்குது சார்.

அப்பாதுரை சொன்னது…

மிகவும் ரசித்துப் படித்தேன்.
சொல்லாடலும் பொருள்செறிவும் அருமை. வலிவராமல் கீறும் வைத்தியம்.

அப்பாதுரை சொன்னது…

எல்லாமே சுகம். இவை தனி சுகம்.
//கரும்பிழி சக்கைகள்..
//சிறுசிறு விலகல்களில்..
//அட்டையில் கட்டிய..

வாழ்த்துக்கள்.

ஹ ர ணி சொன்னது…


அன்புள்ள மோகன்ஜி, வணக்கம்.

அர்த்தம் நூற்று அர்த்தம் நூற்று
நமக்கிடையே ஆயிரம் வாக்கியங்கள்.

ஆயிரம் வாக்கியங்களையும் தாண்டி வாழ்க்கையில் அர்த்தங்களை நூற்றுக்கொண்டுதானிருக்கிறோம். வாழ்க்கை முடியும் வரை இது முடியாது. நாம் முடிந்தாலும் வார்த்தை முடியாது. வாக்கியமும்.

அட்டையில் கட்டிய தடுப்பு வேலிகள்
கற்சுவராகும் காலப்பிரமாணம்.

வேறுவழியில்லை. தடுப்பு வேலிகள் என்பவை நமக்கானவையும் மற்றவருக்குமானவையுமாக மாறிடும் சூழலில் அவை கலையா மௌனத்தில் கற்சுவராகின்றன.

மீண்டும் யாவையும் கலைத்துவிட்டு
புதிதாய் ஆட்டம் துவக்கவேணும்.

நம்பிக்கைதான். புதிதாய் துவங்கும் ஆட்டத்திலேனும் எதிர்பார்த்தவை சிக்குமா என்று. ஆனாலும் ஒரு கட்டத்தில் நாம் கலைக்காவிட்டால் அவை கலைந்துவிடும்.


தேர்ந்த சொற்களில் மன அனுபவங்கள் விரிந்து நிற்கின்றன. அருமை. வாழ்த்துக்கள்.

sury Siva சொன்னது…

//நைந்திடா தெஞ்சிய ஓரிருபிரிகளில்
ஊசலாடும் நம் தாம்பத்தியம்.//

பர்ஸ்ட் ரீட் பண்ணும்போது
"ஓரிரு பீர்களில் ஊசலாடும்"
என்று படித்து ...

என்னது !! veni, vidi, vici அப்படின்னு சொல்லிகிட்டே.
வினி இங்கனயும் வந்துட்டா போல இருக்கே !!

அப்படின்னு பிரமிச்சுட்டேன்.
..

ஆனா அடுத்த செகண்டே கரெக்டா .படிச்சுட்டேன்.
தாங்க் காட்.

எல்லாம் அந்த 938 பண்ணின மாயம்.

ஆத்துக்காரி கிழவியிடம் காதோரமா போய் ,
//புதிதாய் ஆட்டம் துவக்கவேணும்.//

என்றேன்.

சான்சே இல்லைங்கராள்.

சுப்பு தாத்தா.


மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,

உங்கள் பாராட்டுக்கு நன்றி !

மோகன்ஜி சொன்னது…

துரை சார்,

அந்த இரு குழந்தைகள் எதிரும் புதிருமாய் நின்றபடி இருக்கும் புகைப்படம் சிக்கியது. ஏற்கெனவே என்தொண்டையில் சிக்கிக்கிடந்த ஒரு நட்புதம்பதியின் நடப்பும் மேற்புரண்டு வீசின வார்த்தைகள்.

நீங்கள் ரசித்தவரிகள் நன்றி சொல்கின்றன.

மோகன்ஜி சொன்னது…

ஹரணி சார்!

ஒரு கவிதையின் சிறப்பே அதை உள்வாங்கும் மனதில் ஏற்படுத்தும் சிந்தனை அலைகளால் தான். கவிதையில் ஊறி பண்பட்ட மனங்களிலோ, எளிய கூழாங்கற்கள்கூட பேரலைகளை ஏழுப்பி ஆர்ப்பரிக்கும்.....

உங்கள் ரசனைக்கு என் சலாம் !!

மோகன்ஜி சொன்னது…

சுப்பு தாத்தா !

உங்கள் நகைச்சுவை உணர்வு ஒரு தொத்து வியாதி போலும். கொஞ்சம் அழுகாச்சியாக எழுதிட்டோமேன்னு உம்முன்னு இருந்தேன். வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

// சான்சே இல்லைங்கறாள்// சிக்ஸர்.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதிரொலிக்கும் மௌனம்...! அட... அற்புதம்...!

சாத்தியங்கள் பல காணாமலே போய் விட்டன...

sury Siva சொன்னது…

//எதிரொலிக்கும் மௌனம்...! அட... அற்புதம்...!//

அஸாத்யம் என்று எதை ஒன்றை நாம் எல்லோரும் நம்பும்போது அதையே கவிஞன் ஒரு உவமையுடன் சொல்லுகையில்
ஆஹா எனச் சொல்லத்தோன்றுகிறது.

ஒரு வைரமுத்து பாடலில்,

என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை
என்றார்.

இதற்கு பாராடாக்சிகல் சிமிலி என்று ஆங்கில இலக்கியத்தில் சொல்வர்.

பிரபல கவிஞன் ஜான் டோன் தனது ஒரு கவிதையில்

தன்னை விட்டுப்ப் பிரிந்த காதலின் சோகத்தில்
காதலியை நோக்கி சொல்வார்:
உன்னை நான் இழந்தாலும் உன் நினைவோ
என்னிடம் பத்திரமாக த்தான் இருக்கிறது.
அது எப்படி இருக்கிறதாம் ?

தம் உடல்கள் ஒட்டிப்பிறந்த
இரு குழந்தைகளில் (டிவின்ஸ்)
ஒன்று இறந்து போகிறது.
அதன் அதன் உடல் மட்டும்,
உயிருடன் இருக்கும் குழந்தையின் உடலுடன்
தொக்கித் தொடர்ந்து இருக்கிறது.

அது போல், நீ என்னைவிட்டுப் பிரிந்தாலும்
என்னுடனே தொடர்கிறாய்.

இது சாத்தியமா? !!!

கவிஞன் உலகில் எல்லாம் சாத்தியமே.

இதை ஒரு வேளை கீதா சாம்பசிவம் அவர்கள் படித்தால்,
இது என்ன பொல்லாத வர்ணனை!!

பெருமாள் அந்த பாற்கடல் லே பள்ளி கொண்டிருக்காரே பார்க்கலையோ !!

கடலும் சஞ்சலம். ஆர்ப்பரிக்கும் அலைகள் ஏராளம்
ஆதி சேஷனும் அசைந்து நெளிந்து கொண்டே இருக்கிற பாம்பு.

அதுமேலே அனந்த சயனமாய் ஆனந்தமாய் படுத்துண்டு இல்லையோ பெருமாள் !!

போதாக்குறைக்கு நாபிக்கமலத்திலே பிராட்டி வேற !!!

அது என்ன ஜிம்னாஸ்டிக்ஸ் !!


அது சஞ்சலத்தில் நிஸ்சலம் . அது பகவான்.

எதிரொலியின் மௌனம் ...இது மோகன்

இரண்டுமே ஒண்ணுதான்.

ஸ்பாட் பண்ணின டி. டி.க்கு
ஓ போடுங்க...

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

நன்றி டி்டி ! மௌனம் மிரட்சி தரக்கூடிய து

ஸ்ரீராம். சொன்னது…

பரிமணித்தேவா? பரிணமித்தேவா?

எதிரொலிக்கும் மௌனம் என்னையும் அசைத்தது. சுப்பு தாத்தாவின் பின்னூட்டம் இங்கும் ரசனைக்குரியது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி சுப்பு தாத்தா ! வைரமுத்து, வேர்ட்ஸ்வொர்த், காளிதாஸ், ஜான்டோன் என்று பல அடியாட்கள் உங்க பாசறையிலே இருக்கறது தெரியும்....

பெருமாளையும் வம்புக்கு இழுக்குறீங்க. கீதா சாம்பசிவம் மேடம் வறதுக்கு முன்னே சரிபண்ணிகோங்க! அவர் நாபிக்கமலத்துலே பிராட்டியார் இல்லே! பிள்ளையாண்டான் பிரம்மா தான் இருக்கார். பெருமாள் எழுந்து ஓடிடாம பிராட்டியார் காலை கெட்டியா பிடிச்சுகிட்டு பாதசேவை பண்ணிகிட்டு இருக்கா!

sury Siva சொன்னது…

என்ன தப்பு பண்ணிட்டேன்..!!

பிராட்டியார் இருக்கார் னு எழுதி அனாவசிய வம்பை விலைக்கு வாங்கி விட்டேனே.!!

இப்பத்தான் நீங்க mohanji sir சொன்னப்பறம் கவனிக்கிறேன்...
படைப்பவர் என்பதற்கு பதிலா பிராட்டியார் என்று எழுதிவிட்டேன்.

பிரும்மா சார் !! ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ.

உங்க இடத்தை நில ஆக்கிரமிப்பு பண்ணி, அத இன்னோத்தருக்கு , அது யாராக இருந்தால் என்ன ? கொடுத்தது மன்னிக்க முடியாத குற்றம்.

நீங்க நான்முகனா நாலு பக்கமும் பாத்திண்டு இருக்கும்போதே நான் இப்படி செய்யலாமா !!

தப்பு தான்.

ரக்ஷொஸ்மீ

இந்தாங்கோ..பெருமாள் நாபிக்கமலத்துலே உங்க இடம்.
நீங்க அங்க போய்
உபவிசதி.

அதற்குரிய பட்டா, சிட்டா அடங்கல்
எல்லாம் இருக்கு.

31ந்தேதிக்கு முன்னாடி ப்ராபர்டி டாக்ஸ் கட்டணுமே ?? நீங்க கட்டாம இருக்க மாட்டேள் ..

நாராயணா !! நாராயணா !!
கிருஹணத்தன்னிக்கு இப்படி ஒரு சோதனையா !!

எதுக்கும், இன்னிக்கு, நடை திறந்த உடனே
பெருமாளை சேவிச்சுட்டு, தாயாரையும் சேவிச்சுட்டு
வந்துடனும்.

மோகன்ஜி சாரே !! ரொம்ப தாங்க்ஸ்.
சமயத்துலே வந்து காப்பாத்தினேள்.
இந்த டெமென்ஷியா வயசான காலத்துலே படுத்தறது.

"அதுக்காக ஒன்னு கிடக்க ஒன்னு பேத்தலாமோ !! இனிமேயாவது கமெண்ட் போடறதுக்கு முன்னாடி எங்கிட்ட காமிச்சுட்டு போடுங்கோ.."இது ஆத்துக்காரி.


சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஶ்ரீராம்... பிழை திருத்தி விட்டேன். சுப்பு தாத்தா அடிப்பதில்லாம் சிக்ஸர்கள் தான் ... ரசனைக்கான மனுஷன்...

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுப்பு தாத்தா!

பிரம்மாவை ஏன்தான் எல்லோரும் இப்படி கறுவறேளோ?
முதல்ல ஒரு தலையைக் கிள்ளியாச்சு.
கோவில் உனக்கு கிடையாதுன்னு கட்டம் கட்டியாச்சு.
பிரணவத்துக்கு அர்த்தம் தெரியல்லேன்னு ஜெயில்ல போட்டாச்சு.

இப்போ நாபிக்கமலத்துலே இருக்கிற இடத்துக்கும் வேட்டை வச்சா சும்மா விடுவேனா ?

ஏஞ்சலீனா ஜூலி, ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே இவாளயெல்லாம் படைச்சவரை நடத்துற விதமா இது?

போகட்டும்... இடத்தை திரும்ப கொடுத்தீரோ... பொழைச்சீர்.

மாமிகிட்ட கமெண்டையெல்லாம் காமிக்காதீங்கோண்ணா.... புவ்வா கிடைக்காது... அப்புறமாய் ஏகாதசி தான் !!
களை கட்டிடுது சுப்பு தாத்தா நீங்க என்ட்ரி கொடுத்தாலே !!

கீத மஞ்சரி சொன்னது…

\\தனித்தனியாயென அனுபவம் சொல்லும்
ஒன்றாக ஆடவோ உள்ளம்கோரும்.\\

மெல்லிய சலனமாய் உருவாகி பெரும் சஞ்சலமாய்ப்போன மனப்பிளவுகள்... உறவுப்பிளவாய் உருவாகுமுன்னே உள்ளம் கோரும் வேண்டுதலுக்கு கொஞ்சம் செவிசாய்த்துப்பார்ப்போமே... நைந்திடாது எஞ்சிய ஓரிரு பிரிகளோடு இன்னும் சில புரிதல் பிரிகள் சேர்த்து புத்தம்புதிதாய் இழைகள் இறுக்கமுறட்டும்..

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி,

///.. நைந்திடாது எஞ்சிய ஓரிரு பிரிகளோடு இன்னும் சில புரிதல் பிரிகள் சேர்த்து புத்தம்புதிதாய் இழைகள் இறுக்கமுறட்டும்..//

நல்லா சொல்லுங்க...

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், குறைநிறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் பெரும்போக்கும், எதிர்பார்பப்புகளில்லாத அன்பு செய்தலும் அருகிக்கொண்டே வருகிறது. உள்ளே உருவாகாத சந்தோஷத்தை வெளியில் தேடுகிறார்கள். சலிப்புடனேயே வாழ்கிறார்கள். புரிதல் வரின் பிரிதல் ஏது?

நிலாமகள் சொன்னது…

சவத்தை சுமப்பதைப் போல் பழசை எதற்கு?
சலிப்பின் முணுமுணுப்பிலேயே கவனித்திருக்க வேண்டியது...
ஆட்டத்துக்கு ஆட்டம் ஆள் மாற்றிக் கொள்ளும் ஆட்டமில்லையே அது...
முயன்று தோற்ற, முயன்று பார்க்கும் சுற்றம்
உடைந்த பாண்டத்தை ஒட்டவொண்ணா ஆயாசத்தில்...
பிள்ளையின் மனசு புரியும் நமக்கு முறுக்கியவளின் முகத்தையும் திருப்பிப் பார்த்தால் உக்கிரத்துள்ளும் ஓரிழை ஈரமாகும்...
இடையில் நசுங்கிக் கிடப்பதென்னவோ இருவரைக் காட்டிலும் இருவர்செய் சேய்களே
சம்பந்தப் பட்டவர்களே சரிசெய்தாக வேண்டிய சிக்கல்...
எல்லாம் அறிந்தவரையும்
ஏதுமறியாமல் திகைக்கச் செய்யும் சு(சூ)ழல்!

இதெல்லாம் ஒருபக்கமிருக்க, கவிதையை வரிவரியாய் வாசிக்க பொதுப் பொருளும் முழுதாக வாசிக்க புதுப் பொருளுமாக வலுவான சொற்களும் அவை மனசில் எரியும் கற்களுமாக கவிதைப் படையல் ஹெவியாக
செரிமானத்துக்கு உதவின பின்னூட்டங்கள்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா! மனதை நெருடிக் கொண்டிருந்த சில தம்பதிகளின் இந்த நிழல் யுத்தத்தை சொல்கற்கள் வீசி களைத்த முயற்சி இந்தக் கவிதை.

வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசித்து, நுகர்வை பகிர்ந்து, பரிவின் துடுப்பால் செலுத்த வேண்டியது தாம்பத்தியப் படகு. சலிப்பை வளரவிட்டால் மிஞ்சுவது ஒன்றுமில்லை.

மிக ஆழமான கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி நிலா!

இதற்கு முந்தைய பதிவு-வாக்கிங் என்ற சிறுகதைக்கு உங்கள் பின்னூட்டம் வந்தபின் தான்,அந்தக் கடையை மூட உத்தேசம்..

நிலாமகள் சொன்னது…

கவிதையில் புரிந்தேன். கருத்துரைகளில் தெளிந்தேன். கவிதை யாருக்கானது என்ற யூகமும் உண்டு. யாருக்காயினும் என்ன? வலியும் வேதனையும் கொடூரமே.பிரார்த்திப்போம் நாம்.

அப்பாதுரை சொன்னது…

//கவிதை யாருக்கானது என்ற யூகமும் உண்டு.

curious twist, detective nilamagal.

மோகன்ஜி சொன்னது…

நிலா!

காகங்கள் வந்தன;
யூகங்கள் வந்தன.
சோகங்கள் எதுக்கடி? குதம்பாய்
தாகங்கள் தீருமடி.

சோற்றுப் படையலும்
தீர்ந்து முடிந்தபின்
காகங்கள் போகுமடி. குதம்பாய்
தேகங்கள் வேகுமடி.

நீரான தேகமும்....

ப்ளீஸ் கண்டின்யூ தி கவிதை...

மோகன்ஜி சொன்னது…

துரை சார்!
//curious twist, detective nilamagal.//
நிலாமகள் விஷயம் இல்லாம பேசறதுக்கு என்ன மோகனா? கலக்குங்க நிலா!

sury Siva சொன்னது…

Neeraana dhehamum
Nee sonna kaadhalum
Netraaka ponadhati - kanal
Kaatrodu kalandhati

Vana Vaasangal ini illai
Vasanthangalum illai

Unmaikal poythathadi -en sakiye
Uvamaikal maranthadi

sury Siva சொன்னது…

Neeraana dhehamum
Nee sonna kaadhalum
Netraaka ponadhati - kanal
Kaatrodu kalandhati

Vana Vaasangal ini illai
Vasanthangalum illai

Unmaikal poythathadi -en sakiye
Uvamaikal maranthadi

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சூரி தாத்தா!

ஆஹா! ஆஹாஹா!! இதல்லவா கவிதை.. சகலகலா வல்லவரே உமக்கொரு நமஸ்காரம்..

மீதி ஆஹாக்களைப் போட மக்கள் வந்துகிட்டே இருக்காங்க ஜி !

sury Siva சொன்னது…

நீரான தேகமும்
நீ சொன்ன காதலும்
நேற்றாக போனதடி - கனல்
காற்றோடு கலந்தடி.

வன வாசங்கள் இனி இல்லை.
வசந்தங்களும் இனி இல்லை.
உன்மைகள் பொய்த்ததடி - சகியே
உவமைகள் மறந்தேனடி.

நிலா.!!


நீ இலா வானங்கள்
நீரிலா மேகங்கள்......
..............
................................

தொடருங்கள்...

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

tamilla kavidhaiyai marupadi sonnaalum adhe AHAA thaan!

நிலாமகள் சொன்னது…

நீயிலா வானங்கள்
நீரிலா மேகங்கள்
நேர் நின்று மிரட்டுதடி-சகியே
நிம்மதி தேய்ந்ததடி

பூவிலா நார்போல்
நானிருக்க
புன்னகை தொலைந்ததடி-சகியே
புரிந்தெனை ஆட்கொள்ளடி.

நிலாமகள் சொன்னது…

நீரான தேகமும்....
பூவாக மலர்ந்திடும்
நின்முகம் திருப்பும் நேரம் -குதம்பாய்
என் நிலை கண்டிரங்கு

தூண்டில்முள் சிக்கிய
மீனென என் தவிப்பு
துணைதொலை பாவியானேன்-குதம்பாய்
அலைகடல் துரும்புமானேன்

மோகன்ஜி சொன்னது…

நிலா!

அப்படி போடுங்க.... நோட் பண்ணுங்கப்பா! நோட் பண்ணுங்கப்பா!

sury Siva சொன்னது…

Aatkolla ayiram per
Aavaludan varuvar pOvar.
Aakaaya vaanavil endrum
Aayaasam kolvathillai

(To continue ....after getting home.

Subbu thatha

sury Siva சொன்னது…

//புரிந்தெனை ஆட்கொள்ளடி. //

ஆட்கொள்ள ஆயிரம் பேரருகில்
ஆவலுடன் வருவர் போவர்
ஆகாய விண்மீன் என்றும்
ஆயாசம் கொள்வதில்லை. .

//அலைகடல் துரும்புமானேன் //

கரும்பாய் இனித்த காலை எல்லாம்
இரும்பாய் இதயத்தை இறுக்கி வைத்து -
துரும்பானேன் இன்றென ஓலமிட்டால்
உருகுவார் உளரோ ! உண்மையைச் சொல்.


சுப்பு தாத்தா.

போதும். நான் அம்பேல்
வீட்டுக்கிழவி அது யாருன்னு
சந்தேகத்தோட பக்கத்திலே நின்னுண்டு படிக்கிறாள்.

www.kandhanaithuthi.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.vazhvuneri.blogspot.com

மோகன்ஜி சொன்னது…

சுப்பு தாத்தா ! நிஜமாகவே நீங்க தாத்தாவா ? இல்லை தாத்தா வேசம்கட்டி விளையாடும் கட்டிளம் காளையா? இப்படி வரிசை வைக்கிறீங்களே குரு....

சபாஷ் !

மோகன்ஜி சொன்னது…

நிலா !

உங்கள் இரண்டாம் கவிதையும் , முதல் கவிதைக்கான பதிலும் இன்று மாலை 7:02 மணியளவில் ஒன்றையொன்று கடந்ததால், இரண்டாம் கவிதைக்கு என் முதல்பதில்..

யாரங்கே ! நம் நெய்வேலி கவிதைப்பாடினியாருக்கு பசும்பொன் அணிகளாம் காந்த நாண் புள்ளிகை ,கலாவம்
காறை மற்றும் கச்சோலம் அள்ளி வா! பரிசில் கொடுத்தே கவனம் செய்வோம் !

sury Siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

தகவலுக்கு நன்றி சுதா! (சுப்பு தாத்தா abbreviation)

😊😊 மின்னஞ்சல் follows...

நிலாமகள் சொன்னது…

நிகண்டு தேட நேரமில்லை ஜி. கொடுப்பதாக சொல்பவற்றை தமிழ்ப்படுத்துங்க.

நிலாமகள் சொன்னது…

இன்றைய பெண்கள் அந்த அணிகளின் பெயர்களை அறியட்டுமே. பசும் பொன்னில் மட்டும் தானா... பிளாட்டினம் என்றால் இன்னும் சிலாக்கியம்.

நிலாமகள் சொன்னது…

'சுதா' சுருக்கம் அருமை!

//துரும்பானேன் இன்றென ஓலமிட்டால்//

நாம படத்திலிருக்கும் பையனுக்கு பரிந்து தானே பேசிகிட்டிருக்கோம்...?!

மோகன்ஜி சொன்னது…

நிலா ! தமிழ்ப்படுத்தணுமா? எல்லாம் பச்சை தமிழ் பெயர்கள் தாயி !

நான் அருண்மொழி வர்மனாய்ஙிருந்த போது அள்ளிக் கொடுத்தது இந்த அணிகலன்கள்...

மோகன்ஜி சொன்னது…

அதுக்கென்ன நிலா ! சொல்லிட்டா போச்சு.

காந்த நாண் புள்ளிகை - கழுத்தில் அணியப்படும் வடம். வளையமொத்தது.

கலாவம் - இடுப்பில் தொங்கவிடப்படும் சரங்களின் வரிசை.

காறை - கழுத்தில் அணியும் சங்கிலி வகை

கச்சோலம் - இதுவும் இடை மேட்டர் தான். ஒட்டியாணம் பேமிலி

இன்னும் நிறைய இருக்கு.. கண்டுபிடிச்சிருப்பீங்களே.. லேடி 007... ஒரு சரித்திர நெடுங்கதை தொடங்கியிருக்கிறேனாக்கும்.....

தங்கம் தாங்க வசதி... பிளாட்டினத்தை வைக்கஇறதோ,விக்கிறதோ கஷ்டம்...

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

நிலா !
'சுதா' வை உங்களுக்கும் எனக்கும் பிடிச்சா போதுமா? சுதாவுக்கு பிடிக்கவேணாமா ??

11/4/15 3:28 பிற்பகல் நீக்கு

sury Siva சொன்னது…

"Sudha sindhor madhye suravitapi vatee parivruthe
Manidhweepe ......
" so illustrates Ahi Shankara's Soundharya Lahari " 9th stanza
That SUDHA indicates nectar amrutham Parkadal amrutham oy
.
I cant even think nay even dream of such names albeit nick ones.

Athu irukkattum.
Innum mail um valla mayilum valla. Muruga !
Subbu THATHA

மோகன்ஜி சொன்னது…

எங்களுக்கு இனிமே நீங்க அமுதமே தான் ! 'சுதா' வே தான். மீண்டும் அனுப்பியுள்ளேன் சார்.

நிலாமகள் சொன்னது…

பிளாட்டினத்தை வைக்கஇறதோ,விக்கிறதோ கஷ்டம்...//

:)

ஒரு சரித்திர நெடுங்கதை //

புத்தாண்டுப் பரிசு?!

மோகன்ஜி சொன்னது…

சுதா ஜி! உங்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது

மோகன்ஜி சொன்னது…

நிலா ! சரித்திர நெ.க இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.. சில தகவலுக்களாய் பிறாய்ந்து கொண்டிருக்கிறேன்.

செய்வதை கொஞ்சம் திருந்தச் செய்வோமின்னு....

உங்களுக்கும், உங்கள் அன்புக் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே விளைக !

ரிஷபன் சொன்னது…

எதையென்று சொல்ல.. ரசித்ததில்.. ஒன்று மட்டும் நிச்சயம் இந்த விருந்து உங்க எழுத்தால் சாத்தியமானது.. திளைப்பது எங்கள் பாக்கியம்

ரிஷபன் சொன்னது…

எதையென்று சொல்ல.. ரசித்ததில்.. ஒன்று மட்டும் நிச்சயம் இந்த விருந்து உங்க எழுத்தால் சாத்தியமானது.. திளைப்பது எங்கள் பாக்கியம்