புதன், செப்டம்பர் 08, 2010

பாயைப் பிறாண்டிக் கொண்டு ஒரு நண்பன்..

.

ஞொய்யாஞ்ஜியின் நண்பர், அவரை ஒரு நாள் இரவு தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். ஞொய்யாஞ்ஜியும் விருந்தை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்த போது வெளியே பலமாக மழைப் பிடித்துக் கொண்டது .சாப்பிட்டு முடித்ததும் தன்  வீட்டுக்குக் கிளம்பின ஞொய்யாஞ்ஜியிடம் நண்பர்,மழையாய் இருக்கிறதே, இங்கேயே தங்கி விடேன் என்று சொன்னார்.. ஞொய்யாஞ்ஜியும் தங்கிவிட ஒத்துக் கொண்டார்.. மழையோ பெரிதாகப் பெய்து கொண்டிருந்தது.. நண்பர் சமையலறைக்கு சென்று பீடாவை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த போது ஞொய்யாஞ்ஜியைக் காண வில்லை.

அரைமணிநேரம் கழித்து தொப்பலாக நனைந்தபடி ஞொய்யாஞ்ஜி திரும்பினார்.

நன்பார் கேட்டார், திடீர்னு எங்க போயிட்டே ஞொய்யாஞ்ஜி?

ஞொய்யாஞ்ஜி: நீ பாட்டுக்கு மழையா இருக்கு, இங்கயே தங்கிடுன்னு சொல்லிட்டே. நைட் ட்ரெஸ் மாத்திக்காம எப்படித் தூங்கறதாம்? அதான் ஒரு எட்டு என் வீட்டுக்கு ஓடிப்போய் நைட் ட்ரெஸ்ஸ எடுத்திக்கிட்டு வந்தேன். சரி சரி! பாயைப்  போடு ! தூக்கம் வருது என்றார்.

நண்பர் ஞொய்யாஞ்ஜிக்குப் பாயைப் போட்டு விட்டு, இரவெல்லாம் தன் பாயை பிறாண்டிக் கொண்டே இருந்தார்.  

22 comments:

Chitra சொன்னது…

இவர் இப்படிப்பட்டவர் என்று தெரிந்தும் நண்பர் ஆக இருக்கிறாரே!!! ஹா,ஹா,ஹா....

'பரிவை' சே.குமார் சொன்னது…

பார்ரா... அறிவாளியை...
ஹி...ஹி...ஹி...

மோகன்ஜி சொன்னது…

வாங்க சித்ரா மேடம்.
Mr ஞொய்யாஞ்சியை உலவ விட்ட பின்,நண்பர்கள் பத்மநாபனும்,RVSம் தொடர்பதிவு போட்டு அமர்க்களப் படுத்திட்டாங்க. நீங்களும் ஒரு பதிவு தொடருங்களேன்.அமெரிக்கா வர
Mr ஞொய்யாஞ்சிக்கு விசா கூட இருக்கு..

மோகன்ஜி சொன்னது…

குமார் சார்.. நம்மாளு அறிவுக் கொழுந்துங்க. இன்னம் வரப போறாரு பாருங்க..

RVS சொன்னது…

சேட்டை தாங்க முடியலை... பைத்தியம் பிடிச்சு பாய பிராண்ட வச்சாச்சு... ஏதோ நம்மாளால முடிஞ்சா காரியம்.. நாளைக்கு இல்லைனா நாளானைக்கு இந்தப் பக்கம் வர்ரதா சொல்லியிருக்காரு... இப்பவே ஒரு டரியலா இருக்கு மோகன்ஜி......

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஏன்னா ஒரு அறிவு.. என்ன ஒரு ஞானம்... யாரு சார் உங்க நண்பனா...

பத்மநாபன் சொன்னது…

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க , எதிலும் ஒரு அக்கறை இருக்கணும்.. ஒரு நேர்த்தி வேணும் , நம்மாளு சரியாத்தாங்க செஞ்சிருக்கார். நைட் டிரஸ் இல்லாம எப்படி தூங்குறதாமா. வீட்டுல வேற தேடமாட்டங்களா பின்னே..

மோகன்ஜி..ம் ..ம் நடத்துங்க ..

மோகன்ஜி சொன்னது…

ஏதேது... நம்மாளு போற போக்கப் பாத்தா எலக்ஷன்ல நிக்க வச்சுருவாங்க
போலிருக்கே. நம்மாளு உங்க பக்கம் வந்தா செமத்தியா கவனிங்க. உங்க சிலம்பாட்டத்துக்கு காத்திருக்கேன் RVS

மோகன்ஜி சொன்னது…

வெறும் பய சார்! அவரு எனக்கு நண்பர் மட்டும் இல்லீங்க.. பிலாசபர்,கிடும் கூட.. நான் இவ்ளோ அறிவோட இருக்கறதுக்கு அவருடைய வழிகாட்டுதலே காரணம்... இப்ப சந்தோஷமா தல?

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்... நீங்க "சித்தப்பபூ" இல்ல? நல்லா வக்காலத்து வாங்குறீங்க.. நீங்க நம்மாள இன்னும் நல்லா பாத்துகிடணும்.. சொல்லிட்டேன்.. அப்பப்போ ஒரு துருப்ப இறக்குங்க பிரதர்..

மதுரை சரவணன் சொன்னது…

கலக்கல்.. கதையா உண்மையா.. எதுவாக இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

கருத்துக்கு நன்றி சரவணன் சார்! கதையா உண்மையான்னு கேட்டா என்ன சொல்வது? உண்மையான கதைன்னு வச்சிக்கலாமே! அடிக்கடி வாங்க

அப்பாதுரை சொன்னது…

kushwant singh styleல் விரைவில் ஞொ. புத்தகமாக எதிர்பார்க்கலாமென்று தோணுதே?

Aathira mullai சொன்னது…

அண்ணா சொன்ன மூளைக்கதை மாதிரி இருக்கு..ஆமா அது என்ன பேரு ஞொய்யாஞ்சி...இந்த நாமகரணம் யாரு செஞ்சது..முதல்ல அவருக்கு ஒரு அவார்டு தரனும்...

அடுத்து ஞொய்யாஞிசியின் ஞானத்திற்கு ஒரு பாராட்டுச் சான்றிதழ் தரனும்...சிரித்து சிரித்து...

Ahamed irshad சொன்னது…

நல்லது..

மோகன்ஜி சொன்னது…

நாலு நாள் மும்பை போயிட்டேன் அப்பாதுரை சார். இன்னிக்கு தான் உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன். ஞொ. ஒரு ரவுண்டு வரப போறார். நீங்களும் ஒரு பதிவு போட்டு அவருக்கு முகமன் கூறுங்களேன்..

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிரா! ஞொய்யாஞ்சிங்கிற நாமகரணம் பண்ணி அவரைக் களத்தில் இறக்கினது அடியேன் தான். அதற்கு உற்சாகம் தந்து வழி மொழிந்தது என் சகோதரர்கள் பத்மநாபனும்,RVSம். இனிமே அடிக்கடி வந்து உங்களை மகிழ்விப்பார் ஆதிரா !

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு வந்தனம் அஹ்மத் இர்ஷாத். உங்க வலைப்பூவும் நன்றாக இருந்தது. நட்புக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குதுங்க உங்க நகைச்சுவை. நெஜமாலுமே இப்படிப்பட்ட அறிவாளீங்க இருந்தாலும் இருப்பாங்க. எதுக்கும் கொஞ்சம் நெறய பாய் வாங்கிப்போட்டுருங்க. நாங்களும் மழை பேயறப்போ வந்தாலும் வருவோமில்ல.

மோகன்ஜி சொன்னது…

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்க! வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி ஐயா!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அறிவுக் கொழுந்துங்க.Parrtukkal.

மோகன்ஜி சொன்னது…

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி!