புதன், செப்டம்பர் 22, 2010

ஸ்கெட்ச் போட்ட பிள்ளையார்



ஒரு ஊர்ல திருப்தியே இல்லாத ஒருத்தன் இருந்தானாம்.
( யார் தான் திருப்தியோட இருக்காங்க?!).
அவன் ஒரு முன்கோபி வேறு..
சட்டு சட்டுன்னு சூடாயிடுவான்.

எனக்கு நீ ஒண்ணுமே தர மாட்டேங்கிறே.வேஸ்டு நீ!ன்னு
அவன் தினமும் பிள்ளையாருக்கு டார்ச்சர் குடுத்துகிட்டே இருந்தானாம்.

பிள்ளையாருக்கும் ரொம்ப கடுப்பாயிடுச்சாம். மவனே உனக்கு இருக்குடா ன்னு கரங்கட்டிட்டாராம்.

நம்மாளு.. மறுநாள் காலையில் பிள்ளையார் சன்னதியிலே வழக்கம் போல பாட்டு படிக்கவும், பிள்ளையார் டைங்குன்னு,(தாம்பாளம் கீழே போடற சத்தம் பேக் ரவுண்ட் மியூசிக்கோடு) பிரத்யக்ஷமானாராம். பொலம்பல் பார்ட்டியைப் பார்த்து,டேய். வென்று... இந்த மூணு தேங்காயைப் புடி. மூணே மூணு வரம்தான் உனக்கு. என்ன வேணுமோ வேண்டிகிட்டு தேங்காய உடைச்சா நீ கேட்டது கிடைக்கும். இதுக்கப்புறமும உன்னை இந்த ஏரியாவுல பாத்தேன்... மவனே சங்குதாண்டா உனக்குன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாராம்

இன்னிமே உன்னோட எனக்கென்ன சங்காத்தம்?.. வரம் மூணு அள்ளிட்டோமில்ல! என்று எக்காளத்துடன் வீட்டுக்கு ஓடினான்.
முதல் தேங்காயோட இருபது கோடி ரூபாய் கேட்கலாம்னு முடிவு பண்ணி, தேங்காயை உடைச்சான். 'இருபது'ன்னு சொல்லிட்டு,'கோடி'ன்னு அவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள , அவன் சம்சாரம் என்ன பண்றீங்கன்னு நடுவுல புகுந்தாள்.

. நம்மாளுதான் கோபக்காரனாச்சா....என் தல ன்னு கத்தினான். அவன் சொன்ன இருபதும்,தலையும் சேர்ந்து உடனே அவனுக்கு இருபது தலை  முளைச்சிடுச்சு.
அய்யய்யோ என்னாங்க?ன்னு நம்ம ஹீரோயின் கத்தவும்
நம்மாளும், பரவாயில்ல. இன்னும் ரெண்டு தேங்காயிருக்கே. முதல்ல இந்த எக்ஸ்டிரா தலையெல்லாம் ஒழிச்சிடலாம்ன்னு இன்னொரு தேங்காய உடைச்சான்.

அப்பா கணேசு! என்னோட தலையெல்லாம் என்னை விட்டு போயிடணும்ன்னு கேட்டான் .கேட்ட உடனே இருபது தலையோட சொந்த தலையும் சேர்ந்து போயிடுச்சு.
தலையில்லேன்னாலும் உணர்வு இருந்ததாலே அலறினான்,
அப்பனே விநாயகா! என் தலைய திரும்பி கொடுப்பா"ன்னு கையிலே இருந்த மூணாவது தேங்காயையும் உடைச்சான்.

ஒரு வழியா அவனோட பனங்கா மண்டை அவன்கிட்டேயே திரும்ப வந்து சேர்ந்தது. மூணு தேங்காயும் போச்சே.கேனயாட்டம் விட்டுட்டோமேன்னு நம்மாளு நொந்து நூடுல்சாயிட்டான்.

அவன் மனைவி தேங்காய் சில்லை எல்லாம் பொறுக்கி எடுத்துகிட்டு, ஏங்க! தேங்காய் சட்னி அரைக்கிறேன். இட்லியும் வார்த்துடறேன் சரியா?"ன்னு கேட்டாளாம். மேல இருந்து பிள்ளையாரும், இடது முஷ்டியை மடக்கி ,முழங்கையை பின்னுக்கு இழுத்து"எஸ்.. எஸ்" ன்னு குஷியா சவுண்டு விட்டாராம்.

மக்களே! மஹா ஜனங்களே!! கோவப் படாதீங்க.... பேராசைப் படாதீங்க... அப்புறம் பிள்ளையார் ஸ்கெட்ச் போட்டுருவாரு  ..

சரிங்க நான் எதுக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கே போயிட்டு வரேன்... என்னாத்துக்கு வம்பு?

பின் குறிப்பு

(பாட்டி! நீ என் சின்ன வயசுல சொன்ன கதைய ஏடாகூடமா எழுதிட்டேன்.மேல இருந்து நீ எனக்கு ஸ்கெட்ச் போட்டுடாதே!).

46 comments:

Mani சொன்னது…

தப்பு பண்ணிட்டான். அந்த மூனாவது தேங்காவ வச்சு இன்னும் மூனு தேங்கா வாங்கீருக்கலாம்ல ;)

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

:)))))) நல்லா இருக்கு. கருத்தை நகைச்சுவையோட சொல்லிருக்கீங்க.

மோகன்ஜி சொன்னது…

வாங்க மணி! ஹைதராபாத்ல தனியா அல்லல்
படறோமேன்னு நினைச்சேன்.இங்க நிறைய தெலுங்கு சினிமாவைப் பாத்துட்டு வித்தியாசமா யோசிக்கிறீங்க. பாக உந்தி!!

மோகன்ஜி சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சக்திப்ரபா மேடம்.

RVS சொன்னது…

மூணாவது தேங்காய் உடைக்கும் போது "பிள்ளையாரப்பா... வைரக் கிரீடம் வச்சு என்னோட தலையை திருப்பி குடுத்துடு...." அப்படின்னு வேண்டியிருக்கலாம்... பாட்டி நிச்சயமா திட்டப் போறா... நாக்கை கடிச்சிப்பீங்க...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

நல்லாத் தான் இருக்கு இந்த ஐடியா ! ஆனால்,பொல்லாப் பிள்ளையார், கிரீடத்தை
பெர்மனண்டா தலையில் ரிவிட் அடிச்சி குடுத்துட்டா,பேஜாராயில்ல ஆயிடும் ?

ஹேமா சொன்னது…

மோகன்ஜி...பாட்டி திட்டமாட்டாங்க.
நகைச்சுவையோட அவங்க சொன்னதை கொஞ்சம் பிய்ச்சு எடுத்து சொதப்பலா ஆனா நீதியோட சொல்லிப் புரியிறமாதிரி சொல்லியிருக்கீங்க.சந்தோஷம்.

Chitra சொன்னது…

பதிவில, நீங்க நல்லா ஸ்கெட்ச் போட்டு இருக்கீங்களே! :-)

பத்மநாபன் சொன்னது…

சாமி அப்படி வந்து வரம் கேட்டா மக்கள், தலை கால் புரியமா போய்டறாங்கன்னுதான்...சூட்சுமா பாத்துட்டு இருக்காரு...அதிலேயும் வினாயகரு விவரமானவரு...வைரகிரிடம் கேக்கிற ஆர்.வி.எஸ் மாதிரி ஆளுகளுக்கு பயந்து சட்டை கூட போடறதில்லை...(மச்சி மாட்டிகிட்டனா...வினாயகனே வெவ்வினை தீர்ப்பவனே காப்பத்துப்பா.. )

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஹேமா! நகைச்சுவைக்காக கொஞ்சம் பாஷை மாற்றிக் கொண்டேன். இம்மாதிரிக் கதைகளில் சின்ன சின்ன நீதிகளை,அந்நாட்களில் குழந்தைப் பருவத்திலேயே மனதில் பதிய வைத்தார்கள் .இன்றைய குழந்தைக்கு இந்த சலுகையுமில்லை. பெற்றோரிடம் கதைகளும் இல்லை,நேரமும் இல்லை.. கம்ப்யுட்டர் விளையாட்டுகள் தரும் எலெக்ட்ரானிக் பிம்பங்களே பிள்ளைகளின் மனமெங்கும்...

மோகன்ஜி சொன்னது…

சித்ரா மேடம்! வாழ்க்கையே உலகக் கேன்வாஸ்ல நம்ம போடுற ஸ்கெட்ச் தானே..எப்பிடிங்க டயலாக்?

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்.. நீங்க என் கட்சியா இல்லே பிள்ளையார் கட்சியா? நீங்க சொன்னமாதிரி விநாயகர் சட்டை போடாதது மட்டுமில்லே, அவரு பூணூலா பாம்பைத்தான் மாட்டியிருக்காரு.ஒரு சேப்டிக்கு தான்.
சென்னைக்கு வந்தா திரிசூலம் சிவன் கோயில் போய்ப் பாருங்க. பிரகாரத்தில்,நாகயஞோபவீதத்துடன் விநாயகரின் அற்புதமான சிற்பம் உண்டு..

பத்மநாபன் சொன்னது…

நாகயஞோபவீதத்துடன்.....வார்த்தை கோர்வைக்கு ரசிகமணியின் பாராட்டு...

நாமெல்லாம் பிள்ளையார் கட்சி தான்...

கண்டிப்பா அவ்வழகான சிற்பத்தை காண்கிறேன்...நன்றி....

'பரிவை' சே.குமார் சொன்னது…

பாட்டி சொன்ன கதைய சுட்டாலும் நல்ல விஷயத்தை நாலு பேருக்கு கொண்டு போய் சேர்த்துட்டியேப்புன்னு பட்டி வாழ்த்துவாங்கன்னா...

மோகன்ஜி சொன்னது…

வாங்க குமார், நான் சாப்புடற வடையை பாட்டி சுடலாம். அவள் சொன்ன கதையை நான் சுடக் கூடாதோ?! இதெப்பிடி இருக்கு?

RVS சொன்னது…

ஆகா... ஓரமா போனாலும் உள்ள இழுத்து விடறாங்களே... வல்லப கணபதி வல்லமை தாராயோ...

இது 'வல்லிய' மோகன்ஜிக்கு..
பிள்ளையாரை பார்க்காம ஆஞ்சநேயர் ரூட் எடுத்த உங்களுக்குத்தான் பிள்ளையார் "வாலை" ஃபிக்ஸ் பண்ணி ரிவிட் அடிப்பார்.

இனி 'வம்பு பண்ணும்' பத்மநாபனுக்கு...
ஒத்துக்குறேன்... பிள்ளையார் சட்டை போடறதில்லைன்னு... ஆனா தலையில சோக்கா கிரீடம் வச்சுருக்காரு விக்னராஜர் ... பத்துக்காக கொடுக்கலைன்னாலும் ஆர்.வி.எஸ். போன்ற ஏழை பக்தனுக்காக "கிரீடப் பிள்ளையார்" அருள்பாலிக்க மாட்டாரா..(வருங்காலத்தில் நிச்சயம் சென்னையில் எங்காவது ஒரு தெரு முடுக்கில் இந்த பெயருடன் பிள்ளையார் கோயில் ஒன்று இருக்கும்.)

பிள்ளையார் கட்சியில் இருந்துகொண்டே அவர் "சட்டை கூட போடறதில்லை" என்று நையாண்டியாக பேசிய பத்துவை "கொழக்கட்டை நாயகன்" கணேஷ் அவர்களின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்வரும் பர்த் டே (விநாயக சதுர்த்தி) பார்டியில் பத்து செமத்தியாக கவனிக்கப்படுவார் என்று அகிலஉலக கஜனி (கஜமுகனின் செல்லப் பெயர்) ரசிகர் மன்றம் தாழ்மையுடன்(?!) தெரிவித்துக்கொள்கிறது. பத்துவை பாலைவனத்தில் மத்தியான்ன வெயிலில் பத்து மூஞ்சுறுகள் ஓட ஓட துரத்தக்கடவது.

விநாயகரின் தம்பியின் நாமத்தை ஸ்பெஷல் ஆக எனது பெயருடன் இணைத்திருப்பதால்... அவருடைய அருளாசியில் எனக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பத்மநாபன் அண்ட் கோ அறியக்கடவது.
(அப்படி அட்ரா சிதறு தேங்காயை...)

அன்புடன் "பிள்ளையார் பக்தியில் மாட்டிக்கொண்ட" மச்சி ஆர்.வி.எஸ்.
[எக்ஸ்ட்ரா பிட்: மாயவரம்... பூந்தோட்டம் அருகில் இருக்கும் செதலபதியில் நரமுக விநாயகர் தரிசனம் தருகிறார்.. மனித முகத்துடன் உள்ள விநாயகர். இராம இலட்சுமனர்கள் தனது தந்தைக்கும் ஜடாயுக்கும் சேர்த்து திலதர்ப்பணம் செய்து வழிபட்டமையால் "திலதர்ப்பனபுரி" யாக இருந்த ஊர்ப்பெயர் பின்னர் பேச்சு வழக்கில் செதலபதி யாக சிதைந்து விட்டது.]

பத்மநாபன் சொன்னது…

சொன்னது சரித்தானே .. மாட்டுனா நொங்கு எடுக்காம விடமாட்டாரே மச்சான்.....

அவனவன் வெறும் தலை கெடச்சா போதும்ன்னு துடிச்சு இருக்கறப்ப வைரகிரிடம் வெச்ச தலை வேணுன்னா என்ன அர்த்தம்.... இதுல நைசா விநாயகர் கிட்ட வைர கோரிக்கை வேற...... பாம்ப கழட்டி உஷ்..உஷ் விடப்போறாரு பாருங்க....

கவனிக்கறதுன்னா....நூறு கொழுக்கட்டையை அடுக்கி வெச்சு குமட்டுல குத்தி குத்தி சாப்பிட வைக்கிறதா... வேணாம் சாமி...... சிதறுதேங்காய் சில்லு ஒன்னு பிரசாதமா எடுத்துட்டு எஸ் ஆகிக்கிறேன்...
(செதலபதி..ஸ்தலவரலாற்றிர்க்கு நன்றி.... )

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்.. விஷயம் புரியுதா! ஆர்.வீ.எஸ் விநாயகரோட தம்பி பேரு வச்சிருக்காராம். அதனால அவருக்கு முன்னுரிமையாம். விநாயகர் தம்பிக்கு வள்ளியம்மையை, சேர்த்து வைக்க உதவிசெஞ்சிருக்காரு .( தேவயானை கல்யானத்தப்போ எல் .டி.ஸீ ல பிள்ளையார்பட்டி போயிட்டாரு ) நம்மாளு எங்க லிங்க் குடுத்திருக்கார் பார்த்தீங்களா! நம்மளானா நம்ம தங்கச்சிய இவருக்கு கட்டி குடுத்துட்டு,பயப்படாம இருக்க முடியுமா?
பிள்ளையாரப்பா எங்க மைத்துனருக்கு நல்ல புத்தி கொடு. கிரிடப் பிள்ளையாருக்கு சிதறு காய் உடைக்கிறோம்!

-அப்பாதுரை சொன்னது…

பிள்ளையாருக்கு யானைத்தலை வந்தது இப்படித்தானோ? யானைன்னதும் மறுபடி யானை விவகாரத்துக்கு ஓடிறாதிங்க‌ சார்.

இரண்டாவது வரத்துல இந்த பெண்டாட்டி சனியன் (தாய்க்குலம் மன்னிக்க) சிலையாவணும்னு வேண்டியிருக்க வேண்டாமோ?

ஹைதராப்பாக்கமா நீங்க?

appadurai சொன்னது…

ஆன்சநேயர் வடைமாலை பத்தி ஒரு சுவையான கதை நினைவுக்கு வருது... இந்த தமிழ் தட்டச்சு சிரமமா இருக்குதுன்க.. பிறகு பின்னூட்டம் போடுறேன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாதுரை சார்.. எனக்கு சொந்த ஊர் கடலூர்ங்க. கல்லூரி படிபெல்லாம் மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில். வங்கிப் பணி நிமித்தம் சென்னை,பெங்களூர்,கல்கத்தா,விசாக பட்டினம்,கடலூர் புதுவை, கோவை,திருச்சி என்று பல ஊரும் சுற்றி, கடந்த இரண்டு வருடமாய் ஹைதராபாதில் இருக்கிறேன். உங்கள் இரண்டாம் வரத்தை ரசித்தேன்.
ஆஞ்சநேயர் கதைக்கு காத்திருக்கிறேன்.

வால்பையன் சொன்னது…

இதை நான் வேற மாதிரி கேட்டிருக்கேனே!

மோகன்ஜி சொன்னது…

பாட்டீ! பாட்டீ!! இந்த வால் பையனைப் பாரேன்.. என்னென்னமோ சொல்றாப்பல...

வால்பையன் சொன்னது…

//பாட்டீ! பாட்டீ!! இந்த வால்
பையனைப் பாரேன்.. என்னென்னமோ சொல்றாப்பல.//


ஏன், உங்களுக்கு தெரியாதாக்கும்!

RVS சொன்னது…

எங்க இன்னும் பத்துவைக் காணோம். அண்ணனும் அடிக்கட்டும் கமெண்டை.. அப்புறமா வாரேன்....

கிரீடப் பிள்ளையாருக்கு 108 மோதகம் நெய்வேய்த்யம் பண்றேன். இந்த அதகளத்தில் இருந்து என்னை காப்பாத்துப்பா.. எல்லோருக்கும் நல்ல புத்தி குடுப்பா.. . சுப்பிரமணியர் பெயரை சொன்னா ரெண்டு பொண்டாட்டி ஞாபகம் மட்டும் தான் வருது... ஏன் இப்பூடி...

இந்தக் கூத்துல அப்பா சார் வேற கலந்துகிட்டாரு... வட மாலை சோக்கு சொல்லப் போறாராம்.அப்டி போடு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் சொன்னது…

விட்டா வெங்கிடத்தை கழட்டி கழட்டி சுப்ரமண்யம்..சுப்ரமண்யம்..சண்முகனாதா சுப்ரமண்யம் பாடிட்டே இருப்பார் போல இருக்கு.... அந்த அளவுக்கு வள்ளிதல் ஆரம்பிச்சிருச்சு.... அப்பாஜியொட வரக்கோரிக்கையை பாத்திங்கள்ள...... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுக்கே இந்தப்பாடு......

நாமளும் பகுத்தறிவு பாணியிலே அப்பாஜிக்கு சப்போர்ட் பண்ணனுமல்ல ( எங்கெங்க வீங்கியிருக்குன்னு பார்த்து மருந்து போடனுமல்ல ).... நாங்கள் பொண்டாட்டிகளை வெறுப்பதில்லை பொண்டாட்டியியத்தை தான் வெறுக்கிறோம்..( அது என்ன ஈய்யம் பித்தாளையோ --- உளற தெரிஞ்சாத்தான் இங்கு உருப்படமுடியும் )

thiyaa சொன்னது…

சுவையான கதை

RVS சொன்னது…

புருஷனிசம் கடைபிடிக்கும் பத்மநாபர் சொன்ன பொண்டாட்டியியத்தை மிகவும் ரசித்தேன். வார்த்தை கோக்கறதுல பார்ட்டி கில்லாடி. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு அப்படின்னு ஏக்கமா சொல்றமாதிரி இருக்கு.. இருக்கறது அரபு தேசம்.. கல்லடி... கட்டிங்ன்னு ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போவுது ஜாக்கிரதை!

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை சொன்னது…

அதாகப்பட்டது... சிலையாவணும்னு வேண்டிக்கறது அன்பு எக்க்க்க்க்கச்ச்க்கமாயிட்டதுனால.. சிலையா எப்பவும் பாத்து ரசிச்சுக்கிட்டிருக்கலாம்ல? கடவுள் ஸ்தானத்துல வச்ச மாதிரி? அதான்.. (ஸ்ஸ்ஸ்... பக்கத்துல யாரோ பாத்துட்டிருக்காங்க)

அப்பாதுரை சொன்னது…

மேற்கு மாரட்பள்ளி, செகந்திரபாத் கிளப் இன்னும் பெயர் மறந்து போன சுற்று வட்டாரங்களில் நானும் அந்தப்பக்கம் கொஞ்சம் குப்பை கொட்டியிருக்கிறேன். மாபள்ளியில் எதிர் போர்ஷன் காலேஜ் அழகி என்னையும் ரூம் மேட்டையும் அலைகழித்தது... ஹூம். பாகீசா லதா மங்கேஷ்கர் பாட்டு - ஞாபகம் வரமாட்டுங்குது - ஆஹே வந்துடுச்சு... மௌசம் ஹை பாட்டு - பாடிக்கிட்டே இருக்கும் அந்த்ப் பொண்ணு. இந்தி வெறுக்கும் என் ரூம் மேட் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு ரசிப்பான். அந்தப் பொண்ணு கன்னட பேமிலி.. நமக்கு கொஞ்சம் கொஞ்சம் கொத்தா? அப்பிடி இப்பிடி கன்னடத்துல கடலை போடுவேன்... சாது கடலை தான். வாயைக் கிள்ற்றீங்க வானவில் மனிதன்.

அப்பாதுரை சொன்னது…

ஆஞ்சனேயர் கதையா? கொஞ்சம் ஆப்கலர் ஹ்யூமர்.. தோராயமா சொல்றேன், யூகிச்சுக்குங்க. அப்பல்லாம் வடையில துளை கிடையாது. வடையில துளை வந்து மாலை சாத்துறதுக்கும், அழகழகா நூத்துக்கணக்குல பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சுகிட்ட கையாலயும் ஆகாத அரசன் ஒருவன் தன்னோட அழகுப் பெண்டாட்டிகளை 'பத்திரமா' வச்சுக்க யாரைப் பிடிக்கலாம்னு நினைச்சு பாவமறியாத ஆஞ்சனேயர் கிட்டே ஒப்படைச்சதுக்கும் கனெக்சன். சோக்கா சொன்னா சோக்கா இருக்கும், சிகாது கிகாது போட்டுறப்போறாங்களேனு பயமா இருக்கு. (புத்திர் பலம் யசோ தைர்யம் எல்லாம் சரி தான், வலி அடி வாங்குறவங்களுக்குத் தானேய்யா தெரியும்?)

மோகன்ஜி சொன்னது…

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காண்டீபன்

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ். இன்னமும் சிரிச்சிகிட்டிருக்கேன். பத்துவைப் பாடாப் படுத்துறோமோ?? அவர் இனைய இணைப்பில் பிரச்னை என நினைக்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

மூன்று இடுகைகளை இட்ட முத்தமிழ் வித்தகர் அப்பாதுரையாருக்கு வணக்கம் பல.

சிலை யெடுத்து ரசிக்க எண்ணி
நிலை மறந்த சிற்பியே...
வலை விரித்து ஹைதராபாதில்,
கன்னடக் கடலையிட்ட கட்டழகரே! இலை தனிலே வெண்ணையும்,
வடையும் படைத்து வணங்கும்
அலை யாதஆஞ்சநேய பக்தனெனக்கு,
குன்சாய் கதை சொன்ன கோமானே!

கதை புரிஞ்சிடுச்சிய்யா!!புரிஞ்சசிடுச்சிய்யா!!
எல்லாம் ஒரு டைப்பாத்தான் போய்க்கிட்டிருக்கு!ஹும்!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் !
//நாங்கள் பொண்டாட்டிகளை வெறுப்பதில்லை பொண்டாட்டியியத்தை தான் வெறுக்கிறோம்..( அது என்ன ஈய்யம் பித்தாளையோ --- உளற தெரிஞ்சாத்தான் இங்கு உருப்படமுடியும் //

எங்கயோ போய்க்கிட்டேயிருக்கீங்க !! அரேபியாவின் அரிஸ்டாட்டிலே!! இந்தக் கருத்துல்லாம் எங்க
இருந்தண்ணே வருது? நோட் பண்ணுங்கப்பா !
நோட் பண்ணுங்கப்பா!!!

Vishnu சொன்னது…

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் . முனைவது தேங்காய உடைக்க அவனுக்குதான் கண்ணு இல்லையே, எப்படி உடைச்சான்?

மோகன்ஜி சொன்னது…

காரைக்கால்ல இருந்து கலக்கலான கேள்வி விஷ்ணு. அதான் சொல்லியஇருந்தேனே..
//”தலையில்லேன்னாலும் உணர்வு இருந்ததாலே அலறினான்.அப்பனே விநாயகா! என் தலைய திரும்பி கொடுப்பா"ன்னு கையிலே இருந்த மூணாவது தேங்காயையும் உடைச்சான்.//
கதையில வரும் கொழக்கட்டைக்கு காலுண்டோ? அப்புறம் 'மணக்குள விநாயகர்' சௌக்கியமா? உங்கள் முதல் வருகைக்கு நன்றி. எப்பிடி தலைவரே.. இவ்வளவு ப்ளாக் வச்சிருக்கீங்க. பொறுமையா அதையெல்லாம் படிக்கிறேன் விஷ்ணு சார்!

Vishnu சொன்னது…

நீங்க மோகன்ஜி யா இல்ல மோகன்ஜிஜி யா?
மணக்குள விநாயகர் மற்ற விநாயகர் எல்லாம் நலம்தான். மனசுள்ள மனுஷன்தான் கஷ்டப்படறான்.

சிவராம்குமார் சொன்னது…

நல்லா இருக்கு பாஸ்! நானும் இந்த கதையை சின்ன வயசுல( அதென்ன! இப்பவும் எனக்கு சின்ன வயசுதான!) கேட்டிருக்கேன்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க சிவராம்குமார்.. நம்ம ரெண்டு பேரோட பாட்டியும் ஒண்ணா படிச்சிருப்பாங்களோ? வருகைக்கு நன்றி பாஸ்!

பத்மநாபன் சொன்னது…

ஆமாங்க இணய பிரச்சினை இருக்கிறது...சற்று ஆணிகளும் கூட நெம்ப வேண்டியிருக்குது.

அப்பாதுரை சொன்னது…

///நம்ம ரெண்டு பேரோட பாட்டியும் ஒண்ணா படிச்சிருப்பாங்களோ?

classic!

பத்மா சொன்னது…

வணக்கம் விஷ்ணு சார் ,,காரைக்காலிருந்து blog readeraa ? மிக்க சந்தோசம் ..இங்கு வலைப்பூ எல்லாம் யாராவது வாசிப்பார்களா என்று நினைத்திருந்தேன் ..

very happy to see you here ..

மோகன்ஜி கடவுள் காப்பாற்றுவாராக

Geetha Sambasivam சொன்னது…

இந்தக் கதையை கொஞ்சம் வேறே மாதிரிக் கேட்டிருக்கேன். அனைவரின் பின்னூட்டமும் ரசிக்கும்படி இருக்கிறது. அப்பாதுரை இப்போத் தான் இதில் முதல் முதலா அறிமுகம் ஆகி இருக்கார் போல! :) உங்களோட மத்த நண்பர்களை இப்போல்லாம் பார்க்க முடியலையே!

ஸ்ரீராம். சொன்னது…

சொந்தத் தலையைத் திருப்பிக் கொடுக்க, நல்லவேளை மூணு தேங்காய்க் கொடுத்தார் பிள்ளையார்! இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம் என்று நிறுத்தி இருந்தால் என்ன ஆவது?

கோமதி அரசு சொன்னது…

இறைவனிடம் வரம் கேட்கும் போதும் புத்திசாலிதனம் தேவை போல!

உன் அருள் இருந்தால் போதும் பிள்ளையார் அப்பா, எது எனக்கு நல்லதோ அதை செய் பிள்ளையார் அப்பா.

எல்லோரும் மன அமைதியோடு வாழ அருள்புரி.