திங்கள், செப்டம்பர் 27, 2010

பல்லேலக்காவும் சேரன் எக்ஸ்பிரஸ்சும்



ஞொய்யாஞ்ஜியின் மனைவி பல்லேலக்கா, தன் அம்மா வீட்டுக்கு போய் பத்து நாள் கழித்து அன்று தான் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்புகிறாளாம்.
ரயில் நிலையம் போன நம்மாளு, பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த வண்டியின் சக்கரங்களை பெட்டி பெட்டியாக குனிந்து எண்ணிக் கொண்டு,
சீ! இது இல்லை இது இல்லை என்று சொல்லிக் கொண்டே பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தார்.

என்ன சார் தேடுறீங்க?ன்னு கேட்ட போர்ட்டரிடம்,
என்னாது... எல்லா பொட்டிக்கும் நாலு சக்கரமில்லே இருக்கு? என்றார்..

மேலும் கீழும் அவரைப் பார்த்த போர்ட்டர், டேசனுக்கு வெளிய போங்க.. மூணு சக்கரம்,ரெண்டு சக்கரம்,பல் சக்கரம் எல்லாம் இருக்கும் என்றபடி போய் விட்டான்.

அதான் சரியென்று வெளியே வந்த ஞொய்யாஞ்ஜி, அங்கே மனைவி பல்லேலக்கா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து
பரவசப் பட்டார்.

பல்லு ! உன் அண்ணன் ஒரு உதவாக்கரை! உன்னை ஏ.ஸி திரீ டயர் கோச்சில் அனுப்பறேன்னு போனில் சொன்னதிலிருந்து  ரொம்ப டென்ஷனாயிட்டேன் தெரியுமா?  ரயில் பொட்டிக்கு மூணு  டயர் மட்டும் இருந்தா, அது கவுந்துட வாய்ப்பிருக்குதில்லே? எவ்ளோ விபரீதம்? நாலு டயர் கோச்சுல அனுப்பினா, செலவு கூட ஆகுமின்னு இப்பிடி பண்ணியிருக்கான் கஞ்சப் பய.... ஆமாம்.. நீ எப்பிடி இங்க நிக்கிறே?

என் ராசா! எனக்கும் திரீ  டயர்ல டிக்கெட் எடுத்து தந்தவுடன் ரொம்ப யோசனயாப் போச்சு.. ஸ்டேஷனுக்கு  வரும்போதே  அவன் தந்த 
டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டு, இந்த டேக்ஸில தாங்க வந்தேன்.. நீங்க இங்க வந்து எனக்காக காத்துகிட்டு இருப்பீங்கன்னு தெரியும். வாங்க போலாம்.

அந்த நாலு சக்கர டேக்ஸிக்கு பில் நாலாயிரம் ரூபாய் தந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த ஞொய்யாஞ்ஜி,.மனைவியின் சமயோஜிதத்தை ஓஹோவேனப் புகழ்ந்தார்.

அவர்கள் பேச்சிலிருந்து நடந்ததை ஊகித்துக் கொண்ட டாக்சி டிரைவரும், தாங்க முடியாமல், டாஸ்மாக்குக்கு வண்டியை விட்டான்  

31 comments:

Muniappan Pakkangal சொன்னது…

a nice humorous story Mohanji.Driver-Tasmac nice.

மோகன்ஜி சொன்னது…

நன்றி,முருகப்பன் சார்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ha ha ha.. very cute short story... :-))))

என்ன ஒரு அறிவு.. ரெண்டு பேருக்கும்.. செம தூள் :-))
டாக்ஸி டிரைவர் பாவம் தான்..

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா...
சர்தார்ஜி இப்போ ஞொய்யாஞ்ஜி யா மாறிட்டாரா?

சிவராம்குமார் சொன்னது…

ஞொய்யாஞ்ஜி - என்ன பேரு சார் இது! மோகன்ஜிலயும் ஜி இருக்கு... நான் கண்டு பிடிச்சிட்டேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ha... ha... ha...
ஞொய்யாஞ்ஜி - Different Name.
Nalla irukku.

DR.K.S.BALASUBRAMANIAN சொன்னது…

made for each others

RVS சொன்னது…

இவர்தானே போனவாராம் பல்லேலக்கா அக்கா டாக்ஸி ஸ்டாண்ட் போய் வண்டி கொண்டாரச் சொன்னா "எல்லா டாக்ஸியும் பார்த்துட்டேன். ஒரு டாக்ஸில கூட ஸ்டாண்ட் இல்லடீ...." அப்படின்னு வந்து இளிச்ச ஆளு.

//அந்த நாலு சக்கர டேக்ஸிக்கு பில் நாலாயிரம் ரூபாய் தந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த ஞொய்யாஞ்ஜி,.மனைவியின் சமயோஜிதத்தை ஓஹோவேனப் புகழ்ந்தார்.//

ஸ்டேஷன்ல இறங்கி நேரா வலையாபதி வீட்டுக்குத் தான் வந்ததா ஊரே பேசிக்குது. பல்லேலக்காவின் தூக்கலான புத்தி சாதுர்யத்தை உங்களிடம் தான் ஓஹோவெனப் புகழ்ந்ததாக வேறு கேள்வி. அல்லசாணி பத்தன்னாதான் த்ரீ டயர் புக் பண்ணினார் போல... ஒரு டயர் இல்லாம டான்ஸ் ஆடிக்கிட்டே போகும் அப்படீன்னு ரெண்டு தலைகாணி எக்ஸ்ட்ராவா வேற கொடுத்தமிச்சாராம்.

அன்புடன் பின்னூட்ட பெருமாள் ஆர்.வி.எஸ்.

RVS சொன்னது…

போன பதிவில் பேசியவரைப் பற்றி பதிவாகவே கொஞ்சம் புனைந்து கதையாக போட்டுவிட்டேன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

ஆனந்தி!மக்கு தம்பதிகளா இருந்தாலும், ஒற்றுமையான ஜோடியா இல்ல தெரியுது !உங்கள் ரசனைக்கு நன்றிங்க!

மோகன்ஜி சொன்னது…

பாலாஜி சரவணன்.அதெப்பிடி நம்மூரு அறிவுக்கொழுந்தை சர்தார்ஜியோடு ஒப்பிடலாம்!
ஞொய்யாஞ்சி ரசிகர் மன்றத் தலைவனாக இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!

மோகன்ஜி சொன்னது…

சிவராம் குமார்!பேரு பொருத்தம் பாத்துட்டீங்களா?.நான் ஏதோ காந்திஜி,நேருஜி கணக்குல இல்ல மோகன்ஜின்னு நினைப்புல இருக்கேன்! ஞொய்யாஞ்ஜியும் என்னையும் போய் இப்பிடி... சரி சரி... யார் கிட்டயும் சொல்லாதீங்க...

மோகன்ஜி சொன்னது…

குமார்! கருத்துக்கு நன்றிங்க.. நம்மாளு அப்பப்போ வருவாரு..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

/// ஆனந்தி!மக்கு தம்பதிகளா இருந்தாலும், ஒற்றுமையான ஜோடியா இல்ல தெரியுது !உங்கள் ரசனைக்கு நன்றிங்க!//

அச்சச்சோ... நா தம்பிகளா சொல்லலங்க..
உங்க ஹீரோ, ஹீரோயின்-ன சொன்னேங்க...:-))))

மோகன்ஜி சொன்னது…

ஞொய்யாஞ்சி டேக்ஸி ஸ்டேண்டுக்குப் போனதும் எங்க வீட்டுக்கு வந்ததும் தெரிஞ்சு போச்சா? பல்லேலக்காவுக்கு பத்து அண்ணன் தலைகாணி குடுத்து விட்ட மேட்டர் கூட வெவரமா சொல்லுறீங்களே! பின்..பெருமா..ஆர்.வீ.எஸ்... நீங்க... நல்லவரா? இல்லே.. கெட்டவரா??

இப்படிக்கு விதேயன்,
வலையாபதி மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

அடடா! அவங்க என் ஹீரோயும் ஹீரோயினுமா? இது கூட நல்லாத்தான் இருக்கு ஆனந்தி!!

பத்மநாபன் சொன்னது…

ஜி.. நம்மாள திருப்பி கொண்டாந்திட்டிங்க வெகு பொருத்தமா பல்லேலக்காவோட....
ஆர் . வி. எஸ் .....நாங்கென்ன ரேட் தெரியாதவங்களா.... திரி டயர் வெலை ஜாஸ்தியாருக்கும் மனசுக்குள்ள நெனச்சுட்டு டு டயரல்ல புக் பண்ணுவோம்......ரெண்டு தண்ட வாளத்துக்கு ரெண்டு டயரு பத்தாதாக்கும்....

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! ஞொய்யாஞ்ஜி பத்து நாளா உங்களை பாக்ககணும்னு அரிச்சிகிட்டே இருந்தார். பல்லேலக்காவுக்கு இப்பிடியா டிக்கெட் வாங்குவீங்க?
ஆர்.வீ.எஸ் வேற போட்டுக் குடுக்கிறாரு! பாசமலர் சிவாஜிஅண்ணன் மாதிரி சீன் போட்டுட்டு இப்பிடி பண்ணுவீங்களோ? ஞொய்யோ !ஞொய்யோ!!

RVS சொன்னது…

ஆத்தாடி இங்க பாருடா.... பத்தன்னே... மோகன்ஜி தங்கச்சிக்கு நேர்ந்த இந்த ரயில் விபத்தை தாங்க முடியாம முரட்டு தாடி வளர்த்து தலையை உலுக்கி ஆட்டி

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி....
டு டயரில் வந்தது என் ஆசை தங்கச்சி.....
ஏமாத்தி ஏத்தி விட்டது பத்து அண்ணாச்சி..

அப்படின்னு சென்ட்ரல் ஸ்டேஷன் வாசல்ல பாட ஆராம்பிச்சுடுவாறு.. ஒரு பய ரயில் ஏற வரமாட்டான்.

வேணாம். வலிக்குது.. போதும்.... அழுதுருவேன்.... விட்ருங்க...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

ட டே டேய்! தங்கச்சின்னா மட்டமா? அவளுக்குதான் நட்டமா?
பெரிசா பேசுறியே.. திரிசான்னா திரிடையர் வாங்குவியா? தங்கச்சி!! திரிசா தான் உனக்கு வில்லி!
நான் சொல்லி அடிப்பேன் கில்லி! கல்மாடி இருக்கிறது டில்லி! வாங்கித் தரேம்மா மல்லி! யே டண்டனக்கா..
டனக்குனக்கா!!

ஹேமா சொன்னது…

ஞொய்யாஞ்ஜி..மோகன்ஜி இரண்டும் ஒரு ஆள்தானோ !

Aathira mullai சொன்னது…

அது சரி இதுவரைக்கும் திரீ டயர்ல ஞொய்யாஞ்சி போயி இருக்காரா இல்லையா? பில்டப் மன்னர்களே..வாழ்க..

பத்மநாபன் சொன்னது…

ச்சி...ல்லி...நொய்யாலுமே நல்லாருக்கு....

ஆணியினாலே கும்மி போணி பண்ணமுடியாம தவிக்கிறேனே..





நொய்யாலுமே நல்லா இருக்கு

RVS சொன்னது…

இங்கே ஹேமாவின் கமென்ட் கவனத்தை ஈர்க்கிறது... ஜாக்கிரதை!!!

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS சொன்னது…

கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் ஆணி பிடுங்கி சாவார்
என்று அய்யன் வள்ளுவன் வாக்கிருக்க.... பாவம் நம்ம பத்து......

அன்புடன் ஆர்.வி.எஸ்.

தெய்வசுகந்தி சொன்னது…

ஹா ஹா ஹா!!!

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! எதுக்குங்க இந்த கொலைவெறி?! அவரை மாதிரி நான் ஒண்ணும் மக்கு இல்லே.. நான் எவ்ளோ "இன்டிலிஜென்டிலி" தெரியுமா? வேணும்னா ஞொய்யாஞ்ஜியை கேட்டுப் பாருங்க!

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிரா! ஞொய்யாஞ்ஜி வித்தவுட்ல போறப்போ த்ரீ டயர்ன்னு கண்டாரா இல்லை டூ டயர்ன்னு கண்டாரா? இன்னிமே வேணா ஜாக்கிரதையா இருப்பார்!

மோகன்ஜி சொன்னது…

போங்க பத்மநாபன்! நீங்க மட்டும் தான் ஆணி புடுங்குரீங்களா ? நீங்க கேஸ் ஆணி பிடுங்குனா நாங்களோ ஸ்க்ரூ ஆணியே பிடுங்குறோம் தெரியுமா?
நீங்க இல்லாம நாங்க "டூ டயர்" ஆட்டோ ஓட்டறாமாதிரி இருக்கு. உங்க சேட்டு செல்லு நம்பரைக் கொடுங்க.. நம்ம ஞொய்யாஞஜியை விட்டு பேசச் சொல்றேன்!!

மோகன்ஜி சொன்னது…

ஆமாம் ஆர்.வீ.எஸ்.. ஹேமாவுக்கு எப்பிடியோ தெரிஞ்சிருக்கு..போகட்டும்.. எங்க வீட்டு பல்லேலக்காவுக்கே அப்பிடி ஒரு சந்தேகம் வந்துருச்சி தல...சுய சரிதம் எழுதுறா மாதிரி இருக்கேன்னு வேற கேட்டுட்டா.. ஹேமா கிட்ட போட்டுக்
குடுத்துட்டாங்களோ என்னமோ!
கும்மிக்கு சரியா அட்டேண்டன்சே போடாத பத்துவுக்கு
"ஆணி"யன் பூங்குன்றனார் என்று டைட்டில் கார்டுல பட்டப் பேரு போட்ருவோமா?? பொதுக் குழுவ கூட்டுங்க ஆர்.வீ.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

தெய்வ சுகந்தி மேடம்! நல்லா சிரிங்க! சிரிங்க!!