திங்கள், அக்டோபர் 04, 2010

காதோடு காதாக






ஒரு காதை அறுத்துக்குறேன் எனப்  பந்தயம் கட்டறதும்
கேட்கவே காது கூசுதுன்றதும்,
காது குளுந்து போச்சுய்யான்றதும்,
கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுன்றதும்...
கண்ணு,காது வச்சு பெரிதாக்கிடுவாங்கங்கிறதும்........

எப்பவும் காதுலயே  கையி!
காதை இழுக்காம நமக்கு  ஒரு பேச்சு வருதா?


நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கிறீர்களா?

காதைக் கடிப்பது  என்பது ரகசியம் சொல்வதைக் குறிக்கும்.
மைக் டைசன் கோபத்தில் நிஜமாகவே எதிராளியின் காதை கடித்து துப்பி விட்டான். எதற்கும் ரகசியம் பேசும் போது ஜாக்கிரதையாய் இருங்கள்...

காதோரம் எங்கும் துளையிட்டு தங்கத்தில் மாட்டல்கள் போடுவது பேஷன் இப்போ. ஒரு காதை அறுத்தால்,போதும், ஒரு மாதம் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம்.

என் மாமியாருக்கு பாம்புக் காதுடீ என்று உங்கள் தோழி சொன்னால் நம்பாதீர்கள். ஏனென்றால்  பாம்புக்கு செவியே கிடையாது. அதிர்வையும் சலனத்தையும் மட்டும் கொண்டே அது உதார் விடுகிறது.

மூணு தவளை டூர் போச்சாம். மூணும் ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சாம். எம்பி எம்பி வெளிய வர பாத்துச்சாம்.
சுத்தி இருந்த தவளை எல்லாம் கைய கைய ஆட்டி,
வேணாம் குதிச்சு சோர்ந்துடாதீங்க. இது பெரிய பள்ளம். வெளிய வர வாய்ப்பேயில்லே. எதாச்சும் சாப்பிட குடுக்குறோம். பாம்பு வர்ற வரை உள்ளே இருங்கன்னு கூச்சல் போட்டதுகளாம். இதைக்  கேட்ட பயத்திலேயே ஒரு தவளை உயிரை விட்டுடிச்சாம். இன்னொன்னு ரொம்ப டென்சனோட குதிச்சு மயங்கிடிச்சாம்.
மூணாவதோ குதிச்சு குதிச்சு வெளியே  வந்துடிச்சாம்.
மற்ற தவளைகளைப் பார்த்து, நீங்க உற்சாகப் படுத்தினதுக்கு நன்றின்னுதாம்.
மத்த தவளைகளுக்கு ஒண்ணுமே புரியலையாம்.
விஷயம் என்னன்னா, மூணாவது தவளைக்கு காது கேட்காது. மற்றவை வராதே வராதேன்னு கைய ஆட்டினதை,
ஊக்கப் படுத்தறதா நினைச்சு உற்சாகமா குதிச்சுதாம்.

பிறர்  நம்மை சோர்வுறச் செய்யும் போதோ, அதைர்யப் படுத்தும் போதோ, செவிடாய் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

பாருங்களேன் அநியாயத்தை, இரண்டு காதும் கஷ்டப்பட்டு தாங்கும் கண்ணாடியை  காதுக் கண்ணாடி எனக் கூப்பிடாமல், வெறுமே முட்டுக் கொடுக்கும்  மூக்கின் பேரால்,
மூக்குக் கண்ணாடி என்றல்லவா அழைக்கிறோம்?!


விமானப் பயணத்தின் போது காது அடைக்கும்..எனக்கும் ஒரு பயணத்தில் இப்படி அடைத்து ஞொய் ஆனபோது, விமானப் பணிப்பெண் புன்னகையுடன் வெஜ்ஜா நான்வேஜ்ஜா எனக் கேட்க,அஜ்ஜீத் தானே நீங்க? எனக் கேட்டதாய்ப் புரிந்து கொண்டு, ஓ நோ!என நான் தன்னடக்கம் காட்ட, புவ்வா  இல்லாமல் பயணித்தேன் போங்கள்! தல புண்ணியத்தில் உபவாசம்! அட! நிஜமாதாங்க!


நடிகை மீனாவின் காதுக்கும் மேலூருக்கும் ஒரு தொடர்பு இருக்கு தெரியுமா? எதுக்கு சஸ்பென்ஸ்? நானே சொல்லிடறேன்.
காது செஞ்ச மண்ணு அது மேலூரு என்று பொற்காலம் சினிமாவில் மறைந்த முரளி பாடினாரே....தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாட்டில்..... அதைத்தான் சொன்னேன்...  ஏன்.. ஏன்.. நீங்க டென்சன் ஆவுறீங்க? மீதியையும் காது குடுத்து கேளுங்க!

மிகச் சிறந்த சிம்பனி இசையை வடித்த மேதை பீதோவனுக்கு காது கேட்காது.
காந்தி தாத்தாவுக்கு காது மடல்கள் பெரியவை.


எங்க பாட்டி சொல்லும்,இட்டு கெட்டது காது.. இடாது கெட்டது கண் காதுக்குள்ள குச்சி ,ஹேர்பின்,பட்ஸ், ஸ்க்ரூ டிரைவர் எல்லாம் இட்டு கொடஞ்சா காது டமாரமாயிடும்..
நல்ல அஞ்சனம்(கண் மை) இடாததால கண்ணு புட்டுக்குமாம்.
ஆகவே தாய்க்குலமே! ஐடெக்ஸ் உபயோகிங்க!!

ஒரு பழைய தெலுங்கு சினிமா பாட்டு ..
அதில் இரு வரிகள்....

 மனம் ஓர் ஊமை எனினும் அதற்கோர் மொழியும் இருக்கும்.
 செவியுள்ள இன்னொரு இதயத்துக்கே அம்மொழியும்  புரியும்

நல்லா இருக்கில்லே?

கடவுள் அர்த்தமின்றி எதையும் செய்யரதில்லே! பாருங்களேன்.
ஒரு வாயைக் கொடுத்தவன் காதை இரண்டா இல்லை தந்திருக்கான்!
அந்த வாயும் ரெண்டே  இன்ச்சு..
காதோ ஒவ்வொன்னும் நாலு இன்ச்சு...
வாய்க்கு மேலுதடு, கீழுதடுன்னு ரெண்டு ஷட்டர் வேற இருக்கு.
காதுகளோ திறந்த மேனிக்கு மூடியில்லாம.. ஏன்? ஏன்?
கொஞ்சமா பேசு, நிறைய கேளுன்னு இல்ல அப்பிடி வச்சாரு?..
அப்பிடியா  இருக்கோம்.. கேட்கிறேன் சொல்லுங்க?

குழந்தைங்களோட காது மடலை தடவிப் பார்ப்பது
என்னா சொகம்.!

இருங்க முடிச்சிட்டேன்..
காதே ஒரு கேள்விக் குறி மாதிரி இருப்பதாலே, ரெண்டே ரெண்டு கேள்வியோட என் காதை, ஸாரி வாயைப்  பொத்திக்கிறேன்!

அமெரிக்காவில் வாழும் அன்பு நெஞ்சங்களே! உங்க ஊர் ஓபாமாவுக்கு காது எக்ஸ்ட்ரா லார்ஜ் சைசாமே ?

நம்ம தெக்கத்தி காது பாம்படம் மறுபடி பேஷனா வரப்  போவுதாமே!

இப்பத்தானே சொன்னேன்? காதைக்  கொடையாதீங்க..
 .  
 (தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப்பூவில் நான் ஒரு பின்னூட்டம் இடப் போக, எனக்கு காது இருக்கிறதா என அன்பர் ஆர்.வீ.எஸ் அவர்களுக்கும், என தங்கை ஹேமாவுக்கும் சந்தேகம் வந்தது., காது பற்றி இடுகை இடுமாறு எனக்கு அன்புக் கட்டளை இட்டு விட்டார்கள்.. இந்தக் காது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?   )
  

88 comments:

பெயரில்லா சொன்னது…

ஐயோ முடியல சாமி! எங்கயாவது "காத" தூரம் ஓடிர்றேன் ;)

பத்மா சொன்னது…

ஐயோ ஐயோ ! ஹேமா வின் காதை பிடித்து திருகப் போகிறேன்

மோகன்ஜி சொன்னது…

பாலா! இந்த மாதிரி,காது பதிவை ஒரு தடவை பாத்தா புடிக்காது.படிக்க படிக்க தான் புடிக்கும்!!இன்னிக்கி வேணும்னா ஆபீசுக்கு லீவு போட்டுட்டு பத்து தரம் படிங்களேன் !

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மா! என் தங்கச்சி காதை திருகாதீங்க! ப்ளீஸ்! அது பூ மாதிரி பொண்ணுங்க! எச்சல் முழுங்குனா தொண்டைல அது இறங்கறது தெரியும். ஒரு காது வழியா பாத்தா அந்த பக்கம் இருப்பதுல்லாம் தெரியும். என் தங்கச்சி பூ மாதிரி பொண்ணுங்க!

சிவராம்குமார் சொன்னது…

எப்பாஆஅ! தாங்கல! ஆனாலும் அந்த தவளை கதை சூப்பர்!

RVS சொன்னது…

பேசாம இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டுட்டு போகாம இப்படி அடுத்தவன் காதை குடையுற மாதிரி ஒரு பதிவா? போதுமடா சாமி.
ரெண்டு காதையும் புடிச்சிகிட்டு நூத்தி எட்டு தோப்புக்கரணம் போட்டுக்கிறேன். இனிமே நான் கேட்கமாட்டேன். உங்களுக்கு காது இருக்கான்னு..

கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது... ராஜ பார்வை கமல் மாதவி காது வருடி பாடும் பாட்டு..
காதோடு பூவுரச... பூவ வண்டுரச... திரும்ப திரும்ப பாட்டு படிக்கறதிலேயே மனசு போகுது...

தவக்களை கதை நல்லா இருந்தது. அவ்வளோ பெரிய யானை காதில் இத்தூண்டு எறும்பு போனா அது அம்பேலாமே...

காதும் காதும் வச்சா மாதிரி ஒரு விஷயம். இது "சேம் ப்ளட்" ரகமாக இல்லாமல், இந்தப் பதிவின் மூலமாக "இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..." மிக்க மகிழ்ச்சி.

நன்றி மோகன்ஜி.

RVS சொன்னது…

//இட்டு கேட்டது காது.. இடாது கேட்டது கண்//
கெட்டதுன்னு இருக்க வேண்டுமோ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

kathu nallaththan irukku...
unga kathai yarum thirugalaiyey?

எம் அப்துல் காதர் சொன்னது…

"காத" வச்சு இவ்வளவு பில்டப்பா!! "தலைய" வச்சு ஒரு ஜோடிப்பு!! இன்னும் வேறன்ன பாக்கி இருக்கோ அதையும் எழுதுங்கோ பாஸ்!! நாங்க இருக்கோம்!! ஹி..ஹி..

எஸ்.கே சொன்னது…

நகைச்சுவையாய் சொன்னாலும் வாழ்வின் யதார்த்தங்களையும், நல்ல கருத்துக்களையும் சொல்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

காது. காது... காது.. ஒரு"காத" தூரம் போயிட்டேன்...

நல்லாயிருக்கு..

ஹேமா சொன்னது…

அண்ணா...காது இருக்கான்னுதானே கேட்டேன்.அதுக்குப்போய்....!காதோடு காதா இருக்கிற இரகசியமெல்லாம் இப்ப வெளில.
ச்சீ....வெக்கம் வெக்கம்.பாருங்க உங்க காது...

//"ஹேமா!என் காதா? இருக்கும்மா இருக்கு.. ரொம்பவே பத்திரமா இருக்கு..என் பாகம்பிரியாளின் பவிழ விரல்களுக்கிடையில்!!"//

அப்போ உங்க காது உங்ககிட்ட இல்லன்னு தெளிவாச் சொல்லிட்டீங்க.இதில வேற பத்மா என் காதை திருக வாறாங்க.நீங்க பாசமான அண்ணாவா இருக்கப்போய் என் காது தப்பிச்சு !ஐயோ என் காது.(என் காது அழகுன்னு சொல்லுவாங்க )

என்னைச் சொல்லி காது கேக்கிறமாதிரி காதுப்பதிவு அருமையா வந்திருக்கு.அண்ணா தவளைக்கு காது இருக்கா ?உண்மையா எனக்குத் தெரில அதான் கேக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

சிவா ! தாங்"காது"ன்னா எப்படி?நன்றி சிவா!

மோகன்ஜி சொன்னது…

பிள்ளைக் காதையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டுவீகளோ... வலையில் போய்க்கொண்டிருந்த அப்பிராணியை காதிலே இட்டுக் கொண்டு கொடையுதேன்னா எப்படி பிரதர்?

காதுப் பாடல்கள்
காதோடு தான் நான் பேசுவேன்...
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவகுவா சத்தம்..
இன்னும் இருக்கா?
'இட்டு கெட்டது' சரி பண்ணிட்டேன்.
நன்றி ஆர்.வீ.எஸ்

மோகன்ஜி சொன்னது…

குமார்! அத என் கேக்குறீங்க? எல்லாரும் திருகித் திருகி
காது தும்பிக்கை மாதிரி ஆயுடிச்சி

மோகன்ஜி சொன்னது…

வாங்க காதர் பாய்! எல்லாரும் என்னை
ரவுண்டு கட்டுறச்சே,நீங்களும் எஸ்.கே வும் தான் என்னை..ஊ... ரெம்ப நல்லவன்னு சொல்லிட்டீங்க!
ஹைதராபாத் வாங்க ! உங்களுக்கு, ஹைதராபாதி மொஹல் பிரியாணி வாங்கித் தாரேன்!

மோகன்ஜி சொன்னது…

உண்மைதான் எஸ்.கே! நல்ல விஷயங்களை இப்படி கலந்து கட்டி கொடுப்பதில் அவை ஏற்கப் படும் என்பது என் அனுபவம்! சிரித்துக் கொண்டே... சொல்லிக் கொண்டே... கேட்டுக் கொண்டே.. வாழ்க்கையை நடத்துவோம் எஸ்.கே. வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது?!

மோகன்ஜி சொன்னது…

வாங்க! 'விஷயமுள்ள பையரே!" (வெறும் பையன்னு உங்களை எப்படி சொல்வது?) நீங்க காத தூரம்
போனாலும் விட்டுருவோமா? வாழ்த்துக்கு நன்றி!

Unknown சொன்னது…

காது பற்றி இவ்வளவு பேச முடியுமா?

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! பாகம் பிரியாள் மேட்டர் ஆர்.வீ.எஸ் வலையில தான இருக்குன்னு..கேத்தாத் தானே இருந்தேன்? இங்க என் ப்ளாக்ல வால் போஸ்டராட்டம்
ஒட்டிட்டயே என் தங்கச்சி!
ரூட் புடிச்சு,என்னோட B.P(பாகம் பிரியாள்க்கு abbreviation) ஆர்.வீ.எஸ்.ப்லாகுக்குப் போனா 'கல்யாணி' சமாச்சாரமும் இல்ல சிக்கிடும்?!
ஊட்டி வளத்த அன்பு தங்கச்சி! இதுல தவளைக்கு காது இருக்கான்னு ஆராய்ச்சி வேற!தவளை தன் வாயால் கெடும்...நான் காதால இல்லக் கெட்டேன்?!
ஆ...ஊ... சரிம்மா! இன்னிமே ஆ.. காது..என் காது.. (B.P யின் விரல்கள் என் காதில் வீனையில்ல மீட்டுது!

அப்பாதுரை சொன்னது…

அது சரி மோகன்ஜீ, நீங்க என்ன சொல்றீங்க?

(இதைத் தொடங்கி வச்ச ஹேமா, RVS ரெண்டு பேரையும்.. குமாரி கமலா டேன்ஸ் பாக்க வக்கணும்).

அப்பாதுரை சொன்னது…

ஒபாமாவுக்கு காது இருந்து என்ன பலன்? கண்ணைக் காணோம் போலிருக்கே?

RVS சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RVS சொன்னது…

காதோரம் லோலாக்கு அப்படின்னு பிரபுவும் சுகன்யாவும் இளையராஜா மெட்டுக்கு பாடி ஆடின டூயட்டு..

மேற்கால வானம் கருக்குதே... பிரபு பத்மனாபரை இன்னும் காணவில்லையே... யாருப்பா இவருக்கு இப்படி வேலை கொடுக்கறது... பாஸ் மோகன்ஜி அந்த ஆள் காதை கழட்டி கீழ வையுங்க...

மோகன்ஜி அப்பா சாருக்கு காது... கேக்கலையாம்......... கா....கா.....து.. காது.....து..து... கேக்கலையாம்...........

ஏன் அப்பா சார் உங்களுக்கு இந்த கொலை வெறி. குமாரி கமலான்னு எங்க ஏரியாவில் ஒரு மேனா மினிக்கி இருந்தா. டி. ராஜேந்தரின் "சலங்கையிட்டாள் ஒரு மாது" பாட்டுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவில் ஆடி, பார்த்த எல்லா இதயத்தையும் சகதியாக்கி சென்றுவிட்டாள். அதோடு ஆட்டம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். பாடலின் நடு நடுவே ஆடியன்சுக்கு பின்புறம் காட்டி ஸ்டேஜ் உள்ளே நடந்து சென்ற போது மீண்டும் திரும்ப மாட்டாள் என்று நினைத்து நினைத்து அது நிகழாமல் வேதனை அடைந்த உள்ளங்கள் தான் எத்தனை.

Muniappan Pakkangal சொன்னது…

Nice post Mohanji.

மோகன்ஜி சொன்னது…

செந்தில் சார்! சொல்றத கேக்குற காது கிடைச்சா சொல்லிகிட்டே இல்ல போகலாம்?!

மோகன்ஜி சொன்னது…

இப்பத்தான் இரண்டாம் ஆட்டம் எந்திரன் பாத்துட்டு,ஐஸு டான்ஸை நினைச்சுக்கிட்டே வரேன்! நீங்க குமாரி கமலா டான்சுன்னு மிரட்டி காப்ரா பண்ணிட்டீங்களே!
அப்புறம் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு முதலாளி?
பேசாம ஒபாமாவுக்கு செகரட்டரியா போயிடலாமான்னு பாக்கேன்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! நான் சொல்றது கேக்கலையா? எனக்கு கூட காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினாப்பல தான் இருக்கு...எத சொல்றதா இருந்தாலும் வலது பக்கமா வந்து சொல்லுங்க! அது தான் தோராயமா கேக்குது!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! பத்மநாபன் வந்தா காதுக்கு வைர கம்மல் போட்டாப்பல இல்ல இருக்கும்!

மோகன்ஜி சொன்னது…

முனியப்பன் சார்! வாழ்த்துக்கு நன்றிங்க! ஈ.என்.டி டாக்டரெல்லாம் என்னப் பத்தி கேப்பாங்க.. அடிச்சி கூட கேப்பாங்க! சொல்லிடாதீங்கண்ணே !

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! தவளைக்கு காது உண்டா எனும் கேள்விக்கு பதில்...
தவளையின் தலையின் இரு புறமும் வட்டமான காதுபோன்ற அமைப்பு உண்டு , டிம்பனம் என்று பெயர் கொண்ட இந்த சவ்வு ,சில தவளைகளுக்கு இருப்பதே நம் கண்ணுக்கு புலப்படாது.. இந்த அமைப்பு தவளையின் நுரையீரலுடன் இணைக்கப் பட்டிருக்கும்..எனவே நுரையீரல் கூட தவளைக்கு ஒலியதிர்வுகளை உணர்த்துகிறது.
ஒரு தவளைக் கதை உனக்காக...

ப்ளாகுல காதல் கவிதையெல்லாம் படிச்ச ஒரு தவளைக்கு,தானும் ஒரு தேவதைப் போன்ற பெண்ணை பார்ப்போமா, காதலிப்போமா என ஏக்கம் கொண்டதாம்.ஒரு தவளை ஜோசியர் கிட்ட தன் கையை காமிச்சு எனக்கு காதல் பாக்கியம் இருக்கான்னு கேட்டதாம். ஜோசியத்தவளையும் "ஆஹா!பேஷா இருக்கே! ஒரு தேவதை விரைவில் உன்னை சந்திப்பாள் ...கையில் உன்னை அள்ளி எடுப்பாள்.. உன் இதயத்தைக் கூட புரிந்து கொள்ள முயல்வாள்.கவலைப் படாதே!" என்றதாம்.. ஆச்சரியம்,அடுத்த நாளே தவளைக்கு ஜோசியம் பலித்தது. தேவதை போன்ற ஒரு பெண் தோட்டத்துக்கு வந்தாள்.. தவளையைக் கண்டால்.கண்கள் கலந்தன. ஆசையுடன் அதைக் கையில் எடுத்தாள். என்ன பாக்கியம் எனக்கு என தவளை தவித்தது..அவள் ஓடினாள்..பத்தாம் வகுப்பு A பிரிவுக்கு அடுத்த லேபராட்டரி மேஜை மேல் தவளையை வைத்தாள். அறிவியல் டீச்சர் முன்னிலையில்,தவளையின் உள்ளுறுப்புகளை பாடத் திட்டப் படி DISSECTION செய்ய ஆரம்பித்தாள்.

பத்மநாபன் சொன்னது…

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என அய்யன் சொன்னார்.

ப்ளாக் இல்லாத போழ்து சிறிது பணியும் செய்யப்படும் என இருந்தவனை..

பணியில்லாதபோழ்து பிளாக்கிக்கோ... என காது வரை பணியை அடுக்கிய ஷேக்கு.. எவ்வளவு கெஞ்சினாலும் என் காது கேட்``காது`` என்கிறார்.

இரண்டு தவளை கதைகளும் அருமை....
காது ன்னு ஒரு வார்த்தை கிடைத்தவுடன் எவ்ளோ மேட்டர்....

நானும் ஒரே ஒரு செய்தி பகிர்ந்துக்கிறேன் .... கடன் காரன் கிட்டையும் சம்சாரத்து கிட்டையும் எப்பவும் காதை ஆஃப் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கையின் அற்புதமான வடிவமைப்பில் , நமக்கு ஒரளவு சத்ததிற்கு மேல் காது தானாக ஆஃப் ஆகிவிடும்... இல்லாட்டி அண்ட சாஹரத்தில் கேட்கிற கட முடா சத்ததிலேயே நாம் உயிர் விட்டுவிடுவோம் ...

மோகன்ஜி சொன்னது…

வந்துட்டீங்களா பத்மநாபன்.. இன்னும் காது குத்திகலையா நீங்க?
நேரம் கிடைக்க வில்லையே என வருத்தப் படாதீர்கள். Quality time கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது இதில் செலவிடுங்கள். முதலில் பிழைப்பைப் பாருங்கள் .. எனக்கு கூட ப்ளாகில் செலவிடும் நேரத்தை தூக்கத்தில் தான் கழித்துக் கொள்கிறேன்.. ஆனாலும் வலைப்பூ சுகமான அனுபவம் பத்து... எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒரு உறவுப் பாலம்.. பிறர் கருத்தை மதித்து, புது செய்திகள் தெரிந்து கொள்வதும்,தெரிந்ததைப் பகிர்வதும் இதில் நல்ல கூறுகள்.

அப்பாதுரை சார் வலையில் சுஜாதா பற்றி எழுதி, வலையேற்றும் போது வழுக்கி விழுந்து விட்டது.. திரும்ப எழுதுகிறேன்.

கர்ண ரஞ்சனி என்றொரு ராகம் இருக்கு. அதிகமாய் கையாளப் படாத ராகம்.. கரகரப் பிரியா சாயலில் இருக்கும். கர்ண ரஞ்சனி என்றால் ‘காதுக்கு சுகமானது’ என்று அர்த்தம். அந்த ராகத்துல ஒரு பழைய பாட்டு மனசுல நெருடிகிட்டே இருக்கு. நினைவுக்கு வந்ததும் சொல்றேன் பத்து...

அப்புறமா சம்சாரத்துகிட்ட பேசறப்போ காதை ஆஃப் செய்வது பற்றி சொன்னீங்க! அந்த சமயம் காதுக்கு என்ன வேலை? தலைய மட்டும் ஆட்டிகிட்டே இருந்த போறுமே! நமக்குத் தொழிலே விவசாயம் தானே?(Agriculture இல்லை,அது "AGREE CULTURE!")


என்றோ ஒரு நாள் சந்திக்கலாம்.. அது வரை காதலி போல் காத்திருங்கள்.

RVS சொன்னது…

AGREE CULTURE எப்படி சார் இப்படி!!! அப்படி தலை ஆடலைன்னா தலையை அறுவடை பண்ணிடுவாங்க...... பார்த்து...மோகன்ஜி!! அப்ப உங்க வீட்டம்மாவுக்கு தஞ்சாவூர் பொம்மைன்னா ரொம்ப பிடிக்கும்ன்னு சொல்லுங்க..

இந்த மாதிரி ப்ளாக்கும் கமெண்ட்டும் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து பகலுக்கு ஏன் இந்த அவசரம்ன்னு ராத்திரியில் தோணுது!!!

மோகன்ஜி சொன்னது…

//AGREE CULTURE எப்படி சார் இப்படி!!!//
எல்லாம் அனுபவம் தான் ஆர்.வீ.எஸ் !
ஒரு விவசாய சங்கம் ஆரம்பிச்சுடலாமா? கழுத்து நேரா நின்னு எத்தனை காலம் ஆச்சு?

அப்பாதுரை சார் டென்ஷன் ஆகுறார்.."பாவிகளா! காதுலேருந்து 'கழுத்து'க்கு போயட்டீங்களா!"ன்னு.

ஹேமா சொன்னது…

அண்ணாஜி....நல்லா மாட்டிக்கிட்டீங்கபோல.காதில இரத்தம் வந்திருக்கணுமே !

காதுன்னு தொடங்கி காதல்....கர்ணரஞ்சனி இராகம் வரை போய் தவளைகாதல்,தவளைக்கதை,விவசாய சங்கம்.பிளாக்ன்னு போய்க்கிட்டே இருக்கு.
காது....இனிக் கேக்காதுன்னு சொல்றவரைக்கும் தொடரட்டும்.வாசிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

அந்த மனசில நெருடுற பாட்டைச் சீக்கிரமாச் சொல்லுங்க.பழைய பாட்டாகத்தான் இருக்கும்.
பழைய பாடல்கள் நிறையவே பிடிக்கும்.

அப்பாதுரை சொன்னது…

: waiter, do you have frog legs
: no sir, just human legs

அப்பாதுரை சொன்னது…

: waiter, do you have frog legs?
: yes sir
: then leap over the counter and get me a drink quick..

அப்பாதுரை சொன்னது…

: waiter, do you have frog legs?
: yes sir
: then leap across into my wife's mouth and shut it, will ya?

அப்பாதுரை சொன்னது…

: waiter, do you have frog tongue?
: yes maam
: then reach out and swallow my husband, what are you waiting for?

அப்பாதுரை சொன்னது…

: what is frog's favorite drink?
: croaka cola

அப்பாதுரை சொன்னது…

ஒரு நாய்க்குட்டி வாங்குவதற்காக பிராணிகள் கடைக்குப் போனாள் ஒருத்தி. கடையிலிருந்த நாய்க்குட்டி, பூனைக்குட்டி, மைனா என்று செல்லப்பிராணிகளை வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்தவள் சட்டென்று நின்றாள். தவளைக் கூண்டில் ஒரு நீல நிறத்தவளையைப் பார்த்து அசந்து போனாள். கூண்டில், 'நீலத்தவளை, செக்சுக்கு மட்டும்' என்றிருந்தது. கடைக்காரனிடம் சென்று, "செக்சுக்கு மட்டும்னு போட்டிருக்கீங்களே?" என்றாள் மெதுவாக. "ஆமாங்க... சுத்தமா குளிச்சுட்டு மல்லிப்பூ செண்ட் பூசிட்டு படுத்துங்க, இந்த தவளையைப் பக்கத்துல வச்சுக்குங்க.. ரெண்டு முந்திரிப்பருப்பு கொடுத்தா போதும்..செக்ஸ் கேரண்டி.. எதுனா பிரச்னைனா இந்தாங்க கடை போன் நம்பர்" என்றான் க.கா. "தவளை என்ன விலை?" என்று இன்னும் மெதுவாகக் கேட்டாள். "ரெண்டாயிரம் ரூபாய்" என்றான் கடைக்காரன். வாங்கிக்கொண்டு போனாள்.

வீட்டுக்குப் போனதும் தவளைக்கு முந்திரிப்பருப்பு வைத்து விட்டு, குளிக்கப் போனாள். குளித்து செண்ட் பூசி தவளையைப் பக்கத்தில் வைத்தபடி படுக்கைக்குள் நுழைந்தாள். நிமிடக்கணக்கில் காத்திருந்தும் ஒன்றும் நடக்காததால், கடைக்கு போன் செய்தாள். விவரங்களைக் கேட்டுக் கொண்ட கடைக்காரன், பத்தே நிமிடங்களில் அவள் வீட்டுக்கு வந்தான்.
"முந்திரிப் பருப்பு வச்சீங்களா தவளைக்கு?"
"வச்சனே?"
"நீங்க குளிச்சிங்களா?" என்றான்.
"ம்ம்"
"செண்டு போட்டீங்களா?"
"ம்ம்"
"எங்கே அந்த தவளை?" என்றான் எரிச்சலுடன். படுக்கையைச் சுட்டினாள். படுக்கைக்குச் சென்றான். "நீங்க படுங்கம்மா" என்றான். பிறகு, "ஏ தவளை, உனக்கு எத்தனை தடவை சொல்லிக் கொடுக்குறது? இதேன் கடைசி தடவை, நல்லா பாத்துத் தெரிஞ்சுக்க" என்றான்.

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! பதிவை சுவாரஸ்யப் படுத்தியது உன் கேள்விகளே! எல்லா சிரிப்பும் ஹேமாவுக்கே!!

மோகன்ஜி சொன்னது…

FROG LEGS AND FROG TONGUE TAGS ARE BRILLIANT!
நீலத் தவளை பற்றிய பச்சையான கதை..
அப்பாதுரை சார்! இப்பிடியா ஒரு கதை சொல்வீங்க?
I DONT LIKE THIS...
இருங்க முதலாளி! (வீட்டம்மா,கிச்சனுக்கு போயாச்சு)
கை குடுங்க பாஸ்! என்னா ஸ்டோரி!என்னா ஸ்டோரி!!கலக்கிட்டீங்க!

பத்மநாபன் சொன்னது…

ஜி ...அக்ரி கல்ச்சர் அருமை ... பண்பாட்டின் பெருமையை தலையாட்டி நிலை நாட்டிவிட்டீர்.

என்னமோ.... அப்பாஜிக்கு ரொம்ப பயந்த மாதிரி நடிச்சு, ஜோக்குகளை கறந்திட்டிங்க...அதிலும் அந்த கடைக்காரன் தவளை வெச்சுட்டு நோகமா நோம்பி கும்பிடற கதை இருக்கே.... நிங்க காது, கழுத்து வரைக்கும்னா..அப்பாஜி ......

RVS சொன்னது…

யம்மாடியோவ்.... மோகன்ஜி வீட்டு பின்னூட்ட கொல்லைப்புறத்தில் ஒரே நான் வெஜ் வாசம் வீசுதே. அப்பாஜி காதைக் கொண்டாங்க... தவக்களை மாதிரி குதிரை, கழுதை சோக்கு ஏதாவது இருந்தா அதையும் இப்பவே சொல்லிடுங்க. மோகன்ஜி வீட்டம்மா உள்ள போய்ட்டாங்க... பாலைவனத்திலிருந்து பத்துவும் காதைத் தீட்டிக்கிட்டு காத்திருக்காரு.. ம்.. ரெடி... ஜூட்...

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்! அக்ரீ கல்ச்சர் ஆதாம் காலத்துல இல்ல ஆரம்பிச்சது!
அப்பாஜீயின் நீலத்தவளை மனக் குழியிலிருந்து குதித்துக் கொண்டே இருக்கிறது(நான் சொன்ன கதை போல்)நாமும் அதை வராதே வராதே என்று மறுதலித்தாலும், வெளியே வந்த பின்னர் நமக்கு நன்றி சொல்லுமோ. சொல்வது புரியுதோ,இல்லையோ.
எழுதுபவனுக்கு மிகப் பெரிய சவால் காமம் பற்றி எழுதுவதே.சிறிது பாதை விலகினாலும்,ஆபாசமாயும் ரசக் குறைவையும் மாறும் சாத்தியங்கள் அதிகம்.அப்பாஜி கதையை எவ்வளவு லாவகமாய் நான் சொன்ன விதிநிலை வழுவாமல் வனைந்திருக்கிறார் பாருங்கள். அப்பாஜி! அள்ளிட்டீங்க மனசை!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்,கிராமத்துக் கல்யாண வீட்டில்,கட்டுசாதக் கூடையும் எடுத்து,விரித்த ஜமகாளத்தையும் உதறி மடிக்கும் போது கூட, காதில் சொருகிய காசுடன்,புகையிலைக் குதப்பலோடு மூனாம்பந்து,ஏஸ் என ஒரு ஜமா ஆடியவாறு இருக்கும்.உங்களையும் என்னையும் பத்துவையும் போல... சரி தானே?

அப்பாதுரை சொன்னது…

கல்யாண வீட்டுக்கு போய் எத்தனை வருசமாச்சு! மூணு சீட்டுக் கூட்டம் டோக்கன் கொடுத்து இடம் பிடிப்போம்.. ஹ்ம்ம்ம்ம். இப்பல்லாம் ரிசப்சன் கல்யாணத்துக்கு முதல் நாளே நடக்குதாமே? மொத்தமே ஒரு நாள் தான் போல!

(ஜோக்கை ரசிச்சதுக்கு நன்றிங்க... இன்னொரு பின்னூட்டத்தில் எங்கள் பிளாக் ஸ்ரீராம் எனக்கு தனியா இமெயில் அனுப்பி 'ஆட்டோ வராதே?' என்று கேட்டார்.)

இதே துணுக்கு பல ஜீவராசிகளைத் தழுவி வந்திருக்கு RVS ... தேவைக்கேத்தபடி மாத்திக்கலாம்.

RVS சொன்னது…

அதற்க்கு பேரே சீட்டுக் கச்சேரி. மூணு கட்டு போட்டு ரம்மி அண்ட் ஷூட் விளையாடுவது ஒரு அலாதியான சங்கதி மோகன்ஜி. ஆறேழு பேர் வாயில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு விளையாட, சிறுசும் பெருசுமாக வேடிக்கை பார்க்க, ஸ்கூட் விட்டுவிட்டு "இறக்கி விளையாடுடா.... பொருக்கி சேர்க்கலாம்டா...ஆட்டின் ராணியை விடு... ஸ்பேட் ராஜாவை ஏண்டா எடுத்த... போச்சு.. ஜாக்கியை விட்டா சீமாச்சு அடிச்சுடுவான்..." போன்றவைகளுடன் கூடிய சில பரிபாஷைகளோடு பக்கத்தில் விளையாடுபவரையும் சேர்த்து அம்பேல் ஆக்கி...... அடடா... ஆனந்தம்... நடுநடுவே... "ஏண்டா அம்பி... எலக்காரனுக்கு சொல்லிட்டியோ.. கார்த்தால எட்டு மணிக்கு மாப்பிளை ஆத்துக்காரா டிபனுக்கு உக்கார்ந்துடுவா..." போன்ற குடும்ப தலையாரிகளின் கேள்விகளுக்கு "இதோ... இந்தாட்டம் முடியட்டும்...போறேன் மாமா" போன்ற பதில்களோடு...
இப்பெல்லாம் எல்லா கல்யாண காரியங்களும் கான்ட்ராக்ட்ல்.... என் அக்கா கல்யாணம் வரை வீட்டு விசேஷங்களை நாங்களே எடுத்து செய்தோம்....

நிறமற்ற வானவில் நாவலில் சுஜாதா கல்யாண மண்டபங்களில் விடிய விடிய சீட்டு விளையாடுபவர்களை "கச்சேரியர்கள்" என்று எழுதியிருப்பார்.

எல்லோரும் ப்ளான் பண்ணி ஒருநாள் சென்னை வந்தா.... வச்சுக்கலாம் கச்சேரியை...

மோகன்ஜி சொன்னது…

இன்றைய கல்யாண கோலாகலங்கள் முன் போல் இல்லை அப்பாஜி.நிறையவே பணம் செலவழித்தாலும், யாருமே கல்யாண வைபவத்தில் சந்தோஷம் கூத்தாட கலந்து கொள்வது இல்லை என்றே தோன்றுகிறது. பெண்ணைப் பெற்றவற்கு வாழ்நாள் சேமிப்பெல்லாம் இதில் வாணவேடிக்கை விட்டதிலும்,பெண்ணின் பிரிவு குறித்தும் கவலை. பிள்ளை வீட்டார்க்கோ சீர் முதல் உபசரிப்பு வரை கித்தாப்பு வியாகூலங்கள்,
கல்யாணத்துக்கு வந்த உறவினற்கோ ஒப்பீட்டு காய்ச்சல்கள்,முகச்சுழிப்புகள்,நொடிப்புகள்,
நண்பர்களுக்கும் பரிச்சயர்களுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு ஆபீஸ் போகும் அவசரம்... இத்தனையையும் ஒரே போர்வையாய் மூடிநிற்கும் போலி சிரிப்புகள்,குசலங்கள்...
கல்யாணம் என்பது ஒரு சமூக அழுத்தமாய் ஆகிப் போய் பல நாட்கள் ஆகிவிட்டது, பெரும்பாலும்.. இதில் விடுபட்டது பெண்ணும் பிள்ளையும் அவர்களின் ஒரு நாள் ராஜாராணி சிம்மாசனம் சுகமானதே..அவர்களின் மனம் மணப் பந்தலில் பொருந்தி நின்றால்...

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்
கல்யாணம் காண்ட்ராக்டில் பண்ணுவதில் பெண் வீட்டாருக்கு பல ஏற்பாடுகளில் கவலை இல்லாதது உண்மையே. அந்த வகையில் இண்டஸ்டிரியாகவே கல்யாண காண்ட்ராக்ட் தழைத்து விட்டது. திருமணத்தை காண்ட்ராக்டில் நடத்தும் வழிமுறை பரவாயில்லை.. இன்றைய மண வாழ்க்கையே கூட எழுதாத ஒப்பந்தம் போல் அல்லவா ஆகிக் கொண்டிருக்கிறது?

sakthi சொன்னது…

எங்க பாட்டி சொல்லும்,”இட்டு கெட்டது காது.. இடாது கெட்டது கண்’ காதுக்குள்ள குச்சி ,ஹேர்பின்,பட்ஸ், ஸ்க்ரூ டிரைவர் எல்லாம் இட்டு கொடஞ்சா காது டமாரமாயிடும்..
நல்ல அஞ்சனம்(கண் மை) இடாததால கண்ணு புட்டுக்குமாம்.
ஆகவே தாய்க்குலமே! ஐடெக்ஸ் உபயோகிங்க!!
ஆஹா அருமையான அட்வைஸ்

ரசித்தேன் இப்பதிவை மோகன் ஜி

மோகன்ஜி சொன்னது…

நன்றி சக்தி! நீங்கள் வருகை தந்து ரொம்ப நாளாச்சு! நலம் தானே?

பத்மநாபன் சொன்னது…

விரசம் இல்லாத ரசமான அப்பாஜியின் கதையை படித்தவுடன் ஓஷோ கதைகள் ஞாபகம் வந்திருச்சு..

பாலுறவு பேச்சிலும் எழுத்திலும் கூட அடக்கும் செயலாக இருப்பதே வெகு குற்றங்களுக்கு காரணம் ... காஞ்ச மாடு கம்பில் புகும் கதையாகி விடுகிறது ...சாமியார்களின் லீலைகளுக்கு இந்த அடக்கம் தான் காரணம் ..இதை பளிச்சுன்னு சொன்ன ஓஷோவுக்கு விஷ ஊசி பரிசு .. அவர் சொல்ல வந்த விஷயம் , வெளிச்சம்ன்ன என்னன்னு மெழுகுவர்த்தில பார்த்துக்கோ, நான் சூரியனை காட்ட்றேன்னாரு ..மக்கள்தான் மெழுகுவர்த்தி போதும்ட்டு, காமத்தை விட்டு மேல வர தயாரா இல்லை ..

ஜி கல்யாண கோஷ்டில சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி .. நானும் ஜமக்காள மடிப்பை அனுபவிச்சிருக்கேன்... கூட்டோ கூட்டு சுகம் அது .... அது போயே போச்சுங்கிறதை நினைச்சா வருத்தமா இருக்கும் ..அந்த வருத்தத்த்திற்கு இந்த வலைப்பூ நட்பு சிறந்த வடிகால்.. நட்பாக தொடர்வோம்..

ஆர். வி. எஸ்.. சீட்டு கச்சேரி அட்டகாசம் .. வற கார்டு போட்டாலும் ரம்மி இழுக்கரவரு , வளப்பமான கார்டு கெடச்ச சூட் அடிக்காம விடுவாரா?

அப்பாதுரை சொன்னது…

கல்யாண ஆடம்பரம் (அடிபடப்போறேன்...) தலைமுறைக்குத் தலைமுறை மாறிக்கிட்டு வருது. என் தாத்தா கல்யாணம் திருவிழா, அப்பா கல்யாணம் விழா, என் தலைமுறைக் கல்யாணம் ழா.. இப்ப அது கூட இல்லை. எனினும், (ஜெயலலிதா ரஜனிகாந்த் குடும்பங்களை விடுங்க..) சராசரி மணமக்கள்/பெற்றோர் மனநிலை கூடவோ குறையவோ இல்லை என்பது (உ)தைக்கிறது. அடுத்த இருபது வருடங்களில் 'வரும்பொழுதே சாப்பிட்டு வந்துருங்க'னு சொல்வாங்களோ?

வல்லி சிம்ஹன் தன்னோட இடுகை ஒண்ணில் அந்தக்கால சீர்வரிசைப் பத்தி அழகா எழுதியிருந்தார். (அறுபதுகளை அந்தக்காலம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டுதே!)

தொலைந்து போன தமிழ்ச்சொற்கள் பற்றி ஹேமாவோட பழைய பதிவு ஒண்ணும் நினைவுக்கு வருது. தொலைந்து போய்க்கொண்டிருக்கும் கலாசாரங்கள் பத்தி யாராவது இடுகை போட்டா கல்யாணக் கலாட்டா இடம்பிடிக்கும்.

RVS சொன்னது…

இந்தக் காண்ட்ராக்ட் கல்யாணங்களில் பெண்ணைப் பெற்றவர் பிள்ளையை பெற்றவர் என்ற வித்தியாசம் இல்லாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹாயாக உட்கார்ந்து "ஏண்டி.. போன வருஷம் நன்னா புஷ்டியா இருந்தியே.. இப்போ எலும்பும் தோலுமா ஆயிட்டியே" என்று கன்னம் உப்பிய பெண்ணிடம் கடலை போடலாம். எல்லாமே single point of contact.

1."பரதேசக்கோலத்துக்கு கொடை எங்கே...புது செருப்பு எங்கே"
"காயத்ரி மாமியை கேளு..."
2."ஜானுவாசத்துக்கு மாலை பூச்செண்டு யாரு கொண்டு வருவா?"
"காயத்ரி மாமிமை கேளு..."
3."ஊஞ்சலுக்கு பாலும் பழமும்.. உருண்டையும் எங்கப்பா..."
"காயத்ரி மாமியை கேளு..."
4."கன்னிகாதானத்துக்கு அப்புறம் அம்மி மிதிக்கணும்... அம்மி யார் தருவா?"
"காயத்ரி மாமியை கேளு.."
5."சாந்தி முஹூர்த்ததுக்கு பூ அலங்காரம் பண்ணியாச்சா?"
"காயத்ரி மாமியை கேளு..."
6."கட்டிசாக் கூடைக்கு புளிசாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் கட்டியாச்சா"
"காயத்ரி மாமியை கேளு..."

நல்லவேளை அஞ்சாவது கேள்விக்கப்புறம்... சாந்தி முஹூர்த்ததுக்கு லேட் ஆயிடுத்து... பொண்ணு எங்கே... அப்படின்னு ஒரு கேள்வி இல்லை.. அதுக்கும் காயத்ரி மாமியை கேளு... அப்படின்னு யாரவது சொல்லிட்டா..

காயத்ரி மாமிங்கறது சமையல் மற்றும் கல்யாண காண்ட்ராக்டர்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹாஹா மோஹன் ஜி அருமையா கீ(கா)து..:))

kashyapan சொன்னது…

காதுலேருந்து கல்யணத்துல முடிசிருக்கீங்க.ஆனா.கண்ணை மூடலாம்.வாயை மூடலாம்.மூக்கை மூடிடலாம்.காதை மூடமுடியுமா? ஓய்வே இல்லாத புலன்காது. மிகவும் பலவீனமான மிருகம் மனிதந்தான்.மரப்பொந்துகளிலும் கிளைகளிலும் வாழ்ந்த ஆதிமனிதன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க இயற்கை கொடுத வரம் காது.அன்புடன் ---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! ஓஷோ இன்னும் இரண்டு தலைமுறைக்கு பிறகே புரிந்து கொள்ளப் படுவார்(அது வரை உலகம் இருந்தால்)சின்ன வாழ்க்கையில் பல பரிமாணங்களை எப்படி அவரால் தொட முடிந்தது என ஆச்சரியமாக இருக்கிறது. அவரின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும் அவருடைய தர்க்கம் கேள்விகளுக்கப்பால் பட்டது. பின்னொரு சமயம் ஓஷோ பற்றி நிறையவே பேசலாம்..சொல்ல நிறைய இருக்கிறது.
கல்யாண வைபோகம் நன்றாகவே போய்க கொண்டிருக்கிறது.கும்மியின் அடர்த்தி தான் இன்னும் வரவில்லை!

அப்பாதுரை சொன்னது…

great insight, kashyapan!

மோகன்ஜி சொன்னது…

போங்க அப்பாஜி ! எனக்கு என் கல்யாண நினைப்பு வந்து விட்டது. கும்பகோணத்தில் வைத்தென்னை வெற்றிலையாய் மடித்து விட்டார்கள்.
என் அம்மா அஞ்சு நாள் கல்யாணம் பற்றியெல்லாம் சொல்வாள்.அந்த நாட்களில் யார் வீட்டிலும் சமையல் இல்லையாம்.கேட்கவே அந்த கதைகள் சுவாரஸ்யமாய் இருக்கும்.
எனக்கு கல்யாணமான புதிதில்,என் B.Pயின் சுற்றத்தில் ஒரு திருமணத்துக்குப் போனோம்.என் மனைவியின் தாய் மாமன் அங்கே வர, எழுந்து நலம் விசாரித்தேன்.என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு "நீங்க கும்பகோணத்துல ஜெயந்தியின் கல்யாணத்திற்கும் வந்திருந்தீர்களோ?" எனக் கேட்டார்.(என் கல்யாணம் தான் அது.ஜெயந்தி தான் என் B.P!)கொஞ்சம் நொந்து போனாலும் சஸ்பென்ஸை இழுத்தேன்.
"ஆமாம்.. வந்திருந்தேன்.."
"அதானே பார்த்தேன்.நான் ஒரு தரம் பார்த்துட்டா மறக்கவே மாட்டேன்! கல்யாணம் ஆயுடிச்சோ?"

"ஆமாம் சார்..ஆயுடிச்சு"
எனக்கு கல்யாணம் ஆனது அவருக்கு பிடிக்கவில்லை போல் முகத்தை வைத்துக் கொண்டார்.
அருகே இருந்த என் மைத்துனன்,"என்ன மாமா இது!
அவர் கல்யாணத்துக்கே அவரை வந்திருந்தீங்களா என கேக்குறீங்க?" என தாள முடியாமல் சொல்லி விட்டான்.
பாவம் அவர் முகம் போன போக்கை பார்க்கணுமே!
பதறிப் போய் விட்டார்.
விஷயம் என்னவென்றால், என் கல்யாணத்தில் அவர் தான் பாவம் ஆர்.வீ.எஸ் இன் காயத்ரி மாமி போல் ஓய்வில்லாமல் ஓடியாடிக் கொண்டிருந்தார்.அந்த ஓட்டத்தில் மாப்பிள்ளையின் "அழகான" முகத்தை காண நேரம் இல்லை போலும்!அந்த சம்பவத்துக்குப் பிறகு,என்னை எங்கு பார்த்தாலும் வருத்தப் படுவார்.
ஒவ்வொரு முறை எங்காளுக்கு கோபம் வரும்போது, "என் மாமா சொன்ன மாதிரி கும்பகோணம் கல்யாணத்துக்கு நீங்க வந்துட்டு தாம்பூலம் வாங்கிகிட்டு போயிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்" என இடிப்பதுண்டு!
IRREVERSIBLE MISTAKE!!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! காயத்ரி மாமியின் MALE VERSHAN மேலே காண்க! ஆறாவது கேள்வியை ரொம்ப ரசித்தேன்!!

மோகன்ஜி சொன்னது…

தேனம்மை மேடம் ! சென்னைத் தமிழா?? நடக்கட்டும்.
மெய்யாலுமெ நல்லா கீதா?டாங்க்ஸ் மாடம்! எப்பவோ ஒரு தபா தான் வலைக்கு வரீங்க.. கதை காதாண்ட இருந்து கண்ணாலத்துக்கு பூட்சிங்க..என்னா செய்றது? பொய்து போவ தேவல?!

மோகன்ஜி சொன்னது…

வாங்க தோழர்!அழகான கருத்து ஆணியடிச்சா மாதிரி சொல்லி இருக்கீங்க.. அனுபவம் அனுபவம் தாங்க!
சகோதரர் அப்பாதுரையும் உங்கள் கருத்தை சிலாகித்து மேலே பின்னூட்டம் இட்டுள்ளார். வருகைக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! சின்ன திருத்தம். நான் ரசித்த கேள்வியை 6A என திருத்தி வாசிக்கவும்.அது கேட்கப் படாத கேள்வி!
அதை ஆறாம் கேள்வியா புரிஞ்சுகிட்டு , கட்டுசாதக் கூடையிலே புதுசா பெருச்சாளி என படிக்கிறவங்க தப்பா புரிஞ்சிக்கக் கூடாது இல்லையா?
ஆர்.வீ.எஸ்.. ஆர்.வீ.எஸ்.. அடுத்தப் பதிவுக்கு தலைப்பு மாட்டிகிச்சு.."கட்டுசாதக் கூடையிலே
பெருச்சாளி !" யாருங்க அங்க தவில் அடிக்கிறது?

Aathira mullai சொன்னது…

ஏன் இந்த வாணவில்லின் வண்ணத்தில் என் கைவண்ணம் மட்டும் பதியவில்லை. நான் ஏற்கனவே இந்த பதிவைப் பார்த்துப் படித்துப் பின்னூட்டம் இட்டுச் சென்றேனே.
சரி மோஹன்ஜி. காதல் என்று ஏன் பெயர் வந்தது? ஒரு வேளை கண்களுக்கு அணியும் கண்ணாடிகளுக்கு மூக்கு பெயரைக் க்ட்டிக்கொண்டதைப் போல கண்களால் வளரும் காதலுக்கு காது பெயர் கட்டிக்கொண்டதோ? விபரம் அறியத் த்ருவீர்களா காது ஆராய்ச்சியாளரே? பரோபகாரி கண்களைப் பற்றி எப்போது பதிவிடுவீர்கள்?

மோகன்ஜி சொன்னது…

ஆதிரா! போச்சுரா ! காதலுக்கும் காதுக்கும் பெயர்பொருத்தம் ஏதுமில்லை.. ஒலியில் மட்டுமே
ஒற்றுமை.
மாறாக, காதல் வந்தால் காதுக்குத் தான் கேடு.காதல் வரும் வரை ஒழுங்காய் செயல்பட்ட காதுகள், வந்தவுடன் வைரஸ் மலிந்த கணணி போல் ஏறுக்கு மாறாய் செயல் புரியும். ஏனையோர் வார்த்தைகள் காது புகா.காதலின் ஆரம்ப நாட்களில் மட்டுமே காதுக்கு நிறைய வேலையிருக்கும்.ஒருவரை அசத்த ஒருவர் கொட்டும் விவரங்கள்.. அன்பின் வெளிப்பாடாய் புகழ்ச்சியும் ஊடல் வார்த்தைகளும் ஊடாடும்.வண்டி வண்டியாய் SWEET NOTHINGS..காது ஓவர்டைம் வேலை செய்யும். காதல் கனிந்தபின்னர் கண்களே காதுகளின் வேலையையும் எடுத்துக் கொள்ளும்..

'கா' எனில் காத்திருத்தல். பார்க்கிலும் பீச்சிலும் பழியாய் காத்து கிடப்பார்கள் என்று தானோ கா-தல் என பெயர்க் கொண்டதோ?

'கண்தல்' என்று பெயரில்லை என்று குறைப பட வேண்டாம். காதலி 'கண்ணே' ஆகிறாள்... காதலனோ 'கண்ணா'அல்லது'கண்ணாளா'ஆகிறான்.

கண்ணைப் பற்றி பதிவா,எங்க பொதுக் குழு கூடித்தான் முடிவெடுக்கணும்! இப்போ மெட்ராஸ் ஐ இல்ல வரும் போல இருக்கு? நல்லிரவு ஆதிரா!

ஹேமா சொன்னது…

அடக் கடவுளே காது இன்னும் சூடாவேயிருக்கே !

RVS சொன்னது…

இப்பத்தான் எந்திரன் பார்த்துட்டு வந்தேன். காது முழுக்க மெஷின் ஓசை. மனசு முழுக்க ரஜினியும் ரஹ்மானும் சேர்ந்து இசைக்கும் மந்திர இசை. நாளைக்கு காது குத்து கல்யாணம் பத்தி பேசலாம்.. அப்த பூர்த்தி கர்ண பூஷன....

Unknown சொன்னது…

தவளை கதை நல்லா இருக்குங்க

அப்பாதுரை சொன்னது…

சுவையான சம்பவம் மோகன்ஜி.. வாட் இஸ் B.P?
அருமையான கேள்வி கேட்டிருக்காங்களே ஆதிரா?
எதுனால காதலுக்கு அப்படி பேர் வந்துச்சுன்னு தெரியாது, ஆனா காதுக்கும் காதலுக்கும் தொடர்பு இருக்குங்க... குறுந்தொகைல or பாரதிதாசனோட சீவகசிந்தாமணில தேடுங்க. நீங்க சொன்னீங்களே...sweet nothing.. அதைச் சொல்லும் பொழுது தலைவன் உதடுகள் பட்டும் படாமலும் காது மடல் துடிக்குமாம், அந்த மாதிரி பேச்சைக் கேட்காமல் தலைவி காதணிகளுக்கு ஒரே வேதனை... சட்டுனு விவரம் நெனவு வரமாட்டங்குது.. ஹையயோ.

அப்பாதுரை சொன்னது…

இதுக்கும் அடிபடப்போறேன்...
நேத்து நெட்டுல எந்திரன் பாத்தேங்க RVS. ஹைடெப் விடியோ நெட்டுல கிடைக்குது. ஒரு வேளை ரொம்ப எதிர்பார்த்தனோ என்னவோ.. ரஜனிகாந்துக்கு மூஞ்செல்லாம் இப்படி பெயிண்ட் அடிச்சிருக்காங்களே? 'லீவுக்கு வந்த ரிஷி'ல கொஞ்சம் சுஜாதா வாசனை அடிக்குதே தவிர... வேணாங்க, வாயைக் குடுத்து வேறே எதனா புண்ணாகும். எதுக்கு வம்பு? இத்தனை செலவழிச்சிருக்காங்க, இத்தனை திறமைசாலிகள் சேந்திருக்காங்க... "இந்த ரிமோட் இன்ப்ரா ரெட், நான் கவனிச்சுக்குறேன்" இவ்வளவு தானா முடிஞ்சுது? கேக்காம இருக்க முடியலிங்க.
ஜெயமோகன் பதிவுல சுஜாதா ரசிகர் சொன்ன மாதிரி, "உனக்கு பிடிக்கலைனா போய்க்கோ, நாங்க பாத்துக்கறோம்'னு யாராவது சொல்றதுக்கு முன்னால இப்படிக்கு உங்கள் கப்சிப்.

அப்பாதுரை சொன்னது…

could be பாரதிதாசனின் மணிமேகலை.. ?

பத்மநாபன் சொன்னது…

எல்லாரும் எந்திரனை பார்த்துவிட்டு இப்படி திட்டியும், பாராட்டியும் எங்க மாதிரி ஆளுங்களுக்கு எரிச்சலை கிளப்பறிங்க... நடுப்பாலைவனத்தில் வலையின் வேகம் நவுட்டவும் வழியில்லை....

ஆர்.வி.எஸ்ஸின் காயத்ரி கேள்வி, நம்ம கேள்வி 5.A. ல தான் சரியா உட்காரும் பேராசிரியரே...

6.A நாம முயற்சி செய்வோம்

கட்டு சாதம் சாப்பிட்டவுடன் , ஆயாசத்துக்கு பான்பீடா, ஜர்தா , ஜோடா, ஜிஞ்சர், ரெடியா...

காயத்ரி மாமி வர்றா வெளக்குமாத்தோட ( பெண் வீட்டார்களின் எரிச்சல் உச்சத்தில் ஏக குரலில் )

மோகன்ஜி சொன்னது…

கண்ணுக்கும் காதுக்கும் சண்டை மூட்டிவிட்ட ஆதிரா! இரண்டும் சேர்ந்து வரும் ஒரு காட்சி இதோ!

சௌந்தர்ய லஹரியில் ‘தவாபர்ணே கர்ணே’.. எனத் தொடங்கும் அழகான சுலோகம் ஒன்று உண்டு.

கண்களைத் திறப்பதாலும் மூடுவதாலுமே உலகைக் கண்காணித்து, காக்கும் தேவியின் கண்மலர்கள், காது வரை நீட்சி கொண்டதாம். அவ்வாறு காது வரை நீண்டு படபடக்கும் தேவியின் கண்கள் அவளின் காதுகளுக்கே ஏதோ செய்தி சொல்வது போல் தோன்றுமாம்.. இதைக் கண்ணுற்ற பெண்மீன்கள் எல்லாம், தேவியின் கண்கள் தம்மைப் பற்றித்தான் அவள் காதுகளில் கோள் சொல்கின்றன என்று பயந்து கண் இமையாமல் நீரில் மறைந்து கொள்கின்றனவாம்.

என்ன அழகு!! மற்றவைப் பிறகு!!

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! எல்லாம் உன்னால தங்கச்சி... சாவதானமா வந்து காது இன்னுமா சூடா இருக்குன்னு கேக்குறதப் பாரு!

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! ஆர்.வீ.எஸ் எந்திரன் பாத்தாச்சா? சரி ரெஸ்ட் எடுத்துண்டு சாயரக்ஷைக்கு வந்துடுங்கோன்னா!

மோகன்ஜி சொன்னது…

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜிஜி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி!(( B.Pங்கிறது பாகம் பிரியாளின் ABBREVIATION அதாவது என் மனைவி)காதல் பத்தி நீங்க சொன்ன பாடல் வர்ணனையில் ஏதோ குறையுது..நீங்க சொன்ன மணிமேகலை இல்லை...கொஞ்சம் யோசிப்போம் அகப்படாம எங்க போகப் போகுது?
அது வரை உங்களுக்கு சில எளிமையான காதல் வரிகள்..

முதலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

காதல் இன்றி உலகில்லை –இதைக்
கண்டு கொள்ளஏன் தொல்லை
தீது செய்துழலும் காமம்-காதல்
தெய்வ சக்தி தரும் நாமம்.

கணுவினோடுகணு காதல்- ஒரு
கரும்பு நல்ல சுவைக் ஆதல்
கணவ னோடு பெண் காதல்-வீடு
கலகமற்றதென ஓதல்.


அணுவினோடுஅணு காதல்-தானிவ்
வகில லோகநிலை ஆதல்
பணிவினோடு அதைப் பார்க்கின்-அதில்
பரமன் அருள் விளங்கும் யார்க்கும்

அடுத்து என் பாட்டன் பாரதி

கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடி
காதிலேஅமுது உள்ளத்தில் நஞ்சு
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி எய்திடும் அம்படி தோழி!

(வேறு )
கூடத்திலே மனப்பாடத்திலே
விழி கூடிக் கிடந்திட்ட ஆணழகை
ஓடை குளிர் மலர்ப் பார்வையினால்
அவள் உண்ணத் தலைப் படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் இவள்தான்
இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! நீங்க சொன்னமாதிரி 5A தான் சரி! உங்க 6A நல்லா இருக்கே! எந்திரன் பத்தி இப்பிடியும் பின்னூட்டப் பெருமாள் பின்னப் போறாரு. எந்திரன் கும்மிய அங்க வச்சுக்குவோம்.. இப்போ நானும் அப்பாஜியும் காதல் விசாரத்தில் இருக்கோம்.. நோ டிஸ்டர்பன்ஸ் பிளீஸ் !! தலைவரு ஒரு பாட்டு பிட்டைப் போட்டுட்டாரு.மண்டைய ஓடச்சுகிட்டிருக்கேன்... ஒங்களுக்கு ஏதும் பல்ப் எரிஞ்சா சொல்லுங்க!

அப்பாதுரை சொன்னது…

அருமை. காலைக் காபியை விட அதிகம் புத்துணர்ச்சி கொடுத்த வரிகள். நன்றிங்க.

ப. பானுமதி சொன்னது…

//பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் இவள்தான்
இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்//

புத்தகப் பாடம் படித்து நிமிர்ந்தவன் அவள் கண்களின் கடைக்கண் நடத்திய பாடத்தில் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான். காதலை எவ்வளவு எளிமையாகவும் அருமையாக கூறிவிடுகிறார் தாசன்.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் மாமலையும் சிறு துறும்பு.. இந்த ஆயிரம் ஏடுகள் என்ன மலையா கஷடப் பட்டுப் புரட்ட?
தாசனின் ஆசான் நம் பாட்டன் கூறுவதும் இதைத்தானே.
“காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே” ஆனா இந்தக் காதல்ல காது வரலையே ஜி?

Aathira mullai சொன்னது…

//பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் இவள்தான்
இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்//

புத்தகப் பாடம் படித்து நிமிர்ந்தவன் அவள் கண்களின் கடைக்கண் நடத்திய பாடத்தில் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான். காதலை எவ்வளவு எளிமையாகவும் அருமையாக கூறிவிடுகிறார் தாசன்.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் மாமலையும் சிறு துறும்பு.. இந்த ஆயிரம் ஏடுகள் என்ன மலையா கஷடப் பட்டுப் புரட்ட?
தாசனின் ஆசான் நம் பாட்டன் கூறுவதும் இதைத்தானே.
“காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே” ஆனா இந்தக் காதல்ல எல்லாம் காது வரலையே ஜி?

மோகன்ஜி சொன்னது…

ஆதிரா! இந்தக் கவிதை வரிகளை திரு அப்பாஜியின் பின்னூட்டத்திற்கு பதிலாக,எளிய காதல் வரிகளாய்க் குறிப்பிட்டேன்.. அதனால் 'காது' அதில் வரவில்லை.
மேலும் இந்த வரிகளை பதிவேற்றும் போது சிலவரிகளும்,பாரதிதாசன் பெயரும் விடுபட்டு விட்டது..வெட்டி ஒட்டின போது விடுபட்டது போலும்..
இன்று பாரதி தாசனின் "எதிர்பாராத முத்தம்"மீண்டும் படிக்க எடுத்து வைத்தேன்.. புதுவையில் நான் வாழ்ந்த காலங்களில் தினமும் இருவர் வசித்த வீடுகள் வழி செல்லும் போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்..

அடுத்த பதிவு அம்மாவை பற்றி போட்டிருக்கிறேன்.பாரம்மா!

பானுமதி,ஆதிரா என ஒரே பின்னூட்டம் இரண்டு பெயர்களில் வந்திருக்கிறதே!

Aathira mullai சொன்னது…

மன்னிக்கவும் ஜி. நான் வேறு ஒரு முகவரியில் இருந்து பதிவிட்டு விட்டேன். தங்களுக்கு யார் என்று புரியாது என்பதற்காக அதை அழித்து விட்டு மீண்டும் ஆதிரா என்ற முகவரியில் பதிவிட்டேன். அது அழியாமல் போய் என்னைக் காட்டிக்கொடுத்து விட்டது.

பாரதியின் சிந்தனையைத்தானே இன்று பலரும் மேடையேற்றி வருகின்றனர். அத்தனையும் புரட்சி. அவனைப் படித்தவருக்கு என்றுமே வராது எழுத்து, கருத்து வறட்சி. நானும் இந்தக் காதலுக்குப் பொருத்தமாக இருக்குமே என்று தான் பார்தி, பாரதிதாசன் கவியடிகளைப் பதிவிட்டேன் ஜி.

செளந்தர்ய லஹரியை மேற்கொள் காட்டியது அருமை..தங்களின் பின்னூட்டங்களிலும் காணும் சிரத்தைக்குத் தலை வண்ங்குகிறேன்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Interesting post and very interesting comments.
Informatics.

மோகன்ஜி சொன்னது…

நன்றி மேடம்