சனி, அக்டோபர் 23, 2010

இன்றைய பூக்கள் உனக்காகத்தான் பூத்தனஇன்றைய பூக்கள்

வா !

இன்றைய பூக்கள் உனக்காகத்தான் பூத்தன.
இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்து
                  உனக்காகத்தான் பூத்தன.
பார்வையில் பாரதம் படிப்பவளே.
வா !
உன்னெஞ்சில் நடக்கும் குருக்ஷேத்திரங்களை
எனக்கும் படித்துக் காட்டு......

என் பேச்சில் குளிர்ந்து போகின்றவளே !
என் மூச்சிலோ எரிந்து விடுவாய் !
மீண்டும் உன்னை உயிர்ப்பிக்க
          எனக்குத் தான் தெரியும்.
நிலையாத இந்த பூமியில்,
நீயும் நானும் சாஸ்வதம்.

வா!
உன்னை இதயத்தில் இருந்து எறிந்துவிட
                யத்தனித்த போதேல்லாம்,
நான் எறிய முடிந்தது
         என் இதயத்தைத் தான் !
மடிதனில் முகம் புதைத்தால் ..
மறுபிறவிகள் கண்ணில் தெரியும்.

எனக்கும் உனக்குமில்லாதது யாருக்குத் தான்?

வா !
இன்றைய பூக்கள் உனக்காகத்தான் பூத்தன
நான்கூட...
உனக்காகத் தான் பிறந்தேன்.என் மகன்

மலரைப் படைத்த கையோடு
உன்னையும் வடித்து
மானுடம் கண்டிடா இன்பத்தை
நீயாக அமைத்த இறைவன்,
என்னிடம் ஒரு வார்த்தை
சொல்லியிருந்தால்...
என் சபலமும் இச்சையும்
உன்னை உருவாக்க
ஒப்பியிருப்பேனா??

தவிப்பு

இவ்விருண்ட காட்டினில்
நான் தேடியலைவது உன்னைத்தான்.

இவ்வழியே சின்னச் சின்ன
                கவிதைத் தடங்கள்.
எங்கிருக்கிறாய் இனியவளே?

கண்ணம்மா

ஆவியதிர அழைக்கின்றேனே.....
            கேட்கவில்லையா?
தனிமை உன்னை அச்சுறுத்த வில்லையா?

இந்த முட்களும் கற்களும்,
      புதர்களும்  வேர்களும்
உன்னை வருத்த வில்லையா?

கண்ணீர்மல்க எங்கு நிற்கிறாய்
                    என்னுயிரே?
இங்கு தான் எங்கேயோ இருக்கிறாய்...

இவ்வழியே தொடர்பற்ற
                  சின்னச் சின்ன
                     கவிதைத் தடங்கள்


பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......


(இவை என் கவிதைப் பரணிலிருந்து மீள் பதிவாய்) 


59 comments:

philosophy prabhakaran சொன்னது…

எப்படி நண்பரே விடிய விடிய உட்கார்ந்து கவிதை வடிக்கிறீர்கள்...

RVS சொன்னது…

மோகன்ஜி பிரசாதம் தேவாம்ருதம்!

பத்மா சொன்னது…

அனைத்தும் அசத்தல் ..

மோகன்ஜி சொன்னது…

வாங்க பிரபாகரன்! இந்தக் கவிதைகள் எல்லாம் விடிய விடிய என்றோ நான் வடித்தவை... சிற்றெறுரும்பாய் சேமித்த நினைவுகளும் கவிதையும் பகிர்வதற்கு நிறைய உண்டு நண்பரே!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

உங்கள் ரசனைக்கு நன்றி ஆர்.வீ.எஸ்

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மா!

எஸ்.கே சொன்னது…

அழகான கவிதைகள்! எல்லாமே அருமை! குறிப்பாக இன்றைய பூக்கள்!

அப்பாதுரை சொன்னது…

நெஞ்சைத் தொட்ட வரிகள்.

(மறக்காமல் சேமித்து வைக்கத் தோன்றியிருக்கிறதே உங்களுக்கு... பாராட்ட வேண்டும்)

Balaji saravana சொன்னது…

சார் அருமையான கவிதைகள் :)

//நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......//

//உன்னை இதயத்தில் இருந்து எறிந்துவிட
யத்தனித்த போதேல்லாம்,
நான் எறிய முடிந்தது
என் இதயத்தைத் தான்..//
சூப்பர் சார் :)

மோகன்ஜி சொன்னது…

வாங்க எஸ்.கே ! பாராட்டுக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! உண்மையில் தாமாக என்னிடம் எஞ்சி, தலைக்காட்டிய கவிதைகள் தவிர,பெரும்பாலான கவிதைகளை நான் சேமிக்க வில்லை.
என் நண்பர்கள் சிலரிடம் என் சில கவிதைகள் இருக்கலாம்..என்னைவிட, என் கவிதைகளை வரிவிடாமல் நினைவுகூறும் சில நண்பர்களைப்
பெற்றது என் பாக்கியமே!
உங்கள் ரசனைக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

பாலா ! அண்ணா ஏன் 'சார்'ஆனேன்?

ரிஷபன் சொன்னது…

மடிதனில் முகம் புதைத்தால் ..
மறுபிறவிகள் கண்ணில் தெரியும்

ஆஹா.. அருமை.

மோகன்ஜி சொன்னது…

நிஜமாவே எனக்கு தெரிஞ்சுது ரிஷபன் சார்!

பத்மநாபன் சொன்னது…

காதல் கொட்டும் கவிதைகள்.மனதில் காதல் நுழைந்தால் கவிதை யாவர்க்கும் சொட்டும்,, உங்களுக்கு கொட்டியிருக்கிறது.பருவத்தில் வரும் குற்றால அருவியாய்.

அன்பரசன் சொன்னது…

எல்லாமே அருமை.
அதிலும் அந்த மகன் சூப்பர்.

மோகன்ஜி சொன்னது…

உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதையாய் அல்லவா இருக்கிறது பத்மநாபன்ஜி ?
கவிஞனுக்கோ, யாவர் காதலும் தம் காதலாய், எல்லோர் சோகமும் தன் சோகமாய் ஆவதினால் தான்
சொட்டுவதெல்லாம் கொட்டவும் செய்கிறது..

கொட்டிக் கொண்டு தானே இருக்கிறது குற்றாலமும் காதலும்?!

மோகன்ஜி சொன்னது…

நன்றி அன்பரசன் சார்.. எனக்கும் அந்த கவிதை பிடித்த ஒன்று. நர்சிங் ஹோமில் பிறந்த என் மகனைப் பார்த்தவுடன் கிளர்ந்த உணர்வுகளில் எழுதியது அது .

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

அருமை.............

வெறும்பய சொன்னது…

அத்தனையும் அருமையா இருக்கிறது...

மோகன்ஜி சொன்னது…

நன்றி யோகேஷ்!

மோகன்ஜி சொன்னது…

கருத்துக்கு நன்றி வ.போ!!

ஆதிரா சொன்னது…

//மலரைப் படைத்த கையோடு
உன்னையும் வடித்து
மானுடம் கண்டிடா இன்பத்தை
நீயாக அமைத்த இறைவன்,//
தேன் துளிகளில் எந்தத் துளி இனியது? எல்லாம் தானே.. என் விரலில் ஒட்டிய தேன் துளியாக இந்தத் துளி இனிக்க மற்றவையும் ருசிக்கத்தூண்டும் அருமை ருசி... ருசித்தேன்.. களித்தேன்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதிரா!அழகான ரசனை உங்களுக்கு!

Matangi Mawley சொன்னது…

muthal payanam ingu... arumai arumai...

ம.தி.சுதா சொன்னது…

சகோதரம் மீள் பதிவேன்றாலும் எம்மை மீள பிறப்பெடுக்வைத்தவிட்டீர்கள்...

dineshkumar சொன்னது…

வணக்கம் சார்

முதல் முறை உங்கள்
வழித்தடத்தில்
பாதை தேடி
பதிகிறேன்
பாதச் சுவடின்
கரைகளில்
பார்வையாளனாக.......


//இவ்வழியே சின்னச் சின்ன
கவிதைத் தடங்கள்.
எங்கிருக்கிறாய் இனியவளே?//

கவிதை அருமையாக இருக்கு சார்

மோகன்ஜி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி மாதங்கி மெலே ! உங்களின் முதல் வருகைக்கும்,ரசிப்புக்கும்.... அடிக்கடி வாங்க!

மோகன்ஜி சொன்னது…

மதி சுதா! உங்கள் வாழ்த்து மனத்தை நெகிழ வைக்கிறது தம்பி!நன்றி!

மோகன்ஜி சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி தினேஷ்!உங்கள் கவிதைக்கு என் கவிதை நன்றி இதோ..

கவியுரைத்து வந்தவரே!
கன்னல்தமிழ் காதலரே!
புவியாளும் வலைபூவில் ,
பின்னூட்டம் இட்டவரே!
குவிந்திடும் கரம்கொண்டு
முன்வந்தேன் வரவேற்க
செவிமடுக்க கவிதையிங்கே
மென்தமிழில் உமக்குண்டே!

சே.குமார் சொன்னது…

கவிதைகள் அருமை...
உங்கள் சிந்தனையில் வந்து விழும் வரிகள் அனைத்தும் அருமை அண்ணா.

dineshkumar சொன்னது…

தங்கள் வரவேற்பை ஏற்கிறேன் ஐயா

ஏட்டில் எழுதிவைத்து
காட்டில் மறைந்து
மலர்ந்தனரோ
என் தமிழ் புலவர்கள்........

தனியில் தான்
புலம்ப தகர்கின்ற
கதவுகள்...........

வானவில்லாய்
உயிர்ப் பெற்று
நின் உரு கண்டேன்
தமிழ் புலவராய்.........

தமிழ் வாழ
தரணியில் இன்றும்
நின்நு யிராய்
தமிழ் வளர
வணங்குகிறேன்
நின்னை தாழ்பணிந்து.............

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார். அன்பின்பாற்பட்ட அற்புதப் பாராட்டுக்கு மகிழ்ச்சி !

மோகன்ஜி சொன்னது…

தினேஷ்! அழகான சொல்லாடல்..

தனிமையில் தான்
புலம்ப தகர்கின்ற
கதவுகள்...........

கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவர் நீவிர்!

கூடி மகிழ்வோம்.. தமிழ்க் கவியாய்
கூவி மகிழ்வோம்

தக்குடுபாண்டி சொன்னது…

மீள் பதிவிலும் பிரசாதம் மணக்கிறது சார்!..;) அருமை!

மோகன்ஜி சொன்னது…

த/பாண்டி சார்! உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி!

சாய் சொன்னது…

//என் சபலமும் இச்சையும்
உன்னை உருவாக்க
ஒப்பியிருப்பேனா??//

பின்னறீங்க தலை !! வாவ். ப்ளாக் ஆரம்பித்த புதிதில் நானும் நிறைய எழுதினேன். கடைசியாக எழுதியது மும்பை தாஜ் தீவிரவாதத்தின் போது. It will be there somewhere in my blog !!

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்! கண்டிப்பாய் உங்கள் வலையைக்
குடைந்து பார்க்கிறேன்.. என் கதை வேறு சாய்! நான் நிறைய எழுதிவிட்டு,எழுதியதை விட்டு விட்டு,
ப்ளாகுக்கு வந்தவன்!
வராமல் போயிருந்தால் உங்களைப் போல நண்பர்களை அல்லவா இழந்திருப்பேன்?

Muniappan Pakkangal சொன்னது…

Nice kavithaihal Mohanji.

மோகன்ஜி சொன்னது…

நன்றி டாக்டர் சார்!

dineshkumar சொன்னது…

மோகன்ஜி சொன்னது…
தினேஷ்! அழகான சொல்லாடல்..

தனிமையில் தான்
புலம்ப தகர்கின்ற
கதவுகள்...........

கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவர் நீவிர்!

கவனத்தில் நீர் கொணரும்
பதிவன் நானில்லையே
பதிந்திடும் கவியனைத்தும்

படைத்தவன் பதிந்ததுவே.........

மோகன்ஜி சொன்னது…

நன்று தினேஷ்..அழகான சிந்தனை.

அப்பாவி தங்கமணி சொன்னது…

அழகு கவிதைகள்

DrPKandaswamyPhD சொன்னது…

நல்லா இருக்குங்க.

சாய் சொன்னது…

//வாங்க சாய்! .....
வராமல் போயிருந்தால் உங்களைப் போல நண்பர்களை அல்லவா இழந்திருப்பேன்? //

ஐயோ மோகன்ஜி, விவேக் சொல்லற மாதிரி "ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாம் போலிருக்கே !"

Ananthi சொன்னது…

அடடா... சூப்பர் கவிதைகள் எல்லாமே..!!

உங்க மீள்பதிவை மீண்டும் மீண்டும் ரசித்தேன்... நன்றி :-))

Chitra சொன்னது…

அருமையான கவிதை தொகுப்பு.

மோகன்ஜி சொன்னது…

வாங்க தங்கமணி மேடம்! வாழ்த்துக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

கந்தசாமி ஐயா! வாங்க ! பாத்து எம்புட்டு நாளாச்சு?சொகம் தானா?

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! எப்போதுமே உங்க காமென்ட் எல்லாமே நெத்தியடிதான்!

மோகன்ஜி சொன்னது…

ரொம்பவே சந்தோஷம் ஆனந்தி! குட்டீஸ் நலமா?

மோகன்ஜி சொன்னது…

சித்ரா மேடம்! வாழ்த்துக்கு நன்றிங்க!

எம் அப்துல் காதர் சொன்னது…

// மலரைப் படைத்த கையோடு
உன்னையும் வடித்து // கவிதை நன்று!

// என் பேச்சில் குளிர்ந்து போகின்றவளே !
என் மூச்சிலோ எரிந்து விடுவாய்! //

இப்பவுமா ?? இன்றுமா ??
இனியும் பொழியட்டும் கவிதை மழை!!

மோகன்ஜி சொன்னது…

வம்புக்கார காதர்பாய்!வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

Kousalya சொன்னது…

இந்த அழகான கவிதைகளை நான் இத்தனை நாளாய் மிஸ் பண்ணிட்டேன்.....!! இனி மிஸ் பண்ண கூடாது என்று இன்றில் இருந்து தொடருகிறேன்....!!

உணர்வுகளின் அற்புத சங்கமம் தானே கவிதைகள்..... ஒவ்வொரு உணர்வையும் வரிகளாக வடித்ததில் தெரிகிறது கவிஞரின் முகவரி.

வாழ்த்துக்கள் சகோ.

மோகன்ஜி சொன்னது…

இது உங்கள் முதல் வருகை அல்லவா? வருக! வருக!!
உங்கள் வாழ்த்தில், உங்கள் ரசனையின் ஆழம்
தெரிகிறது..
வாழ்வில், எதிலுமே ஒரு லயம் இருக்கிறது..அதில் ஒன்றும் போதெல்லாம் கிளர்வது கவிதையன்றோ?

dineshkumar சொன்னது…

வணக்கம்

தங்கள் வரிகளுக்காக
தினம் என் மடிப்பெட்டி
விரிகிறது மாற்றத்துடன்
விழிகள் தேடுகின்றன
உரிமையுடன்
தங்கள் தடங்களின்
தொடர்வை..........

தொடருங்கள் தாமதமில்லாமல்..............

மோகன்ஜி சொன்னது…

ஒரு முக்கிய அலுவலின் பொருட்டு என் இரவுகளில் வேறேதேதோ எழுதும் கட்டாயம்... அது தான் பதிவுகளில் சுணக்கம்.. வெகு விரைவில் உங்கள் கட்டளையை பூர்த்தி செய்வேன் சோதரா!