வியாழன், டிசம்பர் 09, 2010

ஒரு பயணம்

நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா?

உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க? இப்ப என்னத்துக்கு அலையணும்? ரெஸ்ட் எடுத்துக்கலாமில்லையா? பரிவின் அங்கலாய்ப்பு.

இப்போ தலைவலி சுத்தமா இல்லம்மா. காத்தாட போகணும் போல இருக்கு.

மைக்ரேன் மண்டையிடியின் உக்கிரம்  மதியம் சற்றுத் தணிந்து விட்டது. எண்ணச்சுழல் எங்கோ மையம் கொண்டு வேல்வகுப்பாய் வெளிப்பட்டது.

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
   கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
        இடித்துவழி காணும்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்கு நிகர் ஆகும்  

வாய்விட்டு வரிகள் விழ வயலூர் போனாலென்ன எனும் எண்ணவிதை,வளர்ந்து விருட்சமாகி, பிடரியைப் பிடித்து தள்ளுகிறது.

 மணி மூணரை தானே ஆகிறது. வெயில் தாழப்
  போலாமே .
இல்ல.. இப்போ போனா சரியா கோவில் திறந்தவுடன் 
ஸ்வாமியை பார்த்துட்டு வந்திடலாம்.  கிளம்பு.

எனக்கு அம்பாரம் வேலையிருக்கு இப்போ. சனிக்கிழமைப் போலாமே?
அப்போ.... சனிக்கிழமையும் போலாம். இப்போ நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்.
அவளுக்குத் தெரியும். முதலையும் மோகனும் கொண்டது விடார்.
காபியாவது சாப்பிடுவீங்களா?

தா

காபியின் மணம் ஹாலில் நிறைவதற்குமுன் முகம் கழுவி உடைமாற்றி வந்துவிட்டேன். நாக்கைசுட்ட காபியின் சூட்டை ஊதிஊதி, அவசரம்..
ஸ்வாமி வயலூரிலயே தான் இருப்பார். மெள்ள வண்டி ஓட்டலாம் கொஞ்சம் வேகம்.. கொஞ்சம் விட்டேத்தி.

சரி..

தில்லைநகரிலிருந்து எனது ஸ்விப்ட் கார் முன்மாலையின்
அதிகம் ஆளில்லாத  சாலையில் வேகம் பிடித்தது.

வயலூருக்கு இன்னும் நாலைந்து கிலோமீட்டர் இருக்கும்..
ஒரு முச்சாலை சந்திப்பின் சமீபம் வேகம் குறைத்து வண்டி ஊர்ந்தது.
அருகிருந்த கிராமப் பள்ளிக்கூடம் விட்டிருந்த நேரம்.
பத்துபதினைந்து சிறுவர்கள்.. புத்தகப் பையும் கூச்சலுமாய் சலசலத்துக் கொண்டு பாதி ரோடு வரை பரவி நின்றார்கள்.

காரின் வேகத்தை முற்றும் குறைத்தேன்.
ரோடை விட்டு தள்ளி நில்லுங்கப்பா என்றேன்.

சார்! சார்! எங்களை வயலூராண்ட இறக்கி விடுங்க சார்.

ப்ளீஸ் சார்! ப்ளீஸ் சார்!!

இவ்வளவு பேரு இருக்கீங்களே. வண்டியில இடம் இருக்காதே

அட்ஜஸ் பண்ணிக்கிறோம் சார்! பிளீஸ்.

கார் சவாரியின் ஆர்வமும்.. மறுதலிக்கப்படும் வாய்ப்பு தந்த அவநம்பிக்கையும் கலந்த முகபாவத்துடன் பார்வையாலேயே எனக்கு நெருக்கடி தந்தார்கள்.

சரி! எவ்வளவு பேர் கொள்ளுதோ அவ்வளவு பேரைத்தான்
ஏத்திக்குவேன். மத்தவங்க பஸ்சுல போய்க்கோங்க சரியா?"
சரி சார்! கோரஸ்.

காரை ஓரம்கட்டி பின்பக்கக் கதவைத் திறந்தேன்.ஏறுங்க

மெள்ள...ஒவ்வொருத்தரா

முதலில் ஏறிய சிறுவன் அடுத்தபக்கக் கதவோடு ஓட்டி அமர்ந்தான். அடுத்தவனை அவன் மடியில் அமர்த்திக் கொண்டான். மூன்றாமவனை தன்னருகே நெருக்கி அமர வைத்து.... பின் சீட்டில் பத்து பேர்.
மிஞ்சிய மூவரை முன்சீட்டில் அமர்த்தி காரைக் கிளப்பினேன்.

போலாமா

ரைட்! ரைட்! கூச்சல்.

என் சிரிப்பில் அவர்கள் சகஜமானார்கள்.

மெள்ள ஓட்டுங்க சார்!

ஏண்டா

அப்போ தானே ரொம்பநாழி காரில் போக முடியும்

ஏ.சி போடுங்க சார்

போட்டேன்.

"இந்த வண்டி புது மாதிரி இருக்குதே ! பேரு என்னா சார்?

ஸ்விப்ட்ப்பா.

ஸ்வீட்டா? ஒரு குறும்பனின் வினவலுக்கு ஓவென்று நகைத்தார்கள். "டேய்.. என்ன  நசுக்காதடா! வேறோர் குரல்.

சார்! ஏதும் பாட்டு போடுறீங்களா?

என்ன பாட்டு வேணும்?

ரஜினி பாட்டு.. தல பாட்டு நேயர் விருப்பம்...

மீண்டும் வண்டியை ஓரம்  கட்டினேன்.

சி.டி எடுக்க டேஷ்போர்ட்டைத் திறந்தபோது, நேற்றுவாங்கி வைத்து, எடுக்க மறந்து போன ஆனந்தபவன் பாதாம்கேக் டப்பா சரிந்தது.

பிரித்தேன். ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க.. எல்லாருக்கும் இருக்கான்னு பாரு.

டேங்க்ஸ் சார்! வித்தியாசமாய் உச்சரித்தான்.

இரண்டு நிமிடம் காருள்ளே அமைதி.

வண்டியை மீண்டும் கிளப்பினேன். எல்லாருக்கும் இருந்ததா?

இன்னும்கூட ஒண்ணு இருக்கு சார்! நல்லாருக்கு! நீங்களும் எடுத்துக்குங்க! உருமாறிப் போயிருந்த அட்டை டப்பாவை நீட்டினான்.
டேங்க்ஸ்  சார்! என்றபடி எடுத்துக் கொண்டேன்.
டேய்! சாரு என்ன  மாதிரியே தப்பா டேங்க்ஸ்  சொல்றாரு பாரேன்!

சிரித்தேன்,தப்புன்னு தெரியுதில்ல. அப்போ  சரியாச் சொல்லவேண்டியது தானே?

அப்படித்தான் சார் எனக்கு சொல்ல வருது".

சார்! இவன் நேத்திக்கிகூட ரங்கநாதன் சார் கிட்ட உதை வாங்கினான் சார்.

பொய் சொல்றான் சார் 

வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. மெள்ள ஓட்டச் சொல்லி கட்டளை இட்டுருக்கிறானே! கும்பகோணத்தில் நான் அமர்ந்து போன ஜானவாச ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இன்று அவளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம்..

முன் சீட்டில் ஒரு வாண்டு.. சார்! நான் ஹாரன் அமுக்கவா?

சரி அவன் கையை ஹாரன் மேல் இழுத்து வைத்தேன்.

யாருமில்லாத சாலையில் ஒலிஎழும்ப.. காற்று மட்டும் நகர்ந்து மரங்களை அசைத்தது.

வயலூர் வந்து விட்டது.

சரி! எல்லாரும் இறங்குங்க ! ஆளுக்கு அம்பது ரூபா தாங்க!

மீண்டும் கூச்சல். சார். நான் கலக்டர் ஆன உடனே உங்களுக்கு செக் அனுப்பறேன் சார்!
ஒரு ரூபா இருக்கு வேணா தரவா சார்? இது இன்னொருவன்.

ஒருவர் விடாமல் கை குலுக்கினார்கள். ஒருவன் சல்யூட் அடித்தான். சளசளவென பேச்சுதெறிக்க புழுதி கிளப்பியபடி நடந்தார்கள். சற்று நேரம் பார்த்தபடி நின்றேன்.

முருகன் சன்னதியில் ஓதப்பட்ட மந்திரங்கள் அந்த சிறுவர்களின் இடைவிடாத பேச்சாய் ஒலித்தது. மெல்லப் பேசிக் கொண்டு கடந்த இரு அர்ச்சகர்களின் பேச்சில்நெய்வேத்தியம் என்று காதில் விழுந்தது.

உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே முருகா.. இன்னும் எவ்வளவு தரம் தான் உனக்கு....

இன்றைக்கு என்ன உன் முகத்தில் அத்தனை மந்தஹாசம்?
  



 .   

129 comments:

Chitra சொன்னது…

அருமைங்க.... சிறுவர்கள் பேச்சை, ரசித்தேன். நல்லா எழுதி இருக்கீங்க.

மோகன்ஜி சொன்னது…

நன்றி சித்ரா!

Philosophy Prabhakaran சொன்னது…

வட்டார வழக்கில் எழுதியது ஆங்காங்கே சிறப்பாக வந்திருக்கிறது...

சிவகுமாரன் சொன்னது…

ஆகா....
நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயில்
படமாடக்கோயில் பகவற்கு அது ஆமே.

தினேஷ்குமார் சொன்னது…

சன்னதியில்
சுவாமியை
சந்திக்க செல்ல
முருகன்
வழியிலே
வரம்கொடுத்த
ரூபங்கள் அத்துனையும்
அவனுருவாக
நம்மில் எத்தனிக்கும்
எண்ணமெலாம்
தமிழ்
சித்தனுக்கு
புலப்படுமே..........

ரிஷபன் சொன்னது…

சிறுவர்களுடன் காரில் நானும் வந்த உணர்வு.
”சார்! இவன் நேத்திக்கிகூட ரங்கநாதன் சார் கிட்ட உதை வாங்கினான் சார்.”
“பொய் சொல்றான் சார்”
அப்படியே சூழலை கண்ணுக்குக் கொண்டு வந்துட்டீங்க.. உங்ககிட்ட இன்னும் இதேபோல பல நெகிழ வைக்கிற சம்பவங்கள் இருக்குன்னு புரியுது.. படிச்சு.. சிலிர்க்க நாங்க ரெடி..
ஒரு விஷயம்.. ஷ்யூர்.. எழுத்து ச்சும்மா அதோட உச்சத்துக்கு போவுது.. ரொம்ப இயல்பா..

அன்பரசன் சொன்னது…

கதை ரொம்ப இயல்பா சொல்லிருக்கீங்க.
அருமை.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப அருமையா இருக்கு மோகன் சார்! வட்டார வழக்கும் சிறுவர்களின் கொஞ்ச நேர உலகமும் அப்படியே பிரதி எடுத்தது மாதிரி இருக்கு சார்!
சூப்பர். அடிக்கடி இது மாதிரி எழுதுங்க சார் :)

மோகன்ஜி சொன்னது…

நன்றி பிரபாகரன்! உன்னிப்பாய் படித்திருக்கிறீர்கள். உங்களை ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணமின்னு.... உங்க பேர் முன்ன பிலாசபி.... கொஞ்சம்
சொல்வீங்களோ?

மோகன்ஜி சொன்னது…

சிவா! எனக்கு மிகவும் பிடித்த வரிகளை சொல்லியிருக்கிறீர்கள்...

இதை எழுதும் போது ஒரு பெரியபதிவுக்கான அடர்த்தி பதிலாய் விரிகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் பதிவோம். அப்போது சேர்ந்து துடுப்பு போடு சிவா! நிறைய நிறைய படைப்புகளை உன்னிடம் எதிர்பார்க்கிறோம் தம்பி!

மோகன்ஜி சொன்னது…

தினேஷ்!

மலரின் மென்மையில்,
உழைப்பவன் வியர்வையில்,
குழந்தையின் சிரிப்பில்,
கவிதையின் வீச்சில்,
நல்லோர் எளிமையில்,
சிறார்கள் குதூகலத்தில்,
தாய்மையின் கனிவில்
இறைவன் இருக்கின்றான்...
அவ்வப்போது ஓய்வெடுக்க
கோவிலுக்குள் செல்வானோ என்னவோ?

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! ஒருவேளை
'டேங்ஸ்' சொன்னது நீங்கள் தானோ?!
படிக்கும் சங்கதிக்குள் ஆழ அமிழ்ந்து ஒன்றிப் போகும் கலை உங்களுக்கு கை வந்தது.... அதைக் கண்டு வியப்புறுகிறேன்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி அன்பு.. உங்க முருகன் நலமா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாலா! அன்பிற்கு நன்றி! எனக்குள்ளிருக்கும் சிறுவன், இன்னமும் கூட தோழமை தேடிக் கொண்டிருப்பதால் தானோ என்னவோ, அவர்கள் உலகத்துக்குள் இயல்பாய் நுழைய இயலுகிறது போலும்!

பத்மா சொன்னது…

உண்மையான narration கண்ணில் நீர் வர வைக்கும் .இது அதை செய்தது .
great Mohan sir .expecting more from you .

Unknown சொன்னது…

சூப்பர் சார்! இன்னிக்கு காலைல முதன்முதலா உங்க ப்ளாக் படிக்கிறேன்! ரொம்ப நல்லாருக்கு! சந்தோஷமா!!! இப்பிடி நிறைய அனுபவங்களை எழுதுங்க! :-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வழியிலேயே முருகன் தரிசனம் ஆகிவிட்டது. அறுபடை வீடுகளில் காட்சி அளிப்பது ”ஆறு”முகன். உங்களுக்கு பதிமூன்று முருகன்கள். ஆனந்தமான பதிவு. இது போன்ற சிறுவர்களைப் பார்க்கும்போது நாமும் சிறுவனாய் ஆகிவிடுவது உண்மை. பகிர்வுக்கு நன்றி மோகன்ஜி!

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

RVS சொன்னது…

ஸ்விஃப்ட் ஏறி வந்த முருகன்கள். என்னமா காட்சிப்படுத்துகிறீர்கள் ஜீ. பசங்களுக்கு அன்று உல்லாசப் பயணம். கார் சவாரி போகவேண்டும் என்று சிறுவயதில் நானும் வாசல் படியில் உட்கார்ந்து போறவர காரைப் பார்த்து ஏங்கியதுண்டு. நெய்வேத்தியம் ஆகிவிட்டது என்ற ஒப்புமை சீன் அருமை. ;-)

பொன் மாலை பொழுது சொன்னது…

பிரமாதம் மோகன்ஜி. நடந்ததை மிக அழகாக இயல்பாக ஒரு ரசிகனின் பார்வயில் எழுதி யுள்ளீர்கள்.
சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நமக்கு மன நிறைவைத்தரும்.உண்மைதான்.

பத்மநாபன் சொன்னது…

மீண்டும் ஒரு சிக்ஸர் பதிவு..

நிகழ்வுகளை பதிந்த விதம் அழகா வந்திருக்கு..

பள்ளிச்சிறுவர்களின் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளும்...

அழகு முருகனுக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கும் ....

பசங்க பரவாயில்லை ...என்னுடைய ’டேங்க்ஸை’என் மனையாள் இன்னமும் திருத்தி கொண்டிருக்கிறார் .. அப்புறம் ஃபேண்ட்...இதெல்லாம் விட்டுட்டா பெரிசு ஃபிலிங் வந்திருது...

இப்பதிவுக்கு ரொம்ப டேங்க்ஸ்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கொண்டாட நினைப்பவர்களுக்கு இந்த வாழ்க்கை பொக்கிஷங்களை வாரிவழங்குகிறது.

கோயிலுக்குப் போய்க் கிட்டும் பரவசம் அந்தக் குட்டிப் பயல்களோடு பயணித்தபோதே கிடைத்துவிட்டது.

சற்று முன் உனக்கு நைவேத்யம் கிடைத்துவிட்டதே முருகா என்று அங்கலாய்த்துக்கொள்கிறாயே மோஹனா! அப்போதே உனக்கு தரிசனமும் தந்து விட்டேனே! என்னைத் தேடி ஏன் வந்தாயிங்கு? என்று வயலூர் முருகன் கேட்கச்சொன்னான் மோகன்ஜி.

அன்பும் பரிவும் ததும்பும் அருமையான பதிவு மோகன்ஜி.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ஒத்த கருத்துக்கு நன்றி வெங்கட்நாகராஜ்.இப்போதான் ஒங்க கமெண்ட்டையும் பார்த்தேன்.

ADHI VENKAT சொன்னது…

மிகவும் நன்றாக இருந்தது சார். வயலூர் போய் முருகனை தரிசித்த அனுபவம் ஏற்பட்டது. பள்ளிச் சிறுவர்களின் பேச்சே அலாதி தான். உங்கள் எழுத்து நடை மிகவும் பிரமாதம்.

அப்பாதுரை சொன்னது…

தாகூர் சொன்னது.

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி.உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்.

மோகன்ஜி சொன்னது…

ஜீ! நன்றி! காலையில் என் முகத்தில் தான் முழித்தீர்களா? கண்டிப்பாய் மேலும் எழுதுவேன் ஜீ!

தெய்வசுகந்தி சொன்னது…

அருமை!!

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்!
//வழியிலேயே முருகன் தரிசனம் ஆகிவிட்டது// அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி வெங்கட்!

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் புவனேஸ்வரி மேடம். நலம்தானே? உங்கள் பாராட்டுக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ்! எனக்கும் கார் ஏக்கம் அந்த பருவத்தில் இருந்தது. ரெட்டியார் வீட்டு ப்ளிமத் காரில் முதல் பயணம் தந்த குதூகுலம் இன்னமும் நினைவில் பசுமையாய் இருக்கிறது.அன்புக்கு நன்றி ஆர்.வீ.எஸ் !

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி கக்கு சார் ! ரசனை இருக்கும் வரை தானே படைப்பும் இருக்கும்..சந்தோஷமும் இருக்கும். அழகாய்ச் சொன்னீர்கள்!

மோகன்ஜி சொன்னது…

உங்களுக்கு 'டேங்க்ஸ்'ல கண்டமா? எனக்கு 'ரெஸ்டாரன்ட்'. ஆங்கில ஆசிரியைக்கிட்ட புருஷனா வேலை பாக்குறது ரொம்ப கஷ்டங்க ! இப்போ புரியுதா என் தமிழ்பக்கம் தாவிட்டேன்னு?!

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி!
//வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கொண்டாட நினைப்பவர்களுக்கு இந்த வாழ்க்கை பொக்கிஷங்களை வாரிவழங்குகிறது//
வாணவேடிக்கை நிகழ்த்துகிறீர்கள் வார்த்தைகளால்...
பின்னூட்டத்தை ரொம்ப ரசித்தேன்ஜி!

அப்பாதுரை சொன்னது…

தில்லை நகர் பாண்டிச்சேரியா?

மோகன்ஜி சொன்னது…

வயலூர் முருகனை தொந்தரவு செய்து கொண்டிருந்ததன் முன்னால்,மருதமலை மேலே பழியாகக் கிடப்பனுங்கோ. ரெண்டு வருஷம்.. கோவையின் கொஞ்சு தமிழ் கேட்டு அஞ்சு வருஷமாச்சுங்கோ! உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி சகோதரி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! தாகூர் ஏமி செப்பினாறு?

மோகன்ஜி சொன்னது…

நன்றி தெய்வசுகந்தி மேடம்!

மோகன்ஜி சொன்னது…

தில்லைநகர் திருச்சில இருக்கு அப்பாஜி! வயலூர் அங்கிருந்து இருபது கி.மி. இருக்கும். தாகூர் என்ன தான் சொன்னார் மொதலாளி?

அப்பாதுரை சொன்னது…

ஏழையின் சிரிப்பில் இறைவன்.

Denzil சொன்னது…

திருச்சியை சுற்றி இருக்கிறதுல ஒரு picturesque கோவில் அது. உங்களோட கதையையும் சேர்த்து பாக்கிறப்போ நல்ல ஒரு குறும்படமா கற்பனை பண்ண முடியுது. nice one!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கர்ப்பஹ்ருகத்தில் மோஹன்!
SWIFT வண்டியில் முருகன் !!
நன்னா சொன்னேள் போங்கோ!!!!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! நச்!!

மோகன்ஜி சொன்னது…

Denzil வாங்க! உங்கள் முதல் வருகைக்கும் குறும்பட கற்பனிக்கும் என் நன்றி பாஸ்!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர் ! பெரட்டியில்ல போட்டுட்டீங்க?! அட்டகாசம் ! நன்றிங்க!

balutanjore சொன்னது…

dear mohanji
ippothum
manathai
thottu vitteerkal

balu vellore

மோகன்ஜி சொன்னது…

பாலு சார்! உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

பிரமாதம் மோகன்ஜி

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃயாருமில்லாத சாலையில் ஒலிஎழும்ப.. காற்று மட்டும் நகர்ந்து மரங்களை அசைத்ததுஃஃஃஃ

பயணத்தை எப்படி ரசித்தீர்கள் என வரிகளே சொல்கிறதே..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அது சரி.ஹைதராபாத்னா,கோட்டி, நாம்பள்ளி,சித்தம்பர் பஜார்,லக்டிகாபூல்,அபிட்ஸ்,பஷீர்பாக் பற்றியெல்லாம் எழுதாம,திருச்சி,தில்லை நகர், வயலூர் பற்றி எழுதறீங்களே..உஷ் என் காதில மட்டும் சொல்லுங்க.. நீங்க திருச்சியா?

மோகன்ஜி சொன்னது…

சாய்! ஸ்வாமி சரணம்!நலமா?

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கும் உங்கள் ரசனைக்கும் நன்றி ம.தி.சுதா!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர்!ஹைதராபாதுக்கு வருமுன் மூன்று வருடம் திருச்சியில் இருந்தேன்.இதுவும் நல்ல
ஊர் தான்!ஆனாலும், ரங்கநாதரும்,வயலூரானும் சமயபுரத்தாளும்,அங்கேயில்ல இருக்காங்க?காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் எங்கே போவேன்? திருச்சி கண்ணுக்குள்ளேயே இருக்குங்க!

சிவகுமாரன் சொன்னது…

சரியா சொன்னீஙக அண்ணா. திருச்சியில வெகு காலம் இருந்தேன். அண்மையில் மதுரை வரும்வரை, எனக்கு தாயுமானவரும்,வாட்போகிநாதரும், ஜ‌ம்புகேஷ்வ‌ர‌ரும் தான் துணை. என் ம‌னைவிக்கு ச‌ம‌ய‌புர‌த்தாளும், அகிலாண்டேஷ்வ‌ரியும்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் இருக்கும் அத்தனை சிவாலயங்களுக்கும் சென்று விடுவேன். திரருப்பைஞ்சீலி, திருனெடுங்களம், திருப்பராய்த்துறை, அய்யர்மலை என்று எதையும் விட்டு வைத்ததில்லை.வயலூருக்கு கனக்கில்லை. ஒருமுறை 18 வயதில் கல்லூரி படிக்குகம் காலத்தில் ஒருவிடுமுறை நாள் இரன்டு நன்பர்களுடன் (கடலுர் தோழர்கள்)வயலுருக்கு நடந்தே சென்று திரும்பி வந்தோம். பக்தியினால் அல்ல. ஊர் பொறுக்க. திருச்சி மிக அருமையான ஊர். அருகேயே மீனாட்சியும் சொக்கரும் இருந்தாலும் தாயுமானவரைத் தான் தேடுகிற‌து மனம் இன்னும்.

சிவகுமாரன் சொன்னது…

ஆச்சரியமா இருக்குங்க.நான் உங்க பதிவுல உலவிக்கிடிருக்கிற சமயத்தில நீங்க என் பதிவுல பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்க.

மோகன்ஜி சொன்னது…

சிவா! தமிழனுக்கு எத்தனை பெரிய மனது இருந்திருக்கிறது? எவ்வளவு பெரிய கோவில்கள்? எவ்வளவு இலக்கியம் பக்தி தளும்ப?? பக்தி இலக்கியம் தமிழுக்கு செய்த சேவை மகத்தானது. ஒரு ஆயுள் போதுமா இவற்றைத் துய்க்க? எனக்கு அழகர் மலையும், திருபரங்குன்றமும் பிடித்த இடங்கள். திருவெள்ளறை போயிருக்கிறீர்களோ?

ஆமாம் சிவா!
உன்னை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே!
என்னை நீ பார்க்கும் போது உன்னை நான் பார்க்கின்றேனே!!
நேரிலே பார்த்தால் என்ன ?
நிலவென்ன தேய்ந்தா போகும்?!
ஒரு சந்திப்பை நாம் அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.. சரி தானே தம்பி?

RVS சொன்னது…

பாரதி பதிவுக்கு முன் இலை போட்டு சாப்பாடு போட்டிருக்கிறேன் "நாக்குக்கு மோட்சம்" என்று... நீங்கள் பார்க்கவில்லை... என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... ;-);-)

Aathira mullai சொன்னது…

வயலூர் அழகான ஊர். அழகான ஆலயம். எனக்கும் அந்தத் திருவரங்க நாதனைப் பார்ப்பது.. அதை விடவும் அந்தச் சுற்றுப் பாதை (பிரம்மாண்டமான ப்ரகாரம்), அதிலும் அதிக நடமாட்டம் இல்லாத மதியம் 3 மணிக்குப் போய் பார்ப்பது மிகவும் பிடிக்கும்..

/மரத்தில் மறைந்தது மாமத யானை’ இந்த மழலைகளில் மறைந்தது ஆனைமுகத்தான் இளவலின் அழகிய ஆறுமுகங்கள்.

ஆம் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. அதிலும் இளம்பயிர்களாகைய மழலைகளின் தொண்டில் கடவுள் கலந்து விடுவான்.

குழந்தைகளுக்கு உதவி, அதுவும அவர்களால் அனுபவிக்க முடியாத சில அனுபவங்களைத் தந்து (கார் சவாரியும் சரி பாதாம் கேக்கும் சரி) அவர்கள் அடையும் மகிழ்ச்சியில், அனுபவிக்கும் அவர்களை விட அதைக் காணும் நமக்கே இன்பம் அதிகம் இருப்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

இதில் இன்னொரு நுட்பம் அவ்வளவு குறும்பு ஆனாலும் அந்த பகிர்வு அவர்களிடம் உள்ள இயல்பான மனப்பான்மை.. கேக்கில் தங்களுக்கு ஒன்று வைத்து கொடுக்கும் பண்பு. அதை அழகாக கூறியுள்ளீர்கள். நானறிந்தவரை இது சற்று பணம் படைத்த குழந்தைகளிடம் அரிதாகக் காணப்படும் பண்பு.

ஏற்கனவே தங்களின் எழுத்து மூலம் தங்களை ஓரளவு அறிந்துள்ளேன். (எங்கே நம் கார் அழுக்காகி விடுமோ என்று உறவினர்களைக் கூடக் காரில் ஏற்றாத இக்காலத்தில்.. (இது கண்ட அனுபவம்) இப்பதிவு தங்களின் மென்மையான மனதை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது ஜி.

ஹைதிரா பாத்தில் எங்கு?

Aathira mullai சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு வயலூர் டிரிப்..

அந்தக் குஞ்சுக் குழுவான்களோடு.. நானும் இடம் பிடித்து நெருக்கி அமர்ந்து வந்து பாதாம் பர்பியும் சாப்பிட்ட அனுபவம்... ரசிச்சேன்..

மோகன் ஜி வடிவில் கடவுளையும் தரிசிச்சேன்..

சிவகுமாரன் சொன்னது…

அந்த தருணத்துக்காக ஏங்குகிறேன் அண்ணா

சிவகுமாரன் சொன்னது…

திருவெள்ளறை போயிருக்கிறேன் .
திருப்பரங்குன்றத்திலிருந்து 5 கி.மி. தான் நானிருப்பது. நினைத்தால் நடந்தே போய்விடுவேன்

ஹேமா சொன்னது…

மோகண்ணா....அந்தச் சின்னவங்களோட சின்னவரா நீங்களும் மாறி ஜாலியா இருந்த நேரத்தில முருகனைப் பாக்கிறீங்கதானே.அதான் அவர் மந்தமா இருக்கிறாப்போல தெரியுது !

a சொன்னது…

//
வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. மெள்ள ஓட்டச் சொல்லி கட்டளை இட்டுருக்கிறானே! கும்பகோணத்தில் நான் அமர்ந்து போன ஜானவாச ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இன்று அவளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம்..
//
அப்புறம் எப்படி 13 பேரயும் உக்காற வச்சிருப்பீங்க??

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! உங்க விருந்தை பார்க்காம ரசிக்காம மிஸ் பண்ணிட்டேனே! இப்போ ஆறி போய் இல்ல இருக்கும்? மாலை போட்டுகிட்டு பழையதை
சாப்பிடக்கூடாதே? என்ன செய்யலாம்? கையை தூக்கிட்டேன் ஆர்.வீ.எஸ்!. உங்கள் தண்டனை ஏற்க சித்தமாகி விட்டேன். தீர்ப்பை வழங்கி விடுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்புக்கு நன்றி ஆதிரா ! உங்கள் வாழ்த்தில் நெகிழ்ந்து போனேன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சிவா! நாமெல்லோரும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். சிலபதிவர்களுடன் மின்னஞ்சலிலும் அலைபேசியிலும் தொடர்பிருந்தாலும்,நேரில் சந்திக்க ஆவல் மீறுகிறது. மனதினுள் ஒவ்வொருவருக்கும் ஒரு முகமும் குரலும் நெஞ்சில் வனைந்துள்ளேன் சிவா!

மோகன்ஜி சொன்னது…

மந்தஹாசம் எனும் சொல்லைத்தான் மந்தம் என்று புரிந்து கொண்டாயோ ஹேமா? மந்தஹாசம் என்றால் புன்முறுவல் ,குறுநகை என்று அர்த்தம். நான் கூட புன்முறுவல் என்றோ புன்னகை என்றோ எழுதியிருக்கலாம் தான். எனினும் அந்த சிறுவர்களின் அண்மை தந்த உணர்வை ஹேமா சொன்ன கோணம் கூட அழகாய்த் தானே உள்ளது?

மோகன்ஜி சொன்னது…

வாங்க யோகேஷ்! ஜானவாசம் நினைவுக்கு வந்ததும் மனைவியின் நினைவு வருவதும், கோவிலுக்கு கிளம்பின தருணம் அவளை விட்டுவிட்டு வந்ததினாலும் ஏற்படும் பச்சாதாபமும் உந்திய எண்ணத்தை பதிவு படுத்தினேன். நீங்கள் சொன்னது போல் அவர்களும் உடன்வந்திருந்தால் இந்த அனுபவம் சாத்தியப் படாமலே கூட போயிருக்கலாமோ என்னவோ? பதிவை ஆழ்ந்து படித்ததிற்கு என் நன்றி யோகேஷ் சார்!

RVS சொன்னது…

மோகன்ஜி
தமிழுக்கு தண்டனையா?
இவ்வுலகம் என்னை மன்னிக்குமா?
மோகன் அண்ணா பார்க்காமல் என் ஜன்மம் சாபல்யம் ஆகுமா?
அன்போடு பரிமாறியிருக்கிறேன் அமுதமாக இருக்காதோ?
(ஏய்..ஏய்.. ஏய்.. நிப்பாட்டு.. என்ன உனக்கு கேள்வி கேட்க மட்டுந்தான் தெரியுமா? ஆமாங்க... நான் தருமி தான்...)
நன்றி..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை... ரசித்தேன்...
நல்லா எழுதி இருக்கீங்க.

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்!

kashyapan சொன்னது…

வயதான‌ன‌ அவர் தேபூஜை செய்து கொண்டிருக்கிறார்.அவருடைய பேரன் சதாபானு என்ற முஸ்லீம் பெண்ணை காதலிக்கிறான். பெரியவர் பூஜை முடின்து தேவி தோத்திரம் சொல்கிறார்."அன்னபூர்ணே, சதாபூர்ணே,சதாபானு வல்லபே" என்று அவர் வாய் முணு முணுக்கிறது.(பல வருடஙளுக்கு முன் படித்த சிறுகதை .ஞாபகத்தில் எழுதுகிறென்.ல்.ச.ரா எழுதியது.)மோகன் ஜி! காரில் வந்த பத்து சிறுவர்களில் இந்து அல்லாத சிறுவர்களும் இருக்கலாம். அன்த‌ச்சிறுவர்களை வயலூர் முருகனாகப் பாவிக்க "மன வளம்" வேண்டும்.இந்தக் கதையின் உன்னதம் அன்த மனவளம்தான். வாழ்த்துக்கள்‍....காஸ்யபன் ‍

மோகன்ஜி சொன்னது…

காஷ்யபன் சார்!லா.ச.ரா அவர்களின் கதையை என்ன பொருத்தமாய் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.
குழந்தைகளுக்கு மதம் ஏது ஐயா? பெரியவர்களுக்கு அல்லவா மதம் பிடிக்கிறது?
உங்களின் பரந்த அனுபவம் இந்த மேன்மையான கருத்தாய் வெளிப்பட்டிருக்கிறது. உங்கள் அன்பிற்கு நன்றி சார்!

அப்பாதுரை சொன்னது…

kashyapan வலைப்பதிவின் வரப்பிரசாதம்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! உங்கள் கூற்றை வழிமொழிகிறேன்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வழி தோறும்
குறுகுறு விழி பார்வை
துருதுரு கேள்விகள்
படபட பேச்சுக்கள் கொண்ட
வண்டுகளின் ரீங்காரம்
வடிவேல் முருகனை
நினைவு படுத்தியதோ?? :-)))

......அருமையான பயணப் பகிர்வு.. பயணித்த உணர்வு எனக்கும்... நன்றிங்க.. :-)

மோகன்ஜி சொன்னது…

கவிதை கொஞ்சுகிறதே ! ரசித்தேன் ஆனந்தி! பாராட்டுக்கு என் நன்றியும் அன்பும்.

சிவகுமாரன் சொன்னது…

மோகன் அண்ணா, தம்பி வலைப்பக்கம் கொஞ்சம் வந்து நாலு குட்டு , ரெண்டு தட்டு ஏதாவது கொடுத்துட்டுப் போங்கண்ணா. தலையையும் முதுகையும் தயாரா வச்சுக்கிடிருக்கேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் மோஹன்ஜி.

யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன் அருமை மோஹன்ஜி.

பாரதசாரி சொன்னது…

மிக மிக ரசித்தேன் மோகன்ஜி :-). கல்லூரி நாட்களில் வயலூர் தாயுமனவர் சிறுவர் விடுதியில் ஆதரவற்ற சிறுவர்களோடு விழ நாட்களை கழித்தது பத்து வரிடங்களுக்கு பிறகு மீண்டும் நினைவுக்கு வருகிறது :-)

அப்பாதுரை சொன்னது…

ஆசைப்பட்டா போதுமா சிவகுமாரன்? குட்டுற மாதிரியா எழுதுறீங்க?

உங்களுக்குத் தேவை குட்டு இல்லை; பட்டு. அதை வாங்கத்தான் போயிருக்காரோ மோகன்ஜி?

அப்பாதுரை சொன்னது…

மோகன்ஜிக்கான பிரத்தியேக கடிதம் என்றாலும் அதைப் படித்து விட்டேன் சுந்தர்ஜி. (மூக்கை வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாது - என் மூக்கு சைஸைப் பாத்தாலே தெரிஞ்சிருமே?)

உங்க எழுச்சிக்குரல் என்னையும் எழுப்பிடுச்சி.. என்ன செய்யுறதா உத்தேசம்? சொல்லுங்க - என்னையும் டீம்ல சேத்துக்குங்க.

சிவகுமாரன் சொன்னது…

எவ்வளவு நேரந்தான் திண்ணையில உட்கார்ந்துக்கிட்டு நாமளே அரட்டை அடிக்கிறது அப்பாஜி . வீட்டுக்காரரை காணோமே..

Muniappan Pakkangal சொன்னது…

Muthalaiyum Mohanum Kondathu vidaar-nice Mohanji.

மோகன்ஜி சொன்னது…

I am sorry folks for not surfacing for the past one week . I am on a tour to Mumbai,PUNE..No Tamil font in this net cafe. Shall be back to Hyderabad on Thursday23.12.2010
PL bear with me.SUNDERJI,APPAJI,SIVA,Bharathasaari,Muniappan Sir... I owe a detailed reply to all of you.
TONS AND TONS OF LOVE
MOHANJI

meenakshi சொன்னது…

மனதை மிகவும் நெகிழ வைத்த பதிவு. மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இது போல நிகழ்வுகள் வாழ்வில் அமைவதற்கு கூட ஒரு கொடுப்பினை வேண்டும். 'குழந்தைகள் சிரிப்பில் கோடி இன்பம்'. அதுவும் இது போன்ற ஏழை குழந்தைகளில் சிரிப்பில் வாழ்வையே காணலாம்.

வயலூர் என்ற உடனேயே சீர்காழி அவர்களின் 'மனமே உனக்கேன் இந்த வாட்டம்' என்ற பாடலில் வரும் 'அயலூர் சென்று பாடிய போதும், வயலூர் நினைவாலே' என்ற வரிகள்தான் எப்போதுமே என் நினைவில் வரும். இந்த பாடலை நான் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. 'மனமே' என்று சீர்காழி அவர்கள் பாடும்போது ஏதோ அந்த மனதை தன் உள்ளங்கையில் வைத்து கொண்டு, அதற்கு அன்பாய் ஆறுதல் கூறுவது போல பாடி இருப்பார். அத்தனை அருமையான பாடல் அது. இந்த பாடலை கேட்டதில் இருந்தே வயலூர் சென்று, அவர் பாடிய அந்த முருகரின் அழகை காண வேண்டும் என்று எத்தனையோ வருஷமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று வரை நடக்கவில்லை. இப்பொழுது உங்கள் பதிவும் சேர்ந்து என் ஆவலை அதிகப் படுத்தி விட்டது. நிச்சயம் விரைவில் தரிசிக்க வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு. பாராட்டுகள்.

நேற்று இரவு தூக்கமின்றி தங்கள் வலைப்பூவில் அகஸ்மாத்தாக நுழைந்து பலவற்றையும் படித்து மகிழ்ந்தேன். நகைச்சுவைப்பகுதியில் அனைத்தையும் படித்து விட்டேன். தங்களின் “மூக்குப்பொடி” காரசாரமாக இருந்தது. அதற்கு மட்டும் பின்னூட்டம் அளித்துள்ளேன்.

“பொடி விஷயம்” என்ற தலைப்பில் 4 வருஷங்கள் முன்பு நான் அனுபவித்து எழுதிய கதையைத் தங்களின் ஈ.மெயிலுக்கு அனுப்பியுள்ளேன்.

அதை முகர்ந்தீர்களா ? (படித்தீர்களா?) என்பதைத் தெரிவிக்கவும்.

தங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! ஒரு வாரம் மகாராஷ்டிரத்தில் ... வலையாதிருக்க நேர்ந்தது. இதோ வந்துவிட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றேன் விரிவாய்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! சுந்தர்ஜி அவர்களின் பின்னூட்டம் காணுமுன் "கொடுவாளினை எடடா .. கொடியோர் செயல் அறவே.." என்ற வரிகளை, எதனாலோ முணுமுணுத்தபடி வந்து திறக்கிறேன். அவர் மனசுல என்ன வைத்திருக்கிறார் என்பது தெளிவானவுடன் அவசியம் அலசுவோம்.

மோகன்ஜி சொன்னது…

எதுக்கு சிவா திண்ணையில் உட்காரணும். உள்ளே தமிழ் அன்பர்களுக்கு சிம்மாசனம் இல்லே போட்டு வச்சிருக்கேன்? தாழ்திறந்து வா!தமிழாகி வா!

மோகன்ஜி சொன்னது…

"முதலையும் மோகனும் கொண்டது விடார்"... என் தந்தை ஒருமுறை சொன்னது டாக்டர்!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

வாங்க மீனாக்ஷி மேடம்! உங்கள் பின்னூட்டம் படிக்க இதமாய் இருந்தது.. நனைக்காமல் நனைக்கும் சாரல் மழையாய். நன்றி.
சீர்காழியின் பாடலை நினைவுறுத்தி விட்டீர்கள். //'அயலூர் சென்று பாடிய போதும், வயலூர் நினைவாலே'// குழையும் அந்த வரிகள் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றது..

வயலூர் அவசியம் போய் வாருங்கள்.

அந்த முருகன் சிரிப்பு.. முழு பரிட்சை லீவு தொடங்கின அன்று பிள்ளைகளின் முகத்தில் தவழுமே... அதே சிரிப்பல்லவா?
24 டிசம்பர், 2010 12:37 am

மோகன்ஜி சொன்னது…

வை.கோ.. சார். உங்கள் மின்னஞ்சலுக்கு பதிலும் அனுப்பியுள்ளேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் பொடி விஷயம் அருமை. அதை என் சிநேகிதங்களுக்கும் அனுப்பி புத்தாண்டைக் கொண்டாட உத்தேசம். என் அன்பு உங்களுக்கும் மற்றும் வயலூரானுக்கும்..

மனோ சாமிநாதன் சொன்னது…

கள்ளமற்ற குழந்தைகளிடம் தெய்வத்தை தரிசிக்க‌ முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! அதுவும் அன்பு மயமான இதயமிருந்தால் அதுவும் கருணையும் அங்கே கூடவே இருந்து விட்டால் அனைத்திலுமே தெய்வத்தை ரசிக்க முடியும்!அருமையான உணர்வலைகள்! வன்மையான எழுத்து! இனிய பாராட்டுக்கள்!

Matangi Mawley சொன்னது…

romba azhagaana vaasippu! :)

மோகன்ஜி சொன்னது…

மனோ ஸ்வாமிநாதன் மேடம்! உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க மாதங்கி.. உங்களை வானவில் பக்கம் பார்த்து நாளாயிற்று.. நானே அப்பப்போ தானே வரேன். வாழ்த்துக்கு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

மோகன்ஜி!! உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக்கொள்ளவும் நன்றி!!

http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள...
முதல் வருகை வந்தேன். எதார்த்தம் மிளிரும் கதை படித்தேன். இறைவனைக் காண்பதற்கு முன்னோர்கள் காட்டியவழியினை அருமையாக வெளிப்படுத்திய கதை. 101 ஆக வந்திருக்கிறேன் மனமொய் எழுத. இலக்கியத்தின் வெற்றியும் படைப்பின் அழியாச்சிறப்பும் எதார்த்தமும் அனுபவமும் நிறைந்ததுதான். உறுதிச் செய்கிறதுங்கள் கதை. வாழ்த்துக்கள்.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்றுதான் அறநுர்லில் படித்த நினைவு. மோகனும் என்பது அல்ல.

இனி தொடர்ந்து வாய்ப்பமைவில் வருவேன் மகிழ்ச்சியுடன்.

RVS சொன்னது…

என் இனிய மோகனத் தமிழுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

பத்மநாபன் சொன்னது…

அன்பு நண்பருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..அய்யன் அருள் பெற்று வந்தவுடன் இனிய பதிவு சேவை தொடரவும் நல் வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Very nice Mohanji... the flow was so good and very logical

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள், மோகன்!

இங்ஙனம்,

தங்கள்,
மூவார் (RRR) முத்து!

Aathira mullai சொன்னது…

புத்தாண்டில், கனவென காண்பவை அனைத்தும் மெய்ப்பட, நினைவுகள் எல்லாம் கைப்பட அன்பான வாழ்த்துக்கள் மோகன் ஜி.

ம.தி.சுதா சொன்னது…

என் அன்பு உறவுக்கு எனத புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

மோகன்ஜி சொன்னது…

என் அன்பு காதர்பாய் ! உங்கள் விருதை, உங்கள் அன்பின் பரிசாய் மனமுவந்து ஏற்கிறேன்! உங்கள் நட்பிற்கு என் வணக்கங்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஹரணி ! உங்கள் முதல் வருகையிலேயே, அழகான பின்னூட்டத்தினால் மனம் கவர்ந்து விட்டீர்கள்..இனி உங்களை எதிர்பார்த்தபடியே இருப்பேன்.

மோகன்ஜி சொன்னது…

என் அன்பு ஆர்.வீ.எஸ்! இந்த புத்தாண்டில் எங்கும் அன்பும்,நேயமும் நிறையட்டும். கடந்த ஆண்டு எனக்கு தந்த பரிசல்லவா உம் தோழமை?!

மோகன்ஜி சொன்னது…

என் அன்பிற்கினிய அப்பாதுரை சார்! உங்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடம் வலைப் பக்கத்தில் வெறும் வெள்ளையடிக்காமல், சவசவவென ஜல்லியடிக்காமல் வலையை இழுத்து வானவில்லில் கட்ட மனம் கொண்டேன். கை கொடுப்பீரா சிநேகிதரே?

மோகன்ஜி சொன்னது…

என் ப்ரிய பத்மநாபன். உங்களுக்கும் என் தங்கைக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மண்டலகால பூஜை நிகழ்ச்சிகளினாலும் பயணங்களினாலும் வலைக்கு வர இயலவில்லை. நான் ஆறாம் தேதி முதல் பதினெட்டு தேதிவரை சபரிமலை பயணத்தில் இருப்பேன் ஜனவரி இருபதுக்கு மேல் வலைமேவ சித்தம். இதையே என் லீவ் லெட்டராய் பாவித்து விடுப்பு
சாங்க்ஷன் செய்யுங்கள். அன்பு.

மோகன்ஜி சொன்னது…

தங்கமணி மேடம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே! உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...

மோகன்ஜி சொன்னது…

என் செல்வமே சிவா! உன் தமிழ் வாழ்த்துக்கு மகிழ்ச்சி!
இந்த புத்தாண்டில் அல்லவை அகல,நல்லவை மலர பிரார்த்தனைகளுடன்..

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ஆதிரா! புத்தாண்டில் இறைவன் எல்லார்க்கும் எல்லாம் அருளட்டும்.

மோகன்ஜி சொன்னது…

ம.தி.சுதா! புது வருடம் உமக்காய் காத்திருக்கிறது நம்பிக்கைகளுடன்..

பத்மநாபன் சொன்னது…

எங்களுக்கும் சேர்த்தான உங்கள் ஆன்மீக ப்பயணம் எல்லா வளங்களையும் அளிக்கவல்லதாய் அமைய அய்யன் அய்யப்பனை வேண்டுகிறேன்... வானவில்லின் வண்ணத்தெறிப்புக்கு கண்களை தயார் செய்து கொள்கிறேன்... அன்பிற்கு மேல் அன்பாக.....

அப்பாதுரை சொன்னது…

கையென்ன கை மெய்யே கொடுத்தா போச்சு...

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா என்னாச்சு?
கேட்க பயமாக இருக்கிறது.
சபரிமலை பயணம் எப்படி இருந்தது ?
நலம் தானே ?

.....தவிப்புடன் தம்பி.

Aathira mullai சொன்னது…

அன்புள்ள மோகன் ஜி,
நலமாக இருக்கிறீர்களா? நீண்ட நாட்களாக மெளனம். சபரி தரிசனம் நிறைவாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இறைவனை வேண்டுகிறோம். தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி..

பத்மநாபன் சொன்னது…

வந்தவுடன் வங்கி பயிற்சி பணிகள் உங்களை வசமாக இழுத்திருக்கும் ...இருந்தாலும் உங்கள் நலத்தை ஒரு சொல்லில் சொல்லிவிட்டு பயிற்சி பணிகளை சுகமாக முடித்து வாருங்கள் ஜீ....

சிவகுமாரன் சொன்னது…

மின்னல் வானம் மேகம் கதிரோன்
மின்னும் விண்மீன் மிதக்கும் நிலவு
கன்னல் தமிழின் கவிதை இவைபோல்
காலம் தோறும் நின்று நிலைத்து
இன்னும் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து
இனிய நற்றமிழ் இலக்கியம் வளர்க்க
சொன்னேன் மோகன் அண்ணா உமக்கு
சுந்தரத் தமிழால் பிறந்தநாள் வாழ்த்து.

பெயரில்லா சொன்னது…

முருகனக்கு மயில் வாகனம்
நம் மோகன்ஜிக்கு ஸ்விப்ட் மோகனம்
வயலூர் அனுபவம் வீவரித்த தோரணம்
சிறு வீழிகளாள் தெய்வ பாராயணம்
தொடரட்டும் என் சித்தப்பாவின் தமிழ் பயணம்

Chitta, Had a tough time translating so please bare with me on ezuthu pizhaigal.... keep rocking !!! - Ungal Santhosh

Geetha Sambasivam சொன்னது…

//உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே முருகா.. இன்னும் எவ்வளவு தரம் தான் உனக்கு....

இன்றைக்கு என்ன உன் முகத்தில் அத்தனை மந்தஹாசம்?”//

இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்து என்னைப் புரிய வைக்கத்தான் உனக்குத் தலைவலியையே வரவழைச்சேன்னு சொல்லாமல் சொல்கிறான் முருகன். அருமையான அனுபவம். நல்ல ரசனையான பயணம். ஜானவாச ஊர்வலம் மாதிரி இருந்தது என்பதும் சரியே. அதிலேயும் குழந்தைகளைத் தானே ஏத்திப்பாங்க! கூடக் கல்யாணப் பெண்ணும் வரதெல்லாம் இப்போதைய நாகரிகம். முன்னால் எல்லாம் தாலி கட்டும் முன்னர் ஜானவாச ஊர்வலத்திலே சேர்த்து உட்கார வைக்க மாட்டாங்க. அதனால் நீங்க விட்டுட்டு வந்ததே சரி. கல்யாண ஊர்வலம்னா அவங்களும் வந்திருக்கலாம். ஆனால் சில குழந்தைகளைத் தவிர்க்கும்படி இருந்திருக்குமே! அதோடு உங்களோட மனோநிலையில் அவங்களும் இதைப்பார்த்திருப்பாங்களா? :))) அதாவது இந்தக் கதையின் நாயகனின் மனோநிலையில் அவன் மனைவியும் பார்த்திருப்பாங்களானு கேட்டேன். :))))

Geetha Sambasivam சொன்னது…

//உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே முருகா.. இன்னும் எவ்வளவு தரம் தான் உனக்கு....

இன்றைக்கு என்ன உன் முகத்தில் அத்தனை மந்தஹாசம்?”//

இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்து என்னைப் புரிய வைக்கத்தான் உனக்குத் தலைவலியையே வரவழைச்சேன்னு சொல்லாமல் சொல்கிறான் முருகன். அருமையான அனுபவம். நல்ல ரசனையான பயணம். ஜானவாச ஊர்வலம் மாதிரி இருந்தது என்பதும் சரியே. அதிலேயும் குழந்தைகளைத் தானே ஏத்திப்பாங்க! கூடக் கல்யாணப் பெண்ணும் வரதெல்லாம் இப்போதைய நாகரிகம். முன்னால் எல்லாம் தாலி கட்டும் முன்னர் ஜானவாச ஊர்வலத்திலே சேர்த்து உட்கார வைக்க மாட்டாங்க. அதனால் நீங்க விட்டுட்டு வந்ததே சரி. கல்யாண ஊர்வலம்னா அவங்களும் வந்திருக்கலாம். ஆனால் சில குழந்தைகளைத் தவிர்க்கும்படி இருந்திருக்குமே! அதோடு உங்களோட மனோநிலையில் அவங்களும் இதைப்பார்த்திருப்பாங்களா? :))) அதாவது இந்தக் கதையின் நாயகனின் மனோநிலையில் அவன் மனைவியும் பார்த்திருப்பாங்களானு கேட்டேன். :))))

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

இந்த அனுபவம் எனக்கு நிகழ்ந்த ஒன்றுதான். நான் அப்போது திருச்சியில் பணியாற்றி வந்தேன்.

என் மனைவி என் கண்ணோட்டத்தில் கண்டிருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது.
'அவங்களும் வந்திருக்கலாம்' என்ற எண்ணம் அவர்களை விட்டுவிட்டு வந்ததால் ஏற்பட்டிருக்கலாம்.

அடுத்தமுறை போகும்போது,என் இளம்நண்பர்களுக்கு ஜாமிட்ரிபாக்ஸ., பேனா போன்றவை வாங்கிக்கொண்டு போய் தரவேண்டும் என விரும்பினேன்.ஏனோ அது நடக்கவில்லை... இதை எழுதும் இந்தக் கணம் ஒரு 'குற்ற உணர்வு' என்னை ஆட்கொள்கின்றது.

Geetha Sambasivam சொன்னது…

மறுபடி வந்து இதைப் படிச்சேன். குழந்தைகளை அதுவும் முன் பின் தெரியாத பல குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லவும் பெரிய மனசு வேணும். அதை உங்களுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கான். வாழ்த்துகள். வயலூர் இப்போ சமீபத்தில் போனப்போ அதன் அழகு குறைந்து நகர மன்னிக்கவும் நரக மயமாகிக் கொண்டிருந்தது. நான் முதல் முதல் சென்றபோது செல்லும் அந்தப் பாதையே சொர்க்கபுரிக்குச் செல்வதைப் போன்ற சுகத்தைத் தரும். இப்போப் பாதையெல்லாமே மாறிப்போய் வயலூர் கோயிலைச் சுற்றி உள்ள இடங்களும் மாறிப் போய்! :(

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா!
மீண்டும் நன்றி! வயலூர் எனக்கு மிகப்பிடித்த தலங்களில் ஒன்று. போய் பலநாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் சொல்லும் நகரமயமாதல் தவிர்க்க இயலாத கொடுமை. யோசித்துப் பார்த்தால் பெரிய தலங்கள் அனைத்துமே ஊருக்கு வெளியே அமைதியாக அமைக்கப்பட்டு, காலப்போக்கில் ஊர்நடுவே என ஆகியிருக்க வேண்டும். பல வருடங்கள் கழித்து போகும் தலங்களில் எல்லாம் மனதில் இருந்த அதன் சித்திரம் கலங்கி திகைப்பாயிருக்கும். பாவம் ஸ்வாமி! அவருக்கு எப்படி இருக்கும்?!