ஞாயிறு, ஜூன் 26, 2011

மீண்டும் கிசு கிசு


கிசுகிசு 1

ஒரு வலைப்பூவுக்கே பதிவர்கள் ததிங்கனத்தோம் போட, நாலு வலைப்பூவில் தூள் கிளப்பும் ஒரு சிவக்கொழுந்து, பதிவிடும் ரகசியம் அம்பலமாகிவிட்டதாம். அவரின் புத்திசாலி மகள், தூங்கப்போகும் முன் அப்பாவுக்கே சொல்லும் கதைகளை அப்படியே பதிவாக்கி பேரைத் தட்டிக் கொண்டு போய் விடுகிறாராம். எனக்கும் அப்படி திவ்யமான மகள் இருந்தால் ,நான்கூட பத்துவலை மேய்ப்பேனே என்று வானவில் பெருமூச்சு விடுகிறதாம்.

கிசுகிசு 2

இரு கைகளையும் தூக்கி அண்மைக்காலம் வரை ஆசீர்வதித்துக் கொண்டிருந்த மகானின் பேர்கொண்ட பதிவர். அண்மையில் கையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டாலும் ஓய்வெடுக்காமல் பதிவில் தட்டச்சுகிறாராம். அவரிடம் அன்பு கொண்ட நண்பர்கள், இப்போதெல்லாம் அவரைப் பார்த்து பாடுவது கைய வச்சுகிட்டு..... சும்மா இருடா.. என்ற பாடலைத்தானாம். இந்த நவரசப்பதிவர் முற்றிலும் குணமாகி தன் கைவரிசையை காட்ட பாபா அருளட்டும்..

கிசுகிசு 3

பதிவுலகின் பாசமலர் சிவாஜி, சாவித்திரி போன்று அண்ணா, தங்கச்சி என்று உருகி ஓடும் ஏழுவண்ணக்காரரும், வெளித்த பெண்ணும் உண்மையிலேயே உடன்பிறப்புகள் தானாம்.
SALT-MUTT-JUNCTION வலைப்பூவின் பின்புலத்தில் தெரியும் அவர்களிருவரின் படத்தில் காணப்படும் ஒரே முகஜாடை, இந்த உண்மையைக் காட்டிக் கொடுத்து விட்டது என்று நம் துப்பறியும் துரைசிங்கம் கண்டுபிடித்து விட்டாராம்.  

ஆடுரா ராமா ஆடு....

கிசுகிசு 4

மைன்ட் வாய்சோடு அடிக்கடி பேசும் பரபரப்பு பதிவர் ,வலையில் தன் முழுதிறமையும் வெளிப்படுவதில்லை என்று, தனி சேனலே துவங்க முடிவு செய்திருக்கிறாராம். பதிவர்கள் யாரும், தன் வலைப்பூவைதிறந்தவுடன் ,முதல் அரைமணி நேரம் கண்டிப்பாக இந்த சேனல் ஒளிபரப்பபாகுமாறு தொழில் நுட்பம் உண்டா என ஆராய்ந்து வருகிறாராம். அப்பாவி பதிவர்கள் கதிகலங்கி இருக்கிறார்கள். சேனல் பெயரை பதிவர்களே தேர்ந்தெடுக்கவும் வேண்டுகோள்விடப் போகிறாராம். பேரு இருந்தா  சொல்லுங்களேன் !


கிசுகிசு 5


வில்லேந்திய இந்த பதிவர் தன் பதிவிலும், கூட்டுப் பதிவிலும் தொடாத துறைகளே இல்லை. இருந்தாலும் அவர் இடும் பின்னூட்டங்களில் தான் அவர் மேதைமை அதிகம் வெளிப்படுகிறது என்று பதிவர்கள் நினைக்கிறார்கள்.

பின்னூட்டப் பெருமாளு??  

  

137 comments:

எல் கே சொன்னது…

1. அடியேன்தான் . நாலுல ரெண்டு தூசி மண்டிக் கிடக்குது தெரியுமோ ?? மிச்ச ரெண்டுல ஒண்ணுல விடுமுறை அறிவிப்பு வந்தாச்சு, இன்னொண்ணுல ரெண்டு பதிவு பெண்டிங். போட்டுட்டு பதிவுலகிற்கு விடுமுறை தரப்போறேன்

2. சாய்

3. ஹேமா / மோகன் ??

4. அப்பாவி தங்கமணி

5. இதுதான் குழப்புது

மோகன்ஜி சொன்னது…

கார்த்தி! விடுமுறை எடுத்தாலும் சட்டுன்னு வந்துடுங்க! மத்தவங்க விடை எப்படின்னு பார்க்கலாம். திவ்யாகுட்டிக்கு என் அன்பு!

எல் கே சொன்னது…

நன்றி ஜி . எழுதுவதை கொஞ்சம் நிறுத்தப் போகிறேன். முழுவதும் வாசிப்புதான் இனி :) .இருப்பேன் ஆனால் எழுத மாட்டேன்

ரிஷபன் சொன்னது…

நன்றி எல்கே. 3 ல பாதி புரிஞ்சுது. எதுவுமே புரியாம ஒரு பதிவப் படிக்கிறோமேன்னு நூடுல்ஸ் ஆனபோது உங்க ஆன்சர் பார்த்து பிட் அடிச்ச சந்தோஷம்.

சே.குமார் சொன்னது…

L.K sonnathu pola kadaisi KISU KISU yarukkananthu endru theriyavillai.

மோகன்ஜி சொன்னது…

கார்த்தி! இது என்ன வம்பாப் போச்சு?

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! மூணுல இரண்டாவது பாதி எப்படின்னு கொஞ்சம் துருவிப் பாருங்களேன்.. பிட் அடிச்சிட்டாராம்ல....

மோகன்ஜி சொன்னது…

அன்பு குமார்! கொஞ்சம் பொறுங்க..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கிசு கிசு ஸ்பெஷலிஸ்ட் அவார்டும், பட்டமும் வாங்கத் திட்டமா?

மோகன்ஜி சொன்னது…

இல்லையில்லை இராஜராஜேஸ்வரி! போன பதிவில் கொஞ்சம் நேயர்விருப்பம் இருந்ததால் இதைப்போட்டு முடித்துவிட்டேன். அஞ்சற்க..

எனக்கு தலபுராணங்கள்,கோவில்களைச் சுற்றி சொல்லப்படும் நம்பிக்கை கதைகளில் ஆர்வம் உண்டு. சிலவற்றை எழுத உத்தேசித்திருந்தேன். நீங்க போடுரப் பார்த்து அடங்கிட்டேங்க!

ஸ்ரீராம். சொன்னது…

விடைகள் சொல்லிட்டாங்க போல...இப்பவும் ஐம்பது சதவிகிதம் எடுத்து பாஸ் ஆயிடுவேன்! (பிட் அடிச்சிட்டோம்ல....!) அப்பாதுரையின் வேண்டுகோளில் இருக்கிறது விடைகளின் சூட்சுமம்!!

ஹேமா சொன்னது…

மோகண்ணா...நீங்க சொல்லாட்டி கண்டு பிடிச்சிருப்பேனோ இல்லையோ!

அட....நானும் கிசுகிசுவில.இந்தக் கிசுகிசு சந்தோஷமா இருக்கு.
ஆனாலும் நம்ம மூதாதையரைக் கிண்டல் பண்ணலாமோ !

என்னைக் கிசுகிசுக்க வைக்க ஆர்வமாயிருந்தவர் அப்பாஜிதான்.
ஏன் அப்பாஜிக்கு இவ்ளோ கோவம் என்மேல!

மத்த கிசுகிசுக்களை தெரிஞ்சுக்க முடில !

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்,ஒரு பழைய ஞாபகம் .என் சொந்தத்தில் ஒருவர்,அரசு ஊழியர் . பதவி உயர்வுக்காக டிபார்ட்மென்ட் பரிட்சை எழுதுவார். புத்தகங்களை வைத்துக் கொண்டே எழுதலாமாம் .
ஆனாலும் 'கோட்'அடித்தவண்ணம் இருப்பார். புத்தக்அம வ்வைத்துக் கொண்டே எழுதும் போது எப்படி பச்சாகாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். 'ஏது எங்க இருக்கு புத்தகத்துலன்னு தெரிய வேணாமா? என்றார்.
லிஸ்டைக் கையில் வைத்துக் கொண்டு ஐம்பது மார்க்குன்னா எப்படி?

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! கண்டுபிடிச்சாச்சா?
மூதாதையர் நம்போல் தானே இருப்பார்கள்?

அதானே? அப்பாஜிக்கு ஹேமா மேல் என்ன கோபம்?

ஸ்ரீராம். சொன்னது…

கையில் புத்தகம் இருந்தாலும் எழுதறது கஷ்டம்தான் மோகன்ஜி....சில விஷயங்கள்---- சொல்லிட முடியாது இல்லையா...

ஸ்ரீராம். சொன்னது…

அந்த அஞ்சாவது கிசுகிசுப் பதிவரை பின்னூட்டம் இட மட்டும்தான் லாயக்கு என்று சொல்லி விட்டீர்கள்...வில்லன் இனி பதிவு எதுவும் எழுதறதில்லைன்னு முடிவெடுத்து விடப் போறார்...!

குணசேகரன்... சொன்னது…

பதிவர்களுக்கு ஒரு கிசு கிசு..பலே பலே

மோகன்ஜி சொன்னது…

புரிகிறது ஸ்ரீராம் புரிகிறது.. பின்னூட்டப் பெருமாளே! இதத்தாங்க சொல்லிகிட்டிருக்கேன் 'ஸ்ரீராம் டச்'ன்னு

மோகன்ஜி சொன்னது…

அப்படி இல்லை ஸ்ரீராம்... உங்க பதிவுகள் தங்கம்னா,பின்னூட்டங்களோ பிளாட்டினம்...
நாங்கல்லாம் பதிவப் போட்டுட்டு ஸ்ரீராம் வந்த்தாச்சான்னு இல்ல பாத்துகிட்டிருக்கோம். வேணும்னா அப்பாதுரை கிட்ட கேளுங்க.

மோகன்ஜி சொன்னது…

வாங்க குணசேகரன்! சும்மா ஒரு புது முயற்சி.. இதுவரை ஆட்டோ வர்ற சத்தம் கேட்கலைங்க.. இத்தோட.. அபீட் ஆயிக்கலாம்னு...

பத்மநாபன் சொன்னது…

கிசு..கிசு த்திலகம் ஆயிட்டு வர்றிங்க...இந்த ரேஞ்சுல போனிங்கன்னா பத்திரிக்கைகள் வானவில்லை கொத்திட்டு போயிடுவாங்க....

வலை மக்கள் தொடர்பு அதிகாரி, எதா இருந்தாலும் ஒரு கை பார்ப்பவர், பாசமலர்கள், நொய்யல்/ நயகாரா நாயகி, ரசனைப் பார்ட்டி வில்லாளன்.. என எல்லோரும் தெரியும் ..

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் ! கிசு கிசுன்னா திலகம் ஏது? கலகம் தானே!
உங்கள் விடைகள் மெத்த சரி ரசிகமணியே!

RVS சொன்னது…

கிசுகிசுக்களின் திலகமே!
மயக்கும் மோகனமே!
வானவில்லுக்கு எட்டாவது நிறமுண்டு என்று எங்களை தலையில் குட்டி நிரூபித்த வெள்ளை நிறமே!
... ம்..ம்..ம்... யோசித்துக் கொண்டு இருக்கிறேன்....
கொஞ்சம் நேரத்தில் திரும்ப வருவேன்.... ;-)))

@பத்துஜி
விடையளிக்க சொன்னால்.. அதையும் உப கிசுகிசுவாக வெளியிட்டு.. அண்ணனுக்கு தப்பாத தங்கக் கம்பி என்று நிரூபித்தமைக்கு நன்றி. ;-)))

நாளையில் இருந்து நான் தான் வலைச்சர ஆசிரியராம்.. நானாம்... ஐயஹோ... பதிவுலகிற்கு வந்த சோதனை.. ;-))))))

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ஆர்.வீ.எஸ்!

என்னா பில்டப்பு! கேக்க நல்லாத்தான் இருக்கு!

பத்மநாபன் ஒருவரியில அடக்கிட்டார் பாருங்க..இதே இப்படி இருக்கே. 'பாலைச்சுறா' எப்படி இருக்குமோ? உங்களுக்கு தெரியுமா?பாலைச் சுறா வின் முதல் பக்கம் என்னிடம் சிக்கி இருக்கிறது. சொன்னீங்கன்னா போட்டுடலாம்.

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.. நீங்க பிரிச்சி மேஞ்சிட மாட்டீங்களா? ஜமாய்ங்க..

சிவகுமாரன் சொன்னது…

அஞ்சாவது ...அஞ்சிலே ஒன்று பெற்றானின் ஆதர்ச நாயகன்

அப்பாதுரை சொன்னது…

எல்கே - ஏன் இந்த முடிவு என்று கேட்கத் தோன்றினாலும் புரிந்து கொள்ள முடிகிறது. நிறைய படிக்க வாழ்த்துக்கள். (பதிவு எதுவும் எழுதவில்லையென்றால் தமிழ்மணத்திலிருந்து 'நீக்கி விடுவோம்' என்று இமெயில் அனுப்புகிறார்களே?)

ஹேமாவின் மேல் கோபமா? ஒரு கை ஓசைக்காரர் போலவே கூவித்திரிபவரும் சிண்டுமுடி சித்தர் போலிருக்கிறதே? ம்ம்ம்.. இந்த ரூட்டு சுவாரசியமா போகுதா பாப்போம். (கராத்தே கிராத்தே தெரியுமா, ஹேமா?)

இட்லியால அடிபடப் போறீங்க.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! அதே அதே!

அப்பாதுரை சொன்னது…

பத்மநாபன் பதினாறு அடி பாய்கிறாரே? பலே!

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள் rvs. ஒரு கை பாத்துருங்க. (அராஅ நாகேஷ்:நம்ம கையில போன் கிடைச்சிருக்குடா, சும்மா விடலாமா, விடக்கூடாது இல்லே?)

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு! எல்.கே வுக்கு உங்கள் கருத்தை நானும் இப்போது ஏற்றுக் கொள்கிறேன்.. வாசிப்புக்கான நேரம் வரவர அருகிக் கொண்டல்லவா வருகிறது..

'சிண்டுமுடி சித்தர்!' இது நல்லா இருக்குங்க.
பதினாறு அடிபாயும் பத்மநாபனுக்கு ஏதாவது செய்யணுமே மொதலாளி ! யோசிச்சு சொல்லுங்க...

பத்மநாபன் சொன்னது…

//முதல் பக்கம் என்னிடம் சிக்கி இருக்கிறது.// ஆமாமா முதல் பக்கம் உங்களிடம்...இரண்டாம் பக்கம் ஆர்விஎஸ்ஸிடம் மூன்றாம் பக்கம் அப்பாதுரையிடம் இப்படி மாறி மாறி வாங்கி தேர்த்தினால் தான் உண்டு ..

பத்மநாபன் சொன்னது…

மொதலாளிகளா.... கொஞ்ச நாளா ஆணிகளை சரசரன்னு இழுத்துவிட்டிட்டு பின்னூட்டம் கடமையாற்ற் உடனே உடனே வரமுடியுது.. நீங்க எதாவது செய்யப்போய் ஷேக் ஆணி மூட்டைகளை இறக்கிறப்போறாரு....

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா... நான் கூட இதுல இருக்கேனா... கிசு கிசு எல்லாம் பிரபலங்கள் பத்தி தானே வரும்... ஐ, அப்ப நானும் பிரபலம் ஆய்ட்டேனா... (இப்படி சந்துல சிந்து பாடறதே இந்த அப்பாவிக்கு பொழப்பா போச்சு - மைண்ட்வாய்ஸ்..) என்னையும் இதுல சேத்துக்கிட்டதுக்கு நன்றிங்க...:))


பெரும்பாலும் யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்... திவ்யமான மகள் தான் பதிவின் ரகசியமா... துப்பறியும் சாம்பு மோகன்ஜி வாழ்க..:))

சந்ரு சொன்னது…

உங்களைப்பற்றி யார் கிசு கிசு எழுதப் போகிறார்களோ தெரியல... கிசு கிசுவுக்கே கிசு கிசு வரும்.

விரைவில்....

பயப்படாதிங்க.... நீங்க நல்ல பிள்ளைதானே...

ஒரு நடிகைக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பாம் உண்மையா?

எல் கே சொன்னது…

/பதிவு எதுவும் எழுதவில்லையென்றால் தமிழ்மணத்திலிருந்து 'நீக்கி விடுவோம்' என்று இமெயில் அனுப்புகிறார்களே?//

துரை காரு , அவங்க என்ன என்னை நீக்குவது , நான் எப்பவோ அவங்களை துரத்தி விட்டாச்சே ? தெரியாதா ???

நிரூபன் சொன்னது…

கிசுகிசுக்கள் அருமை, வித்தியாசமான ஒரு பாணியில்
பதிவர்களைப் பின்னிப் பெடலெடுத்திருக்க்றீங்க.

ரசித்தேன்....

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

அக்கரை சென்று நான் பொறுக்கி வந்ததைப் பற்றி அககறை இன்றி போனதேன் அண்ணனுக்கு?
எக்கரை போனாலும் கொஞ்சம் இக்கரையிலும் எட்டிப் பாருங்க அண்ணா .

சந்ரு சொன்னது…

அதவிட மோசமாப் போகுது கத... அந்த நடிகைக்கும் இவருக்கும் விரைவில்............. என்றும் பேசிக்கிறாங்க..

கோவை2தில்லி சொன்னது…

ஐ! எனக்கு எல்லாத்துக்கும் விடை தெரியுமே!! ஆனா கடைசில வந்திட்டேனே………………..
கிசுகிசுக்கள் சூப்பர்.

மோகன்ஜி சொன்னது…

நிஜம் தான் பத்து.. ஒரு அத்தியாயம் தூக்கக்கலக்கத்துல மனசுல ஓடிச்சு. இன்னும் நினைவுல இருக்கு. பிள்ளையார் சுழி போட்டுடவா சொல்லுங்க?

மோகன்ஜி சொன்னது…

வேணும்னா ஷேய்க் ஆணி மூட்டையை இறக்க விடாம அவருக்கு ஒரு நல்ல ரோல் பாலைச்சுறாவுல சேர்த்துடுவோமா 'அரபு நாட்டு அமீர்' மாதிரி?

மோகன்ஜி சொன்னது…

அன்பின் அப்பாவி! நீங்க பிரபலம் இல்லன்னா வேற யாருங்க? சேனலுக்கு பேரு வச்சாச்சா மேடம்?

மோகன்ஜி சொன்னது…

சந்ரு! உங்களுக்கு தெரிஞ்சி போச்சா! ஆர்.வீ.எஸ்! பத்த வச்சுட்டீங்களே பரட்ட.... சந்ரு! செல்லம்.. மேட்டர அப்பிடியே'கச்சக்' பண்ணிடுங்க ப்ளீஸ்..

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! இது எப்போ?

மோகன்ஜி சொன்னது…

நிரூபன் சார்... கொஞ்ச நாள் அழுகாச்சியா சில கதைகள் போட்டேனா.. ஒரு மாறுதலுக்காய் இது. உங்கள் பாராட்டுக்கு நன்றிங்க!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா ! அந்த நடிகை ஹைதராபாத் வந்து போந்து நன்றாயத்தானே இருந்தது? என் நீக்கி விட்டீர்கள்?

மோகன்ஜி சொன்னது…

சிவா! உன் வலைக்கு வந்து கொண்டே இருக்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

சந்ரு! கேக்கவே நல்லா இருக்கே.. யாருன்னு சொல்லிட்டா வீட்டுல பர்மிஷன் வாங்கிக்குவேன் இல்ல?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதி! உங்கள் ரசனைக்கு நன்றி.. இனிமே கிசுகிசு போட்டா தர்ம அடிதாஇராதுன் என்று செய்தி கசிகிறது.. எஸ்கேப்!

பத்மநாபன் சொன்னது…

என்னது... எங்கள் ஆசான் ஒரு தமிழ் தெரியாத நடிகைக்கு தமிழ் சொல்லி கொடுத்தால் தவறா.... இப்படி கிசு கிசு என்று புறம் கூறுகிறீர்களே சந்ரு ... நியாயமா ..அடுக்குமா.. எங்கே சொம்பு..எங்கே ஆலமரம்... ஆர்.வி.எஸ் வந்தாலும் வராட்டியும் நான் தீர்ப்பு சொல்லியே தீரனும்...

பத்மநாபன் சொன்னது…

நா..எங்கடா...ன்னு வடிவேல் மாதிரி புலம்பறது தெரியுது ஜீ ..விடக்கூடாது ஜீ...இது தமிழுக்கு அவமானம்...

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! நம்ப தமிழார்வமும், கலையுணர்வும் புரியாம தம்பி சந்ரு ஏதோ சொல்லிட்டாரு.. இதுக்காக நாட்டாமை ஆர்.வீ.எஸ்ஸ கூப்பிட்டா ஏதாவது வில்லங்கமா தீர்ப்பு சொல்லி ஆப்பு வச்சிடுவாரோ?
போராததுக்கு இந்தவாரம் முழுசும் ஒரு கையில சொம்பும் ஒரு கையில குடமுமா இல்ல அலைவாரு?

எதுக்கும் நீங்களே காதும்காதும் வச்சாமாதிரி பஞ்சாயத்தைக் கூட்டி நல்லதனமா தீர்ப்பு சொல்லிடுங்கப்பு. குரும்பையாட்டுக்கும், சாராயத்துக்கும் சொல்லி விட்டிருக்கேன்..

மோகன்ஜி சொன்னது…

பத்து... இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. உடம்பைப் புண்ணாக்குறீங்களே..

இவ்வளவு தூரம் வந்தாச்சு... ஒரு கை பாத்துடுவோம்... பாப்பா யாராமா?

RVS சொன்னது…

நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு.. அப்படின்னு யாரும் பேசக்கூடாது.. கப்சிப்... அந்த மாட்டை ஓரமா கட்டுப்பா... பிராது கொடுத்தது யாரு..

சந்ருங்க..

யாரு மேல பிராது...

கிஸ் கிஸ் மன்னன்...

யாரு?

கிஸ் கிஸ் ...

ச.ச்சே...

கிசு கிசு டா அது...

சரிங்க...

கிசுகிசு கண்ணன்....

டேய்...

கிசு கிசு மோகன்...

ஒ... சரி..சரி..

(தொடரும்...)

RVS சொன்னது…

அவருக்கும்... அ-ல ஆரம்பிச்சு.. டி-ல முடியற நடிகைக்கும்..

டேய்.. இப்படி எழுதினா நீயும் கிஸ் கிஸ்ஸும் ஒன்னாகமுடியுமா...

நாட்டாமை.. அது கிஸ் கிஸ் இல்லை...

தெரியும் தெரியும்... கிசு கிசு... நீ ஒளுங்கா ஜொள்ளு...

என்ன சொல்றீங்க...

அந்த ஓரத்தில நிக்கற பொண்ணைப் பார்த்து ஜொள்ளுவிடாம சொல்லுன்னு சொன்னேன்..

ம்.. சரிங்கையா.... மனவாடு தேசத்தில் இருந்து கொண்டு அண்டமைனா மஞ்சிவாடு அம்மாயியோட......

அம்மாயியோட....

(தொடரும்...)

பத்மநாபன் சொன்னது…

அடடா பச்சமண்ணு..பாப்பா பேரு கூட தெரிஞ்சுக்காம பாடம் சொல்லி கொடுத்த மகராசனை இப்படி குறை சொல்லிட்டாங்களே...

சரக்கு வந்தவுடனே சொம்பை நிறைக்க சொல்லுங்க...இப்படி எற்பாடு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் பெரிய சொம்பா கொண்டு வந்திருப்பனே.. இது வேற கொஞ்சம் நசுங்கி இருக்கு...குறைய குறைய ஊத்துவிங்கள்ள......

எல்லாம் தீர்ப்புல சரி பண்ணிக்கலாம்...

யாருய்யா அது நான் வர்றக்குள்ள விசாரணைய ஆரம்பிச்சது... சரக்கு உண்டுன்னு தெரிஞ்சவுடனே வேட்டிய கட்டிட்டு செவலக் காளைய பூட்டிட்டு வந்துட்டாரு……….. அவரு என்ன சொன்னாலும் தீர்ப்ப மாத்தி கேப்போம்……

RVS சொன்னது…

விசாரணை போயிகிட்டு இருக்கறப்ப....யாருப்பா அங்க தனிஆவர்த்தனம் செய்யறது... எங்களுக்கு இங்கவோன்னும் சரக்கு வேணாம்.. ஏற்கனவே புல்லா எத்திக்கிட்டுதான் வந்துருக்கோம்.... யாரப்பா இவரு.. சொல்லுங்க...

கிஸ் கிஸ் ஸோட....

கிஸ் கிஸ் ஸோட?

உப கிஸ் கிஸ்..

உப கிஸ் கிஸ் அப்படின்னா...

கிஸ் கிஸ் ஒன்னு எழுதினா.. அத டோட்டலா குழப்பரா மாதிரி சின்னதா இன்னொன்னு போடுவாரு... அதாவது கிஸ் கிசுக்கு.. கிஸ் கிசு...

அதனாலென்ன..

அதனாலேன்னவா... படிக்கறவன் தலையை பிச்சுகிட்டு ஓடிடுவான்..

சரி அத விடு... நடிகை மேட்டருக்கு வா...

இவருக்கு வாசிப்பு சுவாசிப்பு.... அந்த தெ. நடிகை சுவாசிப்புக்கு வாசிக்கனுமாம்.. தெ.நடிகை தமிழ்ல கால் ஊன்றி நிற்க தமிழ் கத்துக்கனுமாம்...

சரி.. அதுக்கு...

அந்த கிஸ் கிஸ் மோகன் கிட்டே அழைச்சுகிட்டு போனவரே இவர் தான்...

இவருக்கும் கிஸ் கிஸ்ஸுக்கும் என்ன தொடர்பு...

கிஸ் கிஸ் மோகனுக்கு அனைத்து அக்கப்போர் தகவல்களை சேகரித்து தருவதாக தகவல்..

பெரும் பார்ட்டியாக இருக்குமோ?

ஆமாம்.. பலே பார்ட்டி .. பாலைவன பார்ட்டி.. ஒட்டகப் பாலை தமிழ்ப் பாலாய் பருகி தமிழ் சிலம்பம் சுத்த வந்துட்டாரு.. அந்த தெ. நடிகையின் முழு முகவரி இந்தப் பாலைவன பார்த்திபனுக்குத் தெரியும்...

அப்பாவி தங்கமணி சொன்னது…

மோகன்ஜி - கமெண்ட் செக்சன்ல நடக்கற நாட்டாமை Vs பாலைவன பார்த்திபன் (ROFTL) சூப்பர் ரகளையா இருக்குங்க... கமெண்ட் follow பண்ணி படிச்சுட்டு இருக்கேன்... :)))

நாட்டாமை - You proceed சொல்றதுக்கு ஆள் வேணும்னா சொல்லுங்க...:))

'தசாவ'நாபன் அண்ணா - இவ்ளோ திறமைய போஸ்ட் போடாம வெச்சுட்டு இருந்தா சரி இல்ல :))))

மோகன்ஜி சொன்னது…

பத்து சாமி! எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி.. இந்தக் கரடிக்கு சொல்லிவிட்டது ஆரு சாமி? இப்பவே வயித்தக் கலக்குதே. சாட்டு பூட்டுன்னு உங்கள முடிக்க சொன்னனே... அசமஞ்சமா இருந்துட்டீங்களே? இடுப்பு வேட்டியக் கூட உருவிக்கிட்டில்ல விட்டுருவாரு? பாப்பவ வேற விசாரிக்கோணும்னு அடிபோடுவாரே?

யம்மா யம்மா.. நீங்க எங்கம்மா வந்தீங்க. சாமி! தங்கமணியம்மாவுக்கும் தெரிஞ்சி போச்சே.. தங்கச்சி ஊரக் கூட்டிடுமே..
என்னா பண்ணுவேன்.. ஏது பண்ணுவேன்??

பத்மநாபன் சொன்னது…

சரக்கு போனது விசாரிக்கறப்பவே தெரியுது...

விசாரணையோட அடிப்படையே ஆட்டங்காணுதே...

நாங்க தமிழை தாறு மாற முன்னேற்றியே தீரனும் ஒரு முடிவோட இருக்கறப்ப .. ஆனந்தமா தமிழ் வாசிக்கனும்னு ஒருத்தர் கலைதாகத்தோட
வந்தா விட்ருவமா... எங்க தமிழ்மாமணி சாதாரணமவரா...


( சரி விசாரணை அதிகாரி... சரக்கை சரியா பங்கிக்கலாம் .... நிஜாம் நல்லாவே கவனிப்பாரு..ரூட்ட மாத்தி தீர்ப்ப இப்படி கொண்டு வந்து சேர்த்திருங்க.. )

பத்மநாபன் சொன்னது…

சரம் கோர்க்க போய்ட்டாருன்னு ..ஒட்டகத்த கட்டிவச்சுட்டு வர்றக்குள்ள சரம் இருக்கட்டும் சரக்க பார்க்கலாம்னு வந்துட்டாருய்யா வந்துட்டாரு...

வாசத்த காட்டி காட்டி பேசிட்டு இருக்கேன்.. போனது இறங்குனவுடனே இதுக்கு வந்துருவாரு.. கவலைபடாதிங்க.. முதல்லயே சொன்னேன்ல.. உஙகளுக்கு தணியாத ஆர்வம் தமிழை கொண்டு போய் சேர்த்தறதுல.....

பத்மநாபன் சொன்னது…

பொன்மணி அம்மணி... என்னிக்கோ ஒரு வாட்டி இப்படி நடக்கும் ..இதை நம்பி போஸ்டல உக்காந்தா ஒரு ஐடியாவும் வராது...

சந்ரு சொன்னது…

திருட்டுத்தனமா திருமணம்கூட நடக்கப்போகுதாமே... உண்மையா?

மோகன்ஜி சொன்னது…

சரிங்கய்யா!எப்பிடியோ சமாளிச்சிக்குங்க.. வேணும்னா நாட்டாமையாண்ட செந்தமிழ்ல பேசிப் பாக்கவா? கொஞ்சம் மெரளுவாரோ என்னவோ?

எதுக்கும் தங்கமணியம்மா கிட்ட வெத்துத் தாள்ள ஒரு கைநாட்டு வாங்கிவச்சிக்குங்க..

விஷயத்த அமுக்கி போடுங்கய்யா.. வூட்ல தெரிஞ்சா கொள்ளிக்கட்டையால என் முதுகுல கையெழுத்து போட்றும்யா...

பாப்பாவுக்கு இன்னிக்கி ஆத்திசூடி வேற சொல்லிக் குடுக்கறதா இருந்தேன்.. இங்கன மாட்டிக்கிட்டேன். போராதத்துக்கு அங்க மரிஷ்காதாசன்னு ஒருத்தரு, "இங்கே சகாய கட்டணத்தில் தமிழ் சொல்லித்தரப்படும். தமிழ்தெரியாத நடிகைன்னா ஃப்ரீ.. ஃப்ரீ"ன்னு ப்ளெக்ஸ் போர்டு வேற போட்டுட்டாருய்யா..
எளநீ குடிக்கிறீங்களாய்யா? சுருட்டு வேணுமாய்யா?

மோகன்ஜி சொன்னது…

இந்த சந்ரு தம்பி வுடாம டார்ச்சர் குடுக்குராரு பாருங்க.. அது சூட்டிங் தம்பி.. தாலி கட்டுற சீன்ல ஹீரோவுக்கு பதிலா டூப்பு நானு.அவருக்கு வகுரு சரியில்ல.. லாங்க்ஷாட்ல எடுக்குறாங்க..
இப்பிடி கோடாய்ஞ்சா எப்பிடி?.. பத்து சார் .. இந்தத் தம்பி மடங்குமான்னு பாருங்க.

சந்ரு சொன்னது…

இப்படி எல்ல பொய் எல்லாம் சொல்றிங்க... நடிகையோடு நீங்க உல்லாசமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுவிடுவேன்.

அப்பாதுரை சொன்னது…

சந்ருவுக்கு கொஞ்சம் சம்திங் தள்ளுங்க மோகன்.

பத்மநாபன் சொன்னது…

உங்க தமிழுக்காக யார் யாரையெல்லாம் மடக்கனுமோ...

ஆனாலும் தம்பி டார்ச்சர் ஓவராத்தான் இருக்கு...முதல்ல விசாரணையதிகாரிதிரியை ராத்திரிக்குள்ள மடக்கிற்ரேன்..

போட்டோவெல்லாம் ஓட்டுவேலைன்னு ஒரே போடு போட்டறலாம்...

பத்மநாபன் சொன்னது…

சண்டுரு தம்பி சம்திங் க்கெல்லாம் மடங்கற மாதிரி தெரியல... ஜம்திங் கேட்கறாரு....

சந்ரு சொன்னது…

நாங்க எதுக்கும் மடங்கிடமாட்டம்.... கிசு கிசுவ வெளியில கொண்டு வாரதுதான் நம்ம நோக்கம்...

அந்த உங்ககிட்ட வரதட்சனை கேட்கிறாளாமே உண்மையா?

மோகன்ஜி சொன்னது…

வந்ட்ட்டார் பாருங்க மா.தாசன், சம்திங் தள்ளுறப்போ மாட்டிவிட்டு வேடிக்கை பாப்பாரு..

நல்லாசொன்னீங்க .கெட்டவேலை போட்டால்லாம் ஒட்டுவேலைன்னு சொல்லிடுங்கையா..

நாட்டாமையை காணமே.. ரொம்ப நேரம் ஆச்சே.பாப்பாவ விசாரிக்கப் போய்ட்டாரோ?

நாட்டுல பாடம் சொல்லிக் குடுக்க முடியுதாய்யா?

சந்ரு தம்பியை புகழ்ந்து நிலைமண்டில ஆசிரியப்பாவில் ஒரு கவிதை எழுதி தந்தா போறுமாய்யா?

சந்ரு சொன்னது…

பிரபல நடிகையுடன் பிரபல பதிவர் உல்லாசம் மடக்கிப்பிடித்த பதிவுலகம்... அப்படின்னு ஒரு பதிவு போட்டோக்குளுடன். பல உண்மைகளுடன் வரும்...

தமிழினி சொன்னது…

நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்www.tamil10.com
நன்றி

பத்மநாபன் சொன்னது…

// நிலைமண்டில ஆசிரியப்பாவில்// இந்த இலக்கணந்தானே ஆசானே உங்கள இவ்வளவு தூரம் கொண்டு வந்திருச்சு.....

இனி வெண்பா வை தாண்டாதிங்க.. ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அந்த அப்பாவே பாடிக்கட்டும்

பத்மநாபன் சொன்னது…

குருதட்சனை கொடுத்து பாடம் கற்பவளை வரதட்சனை கேட்கிறாள் என்பது அபாண்டம்...இந்த ஆணாதிக்க தம்பியை எதிர்க்கவாவது வாருங்கள் கொம்புள்ள மன்னிக்க சொம்புள்ள நாட்டமைகளே..

ஆசானே கண்டுக்காதிங்க ரூட்டை மாத்தி ஆளை தேர்த்துகிறேன்....

சாய் சொன்னது…

கிசு கிசு ஸ்பெஷலிஸ்ட் !!

Superb

RVS comments are hilarious

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அடாடா! என்னா ஒரு ரெஸ்பான்ஸு உங்க கிசுகிசு-பாகம்-2-க்கு....

அதகளமால்ல இருக்கு.... கொஞ்சம் லேட்டா வந்தா போஸ்ட விட கமெண்ட்ஸ் தான் பெரிசா போயிட்டு இருக்கு.....

நடக்கட்டும்... நடக்கட்டும்... நாட்டாமை வேற இங்கே சொம்பை வச்சுட்டு ஆசிரியர் வேலை பார்க்க போயிட்டாரே...

Riyas சொன்னது…

சூப்பர் சார்

RVS சொன்னது…

இன்றிரவு அரசமரத்தடி பஞ்சாயத்து மீண்டும் கூடும்... என்று ஊரில் தண்டோரா போட்டுள்ளார்கள்..

நல்ல மினரல் வாட்டர் பாட்டிலுடன் பத்மநாபன் வருவார். கிஸ் கிஸ் ஒரு போர்வையுடன் வரவும். (முகத்தை மூடிக்கொள்ள அல்ல...)

பிராது கொடுத்தவர், கிஸ் கிஸ், தசாபுத்தி அற்புதமாக உள்ள பத்மநாபன், ம.காதலன் (ரொம்ப நல்லாயிருக்கு) போன்றோர் கட்டாயம் வரும்படி கட்டியக்காரன் சொல்றான் சாமியோவ்!!!!!!

முடிந்தால் ம.காதலன் கலிவெண்பாவுக்கு பதில் கன்னிவெண்பா ஒன்று எழுதி சபையில் படிக்கலாம். அந்த தெ.நடிகையை அதில் மடிக்கலாம்.. லாம்..லாம்....;-)))

டண்டணக்கா..டண்டணக்கா.... (தப்பா படிக்காமல் தப்பு எஃபெக்டில் படிக்கவும்)

RVS சொன்னது…

தொடரும் போட மறந்துட்டேன்... ஸாரி...
தொடரும்.. ;-))

சந்ரு சொன்னது…

தொடருமென்றால் நானும் வருகிறேன்.

நடிகை உல்லாசமாகத்தான் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் சொல்கின்றன.

யாரோடு உல்லாசமாக இருக்கிறார்????????????

சிவகுமாரன் சொன்னது…

அலுவலகம் வந்து , யாருக்கும் தெரியாமல் பின்னூட்டங்கள் படிக்க ஆரம்பித்து , நாட்டாமை சீன் வந்ததும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். எனக்கு மெமோ வந்தால் , அந்த பாவம் RVSக்கும் , ரசிகமணிக்கும் சென்று சேர்வதாக .

பத்மநாபன் சொன்னது…

போர்வை எதுக்கு கேக்கிறிங்கன்னு தெரியும் தெரிஞ்சு ஒரு கல்ப் தெரியாம ஒரு கல்ப் அதுக்கு தானே.... கல்ஃப் பார்ட்டி கிட்டையே வம்பு பண்றிங்களே...

பத்மநாபன் சொன்னது…

ஆரம்பிச்சுட்டாருய்யா...உல்லாசம்.. கிள்ளாசம்னு..( மன்னிச்சுக்கொங்க ஆசான் கில்லாசம்னு இருக்கணும் )..

அது பாவம் அ ..ஆ.. உச்சரிப்போட எப்படி எழுதறதுன்னு கேட்டுது..அதுல சுழி போடறப்ப மட்டும் ஆசான் சுழிச்சு காட்டுனாரு.. பாடம் சொல்லி கொடுக்கிறப்ப அடிக்கிறது கிள்ளறது எல்லாம் சகஜந்தானே... எவ்வளவு டண்டணக்க போட்டாலும் இந்த நிக்காது.. கவலையே படாதிங்க இன்னைக்கு ஆத்தி சூடி ஆரம்பிச்சிருங்க ஆசான்...

RVS சொன்னது…

ம்..ம்... அய்யா வராரு..அய்யா வராரு.. ஒதுங்கு..ஒதுங்கு... யாருப்பா அது அய்யா உட்காருர கட்டையில படுத்துருக்கறது.. தட்டி எழுப்புய்யா...

நாட்டாமையின் அரசமரத்தடி கல் சீட்டை தோள் துண்டால் தூசி தட்டி அமர வைக்கிறார்கள்...

எங்கப்பா கிஸ் கிஸ்?

பி.....பி.... பின்னாடி போயிருக்காருங்க....

ஓ.கே. எங்க அந்த தெலுங்கு மிஸ் மிஸ்... மிஸ் பண்ணிடப்போறேன்யா.....

இந்தாம்மா அங்கே என்ன ஓரமா பண்ணிக்கிட்டு இருக்கே... அய்யா கூப்புடறாரு.. முன்னாடி வா...

என்னய்யா இன்னும் காணும்... கிஸ்ஸையும் காணும் மிஸ்ஸையும் காணும்...

ஐயா பதறாதீங்க... இங்க தான் எங்கயாவது இருப்பாங்க...

மிஸ்ஸுக்கு கிஸ்சும் கிஸ்ஸுக்கு மிஸ்ஸுமா இருக்காங்களே... எங்கன்னு பாருங்கப்பு... ஊரு பேர் கெட்டுரப்போவுது..

ஐயா... அங்க பாருங்க... கோவில் மதிலோரத்தில....வானமே கூரையாக... மதில் சுவரே கரும்பலகையாக....கிஸ் மிஸ்ஸுக்கு பாடம் எடுக்கறத...

பஞ்சாயத்து இங்க நடக்கும் போதும் டமில் க்ளாஸா கூட்டிகிட்டு வாங்கய்யா... வா பொளந்து பார்த்துகிட்டு இருக்கீங்க..

இல்ல ஐயா.. அந்த மிஸ் "ஆ" சொல்லும்போது... கிஸ்ஸுக்கு வலிக்குது... அதான்....ஓசியில ஸீன் பார்த்துகிட்டு இருக்கோம்...

ச்சீ.. வெட்கம் கெட்டவர்களா.... ஐ வரதுக்குள்ளே "ஐயோ"ன்னு ஆயிடப்போவுது.. பிடிச்சி அழைச்சுகிட்டு வாங்கையா....

மனோகரா சிவாஜி எஃபெக்டில் கிஸ்ஸும், தேவிகா (அப்பாதுரை சார் கவனிக்கவும்) எஃபெக்டில் மிஸ்ஸும் மரத்தடிக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.

(தொடரும்.....)

சந்ரு சொன்னது…

தொடரட்டும்.... தொடரட்டும்....

பத்மநாபன் சொன்னது…

இவரு இவ்வளவு சீன் போடறத பார்த்தா... நம்ம ஆசானை கட்டிவைத்துவிட்டு... பாடத்தை இவரு ஆரம்பிச்சிருவாரு போலிருக்கு.. அதே எபக்ட்ல சங்கிலிய பிச்சுட்டு வாங்க ஆசான்... உங்களுக்கு தெரியாத வசனமா.....

மோகன்ஜி சொன்னது…

சந்ரு! நோக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தருவேணாம். சமத்தா அந்த படத்தையெல்லாம் தந்துடுவியாம். என் செல்லமோன்னோ?

மோகன்ஜி சொன்னது…

நன்றி தமிழினி..

மோகன்ஜி சொன்னது…

ஆதாகப் பட்டது பத்மநாபன்..
நன்னூலாகட்டும், தண்டியலங்காரமாகட்டும்,நேமிநாதமாகட்டும்.. பாவகைகளின் பாடபேதம் கூறப் போந்தோமெனில் ஆசிரியப்பா, பாப்புனைய.. ஆ.. பாப்பா... பாப்பா

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்!

'ப'ன்னா பப்பா
'பா'ன்னா பாப்பா
'பி'ன்னா பிப்பா
'பீ'ன்னா பீப்பா

மோகன்ஜி சொன்னது…

சாயி! ஏதோ படம் படம்னு படம் காட்டுராங்களே..

RVS சொன்னது…

'பை'ன்னா பைங்கிளி... இந்தோ வரேன்... ;-))

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! சொம்பு வச்சிட்டு போன மனுசன கொண்டுபோய் தலைநகர்லா நாலு நாள் வச்சுக்குங்களேன்.. பஞ்சாயத்துல பஞ்சரில்லே ஆயிக்கிட்டு இருக்கேன்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரியாஸ்..

RVS சொன்னது…

ம்.. நீ சொல்லு....

ஏமி....

என்னது நீ மாமியா... சேமியா மாதிரி இருந்துகிட்டு மாமியா...

உஹும்... மீரு ஏமி செப்பண்டி.. மீகு தெலுகு பாக தெலுசு.. தமில் லேது..

டேய்... அந்த பொண்ணை ஆடி ஆடி பேசச் சொல்லாதே... நான் ஆ.....டிப் போயிடுவேன்...

ஆ...

(என்னாச்சு.. என்னாச்சு.. என்று கிஸ் கிஸ் பதறுகிறார்)

லேதண்டி...அ.... ஆ.... செப்பி... செப்பி...

ஓ.. செப்பிப் பார்த்தியா.. நாட்டாமை பக்கத்துல இருக்கியா.. நா பயந்துட்டேன்...

திசை திருப்பாதீங்கய்யா... யோவ் கிஸ். உனக்கும் அதுக்கும்.. ஏதாவது கசமுசா....

கசகசா தெரியும்.. தலையில் தேய்த்தால் சூடு குறையும்... கசமுசா....

கசமுசா தெரியாதா.... இப்ப நீங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்களே அதுதான் கசமுசா...

தமிழ் கற்றுக்கொடுப்பது கசமுசாவா... அப்படியென்றால்... முத்தொள்ளாயிரத்தில் மூன்றாவது பாடலில் "கசகசவென" என்று ஆரம்பித்து தலைவனைப் பார்த்து தலைவி...

நிப்பாட்டுங்க..ஒரே தலைவலி... எங்கப்பா அந்த டென் நாதன்...

(சாவகாசமாக வருகிறார்)

சொல்லுங்க.. என்ன வேணும்...

நீங்க அரபு தேசத்துல இருக்கலாம்... அதுக்காக கையில ஒரு பிடி பாலைவன மணல சேஃப்டிக்கு வச்சுக்கிட்டு நிக்கக்கூடாது.. இங்கெல்லாம் வீடு கட்டவே மணல் இல்லை.. யாராவது உங்களை அடிச்சுப் போட்டு கைப்பிடி மணலை திருடிக்கிட்டு போயடப்போறாங்க...

தூ..இவ்ளோ கேவலமா இருக்கீங்க... அடுத்த தடவை வரும்போது ஒரு சூட்கேஸ் மணல் கொண்டுவரேன்... இப்ப அந்த பொண்ணையும், கிஸ்ஸையும் விட்ருங்க...

(தொடரும்...)

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் ஐய்யா! தெய்வமே! போர்வ எதுக்குங்க? ம.காதலனையும் கூப்புடுறீங்களே.. எனக்கு ஆறுகிரகம் உச்சத்துல இருக்குன்னு சொநிணப்புரம் தானே பாப்பா படிக்கவந்துச்சி?.. இப்போ எல்லா கிரகமும் புடிச்சி ஆட்டுதே.. ஏதாவது பரிகாரம் சொல்லுங்க பத்மநாபன் சாமி!

மோகன்ஜி சொன்னது…

சந்ரு ! தொடர வேறபோறீங்களா?

மோகன்ஜி சொன்னது…

சிவா! என் கஷ்டம் உனக்கு சிப்புசிப்பா வருதா? வரேன் வரேன்

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! சுபவார்த்தை சொன்னீர்.பத்து.. பாப்பாவுக்கு இப்போதே பாடம் நடத்தப் போறேன்.
சொல்லு பாப்பா..
அ... அப்பாதுரையைப் பார்க்காதே
ஆ... ஆர்.வீ.எஸ் பேச்சு கேக்காதே.
இ.. இன்ப லெட்சுமி யாருடி?
ஈ.. ஈச்ச மரத்துல பேயடி...

சாய் சொன்னது…

//மோகன்ஜி கூறியது... சாயி! ஏதோ படம் படம்னு படம் காட்டுராங்களே..//

ஆர்.வி.எஸ். / பத்மநாபன் - ரெண்டு பெரும் டேஞ்சரஸ் பெல்லோவ்ஸ். ஜாக்கிரதை.

ஆர்.வி.எஸ். உங்கள் பில்டப் சூப்பர். ரசித்தேன்.

ஸ்ரீராம்,

நானும் உங்களை விட மோசம் "நான் கடைசியில் பிரஸ்ட்" ! எனக்கு எல்லோருடைய ப்ளாக் சென்று படிக்க நேரம் இருப்பதில்லை அதுவும் ஒரு காரணம்.

சாய் சொன்னது…

//மோகன்ஜி கூறியது... இ.. இன்ப லெட்சுமி யாருடி? //

எங்கே எங்கே எங்கே !!

இது யாரு இன்பலட்சுமி

மோகன்ஜி, அடுத்த ஐயப்ப சீசன் வந்தாச்சு !! உஷ்

சந்ரு சொன்னது…

நடிகையோடு தொடர்பிருப்பதை நீங்களாகவே ஒத்துக் கொள்ளும்வரை தொடரும்....

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் ஐயா! இதென்ன கொடுமை.. எழுத்தாணி பிடித்த கைபிடித்து இழுத்தாரையா.. பாப்பாவின் மெல்லின தேகம் உங்கள் முரட்டுத்தம்நாம் தாங்காமல் கன்றி சிவக்கிறதே.. தமிழ் படிதத்து தப்பா..

மோகன்ஜி சொன்னது…

இது வசனம் சீன் இல்ல.. மறந்து விட்டேன்..

திக்கெட்டும் தமிழ் பரவும் வகை செய்யச் சொன்னானே பெருங்கவி..

சிக்லேட் சிங்காரியிவள் தமிழோதத் தடையோ..

கைபிடித்து காதலுரைத்தேனா.. ரேகைப்படித்தேனா.. இல்லை நாடி பிடித்தேனா..

பூங்கரம் பிடித்த எழுதுகோல் நழுவிடாவண்ணம் நாசூக்காய் பிடித்தேன்.. குற்றமா?

கைவளை எடை தாளாமல் துவளும் கரம் தாங்கினேன்.. நேரமா?

நரம்போடும் கரம், பாணன் யாழோ என்று மீட்டினேன் .. போறுமா?

மோகன்ஜி சொன்னது…

சாய்! நல்லா நினைவு படுத்தினீங்க !

பாப்பா.. இண்டிகி வெள்ளு.. ஜாக்ரத..
ரேபு கலுத்தாம்.. பை பை..

சாய் சொன்னது…

//இங்கே சகாய கட்டணத்தில் தமிழ் சொல்லித்தரப்படும். தமிழ்தெரியாத நடிகைன்னா ஃப்ரீ.. ஃப்ரீ"//

என் சித்தப்பா வாசெக்டமி செய்துகொண்டபின் தன் கே.கே.நகர் வீட்டில் இப்படி போர்டு வைப்பதாய் இருந்தார். அதுபோல் இருக்கே இது மோகன்ஜி !!

"குழந்தை பிறக்கும் என்ற பயம் இன்றி சுகம் அனுபவிக்கலாம் !!"


தமிழ் தெரியாத நடிகை என்று மொத்தப்பேரையும் நீர் குத்தகை எடுத்துவிட்டால் நித்தி எங்கே போவார் ??

மோகன்ஜி சொன்னது…

சாய்! சிவசிவா!!

பத்மநாபன் சொன்னது…

கிடைச்ச கேப்ல சாய் நுழைஞ்சுட்டாரா..... இனி மாடரஷனை ஆன் பண்ணீருங்க .....

சந்ரு சொன்னது…

தொடரும்......

RVS சொன்னது…

@சாய்
// ஆர்.வி.எஸ். உங்கள் பில்டப் சூப்பர். ரசித்தேன்.
//
இன்றும் காட்சி உண்டு... ;-))

சாய் சொன்னது…

//பத்மநாபன் கூறியது...கிடைச்ச கேப்ல சாய் நுழைஞ்சுட்டாரா..... இனி மாடரஷனை ஆன் பண்ணீருங்க..//

ஏன் பத்மநாபன் ?

பழமொழி சொன்ன அனுபவிக்கணும், ஆராய கூடாது !! என் சித்தப்பாவின் இந்த கமெண்ட்டுக்கே இப்படி சொன்னால் - ரொம்ப அப்பிராணி போலிருக்கு நீங்கள்.

ஐயோ ஐயோ (வடிவேல் ஸ்டைலில்)

சாய் சொன்னது…

ஆர்.வி.எஸ்.

காத்திருக்கிறேன்

- சாய்

பத்மநாபன் சொன்னது…

ஆசானே வசனத்தில் உங்களை அடிக்க ஆள் இல்லைய்யா.....

எதுக்கும் மீட்டிய விசயங்களை அடக்கியே வாசிங்க...அப்புறம் உங்களை மீட்ட முடியாமல் போய்விடும்...

பார்ப்போம் இன்னிக்கு மீட்டிங்கில் என்ன அலப்பறை பண்ணறாருன்னு...

பத்மநாபன் சொன்னது…

சாய்... அடுத்த உள்ளத்தை ’’சித்தப்பாவின் கமெண்டுகள்’’...

நடத்துங்க...

RVS சொன்னது…

ஏம்ப்பா!! ரெண்டு கையையும் பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்தா மனோகரா சிவாஜின்னு நினைப்பா... இவரு இப்படி தமிழ் பேசறதைப் பார்த்தா அந்தப் பொண்ணு மயங்கிச்சு...

பாரு.. பாரு... அந்தப் பொண்ணு நிஜமாவே மயங்குது.. அந்தாளை வசனத்தை நிப்பாட்டச் சொல்லுப்பா...

(உடனே அவசரமாக கிஸ்)

அது வசனத்தினால இல்ல..

(பஞ்சாயத்தே கோரஸாக ஆச்சர்யத்தில்) அப்புறம்....

பசியினாலன்னு சொல்ல வந்தேன்...

(டெண்நாபன்... கிஸ் கிஸ்ஸின் மனோகரா வசனத்தில் லயித்து....)

ஆஹா.. நின்ற பொருள் அசையவும்.. அசையும் பொருள் நிற்கவும்... இப்படி ஒரு வசனத்தை...

யாருப்பா அங்க திருவிளையாடல் ஸி.டி போட்டு விட்டது...

இல்லைங்கையா.. இந்த பாலைவன மணலோட ஒரு ஆள் இருந்தாருல்ல, அவரு தான் கிஸ்ஸ கிஸ் பண்ணாம பாராட்டுராறு...

( உடனே தமிழ் ஜுரத்தில் பக்கத்தில் தாறுமாறாக நின்ற தெ. நடிகை 'டென்'னிடம் கொஞ்சும் குரலில்...)

பாவாக்கு டமில்ல ஏமி?

என்னப்பா பாப்பா பலான பார்ட்டியா இருக்கும் போலருக்கே.. "பாபா 120 " பான்பராக் கேட்குது?

நாட்டாமை அது நீங்க போடற சரக்கு பாபா இல்லை.. பாவா.. பாவா...

யாரு பாபா வா?

(பாலைவன பாபா தன்னை அழைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு...)

வந்தேன்..வந்தேன்.. (என்று துள்ளிக்கொண்டு வருகிறார்)

யாருப்பா இது.. ஒரே குழப்பமா இருக்கே... கிஸ்ஸுக்கும் மிஸ்ஸுக்கும் தான் திக் லிங்க் அப்படின்னு பார்த்தா.. கதையில ட்விஸ்ட் வருதே... பாப்பா பாலைவனம் பக்கம் திரும்புதே...

(தூரத்தில்.. மாமா மாமா மாமா... ஏம்மா...ஏம்மா..ஏம்மா.... பாட்டு கேட்கிறது....)\

(தொடரும்...)

பத்மநாபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பத்மநாபன் சொன்னது…

ஆசானே கடைசியில் இந்த தெ.நடிகையை இவருக்கு எழுதி வெச்சாதான் விடுவாரு போல... விட்டு தள்ளுங்க..

அடுத்து ஒரு க..ந ..தமிழ்ச்சேவைக்கு ஒரே அடம் அதுவும் உங்க கிட்டதான் ழ கத்துக்கனும் விரும்புது.. உச்சதுல இருக்கிற ஆறும் ஒழுங்காத்தான் வேலை செய்யுது.. இந்த தடவை சிலோன் சந்ரு கண்ணுல மட்டும் படாம பாடத்தை நடத்துங்க...

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! சாய் வந்தா வரட்டும் . சந்ரு டார்ச்சருக்கு இவரு எத்தனையோ மேல்.. கொஞ்சமா தான் கேட்ட வார்த்தை சொல்வாரு..

மோகன்ஜி சொன்னது…

சந்ரு

//தொடரும்.....//
ரொம்ப சந்தோஷம் நைனா

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ எஸ் வருவாராம்.. சாய் காத்திருப்பாராம்.. நல்லா கூத்து கட்டுராங்காப்பு ...

மோகன்ஜி சொன்னது…

பத்து.. மீட்டு மீட்டுன்னு மீட்டிட்டீங்க.. நல்லாருக்கு..ஒரு வழி சொல்லும் பிள்ளாய்!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! சொம்புநாதரே! பாலைவன பாபா பக்கம் பாப்பா பார்வை திரும்புதுங்கறீங்க. அவரானா உங்களுக்கு எழுதி வைக்கணும்கிராரு..

பாப்பா.. உனக்கு அரிச்சுவடியிலிருந்து ஓலைச்சுவடி வரை தமிழ் சொல்லித்தர என்னையே கொடுத்தேனே...

நீயும் கண்ணுள் கண் வைத்து காவியம் படித்தாயே! அதெல்லாம் நடிப்பா..

சொல் பாப்பா... அத்தனையும் நடிப்பா...

மோகன்ஜி சொன்னது…

மக்களே! ஒரு இலக்கிய பதிவை இன்று போட்டிருக்கிறேன்.."கனாக் கண்டேனடி தோழி!"

சந்ரு சொன்னது…

//பத்மநாபன்! சாய் வந்தா வரட்டும் . சந்ரு டார்ச்சருக்கு இவரு எத்தனையோ மேல்.. கொஞ்சமா தான் கேட்ட வார்த்தை சொல்வாரு.//

என்னது... நடிகையோட நீங்க உல்லாசமா இருக்கிற போட்டோக்களோட வாறன். இருங்க...

சந்ரு சொன்னது…

இத்தால் சகலருக்கும் அறியத்தருவதாவது பிரபல பதிவர் ஒருவருக்கும் ஒரு நடிகைக்கும்தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கின்றது...


பதிவரும் நடிகையும் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்....

எதிர்பாத்திருங்கள்...

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சந்ரு! உங்க விடாமுயற்சிக்கு என் பாராட்டுக்கள். எங்கள் கும்மாங்க்கும்மி குழுமத்தில் உம்மையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்..

அடுத்த பதிவில் ஒரு பழம்பாடல் போட்டிருக்கிறேன். அதை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் ஒப்பித்தால் கண்டிப்பாய் மேட்டரைச் சொல்கிறேன்

சந்ரு சொன்னது…

அடடா மனப்பாடம் பண்ணுவதா?.... அதுதானே முடியாத காரியமாச்சே...

பத்மநாபன் சொன்னது…

மங்களம் ....மங்களம் ...சுப மங்களம்......சுபாவா...மங்களமா...

எல்லாம் இலக்கியமனதோடு நற்றிணைக்கு வாங்க.....

பத்மநாபன் சொன்னது…

மங்களம் ....மங்களம் ...சுப மங்களம்......சுபாவா...மங்களமா...

எல்லாம் இலக்கியமனதோடு நற்றிணைக்கு வாங்க.....

சாய் சொன்னது…

மோகன்ஜி

பலான பாப்பா பலான பாப்பா பலான பாப்பா பலான பாப்பா பலான பாப்பா

பலே பலே பலே பலே பலே பலே பலே

மோகன்ஜி சொன்னது…

வந்தவங்களுக்கும்,கும்மியடிச்சவங்களுக்கும், வேடிக்கை பாத்தவங்களுக்கும், வெறும போனவங்களுக்கும் நன்றி!நன்றி!

RVS சொன்னது…

//மங்களம் ....மங்களம் ...சுப மங்களம்......சுபாவா...மங்களமா...//
என்ன திரும்பவும் ஆரம்பிக்கனுமா? ;-)))))))))
நீங்க ரெண்டு பெரும் கலந்து முடிவு பண்ணி சொல்லுங்க... அது யாருன்னு... ;-)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எனக்கு தலபுராணங்கள்,கோவில்களைச் சுற்றி சொல்லப்படும் நம்பிக்கை கதைகளில் ஆர்வம் உண்டு. சிலவற்றை எழுத உத்தேசித்திருந்தேன். நீங்க போடுரப் பார்த்து அடங்கிட்டேங்க!/

ஒவ்வொருவர் ந்டையும் கைமணமும் எழுத்து நடைகளும் வேறாயிற்றே. தாங்கள் கேள்விப்பட்டவற்றைப் பகிருங்கள்.
உத்தேசித்தவற்றை அறிய ஆர்வமாக இருக்கிறோம். நன்றி.

ஆதிரா சொன்னது…

இங்க என்ன நடக்குது? ஒரு மனுசி கொஞ்ச நாள் வரலைன்னா.... அதுக்குள்ள இம்புட்டு கூத்தா?

ஆதிரா சொன்னது…

கலாட்டா கிஸ் கிஸ் மன்னிக்கவும் கிசு கிசு நல்லாவே போய்ட்டு இருக்கு.....