சனி, ஆகஸ்ட் 06, 2011

ஸ்வாமிநாதம்! நேமிநாதம்?? இதி ஏமிநாதம்?!



உங்களுக்கு மீண்டும் கிசுகிசு என்று இங்கு அடித்த ஒரு கும்மிப்பதிவு நினைவிருக்கிறதா ? அதில் பத்மநாபன் கருத்துக்கு கீழ்க்கண்ட பதிலைப் போட்டிருந்தேன்.

அதாகப் பட்டது பத்மநாபன்..
நன்னூலாகட்டும், தண்டியலங்காரமாகட்டும்,நேமிநாதமாகட்டும்.. பாவகைகளின் பாடபேதம் கூறப் போந்தோமெனில் ஆசிரியப்பா, பாப்புனைய.. 

மனசாட்சி போல் அவ்வப்போது வந்து உயிர்வாங்கும் என் நண்பனிடமிருந்து அந்தப்பதிவு வந்தவுடனே ஒரு குறுஞ்செய்தி...

ஸ்வாமிநாதம்! நேமிநாதம்?? இதி ஏமிநாதம்?!’

இந்தக் கேள்வியின் வசீகரம் இந்தப் பதிவைத் தூண்டியது.

ஸ்வாமிநாதன்..

ஹ...எனக்கு இன்னொரு பேர் இருக்கு ... பாட்ஷா.. மாணிக் பாட்ஷா.. சாரி! எனக்கு இன்னொரு பேர் ஸ்வாமிநாதன். எனக்கே மறந்து போன இந்தப்பெயரைச் சொன்னால் அவன் என் மனசாட்சியாகத்தானே இருக்க வேண்டும்?!

நேமிநாதம் என்பது என்ன என்பதாய் அவன் செய்தி இருந்தது..
அதற்கு பதிலாய் “மேட்டரை வெள்ளித் திரையில் காண்க என்று பதிலனுப்பினேன். இனி நீங்களும் இந்த வெள்ளித்திரையில் காண்க!

நேமிநாதம்  

நேமிநாதம் என்பது ஒரு இலக்கண நூல். இந்த நூலை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனும் சமணசமயம் சார்ந்த புலவர். 900ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க சோழன் காலத்து வாழ்ந்தவர். காஞ்சி மாநகருக்கு அருகே களந்தை எனும் ரைச் சேர்ந்தவர். தொல்காப்பியத்துக்குப் பிறகு இந்த நூல் இயற்றப்பட்டது. காலத்தால் நன்னூலுக்கும் முந்தையது. நன்னூலும் வந்த வந்தபின்னர், இதன் அளவைக் கருதி சின்னூல் என்று அழைக்கப்பட்டதாய் தெரிகிறது.

இந்நூலில் சொல்,மற்றும் எழுத்திலக்கணங்களை பற்றி மட்டும் வெண்பாக்களாய், இரண்டு அதிகாரங்களாய்  இயற்றப்பட்டுள்ளது.  நூற்பெயரைத் தான் சார்ந்த சமயம் சார்ந்து அமைத்திருக்கிறார் குணவீரப் பண்டிதர். நேமிநாதர் எனும் சமணமத  தீர்த்தங்கரர் ஒருவரின் பெயரையே தன் நூலுக்கும் வைத்து அழகுபார்த்திருக்கிறார்.( சில தற்கால திரைப் படங்களின் பெயருக்கும் படத்தின் கதைக்கும் ஏதும் சம்பந்தமில்லாது இருப்பது போல் இலக்கணநூலும் அதற்கான பெயரும் பொருந்தாது நிற்பதாய்ப் படுகிறது.)
இன்னூலாசிரியரின் இன்னுமொரு நூல் வச்சணந்தி மாலை என்பதாகும்.

நூற்முதலில் புலவர் வழங்கிய அவையடக்க வெண்பா நெஞ்சை அள்ளுகிறது. கேளுங்களேன்:

உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண  அமுதான தில்லையோ- மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லாருங் கைக்கொள்வர் ஈங்கு.

பொருள்: இந்தமண்ணில் உள்ள யாருமே அருந்தமுடியாத நிலையில் உள்ள உப்புநீர்  ஆவியாய் மேகமாகி மழையாக பொழியும் காலத்து, அதுவே அமுதமாய் பருகுவதற்கு உகந்ததாய் மாறுவதைப் போல்.,
நான் உரைக்கும் பிழைகள் மலிந்தசொற்களும் நல்லோர்களால் படிக்கப் படுதலால் அனைவரும் ஏற்கும் தகுதி பெறும்.

பெயர்கள் திரிதலை விளக்கும் வெண்பா ஒன்று பார்ப்போம்

பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுஓடாம்
நீராகு நீயிர் எவனென்ப-தோருங்கால்
என்என்னை என்றாகும் யாமுதற்பேர் ஆமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம்.

வழக்கில் இருந்த சில சொற்கள் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றன என்று பட்டியலிடுகிறார். இந்தத் திரிபுகள் வழுவாய் ஆகாமல் ஏற்றுக் கொள்ளப்படும்.
பெயர்  - பேர்
பெயர்த்து பேர்த்து
ஒடு-ஓடு
நீயிர்- நீர்
எவன்-என்,என்னை
பொழுது-போது
யாவை முதலாய் உடைய பெயர்வை முதலாக்கியும் வரும் என்கிறார் (உதாரணம்யார்?-ஆர்? யானை-ஆனை)

பெரும்பாலோர்க்கு பள்ளிப் பருவத்தில் இலக்கணம் மிகவும் கடினமானதாய் தோன்றும். அக்காலத்தில் பாடல்களாகவே இலக்கணத்தை அமைத்ததற்கு காரணம், அவை மனனம் செய்ய சுலபமாய் இருக்கும் என்றுதான்.

எப்போதோ என் நண்பன் என்னைக் கேட்டது சட்டென்று நினைவுக்கு வருகிறது.

அந்தக் காலத்தில் மக்களில் சிலரே புலவர்களாய் இருந்தார்கள். நிறையபேர் போர் வீரர்களாய் இருந்தார்கள்.ஏன் தெரியுமா?”

நாட்டுப் பற்று. இதிலென்ன சந்தேகம்?”

நாட்டுப் பற்றா? ஒரு புடலங்காயும் இல்லை. புலவனாகிறதுக்குப் படிச்சா ஆசிரியன் கிட்ட எழுத்தாணியால சின்னசின்னதாய்க் குத்துவாங்கி ,கொஞ்சம் கொஞ்சமா உயிர விட்டாகணும். போர்வீரன்னா எதிரி வீசுன கத்தில டக்குன்னு போயிடலாம் . அதான் எல்லோரும் போர் வீரர்களாய்ப் போயிட்டாங்க.

இதை ஒரு இலக்கணவகுப்பு முடிந்தவுடன் சொன்னான்..

இலக்கணம் மாறுவதில்லைங்க!




  

50 comments:

பத்மநாபன் சொன்னது…

பாடமா படிச்ச காலத்தில் பதியாத இலக்கணப்பாடம்...இப்படிபதிவா படிக்கிறப்ப பதியவும் செய்து ஆர்வமும் கூடுகிறது.. நேமிநாதத்திற்கு பின்னால் இருக்கும் சரித்திரம் வியக்க வைக்கிறது... படிக்கிற காலத்தில் தினம் இரண்டு கோப்பை தமிழிலக்கணத்தை கரைச்சு கரைச்சு குடிச்சிருப்பிங்க போல...

நிலாமகள் சொன்னது…

ந‌ன்னூல் வ‌ந்த‌ பின் நேமிநாத‌ம் பாட‌திட்ட‌ங்க‌ளிலிருந்தும் ந‌க‌ர்ந்துவிட்ட‌து. இல‌க்க‌ண‌த்தையும் சுவைப‌ட‌ எழுதியிருக்கிறார் குண‌நாத் ப‌ண்டித‌ர்!('காரிகை' கொஞ்ச‌ம் க‌ண‌க்கு சூத்திர‌ம் போல் ப‌டிக்க‌ த‌ட்டையான‌து)எடுத்துச் சொன்ன‌ வெண்பாக‌க‌ள் நாவுக்கும் ம‌ன‌துக்கும் இனிய‌தாய்...

நிலாமகள் சொன்னது…

'க‌ண‌க்கு பிர‌தான‌மான‌' வேலையிலிருந்து கொண்டு இல‌க்க‌ண‌த்தை 'ஒருகை' பார்ப்ப‌தும் பாராட்டுக்குரிய‌தே!

Chitra சொன்னது…

“நாட்டுப் பற்றா? ஒரு புடலங்காயும் இல்லை. புலவனாகிறதுக்குப் படிச்சா ஆசிரியன் கிட்ட எழுத்தாணியால சின்னசின்னதாய்க் குத்துவாங்கி ,கொஞ்சம் கொஞ்சமா உயிர விட்டாகணும். போர்வீரன்னா எதிரி வீசுன கத்தில டக்குன்னு போயிடலாம் . அதான் எல்லோரும் போர் வீரர்களாய்ப் போயிட்டாங்க.


...... இத்தனை அழகாக இலக்கணம் பற்று குறிப்புகள் கொடுத்தாலும், இதுதான் பச்சக் என்று கண்ணில் படுகிறது. ஹி,ஹி,ஹி,ஹி....

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கசக்கும் இலக்கணத்தையும், இனிக்கும் கற்கண்டாய் மாத்தி தந்திருக்காங்க அந்தக்காலத்து புலவர்கள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இலக்கணம்...ம்ம்... என்ன சுவையாக இருக்கிறது இப்போது. படிக்கும்போது விளையாட்டாய் கிண்டல் செய்து விட்டு விட்டோமே என்று இப்போது தோன்றுகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அழகாக இலக்கண குறிப்புகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஸ்வாமிநாதனின் நேமிநாதத்திற்குப் பாராட்டுக்கள்.

இன்னூல் நன்னூல் சின்னூல் இன்னும் அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

பதிவு தொகுப்பு பாராட்டுக்குறியது.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் பத்மநாபன் !இலக்கணமானது இலக்கியம் போன்று வாசிப்பவரை வேறு உலகத்திற்கு உணர்ச்சிப் பல்லக்கில் கூட்டிச் செல்லும் திறன் வாய்ந்தது இல்லை. மொழியை செம்மையாகவும், தவறுகள் இன்றி கையாளவும் துணை புரிகிறது.அடிப்படை இலக்கண அறிவு இருந்தால் கூட மொழியைத் திறம்பட பயன்படுத்த இயலும். நம் தமிழ்
அள்ளஅள்ளக் குறையாத செல்வம். அடுத்த தலைமுறைக்கு இவற்றை அறிமுகப்படுத்துதல் நம் கடமை..

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலாமகள்! நன்னூல் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் இன்னமும் லகுவாக்கி உரைத்தது. அத ஐந்தாறு பதிவுகளாய் வெளியிட உத்தேசம் உண்டு. படிப்பதற்குத் தான் ஆள் தேடவேண்டும்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள்! கணக்கிலிருந்து கோலம்போடுவது ஈறாக எல்லாவற்றையும் செய்யும் முறைகள் உண்டல்லவா? அவைதானே இலக்கணமாகின்றது.

கணக்கு வயிற்றுப் பாட்டிற்கு.
தமிழ் வழிபாட்டிற்கு..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இலக்கியச் செய்திகளை வெகு அழகாக, சுவையாக, ஊட்டி விடுகிறீர்கள். நன்றி.

மோகன்ஜி சொன்னது…

சித்ரா!
//இத்தனை அழகாக இலக்கணம் பற்று குறிப்புகள் கொடுத்தாலும், இதுதான் பச்சக் என்று கண்ணில் படுகிறது. ஹி,ஹி,ஹி,ஹி...//

உங்கள் ரசனையே தனி! பதிவுலகத் தேனி!!

மோகன்ஜி சொன்னது…

வாங்க அமைதிச் சாரல்! உண்மையான வார்த்தைகள்!

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! நான் ஆரம்பிக்கப் போகும் இலக்கண வகுப்பிற்கு முதல் மாணவன் நீர் தான்!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி குமார்!

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! அழகாகச் சொல்கிறீர்கள் மேடம்!

மோகன்ஜி சொன்னது…

ஜி.எம்.பி சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! வாழ்த்துக்கு நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மிக..மிக அருமை..இன்னமும் ஞாபகம் வருகிறது..’ஒன்றன் இயற் பெயர அத்னுடன் தொடர்புடைய வேறோரு பொருளுக்கு தொன்று தொட்டு (தொன்று தொட்டு அண்டர்லைன்) ஆகி வருவது ஆகு பெயர்’ என்று எங்கள் தமிழ் ஐயா சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது!
இலக்கணத்தில் இருபது மார்க்கையும் சுளையாக வாங்கி விடுவேனாக்கும், நான்!
இந்த இடுகை என் பழைய நினைவுகளை கீறி விட்டு விட்டது!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மிக..மிக அருமை..இன்னமும் ஞாபகம் வருகிறது..’ஒன்றன் இயற் பெயர அத்னுடன் தொடர்புடைய வேறோரு பொருளுக்கு தொன்று தொட்டு (தொன்று தொட்டு அண்டர்லைன்) ஆகி வருவது ஆகு பெயர்’ என்று எங்கள் தமிழ் ஐயா சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது!
இலக்கணத்தில் இருபது மார்க்கையும் சுளையாக வாங்கி விடுவேனாக்கும், நான்!
இந்த இடுகை என் பழைய நினைவுகளை கீறி விட்டு விட்டது!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மிக..மிக அருமை..இன்னமும் ஞாபகம் வருகிறது..’ஒன்றன் இயற் பெயர அத்னுடன் தொடர்புடைய வேறோரு பொருளுக்கு தொன்று தொட்டு (தொன்று தொட்டு அண்டர்லைன்) ஆகி வருவது ஆகு பெயர்’ என்று எங்கள் தமிழ் ஐயா சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது!
இலக்கணத்தில் இருபது மார்க்கையும் சுளையாக வாங்கி விடுவேனாக்கும், நான்!
இந்த இடுகை என் பழைய நினைவுகளை கீறி விட்டு விட்டது!!

மோகன்ஜி சொன்னது…

மூவார்! உங்கள் ரசனையே ரசனை! ஆகுபெயர் அருமை!
ஒரே காமெந்தை மூன்று தரம் போட்டால் 'கூறியது கூறல்' என்று எங்கள்தமிழய்யா பெஞ்சு மேல் நிற்க வைத்து விடுவார்!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//அக்காலத்தில் பாடல்களாகவே இலக்கணத்தை அமைத்ததற்கு காரணம், அவை மனனம் செய்ய சுலபமாய் இருக்கும் என்றுதான்.//

அதையேதான் நானும் சொன்னேன் என் ஸ்கூல் வாத்தியிடம் - கண்ணதாசனை கொண்டு "எம்.எஸ்.வி" அவர்களின் இசையில் எல்லா பாடத்தையும் அந்தக்கால பாட்டு போல் மெட்டு போட்டு கொடுத்திருந்தால் நானும் நன்கு படித்து உங்களை போல் இந்தமாதிரி இடுகை போட்டு இருப்பேன்.

சரக்கு இல்லாமல் என்னுடைய "அமெரிக்க லுங்கியும், இந்திய அம்மணமும்" என்று நான் ஏன் போடறேன் !

இருந்தாலும், படிச்சவன் படிச்சவன் தான்பா !!

மோகன்ஜி சொன்னது…

ஆசிரியரை 'வாத்தி' என்று அழைத்தமைக்கு உம்மோடு அரைமணி நேரம் டூ காய்!

நீங்கள் சொன்னதுபோல் இசை வழியே இவற்றைக் கற்பிக்கக் கூடும் எளிமையாய்.

தமிழை ஆழ்ந்து படிக்கும் பழக்கம் இந்த தலைமுறைக்கே இருக்கிறதா என்பது என் சந்தேகம்.

சிவகுமாரன் சொன்னது…

என் சித்தப்பாவிடம் இந்த நூல் இருந்தது. ஒரு முறை கொடுத்து படிக்கச் சொன்னார். இவ்வளவு சுவையானதாய் இருக்குமென தெரியாது. தேடி பார்க்க வேண்டும்.
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொற்களஞ்சியம் அண்ணா

மோகன்ஜி சொன்னது…

தமிழார்வம் உள்ளவர்கள் இலக்கண நூல்களையும் தெரிவு செய்து வாசிக்க வேண்டும்.
'பொற்களஞ்சியம்' நானல்ல. அது பத்மநாபன்..

அப்பாதுரை சொன்னது…

எங்கயோ போய்ட்டீங்க தலைவரே. இதெல்லாம் கேள்வி ஞானம் கூடக் கிடையாது.

meenakshi சொன்னது…

கலக்கல் பதிவு! மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!
//இதெல்லாம் கேள்வி ஞானம் கூடக் கிடையாது//
'கேள்வி' எதுக்கு? உமக்குத்தான் 'ஞானம்' கொட்டிக்கிடக்கின்றதே!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி மீனாக்ஷி மேடம்!

பத்மநாபன் சொன்னது…

//பத்மநாபன்.// திருவனந்தபுரத்தாரை தானே சொன்னீர்கள் ...ஓம் நமோ நாராயணா நமஹ

மோகன்ஜி சொன்னது…

பீதாம்பரம் உடுத்துறப்போ அவரு, காத்தோட்டமா லுங்கி கட்டுனா இவரு..
ரெண்டு பத்மநாபனும் நமக்கு நாராயணன் தானுங்களே?

ரிஷபன் சொன்னது…

கும்பகோணம் கோவிலில் சித்திரக்கவி தேர் வடிவத்தில் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பார்த்து வியந்தேன்.
தமிழ்த் தென்றலில் எங்களை நனைய வைக்கிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! இந்த பணிச்சுமையும், நெடும்பயணங்களும் இல்லையெனில் தமிழே கதியெனக் கிடக்கும் அவா ! ஹீம்! பெருமூச்சு தான் வருகிறது.

மாலதி சொன்னது…

பதிவு தொகுப்பு பாராட்டுக்குறியது.

எல் கே சொன்னது…

அற்புதம் சாமி. நேரம் கிடைக்கறப்ப எல்லாம் தமிழ் அருவியில் எங்களை நனையுங்கள்

மோகன்ஜி சொன்னது…

வாங்க மாலதி! முதல் வருகைன்னு நினைக்கிறேன்! பாராட்டுக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

கார்த்திக்! கண்டிப்பாய் பகிர்வேன் கார்த்திக்! செல்லக்குட்டியை கதை ஒண்ணு சொல்லச் சொல்லுங்க பாஸ்! போரடிக்குது!

aotspr சொன்னது…

"நல்ல பதிவு".
வாழ்த்துக்கள்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

ADHI VENKAT சொன்னது…

தமிழிலக்கணத்தை அவ்வப்போது தந்து எங்களை மகிழ்விக்கிறீர்கள்.

கடைசி விஷயம் பிரமாதம்.

RVS சொன்னது…

அண்ணா! லேட் அட்டெண்டன்ஸுக்கு மன்னிக்கனும்..

இதி ஏமி....

இலக்கணம் மாறுமோ? இலக்கியம் ஆகுமோ? இதுவரை படித்தது......

நிறைய இது போல தொடர வேண்டுகிறேன்.... :-)))

கீதமஞ்சரி சொன்னது…

அற்புதமான பதிவு. தமிழார்வம் இருந்தும் இலக்கணத்தை முறையாகப் படிக்க வாய்ப்பில்லாத என் போன்றோருக்கு இன்சுவை விருந்து.

தினேஷ்குமார் சொன்னது…

தாமதத்திற்கு மன்னிக்கவும் ஐயா...

தங்கள் நலமறிய ஆவல்...

இலக்கணம் சுத்தமா இந்த மண்டைல ஏற மாட்டுதே நான் என்ன செய்வேன் ....

அங்காடி தெரு பக்கத்துல
அங்கோர் ஆலம் விரிந்து
நிழற்க்கொடுக்க சூழ்ந்து
நிக்குதோர் கூட்டம் அதில்
நானும் நிக்குறேன் பாருங்க ...
நிழல் தாருங்கள்...

Aathira mullai சொன்னது…

//“நாட்டுப் பற்றா? ஒரு புடலங்காயும் இல்லை. புலவனாகிறதுக்குப் படிச்சா ஆசிரியன் கிட்ட எழுத்தாணியால சின்னசின்னதாய்க் குத்துவாங்கி ,கொஞ்சம் கொஞ்சமா உயிர விட்டாகணும். போர்வீரன்னா எதிரி வீசுன கத்தில டக்குன்னு போயிடலாம் . அதான் எல்லோரும் போர் வீரர்களாய்ப் போயிட்டாங்க.//

என்ன டைமிங்க்ஸ்? இதைத்தான் பல்துறை வல்லாண்மை என்று கூறுவார்களோ?

இலக்கண வாத்தியாருக்கு வணக்கம். எப்படி உள்ளீர்கள்? நீண்ட நாட்களாயிற்று உங்களோடு உரையாடி.

geetha santhanam சொன்னது…

நேமிநாதம் அப்படின்னு ஒன்று இருப்பதே அறியாத என் போன்ற மக்களுக்கு நீங்கள் அவ்வப்பொழுது தமிழமுதம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

Mrs.Mano Saminathan சொன்னது…

வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரத்தினவேல் சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பெரும்பாலும்,அது ஒரு காதலா..ஸ்னெஹமா..என்று ஒரு தீர்மானத்திற்கு வருவதற்க்குள்..சட்டென்று முடிந்து விடுகிறது..ம்..எத்தனை ஜானுக்களோ..எத்தனை சிவாக்களோ..இருவருக்கும் நடுவே ஊடுருவும் எத்தனை சினிமா பல்லவிகளோ....
இளமையும் காதல் போல் தான் போல இருக்கிறது...சட்டென்று முடிந்து விடுகிறது...ஹூம்..இந்த வரிகள் அருமை.....
..போறுமே ரெளடியாம் ரெளடி..ஒரு கடுதாசிக்கே பயந்து சாவுறே..”
சூப்பர் வரிகள்...

தங்கள் மூவார்