புதன், அக்டோபர் 14, 2015

வாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள் )


எது சிறுகதையாவது எனும் கேள்வி சற்றே சிக்கலானதுதான்., ஒரு சம்பவத்தை, அல்லது கதைமாந்தரின் ஒருநேரத்து உணர்வை, ஒரு சிக்கலை, ஒரு தெளிவை, ஒரு முடிவை சொல்லிச்செல்லும் எழுத்தே சிறுகதை என உருப்பெற்று விட்டது. சிறுகதையில் கதை மேலதிகமாய் நீட்சி பெறுவதில்லை. ஒரு நாவலுக்கான பெருங்கதையின் விவரிப்பை நான்கைந்து பக்கங்களில் சுருக்கி சொல்லும் வடிவக் குறுக்கமும் சிறுகதையாவதில்லை.

தமிழில் சிறுகதைகள் ஒரு முக்கிய இலக்கியஆக்கமாய் முழுமை பெற்றுவிட்டதென்றே சொல்லலாம். கடந்த ஏழெட்டு சதாப்தங்களில் சிறுகதை படைப்புகள் பலநிலைகள் கண்டு முன்னேறி வந்திருக்கின்றன. வெகுஜனப் பத்திரிக்கைகள் பெரும்பாலான சிறுகதைகளின் எல்லைகளை வகுத்து விட்டாலும், சிற்றிதழ்கள் பலவித உத்திகளை முயற்சி செய்யும் களனாய் வாய்த்திருந்தன. இணையமோ,வெள்ளமடைகளைத் திறந்து விட்டது எனலாம். எல்லாமும் சிறுகதைகளாய் வடிக்கப்படுகின்றன. ஆனால் வடித்ததெல்லாமும் சிறுகதை ஆவதில்லை. இந்த ஆராய்ச்சி விரிக்கப் பெருகும்ஆதலின், இந்த அளவில் நிறுத்தி மேலே தொடருவோம்.

திரு ஜி.எம். பாலசுப்ரமணியம் அவர்கள் வலையுலகில் நன்கு அறிமுகமான பதிவரும் எழுத்தாளரும் ஆவார். வயதுக்கும் படைப்பூக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து வரும் 76 வயது இளைஞர். கதைகள், அனுபவப்பகிர்தல்கள், கவிதை, ஆராய்ச்சி, ஆன்மிகம் எனப் பயணிக்கும் இவரின் பதிவுகள் வேகமும், பிடிக்கடங்கா திமிறலும் கொண்டவை. அதொன்றாலேயே தம் வாசகர்களை ஈர்ப்பதையும் தக்க வைத்துக் கொள்வதையும் நிகழ்த்துகிறார். ஒளிவுமறைவின்றி தன் எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் பதிவு செய்கிறார். இவர் கருத்தை  மறுதலிக்கலாம். ஆயினும் இவரை வாசித்தலை தவிர்க்கமுடியாது.
ஜி.எம்.பி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘வாழ்வின் விளிம்பில்’ அண்மையில் வெளிவந்த படைப்பாகும்.

இந்த விமரிசனமும் சற்றே தாமதம் தான். முன்னரே எழுதிவைத்த என் அணிந்துரை, ஒரு சிறுகதை ஆராய்ச்சிக் கட்டுரையாகவே விரிந்து விட்டபடியால் அதை பிறிதொரு தருணத்திற்காக பக்கலில் வைக்க முடிவு செய்தேன். இவரென்ன அடுத்த புத்தகம் போடாமலா இருக்கப் போகிறார்? அப்போதைக்கிப்போதே அதை பத்திரமாய் பதுக்கி வைத்தேன்! இந்தக் கட்டுரையை இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்புக்கான மதிப்புரை என்றே கொள்ளலாம்.

இந்தக் கதைகள் பத்திரிக்கைகளில் வெளியானவை அல்ல. சொன்ன விதத்திலும், சொல்லப்பட்ட பொருளிலும் தனக்கான வடிவை தாமே அமைத்துக்கொண்ட கதைகள். இவற்றை, சம்பவப் பதிவுகள்... எண்ணச் சிதறல்கள்...ஒரு நோக்கு.... உள்ளொளிப் பயணம்.... உணர்ச்சி வெளிப்பாடு.... என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். முந்திரி,திராட்சை, கல்கண்டு,பாதாம்,கர்ஜூரம் என்று பலதும் கலந்துகட்டிக் கொடுத்தால் சாப்பிடமாட்டோமா என்ன?

இந்தத் தொகுதியில் மொத்தம் பதினாறு கதைகள். எழுத்தாளர் உருவாக்கியிருக்கும் இந்தக் கதைவனத்தில் பலதருக்கள், பலபூக்கள், பலவாய்த் தாவரங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் அது வகையொழுங்கு பூண்ட நந்தவனமாய் இராமல், அந்த மீறலே கூட ஒரு ஒழுங்காய் காணப் பெறுகிறது.

‘வாழ்வின் விளிம்பில்’ கதையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ரங்கசாமியின் சஞ்சலங்கள் சீராக பதியப்பட்டிருக்கிறது. முடிவை ஊகத்துக்கு விட்டபடி முடிகிறது. இந்தத் தொகுதியின் சிறந்த படைப்பாய் இதையே கொள்ளலாம்.

‘கேள்வியே பதிலாய்’ எனும் கதையில் வரும் அம்மாஜி போன்ற கதாபாத்திரத்தை நாம் பலஊர்களிலும் பார்க்கலாம். பாத்திரப் படைப்பில் ஒரு கூர்மை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.
‘ஏறி வந்த ஏணி’யும் இன்றைய குடும்பங்களின் கசப்பான யதாத்தத்தை பேசுகிறது. தலைப்பே உணர்த்தும் ஒரு குடும்பத்தலைவனின் நிலை, குடும்ப நலனுக்காக  அவன் மேற்கொள்ளும் அனைத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரத்தை பேசுகிறது. அந்த வெறுமையின் கசப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

‘மனசாட்சி’கதை, உடற்கிளர்ச்சி தோற்றுவிக்கும் காதல் எந்த திசையில் பயணிக்கும் என்று படம்பிடித்து காட்டுகிறது.. ஒரு வழக்கமான கதை.
இளமையின் ஏழ்மை மனத்தளவில் பலருக்கும் கடைசிவரை இருக்கத்தான் செய்கிறது. அதிக சம்பாத்தியம் கூட அதை மாற்றுவதில்லை என்கிறது ‘அனுபவி ராஜா அனுபவி’. 
ஒரு சராசரி மனிதன் விஸ்வரூபம் எடுக்கும் தருணம் ஒன்றை அழகாகச் சொல்லும் ‘இப்படியும் ஒரு கதை’. கச்சிதமான உருவாக்கம்.
பெண்களுக்கான அநீதி சமுதாயத்தில் இன்னமும்கூட நீங்கவில்லை என்று ஆசிரியர் வீசும் சாட்டை ‘எங்கே தவறு’ கதையில் தெறிக்கிறது.
‘விபரீத உறவு’ கதையின் ஏமாற்றுக்கார வைத்தியனும்,
ஜோதிட பலிதம் பேசும் ‘சௌத் வி கா சாந்த் ஹோ’வும்,
திருமணம் நடத்துவதின் சிக்கல்களைச் சொல்லும் ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’வும்,

இளம் விதவைக்கு சம்பிரதாயங்களின் பெயரால் நிகழும் அவலங்களைச் சாடும் ‘பார்வையும் மௌனமும்’ இதர சில கதைகள்.     

சொல்லவந்ததை ஐயம் திரிபற சொல்லிச் செல்கிறது இவரின் எழுத்து. கதை மாந்தர்களூடே ஆசிரியரும் பயணிக்கிறார்.. அவர்களின் சம்பாஷணைகளோடே இவர் குரலும் ஒலிக்கிறது. உபதேசிக்கிறது ; கடிந்து கொள்கிறது; அனுதாபிக்கிறது. சமயங்களிலே வாசகன் ஊகத்துக்கு இடம்தர மறுக்கிறது.. அந்த ஊடாடும் குரலே கதையாடல் செய்கிறது. அதிகம் கைக்கொள்ளப் படாத உத்தியாய் நிற்கிறது. சட்டென்று நம்மை ஆட்கொள்வது கதைசொல்லலில் ஜி.எம்.பி சார் கைகொள்ளும் மொழியின் எளிமையே. வித்தார ஜோடனைகள் இல்லாத நேரிடையான விவரணைகள்.

நம் பாசத்திற்குரிய ஜி.எம்.பி சாரின் படைப்புகளுக்கு இன்னமும் எழுது பொருள் இருக்கிறது. அவருக்கும் கூட வற்றாத கற்பனைத்திறன் இருக்கிறது. எழுதியதைக் கொஞ்சம் ஊறப் போட்டு, செதுக்கவும் செய்தல் வேண்டும். நன்கமைந்த கருத்தே ஆயினும், கதைப்போக்கின் ஓட்டத்தை மட்டுப்படுத்துமெனில் நிர்தாட்சண்யமாய் கத்திரியை கையிலெடுக்கத்தான் வேண்டும். இதை விமரிசகனாக சொல்லாமல் அவரின் வாசகனாய் சொல்கிறேன். என் தமையனுக்கு இதைச் சொல்ல எனக்கில்லாத உரிமையா?!

அன்புடன்

மோகன்ஜி

44 comments:

sury Siva சொன்னது…

//நிர்தாட்சண்யமாய் கத்திரியை கையிலெடுக்கத்தான் வேண்டும்.//

இரண்டாவது வார்த்தையில் நாலாவது எழுத்து இருந்துவிட்டு போகட்டும்.

சு தா

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Geetha Sambasivam சொன்னது…

அருமையான விமரிசனம். சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். கதையைச் செதுக்குவது என்பது கை தேர்ந்த சிற்பிகளால் தான் இயலும். உங்களைப் போல்! சுந்தர்ஜியைப் போல் பிரமிக்க வைக்கும் சிற்பிகளுக்கு முன்னர் என் போன்றவர்கள் எம்மாத்திரம்! :)

sury Siva சொன்னது…

//சுந்தர்ஜியைப் போல் பிரமிக்க வைக்கும் சிற்பிகளுக்கு முன்னர் என் போன்றவர்கள் எம்மாத்திரம்! //

ஒரு வில்லினை விடுத்து வான வில்லினை வரையும்

வானவில்லார் ஏதும் உளி அல்லார்.
வாய் திறந்து பேசுவார் கவிதை ஆனது.
பாடம் ஒன்று நடத்தினாலும் அது பாடல் ஆனது.

கற்ற வித்தையோ என வியந்தேன்.
கடவுள் இட்ட விதை என்றார்.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா !
//நாலாவது எழுத்து இருந்துவிட்டு போகட்டும்//
குறும்புக்கார தாத்தா.... ஹா...ஹா.

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நாகேந்திர பாரதி சார்!

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
நான் இயல்பிலேயே என் பேச்சாலும் எழுத்தாலும் யாரும் சிறிதும் மனவாட்டம் கொள்ளலாகாது என்ற கவனத்துடனேயே இருப்பவன். இந்த சுபாவத்தினாலேயே கருத்துக்களை தவிர்ப்பதும் உண்டு. மிக நெருங்கிய நண்பர்களின் ஆக்கங்களுக்கான என் எதிர்வினைகளை தனிப்பட்ட முறையில் கோடிட்டுக் காட்டிவிடுவதுதான் வழக்கம். மட்டைக்கு இரண்டு கீற்றாய் பிளப்பதும் கடுமை காட்டுவதும் தான் விமரிசனம் என்பதை நான் ஒத்துக் கொள்வதில்லை.

படைப்பாளிகள் ஆதாரமாகவே உணர்வுபூர்வமானவர்கள்.உள்ளத்தால் மென்மையானவர்கள். இந்த இரண்டு நுண்மைகளும்தான்அனுபவத்தையும், கற்பனையையும் கொண்டு படைப்பை நெய்யும். எந்த கடும்விமரிசனமும் அந்த படைப்பாளியை ஆழமாகவே காயப் படுத்திவிடும். படைப்பை விட்டுவிட்டு படைப்பாளியைத் தாக்குவதும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. இவை ஆரோக்கியமான இலக்கிய சூழலை ஏற்ப்படுத்தாது.இந்த ஆக்கபூர்வமான விமரிசனம் என்பது,எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும். அதே சமயம் ஒரு படைப்பை நிராகரிப்பது என்பது வாசகனின் உரிமை.

இந்த விமரிசனத்தை நான் GMB சாரிடம்சொன்னபோது அட்சரம் பிசகாமல் அப்படியே வெளியிடுங்கள் என்ற அவரின் பெரும்போக்கை நான் வியக்கிறேன். அது அனுபவம் தரும் சமநிலை.
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி கீதா மேடம்!

மோகன்ஜி சொன்னது…

சுப்பு தாத்தா!

உங்கள் பாராட்டுக் கவிதைக்கு என் வணக்கங்கள்.
அதக் கடவுள் இட்ட விதை என்கிறீர்கள்.
உங்களைப் போன்ற
பெரியவர்கள் இட்ட அட்சதை என்கிறேன் நான்.

Geetha Sambasivam சொன்னது…

"உங்களைப் போலவும், சுந்தர்ஜியைப் போலவும்" என்று வந்திருக்க வேண்டும். அவசரத்தில் கவனிக்கவில்லை. இப்போது தான் கவனித்தேன். நான் சொல்ல வந்தது! "கதையைச் செய்துக்குவது என்பது உங்களைப்போலவும், சுந்தர்ஜியைப் போலவும் கை தேர்ந்த சிற்பிகளால் தான் இயலும்! என்பதே! தட்டச்சில் வந்த தவறுக்கு மன்னிக்கவும். :)))

Geetha Sambasivam சொன்னது…

//உங்களைப் போன்ற
பெரியவர்கள் இட்ட அட்சதை என்கிறேன் நான்.//

அதைப் பெறவும் நிறையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்த்துகள். விமரிசனம் மனதிலேயே நிற்கிறது!

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,
நீங்கள் சொல்ல வந்தது புரிந்து கொண்டேன்.
//"உங்களைப் போலவும், சுந்தர்ஜியைப் போலவும்" என்று வந்திருக்க வேண்டும்.//
எப்படி என்னையும் என் சிஷ்யனையும் நீங்கள் இப்படி பிரிக்கப் போச்சு? அதனால் தான் உங்கள் கீபோர்டே சதி செய்து விட்டது!
மற்றபடி கைதேர்ந்த சிற்பிஎல்லாம் எனக்கு பெரிய வார்த்தை.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
//அட்சதை பெறவும் நிறையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//
உண்மை.அந்தக் கொடுப்பினையைக் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி!

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல விமர்சனம்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம்!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

ஜி.எம்.பி அவர்களின் பதிவுகளை தற்சமயம் தொடர்ந்து வாசித்தாலும் இந்த சிறுகதைத் தொகுதியை வாசிக்கவில்லை! அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்! விரைவில் வாங்கி வாசிக்க வேண்டும்! நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க தளிர் சுரேஷ். தொகுதியை அவசியம் படியுங்கள்.

சென்னை பித்தன் சொன்னது…

நான் படித்ததில்லை.ஒரு சிறப்பான் விமர்சனத்தின் மூலம் படிக்கும் எண்ணத்தைத் தூண்டியிருக்கிறீர்கள்

G.M Balasubramaniam சொன்னது…

நிர்தாட்க்ஷண்யமாகக் கத்திரியை அல்லது கத்தியை எடுக்க வேண்டிய இடம் எது என்று கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் இல்லாவிட்டால் எல்லாமே பெர்செப்ஷன் என்பது போல் தோன்றும் இதற்கு முன் வந்த விமரிசனங்களின் கோர்வையைப் பதிவாக்கி இருக்கிறேன் அதையும் காண வேண்டுகிறேன் சுட்டி கீழே

http://gmbat1649.blogspot.in/2015/10/blog-post_8.html
விமரிசனத்துக்கு நன்றி ஜி

sury Siva சொன்னது…

//நிர்தாட்க்ஷண்யமாகக் கத்திரியை அல்லது கத்தியை எடுக்க வேண்டிய இடம் எது என்று கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் இல்லாவிட்டால் எல்லாமே பெர்செப்ஷன் என்பது போல் தோன்றும் இதற்கு முன் வந்த விமரிசனங்களின் கோர்வையைப் பதிவாக்கி இருக்கிறேன் அதையும் காண வேண்டுகிறேன் சுட்டி கீழே

http://gmbat1649.blogspot.in/2015/10/blog-post_8.html ///


அடுத்து மோகன் ஜி என்ன செய்வார் ?
வாசகர் பெருமக்களுக்கு ஒரு மா பெரும் போட்டி.
உங்களது சரியான பதிலை தேர்ந்து எடுக்கவும்.

1. ஜி.எம்.பி. சார் காட்டி இருக்கும் பதிவு க்குச் சென்று அங்கு இருக்கும் பதிவுகளை கருத்துக்களை, பின்னூட்டங்களை உடனடியாகப் படித்து அதற்கான தமது பதிலை எழுதுவார் .

2. இதான் என்னோட விமர்சனம். அதெல்லாம் போய் படிக்க எனக்கு இப்போ டயம் இல்ல. இருந்தாலும் 2017ம் வருஷம் ரிடையர் ஆனப்பறம் படிக்கிறேன். என்று ஜகா வாங்குவார்.

3. ஒரு கத்திரி அல்லது கத்தி எடுத்து தனது வலைப் பதிவை கட் செய்வார் / வெட்டி விடுவார். ததாஸ்து என்று சொல்லி,எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.பால சுப்பிரமணியா என்று சத்தம் வெளிலே கேட்காம சொல்வார்.

4. முன்னாலே ஒரு தரம் செய்தார்போல அடுத்த ஆறு மாசம் அக்ஞாதவாசம் போவார்.

5. அப்பாதுரை சார் , கீதா சாம்பசிவம் அவர்கள் நடுவர்களாக அமர்ந்து நல்ல தீர்ப்பு சொல்லுவார் என்று காத்து இருப்பார்.

6. இல்லை, முழு மூச்சாக திரும்ப ஒரு முறை அந்த புத்தகத்தை படித்து எதை எதை எல்லாம் கட் செய்வது என்பதை எடுத்துச் சொல்ல, உதவியாளர் தேவை என்று ஒரு ஆட் கொடுப்பார்.

சரியான பதிலை சொல்பவர்க்கு, சு தா கையில் உள்ள புத்தம் புதிய புத்தகம் ஒன்று பரிசாக தரப்படும்.
அது என்ன புத்தகம் என்று இந்தப் போட்டி முடிந்தபின் வெற்றி பெறுபவருக்கு மட்டும் தெரிவிக்கப்படும்.

சுதா.
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு
பால் கோடாமை சான்றோர்க்கணி.

மோகன்ஜி சொன்னது…

சென்னை பித்தன் சார்! பாராட்டுக்கு நன்றி. என் பிற ஆக்கங்களையும் படித்துப் பாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

GMB சார் ! நாம் சந்திக்கும் ஒரு மாலை நேரம் கதைகளை ஒவ்வொன்றாய் விவாதித்து வேண்டுமானால் நீங்கள் கேட்பதை செய்வோம்.
நீங்கள் அனுப்பிய உங்கள் விமரிசனத்திற்கு தொகுப்பை படித்தேன். விமரிசித்துள்ளார் அனைவருமே என்னைப்போலவே உங்களிடம் அன்புமிக்கவர்கள் என்றுணர்கிறேன். நன்றி ஜி!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சூரி சார்!

நீங்கள் வைத்திருக்கும் வாசகர் போட்டியில் நானும் கலந்து கொள்ள அனுமதியுண்டா?

உங்கள் கேள்விகளை ரசித்தேன். இருந்தாலும் கொஞ்சம் விஷய ஞானத்துக்காய் சில விளக்கங்கள் கேட்ட வரிசையில்:

1. ஒரு விமரிசனம் எழுதுமுன்னர், பிறர் கருத்துக்களையும் விமரிசனங்களையும் படிப்பதை தவிர்த்தல் நலம். ஏனெனில் அது மனச்சாய்வையும், முன்முடிவுகளையும் ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வழிமுறை அது. எழுதிய பின்னர் ஒப்பீடு செய்து கொள்ளலாம்.

2. நன்கு ஆய்ந்த பின்னரே காரியத்தில் இறங்குவதால் ஜகாக்களுக்கு இடமில்லை.

3. இந்த விமரிசனத்தையும் சில வேண்டுகோள்களுக்கு பின்னரே செய்ததால் 'இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' சிண்ட்ரோம் இல்லை.

4. என் அக்ஞாதவாசம் என் விருப்பினாலேயே அவ்வப்போது இருக்கிறது. இதில் யாருக்கும் நஷ்டம் உண்டா என்ன?!

5. அப்பாதுரை, கீதா சாம்பசிவம் போன்ற ஜாம்பவான்களுக்காய் நான் காத்திருக்கலாம். அவர்கள் அவர் வேண்டுமே!

6. உதவியாளரைக் கூப்பிடுவதற்கு பதில் GMB சாரையே அல்லவா கூப்பிட்டு விடுவேன்?? நான் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ன?

நீங்கள் நகைச்சுவையாக கேட்டதற்கு நகைச்சுவையாகவே பதில் போல சொன்னேன். ஸீரியசாக நீங்களோ, GMB சாரோ எடுத்துக் கொள்ள வேண்டாம். ஸ்மைலி வசதி இல்லை என்று அறிக.

கடைசியாக ஒரு குறளைப் போட்டவங்க பாருங்க..... அட்டகாசமான அறிவுரை அல்லவா அது?

sury Siva சொன்னது…

//ஞானத்துக்காய் ///

???? !!!!

ஞானத்துக்காய் நெவர்.
ஞானப்பழம் அல்லவா !!

நான் சீரியசா எழுதி பல வருடங்களாகி விட்டன மோகன் ஜி சார்.

நோ டூ வித் எனி ஒன் . சேத்தி ப்ளீஸ்.

சு தா.

மோகன்ஜி சொன்னது…

// விஷய ஞானத்துக்காய் //

'தகவலுக்காக' எனும் அர்த்தத்தில் சொன்னேன் பாஸ்.

ஸீரியசாய் இல்லாமல் இருப்பதுதான் உங்க இளமையின் ரகசியமா?

'டூ'விட்டாரை ஒறுத்தல் அவர் நாண
பீர்வாங்கித் தந்து விடல்.

நிலாமகள் சொன்னது…

பிடிக்கடங்கா திமிறல்//

அப்போதைக்கிப்போதே//

ரசித்தேன்.

G.M Balasubramaniam சொன்னது…


@ மோகன் ஜி
நடக்க வாய்ப்பில்லாத சங்கதி. கடந்த மே அல்லது ஜூன் மாத வாக்கில் உங்கள் பெங்களூர் பயணம் இருக்கும் என்று எழுதி இருந்தீர்கள். நானும் எதிர்பார்ப்பில் ஏமாந்ததுதான் மிச்சம் சில விஷயங்களை எழுதி விடுவதே மேல் சந்திப்பில் தர்க்கம் கூடாது அது ஒருவருக்கு வெற்றி தரலாம் ஆனால் நட்பினை இழக்கும் வாய்ப்புண்டு,உங்கள் கருத்து கேட்டு எழுதியவன் நான் அதை என்றும் கட்டுப்படுத்த விரும்பமாட்டேன் என் எழுத்துகளில் என்னையும் மீறி என் கருத்துக்கள் வெளிப்படும் அதற்காகத்தானே எழுதுகிறேன் அன்புள்ளவர்கள் விமரிசனம் சிலஎன் திறமை பற்றியும் இருந்தது. பெங்களூர் வாருங்கள் என் கதைகளை அலச அல்ல உங்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்புதர.முடிந்தால் சுதாவுடன் அவரும் என் பொன்விழா மண நாளுக்கு வருவதாகக் கூறி வரவில்லை.

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா! நலம் தானே?
நானும் GMB சாரை திணறத் திணற சிலாகிச்சிருக்கேன்.. விடறாரா பாருங்க..
உங்க கவிதை நூலுக்கு நான் ஏதும் எழுதுறதுக்கு முன்னாடி பாண்ட் பேப்பர்ல கையெழுத்து போட்டாத்தான் எழுதுவேன்! சரியா?

மோகன்ஜி சொன்னது…

GMB சார் !
-போனமுறை பெங்களூர் பயணத்தின்போது எதிர்பாராத காரணங்களால் உங்களை சந்திக்க
இயலவில்லை.மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.
-கருத்துகளை தர்க்கம் என்று என் எடுத்துக் கொள்ளவேண்டும்? அனல்வாதம் புனல்வாதம்
என்ற இலக்கிய சர்ச்சையா இது? சந்திக்கும் வாய்ப்பமைந்தால் ஒரு இங்கிதம் மிக்க
மோகனையே பார்ப்பீர்கள்.

-//என் எழுத்துகளில் என்னையும் மீறி என் கருத்துக்கள் வெளிப்படும் அதற்காகத்தானே
எழுதுகிறேன் அன்புள்ளவர்கள் விமரிசனம் சிலஎன் திறமை பற்றியும் இருந்தது//

என் விமரிசனத்தை மீண்டும் படியுங்கள்.. உங்கள் எண்ண வெளிப்பாட்டையும், உங்கள்
திறமையையும் நான் குறிப்பிட்டிருக்கிறேனே?
- அவசியம் அடுத்த முறை பெங்களூர் பயணத்தில் உங்களை சந்திப்பேன். எனக்கொரு
'டி ஷர்ட்' வாங்கி வையுங்கள்.

- நான் சு.தா. அவர்களை சந்தித்ததில்லை.போட்டோவில் பார்த்த முகம் "சுமார் மூஞ்சி
குமார்' ஆகவே இருந்தது! எனவே சந்திக்க முயலவில்லை! ஒருமுறை சென்னையிலோ
பெங்களூரிலோ நம் பதிவர்கள் சிலர் சந்திக்க வேண்டும்.. ஒருமுறை பத்து பதிவர்கள்
சென்னையில் ஒரு மாலை சந்தித்தோம்.. இனியதோர் மாலைபொழுதாகவே அது
அமைந்தது.

மற்றபடி இந்த விமரிசனத்தை உங்களுக்கு அனுப்பிவைத்து, நீங்கள் கேட்டுக் கொண்ட படியே வானவில்மனிதனில் வெளியிட்டேன். எனவே அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இதில் மேலும் விவாதிக்க என்ன உள்ளது?. நான் ஒரு சாதாரண வாசகன்.என்னை பெரிதாகப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மோகன்ஜி
-

sury Siva சொன்னது…


நானும் GMB சாரை திணறத் திணற சிலாகிச்சிருக்கேன்.. விடறாரா பாருங்க..
உங்க கவிதை நூலுக்கு நான் ஏதும் எழுதுறதுக்கு முன்னாடி பாண்ட் பேப்பர்ல கையெழுத்து போட்டாத்தான் எழுதுவேன்! சரியா
//

பாண்ட் பேப்பர் ரூபாய் 100

ரிஜிஸ்ட்ரார் செலவு 1450 (சரியான கட்டணம் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளப்படும் )

பிரிண்டிங் ; 50

சுப்பு தாத்தா கன்சல்டிங் பீஸ் 150


மொத்தம் ரூபாய் 2650 உடனடி யாக அனுப்பி வைத்தால், பாண்ட் பேப்பரை உங்கள் இருவர கையெழுத்துக்காக இரண்டே நாட்களில் அனுப்பி விடுவேன்


நிற்க. வீட்டுக்கே வந்தும் சுப்பு தாத்தா இந்த பாண்ட் பேப்பரை தருவார். போக வர விமான கட்டணம் மட்டும் தந்தால் போதும். அப்பொழுது, கன்சல்டிங் பீஸ் இருக்காது. ஆனால், ஸ்ட்ராங் காபி தரவேண்டும். சக்கரை கம்மி.


க்யூவில் அடுத்த நபர் இருப்பதால் உடன் பதில் சொல்லவும்.


சுப்பு தாத்தா.

G.M Balasubramaniam சொன்னது…


சென்ற என் பின்னூட்டத்தில் ” அன்புள்ளவர்களின் சில விமரிசனம் என் திறமை பற்றியும் இருந்தது” என்பது என் திறமை இன்மை பற்றியும் என்றிருந்திருக்கவேண்டும் மீண்டும் வந்ததற்கு மன்னிக்கவும்

sury Siva சொன்னது…

//போட்டோவில் பார்த்த முகம் "சுமார் மூஞ்சி
குமார்' ஆகவே இருந்தது//

எக்சாக்ட்லி . . வாட் எ ரெவலேஷன் !!!

சு முகாய நமஹ
மூ ஷிகவாஹனாய நமஹ
கு குமாராய நமஹ.

sarva mangalaani bhavanthu.
சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய GMB சார், மீண்டும் ஒருமுறை படியுங்கள். நான் உங்கள் கற்பனைத் திறன் பற்றி உயர்வாகவே கூறியிருக்கிறேன். யாரும் திறமையை மட்டு என்று சொன்னதாய்த் தோன்றவில்லை.
நீங்கள் பல விஷயங்களையும் பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள். அவற்றில் நல்ல கருத்துக்களால் வரவேற்பு பெற்றவைகளை, அல்லது உங்கள் உள்ளுணர்வில் உறைந்த பதிவுகளை தேர்வு செய்து வகையமைப்பு படுத்தி, தேவையெனில் சில மாற்றங்கள் செய்து ஒரு கட்டுரைக் தொகுப்பாக பதிப்பில் கொண்டு வாருங்கள். கட்டுரைகளில் உங்கள் வலிமையான வெளிப்பாட்டை கண்டிருக்கிறேன். யோசியுங்கள். அவை உங்கள் பேர் சொல்லிக் கொண்டு கிடக்கும்.

மீண்டும் மீண்டும் நீங்கள் வருவது உங்கள் உரிமை. வாருங்கள் ஜி.

நான் மேலே குறிப்பிட்டயோசனையை பரிசீலியுங்கள். நலமே விளைக!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுதா! 'சுமார் மூஞ்சி'என்றா வந்து விட்டது? நான் சுகுமார மூஞ்சி என்றல்லவா அடிக்க நினைத்தேன். மாமியிடம் காட்டாதேயும். நான் அங்கு வந்தால் எப்படி என் அழகனை அப்படி சொல்லப் போச்சு என்று பிலுபிலுவென பிடித்துக் கொள்வார்கள். சு. மூ.சு.தா ! சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Geetha Sambasivam சொன்னது…

//சு. மூ.சு.தா ! சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !//

காலங்கார்த்தாலே கணினியைத் திறந்தா நல்லா ரசிச்சுச் சிரிச்சேன்! நன்றி. :)

மோகன்ஜி சொன்னது…

சிரிக்க தெரிஞ்சவன் மனுஷன்...
நல்லா சிரிக்க தெரிஞ்சவன் பதிவர்.
தன்னைப் பார்த்தே சிரிச்சா ஞானி.
தனியா சிரிச்சா.... மோகன்!

சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருங்க கீதா!


sury Siva சொன்னது…


//சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !//


வெரி ஸ்ட்ராங் அப்ஜக்ஷன் யுவர் ஆனர்


மூஞ்சி என்ற சொல் அழு மூஞ்சி அல்லது அழுக்கு மூஞ்சி என்று தான் பயன்படுத்தப்படுகிறது.


தொல்காப்பிய இலக்கணத்தை உற்று நோக்கியபோது, முகரை என்ற சொல் தான் சரி எனவும் மூஞ்சி என்ற சொல் வடமொழியின் திரிபு எனவும் வெள்ளிடை மலை போல் தெளிவாகிறது.


எனினும் முகரை என்னும் சொல் தனியே நிற்காது பின்வரும் ஒரு சொல்லுக்கு அடை மொழியாகவும் பயனுருவதால், முகரைக்கட்டை என்ற சொல் பண்டைக்காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது.


முகரை என்ற சொல்லுக்கு அடுத்த சொல்லும் எதுகை மோனையுடன் வரவேண்டும் என்ற இலக்கணக் கூற்றுப்படி,


முகரைக்கட்டை என்னும் சொல்லுக்குப் பின்னே வரும் பெயர்ச் சொல் ஒன்று , மு, மோ,வில் துவங்க நன்று.


மோவில் துவங்கும் பெயர்ச்சொற்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.

உங்களுக்கு ஏதேனும் சொல் அதுவும் பெயர்ச்சொல்

மனதில் வருகிறதா

மோகன்ஜி ?


ஆஹா...வந்துவிட்டது !!


சுப்பு தாத்தா.

sury Siva சொன்னது…

//தன்னைப் பார்த்தே சிரிச்சா ஞானி.//


தனக்குள்ளே சிரிப்பவரும்

தன்னைப் பார்த்தே சிரிப்பவரும்

தரணியில் பலருண்டெனினும்


தூர் வாரா ஊரணியில்

ஊர் எல்லாம் நீர் மொள்ள

உவர்ப்பெனவே ஒருவன் சொல்ல

உருண்டிடுது பாரவன் தலையும்.


நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்

மேற்சென்று இடித்து விடல்


என்றார் வள்ளுவர்.


வாருங்கள் இங்கே அம்மா தாயே

பாருங்கள் இங்கே பரிதாபத்தை.


நட்டல் என்பதும் நடித்தலோ ?

பாட்டு எழுதியவன் சென்று விட்டான். .

இடித்தவனும் படித்தவனும்

படுத்துவிட்டான்.


ஞானி தன்னைப்பார்த்தே சிரிக்கிறான்.

ஞானம் வந்துவிட்டது.


யுரேகா... யுரேகா..


சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

இனிய சு.மூ.சு.தா,

//மூஞ்சி என்ற சொல் அழு மூஞ்சி அல்லது அழுக்கு மூஞ்சி என்று தான் பயன்படுத்தப்படுகிறது.//

அபச்சாரம் பண்ணிட்டேளே சுதா!

கேளுங்க!

ஆனந்த விகடனில் வாலி இராமானுஜர் கதை எழுதும் பொது, இராமானுஜர் காஞ்சிக்கு வந்ததை குறிக்க இப்படியாக எழுதினார் :

தன்னைத் திருப்பெரும்புதூரை விட்டு
காஞ்சியில் குடியேறி - அவனது அருள்மிகு
மூஞ்சியில் முழிக்குமாறு
பணிக்கிறான் என்றும்...

ஆனானப் பட்ட வாலியே பெருமாள் முகரையை மூஞ்சின்னுட்டாரே!
ஏனானப் பட்ட...??
கொஞ்சம் தமிழ் தெரிஞ்சஆத்மாக்கள் எல்லாம் வழிச்சிகிட்டு இல்லே சிரிச்சாங்க!

இந்த மூஞ்சியை எதுகை/மோனையாக வைத்துக் கொண்டு கொஞ்சபேர் கவிதையா எழுதி மனசை ஆத்திகிட்டோம்.. 'மூஞ்சைப் பாரு'ன்னு தேத்திகிட்டோம்!

முகரக் கட்டை மோ..மூ.. என்று நகுமோமு பாடும் சுதாவே!
முகர அகர எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்று இறுமாந்து பாடும் நம்பியாரே!

உம்ம மனசுலே இப்படித் தானே நினைத்து சொன்னீர்?? கேளும்.....

முகரக் கட்டை மோகனம்
மூக்கு ஒரு வாகனம்
தகரக் கொட்டாய் தியேட்டரில்
தரை டிக்கிட்டு போனதும்,
நகரச் சந்து பாக்கியின்றி
பிகர பாக்க போனதும்,
ஷுகரப் பார்த்த எறும்பாட்டம்
சுத்திசுத்தி வந்ததும்,
சிகரக் கவிஞன் நானென்று
மொக்கைகவிதை சொன்னதும்,
மகர ஜோதி பாக்கவென்று
சாமி வேஷம் போட்டதும்,
பகர இன்னும் ஏதுமில்லை
பவிஷு இளிக்குது மோகனா...

மோகன்ஜி சொன்னது…

சுதா! யுரேகா கவிதை.. பின்றீங்க தலைவா!

sury Siva சொன்னது…

அபச்சாரம் பண்ணிட்டேளே சுதா! //

தேவாள் க்ஷமிக்கணும்.

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச்யந்தி பிரதட்சிண பதே பதே

அபிவாதயே சாத்திய சான்க்ருத்ய கௌரவீதஆபஸ்தம்ப சூத்ரஹ
யஜுஸ் ஷாகாத்யாயை சுப்ப ரத்ன ஷர்மா நாமாஹம் அஸ்மி போஹொ.

நான் என்ன அப்படி தப்பு பண்ணிப்பிட்டேன் !!
ஒரு வாலியை கூட்டிண்டு வந்து அவர் கதையினாலே என்னை சம்ஹாரம் பண்ணிட்டேள். !!!

இருந்தாலும் பாருங்கோ. ஒரு கதை லே ஆரம்பிச்சு,இன்னொரு ghathai கதை லே முடிஞ்சுடுத்து.

சுப்பு தாத்தா சிதிலமா அந்த பீஷ்மர் அம்புத் தோரணத்துலே சயநிச்சுண்டு இருக்கா மாதிரி ஆயிட்டார்.

பரவாயில்ல. எல்லாமே God ஓட mercy . benevolence தான்.

இப்படி குட்டு வாங்க வாங்க தான் நம்ம எந்த உசரத்துக்கு எட்ட முடியும் அப்படின்னு தெரியறது. ! போகட்டும்.

சம்ஹாரம் அப்படின்னு ஆயிடுத்து.
இப்ப சம் ஆஹாரம்இருக்கா ??
க்ஷீரான்னம், ததியோன்னம் போதும்.

உப்பு பொறாத
சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! நீர் சைனா உப்பில்லை ஸ்வாமி... காந்தி கைப்பட அள்ளின உப்பு...

உப்புன்னவுடன் நினைவுக்கு வருது ஒரு சொலவடை...

ஆஜ்யம் பூஜ்யம்
தொன்னை பின்னம்
லவணம் எதேஷ்டம்
வாத்யாராத்தில ஸ்ரார்த்தம்


ஊரார் வீட்டு ஸ்ரார்த்ததுக்கு பெரிய லிஸ்ட் கொடுக்கும் ஏழை புரோகிதர் வீட்டு ஸ்ரார்த்தத்துக்கு மேலே சொன்ன ஐட்டங்கள் தான் இருக்காம்...