புதன், செப்டம்பர் 15, 2010

அம்மா யானையும் அப்பா யானையும்

Pair of elephants near water hole at dusk Flickr



புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே? தறுதல.. தறுதல... 
அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது.

நம்ம பிள்ளையை கரிச்சு கொட்டறதே உங்க வேலையாப் போச்சு.. அப்படி என்ன தப்புத்தான் என் மகன் பண்ணிட்டான்? 
அம்மா யானை சலித்துக் கொண்டது.

"உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ. வெளிய தல காட்ட 
முடியல.".

பின்னே உங்க பிள்ளை உங்களை மாதிரிதானே இருப்பான்?. உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டேநான் தான் குருவாயூர் கேசவன்னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்க?வயசு பையன் அப்படித் தான் இருப்பான்.விடுங்க     

Enhanced by Zemanta

84 comments:

மதுரை சரவணன் சொன்னது…

எப்படிங்க இப்படி... யானைக்கு யோசனை.. இருந்தாலும் கரெக்ட் பண்றதுல... யானை என்ன பூனை என்ன எல்லாம் ஒண்ணுதான். அசத்தல் கற்பனை. வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

நன்றி சரவணன்.இளமையில் சாகச வார்த்தையாய் இருக்கும் "கரெக்ட்"வயசானா கெட்ட வார்த்தையா மாறிடுது.நான் சொல்றது கரெக்ட் தானே??

பத்மநாபன் சொன்னது…

ஜி.. பாம்பே போன மாதிரி தெரியலையே..கேரளா போய்ட்டு வந்தமாதிரியல்ல தெரியுது ... எந்தானு குருவாயூர் கேசவன் வல்லிய யான்யதனோ ? ( மனிதன்...மன்மதன்... ஸோ ).
ஆண்குட்டி யானை வட்டம் போடறதிலே கில்லாடி போலிருக்கிறதே...

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி.உங்க "யான்யதன்" அட்டகாசம் போங்க. ரகுவம்சத்துல திலீப மகாராஜா, தன் காதல் மனைவி சுதக்ஷினையுடன் தனியா இருந்தானாம். ராணியுடைய கூந்தலிலிருந்து எழும் மணத்தை முகர்ந்தபடி சொக்கி நின்றானாம். இங்க காளிதாசன் போடுற பிட்டைப் பாருங்க. மழைத் தூறலின் துவக்கத்தில் எழும் மண் வாசனையை யானை ஜோடிகள் தன்னிலை மறந்து துதிக்கையைத் தூக்கி,முகர்ந்து கொண்டே திக்குமுக்காடுவதுபோல் திலீபனின் நிலையும் இருந்ததாம். காதல் யானை வருகுது ரெமோ தான்!

RVS சொன்னது…

அதெல்லாம் சரி... பையனுக்கு கரெக்ட் ஆச்சா? இல்லையா? அதச் சொல்லுங்க... ஒழுங்கு மரியாதையா அப்பா யானையை அவன் பார்த்ததையே கல்யாணம் பண்ணி வச்சுரச் சொல்லுங்க. இல்லைனா ஒரு நல்ல ஆப்ரிக்க ஃபாரினரா பார்த்து இழுத்துக்கிட்டு வந்துறப்போறான். பொல்லாதவனா இருப்பான் போலிருக்கு. ;-) ;-)

முடிவு தெரிந்துகொள்ளும் ஆவலில் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

ஆஹா RVS..நீங்க குடுக்குற பரபரப்புல எனக்கு இப்போ பொறுப்பு ஜாஸ்தியாயிட்ட மாதிரி இருக்கு. நம்ம ஏதோ சிறுசுகளை சேத்து வைக்கலாம்னு அந்த கோயில் பெண் யானை கிட்ட பேசி பாக்கப் போனேன். அதென்னவோ கைல வச்சிருந்த சில்லறைய வாங்கி பாகன்கிட்ட குடுத்துட்டு தும்பிக்கையால தலையில தட்டிட்டு அடுத்தாளை பாக்க திரும்பிருச்சு . நம்ம
பையனுக்கு நீங்க சொன்னாமாதிரி ஆப்ரிகா தான் தகையும் போலருக்கு.ரெஜிஸ்தர் ஆபீஸ்லே சிம்பிளா முடிச்சிட்டு தேன் நிலவுக்கு அதுங்களை தேக்கடிக்கு அனுப்பிட வேண்டியது தான்!

ம.தி.சுதா சொன்னது…

நகைச்சுவை நல்லாயிருக்கிறது... வாழ்த்துக்கள்...

பத்மநாபன் சொன்னது…

மோகன்ஜி ஆர்.வி.ஸ்... நீங்க ரெண்டு பேரும் செய்யற யானை அலப்பற சிரிப்ப அடக்க முடியல போங்க .... காதல் யானை ரெமோ, ஆப்ரிக்கயானை, ரிஜிஸ்டர் திருமணம், தேக்கடி தேனிலவு ......ஜோர்,

மோகன்ஜி சொன்னது…

வாங்க ம.தி.சுதா.நகைச்சுவைதான் வாழ்க்கை பயணத்துக்கு தேவையான பெட்ரோல்ங்க.. அடிக்கடி வாங்க!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் சார்! என்னங்க இது? மோகன்ஜி,RVS அலப்பறைன்னு நீங்க தனியா கழண்டுக்குறீங்க? நம்ம செல்லம் ரெண்டும் தேன்நிலவு முடிஞ்ச கையோட முதல் விருந்துக்கு உங்க வீட்டுக்கு வர்றதா தான் பேச்சு.விருந்து தடபுடலா இருக்கணும் தலைவரே சொல்லிட்டேன்! நம்ம பிள்ளையாண்டானுக்கு ஈச்சம் தழை எல்லாம் ஒத்துக்காது.தென்ன மட்டையா ஏற்பாடு பண்ணுங்க.சரி தானே!

Chitra சொன்னது…

:-)

துளசி கோபால் சொன்னது…

யானைன்னதும் வந்தேன்.

நல்லாத்தான் உக்காந்து யோசிச்சு இருக்கீங்க:-)))))))

மோகன்ஜி சொன்னது…

வாங்க சித்ரா மேடம்

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி துளசி கோபால். யானைன்னா ரொம்ப புடிக்குமோ? உங்க வலைப்பூ முகப்புல ஒரு யானை ஊர்வலமே விட்டிருக்கீங்க. யானை ரொம்ப அழகுங்க. அதுவும் அதன் நடை இருக்கே..கம்பீரம் தான்! யானை நடையை "கஜகதி"ன்னு சொல்வாங்க. நம்ம கவிஞர் கூட "சின்ன யானை நடையைத் தந்தது"பாட்டு பாடியிருக்காரே!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அழகா எழுதியிருக்கிங்க...

நல்ல நகைச்சுவையுடன் கூடிய கற்பனை... நல்லாயிருக்கு...

RVS சொன்னது…

பத்மநாபன் வீட்டு மாப்பிள்ளை விருந்து முடிந்ததா... மோகன்ஜி உங்கள் 'குட்டிகளை' எப்போது மறுவீடு அழைப்பீர்கள்? அவனுக்கு கொடுக்கும் தயிர்சாத உருண்டையை பசி என்று நீங்கள் உள்ளே தள்ளி விடாதீர்கள். அப்புறம் யான்யதன் கொடியாக இளைத்து விடப் போகிறான். அவன் புதுப் பொண்டாட்டி உங்களை தூக்கி போட்டு மிதித்து விடப் போகிறாள். ஜாக்கிரதை. யானையிடம் பாரதியை இழந்த நாங்கள் உங்களையும் இழந்து விடப்போகிறோம் அப்புறம் நவீன இலக்கியத்துக்கு பேரிழப்பு ஏற்ப்பட்டுவிடும். தயவு செய்து இந்த கஜேந்திரர்களை முதுமலை முகாமுக்கு அனுப்பவும். நன்றி. ;-);-);-)

பத்மாநாபன் வீட்டிலிருந்து ஏதும் சேதி வந்தாதா?

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் சொன்னது…

அடடா .....இங்க பேரீச்சந்தழைக்கே வழி இல்லாத இடத்துல மாட்டிகிட்டேனே ....தென்னமட்டைக்கு எங்க போவேன் ...சரி சரி முகூர்த்ததை நல்ல படியா முடிங்க ....ஊருக்கு வந்தவுடனே வசமான கரும்பு காட்டுக்கு கூட்டிட்டு போய் நாலு நாள் விட்ர்றேன். உல்லாசாம இருக்கட்டும்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ரசித்தேன். அருமை!

மோகன்ஜி சொன்னது…

வாங்க வெறும்பய சார்.. பதிவு நல்லாயிருக்கேன்னு பாராட்டிட்டு அப்பிடியே போயிடறதா? யானை தம்பதிகளுக்கு மொய் ஒண்ணும் எழுத மாட்டீங்களா?

மோகன்ஜி சொன்னது…

நீங்க ஒண்ணு RVS.. பத்மநாபன் ஒட்டக தம்பதிகளுக்கு தான் தற்சமயம் விருந்து வைக்க இயலுமாம். ஊர் பக்கம் வந்தப்புறம் கரும்பு தோட்டத்துக்கு அனுப்பறாராம்ல? அதுக்குள்ள யான்யதன் குட்டியும் பெத்துக்கிட்டு அத "என் செல்ல கெஜக்கூ"ன்னு கொஞ்சிகிட்டில்ல இருப்பான்?! தற்சமயம் தயிர் சாதம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கு..எங்க வீட்டம்மாவோ யானை,"குரங்கு"க்குல்லாம் சமைக்க வேண்டியிருக்குன்னு அலுத்துக்குவாங்களோன்னு யோசனையா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி முதுமலை முகாமுக்கு தற்சமயம் அனுப்பிவைக்க வேண்டியது தான் . டென்ஷனா இருக்கு RVS

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்.. அங்க உக்காந்துகிட்டு ஓமர்கய்யாம் மாதிரி பேரிச்சம் பழமே.. பேரீச்சம்தழயேன்னு ஹூக்காவ புடிச்சிகிட்டு பாட்டா படிக்கிறீங்க? உங்களைப் பத்தி ஆப்பிரிக்க மருமக "எலிபண்டோ யானயானோ" என்ன நினைப்பா? ஞொய்யாஞ்ஜிக்கு ஒரு நியாயம், யான்யதனுக்கு ஒரு நியாயமா? கப்பல்லயாவது தென்னமட்டஎல்லாம் வரவழைக்க வேண்டாமா? ஊர்பக்கம் வந்தீங்கன்னா ஜோடி ரெண்டும் உங்கள உருட்டி "யான யான அழகர் யானை"ன்னு விளயாடதாம் போறாங்க! கும்மி களை கட்டிருச்சு பத்மநாபன்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க யோகன் பாரிஸ்! உங்க வலைப்பூவின் போட்டோவில் ரெண்டு செல்லம் சிரிக்குதே. ரொம்ப அழகுங்க.. அடிக்கடி வாங்க..

பத்மநாபன் சொன்னது…

அட பதிவ விட பின்னூட்டம் கலக்கலால்ல இருக்கு... நம்ம ஆர்.வி எஸ்.. மறுவிடு மறு தாலின்னு விட்டா சீமந்தம் வளைகாப்பு வரைக்கும் போயிட்டே இருக்காரு.....தும்பிக்கைக்கு வளையல் ஆர்டர்ல்ல கொடுத்து செய்யனும்....

சின்ன யானை நடையை தந்தது ....சூப்பர் பாட்டை நினக்கவச்சிட்டிங்க..
கெஜக்கூ....நல்ல கொஞ்சல் பெயரை அறிமுக படுத்தி புண்ணியம் தேடிட்டிங்க.....

சிவனேன்னு மார்க் போட்டுட்டிருந்த இளைய தளபதி கஜபதிய வசமா மாட்ட விட்டுட்டிங்க்ளே....

இனி ஜில்,ஜில் கஜமணி சும்மாவா இருக்கும்.... கருப்பு கரும்பு கொண்டா, மூழாம்பழம் கொண்டா, தேக்கிலை கொண்டான்னு தும்பிக்கையில இடிச்சுட்டேல்ல இருக்கும்....

முதுமலை , தெப்பக்காட்டுல விடற வரைக்கும் ஒரே டென்ஜன் தான்

RVS சொன்னது…

யப்பா.. மோகன்ஜி.... பத்மநாபன்... ஏதோ மதநீர் பிடிக்கிற யானைக்கு மன்மத நீர் பிடிச்சு இத மாதிரி தப்பு காரியம் பண்ணிட்டுது. விடுங்கப்பா கஜேந்திரனுக்கு மோட்சமாப் போகட்டும். யானை கட்டி போரடித்தார்கள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான எங்க தஞ்சாவூர் பக்கம். ஆனா மோகன்ஜி ப்ளோகில் யானையை கட்டி நாம லூட்டி அடிக்கறது ரொம்ப டூ மச். நாம இப்படி அவங்கள வச்சு அராத்தா ஜோக் அடிக்கறது வெளியில கசிஞ்சு யானைக் காதுக்கு எட்டிடிச்சுன்னா...

அடுத்த தடவை கோயிலுக்கு போய் தும்பிக்கையில காச வச்சு தலையை குனிஞ்சு ஆசிர்வாதத்துக்கு மோகன்ஜி நிக்கும்போது...
அப்படியே அலேக்கா தூக்கிட்டு போய் கிட்னாப் பண்ணி வச்சுட்டு... இந்த 36000 = 28000=36000 சமாசாரத்தை எல்லாம் ரப்பர் வச்சு சுத்தமா அழிச்சாதான் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிடப்போவுது. ரொம்ப பயமா இருக்கு.

இப்பவே "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" அப்படின்னு பத்து பதினைந்து தோழர் யானைகள் கேரளாவுல ஓணக் குடை பிடிக்கறா மாதிரி கொடி பிடித்து துரத்துற மாதிரி இருக்கே.

சென்னையில யானைகவுனி அப்படின்னு இருக்குற இடத்துக்கு என்னால இனிமே தலை காட்ட முடியுமா? யானை வரும் பின்னே.. அப்படின்னு யாரோ பழமொழி சொல்ல ஆரம்பிச்சாலே நாலு கால் பாய்ச்சல்ல ஓடிடுவேன் போலருக்கே...

ஐயோ.. துரத்தி உதைக்குற மாதிரியே.. ச்சே.ச்சே.. தும்பிக்கையால் தூக்குற மாதிரி இருக்கே... சொக்கா.... காப்பாத்துறா...

இப்படி யானை இனத்தை அதகளப் படுத்துவது தெரிந்து இந்திரலோகத்தில் இருந்து ஐராவாதம் ஐந்து நாள் இந்திரனிடம் லீவு கேட்டு வந்து பூலோகத்தில் கேம்ப் அடிக்கப் போவதாக த்ரிலோக சஞ்சாரி நாரதர் தெரிவிக்கிறார். இது எனக்கு எஃப்.எம் ரேடியோ டியூன் பண்ணும்போது இப்போது கேட்டது. எல்லோரும் பத்திரமான இடத்துக்கு ஓடிடுங்க... ப்ளீஸ்.... எஸ்கேப்.....

ஓவர் டு பத்து அண்ட் மோகன்ஜி என்று சொல்லிக்கொண்டு......

யானை பயத்துடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

அடடா! எத்தனை விதமா யானை மேட்டரை வச்சு பின்னியிருக்கீங்க R.V.S!
ரொம்பவே ரசித்தேன்! அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்று ஒரு புலவர், யானையின் பல பெயர்களை வைத்து விளையாடி இருக்கிறார்.. பள்ளி நாட்களில் செய்யுள் பகுதியில் படித்தது. ஒரு பாணன் ராஜாவிடம் போய், பாடல்கள் பாடினான்.
மகிழ்ந்துபோன ராஜா அவனுக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து விட்டார்.வீடு திரும்பிய பாணனிடம், அவன் மனைவி பாணி என்ன கொண்டு வந்தாய் எனக் கேட்டாள். அவன் யானையின் பல்வேறு பெயர்களில் கொண்டு வந்ததைக் கூற, பாணியோ, அந்தப் பெயர்களின் வேறு அர்த்தங்களை பாவித்துக் கொண்டு பதிலளிக்கிறாள். பாட்டைத் தான் பாருங்களேன் !
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்
பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை
கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!"
மேற்சொன்ன பாடலில் பாணன் கூறும் பல்வேறு யானையின் பெயர்களும்,பாணி பொருள்கொண்ட வேறு அர்த்தமும்..
களபம் = சந்தனம்
மாதங்கம் = நிறைய தங்கம்
வேழம் =கரும்பு
பகடு= எருது
கம்பமா= கம்பு தானிய மாவு
கைம்மா = கைம்பெண்
பாணன் சொன்ன அனைத்துக்கும் வம்படியாய் பதில் சொன்னவள் கைம்மா என்றவுடன் கலங்கி விட்டாளாம்! எப்படி?
“சும்மா கலங்கினாளே ” என்ன சொல்லாட்சி? மிக ஆச்சர்யமான பாடல்.
இந்தப் பாடலை நினைவு கூர வைத்து,எழுதவும் உந்திய R.V.S புலவரே! உம் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அதை மெச்சி நானும் உமக்கு ஒரு யானையை பரிசாக அளிக்கிறேன்! ஏய்! யாரங்கே?!

பத்மநாபன் சொன்னது…

வந்தேன் அரசே...யானை இருக்கிறது ..சங்கிலிக்கு நிதியில்லையாம்..நிதியமைச்சர் புலம்புகிறார்....
மன்னா , நம் அரசவை வெள்ளையானையாக நிதியை முழுங்குகிறது... வட்டமடிக்கும் யானையை முடிந்தால் ஆர்.வி.எஸ் சங்கிலியின்றி ஓட்டிச்செல்லட்டும்...வழியில் மதிப்பெண்..பெண்..விவகாரங்களுக்கு நாம் பொறுப்பல்ல....

RVS சொன்னது…

ச்சே..ச்சே.. என்ன காட்டு தர்பார்...

பரிசளிக்கும் யானைக்கு சங்கிலி இல்லையா.. கேவலம் ஒரு இரும்புச் சங்கிலிக்கு இவ்வரசு ஏங்குகிறதா....பட்டத்து யானை பட்டினி கிடக்கிறதா... என்ன ஒரு அநியாயம்...(புலவர் முகத்தில் சிகப்பு விளக்கு அடித்து அவரது கோபத்தை பெரிதாக காட்டுகிறது)

அந்தப்புரத்தில் மோகனமன்னனின் ராணிகள் வடம் வடமாக மாதங்கத்தில் மாலை போட்டிருக்கிறார்களே... அந்தப் பெரிய ராணி கழுத்தில் கிடப்பதை கொடுத்தால் கூட யானை காலைச் சுற்றி கட்டி விடலாமே.. ம்.... சரி... சரி.. பரவாயில்லை.. தானம் கொடுத்த யானைக்கு சங்கிலி இருக்கா என்று கேட்கக்கூடாது. உங்கள் ராஜ தர்மம் எப்படியோ என்னக்கு தெரியாது ஆனால் யானை தர்மத்தில் இது கிடையாது.

இப்போதைக்கு என்னிடம் அரையடி அங்குசமும் என் உள்ளன்பினால் தயாரித்த அன்புச் சங்கிலியும் இருக்கிறது. இதை வைத்து சமாளிக்கிறேன். ஆனால் மோகனமன்னா! உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒரு ரகசியமான விஷயம்..... உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிதி இல்லை என்று சொன்னாரே அந்த பாண பத்மநாபர் (பாணபத்திரர் ஸ்டைலில் படிக்கவும்)... அவர் ரொம்ப மோசம். அரசனின் யானைப்படைக்கு தேவையான யானைச் சங்கிலிகளை கூட தவணை முறையில் சுற்றிலும் இருக்கும் குறுநில மன்னர்களுக்கு சலுகை விலையில் ஒரு தொகை பேசி விற்றுவிட்டார். கேட்டால் யானை விற்ற காசு பிளிறிடுமா..என்று விஷயமறிந்தவர்களிடம் கூறி வருகிறாராம். அடுத்த நிதியாண்டில் அவர் மன்னருக்கே ஊதிய உயர்வு கொடுக்கும் அளவுக்கு மலை போல் சொத்துக் குவித்து விட்டாராம். அரபு நாடுகளிலிருந்து ஒட்டகம் வரவழைத்து ஒட்டகப்படை கொண்டு உங்களையே தாக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம். கொஞ்சம் அவரை கவனியும். நீங்கள் ஏதாவது கேட்டால் வாய்ஜாலத்தால் உங்களை ஏமாற்றிவிடுவார். எத்தன். வார்த்தைகளில் ஜித்தன். ஜாக்கிரதை! யானை தடவும் குருடன் போலாகிவிடப்போகிறீர்கள்.

அடுத்த முறை மன்னனை தீர்மானிக்கும் திறன் இந்த ராஜ யானைக்கு உண்டு. கூட்டத்தில் எங்கு ஒளிந்திருந்தாலும் என்னை தேடி வந்து மாலையிடும்படி இவனை பழக்கி.. நானே அடுத்த முறை அரசனாவேன்.... சங்கிலி முருகனை இந்நாட்டின் அமைச்சராக்குவேன். இது இந்தத் தான யானை மீது சத்தியம்.

[ ஏழைப் புலவன் யானைக்கட்டி தீனி போட வக்கில்லாததால் வீதிக்கு தக்கவாறு நாமமும், பட்டையும் மாற்றி மாற்றி சார்த்தி அந்த யானையை வீடு வீடாக ஆசிர்வாதம் செய்து பிச்சை எடுக்கவிட்டு ராச்சாப்பாட்டுக்கு கலெக்ஷன் பார்க்கிறான்...புலவனின் இந்த அபார(!?) சாமர்த்தியத்தை பார்த்து இளவரசி தெய்வானை (தேவயானை) போட்ட நகையுடன் (அவள் எடை ஐம்பது கிலோ.. அணிந்திருந்த நகைச் சுமை நூறு கிலோ) அவன் காலடியை பின் தொடர்கிறாள்....ராஜாவாகி ராஜ்யபரிபாலனம் செய்யும் வண்ணக் கனவுகளுடன் வீதியில் மிதந்து செல்கிறான் வரகவி....]

இப்படிக்கு தருமியான ஆர்.வி.எஸ். (சொக்கன் புலவராக வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்......)

அப்பாடி ட்ராக் மாத்தி கொண்டு போயாச்சு.. யானைக் காதலை... மனிதக் காதலுக்கு கொண்டு வந்தாச்சு...இனிமேல் இது ரொமாண்டிக் காதல் யானை இல்லை, பிச்சை எடுக்கும் பட்டத்து யானை.. அடடா.. மாலை போட்டு ராஜாவாகிறது கான்செப்ட் எங்கே இங்க வந்தது... சரஸ்வதி சபதம் இவ்வளவு ஆழமா பாதிச்சிருக்கா... இப்படி ரவுசு காட்டறாங்களே... இப்பவே கன்னக் கட்டுதே.... அடுத்தது யாருப்பா... வாங்கப்பா... பாண பத்மனாபரா.. மோகன(ஜி)மன்னனா..... வந்து ரவுண்டு கட்டுங்க... பிள்ளையாரப்பா ப்ளாக்ஐ காப்பாத்து.... யானைக்கு மதம் பிடிச்சுடும் போல இருக்கு....

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்
பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை
கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!"
மேற்சொன்ன பாடலில் பாணன் கூறும் பல்வேறு யானையின் பெயர்களும்,பாணி பொருள்கொண்ட வேறு அர்த்தமும்..
களபம் = சந்தனம்
மாதங்கம் = நிறைய தங்கம்
வேழம் =கரும்பு
பகடு= எருது
கம்பமா= கம்பு தானிய மாவு
கைம்மா = கைம்பெண் //
அருமையான இச் சிலேடைப் பாடலைத் தந்ததற்கு மிக நன்றி!

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க யானை கதை

ரிஷபன் சொன்னது…

அடடா.. யானை புகுந்த பதிவு இப்படித்தான் அமர்க்களமா இருக்குமோ.. நல்ல கற்பனை

மோகன்ஜி சொன்னது…

அடடா! ஆர்.வீ,எஸ் புலவர் தருமி நாகேஷ் மாதிரி இருப்பார்னு நெனைச்சேன்.ஆனா, நம்பியார் வேலயா இல்லை இருக்கு.. பாண பத்மனாபர் ரோலோ ராஜா பக்கத்துல இருக்கிற ஆர்.எஸ்.மனோகர் மாதிரி வேற இருக்கே.. இளவரசிய கணக்கு பண்ணி கூட்டிட்டு போறீங்களா.. போங்க போங்க. நானே அவளுக்கு செவ்வாய் தோஷமாயிருக்கே,மாப்பிள்ளையே கிடைக்கல்லேன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். பாணபத்மனாபர் தலையிலே கட்டிடலாம்னு வேற யோசிச்சிகிட்டு இருக்கிறப்போ.... என்ன பெத்த ராசா.. தானாவே வந்து பிரச்சினைய முடிச்சிட்டீங்களே. ஆனா இளவரசி கழுதைப் பாலில் இல்லே குளிப்பாள்? அடுத்த கன்சைன்மெண்ட் நூறு கழுதையை அனுப்பிட்டா போச்சு.
எனக்கென்னவோ பாணபத்மனாபர் இளவரசிக்கும் ஒங்களுக்குமாவது விருந்து வைப்பார்னு தான் தோணுது.
சரி மாப்பிள்ளே! என் ராஜ்ஜியம் உங்களுக்குத் தான்! டேக் இட் !
(ஹய் ! தொரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது )

மோகன்ஜி சொன்னது…

வாங்க வேலு சார்! இவ்ளோ யானைக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டீங்களே!

"கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி"ன்னு நீதி வெண்பா பாட்டு ஒண்ணு இருக்குங்க. வம்பு கரிக்கு ஆயிரம் முழம் வாடாமல் மேலேயே ஏறி விளயாடுறோம் பாத்தீங்களா?அடிக்கடி வாங்க!.

மோகன்ஜி சொன்னது…

யோகன் பாரிஸ் சார்! உங்க ரசனை எனக்கு சந்தோஷமா இருக்குங்க, நன்றி

மோகன்ஜி சொன்னது…

//யானை புகுந்த பதிவு..// அமர்க்களமா இருக்குங்க உங்க பார்வை ரிஷபன் சார்!..கருத்துக்கு நன்றிங்க!

பத்மநாபன் சொன்னது…

கோடு கிடைத்தால் ரோடு போடும் வெங்கோப புலவரை பாராட்டி மகிழ்வோம்.. சில சமயம் வெங்கலபாத்திர கடையில் யானை புகுந்த மாதிரி ஆவதும் உண்டு... அது ஒரு புறம் இருக்கட்டும்...

மன்னா, புலவரின் இந்த கூற்றை மட்டும் ஏற்காதீர்...அவரின் உள் நோக்கம் புரிந்ததா... யானைக்கு ரிங்கா ரிங்கா ரோஸஸ் முதல் எல்லாம் கற்றுக் கொடுத்து மாலையை அவர் கழுத்தில் போட வைப்பாராம் ...அதுவரை தோட்டத்தில் நாம் பூப்பறித்து கொண்டு இருப்போமாம்... நல்லா இருக்குது கதை..
அரசே இந்த பாணரை மறக்க க்கூடாது...அந்தப்புரம் இந்தப்புரம் என்று மட்டுமில்லாமல் எல்லாபுறமும் மன்னரை மகிழ்வு குறையாமல் பார்த்துக் கொண்டோம் இதற்க்காகவே தனியாகவே ஒரு இலாக்காவை வைத்திருக்கிறோம்...அது மட்டுமா சோம,சுரா பானங்களோடு மன்னரை கீழிறங்கவிடாமல் மிதக்க வைத்துள்ளோம் ...இதற்க்கென்று சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளோம்.... இதற்குமேல் அரசவையின் புகழை பறை சாற்றாமல் தன்னடக்கத்தோடும் அவையடக்கத்தோடும் விட்டுவிடுகிறோம்....(தொடரும்)

பத்மநாபன் சொன்னது…

தானம்கொடுத்த யானையின் தந்தத்தையல்லவா தரம் பார்க்கிறார் புலவர் சங்கிலியை பதம் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டு...
நூறுகிலோ சங்கிலியாம் மன்னிகளுக்கு...வாய்கூசாமல் சொல்கிறார் இந்த பொய்மொழிப்புலவர் ...எதோ தொன்னுத்தி ஒம்பத்தி சொச்சம் கிலோ எடையில் நான்கே நான்கு சேடிப்பெண்களை மட்டும் சங்கிலியை தாங்கி செல்ல அரசியாரோடு அனுப்பிவருகிறோம் நூறாம் நூறு.... சொர்ணம் பரிசு வேண்டும் என்று குறிப்பில் புலவர் உணர்த்துகிறார் மன்னா.... சொர்ணாக்காவை விட்டு வெளுத்தால் சரியாகிவிடும்.......
(பதிவிற்கு நல்லாவே மதம் பிடித்து விட்டது...வால்ப்பாறை கும்க்கி யானை வந்தால் தான் கட்டுப்படும் )

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் சார்! யானை ஊர்கோலம் அங்க இங்க சுத்தி உங்கள் மேலான சிறப்புரைக்காக காத்திருக்கிறது. ஒரு யானையும் எலியும் நண்பர்களாம். எலி தன்னோட பிறந்த நாள் பார்ட்டிக்கு யானையை தன் வீட்டுக்கு கூப்பிட்டதாம் . யானையும் நன்றாக தண்ணியடித்து கும்மாளம் போட்டதாம். காலையில் மிகவும் சோர்ந்து போயிருந்த எலியை "ஏண்டா இப்படி பேஸ்த் அடிச்சி போயிருக்கே?ராத்திரி ரொம்ப சரக்கடிச்சயான்னு கேட்டதாம்.
எலி குமுறிவிட்டதாம்,"எண்டா படு பாவி இந்த சின்ன வீட்டுக்குள்ள புல்லா ஏத்திகிட்டு பிரபுதேவா ரேஞ்சில டான்ஸ் ஆடிக்க்கிட்டுருந்தே! உன் காலுங்களுக்கு கீழே மாட்டிக்காம இருக்கறதுக்கு ராத்திரி பூரா அங்கயும் இங்கயும் ஓடி நாக்கு தள்ளிடுச்சுறா டுபுக்கு!"
யானை பெருமையா எலியைப் பாத்து சொன்னதாம்,"நண்பெண்டா நீ!!"

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன், ஒருத்தர ஒருத்தர் பின்னூட்டத்தில் கிராஸ் பண்ணிட்டோம்.இன்னொருக்கா ஒரு ரவுண்டு வாங்க தல!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி . ஆர்.வீ.எஸ் வலைப்பூவுல கூட நம்ம யானைப் படம் தான் ஓடிக்கிட்டிருக்கு. அவரு "இன்றே இப்படம் கடைசி"ன்னு போர்டு போடறதுக்குள்ள அங்கன வெருசா போயிட்டு வாங்கப்பு!

Balakumar Vijayaraman சொன்னது…

:) நல்லா இருக்கு

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ/////

ஹா ஹா ஹா... உண்மையில் செம செம...காமெடி... எப்படி இப்படி??
சூப்பர் ஜோக்.. மனம் விட்டு சிரித்தேன்.. :-)))))

RVS சொன்னது…

மோகன்ஜி, பத்மநாபன் சார்... நல்ல சுதி ஏறுது..இப்ப பாருங்க கச்சேரியை... மோகன்ஜி உங்க ஜோக் அப்படியே தொங்கட்டும். இப்ப நா பூந்து கிழிக்கிறேன்.


சுரா, சோம பானங்கள் அரசருக்கு மட்டும் தானா.. எங்களுக்கும் நேற்று ரெண்டு வெண்கல அண்டா நிறைய கிடைத்தது. தேரடி வீதி தாண்டி சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் கோவில் அருகில் கீழ கோபுர வாசல் அருகே முகமூடி அணிந்த ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். என் அடையாளங்களை கண்டுகொண்டு சமிஞ்ஞை செய்து அருகில் வரச்சொல்லி வயிறார ஊற்றினான். நாவார குடித்து இன்புற்றேன். பா.ப. நாபரே அவனிடம் என்னை கண்டுக்க சொன்னதற்கு நன்றி.

பிரதர், இரவு வேளைகளில் சரக்கு இல்லாமல் நான் திண்டாடக்கூடாது என்பதற்காக ரெண்டு அண்டா கொஞ்சம் ஓவர். (அந்தக் காலத்திலேயே தண்ணி அடித்தால் வாயில் பீட்டர் தானாக வருகிறது.) நான் குடிக்க கேட்டேன். குளிக்க அல்ல. பான(ண அல்ல) பத்மனாபரே நம் திட்டம் முப்போதும் முழு சுதியில் இருக்கும் இந்த மோகன மன்னனுக்கு விளங்கவேயில்லை. எனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை கணித்து, அவளுக்கும் இருப்பது தெரிந்து என்னோடு கைகோர்ப்பதர்க்காக திட்டம் தீட்டியவரே நீர்தான். இதுபோல கல்யாண ஆலோசனை தருவதற்கு சன் டி.வி கல்யாண மாலை மோகனுக்கு கூட தெரியாது. இப்போது நன்றாக மன்னர் மன்னனை ஏற்றிவிட்டு நூறு கழுதைகள் வேறு சீதனமாக வாங்கி தருகிறீர்கள். உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது. நான் எம்.என்.நம்பியாராம், நீங்கள் ஆர். எஸ். மனோகராம். இவர் என்ன எம்.ஜி.யாரா அல்லது சிவாஜியா. இவரோ ஒரு ஏ.வி.எம். ராஜன். ஆனால் இவர் பெண் தமன்னா எனும் தள தள தக்காளி மாதிரி இருக்கிறாள். ஓ.கே ஓ.கே... இதற்க்கு மேல் உங்களிடம் அந்த அழகோவியத்தை பற்றி பேசினால் அது ஆநாகரீகம். (இந்த சொல் வரப்போகும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளன் சுஜாதா எடுத்தாளப் போகும் சொல்). ஏனென்றால் மன்னன் சொன்னது போல் நீங்கள் சைடில் சிந்து பாடிய பைங்கிளி அவள். நானறிவேன் உங்கள் கள்ளத்தனத்தை.

அப்புறம் அந்த சொர்ணாக்கா மேட்டர். நேற்று அரசரிடம் என்னை தீர்த்துக்கட்ட என்று காரணம் சொல்லி அவளை இங்கு அனுப்பி வைத்தீர். அக்காவா அவள். அக்.க்.க்.க்கா. சொக்க வைக்கும் சொக்கி. அவளே ஒரு சொர்ணம். (ரொம்ப வழிஞ்சிட்டேனோ.) அவளோடு அந்த சொர்ண லோடும் வந்து சேர்ந்தது. ஒரு தேரின் அடியில் கஜானாவையே உங்களால் தான் அனுப்ப முடியும். அந்தத் தேர் என்ன வரும்காலத்தில் வரப்போகும் கே.பி.என் போன்ற வால்வோ பஸ்களுக்கு ஒரு முன்மாதிரி போன்று உள்ளதே. நீங்கள் சொன்னாற்போல் நகைக் கடை கானா.மூனா.சேனா.பானா செட்டியாரிடம் அனைத்தையும் சேர்த்துவிட்டேன். கல்யாணம் முடித்து அந்த மன்னனை சிறையில் அடைத்து நான் அரசுக்கட்டிலில் அமரும் நாளில் திரும்ப தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். எல்லாம் உங்கள் திட்டம் போன்றே நடக்கிறது.

நாளை மலர் மஞ்சத்தில் தூங்கப்போகும் நான் இன்று இந்த யானையின் நான்கு கால்களுக்கு நடுவில் தூங்குகிறேன். அது பிஸ் அடிக்கும் போது மூஞ்சியில் தெளிக்கும் அந்த தீர்த்தம் நாளை ராஜ சிம்மாசனத்தில் அமரப் போகும் போது பன்னீர் தெளிப்பது போல் உள்ளது. சரி. சரி... தேவயானை இந்த யானையை பார்க்க வருகிறது மற்றவை அடுத்த மடலில்...

அன்புடன் வெங்கோபப் புலவர் பாத்திரத்தில், அண்டாவில், குடத்தில்,சட்டியில் ஆர்.வி.எஸ்.

அப்பாடி!! பாண பத்மனாபரை என்னோடு சேர்த்தாயிற்று. இனிமேல் அந்த மோகனமன்னன் கதி அதோ கதிதான். அப்படி போடு அருவாளை.. சீ.சீ உடை வாளை.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

RVS அவங்க பதிவிலும் பார்த்தேன்.. சூப்பர் :-)))

பத்மநாபன் சொன்னது…

மோகனமன்னா, பெரிய உருவத்தை பிடித்து வருவது கூட தெரியாமால் கிராஸ் பண்ணிட்டனா.. என்.கண்பார்வை பகல்ல பசுமாடு, எருமமாடு தாண்டி யானையையும் தாண்டிருச்சா ... கொடுமை.... சோடா பாட்டிலை ஒடைச்சு ஜோப்புல வச்சுக்க வேண்டியது தான்..

மன்னா நீங்க கில்லாடி மன்னா... இளவரசியோடு உங்க தர்பாரையும் அந்த புன்னகை மன்ன புலவரிடம் கட்டி விட்டீர்களே .. பலே கில்லாடி மன்னா..
பட்டத்துக்கு வந்தபின் தான் தெரியும், ஒவ்வொரு ஓலையாக வரும் . நிங்க ஆணி குத்தி குத்தி எழுதிக்கொடுத்ததெல்லாம் வெளியே வரும்

ஒரு கல்லால் அடித்து இரண்டு மாங்காய் விழுவதே அதிசயமாக இருந்ததே...நீங்கள் பார்த்தே பல மாங்காய்களை விழ வைக்கிறிர்களே..

பத்மநாபன் சொன்னது…

மறுபடியும் கிராஸ் ஆயிடுச்சே...புலவன் தொல்லை தாங்க முடியல...இரண்டு நாள் அவர் கைய கட்டி வைங்க..சிரிச்சே பல்லும் சுளிக்கிருச்சு ,வயித்து வலியும் பின்னிட்டிருக்குது....இனி தலை தெரிக்க ஓட வேண்டியது தான்....

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாலகுமார். கருத்துக்கு நன்றி. யானைகும்மின்னா சும்மாவா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆனந்தி.. முதல் தடவை ரெண்டு தடவையா வந்திருக்கீங்க.அதாவது முதல் தடவையிலேயே ரெண்டுமுறை வந்திருக்கீங்க!!.யானைய வச்சு நம்ம ஜோக்கடிக்கறோம்.ஆனா அதுல்லாம் நம்மளப் பார்த்து என்னென்ன பேசிக்குமோ.. அப்பப்ப வந்து போங்க ஆனந்தி.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///வாங்க ஆனந்தி.. முதல் தடவை ரெண்டு தடவையா வந்திருக்கீங்க.அதாவது முதல் தடவையிலேயே ரெண்டுமுறை வந்திருக்கீங்க!!.யானைய வச்சு நம்ம ஜோக்கடிக்கறோம்.ஆனா அதுல்லாம் நம்மளப் பார்த்து என்னென்ன பேசிக்குமோ.. அப்பப்ப வந்து போங்க ஆனந்தி. ///

முதல் முறையா ரெண்டு தரம் வந்த எனக்கு... ரெண்டு முறையும் மறக்காம முறையோடு நன்றி..சொன்னிங்க.... :-)))
அது சரி.. எதுக்கும் யானை கிட்ட கொஞ்சம் தள்ளியே நிக்கிறது உடம்புக்கு நல்லது.. :-)

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! வெட்கம்.. வேதனை.. பாராளும் மன்னனை துப்பரவாக உருவிவிட்டார்களே!புலவரென வந்த
நம்பியாரும், பக்கத்திலே இருந்த பா.பா எனும் ஆர் .எஸ்.மனோஹரும் சதி செய்து விட்டார்களே. ஒரு கலயம் சோமபானம் கூட மிச்சம் வைக்காமல் காய விட்டு விட்டார்களே.டாஸ்மாக்குக்கு கூட இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டுமே. டிக்கி வச்ச தேராமே? சப்ஜாடா பட்டியல் போட்டு பத்திகிட்டில்ல போய்ட்டாங்க. அதெல்லாம் கூட பரவாயில்லை.. புசுபுசுன்னு மீசைய வச்சுகிட்டு,"தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்"ன்னு நெஞ்சு நிமிர்த்தி நான் பாடியபோது,இவங்க ரெண்டுபேரும் 'அரசே! நீங்க வேற சிவாஜி வேற இல்லே'ன்னு உசுப்பேத்தி விட்டார்களே! போற போக்குல இப்போ ஏ.வீ.எம்.ராஜன் நீன்னு சொல்லிட்டாங்களே! மகமாயி !!கன்னமெல்லாம் கோபத்துல உப்புதே.. கழுதை எல்லாம் கூட கொடுத்து விட்டேனே. ஆ!சாய்ந்தது என் வெண் கொற்றக் குடை! தகர்ந்தது
முரசம்! யாருப்பா அங்க ஸ்க்ரீன போடுய்யா! வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வசனம் பேசிக்கிட்டிருக்கேன்.
சரி ! இப்போ ஸ்க்ரீனை இழுங்க!
"ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டுமாய் அன்னியர் களித்திருக்க, யாரது மண்ணிலே யாரது நாடகம்...." ஓ! வசனம் வேணாமா? விசனமா நிக்கணுமா? சரி டைரக்டர்! நேத்துல இருந்து அப்பிடி தானே இருக்கேன்.

பாணபத்மநாபரே! எங்கய்யா என் பொடி டப்பா? எல்லாம் எடுத்துகிட்டு போனீங்களே! சிம்மாசனத்துல அங்குசத்தை விட்டுட்டாய்யா போவீங்க? முதல் லைன்ல 'வெட்கம்'னு கோபமான வசனத்தோட சிம்மாசனத்துல தொப்புன்னு உட்கார்ந்தேன். அப்பா ஆர்.வீ.எஸ்."இப்போ நான் கிழிக்கிறேன்"ன்னு சொன்னது இதைத்தானா? ம் ..ம்..முடியல.
எனக்கு எல்லாம் வெறுத்து போச்சு.சாமியாரா போகப் போறேன் .. தமிழ் நாடு வேணாம் பெங்களூர் பக்கமா செட்டிலாயிடப் போறேன்.கதவ திறங்கப்பா.புழுக்கமா இருக்கு!

RVS சொன்னது…

மோகன்ஜி.. ட்ராக்க திருப்பிடீங்க... கொஞ்சம் பா.பா வை கமெண்டு போட வேண்டாம்ன்னு சொல்லி வைங்க.. சித்த நாழியில வரேன்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Muniappan Pakkangal சொன்னது…

Appavukka thappaamal porantha paiyan-Nice story Mohanji.

RVS சொன்னது…

பான பத்மனாபரே! திட்டம் பலித்தது. அவர் எனக்கு பெண் தர வேண்டும் என்று நடுவில் பூந்து விளையாடுகிறீர்களே. மோகனமன்னனை ஆதரிப்பது போல் நடித்து என் பக்கம் நாட்டை திருப்புகிரீர். என்ன ஒரு மதி. அருமை. மன்னனாக இருந்தால் தலை மேல் மணிமுடி இருக்கலாமே தவிர அதைத் தவிர பாரமாக மூளை இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார் நமது பாசத்திற்குரிய மன்னர் மன்னர். அது சரி... நீங்கள் அனுப்பிய புறாத் தூது வந்தது. அட. அது என்ன நீங்கள் எதை செய்தாலும் வித்யாசமாகவே உள்ளது. புறா வரும் என்று ஆவலில் இருந்தபோது, கிளி போன்ற உங்கள் பக்கத்து வீட்டு "பருவக்கிளி ", "கன்னடத்து பைங்கிளி" சரோஜாவிடம் கொடுத்து விட்டீர்கள். அவள் ஆடி ஆடி நடந்து வரும் பொது நான் ஆ.ஆஆ...........டி விட்டேன். தேவயானை வேறு கண்கள் படபடக்க பார்க்கிறாள். சொர்ணாக்கா, சரோஜா என்று மன்மத பாணங்களாக அனுப்புகிறீர்கள். நல்ல சேட்டை. எங்கிருந்தோ ஒரு பாடத்தெரிந்த பாடகன் வேறு "மன்மதன் கோயில் மணி ஒலி கேட்டது...." என்று ராகம் பிடிக்கிறான். ரோடோரத்தில் இருக்கும் எனக்கே இவ்வளவு தாக்குதல் என்றால் ஒரு அரசன் இது போல் நிறைய படையெடுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சரி. சரி.. என்னை மன்னனாக உயர்த்துவதற்கு நீங்கள் அளிக்கும் பயிற்சி இது என்று நான் எண்ணிக்கொள்கிறேன். நன்றி.

RVS சொன்னது…

போன கமெண்ட்டின் தொடர்ச்சி..

மடலில் இருந்து விபரம் அறிந்தேன். மோகனமன்னன் வானப்ரஸ்தம் அல்லது சந்நியாசம் வாங்கப் போகிற விஷயம் மன மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது. வானப் பிரஸ்தத்திலாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும். அவர் போன பின்னே நிறைய கடனோலை வரும் என்று அந்த தர்பாரில் சொன்னீர்களே.. அது கதை தானே... உண்மை என்றால் இப்போதாவது சொல்லுங்கள். என்னிடம் ஒரு அருமையான யோசனை உள்ளது. என்னவென்றால், நாட்டை வடக்கு தெற்காக இரண்டாக பிரித்துவிடுவோம். வடப் பக்கம் நீங்கள், இடப் பக்கம் நான். யாராவது உங்களிடம் வந்து மோகனன் வைத்த கடனை கேட்டால், அப்போ இருந்தது மோகனபுரி என்னும் ஒரே நாடு. இப்போது அந்த நாடு அன்னியர் படையெடுப்பில் அழிந்துவிட்டது. நான் பா.பா, இது பானபுரி. சரக்கிற்கு பஞ்சம் இல்லாத தேசம். தென் திசையில் இருப்பது வெண்புரி. இன்னபிற லாஹரி வஸ்த்துக்களுக்கு பெயர் பெற்ற தேசம். தங்கத்தையும், கஜானாவையும் தவிர உனக்கு என்ன விடுமோ எடுத்துக்கொள். இந்த மாதிரி வச்த்துக்களால் இவ்வையகமே உனக்கு சொர்க்கபுரியாக மாறிவிடும் என்று அவனை மந்திரித்து மயக்கிவிடலாம்.


வந்துவிட்டாள் என் வருங்கால பாரியாள். இப்போதே தொந்தரவாக இருக்கிறது. அடிக்கடி வந்து யாருக்கு மடல் வருகிறீர்கள் என்று கேட்கிறாள். ராணி ஆன பின் அவளுக்கும் தெரியும் தொடுப்பு என்பது ராஜாக்களின் உடுப்பு மாதிரி என்று.


வானப் பிரஸ்த்தம் சென்ற மோகனமன்னனிடம் ஒரு கண் இருக்கட்டும். பொல்லாத மன்னவன் அவர். கூட ஒன்றிரண்டு பட்டத்து ராணிகளை அழைத்து சென்று அந்தப்புரத்தை காலி செய்துவிடுவார். பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நம்முடைய தனி அந்தப்புரம் அமைக்கும் வரையில் போரடிக்கும்.


அந்தப்புர ஆசை நாயகன் ஆகும் ஆசையில் ராஜா ஆகப் போகும் வெங்கோபப் புலவரான பாத்திரப் படைப்பில் ஆர்.வி.எஸ்.


சந்நியாசம் என்று சொன்னால் விடுவோமோ மோகனமன்னா.... பத்மனாபரே வாரும்... வந்து கலாயும் ....

பத்மநாபன் சொன்னது…

கலாயும் கலாய்த்து பாரும் என்கிறார் விகடகவி ... விச்சருவாள் , வெட்டருவாள் புகழ் சொர்ணக்காவையே 'சைஸு ' பண்ணிய பிறகு , மன்னரே நீரும் ஒன்றும் செய்யமுடியாது என்று வேட்டியை வொதறி , வொதறி , அணிந்து விட்டீர் .
கையை கட்டிவைத்தாலும் , பேசியே வார்த்தைகளை கணினியில் வர வைக்கும் நுட்பம் அறிந்த மென்பொருள் வித்தகன் விகடகவி என்று வயிறை பிடித்துக்கொண்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை .

அரபு மன்னன் ஓலை கோப்புகளை அடுக்கி , எல்லாவற்றையும் ஆணி கொண்டு எழுதி முடிக்க அவசர ஆணை பிறப்பித்துவிட்டான்...இரவு வருகிறேன்...
( பிற்காலத்தில் பரவாயில்லை ஆணிகளை பிடுங்கியே பிழைத்துக்கொள்வார்கள்)

RVS சொன்னது…

மோகன்ஜி ரெண்டாவது பார்ட் ரிலீஸ் பண்ணட்டா ...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS சொன்னது…

Part II released...

anbudan RVS

மோகன்ஜி சொன்னது…

முனியப்பன் சார். உங்க வாழ்த்துக்கு நன்றிங்க ..

மோகன்ஜி சொன்னது…

சற்று தாமதமாகிவிட்டது என் பக்தகோடிகளே! அதிக நேரம் நிஷ்டையில் இருந்து விட்டேன். அரசுகட்டில் துறந்து ஆசிரமம் அமைத்த பின் என்ன அமைதி. ஆஹா!

என் பிரதம சிஷ்யன் ‘கஜனானந்தா’ நேற்றே வந்து சேர்ந்தார் .
பாண பத்மநாபன் என்ற அவரின் பூர்வாசிரம பெயரை மாற்றச் சொன்ன போது, யானை மேல் உள்ள அன்பினால் இந்தப் பெயர் சூட்டி அழகு பார்த்தேன்.

‘ஆகட்டும்.. ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அன்பர்களுக்கு
கஜ தீக்ஷை அளிக்க வந்து கொண்டே இருக்கிறேன்’
.
“அப்பனே கஜனானந்தா! தீக்ஷை பெறுபவர்கள் தர வேண்டியதை எல்லாம் தந்து விட்டார்களா? நான் வரும் வரை அவர்களை ‘மங்குனி மந்திரம்’ ஓதச் சொல். என்னை அழைத்து செல்ல தங்க பல்லக்கு வந்து விட்டதா? நல்லது.
பூர்வாசிரமத்தில் நான் ஆண்ட நாட்டை ரெண்டாகப் பிரித்து விட நல்ல ஏற்பாடு செய்து விட்டாயே கஜனானந்தா! நீ நல்லவன், வல்லவன்,நாலும் தெரிந்தவன்.. சமயம் வரும் போது அதற்கு தக்க ஏற்பாடு செய்வோம்.

பல்லக்கை மெல்ல தூக்குங்களப்பா. அங்குசதின் “பின் விளைவு” இன்னும் ஆற வில்லை. எங்கய்யா அந்த சமயக் குறிப்பு ? இன்னும் ஆன்மீகப் பேச்சு பேசப் பழகவேண்டும். பேசும் போது நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருகிறது.
அப்பனே கஜனானந்தா! என் உரையை கொஞ்சம் லகுவாக தயாரிக்க கூடாதா? ப்ளாகில் எழுதுவது போலவே தயாரிக்க வேண்டுமா?
துபாயில் ஆசிரமக் கிளை தயாராகி விட்டதா?. அங்கயும் என் பெயர் மோகனானந்தா என்று வேண்டாம். ‘ஓட்டகேஷோ’ பரவாயில்லையா? ரூம் போட்டு யோசித்து நல்ல பேரைத் தேர்ந்தெடு. வேங்கோபப் புலவர் இருந்தாலாவது கிருத்திரமமா ஏதாவது..... இரு இரு “கிருத்திருமானந்தா” என்ற பேர் நல்லாவே இருக்கே! வெங்கோபன் பெயரைச் சொன்னவுடனே ஐடியா வந்திடுச்சே! ஆனா ஒண்ணு ஞாபகம் இருக்கட்டும் கஜனானந்தா! வெங்கோபன் இந்தப் பக்கம் வந்தா உள்ள விட்டுவிடாதே! நாம் கட்டுன கல்லாவில் பில்லாவேலை பண்ணிடுவாப்பல!! . சாமியாட பத்து பேரை இன்னுமா அப்பாயின்ட் பண்ணலே.?. பில்டப்பு வேணாமா??”

‘யோவ் யார் அப்பனே அது? இங்கன வந்து படம் புடிக்கிறது? ஆச்ரமத்துக்குள்ளே டிராயிங் மாஸ்டருங்க மட்டும் தான் வந்து என்னை சித்திரமா தீட்டிக்கலாம். போட்டோ புடிக்கிற வேலையெல்லாம் வேணாம்.ஆயுசு கொறயுமாம்’.

“பக்த கோடிகளே! கடவுள் மனிதனைப் படைத்தானா? இல்லை மனிதன் கடவுளைப் படைத்தானா? பன்ச் பூதமும்.. (ங்கொய்யால. மீண்டும் பேசறப்போ ஸ்பெல்லிங் மிஸ்டேக்.) பஞ்ச பூதமும் உருவாக்கிய இந்த காக்கையை, அதாவது யாக்கையை.. (ஹூஹீம்.பேச்சு சரிப்படாது,ரூட்ட மாத்து)
மங்குனி மந்திரத்தை உரக்க ஓதுங்கள்..”

மங்குனி... மங்குனி... மங்குனி... மங்குனி... மங்குனி...

பத்மநாபன் சொன்னது…

குருவே ...நினைத்தேன் இந்த மாதிரியான எண்ணத்தோடு எதாவது செய்வீர்கள்....அடகில் இருந்த நாட்டை தானம் கொடுக்கும்பொழுதே., எதற்கோ மன்னர் தயாராகி கொண்டிருக்கிறார் என்று.

குட்டி கதை புத்தகங்கள் கேட்கும் பொழுதே புரிந்தது , பிரசங்கங்களுக்கு கோர்வையாக சொற்பொழிவுகளை தயார் செய்து..கதைகளை மக்களுக்கும் குட்டிகளை தமக்குமாக தேர்த்தும் இந்த தொழிலை தேர்ந்துஎடுப்பீர்கள் என்பது புரியாமலா நான் இவ்வளவு நாள் ஆத்தி ஆத்தி ஊத்திக்கொடுத்து கொண்டிருந்தேன்..

மஞ்சத்து ஆசையோடு கிஞ்சித்தும் வெட்கமில்லாமல் வஞ்சனை செய்து பறித்து கொண்ட விதுஷக புலவனுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் ஒரு பஞ்சாயத்து ஆலமர அளவு கூட நிலம் தேறாது என்பது..

உங்கள் பரிவாரங்களை பார்த்து வெம்பி , இதிலும் ஆட்டைக்கு எதாவது வழி இருக்கிறதா என்று மந்திர தந்திரங்களோடு நம்மை பிரிக்கும் சதியோடு வரும் ஃபுல்..ஃபுல் புலவனிடம் இனி எமாந்தால், நமது ஆசிரமக்கனவுகள்...மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகும்......

கோடம்பாக்க கிளையிலிருந்து
அழைப்பு வந்திருக்கிறது , என்னவென்று பார்த்து வருகிறேன்...... சொற்பொழிவிற்கு தயாராகுங்கள்..அமுக்கமான குரலில் ...முதலில் உங்களை மீறி வரும் ஜொல்லை துடையுங்கள்...நுட்பம் தெரிய வேண்டாமா...என்ன குருவே நீங்கள்.....பயிற்சி கொடுத்தே அயர்ச்சி ஆகிவிடுவேன் போலிருக்கிறது.......

RVS சொன்னது…

இனி என் முறை... கஜனானந்தாவும் மோகனானந்தாவும் சற்று நேரம் பக்தைகளுக்கு தீக்ஷை அளித்துக்கொண்டு, ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு அமைதி காக்கவும்.... கிழிஞ்சுது கிருஷ்ணகிரி..... இதோ வந்துட்டேன்.. கொஞ்ச நேரம் ரெண்டு பெரும் கமென்ட் போடாதீங்க...

அன்புடன் என்றும் ஆசிரமப் பணியில் ஆர்.வி.எஸ்.

RVS சொன்னது…

மோகனானந்தாவிர்க்கு இந்த குஜாலானந்தாவின் குஜால் வணக்கம்.

எவ்வளவு அடி பட்டாலும் நீங்கள் திருந்தப்போவதில்லை. மீண்டும் மீண்டும் தங்களது "தலையில்" கணம் இல்லை என்று நிரூபிப்பீர்கள். ஆனால் மடியில் நிறைய கணம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு சரக்கு மடியில் கட்டி வைத்திருப்பீர்கள். கஜனானந்தாவின் கோடம்பாக்க ஆசிரம விஜயம் என்ன வென்று புரியாமல் அவர் கொடுத்த கதைப் புத்தகங்களை பரீட்சைக்கு படிப்பது போல் படிக்கிறீர்கள். அவர் புத்தகத்து மத்தியில் வைத்துக் கொடுக்கும் சரோஜாதேவி புத்தகங்களை கண் விரிய பார்த்துக் கொண்டு ருத்ராட்சங்களை உருட்டிக்கொண்டிருக்கிரீர்கள். என்ன செய்வது? பத்தாவது படிக்கும் பருவ வயதிலேயே ஆசிரமக் கனவுகளோடு கல்யாணம் ஆன ரஞ்சிதம் டீச்சரை அலேக்காக்காக தலைக்கு மேல் தூக்கி தமிழ்ப் பட ஹீரோ போல் சுத்தப் பார்த்தீர். சுதாரித்த பள்ளியார் "ஐயா சாமி... வாங்க போகலாம்" என்று சர்வ மரியாதையோடு ஒரு ஆட்டோ பிடித்து மாலையிட்டு உங்களை பூர்வாசிரம வீட்டில் கொண்டுவந்து சேர்த்து காலில் விழுந்து சேவித்து சென்றார்கள். அன்றைக்கு வந்தது உங்களுக்கு சாமியார் பட்டம்.

வீட்டிலாவது சும்மா இருந்தீரா... ரஞ்சிதமான ஆசையில்... புடவை கட்டிய இளம் பெண்களை வசியப்படுத்த "மோகன" யோகா சொல்லித்தருகிறேன் என்று ஆரம்பித்தீர். யோகா பயிற்ச்சியில் வழுக்கி விழுந்த பெண்களை வாழ்க்கையில் தூக்கி விடுகிறேன் பேர்வழி என்று சொல்லி உங்கள் ஆசை வலையில் விழ வைத்தீர்கள். அப்போது உங்கள் யோகா வகுப்பிற்கு "ஆள்" சேர்த்தது யானானந்தா இல்லையில்லை கஜனானந்தா. அதென்ன சலபாசனா!. அதை செய்தால் நித்யானந்தம் கிடைக்கும் என்கிறீர்களாம்.

RVS சொன்னது…

சரி போனது போகட்டும். எவ்வளவு நாள் இன்னும் கோடம்பாக்கம் சைடுகலையே பார்க்கப் போகிறீர்கள். நெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கும் பாய்வது போல உங்கள் பெயரை சொல்லி கஜனானந்தா கஜானாவையும், கால் கேர்ள்களையும் காலி செய்துகொண்டிருக்கிறார். ஹாலிவுட் பக்கம் சென்றால் பமீலா ஆண்டர்சன், அஞ்சலினா ஜோலி போன்ற நட்சத்திரங்கள் ரூம் போட்டால் பத்தாதென்று உங்களுக்காக ஹால் போட்டு காத்திருக்கிரார்கள். என்ன ஏற்பாடு செய்யட்டா?

நேற்று தான் ரெண்டு பாட்டில் "பீம புஷ்டி" லேகியம் வாங்கித்தந்தேன். அதற்குள் காலியாகிவிட்டதா? நேற்று கஜனானந்தா ஒரு ஸ்பூன் எடுத்து நக்கிச் சென்றதை உங்கள் பிரதான பக்தை மோகினியானந்தா பார்த்ததாக தகவல். கஜனானந்தாவும் மோகியானந்தாவும் அடிக்கடி "கூட்டு யோகா" வேறு செய்வதாக கேள்வி. எப்போது உங்களுக்கு கேமரா வைப்பார்கள் என்று தெரியவில்லை. இன்னும் சேனலிடம் ரேட்டு படியவில்லை என்று கேள்வி. ஜாக்கிரதை!

என்றும் ஆசிரமப் பணியில், மோகனானந்தா வழியில் குஜாலானந்தாவாகிய பூர்வாசிரம ஆர்.வி.எஸ்.

RVS சொன்னது…

இப்போ ஆரம்பிக்கட்டும்... முதலில் மோகனானந்தா.. அப்புறம் கஜானானந்தா... இதே வரிசையில் பஜனை தொடரட்டும்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ், யானை கதைக்கு வேற நாட் இல்லே விழுது? ஒழுங்கா யானை மேல ஏறுங்க... உங்களுக்கு குச்சி மிட்டாய்,குருவி ரொட்டி எல்லாம் வாங்கித் தரேன். சமத்தோல்லியோ ?! நம்ம ஊட்டாண்ட ஒரு சின்ன பாப்பாவுக்கு பிறந்த நாள் பார்ட்டி. பெரிய சாக்லேட் கேக் இப்பதான் உள்ள எடுத்துகிட்டு போனாங்க... ஒரு நடை போயிட்டு வந்துடறேன்...

நம்ம பத்து எவ்விடே போயி ?

“இருடீ வரேன்.”. இது எங்க இல்லத்தரசிக்கு..(முதல் வார்த்தையில் ‘டீ’ சைலன்ட் என அறியவும்.. )
வந்துட்டேன்.. வந்துட்டேன்

பத்மநாபன் சொன்னது…

முதல் மோகன்ஜி..என்னைக்குமே நமக்கு டீ சைலண்ட் தான்.... நமக்கு இங்கிலிஷ் எழுத்துல கூட 25 எழுத்துதான் .....A,B,C சடார்ன்னு தாவி E க்கு போயிருவோமே....

அன்பும் ஆனந்தமும் நிறைந்த ஆர்.வி.எஸ்..உங்கள் ஆர்வத்தை அணை போட்டு தடுப்பது போல் கடைக்கு சர்ட்டர் போட்டுவிட்டு அடுத்த பதிவு தொடங்கிவிட்டார்.....ஆர்வத்தை பத்திரமாக வைத்திருங்கள்....

அடுத்து எதோ ஒரு ஆனந்தா , ஆனந்தமாக காற்று வாங்குவார் ..அப்ப கதவை திறந்துருவோம்... கஜானந்தாவின், ஜெகஜால கில்லாடி வேலைகளையும் மோகனப்புன்னகையோடு, குஜாலாக ஆரம்பிப்போம்..

ஷேக்கு ....வந்துட்டன்யா ..எல்லா ஒட்டகமும் பத்திரமாத்தான் இருக்கு...ஒழுங்கா மேய்ச்சுட்டுத்தான்யா. இருக்கேன்

RVS சொன்னது…

கொஞ்சம் சீரியஸ்ஸாக மூவர் கூட்டணியில் ஒரு கதை எழுதலாமா... தீம் கண்டமேனிக்கு சென்று கடைசியில் முடிப்போம்... உள்ளுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை சிலுப்பி விட்டுட்டார் மோகன்ஜி... என்னோட ரூட்டு தப்போ? அதான் பாதியில் திரை போட்டுட்டார் போலருக்கு. பரவாயில்லை... என்ன பன்றது சாமியார் அப்படின்னு சொன்னாலே இந்தசப்ஜெக்ட் தான் கிடைக்குது... சரி விடு ஜூட்..... ;-) ;-)

அன்புடன் சமர்த்தான ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

என் இனிய உடன் பிறப்புக்களே !குஜாலானந்தா, மோகனானந்தா,கஜானனானந்தா ஆகிய நாம் மூவருமே ஆனந்தத்தின் முப்பரிமாணமே அன்றோ?.என் இனிய குஜாலானந்தா, நீங்கள் வேறு ரூட் எடுத்ததாக நினைக்க வேண்டாம். நம் எல்லோருக்கும் ஒரே ரூட், ராங் ரூட் தானே?
உண்மையைச் சொன்னால், இன்று நிறைய விசிட்டர்ஸ். உட்கார்ந்து யோசிக்க விடலிங்க. அடுத்த பதிவோ ஏற்கெனவே எழுதி வைத்தது.. சைக்கிள் கேப்புல இறக்கினேன்.

ஆர்.வீ.எஸ், உங்க யோசனையை இரு கரமும் நீட்டி வரவேற்கிறேன். ஒரு கதையை மூவருமாய் எழுதுவோம்.
பிள்ளையார் சுழியை, என்று, யார் போடலாம் என்று நீங்களே சொல்லுங்களேன். பின்னிடலாம் பாஸ். கதை ஓஹோன்னு வந்து சினிமாகாரங்களுக்கு குடுத்தொம்னா தமிழ்நாடு ரைட்ஸ் உங்களுக்கு,ஆந்த்ரா ரைட்ஸ் எனக்கு, வெளிநாட்டுக்கான ரைட்ஸ் பத்து சாருக்கு. போட்டுடலாமா? சாட்... பூட் ...த்ரீ

பத்மநாபன் சொன்னது…

வெளி நாட்டு ரைட் எனக்கா.... ரைட்டு.. ஆரம்பிச்சிருவோம்... கதை ஆரம்பிக்கும் கதைக்கே ரூம் போடனும் முதல்ல சரக்கோட..அட கதைக்கான சரக்கோடங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அது சரி.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மனம் விட்டு சிரித்தேன். இதை ஆர்.வி.எஸ் ப்ளோகிலும் இதே பத்தியை படித்தேன். ரொம்ப பெரிய செய்தி என்பதால் பொறுமை போய்விட்டது. போன வாரம் நிறைய மீட்டிங் / மற்றும் தொலைபேசி மீட்டிங் என்று சூப்பர் பிஸி வேறு

சாய்ராம் கோபாலன் சொன்னது…

Mohanji

This was my first story that I wrote in my blog.

http://tamizhkirukkan.blogspot.com/2008/02/blog-post_3543.html

RVS சொன்னது…

ஓ.கே அடி ஜூட்.... மோகன்ஜி இன்னும் ஓரிரு நாட்களில் பட பூஜை..... மூணு ஊர்லேர்ந்து கும்பல் கூட்டி ஒரு கூட்டத்தை கூட்டி வச்சுருக்கேன். அதனால இன்னிக்கி எஸ்கேப். முடிந்தால் இரவு. மூவரும் ஈமெயில் பகிர்ந்தால் ஈசி என்று நினைக்கிறேன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி! வெளிநாட்டு ரைட்ஸ்ன்ன உடனே ரொம்ப ஆடாதீங்க!
அருவா,அம்மா செண்டிமெண்ட், ஆஸ்திரியாவுல போய்,பரத நாட்டியத்தோட ஒரு டூயட். தெலுங்கு வில்லன் எல்லாம் போட்டு தமிழ்நாடு B&Cயை அள்ளிடுவோம்... தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகிக்கு டிரஸ்ஸா கர்சீப் ..அதுவும் லேடீஸ் கர்சீப் வாங்கி,கலரா படம்பூராவும் அள்ளித் தெளிச்சிருவோம் இல்ல? அத்தன சென்டரும் சூப்பர்
டூப்பர் ஹிட் ஆவும்.அங்கன எப்பிடி ஒப்பெத்துவீங்க துரை??

மோகன்ஜி சொன்னது…

வாங்க குமார்.. யானை ஆட்டம் ஜாஸ்தியாயிடுசோ?

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்! உங்க பிரெஞ்ச்தாடிய பாத்தாலே உற்சாகம் தான்.. உங்க கதையைத்தான் படிக்க போய்க்கிட்டேயிருக்கேன்!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் தங்கள் சித்தம் வலையின் பாக்கியம்! ஈ மெயில் வந்துகிட்டே இருக்கு..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//மோகன்ஜி சொன்னது… வாங்க சாய்! உங்க பிரெஞ்ச்தாடிய பாத்தாலே உற்சாகம் தான்.. உங்க கதையைத்தான் படிக்க போய்க்கிட்டேயிருக்கேன்! //

மோகன்ஜி - என் கதைக்கு நீங்கள் போட்ட அண்ணா நகர் செய்திக்கு பதில் போட்டிருக்கின்றேன்.

சாய் (புள்ளி) கோபாலன் என்ற என் ஜிமெயில் ஐடிக்கு பதில் போடுங்கள்.

அட, நீங்கள் அண்ணாநகர் புள்ளியா !! பலே பலே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அட பதிவ விட பின்னூட்டம் கலக்கலால்//
Anggusam kutthiyaachu.

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி /Anggusam kutthiyaachu./ நன்றிங்க!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

யானை புகுந்த இடுகை ஒர்ரே கலகல
:-))))

Geetha Sambasivam சொன்னது…

இதைத் தான் வெண்கலக்கடையில் யானை புகுந்தாப்போலனு சொல்வாங்களா? அமர்க்களம் போங்க! யானை நினைக்குதோ இல்லையோ உங்க கற்பனை வளம் அபாரம்.

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்... ஒரு சின்ன நகைச்சுவைக்கு ஒரு நீண்ட கும்மி பின்னூட்டத்தில் நிகழ்ந்தது. இந்தப்பதிவை கமேண்டுகளுடன்,அப்போதைக்கப்போதே R.V.S அவர்களின் வலைப்பூவிலும் வெளியானது. மொத்தத்தையும் சிறு புத்தகமாய் அச்சடித்து மலேயாவிலோ சிங்கப்பூரிலோ 'டைம் பாஸ்' என்று தமிழர் பகுதியில் விற்கப்பட்டதாயும் அறிந்தோம்.. பத்மநாபன்,ஆர்.வீ.எஸ், அந்த ஜமா எல்லாம் வலையில் இன்று இல்லை... அது ஒரு காலம்... நாலுவருடத்துக்கு முன் போட்ட பதிவை மீண்டும் படிக்க வைத்து விட்டீர்கள்

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

ஹா ஹா ஹா பின்னூட்டங்களைப் பார்க்க , குட்டிக் கதையில் பென்னாம்பெரிய கொமெடி இருக்கும்போலிருக்கு ஆனா எனக்குப் புரியுதேயில்லை.. போனாப்போகுதென எல்லோரோடும் சேர்ந்து சிரிச்சிட்டுப் போறேன்ன்ன் ஹா ஹா ஹா:).

மோகன்ஜி சொன்னது…

என்ன/ புரியலையா? நங்கையருக்கு சொல்லப்படும் vital statistics ஒரு யானைக் குட்டிக்கு போட்டு பார்க்கிறான் கதாநாயகன். அம்புடுதேன்!