சனி, அக்டோபர் 09, 2010

ஞொய்யாஞ்ஜி கும்மாளம்


ஞொய்யாஞ்ஜியைப் பார்த்து அவர் மனைவி பல்லேலக்கா கேட்டாள்,
       ஏங்க ஒரு வேலையும் உங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது?
       நானும் மாச செலவுக்கு எங்க அப்பா கைய
      இன்னும் எவ்வளவு நாள் தான் எதிர்பாக்குறது?


ஞொய்யாஞ்ஜி: நான் என்னடி செய்வேன்? நானும் கேக்குற
           கேள்விக்கெல்லாம் டான் டான்னு பதில் சொல்றேன்..
           இதைக் கேளேன்.. போன வாரம் திருச்சில ஒரு கார்
           சர்வீஸ்ஸ்டேஷன்க்கு இண்டர்வியூ போனேனில்லையா?

பல்லேலக்கா: ஆமாங்க..என்ன ஆச்சு?”

ஞொய்யாஞ்ஜி: "என் கிட்ட எலெக்டிரிக் மோட்டார் எப்பிடி
               ஓடும்ன்னு கேட்டாங்க".

பல்லேலக்கா: நீங்க என்ன பதில் சொன்னிங்க?

ஞொய்யாஞ்ஜி: டுர் ர் ர் ர் ர் ர் ர் ர் ......ன்னு சவுண்டு விட்டேன்.
                அந்த முதலாளி உர்ர்ன்னு முகத்தை
                வச்சுகிட்டு நிறுத்துன்னு கத்தினார்.

பல்லேலக்கா:  அப்புறம் ?

ஞொய்யாஞ்ஜி: எனக்கா தெரியாது?
                டுர் ர் ர் ர் ர் ர் ர் ர்...டுப்..டுப்..டுப்.. ன்னேன்.

பல்லேலக்கா:அப்பிடியே என்ஜின் நிக்கிற மாதிரியே இருக்குங்க!

 ஞொய்யாஞ்ஜி: என் போதாத வேளை.. அவரு அப்பிடியே நெஞ்சை
       பிடிச்சிகிட்டு சாஞ்சிட்டாரு..ஹார்ட் ப்ராப்ளம் போல இருக்கு..
       வேளை சரியில்லேன்னு வந்துட்டேன்.

பல்லேலக்கா: என் ராசா. எவ்வளவு அறிவு உங்களுக்கு?
        கண்டிப்பா ஏதோ கம்பெனி உங்களைக் கொத்திக்கிட்டு
        போகப் போகுது பாருங்க..

ஞொய்யாஞ்ஜி பெருமையுடன் மனைவியை ஏறிட்டார்!  

63 comments:

சுதர்ஷன் சொன்னது…

இது நான் கேள்விப்பட்டிருக்கேன் ...நிறுத்துன்னு சொன்னப்ப டப் டப் ன்னு நிறுத்தினார் ன்னு வந்திருக்கும் . ...

மதுரை சரவணன் சொன்னது…

valai kattaayam koduppaan. pakirvukku nanari.

Unknown சொன்னது…

என் ஒன்றரை வயதுப் பைய்யன் இப்படித்தான் சொல்கிறான் ... பெரிய என்ஜினியரா வருவானோ ...?

மோகன்ஜி சொன்னது…

சுதர்சன்ஜி,வருகைக்கு நன்றி.
.

மோகன்ஜி சொன்னது…

சரவணன் சார்,இதற்கு முந்தைய பதிவான,
அம்மாவைப் பற்றிய 'என் இவ்விரவு நானிங்கே துயில வேண்டும்' கவிதையையும் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்

மோகன்ஜி சொன்னது…

செந்தில்சார், உங்க பிள்ளை கட்டாயம் பெரிய
என்ஜினீயராய் வருவான்.. இன்னும் சதிலீலாவதி நெனப்புலையே இருக்கீங்க! எந்திரன் ரஜினி ரோபோ
எதையெல்லாம் உருவாக்குவானோ?
அவனுக்கும் என் அன்பு.

RVS சொன்னது…

ஞொய்யாஞ்ஜியை பார்த்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு வந்து கவனிச்சுக்குறேன்.

Aathira mullai சொன்னது…

ஜாடிக்கேற்ற மூடியாய் ஞொய்யாஞ்சியும் பல்லேலக்காவும்.. சேர்ந்து கலக்குறாங்களே...ஆமா.. வேலை கிடைச்சா எங்களுக்கெல்லாம் பார்ட்டி தருவாரா ஞொய்யாஞ்சி..சிரித்தேன்...இதய வலி போக...

பத்மநாபன் சொன்னது…

நம்ம சப்ஜக்டாச்சே ...நல்லா சொல்லிக் கொடுத்துதானே அனுப்பிச்சேன் இப்படி சொதப்பிட்டாரே ஞொய்யாஞ்ஜி.......

நான் சொல்லிக்கொடுத்தது.
உர்ரு உர்ரு உர்ரு உர்ரு உர்ரு உர்ரு உர்ரு........
நிறுத்தச்சொன்னா......
கஜ....கஜ.....கஜக்.

( நான் படிச்ச காலத்திலிருந்து , பையன்கள் படிக்கும் இந்த காலம் வரை வாத்தியார்கள் இண்டக்ஸன் மோட்டார் ஒட்டத்தை இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்..... ஞொய்யாஞ்ஜிகள் தலைமுறை தலைமுறையாக இருக்கிறார்கள்.)

9 அக்டோபர், 2010 11:31 pm

மோகன்ஜி சொன்னது…

மெள்ள வாங்க ஆர்.வீ.எஸ்! உங்களக் காணமேன்னு இவ்வளவு நாழி வாசல்லயே உட்கார்ந்திருந்தார். இப்போ தான் தாச்சிண்டார்.தூக்கத்துல கூட ஆர்.வீ.எஸ் மாதிரி வருமான்னு என்னமோ சொல்லிகிட்டிருக்காரே.. என்னமோ போங்க நீங்களாச்சு.. உங்க சிஷ்யன் ஆச்சு.

மோகன்ஜி சொன்னது…

கண்டிப்பாக பார்ட்டி தருவார் ஆதிரா. அதுல என்ன சந்தேகம்? உங்களுக்கில்லாததா? நேத்து உங்க வலை, ஹேமா வளஎல்லாம் பாத்துட்டு என்னமோ அவரும் கவிதை எழுதிக்கிட்டிருந்தார். ரூமெல்லாம் கசக்கி போட்ட பேப்பர்! அடுத்த வாரம் அதையெல்லாம் பதிவிடப் போறாராம்.பல்லேலக்காவுக்கு உங்களை நல்லா தெரியுமாமே ஆதிரா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

nallaa irukkunga....

ம.தி.சுதா சொன்னது…

ஆமாம் மிகவம் ரசிக்கக் கூடிய பதிவு ஒன்று அருமை சகோதரா...

ஹேமா சொன்னது…

பின்ன...காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லோ.நல்லாத்தான் பேர் வைக்கிறீங்கண்ணா !

Chitra சொன்னது…

ஞொய்யாஞ்ஜி - இதை தமிழில் டைப் பண்றதுக்கே உங்களை பாராட்டணும்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன் ரொம்ப நாளைக்கு முன்னாலே ஒரு மின் பொறியாளர் சொன்ன இந்த ஜோக்கை ஞாபகத்திலிருந்து தோராயமாக நம்மாளுகிட்ட சொன்னேன். நீங்க கூட சொல்லி குடுத்து விட்டிருக்கீங்க! பாவம் சொதப்பிட்டாரு போல!

ஞொய்யாஞ்ஜி,உங்க ஊர்ல கூட இருந்தாராமே?. கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஞொய்ஸும் பல்ஸும் பேசிகிட்டிருந்ததைக் கேட்டேன்.
பல்ஸ்: ஏங்க! வளைகுடாவுல வெய்யில் ரொம்ப அதிகமாமே?
வெய்யிலப்போ என்ன பண்ணுவீங்க?

ஞொய்ஸ் : “இது ஒரு விஷயமா?அப்போ ஏ.சி கீழே போய்
உட்காருவேன்”

பல்ஸ்: “வெய்யில ரொம்ப அதிகமாயிடுச்சின்னா??”
ஞொய்ஸ் : “ரொம்பன்னா.ஏ.சி யை ஆன் பண்ணிக்குவேன்”

மோகன்ஜி சொன்னது…

கருத்துக்கு நன்றி குமார்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி ம.தி.சுதா! தம்பியப் பாத்து ரொம்ப நாளாச்சே!

மோகன்ஜி சொன்னது…

ஹேமா...நீதான் இப்பிடி சொல்றே..ஞொய்யாஞ்ஜியோ
எனக்கு ஸ்டைலா "ஹேமேஷ்"ன்னு வச்சிருக்க கூடாதான்னு சண்டை போடுறார் தங்கச்சி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சித்ரா! ஞொய்யாஞ்ஜியே ஒரு சிக்கலான பேர்வழி! அவர் பெயர் டைப்பிங் செய்யும் போது கூட அப்படித்தானே இருக்கும்?

எஸ்.கே சொன்னது…

செம காமெடி! ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன்! நன்றி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி எஸ் கே..

ம.தி.சுதா சொன்னது…

////நன்றி ம.தி.சுதா! தம்பியப் பாத்து ரொம்ப நாளாச்சே! ////
ஆமாம் அண்ணா வேலை விசயமா வன்னிப் பக்கம் பொய் வந்தேன் இனி கட்டாயம் எதிர் பாருங்கள்...

பெயரில்லா சொன்னது…

ஏற்கனவே படிச்சதுதான்.. இருந்தாலும் எப்பவும் சிரிப்பு தான்..:))
ஒன்னோட முடிச்சிட்டீங்களே மோகன் சார்!

மோகன்ஜி சொன்னது…

ஆகட்டும் சுதா! நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாலா! யார் சொன்னாலும் நம்ம ஞொய்யாஞ்ஜி சொல்ற பாங்கு வருமா? என்ன நான் சொல்றது?!
மேலே பத்மநாபன் சாரின் பின்னூட்டத்திற்கான என் பதிலில் இன்னொரு கிச்சுகிச்சு இருக்கு.பாருங்க!

RVS சொன்னது…

ஞொய்யாஞ்ஜி ஒருநாள் வீட்டு வாசல்ல "ஞொய்யாஞ்ஜி Ph.D" அப்படின்னு போர்டு மாட்டிக்கிட்டு இருந்தார். அக்கா பல்லேலக்காவுக்கு ஒரே ஆச்சர்யம். சந்தோஷம். ஊர்ல இருக்குறவங்க கிட்ட எல்லாம் எம் புருஷன் டாக்டரு டாக்டரு அப்படின்னு ஒரு பெருமை பீத்திக்கிட்டு இருந்துச்சு. பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு பயங்கர டவுட்டு. மருந்துக்கு கூட ஆண்டவன் இந்தாளுக்கு மூளையை வைக்கலையே இந்தாளுக்கு, எப்பவுமே மேல்மாடி காலியாத்தானே இருக்கு திடீர்னு Ph.D அப்படின்னு போர்ட் போட்டு அலப்பறை பண்றானே அப்படின்னு.... "எச்சுஸ் மீ ஆபிசர்..." அப்படின்னு காலை மடக்கி கையை இருமார்புக்கும் குறுக்கே கட்டி..."ஒன்னு கேக்கலாமா?" அப்படின்னார். ஞொய்யாஞ்ஜி அண்ணன் திரும்பி பார்த்து.. "எஸ் ப்ளீஸ்." அப்படின்னு சிவாஜி மாதிரி ஏறிட்டு பார்த்ததும் "நேத்தி வரைக்கும் நீங்க எஸ்.எஸ்.எல்.சி தானே இன்னிக்கி திடீர்னு டாக்டர் ஆயிட்டீங்களே.. இது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?" அப்படின்னு பாலுத் தேவரை பார்த்து பாரதிராஜா படத்துல கேக்கற மாதிரி கேட்டதும்... ஞொய்ஸ் ஒரு லுக் விட்டு "Ph.D அப்படின்னா டாக்டர் மட்டும் இல்லை பரம்ஸ் "Passed high school with Difficulty" அப்படின்னும் ஒரு அர்த்தம் இருக்கு."ன்னு விளக்கம் கொடுத்தார்.
ஜன்னல்லேர்ந்து இதைப் பார்த்துக்கிட்டு இருந்த பல்ஸ் ஏர்ல ரெண்டு கையையும் பறவையாக்கி ஆட்டி கன்னத்துல மடக்கி திருஷ்டி கழிச்சி சொடக்கு போட்டாளாம்.

என்ன மோகன்ஜி டாக்டர் ஞொய்ஸ் இப்ப எங்க இருக்காரு?

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ்
//என்ன மோகன்ஜி டாக்டர் ஞொய்ஸ் இப்ப எங்க இருக்காரு?//

வீட்டு வாசல்ல பீச்சாங்கைப் பக்கமா இன்னொரு போர்டு அடிச்சிகிட்டு இருக்கார். எதுக்காக ரெண்டு போர்டுன்னு கிட்ட போய்ப் பாத்தா,அது
Mrs பல்லேலக்கா,I.A.Sன்னு இருக்கு.

அதிர்ந்து போய்,'என்னண்ணே இது'ன்னு கேட்டா,
"நான் மட்டும் முன்னுக்கு வரணும்னு நினைக்கிற மட்டமான புருஷன் நானில்லை.அதுக்காகத்தான்
பல்ஸுக்கும் I.A.Sன்னு பட்டம் குடுத்துருக்கேன்.பாவம் நாளெல்லாம் சமையக்கட்டுல கஷ்டப் படுறா. INDIAN ADUPPADI SERVICE ன்னு அதுக்குத் தான்! இதை உங்க ப்ளாக்ல போடுங்க.. பார்த்துட்டு உங்களமாதிரி கணவர்கள் எல்லாம் திருந்தட்டும்!"

"சோடா பிளீஸ்"

RVS சொன்னது…

உடனே சோடா வாங்க ஓடிப்போனார் நம்ம ஞொய்ஸ்.
"சார் லெமன் சோடாவா பன்னீர் சோடாவா ஆர்டினரி சோடாவா?" அப்படின்னு கேட்டான்..
"இம்... இல்ல கோலி சோடா குடு..." அப்படின்னார் ஞொய்ஸ்
"என்ன கோலி?" அப்படின்னான் கடை.கா.
அவனை ஒரு தடவை முறைத்து பார்த்துவிட்டு...
"உம்... பேந்தா கோலி...போயா..... ஒரு ஆர்டினரி சோடா... ஒரு லெமன், ஒரு பன்னீர் பாட்டில், ஒரு கோலி குடுய்யா " என்று ஒரு மெனு கொடுத்து வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமா வீட்டுக்கு வந்தார்.

ஞொய்ஸ் நினைப்பில் கேராக இருந்த மச்சி மோகன்ஜியிடம் சோடாவை உடைத்து வலது கையில் கொடுத்துவிட்டு... இடது கையில் கோலி, லெமன், பன்னீர் மூன்றையும் கொடுத்து
இப்ப நீங்க சாப்டுறது "லெமன்கோலிபன்னீர் சோடாவாக்கும்..." என்றார் பெருமையாக...
இதைக் கண்டு நெகிழ்ந்து போய் பல்ஸ் கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது....

ஹும்.... அடுத்தது யார்? வாங்க பத்து வந்து விளையாடுங்க... அப்பாஜி கண்ல பட்டா கூட அடிச்சு விளையாடுவாரு...

பத்மநாபன் சொன்னது…

ஒரு தடவை நம்ம ஞொய்யுக்கு சரியான காய்ச்சல் , பல்ஸக்கா ,ஒரிஜனல் டாக்டர்கிட்ட ஞொய்யை கூட்டிட்டு போனாங்க.. விவரம் கேட்ட டாக்டர் , நாளைக்கு ப்ளட் டெஸ்ட்டுனு சொல்லி அனுப்பிச்சாட்டாரு..

ஞொய் தம்பதியருக்கு இருப்பு கொள்ளவில்லை... வெடிய வெடிய ``ப்ளட் டெஸ்ட்``க்கு கம்பைன் ஸ்டடி ஒரு புஸ்தகம் விடாம....

RVS சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RVS சொன்னது…

ப்ளட் டெஸ்ட்ல பாஸா இல்லை புட்டுக்கிச்சா பத்துஜி. தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கோம். ;-) இப்படி காதுல ப்ளட் வர்ற அளவுக்கு ஜோக் சொல்லக் கூடாதுன்னு யாராவது இங்க போர்ட் வைங்கப்பா.... ;)

எஸ்.கே சொன்னது…

ஆளாளுக்கு ஜோக் சொல்றீங்க! நல்லாயிருக்கு! நானும் என் பங்குக்கு ஒன்று சொல்றேன்!
-------
ஞொய்யாஞ்ஜி தம்பதியினர் இன்பச் சுற்றுலாவிற்காக(picnic) ஒரு காட்டில் தனியாக முகாமிட்டிருந்தனர். அங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே வந்தான்.
அவன் திடீரென ஞொய்யாஞ்ஜி மனைவி பல்லேலக்காவின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து ”நான் உன்னைக் கொல்லப்
போகிறேன் ”உன் பெயர் என்ன சொல்” என்றான்.

அவள் ”பல்லேலக்கா” என்றாள்.

”அது என் அம்மாவோட பேர், நீ என் அம்மாவை ஞாபகபடுத்திட்ட.அதனால உன்னை விட்டிரேன்” என்றான் அவன்.

பிறகு ஞொய்யாஞ்ஜியைப் பார்த்து கேட்டான் ”உன் பெயர் என்ன?”

ஞொய்யாஞ்ஜி சொன்னார் ”என் பெயர் ஞொய்யாஞ்ஜி, ஆனால் நண்பர்கள் என்னை பல்லேலக்கா என அழைப்பார்கள்."

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ். கேட்டேனே ஞொய்யாஞ்ஜியை," நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க"ன்னு..
ஞொய்யாஞ்ஜி என்ன பதில் குடுத்தாரு பாருங்க!

"சிட்டி அந்த டி.வியை போடு" என்றால் தூக்கி கீழே போட்டுவிட்டு நிற்கும் ரோபோ ஜோக்கடிக்கிற காலத்தில்,இன்னும் வாழப் பழ ஜோக்கு டைப்புலேயே சொல்லிக்கிட்டு திரியிறீங்க.. கொண்டாங்க"ன்னு சோடா வகையறாக்களை எடுத்துக் கொண்டு போனவர், ஒரு கிளாசில் சோடா
மேட்டரைக் கொண்டு வந்தார்.
"இப்போ மட்டும் நான் கேட்ட சோடா எப்பிடி வந்தது?"
"க்ளாஸ்ல சோடாவோட பன்னீரைச் சேர்த்து, லெமனைப் பிழிந்து,கோலியைப்பொடிச்சு போட்டேன்" என்று சமையல் குறிப்பு மாதிரியில்ல சொல்றார். ஆர் வீ எஸ் இவரைக் கப்பலேத்தி பத்து சார் கிட்ட அனுப்பிடுவோமான்னு பாக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

அடடா! பத்து சார்! பிளட் டெஸ்ட்க்கு படிக்கிற செல்லம் இரண்டும் பாஸாயிடுமா ? நெயில் பைட்டிங் பினிஷா இல்ல இருக்கும் போல இருக்கு?

நானும் அந்த டாக்டர் கிட்டஞொய்யாஞ்ஜிக்கு எப்பிடி இருக்குன்னு போன் பண்ணி கேட்டேன்.

அவ்வளவு ஜூரத்துலக்கூட டாக்டர்கிட்ட
சொன்னாராம்..."டாக்டர்,இவளோட உடம்பையும் கொஞ்சம் செக் பண்ணுங்க. முந்தில்லாம் மணிக் கணக்கா மூச்சு விடாம பேசுவா. கொஞ்ச நாளா ஒரு மணி நேரம் பேசினத்துக்கு அப்புறம் ரெண்டு நிமிஷம் மூச்சு வாங்கிக்கறா டாக்டர்!" அப்பிடின்னாராம்.

டாக்டர் குரலே சரியா இல்ல பத்து.. மனுஷன் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பார் போல.

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! வாங்க எஸ்.கே! நீங்களும் 'ஞொய்யாஞ்ஜி
ஜோதி'யில ஐக்கியமாயிட்டீங்களா? வாங்க!வாங்க!

முதல் அடியே சிக்சரா இல்ல இருக்கு? ரொம்ப ரசித்தேன்.

மற்ற அன்பர்களும் தங்கள் கை வரிசையைக் காட்டலாம். கீழ்க் கண்டவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..
ஞொய்யாஞ்ஜியின் போக்கு ரொம்பவே குண்டக்க மண்டக்க ஆசாமி. மக்கு,அம்மாஞ்சி,பேக்கு,லூசு போன்ற எல்லா குணவிசேஷங்களும் கலந்த ஆசாமி.

பல்லேலக்காவும் ஞொய்யாஞ்ஜியும் ரொம்பவே அன்னியோன்னியம்.. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ரொம்ப அன்பும்,பெருமையும்...

ஜோக்குகள் சைவமாக இருக்க வேண்டும்..

"சும்மா அடிச்சி தூள் பண்ணுங்க!!"

மோகன்ஜி சொன்னது…

//மற்ற அன்பர்களும் தங்கள் கை வரிசையைக் காட்டலாம்.//மேலே சொன்னதில்.. சேர்க்க வேண்டியது ..
அன்பிகளும் கை வரிசையைக் காட்டலாம் என்பதை...

விடுபட்டு போனதற்கு பல்லேலக்கா சார்பில் ஒரு ஸாரிங்க!

அப்பாதுரை சொன்னது…

சிதராவின் கமெண்ட் டாப். இதன் ரகசியம் என்ன மோகன்ஜி? வெட்டொட்டா?

அப்பாதுரை சொன்னது…

எஸ்.கே, hilarious!

மோகன்ஜி சொன்னது…

இந்தtransliteration.. தமிழ்ல டைப் பண்றது பெரிய சோதனை.. சிந்தனையின் வேகத்துக்கு ஈடு
கொடுக்காமல்.. சலிப்பாகிறது சில நேரம்.. ஒரொரு தரம் எமொஷனலாக ஏதோ தட்டச்சினால்,கேட்ட வார்த்தைகள் சிலவும் வருகின்றன..
வேறேதும் உபாயம் உண்டா? ingoi-yaang-ji என் பிரித்து, இடைவெளிகளை,சேர்க்க வேண்டும்.. போதுமடா சாமி. எனவே அவர் பெயர் எப்போதும் வெட்டோட்டு தான் அப்பாஜி!!

பத்மநாபன் சொன்னது…

ஆமாங்க நேர் தமிழ் எழுத்தாக்கம் சுத்தமா மறந்து விடும் போலருக்கு..நம்ம ஞொய்யாஞ்சி யை வெட்டியெல்லாம் ஒட்டவேண்டாம் பாவம் உடம்பு தாங்காது ஞொய்யாஞ்சிக்கு..NHM writerல் ஞொய்யாஞ்சி –njoyyaanjci...

Ramesh சொன்னது…

சித்ரா சொன்ன மாதிரி அந்த பேரை டைப் பன்னவே உங்களை பாராட்டனும்..அதைப்படிக்கவே ஒரு நிமிசம் அதை உத்துப்பாத்து படிக்க வேண்டி இருக்கு...

அப்பாதுரை சொன்னது…

ஞொவும் நண்பரும் சினிமா போனாங்க. சினிமால கார் ரேசு நடக்குது. "அஞ்சு ரூவா பெட்டு, சிவப்பு கார் ஜெயிக்கப் போவுது. ஹீரோ கார் தோத்துறும்"னாரு நண்பரு. "பாப்போம்"னாரு ஞொ. சொல்லி வச்ச மாதிரியே ஆனதும், அஞ்சு ரூவா கொடுத்தாரு ஞொ. "இல்லப்பா, படத்தை நான் நேத்து பாத்தேன், அதான்"னு பணத்தை வாங்க மறுத்தாரு நண்பரு. ஞொ உடனே, "நானும் படத்தை நேத்து பாத்தேன். இன்னிக்காவது ஹீரோ ஜெயிப்பாருனு நெனச்சு பெட்டுக்கு ஒத்துக்கிட்டேன், ஹ்ம்ம், இந்தா"னு பணத்தைக் கொடுத்தாரு ஞொ.

சைவ ஜோக்னா இப்படித்தான்.

எஸ்.கே சொன்னது…

ஞொய்யாஞ்ஜி வீட்டுக்கு நண்பர் ஒருத்தர் தன் மனைவியோட வந்தார். அவர் மனைவி ரொமப ஸ்லிம்மா அழகா இருந்தாங்க. அவங்க பேசிட்டு போயிட்டாங்க. பல்லேலக்காவிற்கு அவர் மனைவியை பார்த்தவுடன் கொஞ்சம் பொறாமையாச்சு.

பல்லேலக்கா கண்ணாடி முன்னாடி நின்னு தன்னை பார்த்திகிட்டே ”நான் ரொம்ப குண்டாக, வயசானவளா, தோல் சுருக்கங்களோட இருக்கேன்ல. இப்பவும் நீங்க என் கிட்ட அன்பா பேசுவீங்களா?” அப்படின்னு ஞொய்யாஞ்ஜி கிட்டே கேட்டாங்க.

ஞொய்யாஞ்ஜி சொன்னார். “அன்பே உன் கண்பார்வை இன்னும் சூப்பரா இருக்கு!”

மோகன்ஜி சொன்னது…

நேர் தமிழ் எழுத்தாக்கம் மட்டுமல்ல,ஆங்கிலத்தில் அடிக்கும் போதும்,நெடில்களுக்கு இரண்டுமுறை அதே எழுத்தை அடிப்பது போன்ற பிறழ்வுகள்.ஏற்படுகின்றன.பழக்க தோஷம்.எழுதியதை அப்படியே கணணிப் படுத்த ஏதும் ரைட்டிங் உபகரணம் உள்ளதா எனத் தெரிய வில்லை பத்து சார்.
நம்ம மக்கள் ஏதும் உபாயம் சொன்னால் தன்யனாவேன்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரமேஷ்! ஞொய்யாஞ்ஜியை ரொம்ப உத்துப் பாத்தீங்கன்னா பல்லேலக்கா கோவிச்சுக்கும்...
ரொம்பவே பொசசிவ் போங்க!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி.. நீங்க சைவ ஜோக் சொல்றது, புலி தயிர் சாதம் சாப்பிடறாப் போல இல்ல இருக்கு?..
எனக்கில்ல தெரியும், நீங்க சொல்ல நினைத்து சொல்லாத சமாச்சாரம் எல்லாம்!!

மோகன்ஜி சொன்னது…

எஸ்.கே சார்! அடுத்ததும் சிக்சர் போங்க!

ரிஷபன் சொன்னது…

சிரிப்பு சர வெடிதான்.. பின்னூட்டங்களும் சேர்த்து.

மோகன்ஜி சொன்னது…

நம்ம வலையில பட்டத்தை விட வாலு தான் நீளமா படபடன்னு பறந்துகிட்டிருக்கு.பட்டத்துக்கு அழகும்
அவசியமும் வாலு தானே? நன்றி ரிஷபன் சார்! நீங்க கூட ஏதும் ஞொய்யாஞ்ஜியை பற்றி போடுங்களேன்!

RVS சொன்னது…

இப்படி வாழ்க்கையை இன்பமா அனுபவிச்சு நடத்திக்கிட்டு இருந்த இணைபிரியாத பல்ஸ்-ஞொய்ஸ் ஜோடிக்கு சிங்கம் போல ஒரு மகன் பிறந்தானம். மகன் பிறந்த நல்ல நேரம் ஞொய்ஸ்க்கு அவரையும் மதிச்சு ஒரு ஆள் வேலை போட்டுக் கொடுத்தானாம். அதனால பார்ட்டி வெளி நாட்ல செட்டில் ஆயிடுச்சாம்.
ஒரு நாள் ராத்திரி பூரா உட்கார்ந்து லெட்டர் எழுதிச்சாம். பக்கத்ல ஞொய்ஸ் பண்ற லூட்டி தாங்க மாட்டாம ரூம் மேட் கேட்டாராம்,
"அன்புள்ள ஞொய்ஸ்... இப்படி அர்த்த ராத்திரில உட்கார்ந்து இவ்ளோ மெதுவா என்ன எழுதுறீங்க..."
"லெட்டர் தான்"..
"ஏன் இவ்ளோ மெதுவா எழுதுறீங்க..." என்றார் அறை நண்பர்.
"ஹி ஹி... நம்ம பையனுக்கு ஆறு வயசு தாங்க ஆவுது. அவனால வேகமா படிக்க முடியாது. அதான் அவன் படிக்கற வேகத்துக்கு மெதுவா எழுதறேன்" அப்படின்னாராம். கேட்ட நண்பர் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு எல்லா துவாரத்தையும் மூடிக்கொண்டு தூங்கினாராம்..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

Reminds me of Old Sababathy Movie where TR Ramachandran will write about Train in his school paper !!

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்! சபாபதி படம் பார்த்திருக்கேன் எப்பவோ..
மீண்டும் ப்ளாக் வந்தாச்சா.. கலக்கிடுவோம்." காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது' பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்! இப்போ பாட்டு மாறிடுச்சு..."கனியக் கனிய மழலை பேசும் கண்மணி.."என்ன பாட்டு சாயி இதெல்லாம்..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

சிரிப்பு வெடிதான்.. பின்னூட்டங்களும் சேர்த்து. Class

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி தலைவரே!

எம் அப்துல் காதர் சொன்னது…

மோகன்ஜி அருமையா இருக்கு! பதிவில் போட்டது ஒரு வகை என்றால், நீங்கள் உங்கள் சகாக்களோடு அடித்த லூட்டீஸ், அசத்தல்ஸ்!! (இப்படி இருப்பதால் இனிமே நீங்கள் எல்லோரும் அரட்டை அடித்து முடித்த பின்னர் தான் கருத்துரை போட வரணும் போல! அப்ப தான் எல்லா விஷயங்களை படிக்கலாம்ல. இல்லாவிட்டால் இந்த கமெண்ட்ஸ்களை, ஒரு பதிவாக்கி போடுங்க!! அதுவும் கூட சுவாரஸ்யமாக இருக்கும்) சரியா?

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி காதர்பாய்! நீங்க இந்த வலையில் இன்னும்சில பதிவுகளைப் பார்த்தால், கும்மி ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதுவா அப்பிடி அமைந்து போச்சு!
யார் மனசையும் நோகடிக்காம,படிக்கும் போது மிளிர்ந்த புன்னகை, பத்து நிமிஷமாவது அப்பிடியே இருக்கட்டும் என தான் நானும் நண்பர்களும் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் பாராட்டை, எங்கள் கும்மீஸ்வரர்கள் சார்பில் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ளுகிறேன் காதர்!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//" காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது' பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்! இப்போ பாட்டு மாறிடுச்சு..."கனியக் கனிய மழலை பேசும் கண்மணி.."என்ன பாட்டு சாயி இதெல்லாம்.. //

First is great. Second also good but not to the caliber of first.

I have been postponing calling TMS sir and got to do it at least this week.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்! டி.எம் எஸ் பற்றியும் கண்ணதாசன் பற்றியும் எம்.எஸ்.வி சொல்ல கேட்கணும். எல்லோரும் யுக புருஷர்கள்!

thiyaa சொன்னது…

வித்தியாசமா நல்லாயிருக்கு
நல்ல பதிவு...

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி தியா!

vidhyaavenkat சொன்னது…

yennaku tamilla type chaya thriyala. anyway ungaluda writing superb.. keep doing

மோகன்ஜி சொன்னது…

நன்றி வித்யா! கலக்கிடுவோம்!