வியாழன், அக்டோபர் 14, 2010

மின்விசிறி



நீ
விட்டத்தில் பூத்த குப் பூ.
செயற்கையின் சிசுவே !
நீ வந்த பின்னர்
நாங்கள் வேப்பங்காற்றை மறந்து விட்டோம்


ஓய்ந்திருக்கும் போது தென்படும்
உன் இறக்கைகளின் அழுக்கை 
சுழலும் போது சாதூரியமாய்
          மறைத்து விடுகிறாய்..
இதயத்தை மறைத்து கண்களை சுழற்றும்
            கயமையைப் போல...

நீ புழுக்கத்தில் அமர்ந்து
தென்றலைப் பாடும் கவிஞன்.

இரண்டுக்கு மூன்றாய் சிறகுகள் இருந்தும்,
நீ பறக்கத் தெரியாத இரும்புப் பறவை.

பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.

உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி !

(ஜூலை 1984)
(இது என் கவிதைப் பரணிலிருந்து மீள் பதிவாய்)  

45 comments:

Chitra சொன்னது…

நீ
விட்டத்தில் பூத்த எஃகுப் பூ.
செயற்கையின் சிசுவே !
நீ வந்த பின்னர்
நாங்கள் வேப்பங்காற்றை மறந்து விட்டோம்


.....ஆரம்பமே கலக்கல்.... Superb!

பெயரில்லா சொன்னது…

//இரண்டுக்கு மூன்றாய் சிறகுகள் இருந்தும்,
நீ பறக்கத் தெரியாத இரும்புப் பறவை.//
சார் அருமை..

//பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.//
ஒரு பொருள் பல உதவி.. :(

இதே மாதிரி விட்டத்த பார்த்துக்கிட்டு இருக்கும் போது தோணினத எழுதியிருக்கேன் முன்பு..
கொஞ்சம் பாருங்க.. http://balajisaravana.blogspot.com/2010/07/blog-post_16.html

அப்பாதுரை சொன்னது…

//உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி

:)

RVS சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RVS சொன்னது…

மோகன்ஜி சார்! உங்கள் கவிதையின் மின் விசிறி ஆகிவிட்டேன் நான்.
//
உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கெட்ட சாட்சி !"
//
என்னோட கிறுக்கல்கள்.
--------------------------------------
"மே ஒன்றிலும் "க்ரிக்..க்ரிக்" சொல்லி
உழைக்கும் உழைப்பாளி நீ.."

"உடல் கொடுத்தது உன் ஃபாக்டரி ஆனாலும்
உயிர் கொடுத்தது என் வீட்டு மின்னம்மா தானே"

(ரொம்ப அதிகப்படியா கமென்ட் போட்டுட்டேனோ?)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

படுத்து கிட்டே யோசிச்சதா... நல்லாயிருக்கு...

மோகன்ஜி சொன்னது…

நன்றி சித்ரா!

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாலா! கண்டிப்பா இங்க பதிவையும் பார்க்கிறேன்! வாழ்த்துக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாஜி! கல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாகவே போனதால்,விட்டத்தை வெறித்த படி,அங்கு சத்தத்துடன் சுழன்ற மின்விசிறியைப் பார்த்து, அழைப்பிதழ் பின் பக்கமே எழுதியது.. எழுதி
இருபத்தைந்து வருஷமாச்சு! இன்னும் மின் விசிறி சுத்திகிட்டுத் தான் இருக்கு!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வெ.எஸ்,இந்த பழைய கவிதையில், நான் எழுதியிருந்த பல கண்ணிகளை நீக்கி, கச்சிதமாய் பதிவிட்டது.
நீக்கிய ஒரு கண்ணி, உங்கள் மின்னம்மா சாயலில்...

உங்கள் வரிகளும் நன்றாக இருக்கின்றன..

மோகன்ஜி சொன்னது…

வாங்க வெ.ப ! உட்கார்ந்துதான் யோசித்தேன்! நீங்க சொன்னாப் பல படுத்தபடி யோசிச்சிருந்தா... முயற்சி பண்றேங்க!

Radhakrishnan சொன்னது…

நல்ல காற்றோட்டம். அருமை.

மோகன்ஜி சொன்னது…

கவிதை வாங்கப் போய் காற்று வாங்கி வந்தீங்களா?
நல்லது வீ.ஆர் சார்!

பத்மநாபன் சொன்னது…

விசிறி..
கவிதையில் தென்றலாக விசிறுகிர்கள்...
ஆண்டுகள் பலவானலும் , கவிதை இளமையாகவே இருக்கிறது.
வாழ்த்துக்கள்...

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்! பேனாவோடு நம்மையும் ஒரு எழுது பொருளாக்கி கொண்டு கவிதை தன்னையே எழுதிக் கொண்டு சென்ற காலங்கள்... சன்னதம் கொண்டவன் போல் எழுத்தும் படிப்புமாய்.. எனக்கு இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும் பத்மநாபன்!விட்டதைஎல்லாம் பிடிக்க வேண்டும்.. பட்டதைஎல்லாம் எழுத வேண்டும்...

Philosophy Prabhakaran சொன்னது…

ஃ -> இந்த ஆயுத எழுத்தை எனது பதிவொன்றில் இணைக்க நான் எவ்வளவோ போராடியும் முடியவில்லை... நீங்கள் எப்படி இணைத்தீர்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்...

அப்பாதுரை சொன்னது…

//எழுதி இருபத்தைந்து வருஷமாச்சு! இன்னும் மின் விசிறி சுத்திகிட்டுத் தான் இருக்கு!

புரியுது ;-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கவிதை புழுக்கத்தைத் தரவில்லை.தென்றலாய் இனித்தது....

RVS சொன்னது…

திரு ஃபிலாசபி பிரபாகரன்... q அடித்தால் ஃ விழும்.

எஸ்.கே சொன்னது…

//பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.//
உண்மையும் சோகமும் நிறைந்த வரிகள். அருமையான கவிதை!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி !//

துரை - உனக்கும் அதுதான் கண்ணில் பட்டுதா !!! என்னே நம் டெஸ்ட் !!

மோகன்ஜி - 1984 வருடம். வாவ் !! நான் காலேஜ் இரண்டாம் வருடம். சின்ன பய சார் நான் !

// இரண்டுக்கு மூன்றாய் சிறகுகள் இருந்தும்,நீ பறக்கத் தெரியாத இரும்புப் பறவை.//

அழகு.

மோகன்ஜி சொன்னது…

திரு ஃபிலாசபி பிரபாகரன்... q அடித்தால் ஃ விழும்ன்னு மேலே ஆர்.வீ.எஸ் சொல்லியிருக்கிறார். அது யூனிகோட்ல இருக்குமோ என்னவோ? நான் transliterationல டைப் பண்றேன். இருபது நிமிடம் குடைந்தும் 'ஃன்னா'பிடிபடவில்லை.
'எஃகுப் பூ'வை இரும்புப் பூ என மாற்றிகூட அடித்து விட்டேன்.
வேறெங்கோ 'ஃன்னா'வை வேட்டி ஓட்டி ஒப்பேற்றினேன். தமிழ் டைப்பிங் லொள்ளுங்க!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி!வேணாம்... வேணாம் பாஸ்... வேணா...ம்.
சொல்லிட்டேன்!

மோகன்ஜி சொன்னது…

ஆரண்ய நிவாஸ் ஆர்.ஆர்.சார்!உங்கள் ரசனைக்கு நன்றிங்க!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்.. எங்க அடித்தா ஏது விழும்னு தெரிஞ்ச வித்தகர் அல்லவா நீங்க?! தமிழை சுலபமாய் டைப் செய்ய ஒரு சுலபமான முறையை சொல்லுங்களேன்.

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி எஸ்.கே சார் !

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்! நீங்கள் குறிப்பிட்ட வரிகளை ரசித்தவர்கள்
துரை சார்,நீங்க மற்றும் ஆர்.வீ .எஸ் கூட. என்னையும் சேர்த்துக்குங்க.. இந்தக் கவிதையில் பல வரிகள் சுய தணிக்கை செய்யப் பட்டது.எல்லாம் ஒரு குரூப்பாத்தான் அலையிறமோ!

அப்பாதுரை சொன்னது…

//எல்லாம் ஒரு குரூப்பாத்தான் அலையிறமோ!

இன்னும் மகிமை.

Aathira mullai சொன்னது…

//பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.

உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி !//

இது என்ன கொஞ்சம் நிலவும், கொஞ்சம் நெருப்பும் தாங்கிய கவிதை இது.. ஏற்கனவே நான் தங்களின் நகையுணர்வுக்கு விசிறி. இக்கவிதையின் மூலம் தங்களின் கவிநயத்திற்கு குளிர் மாறாத இளம் காற்றைத் தரும் மின்விசிறியாக..மாறி விட்டேன்..அருமை..

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி, உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட கடந்த ஒரு மணி நேரமாய் முயன்று கொண்டிருக்கிறேன்.
உங்கள் வலை ஏற்க மறுக்கிறது..ஏன் என்று தெரியவில்லை. உம்மாச்சி கண்ணைக் குத்திடும்னு தலைபாடா அடிச்சிண்டேனே! கேட்டேளா?

மோகன்ஜி சொன்னது…

ஆதிரா! எனக்கு மின்விசிறியாய் மாறினீர்களா இல்லை
ஏ.ஸி யாய் மாறிவிட்டீர்களா? குளிர்விக்கும் வாழ்த்து.
நன்றி ஆதிரா!.உங்கள் வலைப்பூ malware found என திறப்பதில்லை. என்னவென்று பாருங்கள்.உங்கள் பதிவை படிக்க முடியவில்லை.

தக்குடு சொன்னது…

அழகான கற்பனை, 25 வருடம் கழிந்த பின்னும் உங்கள் மின்விசிறியின் 'க்ரீச்' சத்தம் சங்கீதமாகத்தான் உள்ளது.

இப்படிக்கு,
விசிறி

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி தக்குடு பாண்டி சார்!முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும்..

Muniappan Pakkangal சொன்னது…

Steel flower,nice Kavithai Mohanji.

மோகன்ஜி சொன்னது…

நன்றி முனியப்பன் சார்!

எம் அப்துல் காதர் சொன்னது…

//'எஃகுப் பூ'வை இரும்புப் பூ என மாற்றிகூட அடித்து விட்டேன்.வேறெங்கோ 'ஃன்னா'வை வேட்டி ஓட்டி ஒப்பேற்றினேன். தமிழ் டைப்பிங் லொள்ளுங்க!//

ஏன் நீங்க அப்படி கஷ்டப் படனும் ஜி. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா. இந்தாங்க பிடிங்க இதை கிளிக்கி எல்லாத்தையுமே அள்ளுங்க. உங்க கவிதை மிக அருமை.

(http://www.google.co.in/transliterate/indic/tamil)

மோகன்ஜி சொன்னது…

நன்றி காதர்பாய் ! தரவிறக்கி விட்டேன்.. கண்ட்ரோல் பேனல்ல மாத்தனுமாம்.. முதல்ல உங்களுக்கு ஒரு நன்றிய சொல்லிட்டு செய்திடுவோம்னு..
கவிதை பிடிச்சுருக்கா? மீண்டும் நன்றி பாஸ் !

RVS சொன்னது…

மோகன்ஜி ஆன்லைன்லேயே டைப்பலாமே...
http://www.google.com/transliterate/tamil

thiyaa சொன்னது…

அருமை நல்லாயிருக்கு

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்!

மோகன்ஜி சொன்னது…

தியாவின் பேனாவுக்கு என் அன்பு..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஆஹா.. தூங்க போனாலும் கவிதை தானா....?
சூப்பர்.... நல்லா இருக்குங்க.. :-)))

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆனந்தி! தூங்கப் போகும் போது மட்டும் அல்ல... தூக்கத்தினூடே வரும் கனவுகளிலும் கூட
கவிதை தாங்க! உங்கள் ரசிப்புக்கு நன்றி!

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஃபலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.ஃஃஃஃஃ
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....

மோகன்ஜி சொன்னது…

நன்றி மதி சுதா!