திங்கள், ஏப்ரல் 04, 2011

காமச்சேறு


காமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம்.
மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகாலை...

இருக்கும் சிறிது உணவையும் தம்பிக்காக வைத்து அருணகிரியை சாப்பிட அழைக்கின்றாள் தமக்கை ஆதிலட்சுமி..

அக்கா! எனக்கு ஏதும் பணம் தா .. நான் போக வேண்டும்

ஆம் அவன் விலைமாதரை  நாடிப் போக வேண்டும்.. அதுவும் உடனேயே.. அதற்கு பணம் வேண்டும்.

வீட்டிலோ சல்லிக் காசில்லை.

காசு ஏதும் இல்லையடா அருணகிரி! நீ ஆடியதெல்லாம் போதாதா?. உள்ளே வா ! சாப்பிட்டுவிட்டு அமைதியாய் முருகா முருகா எனச் சொல்லிக்கொண்டு உறங்கு. பிள்ளையாய் வளர்த்த தம்பியின் நிலைகண்டு கண்ணீர் உகுத்தவாறே நின்றாள் தமக்கை.

நீயெல்லாம் ஒரு அக்காவா? பணம் தா. தருகிறாயா இல்லையா? உடலிச்சை பிடித்தாட்ட, வசம் இழந்த அருணகிரி வெறிபிடித்து கத்தினான்.

ஆதிலட்சுமியின் கண்ணீர் நின்றது. உடல் நிமிர்ந்தது.உள்ளே வா

வந்தேன்.. பணம் தா அருணகிரியின் கண்களில் வெறி

சரேலென தம்பி முன் சேலை களைந்தாள். என்னை பெண்டாள வா! அந்த பரத்தையரிடம் நீ சுகிக்கும் அதே அவயவங்கள் தான் இங்கே என்னிடமும் இருக்கிறது. வா.. உன் வெறியைத் தீர்த்துக் கொள்.

அதிர்ந்தான் அருணகிரி. கால்களின் கீழ் பூமி நழுவலாயிற்று. கண் பொத்தி விழுந்தான்.. ஐயகோ! இதற்கா திரிந்தேன்?
வீட்டைவிட்டு வேகமாய் வெளியேறினான்.

கால் போனபோக்கில் நடந்தான். வழியில் எதிர்ப்பட்ட ஒரு முதியவர்,உன் வாதை தீர்ந்து வாகை சூடும் காலம் வந்துற்றது.. முருகனருள்! மேற்கே தெரிந்த திருவண்ணாமலை கோபுரத்தைக் கைகாட்டி நகர்ந்தார்.

கோவிலடைந்த அருணகிரிக்கு தன்மீதான வெறுப்போ நொடிக்கு நொடி பல்கிப் பெருகியது. பெண்டாளச் சொல்லி சேலைக் களைந்த தமக்கை. இந்த இழிந்த வாழ்வு இனியும் வேண்டுமோ?

அருகிருந்த வல்லாள மகராஜன் கோபுரத்தின் மேல் கரகரவென்று ஏறினான்.  போகட்டும்.. வெறும் தசைப்பற்றில் கழிந்த என் காலம் இத்தோடு முடியட்டும். அக்கா! என்னை மன்னித்துக் கொள்.

கோபுர உச்சியிலிருந்து காமப் பெருநோய் குதித்தது.

என்ன இது? எனக்கேதும் நேர்ந்தது போல் தெரியவில்லையே. சொர்க்கம் புகுந்துவிட்டேனா? எனக்கேது சொர்க்கம்.. செய்த பாவத்திற்கு நரகத்தில் கூட எனக்கு இடம் உண்டா என்ன?

கண்ணைத் திறக்கவொட்டாமல் பொன்னொத்த ஒளி.

அருணகிரி! நில்! தாங்கிப் பிடித்த கரங்கள் அவனை தரையிறக்கின.

கண்ணெதிரில் சக்திவேல் தாங்கிய சம்புகுமாரன்.

குமரா! எம்பெருமானே! அருணகிரி தன்னிலை மறந்தான். வேதனையும் வெறியும் அகன்றன. நெஞ்சகமோ கழுவிக் கோலம் இட்டது போல் நிர்மலமாய்த் துலங்கியது. நல்லுருவும்  கொண்டான். 

அருணகிரி! இனி எனைப்பாடும் பணி யுனக்கு பூவாய் சொரிந்தன செவ்வேளின் வார்த்தைகள் .

அருணகிரியின் தலை மட்டும் ஆமோதித்தது.

தனைமறந்த மோனநிலை. . 

எழுந்தது காங்கேயன் கைவேல்.

நாவை நீட்டு

நீட்டிய நாவில் வேலெழுதியது ஆறெழுத்து மந்திரத்தை.
கட்டிய கவியெல்லாம் சந்தம் கொஞ்சப் போகும் அருணகிரியின்  நாவில், வேலேழுத்து விதையூன்றியது.

அருணகிரி! இனி நீ பாடத்தடையில்லை. தந்த இவ்வேலை நீ முடித்தபின்னர் சாயுச்சியம் தருமிவ் வேல். அதுவரைப்
பாடிப்பாடிக் கரைந்து விடு. கேட்போரைக் கரைத்துவிடு.

ஏதும் சொல்லவியலா அருணகிரியின் மத்துநிலையை, தரையில் தட்டப் பட்ட வேல் உணர்வுநிலைக்கு திருப்பியது.

வடிவேலா!  எந்த சொல்.. எந்த மொழி உன்னை முழுதுமாய் வர்ணிக்கத் திறம் கொண்டது அறிகிலேனே?
வள்ளியம்மையின் பாதங்களைக் கண்ட கணமே காமுறுபவனே!
தேவசேனை முந்தானை முகர்ந்து மெய்மறந்து  கைவேல் நழுவ நிற்கும் அழகா!
மன்மதனுக்கு மாயபாணங்கள் தந்தவனே.!
கண்டோர்  மோகிக்கும் சௌந்தர்யனே !
நல்லோரைவிடுத்து இந்த நீசனை உய்விக்க திருவுளம் கொண்டதேன் கந்தவேளே?

முருகனின் மோகனப் புன்முறுவல் பெருஞ்சிரிப்பாய் மலர்ந்தது. இருவிலாவிலும் கைகள் அமர்த்தி பேரருள் சிரித்தது.

அருணகிரி நிதானித்தான். நான் சொன்னதில் ஏதும் தவறா? 

கந்த சிவம் ஏன் நகைக்கிறது?

அடடா! காமத்தில் ஊறி மோகத்தில்  திளைத்து கலையழிந்தும்,
முன்வினைப் பேற்றால்  கந்தனே தன்னை ஆட்கொண்டும், காமத்தின் வாசனை என்னை இன்னமும் விடவில்லையே?
பெருமானைப் போற்ற, வள்ளித்தாயாரையும் தேவயானை
அம்மையையும் குறித்தபோதும் கூடவா என் வார்த்தைகள் காமச்சேறு பூசிவர வேண்டும்? இதென்ன சோதனை? முருகா என் செய்வேன்? அருணகிரியின் உள்ளம் அரற்றிற்று.

அருணகிரி! அஞ்சற்க! எமது விருப்பமே  உன் வார்த்தைகளில் மகரந்தமாய் சூல்கொண்டது. உன் நாவினின்று பிரவகிக்கும்  பாடல்களில் அங்குமிங்குமாய் காமத்தீற்றல் தெறிக்கட்டும்.அதீதமான காமவேட்கை கண்மறைக்கும் மாயத்தை மக்களுக்கு உணர்த்தட்டும்.


வா! வள்ளி! அருணகிரிக்கு உன் ஆசிகளைத் தா! நம் தத்துப் பிள்ளையல்லவா அவன்?       

தமிழில் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம்.....  ஒளவையுடன் சுட்டப்பழமா சுடாதபழமா என்று தமிழ்க்குறும்பு செய்த ஞானப்பழம்.... இன்னமும் தமிழ்சந்தம் சுவைக்க தயாராகிவிட்டதை உணர்ந்தாள் வள்ளியம்மை.

நல்லது அருணகிரி! என் பிராணநாதன் உறையும் தலமெல்லாம் சென்று உன் தமிழால் கந்தசுகந்தம் வீசும் பாமாலைகள் தொடுத்துவா! என்றென்றும் அவை என் சுவாமியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும். அந்தப் பாடல்களை நெக்குருகிப் பாடும் தமிழ் நெஞ்சமெல்லாம் காருண்யமும்,அன்பும்,மன ஒருமையும் ஏற்படுத்தும். வள்ளியம்மையின் குரலோசை குயிலைப் பழித்தது.

தாயே! தன்யனானேன்.. உன் அருளால் இந்த மனிதமயில் குகன் குன்றுதோறும் ஆடும். இந்த கந்தக்குயில் குமரன்
கோவிலெல்லாம் நாடி அழகன் திருப்புகழைப் பாடும். தாயே! தாயே!! எனக்கு தமிழை வரமாக தா!”. இறைஞ்சினான்  அருணகிரி.


பூஞ்சிரிப்பு உதிர்ந்தது புண்ணியனின் பவழஇதழ்களில்,

தமிழைவிட எனக்கேது அமிழ்து அருணகிரி? தந்தோம். எம்தமிழில் சிறிது உனக்கும் தந்தோம். உன் பாடல்கள் எனக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் புகழ் சேர்க்கட்டும். போய் வா! தமிழ் பொழிந்து வா !

ஏன் பிரபு? அருணகிரி இப்போதே பாடட்டுமே? காதாரக் கேட்போமே? வள்ளி ஆர்வம் காட்டினாள்.

அருணகிரி தயங்கி நின்றான். என்னவென்று பாட? எதிலிருந்து துவங்க?

தமிழ்த் தெய்வம் வாய் மலர்ந்தது.

அருணகிரி! நானே அடிஎடுத்துத் தருகிறேன். இப்போதே துவங்கு.. பாடிப்பரவு பாரெல்லாம்...

என் பாக்கியம் பிரபு!

உம். தொடங்கு அருணகிரி... முத்தைத்தரு பத்தி திருநகை.....   .
         
.....


   

113 comments:

எல் கே சொன்னது…

அருணகிரியின் கதையை அருளி உள்ளீர்கள் நன்றி ஜி

மோகன்ஜி சொன்னது…

வருக எல்.கே! நேற்று ஒரு நண்பர் திருப்புகழில் உடல்வேட்கையும், காமமும் அதிகம் பேசப் படுகிறதே.. கொஞ்சம் ரசக் குறைவாய் அது இல்லையா என்று மின்னஞ்சல் செய்திருந்தார். அவர்க்கு சிறுசெய்தி பதில் சொன்னபின் தான் தோன்றியது இதை எழுத..

RVS சொன்னது…

அண்ணா! அருணகிரி வரலாறு உங்கள் கை வண்ணத்தில் அற்புதம். அப்படியே கொஞ்சம் திருப்புகழ் பற்றியும் கொஞ்சம் எழுதினால் எங்களுக்கு பாக்கியமே! முருகன் மோகனுக்கு ஆணையிடுவானா? பார்க்கலாம். ;-))

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் ! திருப்புகழை அவசியம் எழுதுவோம். மனசோடும் வேகத்துக்கு தட்டச்சு வரவில்லையே. உம் வாக்கை 'சுப்பிரமணியன்' வாக்கென்க் கொள்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

மனம் திருந்துபவரெல்லாம் அருணகிரி ஆவதில்லையே.முருகனுக்கு ஏன் இந்த பாரபட்சம்.?முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும். இதில் உனக்கும் எனக்கும் எந்த சமன்பாடும் இல்லை.(பார்க்க .என் பதிவு. “ முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்”)

மோகன்ஜி சொன்னது…

எல்லாம் இறை விளையாடல் எனக் கொள்ளலாமோ? முன்வினை நுகர்வோ? யோசிக்க பல இருக்கிறது பாலசுப்ரமணியன் சார். அவசியம் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

அருணகிரி உங்கள் கைகளால் ”அருமைகிரி” ஆகிவிட்டார் அண்ணா. தொடர்ந்து சிறப்புற எழுத குமரன் துணையிருப்பான் அண்ணா.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருணகிரியின் வாழ்க்கை வரலாற்றையும், அவருக்கு முருகன் அருள் புரிந்ததையும் வெகு அழகாக்ச் சொல்லியிருக்கிறீர்கள். இதைப்படிக்கும் அனைவருக்குமே காமச்சேறு கழுவப்பட்டு முக்தி நிலை கிடைக்க அந்த முருகன் அருள்வான் என நம்புவோம். வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

சில சமயங்களில் நாம் இந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது ஜீ. ஏனென்றால் குடும்ப வாழ்க்கையை என்றுமே ஹிந்து மதம் புறக்கணித்தது இல்லை.

ஹேமா சொன்னது…

தமிழ் என்று சொல்லும்போதும் கேட்கும்போதும் மனதில் அவ்வளவு சந்தோஷம்.கடவுள் பக்தி குறைவாக இருந்தாலும் வாசிப்பது பிடிக்கும் அதன் தமிழ்ச்சுவையோடு.நன்றி மோகண்ணா !

மதுரை சொக்கன் சொன்னது…

சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
’முத்தைத்தரு’ என்று தொடங்கி விட்டீர்கள்!தொடருங்கள் திருப் புகழை!
நானும் தொடர்கிறேன்!

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி சித்ரா!

மோகன்ஜி சொன்னது…

"அருமைகிரி" நன்றாகத்தான் இருக்கிறது பாலா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி வை.கோ சார்! உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

அன்பு எல் கே!குடும்பம் ஒரு கோவிலாக, அமைதியாகத் திகழ வேண்டுமெனில் எதிலும் மிதமாய், ஒருவொருக்கொருவர் உண்மையாய் வரம்பு மீறாமல் வாழ்ந்தாலே போதும். எனக்குத் தெரிந்த சில கடவுள் மறுப்புக் கொள்கை உள்ள நண்பர்கள் கூட, குடும்பத்துக்கான வரம்புகளை மதித்து வாழும் சீலர்களே. நீங்கள் சொல்வது பெரிய விஷயம். நம் நீதி நூல்கள் யாவும் மனிதனை நெறிப் படுத்த ஏற்படுத்தப்பட்டவையே. அவற்றை புரிந்து கொள்பதிலும், புரிய வைப்பதிலும் நேரும் தவறுகளே குழப்பங்களுக்குக் காரணம்.

மோகன்ஜி சொன்னது…

நெறியான வாழ்க்கைக்கும், மனைதத்தன்மையோடு வாழும் தேவைக்கும் கடவுள் பக்தி ஒரு பொருட்டில்லை தான். தமிழை இன்னமும் அனுபவிக்க பக்தி இலக்கியங்களில் கண்டிப்பாய் ஒரு நாட்டம் இருக்க வேண்டும். பக்தி இலக்கியங்கள் தமிழுக்காய்த் தந்த பங்களிப்பு மிகப் பெரியது. படித்துதான் பாரேன்.. பக்தி வருகிறதோ இல்லையோ, இன்பத்தமிழ் கண்டிப்பாய் வரும் ஹேமா!

மோகன்ஜி சொன்னது…

வாருங்கள் சொக்கன் ஐயா! ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் திருப்புகழை, இந்த எளியவன் உணர்ந்த வகையில் எளிமையையும்,சுவார்ஸ்யமாயும் சொல்ல ஆவல்.சற்று விரிவாய் தமிழ் இலக்கியம் சேர்த்து சொல்ல ஒரு எண்ணம் இருக்கிறது. இறைவன் சித்தம். அடிக்கடி வாருங்கள்.

kashyapan சொன்னது…

அந்தக்காலத்தில் "திரும்பிப்பார்" என்று ஒரு திரைப்படம் வந்தது. அருணகிரியாரின் வாழ்க்கையை நவினப்படுத்தி மு.கருணாநிதி கதை வசனத்தில். சிவாஜி கணேசன் நவீன அருணகிரியாக அற்புதமாக நடித்திருப்பார். பண்டரிபாய் சகொதரியாக நடிப்பார்.தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு வரலாற்று செய்தியையும் சொல்கிறேனே. திருவண்ணாமலை ஒரு சமண க்ஷேத்திரமும் கூட. ஆரம்பத்தில் அருணகிரி ஒரு சமணராக இருந்தார். பின்னாளில் அவரை நிர்ப்பந்தப்படுத்தி சைவராக்கினார்கள் என்று கூறுவார்கள்.பல்லவர்கள் காலத்தில் இது நடநததாக வரலாற்றாளர்கள் நினைக்கிறார்கள்---காஸ்யபன்

Matangi Mawley சொன்னது…

i have not heard this tale before... kadavul kathaikal kekkara vazhakkam- chinna vayathoda ninnu ponaalum-- athila irukkara rasam, thirumbavum antha vayathirkku ezhuththu kondu pogum tharunam- blessed!

brilliant narration... :)

பத்மநாபன் சொன்னது…

அதிர்ச்சி வைத்தியத்தில் காமம் கடந்து ஞானம் கண்ட அருணகிரியாரின் கதையை பகிர்ந்த உங்கள் அருமைத் தமிழுக்கு நன்றி ...
முத்தைத்தரு பத்தி திரு ... கந்தன் எடுத்து கொடுத்த பாட்டா ... சுந்தராம்பாள் அவர்கள் பாடினால் குமரன் எங்கிருந்தாலும் மயிலோடு அங்கு பறந்து வருவான் ..

அப்பாதுரை சொன்னது…

உங்கள் தமிழ் நடை அற்புதம்.
அருணகிரி குதிப்பதாவது, முருகன் தாங்குவதாவது.. மன்னியுங்கள், உங்கள் கற்பனை ரசிக்க முடிகிறது.

அப்பாதுரை சொன்னது…

ஒன்றைக் கவனித்திருக்கிறேன். அத்தனை இறையிலக்கியங்களிலும் பெண்ணை பேய், சகதி, சேறு, சாக்கடை என்று இழிவுபடுத்தி, 'அந்தப் பெண்ணிடமிருந்து ஆட்கொண்டாய் இறைவா' என்கிறார்கள். அதுவரை என்ன, ...க் கொண்டிருந்தார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. தமிழ்ப்புலவர்களின் மிகக் கேடுகெட்ட செயல் என்பது இது தான் - மிக வருத்தத்துக்குரியது என்று நினைக்கிறேன். ஆடும் வரை ஆட்டம் - அதற்குப் பிறகு காட்டமா?

அப்பாதுரை சொன்னது…

இறையிலக்கியங்களின் தமிழ் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. தமிழுக்காகவேனும் (மட்டும்?) படிக்க வேண்டியவை. கடவுளைக் கொண்டாடுவதில் தவறு எதுவுமே இல்லை; திடீரென்று மனிதரைத் திட்டி அதுவும் ஒரு இனத்தை - பெண்களை - இழிவுபடுத்தி இறையருளைக் கொண்டாடுவது ஒப்பவில்லை. அது வரை கொண்டாடிவிட்டு திடீரென்று ஓட்டை என்று பாடினால் சிரிப்பு நிச்சயம் வருகிறது. பக்தி வருமா தெரியவில்லையே மோகன்ஜி.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் வழி மொழிகிறேன்---காஸ்யபன்

ADHI VENKAT சொன்னது…

அருணகிரிநாதரின் வரலாற்றை அழகான தமிழில் சிறப்பான எழுத்து நடையில் கூறியுள்ளீர்கள். இது போன்ற விஷயங்களை அடிக்கடி தாருங்கள். பகிர்வுக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

காச்யபன் சார்! ‘திரும்பிப்பாரை’ நான் பார்த்ததில்லை. சிவாஜியின் படங்களில் ஒன்றாய் அறிந்திருக்கிறேன். நீங்கள் சொன்னபிறகு அதைப் பார்க்க ஆவல் மேலிடுகிறது.

மற்றபடி கடைப் பல்லவர் காலம் கி.பி பத்தாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்துவிட்டது. அருணகிரிநாதர் வாழ்ந்த காலமோ பதினைந்தாம் நூற்றாண்டு. எனவே பல்லவர்காலமாய் அது இருந்திருக்க முடியாது.

சரித்திரம் கூறும் இன்னொரு தமக்கை-தம்பியான திலகவதியார்-நாவுக்கரசர் வரலாற்றில் நாவுக்கரசர் சமணராய் இருந்து சூலைநோய் பீடிக்க தமக்கையின் வலியுறுத்தலால் சைவத்துக்கு மாறினார். அதனால் சமணம் சார்ந்த மன்னரால் பெரும் துன்பத்துக்கு ஆளானார். அவர் காலம் நீங்கள் சொன்ன பல்லவர் காலத்துடன் ஒத்துப் போகிறது. ஒருவேளை அப்பரைத்த்தான் குறிப்பிடுகிறீர்களோ?

அருணகிரியாரின் பாடல்களில் அவர் வாழ்க்கை முறைமை, முருக தரிசனம், ஆகிய பலவற்றையும் ஆங்காங்கே பொதிய எழுதியுள்ளார்.அவரின் படைப்புகளில்,அவர் சமணராய் இருந்ததிற்கு அகச்சான்று ஏதும் நானறிந்த வரை இல்லை. உங்களிடம் ஏதும் தகவல் இருந்தால் கொடுத்து உதவுங்கள். நன்றியுடைவனாவேன்.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

மாதங்கி! இந்தக் கதைகள் நம் வாழ்க்கைமுறையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதில் சொல்லப்படும் நீதிகள் நம்மை வளப்படுத்திதான் வந்திருக்கிறது. அழகாய்ச் சொன்னீர்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி மாதங்கி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்! திருப்புகழின் வரிகள் அதன் வளமை, நேர்த்தி,சந்தம் எல்லாமே இறையருள் ஒன்றினாலேயே அமைந்தது எனத் திடமாய் நம்புவோரில் நானும் ஒருவன்.
கே.பி.எஸ் முத்தைத் தருவை பாடியது அழகுதான்.
டி.எம்.எஸ் அதைப் பாடக் கேட்டுத்தான் திருப்புகழ்மேல் ஆராக் காதல் கொண்டோமில்லையா?

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை! உங்கள் வாழ்த்துக்கு முதலில் நன்றி. ஒரு திருத்தம்.நீங்கள் குறிப்பிட்டதுபோல் இது என் கற்பனையல்ல. வழிவழியாய் சொல்லப் பட்ட ஒரு நிகழ்வு.எனக்குத் தெரிந்ததை பதிவு செய்தேன்.

அருணகிரி, தாம்பத்தியத்தில் வெறுப்புற்று பெண்ணைப் பழிக்கவில்லை. பொதுமகளிரிடம்,காமாந்தகனாய்த் திரிந்து தெளிந்ததைத் தான் இந்தக் கதை கூறுகிறது.

பெண் சாக்கடையல்ல சேறல்ல .. அவள் மண். நம்மை, நம் தவறுகளைப் பொறுக்கும் மண் மாதா.அவளை இறையிலக்கியம் உயர்ந்த இடத்தில் தான் வைத்திருக்கிறது. சேறும் சகதியும் பெண்ணை வெறும் சதைப் பிண்டமாய், போகப் பொருளாய் எண்ணி இழியும் ஆடவனின் காமவெறி தான்.

நம் சம்பிரதாயங்களும் பெண்ணுக்கு முதலிடம் கொடுக்கின்றன. மனைவியை அருகே வைத்துக் கொள்ளாமல், அவள் ஒப்புதல் இல்லாமல் செய்யப்படும் எந்த பூஜையையும் முழுமையானதல்ல என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன.

சில புலவர்களின் பாடல்கள் பெண்ணைப் பற்றிய பயத்தை எண்ணியல்ல. தன் பலவீனத்தைக் கண்டு பயந்தே என்று தோன்றுகிறது.

கடவுளை நாம் கொண்டாடுவது, கடவுளிடம் எதுவும் மாற்றம் ஏற்ப்படுத்த அல்ல.. மாற்றம் நம்மில் ஏற்படத்தான்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதி! அவசியம் எழுதுவோம்.உங்கள் அன்புக்கு நன்றி.

பாரதசாரி சொன்னது…

நான் மிக்க நலம் மோகன்ஜி . இந்தக் கதை ஒரு ஒன் லைனராகத்தான் எனக்கு தெரிந்திருந்தது , அற்புதமாக விளக்கியதற்கு மிக்க நன்றி.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் பாரதசாரி! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

சிவகுமாரன் சொன்னது…

அருமை. அண்ணா.
திருப்புகழ் படித்து பலமுறை வியந்திருக்கிறேன். அது போல் எழுத முயன்றும் இருக்கிறேன். தமிழ் நடையின் உச்சக்கட்டம் திருப்புகழ்.
அருணகிரியின் வரலாறு உங்கள் எழுத்தில் சிந்தை மயக்குகிறது. இன்னும் கேட்க ஆசை அண்ணா .

சிவகுமாரன் சொன்னது…

அப்பாத்துரையின் கேள்விக்கு தங்கள் விளக்கம் அருமை அண்ணா. அருணகிரி பொது மகளிரையும், அந்த சிற்றின்பத்தையும் தான் சாடியிருக்கிறார்.

kashyapan சொன்னது…

மொகன் ஜி!தகவலுக்காகத்தான் எழுதுகிறேன். தமிழ்கத்தின் இருண்டகாலம் என்று ஒன்று உண்டு. சரியாக சொல்லத்தெரியவில்லை. 4ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டுவரை என்பார்கள். அந்த சமயத்தில் உள்ள ஆவணங்கள் முழுமையாக அழிக்கப் பட்டுள்ளன. அதனை களப்பிரர்கள் காலம் என்கிறார்கள் வரலற்றாளர்கள்.சைவம் அவர்களை கபாலிகர்கள் என்று கூறி ஒதுக்கியது. களப்பிரர்கள் அரசர்களை எதிர்த்தார்கள். ஒருவகையான மக்களாட்சியை நிறுவினார்கள். ஏழு கிராமங்கள்,ஒரு ஊர். ஏழு ஊர் ஒருநாடு. ஒவ்வொரு கிரமத்திற்கும் ஒரு சபை.(சங்கம்) சபை ஊருக்கான சபையை தேர்ந்தெடுக்கும்.ஊர் நாடுக்கான சபை மற்றும் தலைவனை தேர்ந்தெடுக்கும். ஒரு Crude form of Democrcy இருந்ததாகச்சொல்கிறார்கள். இது மக்களுக்கு மிகவும் அருகில் அரசைக்கோண்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது. மொழியும் மக்களுக்கு நெருங்கி வந்தது. கலையும் இலக்கியமும் வளைர்ந்தது. இதனைத்தான் சங்ககாலம் என்று நம்ப இடமிருப்பதாக ஒரு கருத்தும் உண்டு
மயிலை சினி வெங்கடசாமி அவர்கள்" சமணமும் தமிழும்" என்ற நூலில் குறிபிட்டிருப்பதாக சொல்கிறார்கள். "களப்பிரர்கள் காலம்" என்று மு.ராகவையங்கார் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளதக கேள்விப்பட்டிருக்கிறேன்.
நெல்லையில் தெப்பத்திருவிழா நடக்கும்.அப்பர் முதுகில் உரலைக் கட்டி குளத்தில் சமணர்கள் போட்டதாகவும் அவரை சிவன் காப்பாற்றிய தகவும் ஐதீகம்.
மதுரை அருகே சாமநத்தம் என்று ஒரு ஊர் உள்ளது.அதனை சமணர் ரத்தம் என்கிறார்கள். 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்ட இடம் அது என்கிறார்கள். திருப்பரம்குன்றம் சமணர் குகைக் கோவில்..
கழுவேற்றப்பட் 8000 சமணர்களின் வாரிசுகளை பிராமனர்களாக அப்பர் அறிவித்தாரென்றும் அவர்கள் தான் அஷ்டசகஸ்ர பிராமணர்கள் என்றும்----------
எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் இவை ஆரய்ச்சிகு உட்படுத்தப் படவேண்டியவை என்பது என் துணிபு--- காஸ்யபன்.

அப்பாதுரை சொன்னது…

"அத்தனை இறையிலக்கியங்களிலும்" என்பதற்கு பதிலாக "நான் படித்த அத்தனை இறையிலக்கியங்களிலும்" என்று எழுதியிருக்க வேண்டும்; என்னுடைய பிழை. நான் அதிகம் படித்ததில்லை; பெண்களை உயர்த்திப் பாடியதாக நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.
பெண்களுக்கு முதலிடம் கொடுக்கும் நம் சம்பிரதாயங்களைப் பற்றி அழகாகச் சொன்னீர்கள்; எத்தனை உண்மை என்பது நினைத்துப் பார்த்த பின்னரே புரிகிறது. 'கொங்கைக்குன்றிடைச் சென்று விழும்', 'அல்குற் பெருநரக' போன்ற தொடர்களின் பொருளை நான் தவறாகப் புரிந்து கொண்டேன் போலிருக்கிறது. இது போன்ற வரிகளைப் படிக்கும் பெண்களும் தாய்களும் தங்களைப் பற்றிப் பெருமை அடைவார்கள் என்பது புரிகிறது.
:-)

அப்பாதுரை சொன்னது…

அருணகிரி பொதுமகளிரை சாடுவது சரியே, சிவகுமாரன். சிறிது கூட தன்மானமில்லாமல் வெட்கமில்லாமல் காசைப் பிடுங்கும் சமுதாயக் கேடான அவர்களைச் சும்மா விடலாமா?

kashyapan சொன்னது…

மொகன் ஜி! சாத்திரங்கள் விதிவிலக்கையும் சொல்கின்றன. சீதையை அநியாயமாகப் பழி சுமத்தி காட்டிற்கு அனுப்பினன் ராமன்.யாகம் செய்ய தங்கத்தில் சீதையின் பதுமையச்செய்து அருகில் வைத்துக்கோண்டு நடத்தினான். முனிபுங்கவர்கள் அதனை ஆமோதித்தது மட்டுமல்ல ஆசிர்வதித்தார்கள். மலையாள இயக்குனர் மறைந்த அரவிந்தன் "காஞ்சன சீதா என்று படமெடுத்தார். பரிசு பெற்ற அற்புதமான படம்---காஸ்யபன்

kashyapan சொன்னது…

I appriciate the righteous indignation of Sri.Appathurai---kashyapan

மோகன்ஜி சொன்னது…

காச்யபன் சார்! அருமையான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள். அருணகிரியின் விவாதத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், தாங்கள் குறிப்பிட்ட களப்பிரர் காலம் மற்றும் சமணர் பற்றிய விவாதம் மிகமிக முக்கியமான விஷயம். ஒரு நானூறு வருட நிகழ்வுகளையும் நாகரீகத்தையும் கஷ்கத்தில் சொருகிக்கொண்டு ‘காக்கா ஓச்!’ என்று சொல்லி நம் முன்னோர்கள் போய்விட்டாலும், இதற்கான ஆராய்ச்சிகள் தீவீரமாக செய்யப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சீனி. வெங்கிட சாமி, அறவாணன் ஐயா முதலானோர் இந்த வகையில் ஆராய்ச்சிகள் செய்திருந்தாலும், களப்பிரர் காலத்து சமணப் பண்பாட்டையும், வாழ்க்கைமுறையும், சமுதாயத்தில் அந்தகாலகட்டம் கிளர்த்திய மாற்றங்களையும் தீர ஆய்வு செய்ய முயற்சிகள் வேண்டும். வடமொழியிலும் தமிழிலும் சமணர்களின் இலக்கிய பங்களிப்பு அதிகம். பற்பல நீதி நூல்களும்(திருக்குறள் உட்பட), சமணர் அருளிய கொடை. அரசாண்ட மன்னர்களில் பெரும்பாலானோர் அவர்கள் ஆட்சிகாலத்தில், தான் சார்ந்த மதத்தை போஷித்தும் மாற்று மதங்களை நசுக்கியும் கொடுமை புரிந்திருக்கிறார்கள். அதில் இன்று நாம் செய்ய ஏதுமில்லை. சரித்திரத்தை வரலாற்றாய்வாளர்கள், சார்பற்று, நெடிய ஆய்வுகளின் மூலமும் அடுத்த தலைமுறைக்காவது இன்னமும் தெளிவுற்ற வரலாற்று நிலைகளை விட்டுச் செல்வது முக்கியமான ஒன்று. நிரம்ப யோசிக்க வைத்திருக்கிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

சிவா உன் வாழ்த்துக்கு நன்றி! திருப்புகழ் சந்தம் சிந்தை மயக்கும் ஒரு ஆனந்தம்

மோகன்ஜி சொன்னது…

அத்துணைக் காலங்களிலும், அத்துணை இலக்கியங்களிலும் பிறழ்வுகள் இருப்பது உண்டு என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
எனது மேற்கண்ட பதிலில் இதையும் குறிப்பிட்டிருந்தேன்.
/சில புலவர்களின் பாடல்கள் பெண்ணைப் பற்றிய பயத்தை எண்ணியல்ல. தன் பலவீனத்தைக் கண்டு பயந்தே என்று தோன்றுகிறது.
நீங்கள் குறிப்பிட்டத் தொடர்கள் நிறையவே காணக் கிடைக்கிறது இலக்கியத்தில். அதிலேயே நிற்கவேண்டியது இல்லை.
உங்கள் பின்னூட்டத்தில் மேலும் சொல்லியிருக்கிறீர்கள்
//இது போன்ற வரிகளைப் படிக்கும் பெண்களும் தாய்களும் தங்களைப் பற்றிப் பெருமை அடைவார்கள் என்பது புரிகிறது//
இவற்றை ஏதோ நான் எழுதியதைப் போன்று சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் பாராட்டுப் பத்திரத்துக்கு நன்றி நண்பர் அப்பாதுரை அவர்களே!

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் எழுதியதாக நான் சொல்லவில்லை மோகன்ஜி. எழுதியதைப் போல இருப்பதாகவும் சொல்லவில்லை. (நீங்கள் கண்ணியம் மிகுந்தவர் என்று புரிந்து கொண்டிருக்கிறேன் :).

பெண்களை நம் இறையிலக்கியங்களும் சம்பிரதாயங்களும் உயர்ந்த நிலையில் வைத்திருக்கின்றன என்ற உங்கள் மறுமொழியைப் படித்ததும் எனக்குத் தோன்றியதைக் கொஞ்சம் tongue-in-cheek ஆக எழுதினேன், அவ்வளவே. காஸ்யபன் சொல்வது போல் indignationம் இல்லை (பத்திக்கும் ஐயா :).

அல்குற்பெருநரகு என்பது பிறழ்வு என்று நான் சொல்லவில்லை. அது எழுதியவரின் கருத்துரிமை. காமத்தில் ஒரு பிறழ்வும் இல்லை. பெண்ணின் ஓட்டைகளிலோ ஆணின் ஓட்டைகளிலோ எந்த விதக் கேடும் இல்லை. அதைப் பற்றி எழுதுவதை பிறழ்வாக நினைக்கவே இல்லை. உண்மையில், கடவுளரின் காமக்களியாட்டங்களுக்கு அளவே இல்லை என்றும் படித்தறிந்தேன். காமம் வாழ்க வெல்க என்று கடவுளே சொல்வது போல் தான் தெரிகிறது. என்னைத் தாக்கியது, இறையருள் பற்றி எழுதியவர்களின் பல்டி. அதுவரை அல்குல் பெருஞ்சொர்க்கமாக இருந்தது - இறைவன் ஆட்கொண்டதும் பெருநரகமா? loss of credibility. 'அல்குல் பெருஞ் சொர்க்கத்திலிருந்து இன்னொரு பெருஞ் சொர்க்கத்துக்கு எடுத்துச் சென்றாயே இறைவா, போற்றி போற்றி!' என்று சொல்லாதது வியப்பாக இருக்கிறது - சற்று வருத்தமாகவும் இருக்கிறது.

பெண்ணின் தலைமுடியிலிருந்து ஒவ்வொரு அங்கமாக வர்ணித்துவிட்டு, அப்படிப்பட்ட பெண்ணை மனதாலும் நினைக்க வையாதே இறைவா - என்பதில் போலித்தனம் இருப்பதாக நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு: 'ஈர்க்கிடை புகா இளமுலை' என்கிறார் மாணிக்கவாசகர். ஈர்க்குச்சி புக இடமில்லாத அளவுக்கு பருத்த இளமுலை - பிரமாதமான கற்பனை. (இதற்கு முன்னும் பின்னும் நிறைய வர்ணிக்கிறார் - படு சுவாரசியம். பெண்ணை வர்ணிக்கும் கவிஞரையெல்லாம் லைன் கட்டி 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று திருவாசகத்தால் அடிக்கலாம், அத்தனை சுவாரசியம். RVS.. சேந்து படிக்கலாம் வாங்க:). எல்லாம் சொல்லி விட்டு 'ஆளை விடுறா சாமியோவ்' என்பது போல் முடிப்பதில் தான் சரிகிறது. திருவாசகத்தின் தமிழின்பம் பெண்ணின்பத்தை விட ஒரு படி மேல் என்று தைரியமாகச் சொல்வேன்; படிக்கும் போது ஒருவித போதையில் வைக்க வல்லது. ஆனால் பாருங்கள், பக்தி சத்தியமாக வரவில்லை. அதைத் தான் சொல்ல வந்தேன்.

விடுங்கள், எழுதியவர்களுக்கு என்ன கடுப்போ!

என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'மனைவி ஒப்புதலில்லாமல் செய்யும் பூஜை முழுமையடைவதில்லை' என்பதற்குக் காரணமே வேறே மோகன்ஜி. அது மனைவி என்ற நிலைக்குக் கொடுத்த மரியாதை அல்ல என்பதை தண்டியிட்டு மண்டியிட்டு (?) தெரிவித்துக் கொள்கிறேன். ;-) இன்னொரு கேள்வியையும் உங்கள் முன் பணிவன்புடன் வைக்கிறேன்: பூஜைகளை மனைவி முன் நின்று செய்யவேண்டும் என்று சம்பிரதாயம் சொல்லவில்லையே? கணவனுடனோ பின்னாலோ கைகட்டி ஒப்புதல் தந்து நிற்கச் சொல்கிறது. இதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. சிவபுராணத்தில் வருகிறது - ஆணுக்கு இருக்கும் அதிகாரம் பெண்ணுக்கு கிடையாது என்ற கருத்தில் வருகிறது.

'சம்பிரதாயங்களில் பெண்ணின் இடம்' சுவாரசியமான பட்டிமன்றம் நடத்தலாம் போலிருக்கிறதே? (எரிந்த கட்சினு பேராமே பட்டிமன்றத்துக்கு?)

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! பக்தி இலக்கியங்கள் பற்றிய தங்கள் " தார்மீக ஆவேசம்" பற்றி குறிப்பிடவே righteous indignation என்றென்.என்னுடைய ஆங்கிலப்புலமை அவ்வளவுதான். அருணகிரியையும் அவர்தம் சந்தத்தமிழையும் விட்டு எங்கேயோ போகிறோமோ என்று அஞ்சுகிறேன். கொஞ்சம் மூச்சு விடுக்கொள்வோமே---காஸ்யபன்

RVS சொன்னது…

பெரியவங்க பேசும்போது அமைதியா இருக்கணும்.
அதான் கைகட்டி வாய் பொத்தி நீங்கள், மோகன் அண்ணா, காஸ்யபன் சார் போன்றோர் கூடி விவாதிக்கும் இந்த இணைய தமிழ் பட்டிமன்றத்தில் பார்வையாளனாக இருக்கிறேன். அப்பப்போ விசில் அடிக்கிறேன். உங்கள் காதில் கேட்டதா? ;-)))

அப்பாதுரை சொன்னது…

நீங்க சொன்னது சரிதான் காஸ்யபன் - ஆவேசம்ன உடனே வேப்பிலையைத் தூக்கிடுவாங்களே மக்கள்னு ஒரு பயம், அதான்! உங்க புலமைக்கு என்ன குறை ஐயா?!

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

||உதாரணத்துக்கு: 'ஈர்க்கிடை புகா இளமுலை' என்கிறார் மாணிக்கவாசகர். ஈர்க்குச்சி புக இடமில்லாத அளவுக்கு பருத்த இளமுலை - பிரமாதமான கற்பனை. (இதற்கு முன்னும் பின்னும் நிறைய வர்ணிக்கிறார் - படு சுவாரசியம். பெண்ணை வர்ணிக்கும் கவிஞரையெல்லாம் லைன் கட்டி 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று திருவாசகத்தால் அடிக்கலாம், அத்தனை சுவாரசியம். RVS.. சேந்து படிக்கலாம் வாங்க:). எல்லாம் சொல்லி விட்டு 'ஆளை விடுறா சாமியோவ்' என்பது போல் முடிப்பதில் தான் சரிகிறது. திருவாசகத்தின் தமிழின்பம் பெண்ணின்பத்தை விட ஒரு படி மேல் என்று தைரியமாகச் சொல்வேன்; படிக்கும் போது ஒருவித போதையில் வைக்க வல்லது. ஆனால் பாருங்கள், பக்தி சத்தியமாக வரவில்லை. அதைத் தான் சொல்ல வந்தேன்.||

அப்பாதுரை..அழகான,பன்மொழிப் புலவரின் பெயர்..

ஆனால் பல விதயங்களை சிறிது தவறாகப் புரிந்து கொண்டு எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
உங்களுக்கு ஒரு கேள்வி வைக்கிறேன்..உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் புராணங்கள் அல்லது ப்ரீச்சிங் மெட்டீரியல் எதிலாவது காமம் கடந்து போதல் என்பது பற்றிய விசாரம் இருக்கிறதா என்பதை சிந்தியுங்கள்..

தமிழ்ச் சமூகம் மட்டும் தான் பிறப்பு,இறப்பு,இரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை மட்டுமல்லாமல் இவற்றிற்கு அப்பாலானது என்ன என்று சிந்தித்தது..

தமிழ்ச் சமூகத்தின் சைவ சிந்தாந்தம்தான்-அது மட்டும்தான்- அப் பாடு பொருள்களை விவரித்தது.

காமம் உலகியலுக்கும் உலக இயக்கத்திற்கும் அவசியமானதும்,தேவையானதும்.காமத்தில் ஈடுபட்டு,குடும்பத்தை விருத்தி செய்து உலக இயக்கத்திற்கு வழிவகை செய்து,தான் வாரிசுகளை ஆற்றுப்படுத்தி தனக்கு இனிமேல் உலகத்தில் கடமை எதுவும் இல்லை என்று ஆதித் தமிழன் சிந்திக்க நேர்ந்த காலத்தில் கிடைத்த தத்துவங்கள் சைவ சித்தாந்தமும்,இறப்புக்குப் பின்னரான உயிரின் நிலை பற்றிய ஆய்வும்,அவை சார்ந்த சித்தாந்தங்களும்..

காமத்திற்கு என்று ஒரு தனிக் இயல்பு உண்டு.உலகியலில் கிடைக்கும் எந்த விதயமும் ஒரு அளவில் சலிப்பு ஏற்படுத்தும்,ஒரளவிற்கு மேல் உண்ண முடியாது,கோட்டை கோட்டையாக பணம் சேர்த்து விட்டால் பணம் சலிப்பைத் தரும்..மனித உடலின் புலன் நுகர்வுகளில் சலிப்பேற்படுத்தாத ஒரு விதயம் உண்டெனில் அது காமம் மட்டுமே...

எனவே இறப்புக்குப் பின்னரான இயல்-இதை மெய்யறிவு என்ற அழைத்தார்கள் அவர்கள்-நோக்கிச் செல்ல விரும்புகிறாயா,ஆன்மா இறைத்தத்துவத்தில் ஒடுங்க வேண்டும் என்று விரும்புகிறாயா,காமத்திலிருந்து வெளியே வா,இல்லையேல் உனது உயிர் உடலுக்குள் உலவும் காலம் முழுதும் காமத்திலேயே கழித்து விடுவாய்,என்பதை உணர்த்தவே காமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே,அதனைப் பற்றிய இழிவான செய்திகளை எழுதி வைத்தார்கள்.

உயிர் உடலில் செயல்படும் பொழுதே உடலுக்குப் பின்னரான உயிரின் நிலை பற்றிய அறிவைத் தேடும் மனிதர்களுக்கு மட்டுமே காமத்தை விலக்க அறிவுறுத்தப்பட்டது..

காமமே விலக்கத்தக்கது என்று எந்த தமிழ் நெறியும் சொல்லவில்லை..

மற்றபடி அழகு மொழி நடையில் அருணகிரி பற்றிய பதிவுக்கு திரு மோகனுக்கு நன்றி..

மோகன்ஜி சொன்னது…

அன்பின் அறிவன் சார்! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. திருப்புகழ் என ஆரம்பித்து வேறெங்கோ போய்விட்டாலும் இந்த விவாதங்கள் தெளிவை ஏற்ப்படுத்தட்டும். நான் ஒரு நெடிய பதிலை என் நண்பர் அப்பாதுரைக்கு எழுதினேன். ஆனால் பதிவிடத் தயங்கி புறந்தள்ளிவிட்டேன். இது அனல் வாதம் புனல் வாதமென கட்சி கட்டத்தான் வேண்டுமா?
திருவாசகம் உட்பட காமத்தை சரளமாய்க் கையாண்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்னபடி இறுதிவரை மனிதனைப் பற்றிய ஒரு உணர்ச்சி காமம். ஆனாலும் பேரிலக்கியங்களில் காமம்பேசப்படுவதைத் தாண்டித்தான் அந்த கருத்தையோ,தமிழழகையோ அடையவேண்டியிருக்கும். நல்வாசிப்பில் அந்த TRANSITION இயல்பாக நிகழவேண்டியது. நிகழும்.
திருவாசகத்தில் அருவியாய் விழும் தமிழ்த் தேனை விட்டு அங்குமிங்கும் திரியும் ஓரிரு பேனை கண்டு நின்றுவிடலாகாது. நமக்கு காமம் அன்னியமில்லை. அதுவே தொழிலாய் நின்றுவிடுதல் இல்லையே. கோவில் சிற்பங்களில் கூட காமம் இல்லையா! அவ்வளவு ஏன்? சிவலிங்க தத்துவமே அதுதானே! வடமொழி இலக்கியம் இதைவிடவும் இருக்கும்.
ஆண்டாள் பேசாத காமமா?

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

படிக்கும் முதல் முறை சற்று அதிர்ச்சியும், பிறகு கிளர்ச்சியும், பின்னர் மொழியின் ஆசாகு கண்டு நெகிழ்வும் சற்றே கண்ணீரும் வந்தால் அதுவே எழுத்தின் பயன்., வாசிப்பின் பரிணாமம். பக்தி வந்தால் அது உபரி.

மற்றுமொன்று அறிவன் சார். இங்கு விவாதித்துக் கொண்டிருக்கும் எம் சகோதரர் அப்பாதுரை தமிழார்வத்தில் யாருக்கும் குறைந்தவர் அல்லர். அவரின் நசிகேதவெண்பாவை அவசியம் படியுங்கள். கருத்தை வெண்பாவும்,வெண்பாவைக் கருத்தும் வெல்லும் பெருமுயற்சி. இங்கு அவர் சாடலின் உள்ளார்ந்த கோபம் பக்தியிலக்கியத்தில் காணப்பெறும் HYPOCRACY பற்றியே. மேலும் விவாதம் தொடரத் தடையில்லை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சார்..சார்..கொஞ்சம் வழியை விடறீங்களா....மோகன் ஜியைப் பார்த்து,இந்த பிரமாதமான இடுகைக்கு கை குலுக்காமென்றால், ஆளுக்காள் பேசிக்கிட்டு இப்படி நின்றால், எப்படி நான் மோகனைப் பார்ப்பதாம்?

அருமை! அருமை!! அருமை!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பணத்தைப் பற்றி ஒன்று சொல்வார்கள்..SHE IS A GOOD SERVANT BUT A BAD MASTER! அது போல் தான் காமமும்!!என் பிடிக்குள் ’அவள்’ இருந்தால், நான் மனிதன்...’அவள்’ பிடிக்குள் நான் இருந்தால், எனக்கும், மிருகத்திற்கும் உள்ள வித்யாசம் குறுகி விடும்! நான் மிருகம்!!!
அதற்காகத் தான் காமம் புகுவதற்குள், காயத்ரி புக வேண்டும் என்று மெனக்கிடுகிறார்களோ?

இவண்,
ஆர்.ஆர்.ஆர்.
http://betaofbusinessthoughts.blogspot.com/

மோகன்ஜி சொன்னது…

மூவார்முத்தே! நீங்கள் என்ட்ரி கொடுக்கும் அழகே தனி! உங்களுக்கு வழிவிடாமலா? அன்புக்கு மிக்க நன்றி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! சற்று முன் என் கல்லூரி நண்பன் அழைத்தான். இந்த வலைதளத்தை அவ்வப்போது பார்த்துவிட்டு சென்னையின் செந்தமிழில் அலைபேசியில் வைவது அவன் வழக்கம்.
இன்றைய உரையாடல்.

"மோகி! 'ஈர்க்கிடை மேட்டர்' ஞாபகம் இருக்கா?"
" இல்லையேடா"
" இதை ரெண்டாம் வருஷம் காலேஜ்ல சொன்னே எங்களுக்கு"
"நம்ம கபாலீஸ்வரர் கோவில் போயிட்டு வரும் போது விலாவாரியா ரசிச்சு சொன்னே"

"அதுகென்ன இப்போ"

"அதே மாதிரி இன்னொண்ணு சமஸ்க்ருதத்துல சொன்னே.அது இன்னமும் டாப்பு "

" அது என்னடா? நினைப்பில்லையே?"

"கம்னாட்டி நடிக்காத! காலம்பரத்துக்குள்ள யோசிச்சு சொல்லு"

"ரொம்ப முடை. கல்யாணத்துக்கு பொண்ணை வச்சுகிட்டு கேக்குராம் பாரு"

"இலக்கிய நயம் மச்சி! தமிழார்வம்!ஈர்க்குச்சிய ஏத்த இறக்கமா உன் வாயால ஒரு தரம் சொல்லேன்?"

" வேலைப் பாருடா! இப்போ உலக்கை நுழைஞ்சாலும் பார்க்க நேரம் இல்லை. ஆளைவிடு."

"இதையெல்லாம் கோத்து பதிவு போட்டேன்னு வச்சுக்கோ. ஹிட் எகிருடும்"

"ஏங்க? ஜெயந்த்திகிட்டயா?"

"வாழ்க தமிழ்.. ரொம்ப நல்லவனாயிடாத!"

மோகன்ஜி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர் சார்! அழகாய்ச் சொன்னீர்கள். ரிஷபன் சாரும் சுந்தர்ஜீயும் வந்துட்டுப் போனா அடுத்த கதையைப் போடுவேன்.சரி தானே?

அப்பாதுரை சொன்னது…

அ.. சுலபமா விட்டுறுவமா மோகன்ஜி? இன்னும் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடுவோம்.

அறிவன் அவர்களின் பின்னூட்டத்தை ரசித்துப் படித்தேன். எனக்கென்னவோ நாம் இருவருமே ஒரே கருத்தைச் சொலவது போலத் தோன்றுகிறது, அறிவன். of course, நான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் (தவறாகப் புரிந்து கொள்வது எனக்கு மூச்சு விடுவது போல் இயற்கையாக வரும்).

காமத்தை ஒழி என்ற பெயரில் பெண்களைக் கேவலப்படுத்துவதைத் தான் என்னால் ஏற்கமுடியவில்லை. காமத்தை ஒழி என்று சொல்லியிருக்கலாமே - தப்பே இல்லை. பெண்ணை வர்ணித்து, பிறகு பெண்ணால் உருவாகும் காமம் என்கிற நரகந்தரும் கொடுமையை ஒழி என்பது பெண்ணால் மட்டுமே காமம் உண்டாவது போன்ற பொய்மையைப் பரப்புகிறது. பெண்ணுக்குக் காமம் கிடையாதா? அல்லது பெண் காமத்தை ஒழிக்க வேண்டாமா? பெண் பெரும்பேரடைய வேண்டாமா? அல்லது பெண்கள் ஆண் உடல் ஓட்டை பற்றிய வர்ண்ணை கொண்ட வேறு இறையிலக்கியப் பாடல்களைப் படிக்க வேண்டுமா?

இப்பாடல்கள் அன்றைய நிலவரம் மற்றும் அந்த காலக்கட்டத்து நிகழ்வுகளை ஆதிக்கங்களை ஒட்டியது என்பதால் ஓரளவுக்கு இதை நியாயப்படுத்தினாலும், பெண்களைத் தாய் (இறைவனையே தாய்) என்றதும் அதே கால இறையிலக்கியங்கள் என்பதால் இந்த முரண் தலைதூக்குகிறது. காமம் என்ற பெயரில் பெண்ணைக் கேவலப்படுத்தி எழுதிய இவர்களை எந்தப் பெண் புலவரும் எதிர்த்துப் பாடாததும் குறையே. ஆதிசங்கரரிலிருந்து இப்படி எழுதியிருக்கிறார்கள். ஒரு புறம் 'காமாக்ஷி' என்று இறைத்தாயைப் போற்றியவர் இன்னொரு புறம் 'காமாந்தகி' என்று மனிதத்தாயை - தாயின் கருவைக் கொடுஞ்சிறை, மிகக் கொடுமையான நரகம் என்ற பொருளில் - வர்ணிக்கிறார். தாய் என்பவள் நரகத்தை தன்னுள் தாங்கிக் கொண்டிருப்பவளா? தந்தையின் காமத்தால் தாய் நமக்கு நரகத்தை உருவாக்குகிறாளா? இருவரும் கூட்டு சேர்ந்து நரகத்தில் சேர்க்கிறார்களா? பெண் குழந்தையை ஒரு தட்டு குறைந்து மதிப்பிடும் நம் 'சம்பிரதாயம்' எங்கிருந்து வந்தது என்று ஏன் தேடவேண்டும்?

இந்த நாளிலும் காமத்தை ஒழி என்ற கருத்தை பெண்ணை மற என்ற ரீதியில் நாமும் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

பொதுமகளிரைத் தான் சாடினார் என்று நியாயப்படுத்துவதால் நாம் :) அதன் பின்னணியில் இருக்கும் கொடுமையான உண்மையையும் நியாயப்படுத்துகிறோம்.

அறிவன், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை - எல்லா மதங்களும் உபதேசிகளும் காமம் கடந்து போதல் பற்றிச் சொல்கிறார்கள். மற்ற மதங்கள், நானறிந்த வரை கிறுஸ்துவம், இஸ்லாம், யூதம் - தகாத உறவு, முறையற்ற காமம், இச்சை பாவம், அத்தகைய பாவத்தின் சம்பளம் நரகம் (அல்லது நடுத்தெருவில் கல்லடி/சவுக்கடி :) என்று சொல்லியிருக்கிறார்களே தவிர, இந்து இறையிலக்கியம் போல் பெண்ணை அங்கம் அங்கமாக வர்ணித்து பிறகு பெண்ணை மற என்று சொன்னதாகத் தெரியவில்லை.

பொதுவாகவே, இறையிலக்கியத்தில் இறைவனின் காமக் களியாட்டங்களை உருகிப் பாராட்டிப் பாடும் புலவர்கள், மனிதர்களின் காமக் களியாட்டங்களை ஆழ்ந்த கசப்புடன் பாடியிருக்கும் முரண் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இவற்றைப் படிக்கும் மனதில் (பெண்ணோ ஆணோ) என்ன நினைப்புகள் ஓடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

உருப்படியா ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது மோகன்ஜி.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கலந்துக்குங்க இல்லாட்டி அப்படி ஓரங்கட்டுங்க.. :)
எனக்கு ஒரு ஆணியும் இல்லை.

அப்பாதுரை சொன்னது…

hilarious ராமமூர்த்தி சார்.

அப்பாதுரை சொன்னது…

ஈர்க்கிடை உரையாடலை ரசித்துப் படித்தேன் மோகன்ஜி..உங்கள் பின்னூட்டம் 'உலக்கை சுற்றும் வாலிபன்' என்ற நீலப்படத்தை நினைவூட்டியது.. (அடச்சே! காமத்தை ஒழி மனமே)

அப்பாதுரை சொன்னது…

நீண்ட பின்னூட்டமெழுதி பதிவிடத் தயங்கினீங்களா.. அட என்னங்க நீங்க.

அப்பாதுரை சொன்னது…

'தொடரத் தடையில்லை' என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டேன் :)

RVS சொன்னது…

அப்பாஜி! டைட்டில் ரொம்ப கிளுகிளுப்பா இருக்கு. கூகிள்ல யாராவது காமம் அப்படின்னு தேடினா நேரா கொண்டு வந்து மோகன் அண்ணா ப்ளாக்ல விட்டுடும். இங்க வந்து படிச்சு பார்த்தா அருணகிரி சரிதம். 'அத'த் தேடி இங்க வந்தா நொந்து போய்டுவாங்க. பிக்பாக்கெட் அடிச்ச பர்ஸ்ல பணம் இல்லாத மாதிரி.

நீங்க ஈர்க்கிடை சொன்னா அண்ணா இறை இலக்கியங்கள்ல பெண்களே பாடிய 'ஏ' பாட்டுப் போடறார். போட்டி ரொம்ப நல்லா இருக்கு. ப்ளீஸ் தொடருங்கள்.

நடுப்பர ஆர்.ஆர்.ஆர். சார் வந்து அவன், அவள், அது சொல்லிட்டு போறார்!

இந்தப் பக்கம் முழுவதும் எவ்ளோ காமம் இருக்கு என்று எண்ணி சொல்பவர்களுக்கு அப்பாஜி சொன்ன படம் ஸி.டி இலவசம். ஷிப்பிங் சார்ஜெஸ் எக்ஸ்ட்ரா.

இந்த சிறியவனுக்கு இப்டி படுது.. "பார்த்து ரசித்ததை ஆவணப்படுத்தியிருப்பார்களோ!". மேலும் ரசனையை வெளிப்படுத்துவதில் ஆண்டவன், அடிமை வித்தியாயம் பார்க்கவில்லை போலிருக்கிறது.

எது என்னவோ... சொன்னா கோச்சுக்ககூடாது... நீங்கெல்லாம் காமக் கிழவர்கள். ;-))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருணகிரிநாதரின் கதையை இதைவிட அழகாய்ச் சொல்ல முடியும் என தோணவில்லை மோகன்ஜி! பகிர்வுக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

RVS..பெண்களே பாடின 'A' பாட்டு நிறைய இருக்கு - மார்கழி மாசம் பாடுறோமே திருப்பாவை..

பெண்கள் பாடின ஒரு பாட்டில கூட ஆணை சாடியதாகத் தெரியவில்லை. காமத்தை இயல்பாக எடுத்துக் கொண்டு, காமத்தில் இறையைக் காணும் பக்குவம் அவர்களுக்கு வந்தது மதிக்க வைக்கும் ஆச்சரியம். (ஒரு வேளை இந்த ஆம்பிளைங்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை, எதுக்கு திட்டுவானேனு விட்டாங்களோ என்னவோ).

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

அப்பாதுரை,
நீங்கள் ஒரு வட்டம் போட்டக் கொண்டு அதற்குள்ளிருந்து வெளியே வர மறுக்கிறீர்கள்..

பெண்ணையும் காமத்தையும் இகழும் இலக்கியங்கள் தமிழில் பெரும்பாலும் பக்தி இலக்கியத்தின் உச்ச இலக்கியங்களாக இருக்கும்.அதாவது தேவாரப் பாடல்கள் கூட இயல்பான பக்தி இலக்கியம்;பக்தி இலக்கியத்தின் உச்ச இலக்கியங்கள் என்று திருவாசகத்தைச் சொல்லலாம்,திருப்புகழைச் சொல்லலாம்,இன்னும் பட்டினத்தடிகள் பாடல்களை தத்துவார்த்தமான பக்தி இலக்கியம் என்று சொல்லலாம்.

இவ்வகை இலக்கியங்கள் எல்லாம் இறைவனை அடைவதைப் பற்றிப் பேசுகின்றன.கவனியுங்கள்,சாதாரணமான பக்தி இலக்கியங்கள் பெருமளவு இருக்கின்றன,தேவாரப் பதிகங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்,அவற்றில் பெரும் காமமும் இல்லை,இறைவனை அடைதல் பற்றிய அழுத்தமும் இல்லை;அதாவது ஒரு திருவாசகம் அளவுக்கோ,அல்லது திருப்புகழ் அளவுக்கோ அல்லது ஒரு பட்டினத்தடிகள் அளவுக்கோ.
என்ன புரிகிறது இதிலிருந்து??
பிறப்பை ஒழிக்கும் ஒரு நிலை வரும்போது மட்டுமே இறைநிலையை ஆன்மா,அதாவது உயிர் அடையும் என்கிறது சைவசித்தாந்தம்...அந்த நிலையை நோக்கி உயிர்களை,அதாவது நமது உடலில் உலவும் உயிரை,உந்தும் நோக்கம் பற்றிய தமிழிலக்கியங்கள் மட்டுமே பெருமளவில் காமத்தை இகழ்கின்றன.
இந்த நிலையை அடையப் போகிறோம் என்று உறுதியாகத் அப்பெரியார்களுக்குத் தெரிந்திருந்திருக்கலாம்..பட்டினத்தடிகளுக்கும்,ஒரு அருணகிரிக்கும்,ஒரு ஆண்டாளுக்கும்,ஒரு மணிவாசகருக்கும் அவ்வித அனுபவங்கள் அல்லது உறுதிப்பாடு கிடைத்திருக்கலாம்.

ஆகையினால்தான் மனிதருக்கெனில் பேச்சுப்படின் வாழ்கில்லேன் கண்டாய் என்று ஆண்டாளால் உறுதியாகச் சொல்ல முடிந்தது..

அந்த உறுதிப்பாடின் 1000 ல் ஒரு பங்கு கூட அடைய முடியாத நாம் இன்னும் நமீதாவையே கடந்து செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.அந்த உறுதிப்பாடு-assurance-இறைச் சக்தி அல்லது பரம் பொருளிடமிருந்தே அவர்களுக்குக் கிடைத்திருந்திருக்கலாம்,நம்மால் சொல்ல இயலாது.
நாம் முழுதாக காமத்தைப் பழகவே இயலாதவர்களாக இருக்கும் போது,அவர்களின் மனப்பாடுக்குள் செல்வது இயலாத காரியமாக இருக்கும்.

எனவே நாம்,பெண்ணை உயர்வாகவும் சொல்லி காமத்தை எப்படி இகழலாம் என்று வாதித்துக் கொண்டிருக்கிறோம்.
பட்டினத்தடிகள் கூட கடைசிவரை தாய்மைக்கான கடன் இருக்கிறது என்பதை உறுதி செய்தவர் தானே..எனவே அவர்கள் பெண்மையையோ அல்லது தாய்மையையோ இகழ்ந்தார்கள் என்பது ஒத்துக்கொள்ளத் தக்கதல்ல.
எது இகழப்பட்டது என்றால்,கருக்குழிக்குள் ஒரு பிறவியாக எடுப்பது,அதுவும் உயிர் இறையுடன் கலந்து விட வேண்டும் என்ற தீராத உத்வேகத் தாகம் மிக்கவர்களாக இருந்தவர்கள் வாக்கினில் மட்டும் தான் அவ்வித வாக்கு வந்தது.

உயிரை உலகிற்குள் திரும்ப செயல்பட வைப்பது பொதுவாக மாயா சக்தி எனப்படுகிறது.மாயா சக்தி செயற்படுவது முதலில் காமத்தின் வழியாக.உயிர் செயல்படும் உடல் காமத்தில் அமிழும் போது உயிரின் நோக்கம் உலக நடவடிக்கைகளில் அமிழுகிறது.இது சைவ சித்தாந்தத்தின் வழி உயிர் உடல் மாயைத் தத்துவங்கள் பற்றிய விளக்கம்.

ஆக்ஸிலைட்டரை மிதிக்க வேண்டுமெனில் பிரேக்கிலிருந்து காலை எடுத்தாக வேண்டும்,அப்போதுதான் கார் வேகமெடுக்கும்,இரண்டும் ம்யூச்சுவலி எக்ஸ்க்ளூசிவானவை.

உயிர் இறையுடன் கலக்க வேண்டும் என்ற உத்வேகம் கொண்டவர்களுக்கு அதை உடல் மற்றும் மாயை நிரம்பிய உலகில் இருந்து பிய்த்து எடுத்தாக வேண்டும்,காமத்தை ஒழித்தால் ஒழிய அவர்களால் அது இயலாது..
எனவேதான் பட்டினத்தடிகள் மீண்டும் மீண்டும் கருக்குழிக்குள் புகுவது அவலம் என்று பாடினார்..அவர்கள் உலக வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் உயிரின் வாழ்க்கையை அல்லது நிலையை அல்லது இறைத்தன்மையைப் பார்த்தார்கள்,அதுவே இலக்காக இருந்தது..

நான் உலகின் மாயப்பாடுகளை,பெண்ணை,காதலை,வாழ்வை சித்தாந்தத்தின் பார்வையில் மாயையை நேசிக்கிறோம்.

நாம் பார்ப்பதும் அவர்கள் பார்ப்பதும் உயிரின்நிலை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள்.ஒரு பக்கம் உலக வாழ்வை முறித்து வேறெங்கோ,வேறு ஏதோ நிலையை அடையும் நிலை.ஒரு பக்கம் உலகம்,அன்பு,காதல்,தாய்மை போன்றவை.

நாம் இந்தப் புறம் இருந்து கொண்டு அவர்கள் சொல்வது எப்படி சரி,தாய்மையைக் கேவலப்படுத்தலாமா என்று வாதித்திக் கொண்டிருக்கிறோம்;அவர்கள் நம்மைக் கைகொட்டிச் சிரித்து,முட்டாளே காமம் இவ்வளவுதான்,கொங்கை இதுதான்,உயிர்குழி இதுதான்,இதில் அமிழ்ந்து சாகாதே,கருக்குழியில் இருந்து மீள் என்கிறார்கள்...

இரு பார்வைக்காரர்களும் இணக்கமாகப் போவது சற்று சிரமம்தான் ! :))

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

||அவ்வளவு ஏன்? சிவலிங்க தத்துவமே அதுதானே! வடமொழி இலக்கியம் இதைவிடவும் இருக்கும்.||

மோகன் சார்,இவ்வளவு எழுதும் நீங்கள் இவ்வளவு முரணான கருத்தைக் கொண்டிருப்பது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது..

மாதவிப்பந்தல் கேஆர்எஸ் சிவலிங்கவடிவம் அதைக் குறிக்கிறதா? என்றே ஒரு பதிவு எழுதியிருக்கிறார்..தவறாது படிக்கவும்.

நசிகேத வெண்பா..பார்க்கிறேன்..அப்பாதுரை அவர்களின் மீது மதிப்பிறக்க எண்ணம் ஏதுமில்லை;அவர் வாதம் செய்கிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.பிடி'யா என்பது இன்னும் தெரியவில்லை. :))

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள அப்பாதுரை! உங்களுக்கு மறுமொழியை யோசித்து,பணிகளை முடித்து வலைக்குள் புகுந்த போது, அறிவனின் சைவசித்தாந்த விளக்கம்... நான் சொல்ல வந்ததைவிட ஆழமானதும் தார்மீகமுமான வாதத்தை முன் வைத்திருக்கிறார். சிலமுறை திரும்பத் திரும்பப் படித்தேன்.. லயிப்பிலிருந்து மீள்வது சற்று சிரமமாகவே இருந்தது.

போகிறபோக்கில் எனக்கும் குட்டு வைத்திருக்கிறார்.இது "மோதிரக் குட்டா"ய்த்தான் தோன்றுகிறது.

மோகன்ஜி சொன்னது…

//பிக்பாக்கெட் அடிச்ச பர்ஸ்ல பணம் இல்லாத மாதிரி//
அப்பனே! உவமை மன்னா ! ரசிச்சேன்! அந்தப்பாட்டை
A பாட்டுன்னு சொல்லி கவுத்துட்டீங்களே..'அது எல்லாமற தனை இழந்த நலம்' ஆர்.வீ.எஸ்!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்! அடிக்கடி வாங்க!

மோகன்ஜி சொன்னது…

அன்பு அறிவன்! உங்கள் கருத்துகள் தெளிவாயும் தீர்க்கமாயும் உள்ளன. என் பாராட்டுதலும்,நன்றியும். சிவலிங்கக் கருத்தாய் நான் குறிப்பிட்டது முரண் என்கிறீர்கள். நான் மாதவிப் பந்தலை அவசியம் பார்க்கிறேன். பார்த்தபின் உங்களுக்கு இதுபற்றி அவசியம் எழுதுவேன்.

உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது. வலையில் சில ஆக்கபூர்வமான பதிவுகளைச் செய்யலாம் எனும் உறுதி உங்களைப் போல நண்பர்களால் வலுவாகிறது.
மீண்டும் சந்திப்போம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

மோகன்ஜி,
உங்கள் ஊக்க வார்த்தைகள் மிக்க மகழ்ச்சி அளிக்கின்றன.

பணிவுடன் நன்றிகள் பல.

உங்களுக்குச் தேடிப் படிக்கும் சிரமம்மில்லாமல் உடனே படிக்க..

அப்பாதுரை சொன்னது…

அறிவன், உங்கள் வாதமும் வரிகளும் அற்புதம். ஒரே ஒரு வட்டத்தைத் தவிர நேராக எழுதியிருக்கிறீர்கள். பலமுறை படித்தேன்.

மறுபடியும் அதே எண்ணம் என மனதில் ஓடுகிறது. நீங்களும் நானும் ஒரே தரப்பு. இறைமையையோ காமத்தையோ சாடவில்லை. காமத்தின் காரணமாகச் சாடியதைச் சாடுகிறேன், அவ்வளவே. ஆண்டாள் கூற்றில் காமம் இருக்கிறது அன்பரே. காமத்தை இகழாமல், காமத்தின் காரணமாம் ஆண்களைக் கேவலப்படுத்தாமல், 'மானிடருக்கெனின்' என்று மொத்தமாகச் சாடியவர்.

நீங்கள் சொல்வது போல் இவர்களின் உறுதிநிலையில் ஆயிரத்தில் அரை பங்கு கூட எனக்கு இல்லை. இறையிலக்கியங்களைப் படிக்கும் போது 'இந்த ஞானிகளுக்குத் தெரியாததா எனக்குத் தெரியப் போகிறது?' என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றும். இருப்பினும், இவற்றைப் படிக்கையில் என்னுடைய வட்டத்தை :) விட்டு அவர்களுடைய வட்டத்தில் புகுந்து புரிந்த அனுபவம் உண்டு என்பதை ஆணவமில்லாமல் சொல்லத் தவிக்கிறேன்.

உச்ச இலக்கியம் புதிய பார்வை. நன்றி. சற்று சிந்திக்க வேண்டிய விவரம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

||படிக்கும் போது 'இந்த ஞானிகளுக்குத் தெரியாததா எனக்குத் தெரியப் போகிறது?' என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றும். இருப்பினும், இவற்றைப் படிக்கையில் என்னுடைய வட்டத்தை :) விட்டு அவர்களுடைய வட்டத்தில் புகுந்து புரிந்த அனுபவம் உண்டு என்பதை ஆணவமில்லாமல் சொல்லத் தவிக்கிறேன். ||

என்னுடைய வாதங்களின் கூற்றுக்கள் எல்லாம் உங்களை முன்னிட்டு அதாவது செகண்ட் பெர்சனில் சொன்னது என்று எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எழுதும் போது இருந்தது.

எனது வாதிக்கும் கூறு-ஸ்டைல்-அது.அதாவது உணர வைக்க வாதிப்பது.ஆனால் எதிரில் இருப்பவரை குறைவு படுத்துவது அல்ல.

எனது நம்பிக்கையை இப்போதும் காப்பீர்கள் என்று நினைக்கிறேன்..

சிந்தனையைத் தூண்டிய கேள்விக்கு எனது நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஅடடா! காமத்தில் ஊறி மோகத்தில் திளைத்து கலையழிந்தும்,
முன்வினைப் பேற்றால் கந்தனே தன்னை ஆட்கொண்டும், காமத்தின் வாசனை என்னை இன்னமும் விடவில்லையேஃஃஃஃ

பதிவெங்கும் தமிழ் கொஞ்சி விளையாடுது... அருமையாக இருக்குதுங்க நன்றி...

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி மதி சுதா! அடிக்கடி வாருங்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

காமத்தை நான் ஏன் விட வேண்டும்?
அவள் தான் என்னை விட வேண்டும்??
இங்கு காமம் வேறு..கடவுள் வேறு அல்ல!
காமத்திலும் கடவுளைப் பார்க்கலாம்...
கடவுளிலும் காமம் பார்க்கலாம்...
கற்களே கடவுள் ஆனால், வெறும்
புற்களே பூஜைக்கு வரும், ஒரு
உறையில் உழலும் உணர்வு கூட,
இறை உணர்வாய் மாறி விடும்!
அதற்கு மிக்க பக்குவம் வேண்டும்..
நீங்கள் எல்லாரும் ஒரு நாணயத்தில் இரு பக்கம் என்கிறீர்கள்.. நான் சொல்கிறேன், நாணயம் ஒன்று தானென்று!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சொல்லிக் கொள்ள வெட்கமில்லை...
எனக்கு சிலுக்கு கண்களிலும் சிவன் தெரிகிறான்...

அப்பாதுரை சொன்னது…

beautiful ராமமூர்த்தி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

தாயும்,மகளிலும் ஜீவன் ஒன்று - இது தர்க்கம்!
தாயும்,மகளும் ஒன்றா? - இது குதர்க்கம்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

SEX SCANDAL லில் மாட்டிக் கொண்ட சாமியார்களில்,யோகிகளும் இருக்கலாம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பலர் அனேகம் என்கிறார்கள்...சிலர் ஏகம் என்கிறார்கள்... நாஸ்தி என்பவன் நம்மிலும் உயர்ந்தவன்..இல்லை என்று சொல்வதற்கு அபார மனத்தெளிவும், ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்.. நம்மூர் நாஸ்திகர்களைச் சொல்லவில்லை....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

குழப்பம் வேண்டாம்...குணங்குடி மஸ்தான் படியுங்கள் தெளிந்து விடும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஒரே இடுகையில் அடக்கி விடலாம்..ஆனால், பாதி கூட மனதில் தங்காது..அதற்காகத் தான் ஒவ்வொன்றாய்.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நன்றாகவே உசுப்பி விட்டீர்கள்.. நன்றி..வருகிறேன்.

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே! நல்ல பின்னூட்டங்கள்... பிரிச்சு மேயறது என்பது இதுதானோ! சுவை.

அன்பரே! காமம் என்பது மனிதனின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. பசி, தூக்கம் போல.. இன்னமும் சொல்லப்போனால் பசி, தூக்கத்தைவிட வலிமையானதும் கூட. வேளைக்குத்தான் பசி வரும், சுழற்சியில் தூக்கம் வரும்.. ஆனால் காமமோ மனிதனின் உணர்வுநிலையில் அடிநாதமாய்,ஆதாரமானதோர் ஸ்ருதியாய் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஆண்மையும் பெண்மையும் கலந்தே அடுத்த தலைமுறை உருவாக, பிரஜா உற்பத்தி இடையறாது நடைபெறும் பொருட்டு, இயற்கையால் மனித உணர்வின் ஆதாரமாய்,காமம் ENCRIPT செய்யப் பட்டுள்ளது. ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஈர்ப்பு தன்னிச்சையாய் எழும்படியான ப்ரோக்ராமிங் செய்யபட்டே ஜனனம் சம்பவிக்கிறது. அதில் வெட்கப்படவோ அசூயை கொள்ளவோ ஒன்றுமில்லை.

நீங்கள் குறிப்பிட்டதுபோல், காமமும் கடவுளும் ஒன்றே என உணர்த்தும் வகையிலோ என்னவோ கோவிலில் ஆண்பெண் உறவு சிற்பங்களாய் கோபுரத்திலும் தூண்களிலும் வடிக்கப் பட்டுள்ளதாய்க் கொள்ளலாம். அன்றி, இந்தக் காமத்தை கடந்த பின்னே தான் இறைவனை அடைதல் இயலும் என்பதாயும் கொள்ளவேண்டும் அல்லவா?.

இறைவனை அடைதல் என்பது பக்தி செலுத்துதல் மட்டும் அன்று. அதையும் தாண்டிய ஒருநிலை. அதைத்தான் அறிவன் சார் தெளிவாய் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்லும் நாணயம் ஒன்றுதான் எனினும், அதற்கு இரண்டு பக்கங்கள் இருந்தே தீர வேண்டும். However thinner you slice it, still it has two sides.

என் பிரியத்துக்குரிய எழுத்தாளர் ரா.சு.நல்லபெருமாள் அவர்கள் ‘கேட்டதெல்லாம் போதும்’ எனும் அருமையான நாவல் படைத்திருந்தார்.
‘சித்தார்த்தன் தன் மனைவியையும், அரசையும் துறந்து சென்றான்.. போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்றார்’என்பது நாமறிந்த கதை. வீட்டை விட்டதிற்கும் ஞானம் பெற்றதிற்கும் இடைப்பட்டகாலத்தில் என்ன நடந்திருக்கும் எனும் அவரின் அற்புத ஊகமே இந்நாவல்.

அதில் ஒரு படைத்தளபதியின் பாத்திரம்.... எப்போதும் குடியும், சிற்றன்பமுமாய் வளைய வரும் மனிதன்... அவருக்கும், ஞானம் இன்னமும் அடைய இருக்கும் சித்தார்த்தனுக்கும் முகிழும் நட்பில் விவாதித்துக்கொண்டே இருப்பார்கள். நாவலை நான் படித்து பலகாலம் ஆகிவிட்டபடியால் உரையாடல் அப்படியே கொடுக்க இயலாமல் என் நினைவிலிருந்தே தருகிறேன்.

“சித்தார்த்தரே ! இப்படி உடலை வருத்திக்கொண்டு அன்னாகாரம் இன்றி, பசித்தூக்கம் இன்றி, தியானம் தவமென அமர்ந்திருக்கிரீர்களே? இதனால் யாருக்கு என்ன பயன்?”

“அன்பரே! அலையும் மனதை, அதற்குத்துணை போகும் இந்த உடலைவருத்தி ஒருமுகப் படுத்தத்தான்”.

“ஒருமுகப்படுத்தி என்ன ஆகப் போகிறது”.

“அந்த ஒரு முகப்பாட்டின் அடுத்த கட்டமாய் சிந்தனை அடங்கி, தன் நினைவும் அகன்று ஒரு ஏகாந்தம், ஏதுமற்ற ஒரு பேரானந்தம் தோன்றும். அதை ஒரு கணமேனும் அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்”

தளபதி சிரிப்பான்.. “சித்தார்த்தரே! எனக்கும் அந்த
அனுபவம்தான் தினம்தினம் கிடைக்கிறதே.. இதற்கா போய் உம்மை வருத்திக் கொள்கிறீர்?”

“என்ன? உனக்கும் இது.. அதுவும் தினம்தினம் வாய்க்கிறதா?”

“ஆம். சித்தார்த்தரே! நான் பெண்டிருடன் போகத்தில் ஈடுபடும் போது உறவின் முயக்கத்தில் அடையும் உச்சத்தில் என் நினைவழிகிறேன். யாதொன்றும் என் மனத்தில் நிற்பதில்லை. தன்னை மறைந்த நிலை இது தானா?”

-மேற்கண்ட உரையாடல் என் கைச்சரக்கே. நல்லபெருமாள் ஐயா இன்னுமழகாய்ச் சொல்லியிருப்பார்.

நம் விவாதம் அந்தத் தளபதியின் நிலையில் இருக்கிறது.
அறிவன் சார்! சொல்லவந்தது மிக மேம்பட்ட நிலை.. மீண்டும் பிறப்பிறப்பு எனும் மாயச்சுழல் விட்டு நீங்கும் தன்மையான் காமம் ஒழிக்கச் சொன்ன இறையிலக்கியங்களின் நோக்கம் குறித்து.

பின் குறிப்பு: ஆர்.ஆர்.ஆர்! சிலுக்கின் கண்களில் சிவனைக் காணும் செல்வமே! நான் திருச்சி வரும் போது உம் இல்லத்தில் பஞ்சாயத்துக் கூட்டி உமக்கு தக்க ‘மண்டகப்படி’ ஏற்பாடு செய்ய திருவுளம் கொண்டேன்.! உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி சாரே!

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

||“ஆம். சித்தார்த்தரே! நான் பெண்டிருடன் போகத்தில் ஈடுபடும் போது உறவின் முயக்கத்தில் அடையும் உச்சத்தில் என் நினைவழிகிறேன். யாதொன்றும் என் மனத்தில் நிற்பதில்லை. தன்னை மறைந்த நிலை இது தானா?”
||

பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம் என்றாலும்,முதலில் திரு ஆர்ண்யநிவாஸ் அவர்களிடமும் மீண்டும் ஒரு சுற்று பேச வேண்டும் என்பதால் வாளாவிருந்தேன்..எனினிம் மேற்கண்ட கூற்றுத்தான் சிலுக்கில் சிவம் காணும் அவரது சாரம் என்பதால் ஒன்று மட்டும் சொல்லி விடை பெற விருப்பம்...
அவருக்கு ஒஷோவின் From Sex to Self consciousness என்ற புத்தகத்தைப் பரிந்துரை செய்கிறேன்..இந்த வித மனநிலைக்கு அவசிய வாசிப்புப் பரிந்துரை அது.
தமிழில் காமத்திலிருந்து கடவுளுக்கு என்றும் வந்திருக்கிறது..

இதில் மேலும் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால்..
நன்றி அனைவருக்கும்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழில் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம்...//
Interesting post with comments.

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள அறிவன் சார்! இந்தப் பதிவின் விவாதங்களில் தங்களின் பங்களிப்பு முழுமையாகவும்,சிந்திக்க தூண்டுவதாயும் அமைந்திருந்தது. உங்களுக்கு என் நன்றிகள். அடிக்கடி வந்து உங்களின் கருத்துக்களை தந்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு விடையளிக்கிறேன். மீண்டும் நன்றி.

மோகன்ஜி சொன்னது…

வாங்க இராஜராஜேச்வ்ரி! பதிவையும் நீண்ட பின்னூட்ட சரத்தையும் கண்டு ரசித்ததிற்கு நன்றி மேடம்!

அப்பாதுரை சொன்னது…

சுவையான பின்னூட்டம், மோகன்ஜி.. தன்னை மறக்கும் நிலை பற்றி அஜாதசத்ரு சொல்லியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்.
க்கும்.. இன்னொன்று.. ஆணும் பெண்ணும் கலந்துதான் சந்ததி உருவாக்க வேண்டும் என்பது போன நூற்றாண்டுச் சிந்தனையில்லையோ?

மோகன்ஜி சொன்னது…

பிரிய அப்பாதுரை சார்!

//ஆணும் பெண்ணும் கலந்துதான் சந்ததி உருவாக்க வேண்டும் என்பது போன நூற்றாண்டுச் சிந்தனையில்லையோ?//
வம்பு தானே? வாயக் கிளறாதீங்க! இதற்கு விளக்கம் சொல்ல ஆர்.வீ.எஸ் போன்ற ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே முடியும். ஓவர் டு ஆர்.வீ.எஸ்.

சிவகுமாரன் சொன்னது…

யப்பா.... எவ்வளவு விஷயங்கள். ,, உங்கள் ஒரு பதிவின் பின்னே மோகன் அண்ணா.

அறிவன் சார்... உங்கள் ஞானம் வியக்க வைக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! உன் கருத்து உண்மை.... விவாதிக்க விவாதிக்க வெளிச்சம் கூடுகிறது. அறிவனின் பங்களிப்பை மேலே சுட்டியுள்ளேன். அவர் வருகைக்கு வானவில் பெருமை கொள்கிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

||அவருக்கு ஒஷோவின் From Sex to Self consciousness என்ற புத்தகத்தைப் பரிந்துரை செய்கிறேன்..||
ஒரே ஒரு திருத்தம்,புத்தகத்தின் பெயர் From Sex to Super Consciousness.
தமிழில் காமத்திலிருந்து கடவுளுக்கு.
எனது 20 களில் காமத்தைப் பற்றிய எனது பார்வையைப் புரட்டிப் போட்ட புத்தகம்.

தவறான பெயருக்கு மன்னிக்கவும்.

நன்றி மோகன் சார் மற்றும் சிவக் குமாரன்..

என் பெருமை ஏதுமில்லை.கருவறை வாசனையாக அம்மாவிடமிருந்த வந்தது பெருமளவு..படிக்கும் பழக்கத்தை வளர்த்தவரும் அவரே..எனவே 85 சதம் பெருமை அவருக்கு;எனக்கில்லை.

அவரே உண்மையான படிப்பாளியும் ஞானியும்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

பக்தி இலக்கியங்களை நீங்கள் எழுதிப் படிப்பது தனி சுகம் மோஹன்ஜி.

சூழ்நிலை. உடனே படிக்கமுடியவில்லை.

அருணகிரி அனுபவம்தான் அடுத்தநிலையே தவிர எல்லோருக்கும் அதுதான் வழி என்றில்லை. தீயைச் சுட்டுப் பெற்ற அறிவுக்கும் தீயென்றால் என்னவென்று சுடாமலே பெறும் அரிவுக்கும் உள்ள இடைவெளிதான். அப்படி ஒரு சுற்றுவழியில் வந்து சேருமிடத்தை அடைந்தோமே என்ற ஒரு எரிச்சல் வேறொரு தொனியைக் கொடுத்திருக்கலாம். அவர்களின் காலமும் முக்கியமான காரணமாக இருக்கிறது.

பெண்களின் நிலையும் பெண்கள் பார்க்கப்படும் விதமும் எக்காலமும் மாறாது நாம் விரும்பினாலும்.

பெண்கள் அதிகம் எழுதாததும் அப்பாத்துரை சொல்லும் ஆண் எழுத்துக்களின் ஹிப்போக்ரஸிக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

மொத்தத்தில் காமச்சேறு கமகம சுகந்தமாயிருந்தது.

RVS சொன்னது…

சுட்ட அறிவு பட்ட அறிவு என்று கடைசியாய் வந்து கலக்குகிறார் சுந்தர்ஜி!

அறிவன் -பெயருக்கு ஏற்றாற்போல் அழகன். புத்தகத்திற்கு நன்றி.
அப்பாதுரை - ஜீன்ஸ் போட்ட தமிழ். மற்றவரை சீண்டிப் பார்க்கும் ஷார்ப்பான தமிழ். போன நூற்றாண்டு டெக்னிக் என்று எவ்வளவு அசால்ட்டாக சொல்கிறார்.
மோகன் அண்ணா-என்னை ஏன் மாட்டிவிடறீங்க.. க்ளோனிங் போன்ற விஞ்ஞான உத்திகள் பற்றி நிறைய அப்பாஜி சொல்வார்.

காமத்துடன் இரண்டற கலந்துவிட்டால் சைவத்தின் பெருந் தத்துவமான அத்வைத நிலை கைகூடுமோ... அதைத்தான் சித்தார்த்தனின் தளபதி கூறுகிறானோ..

சிலுக்கில் சிவம் பார்க்கும் மூவார் வீட்டிற்கு அவசியம் ஒரு விஸிட் அடிக்கவேண்டும். ;-))

சார்! இதை ஒரு புக்கா போடலாம் சார். என் போன்றோரின் பின்னூட்டங்களை களைந்து விட்டு..... ;-)

மோகன்ஜி சொன்னது…

அன்பின் அறிவன்!
//கருவறை வாசனையாக அம்மாவிடமிருந்த வந்தது பெருமளவு..படிக்கும் பழக்கத்தை வளர்த்தவரும் அவரே..எனவே 85 சதம் பெருமை அவருக்கு;எனக்கில்லை.//

எவ்வளவு பாக்கியம் செய்தவர் நீங்கள்.பெற்றோர் ஊட்டி வளர்த்த நற்பழக்கங்கள் யாவும் நம் வாழ்வின் அடித்தளமாய் ஆகிப் போகிறது. நல்ல விதைகள் பொய்ப்பதில்லை. அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு, இந்த சின்னதோர் வாழ்வில் நம்மாலான வகையில் உலகைச் செம்மைப்படுத்துவதே.

நல்லவைகள் கூட நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது? அவற்றை நிகழ்த்தும் அத்துணை பேரையும் ஈன்ற தாய்களுக்கு நம் வணக்கம்.

மோகன்ஜி சொன்னது…

பிரிய சுந்தர்ஜி! உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி! வழக்கம் போல் உங்கள் கருத்துக்கள் புதியதாயும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உள்ளன. இவை என்னுள் ஏற்படுத்திய எண்ணங்களை, ஒரு தனி பதிவிற்காய் ஒதுக்கி விட்டேன். அங்கு சந்திப்போம்.

RVS சொன்னது…

அண்ணா! அருணகிரி செஞ்சுரி போட்டுட்டார்! ;-))

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! உங்களுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு நான் போட்ட பதிலைக் காணோமே? மன்னார்குடி மேஜிக் ஏதோ காட்டுவீங்கன்னு பார்த்தா க்லோனிங்க்ன்னு ஜகா வாங்கிட்டீங்களேன்னு போட்டுருந்தேன். விடுங்க!
அட ஆமாம்! அருணகிரி சதம் தான் அடிச்சிருக்கார் !

அப்பாதுரை சொன்னது…

பெண்கள் அதிகம் எழுதாதும் காரணம் - மிகச்சரி சுந்தர்ஜி.
கருவறை வாசனையாக வந்தது - நினைத்து நினைத்து ரசிக்கிறேன் அறிவன்.
ஜீன்ஸ் போட்ட தமிழ் - அமர்க்களம் RVS (மூவார் வீட்டுக்கு நானும் வரேனே..)

நூறு பின்னூட்டம் ரெகார்டா? பின்னுங்க மோகன்ஜி. பதிவையும் பின்னூட்டத்தையும் படிச்சு கமென்ட் போடணும்னு நெனச்சு போடாத ரெண்டு சோ இல்லை பேரை எனக்குத் தெரியும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//முத்தைத்தரு பத்தி திருநகை//
ஆயிரம் முறை இந்த பாடலை கேட்டிருப்பேன்... நான் மிகவும் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று... இந்த பின் கதை நான் கேட்டதில்லை... நன்றி பகிர்ந்து கொண்டதற்கு...

என்றென்றும் உங்கள் எல்லென்... சொன்னது…

சரள நடையில் அருணகிரி அழகாய் வலம் வந்தார்...பின்னூட்டங்களும் ரசிக்கத்தக்கனவாயும், ப்ரமிக்கவைப்பனவாயும் அமைந்தது எம்மைப் போன்றோர்க்கு ’கல்யாண சமையல் சாதம்’வாழ்க...வள்ர்க...

geetha santhanam சொன்னது…

மிகத் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.அருண்கிரி நாதரைப் பற்றிய பதிவு சுவை என்றால் பின்னூட்டங்கள் மேலும் சிறப்பாக இருந்தன. அறிவன், துரை மற்றும் 3ஆர் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின. அதெப்படி அடிக்கடி இப்படி ஒரு சுவாரஸ்யமான விவாத மேடையை உருவாக்குகிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

உங்கள் கருத்து மிகச்சரி அப்பாதுரை சார்! நூறோ ஆறோ கும்மியல்லவா நமக்கு முக்கியம்?!

மோகன்ஜி சொன்னது…

அப்பாவி மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

மோகன்ஜி சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி லட்சுமிநாராயணன் சார்..

மோகன்ஜி சொன்னது…

வாங்க கீதா மேடம்! உங்கள் ரசனைக்கு நன்றி! விவாதிக்கப் பட்ட விஷயம் மிகப் பரந்ததும் ஆழமானதும் ஆகும். இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, விரைவில் வேறொரு பதிவும் இடுவேன்.

அடுத்ததாய் கொஞ்சம் ஜாலியாய் 'கணவக்கத்தரி' என்று போட்டிருக்கிறேன். படித்து விட்டு அடிக்க வராதீர்கள் ப்ளீஸ்!

Geetha Sambasivam சொன்னது…

தாமதமாய் வந்ததால் அறிவன் அவர்களின் அருமையான விளக்கங்களையும் மற்றப் பின்னூட்டங்களையும் படித்துத் தெளிந்தேன். சிவலிங்கம் குறித்து நானும் ஒரு சிறு பதிவு போட்டிருக்கிறேன். பொதுவாக அனைவரும் நினைப்பது போல் சிவலிங்கக் குறியீடு இல்லை என்பதைக் குறிக்கும் பதிவு. அருணகிரியின் வாழ்க்கையைப் படித்திருக்கிறேன். படமாயும் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் எழுத்தின் தாக்கம் அதில் இருந்ததா என்றால்!! இல்லை! எழுத்தின் தாக்கத்தாலேயே இத்தனை வாதப் பிரதிவாதங்கள்!

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு இன்று ஒரு பாராட்டு கிடைப்பது உற்சாகமாய் இருக்கிறது. 'நல்லபிள்ளையைத் தான் பெத்திருக்கே' என்று சொல்லக்கேட்ட தாயின் உற்சாகம்.

இந்த பதிவிற்கு அழகு சேர்த்த வாதப்பிரதிவாதங்கள்... அவற்றை மேற்கொண்ட நண்பர்கள் அப்பாதுரை,அறிவன்,ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ... இந்த விவாதங்களின்போது வந்த அழைப்புகள்... நிறுத்திக் கொள்வோம் என்றே ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டு நிறுத்திய விவாதங்கள்.

சில நாட்களுக்குப்பின்னர் 'கடவுள் பார்க்காத காமம்' என்று ஒரு நீண்ட பதிவை எழுதியிருந்தேன். பக்தி இலக்கியம் பற்றிய உக்கிரமான அலசலாயிருந்தது. ஏனோ அதை பதிவிடத் தயங்கி விட்டு விட்டேன்.

இதே நேரத்தில் ஆன்மீக பதிவுகளுக்கென்றே ஒரு வலைப்பூ தொடங்க முற்பட்டேன். பணிச்சுமையின் பயத்தில் அது அந்தரத்தில்.....

இப்போது கூட தொடங்கலாம்... நேரமும் சற்று இருக்கிறது... அண்மையில் நண்பர்கள் இருவர் முக நூலில் ஆன்மீகப்பக்கம் தொடங்க வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கென்னவோ முகநூல் பதிவுகள். அன்னியமாயும் ஆயாசமாயும் தோன்றுகிறது. நன்றி மேடம்!


Geetha Sambasivam சொன்னது…

//சிவலிங்க தத்துவமே அதுதானே! //

சிவலிங்கம் குறித்த என் சிறிய விளக்கத்துடன் கூடிய பதிவு

http://sivamgss.blogspot.in/2010/04/blog-post_08.html