வியாழன், ஜூன் 23, 2011

பதிவுலகில் கிசுகிசு


பத்திரிகைகளில் கிசுகிசுக்களைப் படித்தவுடனே அது யாரைப் பற்றியது என்று கண்டுகொள்ளும் அறிவுஜீவியா நீங்கள்? எனக்கு அவ்வளவு சமர்த்து பத்தாதுங்க. தங்கமணி சொல்லும்போதுதான் "அட!அவங்களா?" என்று வாய்பிளக்கும் அப்புராணி நான்.

படிச்சாதான் புரியாது? கிசுகிசு எழுதியாவது பார்த்துடுவோமேன்னு ஒரு முயற்சி. எழுதும் முயற்சியில் இன்னமும் முயலாதது கிசுகிசு மற்றும் கழிப்பறை சுவர் கிறுக்கல் இரண்டுமட்டும் தானோ?!. இதில் சம்பந்தப்பட்டவர்கள் என் இதயத்துக்கு மிக நெருக்கமான பதிவர்கள். என் நையாண்டியை ரசிப்பவர்கள். எனவே இந்தப் பதிவை நகைச்சுவையாக ரசிக்கவும். இனி நீங்களாச்சு.. அவிய்ங்களாச்சு ..

கிசுகிசு 1

பலகடவுளர்களையும் பற்றி கலர்கலராய் எழுதும் ஒரு பதிவர் ,தன்னைப்பற்றி மட்டும் பதிவிடாமல் இருட்டடிப்பு செய்வதாய் ஸ்ரீராமபிரான் குமுறுகிறாராம். "லச்சு! என்னான்னு விசாரி!" என்று இளவலுக்கு கட்டளை இட்டிருக்கிறாராம்.... 'தாமரை' போன்ற கண்ணுடைய இராமருக்கே இந்த கதி!

கிசுகிசு 2

சரசரவென்று பதிவுக்குமேல் பதிவு இறக்கி,வலையுலகைக் கலக்கும் ஒரு மைனர், நள்ளிரவு தாண்டியும் லைட்டை எரியவிட்டுக் கொண்டு பதிவுபோட்டபடி அட்டகாசம் செய்தாராம்.பொறுக்கமுடியாத தாய்க்குலம்,"உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்று காய்ச்சி விட்டாராம். அதனால், இப்போதெல்லாம் சத்தம் போடாமல் தன் புதுக்காருக்குள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கொண்டு சத்தம்போடாமல் மடிக்கணணியில்   பதிவிடுகிறாராம். விரைவில் இவருக்கு மண்டகப்படி கிடைக்கலாம் என்று தாய்க்குல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிசுகிசு 3

இந்திரதனுசு வலைக்காரருக்கும்,சூர்யாப்பாவின் பெயர்கொண்ட பதிவருக்கும் ரொம்ப ஒற்றுமையாம். அண்ணனுடன் பலவகையிலும் ஒத்துபோகும் கவித்தம்பி , இப்போதெல்லாம் அண்ணனைப் போலவே ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் தான் வலைப்பக்கம் வருகிராராம். நமசிவாயம் நமசிவாயம் ... 

கிசுகிசு 4

காமனானாலும் காலனானாலும் இந்தப் பதிவர் கையில் தவிடுபொடிதான் . அண்மையில் ஒபாமா நாட்டிலிருந்து தமிழ்நாடு வரும்வழியில், நிஜாம் ஆண்ட தெலுங்குநகரில் இறங்கி,மோகனமான சகப்பதிவரை சந்திப்பதாய் திட்டமாம். ஆனாலும்,விமானத்திலே தூங்கிவிட்டதால்,தெலுங்கு விமானநிலையத்தில் இறங்காமல் கோட்டைவிட்டாராம். விமானப் பணிப்பெண்ணோ,"அப்பா! இப்படியா தூங்குவாரு இந்த துரை?" என்று கேப்டனிடம் சொல்லிசொல்லி சிரித்தாராம். வல்லவரை சந்திக்க முடியாமல் வானவில் வாடிவிட்டதாம்.

கிசுகிசு 5

ததரினனனா... என்று ராகம் போட இன்னொரு வலைப்பூவையும் வைத்திருக்கும் மூணாறு பார்ட்டி,  கீர்த்தனைக்கு இப்போதெல்லாம் அதிகம்அஞ்சலி செய்வதில்லையாம். கேட்டால் இதுக்கே வீட்டுல பாட்டு... அதுக்கு நேரமில்லைன்னு கைவிரிக்கிராராம். கீர்த்தனம் பாட எல்லோருக்கும் வாய்க்குமா? என்று பலரும் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

கிசுகிசு 6

ஒரு கொம்புக்காரப் பதிவர்,கதைகளில் எப்போதும் அதகளப் படுத்துவாராம். எல்லாக் கதைகளும் சிறப்பாய் அமைவதற்கு காரணம், பதிவிடும் போது நவீனமான சாப்ட்வேர் உபயோகிக்கிறாரோ என்று சந்தேகம் மலைக்கோட்டையில் எதிரொலிக்கிறது.

கிசுகிசு 7

கவிதை,காளமேகம் என்று வலையில் வூடு கட்டும் சுந்தரமான பாண்டிச்சேரி பார்ட்டியை, கடலூர் வரைக்கும் அண்மையில் சென்றவர் சந்திக்காமலே திரும்பிவிட்டாராம். கைப்பேசியை விட்டுவிட்டு சென்றதினால்தான் தொடர்பு கொள்ள இயலவில்லையாம். விஷயம் தெரிந்தால் கையால் அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று ஆந்தரா பார்ட்டி பம்முகிராராம்.  மேட்டர் தெரிந்த மன்னை மச்சினருக்கு கடலை உருண்டை வாங்கிக் கொடுத்து விஷயம் வெளியே தெரியாமல் அமுக்கிவிட்டாராம். அட தேவுடா!

கிசுகிசு 8

சுரங்க நகரிலிருந்து தலைநகர் போன பதிவரும் அவரது சம்சாரமும் பதிவுலகில் தடம் பதித்துவரும் ஆதர்ச தம்பதிகளாம்.  தங்கமணி பதிவிடும் நாளில் யாரு சமைக்கிறார்கள் வீட்டில் என நமது பட்சிக்கு சந்தேகம்....  வேணா.. வெநா... நல்லநல்லப் பதிவுகளாய் போட்டு இப்போதுபோல் எப்போதும் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்தினால் சரிதான்!

கிசுகிசு 9

குழலூதும் கண்ணனிவர்.. கொஞ்சம் வயதானாற்போல் படத்தைப் போட்டுவிட்டு, அந்தகாலத்துலே என்று எழுதுவதெல்லாம் ஒரு பில்டப் தானாம். உண்மையில் வால்லிப வய்யசு ஆள் தானாம். எப்படி என்றுகேட்டால்,' பதிவில் துள்ளும் இளமையே சாட்சி' என்று பட்சி தலையில் அடித்து சத்தியம் செய்கிறது. 

கிசுகிசு 10

பாலைவன பாபாவின்  அமைதிக்குக் காரணம் ஆணி இல்லையாம்.. சத்தம் போடாமல் ஒரு பெரிய சரித்திரநாவல் எழுதி வருகிறாராம். பெயர் கூட "பாலைச்சுறா" என்று முடிவு செய்திருக்கிறாராம். எழில் உச்சிகள், லாவண்யங்கள் என்று பிளந்துகட்டப் போகிறாராம்.. துபாய்க்குப் போனபோது  குலோத்துங்கன் செய்த போர்களும், போன பார்களும் பின்னணியாய்  வைத்து  கலக்கிவருவதாய் நம் பாலைக்கிளி தரும் தகவல். 


யார்யார்ன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!


88 comments:

நிரூபன் சொன்னது…

பதிவர்களைப் பற்றிய விவகாரமான விடயங்களை நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீங்க...

யார் யார் என்று கண்டு பிடிக்கலாம், ஆனால் ஆட்டோ அனுப்புவாங்களோ என்று பயமா இருக்கு பாஸ்;-))

மோகன்ஜி சொன்னது…

நிரூபன் சார்! கண்டுபிடிக்கிற உங்களுக்கே ஆட்டோன்னா, எழுதின எனக்கு எதைஎதை அனுப்புவார்களோ.. ரொம்ப நாளா என்னை "இவன் ரொம்ப நல்லெவண்டா" என்று வேறு சொல்லி வருகிறார்கள்.. ப்ரீயா இருக்கியான்னு போன் போட்டு ஊருக்கு ஊர் அனுப்பப் பொறாங்கப்பு !

அப்பாதுரை சொன்னது…

1,6,8 தெரியவில்லை
சில கிகி மட்டும் எகுஇ பாணியில் இருக்குதே?
வித்தியாசமான பதிவு. சுவாரசியம் போங்க.

அப்பாதுரை சொன்னது…

8ம் தெரிந்தவன்.

ஹேமா சொன்னது…

மோகண்ணா ஜீ... சுந்தர்ஜி,அப்பாஜி,ஆர்.வி.எஸ் ஜீ !

அப்பாதுரை சொன்னது…

ஹேமாவைப் பத்தி ஒரு கிகி போடுவீங்கனு பார்த்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

10 இல் 5 மட்டுமே யூகிக்க முடிகிறது.

[அதாவது 1, 6, 7, 8 & 9 மட்டும் எனக்குத்தெரிகிறது. So 50% அதாவது Pass Mark தான்]

இது நல்லதொரு வித்யாசமான முயற்சி தான். தொடருங்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நாற்பது மார்க் எனக்கு....விடையை வெளியில் சொன்னால் அதுவும் இருபது முப்பதாய் குறைந்து விடுமோ என்று சொல்லவில்லை! முடிவுகள் வெளியானதும் செக் செய்து கொள்ள வேணும்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டு முழுவதும், ஒன்றில் பாதியும் [இந்திரதனுசு வலைக்காரர்] யூகிக்க முடியவில்லை. நல்ல கி.கி. நகைச்சுவையாக இருந்தது ஜி! சந்தடி சாக்கில் நம்மையும் கிசுகிசுவில் மாட்டி விட்டீங்களே ஜி! :)

பத்மநாபன் சொன்னது…

சரச் சரச்ன்னு இவ்வளவு கிசு கிசு எழுதிட்டிங்க ... பெரும்பாலானவை எல்லாம் நம் நண்பர்கள் என்பதால் தெரிந்து விட்டது ..எழுதிய பாணி அருமையாக இருந்தது ... பத்தாம் நபர் இனிமேல் அப்படி கூட பில்ட் அப் குடுத்துட்டு தூங்கலாம் ...

RVS சொன்னது…

பாலைச்சுறா வெளியீடு எப்போது? எவ்வளவு நாள் தான் உள்ளூர் இறாக்களை எழுத்தில் பார்ப்பது....
மோகனண்ணா... எது எழுதினாலும் கலக்கறேள்!!! ;-)

(கமெண்ட்டுகள் தொடரும்....)

RVS சொன்னது…

ஆந்த்ரா பார்ட்டி பம்முவது பாய்வதற்குதான் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்களாம்.. ;-)))

(கமெண்ட்டுகள் தொடரும்....)

RVS சொன்னது…

விமானப் பணிப்பெண் மற்றொரு விமான நிலையத்தில் கண்ட அழகி போல இருந்தால் தூங்காமல் இருந்திருப்பாராம்... கழுகார் சொல்லிவிட்டு பறந்துவிட்டார்...


(கமெண்ட்டுகள் தொடரும்....)

RVS சொன்னது…

தோளில் குழந்தையை தாலாட்டும் பதிவரே... கொம்புக்கார பதிவர்.... முயலுங்கள் பார்க்கலாம்.. இவருக்கு காற்று ரொம்ப பிடிக்கும்.... ;-))

(கமெண்ட்டுகள் தொடரும்....)

பத்மநாபன் சொன்னது…

சும்மாவே குதிக்கும் பதிவர் ..உசுப்பினால் 100 ல் அல்லவா பறப்பார் புதுக்கார் பதிவர் ...

பத்மநாபன் சொன்னது…

எவ்வளவு உசுப்பினாலும் குறட்டை விட்டு கொண்டிருப்பவர் , சரித்திரம் என்பதை கேட்டவுடன் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டுவிட்டாராம் ..

பத்மநாபன் சொன்னது…

கனவில் மரிஷ்கா வருவாள் என தூங்கிஇருப்பார் ..ஆனால் வந்தது தேவிகா ...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பதிவுலகிலும் கிசுகிசுவா ஆஞ்சு போய் ஆஞ்சிட்டு வா என்று தாமரைக்கண்ணன் ராமன் ஆணையிட்டமாதிரி தெரிகிறதே.

பத்மநாபன் சொன்னது…

அண்ணன் கதையில் உருக்கம் தம்பி கவிதையில் உருக்கம் ...... ஆனால் காதல் என்று வந்துவிட்டால் இருவருக்கும் கொட்டும் வார்த்தைகளில் நெருக்கம்

G.M Balasubramaniam சொன்னது…

நீங்கள் கிசுகிசு எழுதி அசத்துகிறீர்கள் நான் அனுமானங்கள் என்று எழுதியிருந்தேனே. படித்துப் பார்த்து கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.

ADHI VENKAT சொன்னது…

கிசுகிசுக்கள் சூப்பர். ஒன்றும், மூன்றில் பாதியும் யூகிக்க முடியவில்லை சார்.
உங்களுக்கா பத்திரிக்கையில் வரும் கிசுகிசு புரிய வில்லை!!!!!!!!
என்ன கொடுமை சார்!!

ரிஷபன் சொன்னது…

முதல்ல கைய கொடுங்க..
கிசுகிசு பாணில கலக்கிட்டிங்க..

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோஹன்ஜி! படித்ததிலிருந்து மண்டையை உடைத்து கொண்டிருக்கிறேன் அந்த ஏழாவது கிசுகிசுவில் உள்ள ஆந்திரா பார்ட்டியையும் அவர் சந்திக்காமல் போன சுந்தரமான பாண்டிச்சேரி பார்ட்டியையும் கடலை உருண்டையை அமுக்கிய மன்னை மச்சினரையும் மட்டும் கண்டுபிடிக்க முடியலை.

சொல்ப எல்ப் ப்ளீஸ் மோகன்ஜி.

பெயரில்லா சொன்னது…

ஐய்யா..எனக்கு ஆறு தெரியும்..அப்ப அறுபது மார்க்! மோகனா மிஸ்..மோகனா மிஸ்...என் சிலேட்டுல, வெரி..வெரி..குத் போடுவீங்களாம்...!!

sridar57 சொன்னது…

ஐயையோ..அது நாந்தேன்!!!

Admin சொன்னது…

உங்களைப்பற்றியும் கிசு கிசு போகிறதே அது உங்களுக்குத் தெரியாதா?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!

கிசுகிசு யாரைப்பற்றி என்று சொல்லிவிடுகிறேன்.
1.இராஜராஜேஸ்வரி
2.ஆர்.வீ.எஸ்.
3.வானவில் மனிதன்-சிவகுமாரன்
4.அப்பாதுரை
5.ஆர்.ஆர்.ராமமூர்த்தி
6.ரிஷபன்
7.சுந்தர்ஜி
8.வெங்கட் நாகராஜ்-ஆதி
9.வை.கோபாலகிருஷ்ணன்
10.பத்மநாபன்

எ.கு.இ பாணியிலேயே மூணு கோட்டைவிட்டுட்டீங்க.
கொஞ்சம் லகுவா இருந்தா நல்லாருக்கும்னு தான் எ.கு.இ!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி!
/8ம் தெரிந்தவன்//
நாளும் தெரிஞ்சவனையே தலைல வச்சுகிட்டு ஆடுவாங்க. நீங்களானா எட்டும் தெரிந்த ஏகாம்பரமாய் இருக்கீங்க பாஸ்.

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! மேலே லிஸ்ட் போட்டிருக்கேன். ஹேமா பற்றி ஏன் ஒண்ணும் சொல்லைலன்னு அப்பாதுரை கேக்குறார். தனியா ஒரு பதிவே போட்டுட வேண்டியது தான்.

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்!உங்களைப் பத்தி போட்டுட்டேன்னு ஆட்டோ ஏதும் தயார் பண்ணிடாதீங்க தலைவரே!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! நாற்பது தேறிடிச்சா?

மோகன்ஜி சொன்னது…

இந்திர தனுசு=வானவில்.. நாந்தேன்!

இன்னிக்கு என்ன சமையல் தல?

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பத்துவுக்கு 'பத்து' நம்பரைக் கொடுத்த என் புத்திசாலித்தனத்துக்கு சபாஷ் சொல்ல மாட்டீங்களா?
நிஜமாத்தான் கேக்குறேன் 'பாலைச்சுறா' நாவல் எப்போ வெளியாகும்? படமா எடுக்க ஆல் ரெடி. எனக்கும் எதுனாச்சும் ரோல் குடுக்கணும் சொல்லிட்டேன்.

24 ஜூன், 2011 10:45 pm

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! உங்கள் காமேன்ட்டேல்லாம் அருமை.. காற்றை ரொம்பப் பிடித்த பதிவரா? யாருன்னு கொடைஞ்சுகிட்டு இருக்கேன். சிக்க மாட்டேங்குதே!

மோகன்ஜி சொன்னது…

//சும்மாவே குதிக்கும் பதிவர் ..உசுப்பினால் 100 ல் அல்லவா பறப்பார் புதுக்கார் பதிவர் //
பத்மநாபன்.. சரியாச் சொன்னீங்க.
அவரு கார்ல வர்ற அழகைப் பாக்கணுமே. இராஜராஜசோழன் தேரில் பவனி வருவது மாதிரி!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! அப்பாதுரையாருக்கு சரித்திரம் என்றால் பிடிக்காதா? விரைவில் ஒரு சரித்திர சிறுகதை எழுதி அவரை என்ன செய்யறேன் பாருங்க.

மோகன்ஜி சொன்னது…

ராஜேஸ்வரி மேடம்!ஆஞ்சி வந்தாலும் அஞ்சாம பதிவுகள் போடுங்க.. ஆஞ்சி நம்ம ஆளு!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்!
//அண்ணன் கதையில் உருக்கம் தம்பி கவிதையில் உருக்கம் ...... ஆனால் காதல் என்று வந்துவிட்டால் இருவருக்கும் கொட்டும் வார்த்தைகளில் நெருக்கம்//
கவிதையாயில்ல இருக்கு நீங்க சொல்றது, பாலைசாண்டில்யரே!

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! உங்கள் அனுமானங்களை படித்துவிட்டு வருகிறேன்..

மோகன்ஜி சொன்னது…

ஆதி மேடம்! உங்களையுமில்ல வம்புக்கு இழுத்திருக்கிறேன்.. கோவிப்பிங்களோ?

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! உங்க சாப்ட்வேரை எனக்கும் கொஞ்சம் தாங்களேன் !

பத்மநாபன் சொன்னது…

பத்துக்கு பத்து சபாஷ்...


//அப்பாதுரையாருக்கு சரித்திரம் என்றால்// இதிகாசங்களையே பிரித்து மேய்பவருக்கு சரித்திரம் பிடிக்காமலா போகும்.. போர்வை பார்ட்டி நானே ...சுய எள்ளல்...

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! நானாத்தான் உளறிட்டேனா?
பத்து நாட்களுக்கு முன் கடலூருக்கும் , புதுவைக்கும் வந்திருந்தேன். என் கைபேசியை சென்னையிலேயே விட்டுவிட்டதால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அடுத்தமுறை அவசியம் சந்திப்போம்..
கோச்சுக்காதீங்க !

மோகன்ஜி சொன்னது…

அன்பு பெயரில்லா!
அம்மா! நான் பாசாயிட்டேன்னு பாசமோடு சொல்றீங்க.. வருகைக்கு நன்றி நண்பரே!

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீதர் சார்! என் உங்கள் வலைப்பூ தெரிய மாட்டேன் என்கிறது ?

மோகன்ஜி சொன்னது…

சந்ரு! உங்கள் பதிவைப் படித்து ரசித்தேன்.. சாவகாசமாய் பிற பதிவுகளைப் பார்க்கிறேன்..

//உங்களைப்பற்றியும் கிசு கிசு போகிறதே அது உங்களுக்குத் தெரியாதா//
எனக்கு தெரியலையே.. எங்கன்னு சொன்னீங்கன்னா பார்த்து வரவசப் படுவேனில்லையா?... கொஞ்சம் லிங்க் குடுங்களேன் சந்ரு!

Admin சொன்னது…

//மோகன்ஜி கூறியது...

சந்ரு! உங்கள் பதிவைப் படித்து ரசித்தேன்.. சாவகாசமாய் பிற பதிவுகளைப் பார்க்கிறேன்..

//உங்களைப்பற்றியும் கிசு கிசு போகிறதே அது உங்களுக்குத் தெரியாதா//
எனக்கு தெரியலையே.. எங்கன்னு சொன்னீங்கன்னா பார்த்து வரவசப் படுவேனில்லையா?... கொஞ்சம் லிங்க் குடுங்களேன் சந்ரு!//

என் பதிவுக்கு நீங்கள் வந்ததில் சந்தோசம்... நன்றிகள்..

என்ன ஜோக்காகத்தான் உங்களைப்பற்றி கிசு சிசு என்று சொன்னேன்...

என் வலைப்பதிவு பக்கம் வந்ததாக கிசு கிசு உண்மையா?

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! அப்பாதுரை ஒரு ஜென்மத்துல தலைமைப் புலவராக ஒரு மாமன்னரோட இருந்திருப்பாரோ! அவர் வெண்பாவை சமைக்கும்நேர்த்தி... அற்புதம்..

மோகன்ஜி சொன்னது…

உங்கள் நகைச்சுவை நன்றாக இருக்கிறது சந்ரு.. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்களுடன் ..

அப்பாதுரை சொன்னது…

விடைகளுக்கு நன்றி மோகன்ஜி. ஆனா பத்துக்கு எட்டு முதல் சுத்துலயே கண்டுபிடிச்சுட்டேன். #1 இப்ப நீங்க சொன்னதுக்குப் பிறகு புரியுது - ராமபிரான் கனெக்சன் சிக்குது ஸ்டில். rvs கொடுத்த க்ளூ வச்சு ரிஷபனும் கண்டுபிடிச்சுட்டேன். நான் எகுஇ சொன்னது சில கிகிக்கு மட்டுமே. ஆனா நீங்க சொல்றாப்புல அதுலயே ததிங்.

அடுத்த கிகில இவங்களைப் பத்தி போட்டுறுங்க:
- எங்கள் பிளாக்
- எல்கே
- ஹேமா
- சாய்ராம் கோபாலன்
- அப்பாவி தங்கமணி (இட்லிராணினு ஒரு பேராமே அவங்களுக்கு?)
- ஆதிரா (என்ன ஆனாங்க? வீட்டுல எலி வளக்காதிங்கனு சொன்னா கேட்டா தானே?)

அப்பாதுரை சொன்னது…

வரலாற்றுப் புனைவா? பலே பத்மநாபன்!

அப்பாதுரை சொன்னது…

கனவுல தேவிகா வந்தா அவசியம் சொல்றேன். ஏதோ பதிவு போட்டோம்னு கொஞ்சம் தேடிப் பாத்தா, தேவிகா இறந்து போன விவரம் தெரிய வந்தது. கொஞ்சம் வருத்தம். அதற்கு மேல் கொஞ்சம் வலைப் பிறாண்டியதில் கனகா பற்றித் தெரிந்து கொண்டேன் (rvsஆ கொக்கா); அது சுவாரசியமான மர்மக் கதையா இல்லே போயிட்டிருக்கு? ரெண்டு நாளா இணையத்துல எல்லாம் தேடிப் படிச்சுட்டேன். கனவே வேணாமுங்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மோகன்ஜி அந்த ஸ்ரீதர் நாந்தேன்!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

அப்பாதுரை சொன்னது…

சரித்திரம் பிடிக்கும் பத்மநாபன். சாண்டில்யன் பிடிக்கும்.
கிடப்பில் கிடக்கும் சரித்திரப் பெருங்கதையைத் தூசு தட்டி வெளியிட எண்ணமும் உண்டு.

எல் கே சொன்னது…

அப்பாடி நான் மாட்டலை எஸ்கேப் ... ஓடி போய்டு கார்த்தி

பத்மநாபன் சொன்னது…

//கனவே வேணாமுங்க. //

அதுக்காக தூங்காம இருக்க முடியுமுங்களா ?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

பத்து சாருக்கு பத்தாம் நம்பரை ஒதுக்கின புத்திசாலித்தனத்தை நானும் ஆர்விஎஸ்ஸும் நேத்திக்கி ராத்திரியே சிலாகிச்சுட்டோம். போதுமா மோஹன்ஜி.

அப்புறம் காற்றை ரொம்பவும் நேசிக்கும் பதிவர் ரிஷபன் தான்.வேற யாருமில்ல.

தினேஷ்குமார் சொன்னது…

ஐயா சூப்பர் கிசுகிசுக்கள் ...

கீரி கொக்கரிக்க
கோழி கண்விழிக்க
மானே உன்னை
காணோம்னு சொன்னேனே .....

இது யாருன்னு கண்டுபிடிங்க ....

தினேஷ்குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தினேஷ்குமார் சொன்னது…

ஐயா தாங்கள் சொன்னது போல் எல்.கே அவர்கள் அழைத்த கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட எம்வரிகள் முதலிடம் பிடித்துள்ளன ..

http://kavisolaii.blogspot.com/2011/06/blog-post_24.html

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா , ஆடி முடிஞ்சு அமாவாசைக்கு வந்துட்டேன். ரெண்டு கையிலயும் ஆணி, சுத்தி, கவட்டைக்குள்ளே கொறடு.... அண்ணா.. எப்படி எழுதறதாம், பின்னூட்டம் இடுறதாம்.... சொல்லுங்கண்ணா .,

சிவகுமாரன் சொன்னது…

சொன்னா நம்புவீங்களா அண்ணா , நான் பத்தையும் கண்டுபிடிச்சிட்டேன்.என்ன பண்றது , கடைசியா வந்து பார்த்தா , எல்லோரும் பந்தியை காலி பண்ணிட்டு கெளம்பிட்டாக .

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சாய்ராம் கோபாலன் சொன்னது…

1.இராஜராஜேஸ்வரி
2.ஆர்.வீ.எஸ்.
4.அப்பாதுரை

சாய்ராம் கோபாலன் சொன்னது…

3.சிவகுமாரன்

சாய்ராம் கோபாலன் சொன்னது…

பத்தில் நாலு தான் கரீட்டு.நாப்பது மார்க் பாஸ் என்பதால் மிச்சமெல்லாம் சாய்ஸ் கேள்விகள். சக நண்பர்கள் எடுத்துக்கொள்ளட்டும்

இந்த தேவிகா புரணாம் இங்கயுமா ?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.

ராமர் பதிவு போட்டுவிட்டேனே இன்று. பார்த்தீர்களா? பார்த்தீர்களா??

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! உங்கள் வேண்டுகோள் படி இன்னமும் கொஞ்சம் கிசுகிசு போட்டிருக்கேன்.. சொதப்பாம கண்டுபிடிங்க...

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்னு கேட்டானாம் சண்டப் பிரசண்டன்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! கலைஞர்களின் தனிவாழ்க்கை ஏனோ பிரச்னைகள் நிறைந்ததாய்ப் போய் விடுகிறது. தெலுங்கு, கன்னட,மலையாள தேசத்து நடிகைகள் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது,தனக்கென ஓர் இடம் பிடித்த அசல் தமிழ் நடிகை தேவிகா.

மோகன்ஜி சொன்னது…

மூவார்! சட்டுன்னு ஸ்ரீதர் நீங்கன்னு தோன்றவில்லை .. ஸாரி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! உங்ககிட்டையும் ஒரு சரித்திர நாவல் இருக்கா? நானும் ஒன்றை பலவருடங்களுக்கு முன் எழுதி ஒரு கட்டை, பரணில் போட்டிருக்கிறேன்.. கொஞ்சம் காதல் தூக்கலாய் எழுதியிருந்தேன். வயசு அப்படி...

ரொம்பவும் புத்தகங்களையெல்லாம் படித்து இழைத்திருந்தேன்..

சாண்டில்யன் கதையை ரசிக்கவேண்டும் என்றால், அந்தக் கதையை முதல்முறையாகப் படித்த வயசுக்கே நாம் மீண்டும் அந்தமனநிலையில் நின்று படிக்க வேண்டும்..அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி, மற்றும் நா.பா வின் மணிபல்லவம் படித்திருக்கிறீர்களா?

மோகன்ஜி சொன்னது…

அன்பு கார்த்திக் அவ்வளவு சுலபமா உங்களை விட்டுறுவோமா? இன்னொரு பதிவு போட்டிருக்கேன் இன்று.. போய்ப் பாருங்க பாஸ்!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் ! கனவே வேணாமா? நான் தூங்கப் போறதே கனவுகாணத்தான்..

மோகன்ஜி சொன்னது…

தினேஷ்! ஒண்ணும் பிடிபட மாட்டேங்குது மாப்ளே! வேற யாராவது சொல்றாங்களான்னு பாக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! ரிஷபனைப் பற்றி போட்டுவிட்டதால் வேற யாரோன்னு முழிச்சிகிட்டிருந்தேன்..

மோகன்ஜி சொன்னது…

தினேஷ் ! பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

மோகன்ஜி சொன்னது…

என் ப்ரிய சாய்! ரெஸ்ட் எடுங்கன்னு உங்களை சொன்னா கேட்க மாட்டேங்குறீங்க! இன்னிக்கு ஒரு பதிவு போட்டு உங்களையும் கலாய்ச்சிருக்கேன்.. கோச்சுக்காதீங்க தல!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! நீயும் என்னைமாதிரி ஆகிட்டு வரேன்கிற ஆதங்கத்தில் தான் அப்படி கிசுகிசு போட்டேன்..

இதில ஒரு ஆணிப்பாட்டு ஒண்ணு போட்டிருந்தேன் பார்த்தாச்சா?

அடுத்த கிசுகிசுவும் போட்டாச்சு.பார்க்கவும் தம்பி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஹா ஹா ஹா... செம ரகளை சார்... very innovative ... உங்களுக்கு எப்படி இப்படி எல்லாம் ஐடியா வருதுனு துப்பறிய ஒரு படை உங்கை வீட்டை சுற்றி முற்றுகை இட்டு இருக்காங்களாம்... முடிஞ்சா யாருன்னு கண்டுபிடிங்க...:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

-

பாரதசாரி சொன்னது…

வழக்கம் போல் பூஜ்ஜியம் :-) மிகவும் ரசித்தேன் ஆனாலும் :-)

மோகன்ஜி சொன்னது…

நன்றி தங்கமணி... யாரு முற்றுகை இட்டிருப்பாங்க... சுத்துதே

மோகன்ஜி சொன்னது…

தங்கமணி காரு! ஒண்ணுமே சொல்லாம ஒரு பின்னூட்டம்.. இந்த என்ன பாலசந்தர்பாடமா ஓடுது? மைண்ட் வாய்ஸ் ஒண்ணும் கேக்கல எனக்கு!

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாரதசாரி! பூஜ்ஜியம் ஆனா என்ன.. பங்கு கொள்ளுதல் முக்கியம் அல்லவா? உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//தங்கமணி காரு! ஒண்ணுமே சொல்லாம ஒரு பின்னூட்டம்.. இந்த என்ன பாலசந்தர்பாடமா ஓடுது? மைண்ட் வாய்ஸ் ஒண்ணும் கேக்கல எனக்கு!//

அப்பாடா... mission accomplished... இப்படி confuse ஆகணும்னு போடறது தானுங்க... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... I was trying to follow the comments.. thats why no comment comment...:)))

மோகன்ஜி சொன்னது…

ஓஹோ! பிளாங்கா இருந்ததப் பார்த்து புது மாதிரி கிசுகிசு என்னை பற்றி போட்டுட்டீங்களோன்னு ஒரு .. பயமெல்லாம் இல்ல.. சும்மா யோசனை.. யோசனை....

அடுத்த பதிவுல இன்னமும் பஞ்சாயத்துலயே நாஷ்டா கூட துண்ணாம நின்னமேனிக்கி இருக்கேன்.. நல்லாத்தான் பீதியக் கிளப்புறீங்க!