ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

ஒரு சிகிச்சையின் ராகம்


அண்மையில் அறுவை சிகிச்சைக்காய் மருத்துவமனையில் நானிருந்தபோதுவலைப்பூவிலும்,மின்னஞ்சலிலும்,அலைபேசியிலும் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...

நலந்தானா?’ என்று உலகத்து சோகமெல்லாம் முகத்தில் தாங்கி துடிக்கும் பத்மினியைப் பார்த்து, உதடுகள் துடிக்க கண்கள்கசிய உணர்ச்சிக்குவியலாவாரே நடிகர் திலகம் சிவாஜி.......
நானும் அவர் போலானேன்.

எனக்கு அறுவைசிகிச்சையான உடற்பகுதி அப்படி ஒன்றும் பெருமையாய் சொல்லிக் கொள்ளக் கூடிய இடம் இல்லை.

பிராஸ்டேட் என்லார்ஜ்மெண்டுக்காக அறுவைசிகிச்சை நடந்தது. கடந்த சிலமாதங்களாகவே மூச்சா போவது பெரிய வேதனையாக இருந்தது. போனாமோவந்தோமா  என்றில்லாமல், கொஞ்சம்கொஞ்சமாக மீண்டும்மீண்டும் போகவேண்டியிருக்கும்.

அண்மைக்காலமாய், அதிகாரிகளுக்கு ஒரு செஷன் ஒன்றரை மணி நேரம் எடுத்தபின்  பரபரப்பாய் டாய்லெட்டுக்கு ஓடுவேன். வகுப்பு முடிந்தவுடன் வழக்கமாய் சந்தேகம் கேட்கவோ, சிலாகிக்கவோ சூழ்ந்து கொள்ளும் அதிகாரிகளைப் பார்த்து முட்டிக்கிச்சுடா, நான் வழியவிடுமுன்னர் வழியைவிடு என்று கத்தவேண்டும் போலிருக்கும்.

டாக்டர் அறிவுரையின்படி,ஹைதராபாதில் அறுவைசிகிச்சை செய்து கொண்டேன். ஆபரேஷன் ஆனவுடன் தனியறையில் விட்டார்கள்.இரண்டு நாள் டிரிப்ஸ் மட்டும்தான். வலி பின்னியெடுத்தது.... இப்போதும் பின்னுகிறது.. இன்னமும் ஒரு வாரம் பின்னுமாம்.. பின்னட்டும்...

என் தங்கமணியோ ஆடிப்போய்விட்டாள்.. இரண்டாம் நாள் சாப்பிடலாம் என்றார்கள். பூமாதிரி இட்டிலியை ஊட்டிவிட்டாள். எனக்கோ வெட்கமும், காதலும் ஒரேநேரம் முட்டிக் கொண்டது. சீச்சீ.. இதுவுமா முட்டிக்கணும்...

சின்னதாய்க் கண்ணடித்தவாறே,”எப்போ எனக்கு கடைசீயாய் ஊட்டிவிட்டே சொல்லேன்!

சாப்பிடும் போது பேசினா புரையேறும் என்று பதிலாய் அவள் சொன்னாலும், அவள் பார்வையோ வாயிலேயே ஒண்ணு போட்டேன்னா என்பது போலிருந்தது. அதற்குப்பின் பானிபூரிக்காரன் முதலில் கொடுத்ததை விழுங்குமுன்பே அடுத்தபூரியை கையில் திணிப்பானே அந்த மாதிரியில்லே மீதி இட்லியை வேகமாய்த் வாயில் திணித்தாள்?

என்னுடைய நெருங்கிய நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு.

இப்போ எப்படி இருக்கே?”

ரொம்ப வலிக்குதுடா!

சிரித்தான்... காலேஜில இன்பவலின்னு ஒரு கவிதை எழுதினே   தெரியுமா?”

நானே மறந்து போனதையெல்லாம் இன்னுமாடா ஞாபகம் வச்சிருக்கே?”

மீண்டும் சிரித்தான்.. பிராஸ்டேட் பிரச்னை அறுபது வயசுக்கு மேல தானே வரும்? சரிசரி.. நீ பிஞ்சிலேயே பழுத்தவன் இல்லையா? அது இப்ப வந்ததும் ரைட்டுத்தான்!

உதைபடுவே! அது என்ன வலி கவிதை?”

படுவம் வந்த விரலுக்கு எலுமிச்சம்பழம் சொருக போறப்போ, நீயிட்ட மருதாணியை மறைக்கும்னு பழத்தை வேணாம்னு உருட்டிவிடுவே..

நினைப்புக்கு வரல்லையே?”

வரவேணாம்... இப்போ வந்தா ரத்தக்களரியாயிடும்.

சரி!அப்புறமா பேசுடா..

,கே! சிநேகம் காட்டும் செவிலிப்புறாவேன்னு நர்ஸைப் பார்த்து கவிதை எழுதாம பொத்திக்கிட்டு படு....

சரிடா! சிரிக்க முடியலே! பை !!

எவ்வளவு வருஷமானால் என்ன? நட்பு மனத்தை லேசாக்கி விடுகிறது..

இன்பவலி கவிதை நினைவுக்கு வரவேயில்லை.

மாறாக தூக்கம் வராமல் இன்பவலி பின்னத் தொடங்கியது.

என்னப்பா? வலிக்குதா?" அருகிருந்த மகனின் கரிசனம்..

நீ தூங்கு...” ஹெட்போனை மாட்டிக் கொண்டு படுத்தான்.

வலி, மயக்க மருந்து, வலி மாத்திரையால் வந்த மப்பு..

கண்கள் சொருகத் தொடங்கின....

டி.எம்.எஸ் ,சுசீலாம்மா இருவரும் என் படுக்கைக்கு அருகில் வந்தார்கள்..

செல்லத்துக்கு தூக்கம் வரல்லியா?”

இல்லேம்மா.... ரொம்ப வலியா இருக்கு..

சரி.. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பாடுவோமாம்.
சமர்த்தா தூங்கிடுவியாம்

ரொம்ப தேங்க்ஸ்ம்மா

இன்னமும் கொழந்தையாவே இருக்காம் பாரு...
இது டி.எம்.எஸ்,வாஞ்சையாக என் தலையைத் தடவியபடி.....

சரி. சுசீலா ஆரம்பிங்க..

விழியே விழியே உனக்கென்ன வேலை. விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை...... பாடல் எங்கும் நிறைகிறது.

வலிக்குதும்மா

சரி இதைக் கேளு... ஞாயிறு என்பது பெண்ணாக...

 நாலுநிமிட நந்தவன உலா இருவரின் கைகளையும் கோர்த்தபடி..

போறுமா?”

ஹூஹூம்

பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா?

உம்ம்ம்ம்....... இன்னொரு பாட்டு பிளீஸ்

பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வரவேண்டும்

இன்னம் ஒண்ணே ஒண்ணு பாட்டு.. குழறும் குரலில்...

நீலநிறம்,வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்......

இன்னம் கூட ஒண்ணு.....

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

அந்த அத்தைமக பாட்டு டி.எம்.எஸ்..

ஒத்தையடிபாதையிலே அத்தமக போகையிலே காலடியோ மண்மேலே.. அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே

சூப்பர். ஒண்ணே ஒண்ணு இன்னும்.

டேய்.இதுதான் கடைசி.. இனமே கேட்டா அடிதான் இது டி.எம்.எஸ்

சரி..

மனம் என்னும் மேடை மேலே,முகம் ஒன்று ஆடுது

கானமழை பொழிந்து... சிறுதூறலாய் அதன் ரீங்காரம் இன்னும்...

டி.எம்.எஸ் ! ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா இது என்ன ராகம்? ஆபோகியா? மத்யமாவதியா?”

யோசிக்கும் டி.எம்.எஸ்

பாடுங்க! ராகத்தைப் பிடிப்போம்?”என்றேன்.

டி.எம்.எஸ் துவங்க சுசீலாம்மா தொங்கா! என்றபடி உடன்பாடி முடித்தார்கள்.

எங்கோ அமிழ்ந்தபடி நான் மெல்லமெல்ல...


இன்பவலி....
    செவிலிப்புறா....
        நீயிட்ட மருதாணி...
               எலுமிச்சம்பழம்.....
                    கதீட்டர்.... ஐ.வீ ப்ளூயிட்
                             சுசீலாம்மா .....
                                      டி.எம்.எஸ்... டி.எம்.எஸ் 

  

49 comments:

ம.தி.சுதா சொன்னது…

////“ஓ,கே! சிநேகம் காட்டும் செவிலிப்புறாவே’ன்னு நர்ஸைப் பார்த்து கவிதை எழுதாம பொத்திக்கிட்டு படு...”.
////

துன்பத்தில கூட குசும்பு குறையலியோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நன்கு ஓய்வெடுத்து, முழுவதும் குணமாகி, வலி ஏதுமின்றி, பூரண நலம் பெற்று திரும்ப வாருங்கள். vgk

Philosophy Prabhakaran சொன்னது…

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் உங்கள் வேதனையை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது... புற்றுநோய் காரணமாக என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் நிகழ்வு...

Yaathoramani.blogspot.com சொன்னது…

விரைவில் பூரண நலம் பெற
எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்
நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளவும்
பூரணமாக நலமான பின் வலைப் பக்கம் வரவும்
சிரமப் படுத்திக்கொள்ள வேண்டாம்

Yaathoramani.blogspot.com சொன்னது…

த.ம 2

ரிஷபன் சொன்னது…

உடம்பு பூரண குணமாகட்டும்..
வலி பின்னும்போது வலை பின்ன வேண்டாம்..
டேக் ரெஸ்ட்

வலியிலும் என்ன அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..

கீதமஞ்சரி சொன்னது…

அறுவை சிகிச்சைக்குப் பின்னான வலியின் அனத்தலையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள், மோகன்ஜி. விரைவில் முழுக் குணமடைய என் பிரார்த்தனைகள்.

மனவலியை மறக்கச் செய்யவும், உடல்வலியை மரக்கச் செய்யவும் கூடிய வலிமிகுந்தவை பழையபாடல்கள். என் அனுபவமும் கூட. உங்கள் பாடல் தொகுப்பு என் ஐபாடில் அப்படியே உள்ளது. ஒத்த ரசனைகளால் உளம் மகிழ்ந்தேன்.

போதுமான ஓய்வெடுத்துக்கொண்டு புத்துணர்வுடன் களமிறங்க என் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

வலிகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியாச்சா...

//"பிராஸ்டேட் பிரச்னை அறுபது வயசுக்கு மேலதானே வரும்?"//

அதானே...

டி எம் எஸ் சுசீலா வந்த செடேஷன் நினைவுகளில் நாங்களும் கிறங்கிப் போனோம். இசைச் சிகிச்சை!

//"அந்த அத்தை மகா பாட்டு டி எம் எஸ்..."//

எனக்கு அத்தைமகள் ரத்தினத்தை பாடல் நினைவுக்கு வந்தது!

//"மனம் என்னும் மேடை மேலே.."//

இந்த இரட்டை டியூனில் தமிழிலேயே இன்னொரு பாடல் கூட இருக்கிறதே...(சவ் சால் பெஹலே பாடல் டியூன்தானே..)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எவ்வளவு வருஷமானால் என்ன? நட்பு மனத்தை லேசாக்கி விடுகிறது.

பத்மநாபன் சொன்னது…

வேதனையிலும் இவ்வளவு நகைச்சுவை உணர்வு உங்களை வலியிலிருந்து விரைவில் மீட்கும்…
டி.எம்.எஸ்.. பி.சுசிலா அவர்களின் தாலாட்டு கிடைத்தது சுகம்…விரைவில் பூரண சுகமடைந்து , செவிலிக்கிளிகளின் செல்ல மொழிகளை கவியிலும் கதையிலும் நீங்கள் சொல்லவேண்டும் அதை நாங்கள் படிக்கவேண்டும்…

மோகன்ஜி சொன்னது…

நன்றி ம.தி.சுதா!
துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு அய்யன் வள்ளுவர் சொல்லிட்டில்ல போயிருக்காரு?

மோகன்ஜி சொன்னது…

நன்றி வை.கோ சார்!டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டேன். இன்னமும் ஒரு வாரம் படுக்கையில் தான். மடிகணனியை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு படுத்த படியே பதிவு!

மோகன்ஜி சொன்னது…

நன்றி பிரபா! பல நாட்களாயிற்று நீங்கள் வந்து.
உங்கள் அப்பாவுக்கு தேவலையா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரமணி சமர்த்தாய் இருப்பேன். என் முந்தைய பதிவான பொன் வீதிக்கு உங்கள் கருத்து அறியஆவல்

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன் சார்! கொஞ்சமே கொஞ்சம் வலை மேய்கிறேன்!

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! மிக்க நன்றி!
சேம் பிளட்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம்! வலி குறைந்திருக்கிறது.

////"மனம் என்னும் மேடை மேலே.."
இந்த இரட்டை டியூனில் தமிழிலேயே இன்னொரு பாடல் கூட இருக்கிறதே...

அதுவா?

'சிலை செய்ய கைகள் உண்டு.. தங்கம் கொஞ்சம் தேவை... சிங்காரக் கால்களுண்டு.../.

மோகன்ஜி சொன்னது…

உண்மை இராஜராஜேஸ்வரி மேடம்! நட்புக்கு ஈடு எது?

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் ! ரொம்பவே நன்றி உங்கள் நட்புக்கு...

// செவிலிக்கிளிகளின் செல்ல மொழிகளை கவியிலும் கதையிலும் நீங்கள் சொல்லவேண்டும் அதை நாங்கள் படிக்கவேண்டும்…// கண்டிப்பாய் பதிவோம் நண்பரே!

மனோ சாமிநாதன் சொன்னது…

உங்கள் உடல் நலம் பூரண குணமடைய விரும்புகிறேன். என் நெருங்கிய சொந்தங்களுக்கு இந்த பிரச்சினை வந்து அறுவை சிகிச்சை நடந்து, அருகிலேயே இருந்து கவனித்திருப்பதால் எந்த அளவு வேதனையும் வலியும் இருக்கும் என்பது நன்கு தெரியும். ரொம்பவும் முக்கியமானது, பூரண‌ ஓய்வு எடுப்பது தான். பிரயாணங்களைத் தவிர்க்க வேன்டும். ஆரோக்கியமான உண‌வு, ஓய்வு இவற்றினால் மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப வாழ்த்துக்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பூரண குணமாக மனபூர்வமான வாழ்த்துக்கள்..
அந்த நோயர் சாரி.. நேயர் விருப்பத்தில ‘ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..’வும்,..’மடி மீது தலை சாய்த்து விடியும் வரை உறங்குவோம்...’என்ற பாடலையும் சேர்க்க முடியுமா?

அன்புடன்,
உங்கள் மூவார்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படுத்துக் கொண்டேயும் பதிவு போடுவேன்னு அடம் பிடிச்சா எப்படி!

இருந்தாலும் நகைச்சுவை ததும்புகிறது பதிவும்..... துன்பம் வரும் வேளையிலே சிரிங்க!.... அதுதானோ இது....

எதுக்கும் கொஞ்சம் நாள் ரெஸ்ட் எடுங்க ஜி! இது எனது அன்புக் கட்டளை.... பின்னாடி பின்னிப் பெடலெடுக்கலாம் பதிவில்....

Philosophy Prabhakaran சொன்னது…

@ மோகன்ஜி
// உங்கள் அப்பாவுக்கு தேவலையா? //

பூரண குணமடைந்துவிட்டார்... அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்...

அப்பாதுரை சொன்னது…

அவங்க கொடுத்த மருந்துல ரெண்டு ஸ்பூன் எடுத்து வைங்க சொல்றேன். ரொம்ப போதையா இருக்கும் போலிருக்கே? கஞ்சா கிஞ்சாவெல்லாம் தேவையில்லைனு தோணுதே?

ADHI VENKAT சொன்னது…

பதிவும், பாட்டுக்களும் பிரமாதம். ஆனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் சார். பின்பு பொறுமையாக பதிவுகள் இடலாம்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

நண்பரே

நல்லவேளை, உங்களை நீங்கள் மருத்துவமனை போகும் முன் பேசிவிட்டேன். மறுபடியும் ஆபரேஷன் நடந்த பிறகு அழைக்கலாம் என்று நினைத்தேன். ஒரு வேளை அசதியாக இருப்பீர்கள் என்று பார்த்தால், ஹோட்டலில் பெண்டாட்டியுடன் குஷ்பு இட்லி சாப்பிட்டு ஜல்சா பண்ணி கொண்டு இருக்கின்றீர்கள்.

உங்கள் பெரிய மகனிடம் நான் கேட்ட விவரம் கேட்டு மெயில் அனுப்பவும்.

என் பெரிய மகனுடன் உலக பிரிசித்தி "எம்.ஐ.டி" கல்லூரி அட்மிஷன் ப்ரிபிங் போகின்றேன்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மோகன்ஜி

நான் இறக்கும் தருவாயில் மற்றும் இறந்தபிறகு புதைக்கும்போது என் ஐ.பாடில் டி.எம்.எஸ் அவர்களில் பாட்டை ரீபீட் போட்டு வைக்கும் மாறு சொல்லுவேன்.

இந்த முறை அம்மாவுக்கும் அதே போல் ஐ.பாட் என்னுடைய பாடல்கள் எல்லாவற்றையும் போட்டு கொடுத்துவிட்டேன். தெய்விக பாடல் தவிர மற்றவை எல்லாம் எம்.எஸ்.வி இசை தான், இளையராஜா / ஏ.ஆர்.ஆர் மூச் கூடாது.

அப்பாதுரை அவர்களின் ஒரு எட்டு மணி நேர பழைய பாடல்கள் எம்.பி.த்ரீ (ஒன்றாக இணையபட்டது) பாட்டு வந்துக்கிட்டே இருக்கும். என் அம்மா இப்போது சமைக்கும்போது ஒரே பாட்டு தான்.

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் - அந்த பாடலில் "காரணம் கண்ணே" - இரண்டாவது முறை கல்னே என்பார் !! இந்த முறையும் அவரை காண முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை பார்ப்போம்.

போன கருத்தில் ஹாஸ்பிடல் பதில் ஹோட்டல் என்று வந்துவிட்டது - மன்னியுங்கள்.

RVS சொன்னது…

ஹாஸ்பிடலில் படுத்துக்கொண்டு பாட்டுப் போதையா? அற்புதம் அண்ணா!

சீக்கிரமே எழுந்து உட்கார்ந்து இரண்டு நாளைக்கு பத்து பதிவு போட எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்!! :-))

geetha santhanam சொன்னது…

விரைவில் பூரண குணம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

meenakshi சொன்னது…

நட்பு மனதை லேசாக்கி விடுகிறது. அது இல்லா விட்டால் இசைதான் மனதிற்கு இதம், சுகம்.
நன்கு ஓய்வெடுங்கள். விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஓய்வெடுக்காம படுத்துக்கிட்டே வலை மேய்ஞ்சுக்கிட்டிருந்தா உடம்பு என்னத்துக்காகும்????

இசைச்சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கோங்க. பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.

G.M Balasubramaniam சொன்னது…

நானும் உடல் நலமின்மையால் பல நாட்கள் வலைப் பக்கமே வரவில்லை. என் டேஷ் போட்டில் உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்து வந்தேன். ப்ராஸ்டேட் என்லார்ஜ்மெண்ட் ஒரு பேஜாரான உடல் உபாதை. 1998-ல் எனக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்ய விரும்பாமல் மருத்துவரிடம் மருந்து கேட்டேன். FINASTRIDE 5 mg மற்றும் MINIPRESS -XL -ம்கொடுத்தார். இதுநாள்வரை உபயோகிக்கிறேன். நல்ல பலன். மேலும் மனசுக்குப் பிடித்த வேலையில் ஈடுபடச் சொன்னார். அப்போது க்ளாஸ்பெயிண்ட்டிங்கும் தஞ்சாவூர் பெயிண்டிங்கும் நானாக முயன்று கற்றுக் கொண்டு இப்போது ஓரளவு தேர்ச்சி பெற்று இருக்கிறேன். என் அனுபவம் பகிரத் தோன்றவே இதைஎழுதினேன். நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன். GOD BLESS YOU.

G.M Balasubramaniam சொன்னது…

மனசை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் பாதி நோய் குணமாகி விடும். உங்கள் பதிவில் அது தெரிகிறது.

மோகன்ஜி சொன்னது…

மனோ மேடம். மிக்க நன்றி. மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் மூவார்
'நோயர் விருப்பம்'மிக ரசித்தேன் குறும்பரே!

மோகன்ஜி சொன்னது…

அன்பின் வெங்கட்,
நன்றி! இன்று ஒரு நெடுங்கதை தொடங்கியிருக்கிறேன். பாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி பிரபா ! உன் கொன்ற ஏவா மக்கள் பெற்றோருக்கு மூவா மருந்தல்லவா!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! மருந்தை எடுத்து வைத்திருக்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஆதி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! உங்கள் நீண்ட உரையாடலுக்கு நன்றி! உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் கேட்டதை விசாரித்து இன்று மின்னஞ்சல் செய்கிறேன்.அம்மாவுக்கு ஐ.பாட் வாங்கித்தந்த உங்கள் கரிசனம் எண்ணி நெகிழ்கிறேன். அப்பாதுரையின் பாடல் சேகரிப்பை காண ஆசை.. அதை கேட்காமலா இருந்து விடப் போகிறேன்?

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ஆர்.வீ.எஸ். நன்றி மைத்துனரே! இன்று 'தொழுவத்து மயில்' எனும் நெடுங்கதையை துவங்கியிருக்கிறேன்.. பாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

கீதா சந்தானம் மேடம்,
மீனாக்ஷி மேடம்,
அமைதிச்சாரல்,
G.M.B சார்!

அனைவரின் அன்புக்கும் கனிவுக்கும் என் நன்றி! இப்பொழுது என் உடல்நிலை பரவாயில்லை..

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் அறிவன் ! நீண்ட நாட்களாயிற்று நாம் தொடர்பு கொண்டு. நான் குணமடைந்து வருகிறேன்.. இந்த ஓய்வில் கொஞ்சம் உருப்படியான பதிவுகள் இட திட்டமிட முடிந்தது.. அடிக்கடி வருகை தந்து கருத்து சொல்லுங்கள் அறிவன்!

நிலாமகள் சொன்னது…

அன்பின் ச‌கோ...
இன்றைய‌ என‌து பிரார்த்த‌னையில் உங்க‌ளுக்குமொரு பிர‌தான‌ இட‌முண்டு. ந‌ல‌ம் நிலைக்க‌ட்டும்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு நிலா!உங்கள் பிரார்த்தனைக்கு என் உளம் நெகிழ்ந்த நன்றியும் அன்பும்.

சிவகுமாரன் சொன்னது…

உங்களால் மட்டும் தான் அண்ணா முடியும் தன வலியைக் கூட மற்றவர்களை ரசிக்க வைக்க .

மோகன்ஜி சொன்னது…

வலியை முடிந்த வரையில் ரசிக்க யத்தனிப்பது என் வழக்கம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் அது இயலவில்லை. கொஞ்சம் நொந்து தான் போய் விட்டேன். இப்போது பரவாயில்லை. ரொம்ப நாள் மட்டம் போடாதே சிவா!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//மோகன்ஜி கூறியது...
அன்பு சாய்! உங்கள் நீண்ட உரையாடலுக்கு நன்றி! உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் கேட்டதை விசாரித்து இன்று மின்னஞ்சல் செய்கிறேன்//

இன்னும் காத்து இருக்கின்றேன் நண்பரே.