புதன், ஆகஸ்ட் 18, 2010

தேக்கம்

River Beas - Video Clip  (Flickr Explored)Image by Balaji.B via Flickrஅகத்தியன் கமண்டலத்துள்
அகப்பட்ட காவிரியாய்,

என் கவிதையெல்லாம்
உன் நினைவுச் சிறையில்...

அவற்றுக்கு விடுதலைக் கொடேன்...
நனைத்து விடுகிறேன்
தமிழகத்தை.!
Enhanced by Zemanta

8 comments:

பத்மநாபன் சொன்னது…

உங்கள் கவிதையும் தமிழகத்தை நனைக்கட்டும்..கண்ணம்பாடியில் அடைபட்ட காவிரியும் தமிழகத்தில் புரண்டோடட்டும்.

philosophy prabhakaran சொன்னது…

ஜி... எங்க கண்ல எல்லாம் படாம ஐம்பது பதிவு எழுதி முடிச்சுட்டீங்க... எப்படியோ இப்பவாவது வந்தேனே...

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்.நெருக்கமான என நட்பு வட்டத்துக்குள் புழங்கிக் கொண்டிருந்த
என் கவிதைகளை அவர்கள் தூண்டுதலால் வலையிடத் துணிந்தேன். எழுதும் சுகத்தை விட,உங்களைப் போன்ற புது நட்பு வட்டம் இதமாக இருக்கிறது. தொடர்பில் இருப்போம் சோதரா!

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி பிரபா,லேட்டா
வந்தாலும் லேடஸ்டா வந்திருக்கீங்க.ஒரு ரவுண்டு வருவோம் பிரதர்!

அப்பாதுரை சொன்னது…

அருமை

மோகன்ஜி சொன்னது…

நன்றி அப்பாதுரை சார்

பத்மா சொன்னது…

ஹஹா நல்லா இருக்கு

அகஸ்தியர் கமண்டலம் உருட்ட ஒரு காக்கா வேணுமே

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! என்ன ரொம்பவே கொழப்பிட்டீங்களே சகோதரி!
என் காதலி இப்போ கமண்டலமா?
காக்கையா? இல்ல அகஸ்தியரா??
பொலம்ப விட்டுட்டீங்களே இப்படி.
உங்கள் வலை நன்றாக இருக்கிறது. வருகைக்கு நன்றி சோதரி